விடியல் 30

தீபா அவள் வேலை செய்யும் இடத்தில் உள்ள லேப்பில் டாக்டர் தந்த சாம்பிலை வைத்து ரிசர்ச் செய்து கொண்டு இருந்தால்.  அப்போது அங்கு வந்த கார்த்திக் கையில் வைத்திருந்த டிபன் பாக்ஸ் பேகை வைத்து ஆடியபடி “

அன்று வந்ததும் அதே நிலா சச்சச்சா,

இன்று வந்ததும் அதே நிலா சச்சச்சா,

இந்த மாசம் என் அன்னை நிலா

 உணவு தருவது மம்மி நிலா

ஆமாம் உணவு தருவது அன்னை நிலா“

என்று  சுருதி என்றால் என்ன என்ற டோணில் பாடி கோண்டே வந்தவன் தீபாவை பார்த்து “ஐயோ மம்மி அது நான் இல்ல “ என்று யூ டர்ன் எடுத்து ஓட போக ,  அப்போது

 “ கார்த்திக் நான் பாத்துட்டன் ஒடாத இங்க வா “ என்று சொன்னதும் தீபா குறள் கேட்டு மீற முடியாமல் அருகே சென்றான்

“குட் மார்னிங் மேம்  நீங்க இங்க என்ன பண்றிங்க ஹெல்ப் வேணுமா “ என்று அட்டேன்சனில்  நின்று பேச

“அதெல்லாம் ஒரு ஹெல்ப்  வேன அது என்ன பாட்டு பாடுன, என்ன என்னை கிண்டல் பண்ண பாடுனியா “ என்று மிரட்டும் தொனியில் பேச

“அச்சோ இல்ல மேம் நான் ஊருல இருந்து வந்துருக்க அம்மா பத்தி பாடுன மேம் உங்கள கிண்டல் பண்ணல நம்புங்க “

“ஓ.. உங்க அம்மா பேரு நிலா வா “

“ ஆமா மேம் வெண்ணிலா,  எல்லாரும் நிலானு கூப்டுவாங்க “

“ஓ..அது சரி எப்பவும் லேட்டா வருவ இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கரம் “

“அது மேம் அம்மா மார்னிங்  5 க்குலாம் முழிச்சிருவாங்க அதான் என்னையும் சீக்கரம் வேலைக்கு போனுன்னு  துரத்தி விட்டாங்க “

“ அதன பார்த்தேன் லேட்ட வர நீ எப்படி சீக்கிரம் வந்தனு , சரி நீ போ எனக்கு கொஞ்சம் லேப்ல  வேலை இருக்கு நான் அப்புறம் வரன் “

“ என்ன வர்க் மேம் ,கேஸ் விசியமா “

“கேஸ் இல்ல நேத்து எங்க காலேஜ் கெமிஸ்ட்ரி சார் பார்த்தன் அவர் என்ன பாத்துட்டு சும்மா போகாம ஒரு  மிக்சர-அ கொடுத்து இதுல இருக்க கெமிக்கல தனியா பிரிச்சி என்ன என்ன கெமிக்கல் இருக்குனு கண்டு பிடின்னு சொல்லிடாரு “

“ஓ.. காலேஜ்ல தான் இந்த சார்ங்க தொல்லைன இங்கயுமா,  ஆனா மேம் அது ஈசி வர்க் தானே மேம் “

“ஆமா ஈசி தான் முதல்ல எல்லா  மிக்சரையும் தனியா பிரிக்கனும் அப்பறம் அதோட வெயிட் வச்சி  அதோட கெமிக்கல் நேம்  கண்டு பிடிக்கணும் “

“ஆ.. அவ்ளோ தான் “

“அன அதுல தான் ஒரு பிரச்சனை இருக்கு  இந்த மிக்சர எந்த மெத்தட்ல பிரிக்குறது இதுல மொத்தம் எத்தன சப்டண்ஸ் இருக்குனு எல்லாம் நானே தான் கெஸ் பண்ணி கண்டு பிடிக்கணும் “

“சூப்பர் போங்க பேசாம அவர் கிட்டையே போய் தெய்வமே எனக்கு வேலை அதிகமா இருக்கு க்ளு மாதிரி தாங்கனு கேளுங்க மேம் இந்த மிக்சர்ல எத்தனை கெமிக்கல் இருக்குனு சொண்ண கூட போதும் “

“அதுக்கு முதல இத உருவாக்குனவனை போய்ல தேடனும் அது முடிஞ்ச நான் ஏன் இங்க இப்படி கஷ்டபட போறேன் “ என்று முனங்கி பின் “ அது நான் வீராப்பா எங்க ஃபாரன்சீக் ஆபிஸ்ல  இருக்கவுங்க ஈசியா கண்டு பிடிச்சிருவாங்கனு சொல்லி வச்சிருக்கேன் இப்போ போனா ஃபாரன்சிக் டீம் மானம் பறந்துரும் “

“அப்போ ஒன்னும் பண்ண முடியாது , சரி வாங்க நானும் ஹெல்ப் பண்ற நம்ம டீம் மானம் போச்சினா எனக்கும் அசிங்கம் தானே “

தீபா எதே யோசித்த பின் டாக்டர் தந்த சாக்லேட்டை கரைத்து வைத்து இருந்த மிக்சரை அவனிடம் கொடுத்து “நீ செய்ர ரிசல்ட்லாம் கரைட்டா இந்த நோட்ல எழுதிரு கார்த்தி “ என்று இருவரும் ஒரு சில பிரித்தல் முறை மூலம் முயற்ச்சி செய்ய பலன் தான் இல்லை நேரமும் செல்ல பின் இருவரும் இதை வேலை முடித்து முயற்ச்சி செய்யலாம் என்று சென்று விட்டனர்.

இங்கு சுடர் ஆசிரியர் ஓய்வு அறையில் அமர்ந்து அட்டனன்ஸ் எடுத்து கொண்டு இருக்கும் போது மோபையில் மேசேஜ் வந்த அறிகுறி தெரியா யார் என்று பார்த்தால்.  ஆதி தான் மெசேஜ் செய்து இருந்தான். “சுடர் உங்களுக்கு இன்னைக்கு 2,3 பிரியட்ஸ் ஃப்ரீ தானே அப்போ பக்கத்துல இருக்க கேக் ஷாப்க்கு வாங்க கொஞ்சம் பர்ஸனலா பேசனும் “ என்று மெசேஜ் செய்து இருந்தான் இதை பார்த்து “இவர் எதுக்கு நம்ம கிட்ட பேசனும்னு மேசேஜ் பண்ணிருக்காறு இதுல நம்மல பத்தி எல்லாம் தெரிஞ்சும் இது வரை இத பத்தி ஒரு வார்த்தை பேசிருக்காரா,  இப்போ மட்டும் என்னவா இருக்கும் ஒரு வேலை மாமா பத்தியோ” என்று யோசித்து உடனே வரேன் என்று ரிப்லே பண்ணி இருந்தால்.

அந்த மெசேஜை படித்து விட்டு முகம் பிரகாசிக்க தன் காரில் இருந்து இறங்கி அவன் அறை நோக்கி சென்றான் ஆதி. எப்போதும் சிறு முறைப்புடன் திரியும் ஆதி அன்று புன்னகை முகத்துடன் திரிய ஸ்கூலே ஆ.. என்று தான் பார்த்தது.

சுடர்க்கு இந்த நீயுஸ் வாணி மூலம் தெரிய வர “அந்த அதிசயத்தை நான் பாக்காம விட்டுடனே மேம் “ என்று பேச அதற்கு வாணி

“ஏன் ஃபில் பண்றீங்க இப்போ கூட அவர் ஆபிஸ் ரூமுக்கு போன லைவா பாக்களாமே “ என்று சிரிக்க

“ஏன் மேம் நான் நல்ல இருக்குறது பிடிக்கலைய சிங்கத்தோட ரூமுக்கு என்னை அனுப்பி வச்சு அது பிராண்டி வைக்கனும்னு இவ்ளோ ஆசை படுறீங்க “

“ஏன் தான் சார் பாத்து இப்படி பயப்படுறீங்களோ நீங்க”

“அது மேம் நமக்கு சின்ன வயசுல இருந்தே சார்னா ஆகாது இந்த மிஸ்ங்கல கூட ஐஸ் வச்சி கரேட் பண்ணி அடில இருந்து தப்பிச்சிருவேன் அன இந்த சார்ங்க அவுங்க கிட்ட மாட்டுனா அடி நிச்சயம் அதே மாதிரி தான் இந்த ஆதி சாரும் என்ன அடிக்க மாட்டாரு ஆனா கண்ணை காட்டியே மிறட்டிருவாரு “ இதை கேட்டு சிரித்த வேணி

“நல்ல கதை சொல்றீங்க மேம் , எனக்கு க்ளாஸ்க்கு டைம் ஆச்சி நான் கிளம்புறன் “ என்று செல்பவலை பார்த்து “நான் என் பயத்தை பத்தி சொன்ன கதைன்னு போற இவங்கள,  அப்புறம் பாத்துக்கலாம் இப்போ டைம் வேர ஆச்சி கேக் சாப்க்கு போலாம் சார் வேர வெயிட் பண்ணுவாங்க “

என்றபடி ஷாப்பை நோக்கி சென்றாள் சுடர். அங்கே ஷாப்பில் அமர்ந்து இருந்த ஆதியோ சிறு பதட்டத்துடன் இருந்தான். அப்போது அங்கே வந்த சுடரை பார்த்து புன்னகை முகமாக “வாங்க சுடர் வந்து உக்காருங்க “ ஆதிக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்த சுடர் மனதில் “வேணி மேம் சொன்னது கரைட் தான் போல சிரிச்ச முகமா இருக்காரு “ என்று எண்ணிய படி “குட் மார்னிங் சார் “ என்று விஷ் செய்ய அதை கேட்ட ஆதி “ஸ்கூல் குள்ள தான் நான் சார் இப்போ வேரும் ஆதி தான் என்னை ஆதினே கூப்டுங்க “ என்று நெறிங்கி வர பார்க்க அதற்கு சுடர்

“அது பறவால சார் எனக்கு பழக்கம் ஆகிடுச்சு நான் சார்னே கூப்டறன் “ என்று கோட்டை தாண்டி நானும் வர மாட்டேன் நீயும் வர கூடாது என்பது போல் பேச . ஆதி “இது வேலைக்கு ஆகாது நேரா விசியத்துக்கு வந்துருவோம் “ என்று பேச தெடங்கினான்.

“சுடர் கேக் எதாவது ஆடர் பண்றீங்கள “

“நானே கேக்கணும் நினைச்சேன் உங்களுக்கு என்ன கேக் ஆர்டர் பண்ணட்டும் “

“உங்களுக்கு பண்றதே பண்ணுங்க” என்று சொல்லி சுடர் ஆடர் செய்ய எழுந்து சென்றதும் தலையிலே அடித்து கொண்டு “கேக் சாப்டவாட வந்த “ என்று பொரும் மூச்சி ஒன்று இழுத்து விட்டு நேராக அமர்ந்தான். ஆடர் செய்தபடி அங்கு இருந்து ஆதி செய்துகொண்டு இருப்பதை எல்லாம் பார்த்த சுடர் “ என்ன பண்றரு எதோ சிரியஸ்-ஆன விசியமா இருக்குமோ,  சீரியஸ் விசியமா இருந்தா என் கிட்ட ஏன் சொல்லனும் ஒரு வேலை மாமா ஓட பழைய லவ் ஸ்டொரிய பத்தி இருக்குமோ , அமா அதுவா தான் இருக்கும் போல அந்த பொண்ணு சார் ஃபிரண்ட்-அ இருக்கும்னு நினைக்கிறன் நாம தான் ஹெல்ப் பண்ணணும் அந்த பொண்ணுக்கு “என்று அவளே கதை வசனம் எல்லாம் ரெடி செய்து விட்டு தான் ஆடர் செய்த ரெயின்போ கேக்கை வாங்கி கொண்டு சென்று அமர்ந்தாள்.

ஆதியும் என்ன பேச வேண்டும் என்று மனதில் பேசி வைத்ததை பேச போகும் முன் சுடர்

“லவ் மேட்டரா சார் “ என்று தடாலடியாக கேட்க, அதை கேட்டு சுடரை கண் விரித்து அதிர்ந்து பார்த்த ஆதி “எப்படி உனக்கு தெரியும் “

“அப்போ நான் கேஸ் பண்ணது கரைட்டா “

“என்னது கேஸ் பண்ணிய “

“ஆமா உங்க முகத்த பாத்தாலே தெரியுதே “

“தெரியுற மாதிரியா நடந்துகிட்டன், சரி உனக்கு ஓகேவா “

“ம்ம்ம் எனக்கு டபுள் ஓகே நானே இத பத்தி எப்படி மாமா கிட்ட பேசனு யோசிச்சிட்டு இருந்தேன்”

“என்னது குமரன் கிட்ட பேசலாம்னு இருந்துயா, சூப்பர் போ ஆமா உனக்கு எப்போ இருந்து இந்த ஐடிய வந்துச்சி “

“அது நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்துதான் “

“அப்போ இருந்தேவா, அப்போவ ஏன் என் கிட்ட சொல்லல “

“அப்போ நீங்க மாமாக்கு தெரிஞ்சவுங்கனு எனக்கு தெரியாதுல”

“ஒ… ஆமால , அப்போ உனக்கு ஓகேனா நான் அண்ணா கிட்ட பேசுறன் “

“இல்லை இப்போ பேசாதீங்க முதல என் கிட்ட அவுங்கள இன்டரடியூஸ் பண்ணி வைங்க நான் மொதல பேசி பாத்துட்டு எல்லாம் ஓகேன என்ன பண்ணலாம்னு அப்பறம் டிசைட் பண்ணலாம்” இதை கேட்டு குழம்பிய ஆதி “ யார இன்டரடுயுஸ் பண்ணணும் நானு “

“மாமாவ லவ் பண்ற பொண்ண “

“என்ன மாமாவ லவ் பண்ற பொண்ண அது யாரு “

“அது உங்க ஃபிரண்டு “

“ஏன் ஃபிரண்டு ஏன் உங்க மாமாவ லவ் பண்ண போறான் “

“நான் உங்க ஃபிரண்டு பொண்ண சொல்றன் “

“சுடர் என்ன ஒலறிட்டு இருக்க தெளிவா பேசு “

“அது உங்க பொண்ணு ஃபிரண்டு எங்க மாமா லவ் பண்ணி அதுக்கு உங்க கிட்ட ஹெல்ப் கேட்டு நீங்களும் அதுக்காக என் கிட்ட பேச வந்திங்களே “ என்று மூச்சி பிடிக்க பேச. இதை கேட்ட ஆதி “ அப்போ இவ்வளவு நேரம் நீ தெரியும்னு பேசுனது உங்க மாமா லவ் க்காவா  “

“ஆமா நீங்க பர்சுனல்னு கூட மெசேஜ் பண்ணிங்களே அது மாமா பெர்சனல் தானே “

“ஏன் இந்த உலகத்திலயே உங்க மாமாக்கு மட்டும் தான் பர்சுனள்னு ஒன்னு இருக்குமா “ என்று நெற்றியில் கைவைத்து பின் தன் தலையை கோதியபடி “இங்க பாரு சுடர் நான் பர்சுணல்னு  சொன்னது நம்மல பத்தி சரியா , சுத்தி வளைக்காம சொல்லிறன் எனக்கு உன்ன பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன் அதை பத்தி பேச தான் உன்ன வர சொன்ன “ இதை கேட்டு தன் கண்களை விரித்து ஆதியை பார்த்த படி “ நிஜமாவ இல்லை சும்மா தானே சொல்றிங்க சார் “

“ஸ்கூல் உள்ள மட்டும் சார்னு கூப்பிடு இங்க ஆதி போதும் “

“சார் நான் சொல்றன் நீங்க என்ன சொல்றிங்க இல்லை இதுலாம் செட் ஆகாது நான் போறேன் டைம் ஆகிருச்சி “ என எழுந்திருக்க போன சுடர் கையை பிடித்த ஆதி

“ஏன் செட் ஆகாது என்னை உனக்கு பிடிக்கலையா , இல்லை உன் பாஸ்ட் பத்தி யோசிச்சி தயங்குறியா “

“அதெல்லாம் இல்லை சார் நீங்க முதல கைய விடுங்க “ என்று சுற்றி சுற்றி பார்க்க நல்ல வேலை கடையில் கூட்டம் எதுவும் இல்லை சுடர் பார்வையை புரிந்த ஆதி “அதெல்லாம் யாரும் இல்லை நீ மோதல பதில்ல சொல்லு இல்லன கைய விட மாட்டேன் “

“கைய விடுங்க சொல்றன் “ என்றதும் ஆதி கையை விட , சுடர் “நான் ஏன் என் பாஸ்ட் நினைச்சி என் ஃப்யூச்சர கெடுத்துக்க போறேன் எனக்கு என் பஸ்ட் ஒரு பிரச்சனையே இல்லை ஏனா அது வெறும் பாஸ்ட் தான் சரியா, ஆமா லவ் பண்ண தான், ஆனா அது தப்பு இல்லை நான் அத பண்ண வயசு அண்ட் பண்ண நபர் தான் தப்பு அப்போ கூட நான் சாரி கேட்கனுன அது என் மாமா அக்கா கிட்ட மட்டும் தான் கேட்கனும் தப்பு பண்ண அவனே ஹாப்பியா இருக்கும் போது நான் ஏன் ஃபீல் பண்ணணும் ஒரு வகைல நானும் விக்டம் தான் நான் ஏன் அதையே நினைச்சி என் லைப்ப கேடுத்துக்கனும் “ என்று நீளமாக பேசி முடிக்க, இதை கேட்டு குழம்பிய ஆதி “அப்பறம் ஏன் என்ன வேன சோல்ற “

“அது ஏனா நான் ஒரு ஸ்கூல் சார மேரேஜ் பண்ணிக்க மாட்டேன் “ என்று சொல்லிவிட்டு ஓடி சென்று விட்டால் சுடர். இதை கேட்டு முதலில் அதிர்ந்து பின் சிரித்து “இவள நில்லு இதோ வரன் “ என்று எழுந்திரிக்க சென்றவன் சுடர் ஆசையாக வாங்கிய கேக்கை பார்க்க அதே ஃப்லேவரில் ஒரு சிறிய முழு கேக் ஒன்று வாங்கி சென்றான்.

சுடர் பள்ளியை நோக்கி நடந்த படி “ இந்த ஆதி சார்க்கு என்ன ஆச்சி கல்யாணம் பண்ணிக்க கேக்குறாரு ,  இவர கல்யாணம் பண்ண வீட்டுலயும் ஸ்டன்டட்டீஸ் அட்டேன்சன்னுல சுத்தனும், ஸ்கூல்ல பாக்கவே பயமா இருக்கு நோ சுடர் நோ என்னும் ஒரு மாசத்துக்கு இவர் கண்ணுல படாம தப்பிச்சறனும் முதல இந்த விசியத்தை மாமா கிட்ட சொல்லனும் என்ன ஃபிரண்ட வளத்து வச்சிருக்கிங்கனு கேட்கனும் “ என்று புலம்பிய படி ஆதியை பார்க்கவே கூடாது என்று உறுதியுடன் போக அன்று மாலையே ஆதி முன் அவனை மனதில் திட்டியபடி நின்று கொண்டு இருந்தாள் சுடர் ஒலி.