தீபா கல்லூரி சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அவளுக்கு என்று சில நண்பர்கள் என்று சிறிது சிறிதாக தன் அண்ணையின் இழப்பில் இருந்து வெளிவந்து கொண்டு இருந்த சமயம் அது. அனைத்தும் நன்றாகத்தான் சென்றது நளினி கண்ணில் இவள் படும்வரை. நளினி அதே கல்லூரி என்றாலும் வேறு டிபார்ட்மென்ட். அதுவும் இன்றி அது ஒரு பெரிய கல்லூரி ஆகையால் தீபா அவள் கண்ணில் படாமல் தான் இருந்தாள். அதுவும் இன்றி தீபா வீடு மாற்றிச் சென்றதில் இருந்து தன் தாய் அவளைப் பற்றி பேசாததால் இவளும் அவளைப் பற்றி சிந்திக்கவில்லை. நளினி கல்லூரியிலும் ஒரு பெரிய கூட்டத்துடன் தான் சுற்றுவாள். அப்போதுதான் கல்லூரி ஆண்டு விழாவும் வந்தது. அதில் அதிக மாணவர்கள் நடனம், பாட்டுப் போட்டி என்று கலந்துகொண்டார்கள். அதில் நவீன் என்று முதல் ஆண்டு மாணவன் ஒருவன் மிக அருமையாகப் பாட அதில் மயங்கிய நளினி அவனை விரும்பத் தொடங்கினாள். ஒரு வாரம் அவன் பின்னாலேயே சுற்றிப் பின் நேரில் சென்று காதலையும் சொல்லிவிட்டாள். அதற்கு நவீன் வேறு ஒரு பெண்ணை மனதில் நினைத்து இருப்பதாகக் கூற ஏமாந்த நளினி அது யார் என்று கேட்டாள். அதற்கு அவனும் “எங்க டிபார்ட்மென்ட் தான். நேம் நிலா” என்று உளறி வைக்க அந்தப் பெயரைக் கேட்டு ஏதோ தோன்ற மறுநாளே நவீன் டிபார்ட்மென்ட் முன் நின்றாள் நளினி. அங்கு நவீன் யாருடனோ சிரித்துப் பேசியபடி தலை அசைத்துவிட்டுச் சென்றான். இவன் சிரித்துப் பேசியது யார் என்று பார்க்க அங்கே இரண்டு பெண்களுடன் தீபா அமர்ந்திருந்தாள்.
அவளைப் பார்த்த நளினி ஒரு கொடூரப் புன்னகையுடன் அவள் வகுப்பிற்குச் சென்றாள். தீபா கல்லூரியில் அமைதியான பெண்ணாகவே இருந்தாள். பாடத்தில் சந்தேகம் என்று யார் வந்தாலும் உதவி செய்வாள். எப்போதும் நேர்த்தியாகத்தான் உடை அணிவாள். பெரியதாக அலங்காரங்கள் இல்லை என்றாலும் அழகாகத்தான் இருப்பாள். இவளின் அமைதி, அழகு, படிப்பு என்று அனைத்தையும் பார்த்துத்தான் நவின் காதலிக்கத் தொடங்கினான். ஆனால் இதை தீபாவிடம் இன்னும் சொல்லவில்லை. நளினி பார்த்துச் சென்ற மறுநாள் இவள் எப்போதும் போல் கல்லூரிக்கு வர, அங்கு இவள் தோழி ஒருத்தி வந்து “நிலா, நளினின்னு உனக்கு யாரையாவது தெரியுமா?” அந்தப் பெயரைக் கேட்டதும் அவள் புருவங்களைச் சுருக்கி யோசித்தபடி
இதைக் கேட்டு கண்முன் தெரியாத கோபத்துடன் தீபா நளினியைத் தேடிச் செல்ல, அவள் ஆடிட்டோரியத்தில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அங்கு வந்த தீபா ,நளினி அருகே வந்த வேகத்தில் அவள் என்ன என்று சுதாரிக்கும் முன் கன்னத்தில் அறைந்திருந்தால். அதில் கோபம் கொண்ட நளினி “ஏய், என்னையே அடிப்பியா நீ?” என்றபடி அவள் கூட்டத்தில் இருக்கும் ஆண் நண்பர்களிடம் கண்காட்ட, அவர்கள் தீபாவை அசைய முடியாதபடி பிடித்துக்கொள்ள, நளினி மாறி மாறி அவள் கன்னங்களில் பதிலுக்கு அறைந்தாள்.
அறைந்த பின் தன் கைகளை உதறியபடி “என்னையே அடிச்சிட்டல்ல உன்னை என்ன பண்ண போறேன்னு பாரு. உனக்கு ஒரு விஷயம் சொல்லவா?” என்று அவள் காது அருகே சென்று “உங்க அம்மாவை அந்த சந்தனம் கூட வச்சு பார்த்தேன்னு நான் தான் போய் சொன்னேன். ஆனால் அதை எல்லாரும் இப்படி நம்புவாங்கன்னு நான் அப்போ நினைக்கல. ஆனா உங்க அம்மா இறந்ததுக்கு நான் மட்டும் தான் காரணம்னு இல்லை. அந்த சந்தனமும் தான். எப்படின்னு பார்க்கிறியா? எல்லாரும் நான் சொன்னதைக் கேட்டு முதல அவர் கிட்ட தான் போய் கேட்டிருப்பாங்க போல. ஆனா அவர் சரியானவர் தான். உங்க அம்மா மேல ஒரு கண்ணு அவருக்கு இருந்துருக்கும் போல. அதான் நல்ல வாய்ப்புன்னு அமைதியா தலையை குனிஞ்ச மாதிரி இருந்திருக்காரு. அதை பார்த்து தான் எல்லாம் கன்ஃபார்ம் பண்ணாங்க.” இதை கேட்டு சந்தனம் மீது ஆத்திரம் வர, அதை தீபா முகம் பார்த்து கணித்த நளினி “நீ பாட்டுக்கு அவர் கிட்ட போய் நியாயம், நீதின்னு நிக்க போற. அவர் உங்க அம்மா செத்த மறுநாளே ஆள் எஸ்கேப்.” என்று சிரித்து விட்டு அவள் அருகே வந்து கன்னம் பற்றி “இப்போ வரை உன் பாட்டி கதையை தான் சொல்லிருக்கேன். அதுவும் உன் டிபார்ட்மென்ட்க்கு மட்டும் தான் சொல்லிருக்கேன். ஆனா நீ என்னை அடிச்சு தப்பு பண்ணிட்ட. சோ உங்க அம்மா சந்தனம்னு இங்கேயும் எல்லார் கிட்டயும் சொல்ல போறேன்.” என்று மீண்டும் அறைய தீபா கண்களில் இருந்து நீர் இறங்க “எங்க அம்மா உனக்கு என்ன பண்ணாங்கன்னு நீ இப்படி பண்ண?”
“உங்க அம்மா ஒன்னும் பண்ணலதான். ஆனால் எங்க அம்மா எப்ப பாரு தீபாவை பாரு. அவ என்ன பண்றா பாரு. அவளை மாதிரி இருன்னு எப்பவும் தலைவலி. அந்தக் காண்டுல இருக்கும் போது தான் எதார்த்தமா தான் சொன்னேன். ஆனால் அது இப்படி ஆயிடுச்சு. ஆனால் நான் ஒன்னும் எல்லார் கிட்டயும் போய் சொல்லல சரியா?” இதை கேட்டவுடன் தீபாவின் அழுகை நின்று அவள் கண்கள் சிவக்க “உன்னை சும்மா விட மாட்டேன்டி. உன்னை இப்பவே எல்லார் கிட்டயும் சொல்றேன் பாரு. இந்தக் காலேஜ்லயும் கம்ப்ளைன்ட் பண்றேன் பாரு.”
“ஓ… அப்போ சரி போய் உங்க வீட்ல இங்கனு என்ன பத்தி எல்லார் கிட்டயும் சொல்லு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ஆன உனக்கு என்ன ஆகும் தெரியுமா, இந்தப் பிரச்சினை இருக்குல அது பெருசா ஆகும் எல்லாருக்கும் நான் என்ன பண்ணனும்னு தெரியும் அப்படியே எல்லாரும் உங்கள் அம்மா பற்றியும் உங்க பாட்டி பத்தியும் தெரியவரும், அப்பறம் என்ன ஆகும் தெரியுமா“ என்று அவள் கன்னத்தில் கை வைத்து யோசித்த படி “உங்க பாட்டி ஸ்டோரி கேட்டு நம்ம தெருல இருக்கவுங்க எப்படி உங்க அம்மாவ சந்தேகம் பட்டங்களோ அதே தான் இங்கயும் நடக்கும் நான் நடக்க வைப்பேன் “ என்று நளினி பேசியதை கேட்டு திகைத்த தீபா “இல்லை இல்லை நான் கம்ப்ளைன்ட் பண்ணல எங்கள் அம்மாவைத் தப்பு சொல்லாத அவங்க பாவம் ப்ளீஸ் நளினி “ என்று குறள் நடுங்க கெஞ்ச அதற்கு எதையோ யோசித்த நளினி “ சரி நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என் ஃப்ரண்ஸ்-ம் சொல்ல மாட்டாங்க ஆனா அதுக்கு நீ ஒன்னு பண்ணணும் “ என்று தீபாவை பார்த்து சிரித்தபடி நிற்க “ என்ன பண்ணணும் நளினி“ என்று நடுங்கியபடி பேசினால் தீபா அதற்கு நளினி
“பெருசா ஒன்னும் இல்லை நீ இனிமேல் இந்தக் காலேஜ்ல இருக்கிற யார் கிட்டயும் பேசக் கூடாது பழகக் கூடாது அவங்களா வந்து பேசினா கூட நீ திட்டித் துரத்திவிடணும் சரியா “அதற்கு தீபாவும் சரி என்று அழுதுகொண்டே தலை ஆட்ட “ எனக்கு இந்தக் காலேஜ் முழுக்க ஆள் இருக்கு என்ன ஏமாத்தணும்னு நினைச்ச அவ்வளவுதான் அப்பறம் நமக்குள்ள நடக்கிறது வேறு யாருக்கும் தெரியக் கூடாது சரியா“ என்று தீபாவை மிரட்டிவிட்டுச் சென்றாள். அன்று முதல் தீபா அனுபவித்தது தனிமை தனிமை தனிமை மட்டும்தான் யாருடனும் பேசாமல் சிரிக்காமல் தினம் தினம் வேதனை அப்போது எல்லாம் அவள் மனதில் தோன்றியது “அம்மா நீ இருந்திருக்கணும் ஏன் போன இந்த அப்பா இருந்திருந்தா நீயும் இருந்திருப்ப “ என்றும் “இங்கு இருக்கிறவர்களுக்கு நான் யாருன்னு தெரியாம இருந்திருக்கலாம். ஏன் தெரிய வந்துச்சு “என்று அனைத்தையும் யாரிடமும் சொல்லாமல் அவளுக்கு அவளே சுவரை எழுப்பி வசிக்கத் தொடங்கினாள்.
இவ்வாறு தினம் தினம் நளினி டார்ச்சர் உடன் எப்படியோ காலேஜை முடித்தாள். அந்த சமயம் தான் குமரனுடன் வேறு வீடும் சென்றது. அங்கு சிறிது நிம்மதியுடனே இருந்தாள் தீபா. ஆனால் குமரன் செய்த ஒன்று மீண்டும் அவளை தனிமை என்ற சிறையில் தள்ளியது. குமரன் தீபாவை மீண்டும் அதே கல்லூரியில் மேற்கொண்டு படிக்க வைத்தது, அதுவும் ஹாஸ்டலில். அதில் முழுதும் துவண்ட தீபா முதலில் பயந்து பயந்து தான் காலேஜ் சென்றாள் தீபா, பின்தான் ஒரு முடிவுக்கு வந்து மாஸ்க் அணிய ஆரம்பித்தாள். இவள் யார் என்று தெரிந்தால் தானே அவள் அண்ணையை தவறாக பேசுவார்கள். இவள் யார் என்று தெரியவில்லை என்றால் என்று மாஸ்கை அணிய தொடங்கிய தீபா, அனைவரிடமும் தன் பெயரை தீபா என்று சொல்லி பழகினாள். இவள் முழு பெயர் இவள் சொந்தங்கள் மற்றும் நெருங்கியவர்களை தவிர மீதி யாருக்கும் தெரியாது அனைவரிடமும் நிலா என்று தான் சொல்லி பழக்கம். அதனால் தீபா என்கின்ற பெயர் யாருக்கும் தெரியாது என்று அதை உபயோகிக்க ஆரம்பித்து இப்போது இந்த நிலையில் அதுவே அவள் பழக்கம், தைரியம் என்று இரு வேறு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள்.
தீபா முகத்தை மறைத்த தைரியமான துணிச்சலான பெண். நிலா பயந்த அமைதியான பெண் என்று தடுமாற்றங்களுடன் யாருக்கும் தன்னை பற்றி தெரிய விடாமல் மறைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.
உச்சி வெயில் சுட்டெறித்து கொண்டு இருக்க ரஞ்சன் காரில் சீட்டை சாய்த்து தன் காதுகளில் ஹெட்செட் அணிந்தபடி பாடல்களை முணுமுணுத்துக்கொண்டு இருந்தான் அவனை வெறித்தபடி துரை காரில் பின்னே நின்று கொண்டு இருந்தான் அந்த ஆள் அரவம் அற்ற ஹைவேவில். அப்போது துரையை கண்ணாடி வழியே பார்த்த ரஞ்சன், “சிங்கம்…” என்றதும் அடித்துப் பிடித்து முன் சென்று நின்றான் துரை.
அவனை சாய்ந்தபடி கால் மீது கால் போட்டு ஆட்டியபடி “ஒரு பொண்ணு திடீர்னு நம்ம பேச்ச கேட்டு கேஸ் கொடுக்காம நம்ம பண்ற மெசேஜ்க்கும் ரிப்ளை பண்ண அது லவ் தான சிங்கம்” என்று தன் சுட்டு விரலை வாயில் வைத்தபடி பேச, அதை பார்த்து மனசீகமாக தலையில் அடித்தான் அவனையே பார்த்து இருந்த ரஞ்சன் உடனே “பொறுமையா அடிங்க சிங்கம்” என்று சொல்லவும் திருதிருவென்று முழித்த சிங்கத்தை பார்த்து சிரித்த ரஞ்சன் “ஒன்னும் இல்ல சும்மா தீபா நியாபகம் அவ வேற இப்பல்லாம் நான் சொல்றத தான் கேக்குறாள அதன் ஒரே லவ்வா இருக்கு ” என்று கண்களை சிமிட்டினான். அதன் பிறகே நார்மல் மோடுக்கு திரும்பிய துரை “என்ன சார் ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க”
“ஆமா சிங்கம் ஹாப்பிதான் நாளைல இருந்து லீவ்ல அதான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்” என்றவனை ஒரு மாதிரி பார்த்து “இவரை பார்த்த யாராவது போலீஸ்னு சொல்லுவாங்களா எதோ ஸ்கூல் பையன் மாதிரி லீவுக்கு சந்தோஷப்படுறத பாரு “ என்று மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது பின் துரையே “உங்க சிஸ்டர் மேரேஜ்க்கு நீங்க எதுவும் ஹெல்ப் பண்ணலையா சார் “
“நான் எப்படி பண்ண சிங்கம் நான்தான் டியூட்டில இருக்கேனே நாளைக்கு தான் போய் பாக்கணும் “ என்று பேசியவை பார்த்து
“ம்க்கு எதோ வேலை பார்க்கிற மாதிரி பில்டப்ப பாரு கேஸ பார்க்காம பேட்ரோல் போறேன்னு இங்க வந்து படுத்துட்டு பாட்டு கேட்டுட்டு இவர் பண்ற வேலை இருக்கே “ என்று பெருமூச்சு ஒன்று விட அதை தன் ஒற்றை கண்ணை திறந்து பார்த்த ரஞ்சன் மீண்டும் கண்களை மூடியபடி
“ முடிஞ்சதா சிங்கம் “
“என்ன சார் “ என்று மீண்டும் விழிக்க “அது எதையோ யோசிச்சீங்களா அது முடிஞ்சிதான்னு கேட்டேன்” அதற்கு ஒரு சமாளிக்கும் சிரிப்பை உதிர்த்த துரை “அது உங்க சிஸ்டர் மேரேஜ் ரிசப்ஷனுக்கு வர முடியாது அதை பத்தி தான் யோசிச்சேன் சார், ஆனா மார்னிங் மேரேஜ்க்கு கண்டிப்பா வைஃப் ஓட வந்துருவேன் சார் “ என்று சொன்ன துரையை பார்த்து தலை அசைத்தபடி ரஞ்சன் பாடத் தொடங்கினான் “அவள் வருவாளா…
அவள் வருவாளா…
அவள் வருவாளா…. என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா….”
எனப் பாட அப்போது ரஞ்சன் காதில் பொருத்தப்பட்ட ஹெட்செட்டில் இருந்து ஆஜுன் “ அவ வருவாளானு தெரியல ஆனா நாம வெயிட் பண்ணிட்டு இருந்த அந்த சாக்லேட் சப்ளையர் வந்துட்டான், நான் அவனை தூக்கிட்டு உனக்கு அப்டேட் பண்றேன்டா பட் ரஞ்சன் நைஸ் வாய்ஸ் உனக்கு” என்று சிரித்தவன் சொன்னதை கேட்டு வேகமாக எழுந்து அமர்ந்தான் ரஞ்சன்.
அவன் எழுந்த வேகத்தை பார்த்து என்ன என்பது போல துரை பார்க்க அவனை பார்த்து சுதாரித்த ரஞ்சன் “சிங்கம் டைம் என்ன ஆச்சு பாருங்க சிங்கம் இத எல்லாம் சொல்ல மாட்டீங்களா “
“அது என்ன சார் எதாவது மறந்துட்டீங்களா சொல்லுங்க சார் வேகமா போயிடலாம் “ என்று காரில் ஏற “அது இல்ல சிங்கம் மணி பாருங்க 1 ஆகுது நாம இன்னும் சாப்பிடவே இல்லை “ என்பதை எதோ உயிர் போகும் போல் சொல்லும் ரஞ்சனை ஆ.. என்று பார்த்தான்.