சுடர் தான் பாடம் எடுக்க போகும் க்ளாசை நோக்கி சென்று கொண்டே “இன்னிக்கு இந்த சார் கிட்ட மாட்டிக்கவே கூடாது இந்த அட்டனன்ஸ்-அ கூட வாணி மேம் கிட்ட கொடுத்து சப்மீட் பண்ண சொல்லிறனும் “என்று திட்டம் போட இதை முறியடிக்கும் விதமாக ஆதி டீச்சர்ஸ் அனைவரையும் பள்ளி முடிந்து மீட்டிங் அறைக்கு வரும்படி சர்குலர் அனுப்பி வைத்து இருந்தான். இதை படித்த சுடர் குழந்தைகள் முன் கோபத்தை அடக்க படாத படு பட்டு போனால்.
பள்ளி முடிந்து அனைவரும் மீட்டிங் அறைக்கு செல்ல அங்கே அறையின் முன்புறம் தனியாக போட பட்ட மேசையில் ஆதி அமர்ந்தபடி எதோ பேப்பரை புரட்டி கொண்டு இருந்தான் அவன் முன் வரிசையாக நாற்காலி போட பட்டு இருந்தது. அந்த அறைக்கு உள்ளே வாணியுடன் நுழைந்த சுடர் ஆதியை பார்த்து முறைத்து கொண்டே செல்ல ஆதியோ சுடரை எட்டி கூட பார்க்க வில்லை. இங்கே சுடர் ஆதியை மனதில் வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள் “ எருமை அவன் பதவிய எப்படி மிஸ்யூஸ் பண்ற பாரு “ என்று எண்ணிய படி முறைக்க சுடரை கவனித்த வாணி “ என்ன மேம் எதோ சிங்கம் பயம்னு சொன்னிங்க இப்போ என்னன இப்படி முறைக்கிறீங்க , சூப்பர் போங்க “ என சீரியஸாக பேச சுடர் “நீங்க வேற மேம் கொஞ்சம் கம்முன்னு இருங்க “ என்று சொல்லி விட்டு மீண்டும் ஆதியை பார்க்க.
சிறிது நேரம் கழித்து அனைத்து ஆசிரியர்களும் வந்த பிறகு ஆதி பேச தோடங்கினான். “நெஸ்ட் வீக் ஸ்போட்ஸ் டே வருது அத பத்தி பேச தான் எல்லாரையும் வர சொன்ன இந்த வாட்டி நடக்குற ஸ்போட்ஸ் டே க்கு எதவது ஐடியா வச்சிருந்திங்கனா சோல்லுங்க “ என்று பேச சுடர் முகம் மாரி “ அச்சச்சோ நாம அவசர பட்டு திட்டிடோமோ “ என்று எண்ணி பின் மீட்டிங்கை கவனத்துடன் கவனிக்க ஆரம்பித்தால். சிறுது நேரம் சென்று மீட்டிங்கும் முடிய அனைவரையும் செல்ல சொன்ன ஆதியோ சுடரை மட்டும் வெயிட் பண்ண சொல்லி விட்டான் சுடரும் என்ன செய்ய வென்று தெரியாமல் முழித்தபடி நிற்க அருகில் இருந்த வாணி “போச்சி போங்க அன்னைக்கு அவர் ரிங்டோனுக்கு சொன்னிங்கல அத பத்தி கேக்க தான் வெயிட் பண்ண சொல்றாங்க போல போச்சி போச்சி “ என்று சொல்லி விட்டு செல்ல இதை கேட்ட சுடர் “ இவங்க வேற நிலைமை தெரியாம “ என்று அங்கேயே நிற்க அந்த அறையை விட்டு அனைவரும் சென்றதும் ஆதி சுடரை பார்த்து தன் முன்னே இருக்கும் இடத்தை காட்டி தலை அசைத்து வர சொல்ல, அதற்கு சுடர் மறுப்பாக தலை அசைத்து “நான் இங்கேயே உட்கர்ரன் சார்“ என்று சொல்ல அதை கேட்ட ஆதி “சுடர் இங்க வா “என கனிர் குறளில் அழைக்க சுடர் மனதில் “அய்யோ இந்த டோனே சரியில்லையே “ என்றபடி அங்கேயே நிற்க ஆதி “சுடர் “ என்று மீண்டும் அழைக்க தன்னை போல சென்று அவன் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டாள். அதன் பின்னையே ஆதி சிறு புன்னகை பூக்க “குட் சுடர் , ஆமா நம்மல பத்தி என்ன முடிவு எடுத்திருக்க “ அதற்கு திரு திரு வென்று சுடர் முழித்தபடி “அது, நான், அப்போ சொன்னது தான் சார் “ என திக்கி தெனறி பேச
“ஸ்கூல் டைம் முடிஞ்சிருச்சி அப்பவும் சார்-அ “ என்று தலை அசைத்த படி “ சரி உன் முடிவுல மாற்றம் எதுவும் இல்லையே “
“இல்லை சார் “
“அப்போ ஓகே நானும் உனக்கு என்னை பிடிச்ச பிறகு பொருமைய தீபா மேரேஜ் முடிஞ்சு நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம்னு நினைச்சன் அன நீ என்ன வேனனு சொல்லும் போது வேற என்ன பண்ண , என்ற பெரும் மூச்சி விட்ட படி “அப்போ உடனே மேரேஜ் பண்ணிட வேண்டியது தான் உன் சம்மதம் இல்லாம “ என்று சொல்ல சுடர் அவன் பேசுவது எதுவும் புரியாதது போல முகம் வைத்து பேந்த பேந்த விழித்தபடி “அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன், எங்க மாமாவும் ஒத்துக்க மாட்டாங்க அப்படி மாமா ஓகே சொன்னாலும் நான் சொல்ல மாட்டேன் “ என்று தலையை ஆட்டியபடி பேச
அதை பார்த்து சிரித்த ஆதி “சுடர் நீ குயுட் தெரியுமா “ என்று சொன்னதும் அவனை முறைத்த சுடரை பார்த்து தன் கண்களை சிமிட்டிய படி சிரித்து கொண்டே “ என்னாட இவன் உளறுறான் தான நினைக்கிற , உனக்கு நீ உங்க மாமாக்கு பண்ணி கொடுத்த சத்தியம் நியாபகம் இருக்கா “ என்று கேட்க அதற்கு தன் புருவம் சுருக்கி யோசித்த சுடர் உனக்கு எப்படி தெரியும் என்பது போல் ஆதியை பார்க்க “அது உங்க மாமா ஒரு ஓட்ட வாய் என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிருவாங்க அதான் இதையும் சொல்லிடாங்க “ என்று தன் தோளை குழுக்க சுடர் வாயுக்குள் தன் மாமானை திட்டியபடி என்ன பேச என்று கூட தெரியாமல் கைகளை பிசைந்த படி இருக்க அதை பார்த்த ஆதி சிரித்து கொண்டே மேஜை முன் வந்து சுடர் முகம் அருகே இவன் முகம் வைத்து “என்ன கல்யாணம் நாளைக்கே பண்ணிக்கலாமா “ என்று கேட்க அதற்கு சுடர் வேகமாக மறுப்பாக தலையை அசைத்து “சார் வேன” என்று பாவமாக முகத்தை வைத்து கொள்ள .
ஆதி தன் கன்னத்தில் கைவைத்தபடி” உன்ன பார்த்தாலும் பாவமா தான் இருக்கு சரி ஒரு ஐடியா நீ என் கூட ஒரு எழு டேட் வா, வீக் எண்ட் மார்னிங் டு நைட் வரை டைம் ஸ்பெண்ட் பண்ணு வேளில போலாம் சாப்டலாம் நிரையா பேசலாம் அப்பவும் உனக்கு என்ன பிடிக்கலனா உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ஓகேவா “
“அச்சோ நான் வந்துட்டா மாமா வேந்தன யார் பாத்துப்பா “ என்று ஷாக் ஆகி கேட்க அதை கேட்டு கடுப்பான ஆதி “ டேட் நதும் நீயும் நானும் மட்டும் நினைக்காத நம்ம கூட நம்ம பையனும் வருவான் அண்ட் உங்க மாமா ஒன்னும் பாப்பா இல்லை சரியா”
“அப்போ உங்களுக்கு பையன் இருக்கானா சொல்லவே இல்லை “ இதை கேட்டு ஆதிக்கு புரையேற தலையில் தட்டியபடி “ நான் நம்மா குழந்தைன்னு சொன்னது வேந்தன “ என்று முறைத்த படி சொல்லிக்கோண்டே “ மாஸ்ஸ பேசுறத பூரா இப்படி காமெடி ஆக்கிட்டே இருந்தா இவ கிட்ட எப்படி தான் பேச” என முனங்கிய வாரு சுடரை பார்த்தான்.
அவளோ தீவிரமாக எதையோ யோசிக்க அவளையே ஆதியும் பார்த்த படி அவளுக்கு யோசிக்க நேரம் தர சுடரும்’ ஏழு டேட் தானே நம்ம வேந்தனும் வருவான் இவரும் பாக்க நல்லவர் மாதிரி தான் இருக்காரு மாமாக்கு தெரிஞ்சவரு கூட என்ன ஸ்கூல் சார்-அ ஆகிட்டாரு இருந்தாலும் ஒரு சான்ஸ் கொடுப்போம் எப்படி இருந்தாலும் மேரேஜ் பண்ணிக்க தானே போறோம் சரி “ என்று “சார் ஏழு டேட் தான் அதுலயும் எனக்கு உங்கள பிடிக்கலனா என்னை கம்பல் பண்ண கூடாது “ என ஸ்டிரிட் ஆக சொல்ல ஆதியும் சரி என்பது போல தலை அசைத்தான் பின் சுடர் “ சரி என் பையன் வேந்தன் வெயிட் பண்ணுவான் நான் கிளம்புறன் “ என்று எழுந்திரிக்க ஆதி உடனே
“நம்ம பையன்னு சொல்லேன் சுடர் “
“ என்னும் கல்யாணம் ஆகல சார் ஸ்பீட கொஞ்சம் குறைங்க “ என பல்லை கடித்தபடி பேச
“இதுல மட்டும் மாமாவும் மருமகளும் ஒன்ன இருங்க “ என்று முனங்கியபடி அவளை பார்க்க சுடரும் தலை அசைத்த படி வாசலை நோக்கி செல்ல “பாய் ஒளி பேபி “ என்று சத்தம் கேட்டு திரும்பி பார்த்து “என்ன பேபியா” என்று முகம் அஷ்டகோணலாக மாற
“அது மேரேஜ் அப்பறம் உன்ன இப்படி தான் கூப்டலாம்னு இருக்கேன் நல்ல இருக்க “ என்று வேற கேட்க ஆதியை பார்த்து உதட்டை சுலித்து அழகு காட்டிவிட்டு இவள் செல்ல, சுடர் சென்றதும் நாற்காலியில் சாய்ந்தபடி தன் கைகளால் கண்களை மூடியபடி சிரித்து கொண்டே “ எல்லாருக்கும் நீ சுடர் எனக்கு மட்டும் நீ லைட் என் லைப் ஓட ஓளி “ என வெட்கபட்டு சிரித்தான் ஆதித்யன்.
கீழே வேந்தனை நோக்கி சென்ற சுடர் ‘நம்ம பன்றது கரைட் தான இவர நம்பலாமா என்று ஏதேதோ சிந்தனையில் செல்ல அங்கே வேந்தன் பேன்ஜில் அமர்ந்த படி கையில் ஒரு பார்சல் வைத்து இருக்க அதை பார்த்த சுடர் “ என்ன பார்சல்டா இது யார் தந்தா “
“பீயுன் அண்ணா தான் தந்தாங்க நீங்க மறந்து ஆதி சார் ரூம்ல விட்டு பொய்டிங்களாம்” என அந்த பார்சலை நீட்ட அதில் இவள் காலை சென்ற கேக் சாப் பெயர் போட்ட பாக்ஸ் ஒன்று இருக்க அதை பார்த்து சிரித்தபடி “ சரி வா சீக்கரம் வீட்டுக்கு போய் கேக் சாப்டலாம் “ என்று இருவரும் செல்வதை அங்கு எதிரில் பைக்கில் இருந்த இருவர் பார்த்தபடி அவள் பின்னே சென்றான.
தீபா கார்திக் பாலா என்று மூவரும் க்ரைம் ஸ்பாட் ஒன்றில் எவிடென்ஸ் கலைட் செய்து கொண்டு இருந்தன. அது ஒரு திருட்டு சம்பவம் நடந்த வீடு எவிடன்ஸ் கலைட் செய்து கொண்டு இருந்த இடத்தில் ஒரு மணி நேரமாக தேடியும் சொல்லி கொல்லும் அளவு ஒரு எவிடன்ஸும் கிடைக்காமல் இருக்க கார்திக் “ வர வர இந்த குற்றவாளிங்க எல்லாம் புத்திசாலியா ஆகிட்டே போறாங்கப்பா ஒரு க்ளுவும் கிடைக்கல “ என்று நொந்து கொள்ள இதை கேட்ட தீபா “ என்ன கார்திக் நீங்க போய் இப்படி பேசலாமா நீங்க யாரு நீங்கதான் இந்த டீம்கே புலின்னு கேள்விபட்டேன் “ இதை கேட்ட கார்திக்
“ அச்சோ மேம் இது யாரோ எனக்கு பிடிக்காதவங்க கிளப்பிவிட்ட வதந்தி நம்பாதிங்க “
“ ஓ.. அப்போ நம்ம போஸ்மாட்டம் பண்ற டிம்ல இருக்க டாக்டர் காயத்திரி யாரோவா சரி சரி சொல்லிறேன் “ இதை கேட்டு ஜர்க்கான கார்த்திக் “ அது மேம் நான் சோன்ன ஆமா நான் தான் சொன்ன நான் குழபுக்கு போடுற புளிய பத்தி சொன்ன அதை அவுங்க தப்ப நினைச்சிட்டாங்க போல நீங்க எதுவும் போய் சொல்லாதிங்க மேம் நானே சொல்லிறன் “ என மென்னு முழுங்க அதை பார்த்து சிரித்த தீபா “சரி நான் இதோ வந்துறன்” என்று வெளியே சென்று விட்டால்.
இவர்கள் பேசுவதை கேட்ட பாலா கார்திக்கை பார்த்து “என்னடா நடக்குது இங்க தீபா என்ன உன் கிட்ட நல்லா பேசுறா “
“எப்பவும் போல தானே பேசுறாங்க ப்ரோ “
“எப்பவும் போலனா எப்போவும் தீபா இப்படி தான் உன் கூட பேசுவால “
“ஆமா அதுக்கு என்ன ப்ரோ “
“ஒன்னும் இல்லையே நீ உன் வேலைய பாரு “ என்று சொல்லி விட்டு தன் மனதில்
“ நம்ம பேசுனா மட்டும் எரிச்சிடுற மாதிரி பாப்பா இவ கூட மட்டும் சிரிச்சி சிரிச்சி பேசுறா இவளும் எல்லார் மாதிரி தான் போல அழகா இருக்கான் இவள விட சின்ன பையன் ஜூனியர் வேற அதன் ஓகே பண்ணிருப்பா போல , இருக்கட்டும் பாத்துக்குறன் “ என்று கேவலமாக யோசித்தபடி வேலையை பார்த்தான்.
பாலா வயது 46, வேலை பார்க்கும் இடத்தில் தனக்கு கீழ் வந்து சேரும் ஜூனியர் பெண்களுக்கு வேலை கற்று தருகிறேன் என்ற பெயரில் அவர்களை தோடுவது காமெடி என்ற பெயரில் தவறாக பேசுவது என இருப்பான் அதே போல தான் தீபாவிடமும் நடக்க முயன்றான் அதற்கு தீபா அப்போது அவனுடன் பார்த்து கொண்டு இருந்த கேஸில் முக்கியமான எவிடன்ஸை வேணும் என்று அவனிடம் கொடுக்காமல் நேராக அந்த கேசை பார்த்த அதிகாரியிடம் பாலா சார் இதை தற மறந்து விட்டார் என்று போட்டு கொடுத்து விட, பாலாவை திட்டி தீர்திருந்தார் அவர் உயர் அதிகாரி அது அவருக்கு ஒரு கருப்பு புள்ளியாகவே மாறிவிட்டது அதில் வன்மம் கொண்ட பாலா ஆபிசில் அனைவரிடமும் போலியாக தீபாவை பற்றி புறலி பறப்பி விட்டான்.
தீபா அவளிடம் வேலை பார்க்காமல் ஜாலியாக பேசினால் அவர்களை உயர் அதிகாரியிடம் சொல்லி வேலையில் இருந்து தூக்கும்படி செய்து விடுவாள் என்று ஒன்றுக்கு மூனாக பேசி வைக்க அவள் அமைதியாகவே இருப்பதையும் பார்த்து உன்மை என்று எண்ணி அனைவரும் அவளை விட்டு ஒதுங்கியே இருந்தன.
இதை நினைத்த படி இருந்த பாலாக்கு கார்த்திக் உடன் தீபா பேசியது சுத்தமாக பிடிக்கவில்லை தீபாவை ஏதாவது செய்ய வேண்டும் என்று வன்மமாக எண்ணி கொண்டான்.
வெளியே சென்ற தீபா அந்த தெருவை பார்க்க அது மதிய வேலை என்பதால் காலியாக இருக்க சுற்றியுள்ள இடத்தை பார்த்தால் வீடுகள் மட்டும் இருந்தது யாரும் தென்படவில்லை பின் தீபா தன் மாஸ்கை கழற்றிய படி கையில் இருந்த தண்ணீர் பாட்டிலால் முகத்தை கழுவ அப்போது கார்திக் “தீபா மேம் எவிடன்ஸ கிடச்சிருச்சி “ என்று கத்தி கொண்டு வர அவனை திரும்பி பார்த்த தீபா சிரித்த படி நிற்க பின்னால் இருந்து ஒரு பெண் குறள் “ நிலாம்மா…” என்று கேட்க தீபா கண்கள் களங்க வாய் ஒரு பெயரை முனு முனுத்தது.