விடியல் 28

ராகுலின் சிறு வயது கனவு, தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது அதற்காக அவனும் நன்றாகவே படித்து வந்தான். காலேஜ் முடித்தவுடன் ஒரு நல்ல கோச்சிங் சென்டரில் சேர்ந்து முதலில் நன்றாக ஆர்வத்துடன் படிக்க தோடங்கியவன் பின் போக போக அனைத்தும் கடினமாக இருந்தது அதில் பயந்து எங்கே தன் ஐபிஎஸ் கனவு கனவாகவே போய்விடுமோ என்று பயந்து இருந்தவனுக்கு கிடைத்தது தான் அந்த மாத்திரை முதலில் தயங்கியவன் பின் ஒரு மாத்திரை போட்டு பார்த்து அதன் பலன் கண்டு தினமும் போட தொடங்கி இருந்தான். பத்து மாத்திரை பத்தாயிரம் என்று வாங்கியவன் பின் கோச்சிங் சென்டர் போவதை நிறுத்தி அந்த பணத்திலும் மாத்திரை வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தான். இவ்வாறு எஸ்சாம் கிளியர் செய்து டிரெயினிங் செல்ல அழைப்பும் வர இனிமேல் இது தேவை இல்லை என்று நிறுத்தி விட நினைக்க. அதன் விளைவாக இவனால் தூங்க முடியாமல் போனது, முதல் மூன்று நாள் என்ன என்னமோ செய்து பார்த்தவனுக்கு தூக்கம் மட்டும் வரவில்லை ஒரு நிமிடம் கூட அவனால் தூங்க முடியவில்லை தூக்கம் மாத்திரை போட்டும் ஒரு அவர் தூக்கம் மட்டுமே கிடைத்தது. இவ்வாறு மாத்திரை இல்லாமல் ஒரு வாரம் செல்ல இவனால் எழுந்து எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது, அதில் பயந்து போன ராகுல் மீண்டும் மாத்திரை வாங்க சென்றான். என்னும் ஒரு வாரத்தில் டிரெயினிங் செல்ல வேண்டும் அதனால் தன் வீட்டில் இருக்கும் பணம் எடுத்து 40 மாத்திரை வாங்கினான் அதில் ஒன்று போட்டு நன்றாக தூங்கிய பின்பே அவனுக்கு ஒன்று நிச்சியமாக தெரிய வந்தது. அது இனிமேல் மாத்திரை இல்லாமல் வாழ முடியாது என்று டிரெயினிங் முழுக்க மாத்திரை வேண்டும் என்று வீட்டில் இருக்கும் ஒரு செயின் ஒன்றை விற்று அதில் கிடைத்த பணத்திலும் மாத்திரைகள் வாங்கி வைத்து கொண்டான்.

 வீட்டில் பணம் செயின் காணாமல் போவதை பார்த்து ரம்மிய தேடும் போது இந்த மாத்திரைகளை பார்த்து விட்டால் ராகுலிடம் கேட்டதற்கு முதலில் ஏதோ காரணம் சொல்லி தப்பிக்க அதை நம்பாமல் ரம்மிய தொடர்ந்து கேட்க பின் உண்மை அனைத்தையும் சொல்லி அழுக தொடங்கினான் ராகுல் . அவனை பார்த்த ரம்யா டாக்டர் சேதுராம் இடம் அழைத்து சென்று விட்டால். இவர் போதை பொருளுக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு அதில் இருந்து வெளி வர உதவி செய்ய ஆஸ்பிட்டல் ஒன்று நடத்தி வருகிறார். அங்கு அவர் ராகுலை ட்ரக் டெஸ்ட் எடுத்து பார்க்க அதில் அவன் உடம்பில் ட்ரக் எடுத்து இருக்கும் அறிகுறியே இல்லை என்று வர குழம்பிய டாக்டர் பின் அந்த மாத்திரைகளை பரிசோதிக்க அது வெறும் இன்ஸ்சோமேனியவை குணப்படுத்தும் மாத்திரையாகவே இருந்தது. அதில் மேலும் குழம்பிய டாக்டர் ராகுலை முழு உடல் பரிசோதனை செய்யும் போது வந்த ரிசல்டை பார்த்து அதிர்ந்து விட்டார் அது என்ன வென்றால் ராகுலின் உடல் உறுப்புகள் கொஞ்சம் கோஞ்சமாக வேலை நிறுத்தம் செய்து கொண்டு இருக்கிறது அவன் இந்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து கொண்டால் இறந்து போய்விடுவான் என்று வர.

இதை ராகுல் குடும்பத்திடம் சொல்ல பயந்து போன ராகுல் “அன இந்த மாத்திரையை சாப்டலன என்னால எதுமே பண்ண முடியாதே “ என்று பயப்பட. டாக்டர் தான் சமாதானம் செய்து டிரிட்மண்ட் ஸ்டார்ட் செய்யதார். எந்த ஒரு தூக்க மருந்தும் அவன் உடலில் வேலை செய்ய வில்லை தூக்கம் வருவது கடினம் ஆனது பின் ஒரு வாரத்தில் உண்ணபதற்க்கு, அவனை அவனே சுத்தம் செய்வதற்க்கு என்று அனைத்திற்க்கும் உதவி தேவை பட்டது அடுத்த இரு நாட்களில் எழுந்து நடக்கவும் மறந்தான். தற்போது கண்களை முடவும் மறந்து படுத்து இருக்கும் நிலை டாக்டர் என்ன செய்தும் பலன் இல்லை. அந்த மாத்திரையின் ஃபார்முலா என்ன என்று தெரியாத வரை ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.

 இதை கேட்ட ரம்யா போலிஸிடம் செல்ல இவள் கேசை கம்லைண்டாக  கூட எடுக்க வில்லை அதற்கு ஏற்ற ஆதாரமும் இவளிடம் இல்லை என்ன செய்ய என்று யோசிக்கும் போதுதான் என்னிடம் உதவி கேட்டு வந்தால்.

பின் ரஞ்சனும் பணி மாற்றம் பெற்று இங்கு வந்து விசாரிக்க போகும் இடம் எல்லாம் வழி அடைத்தது போல எந்த முன்னேற்றமும் இல்லை. என்ன செய்ய என்று இருக்கும் போது தான் அந்த குளு கிடைத்தது மினிஸ்டர் யாசோகர் ஆட்களிடம்  இந்த ட்ரக் நிறைய இருப்பதாக. அதை தொடர்ந்து ரஞ்சன் யாசோகர் கெஸ்ட் அவுஸ் ஒன்றில் சோதனை செய்ய அங்கே ரஞ்சன் ஆட்கள் செல்லும் முன் அனைத்தும் மறைக்க பட்டது அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

இது தெரிந்து தான் தம்பியை காப்பாற்ற ரம்யா மினிஸ்டரை இன்ட்ரவியு பண்ண சென்றவள். திரும்பி சடலமாகவே வந்தால். இந்த செய்தி கேட்டு ரம்யாவின் பெற்றோர் தற்கொலை செய்தது போல மாற்றி விட்டன. இவை அனைத்தையும் கேட்ட தீபா

“என்ன சொல்றிங்க ரஞ்சன்”

“ரம்யா ஓட அப்பா அம்மா அப்போ தற்கொலை பண்ணலையா அத எப்படி இவ்ளோ உறுதியா சொல்றிங்க “

“அது அவுங்க அப்பா அம்மா டெத் அப்புறம் யாசோகர் ஆளுங்க சேதுராம் ஆஸ்பிட்டல் தேடி வந்து ராகுல பத்தி விசாரிச்சிருக்காங்க, ஆனா நல்ல வேல அவுங்களுக்கு எந்த ஆஸ்பிட்டல்னு கன்பார்மா தெரியல சோ டாக்டரும் இங்க இல்லனு சொல்லிடாங்க அதான் இப்போ இவ்வளவு சீக்ரெடா நாங்க ட்ரீட்மெண்ட் தந்துட்டு இருக்கோம் ராகல்க்கு.”

“எப்படி ஒரு மாத்திரை எப்படி அடிக்ஸன் ஆக்குது “ என்று தீபா ரஞ்சனை பார்த்து கேட்க தீபா பின்னால் இருந்து “ ட்ரக் மட்டும் தான் அடிக்சன் ஆக்கனும்னு இல்லையே” என்ற சத்தத்தில் திரும்பி பார்க்க டாக்டர் சேதுபதி வந்திருந்தார்.

“ட்ரக்ஸ் மட்டும் தான் அடிக்ட் ஆக்கனும்னு இல்லை உதறனத்துக்கு சில பேரால டீ காப்பி கூடிக்காம இருக்க முடியாது அதுவும் ஒரு அடிக்ஸன் தான். என்ன அது நாளா பெருசா எந்த ஒரு பாதிப்பும் ஆகாது ஆனா இந்து மாத்திரை அப்படி இல்லை இது முதல நம்ம பிரெயின்-அ அதுக்கு பழக்கம் படுத்தும் இந்த மாத்திரை சாப்ட உடனே நம்மல ஆழ்ந்த தூக்கத்துக்கு கொண்டு போகும் அப்புறம் பிரேயின் ஓட கணைட் ஆகி இருக்க நெர்வ் சிஸ்டத்தை கொஞ்சம் நேரத்துக்கு பலாக் பண்ணும் அதுனால தான் இந்த டேப்லட் போட்டு தூங்குறவுங்களுக்கு எந்த உணர்ச்சியும் இருக்காது லைக் கோமா மாதிரி இதுல எந்த ட்ரக் சேக்குறானு தெரியல அது தெரிஞ்சிட்டா போதும் இந்த பிரச்சனைய சால்வ் பண்ணிடலாம்” ராகுலை பார்த்த படி தீபா “அப்போ அந்த ஃபார்முல கிடைக்கலனா இவங்கள சரி செய்யவே முடியாத “

“முடிஞ்ச அளவு நான் ட்ரை பண்றன்மா ஃபார்முலா இல்லாம அவுங்கள சரி செய்ய”

“இப்போதைக்கு இதை விட ஒரு பெரிய பிரச்சனை நமக்காக ரெடியா இருக்கு டாக்டர் “ என்று ரஞ்சன் சீரியஸாக பேச

“ம்ம் தெரியும் கீதா மாதிரி சின்ன பசங்க கைலயும் இந்த மாத்திரையை சாக்லேட்டா மாத்தி விக்குறது தானே “

“ஆமா டாக்டர் நான் போய் அந்த பேன்சி ஸ்டோர் கடை காரனை விசாரிச்சன் அவன் இந்த சாக்லேட்டை மாசம் ஆனா ஒருத்தன் வந்து கொடுத்துட்டு போவான் அவன் எனக்கு யாருன்னு தெரியாது. இதை பசங்க கிட்ட விக்கலன அவனோட குடும்பத்தை கொண்ணுருவனு மிரட்டி இருக்கான் அதோட இந்த சாக்லேட் விக்குற பணத்தை கூட அவன் கிட்ட இருந்து வாங்க மாட்டானா “

“என்னது “

“என்ன” என்று ஒரே நேரத்தில் டாக்டர் மற்றும் தீபா இருவரும் கத்தி இருந்தன.

“ஆமா இதை விக்கிறவன் டார்கெட் மனி இல்லை”

“மனி இல்லனா வேற என்ன “ என்று டாக்டர் யோசிக்க, தீபா “ அவனோட டார்கெட் மனிஷங்கள இருந்தா  “

“இருக்கலாம் வாய்ப்பு இருக்கு ஆனா அப்படி மனிஷங்கள மட்டும் இருந்தா அவன சீக்கரமா   பிடிக்கணும் இ இஸ் டேஜ்ஜரஸ்”

“என்ன யாரோ தெரியாத மாதிரி பேசுறீங்க அந்த யாசோகனா தான் இருக்கும் பையன் பொண்ணுங்க வாழ்க்கைய கெடுக்குறானா அப்பா எல்லார் வாழ்க்கையையும் கெடுப்பான் போல “

“என்ன பையன் அவன் என்ன பண்ணான் “

“அது ஒன்னும் இல்ல ஆமா ஏன் நீ ரம்யா கேஸ்ல அந்த மீனிஸ்டர விட்டு வச்சிருக்க “

“சரியான முந்திரி கொட்டை டி நீ வெறும் மினிஸ்டர் அப்படின்ற க்ளுவ மட்டும் வச்சி என்ன பண்ணலாம்னு நினைக்குற இதுல அந்த மினிஸ்டர் கொலை நடக்குற டைம் மீட்டிங்ல இருந்துருக்கான் இந்த ஒரு பாய்ண்ட்லையே அவன் இந்த கேஸ ஒன்னும் இல்லாம பண்ணிருவான் “

“அப்போ இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க”

“முதல அந்த ஸ்கூல் பசங்களுக்கு இதை கிடைக்க விடமா பண்ணனும், அதுக்கு நான் என் ஆளுங்க வச்சி ரெடி பண்ணிட்டேன் , அப்படியே அங்க இருக்க என் ஆளு சப்ளே பண்ண வரவன ஃபாளோவ் பண்ணி அந்த மாத்திரை லேப்ப கண்டு பிடிச்சிட்டா போதும் எல்லாம் சால்வ் ஆகிடும் “

“ஓ… ஆமா உண்ண யாரு வேவு பாத்தான்னு அந்த காப்பி ஷாப்ல எல்லார் முன்னாடியும் அப்படி நடந்துகிட்ட “ அதற்கு ரஞ்சனும் ஏதோ சொல்ல வந்து பின் “இப்போ தானே சொன்ன முந்திரி கொட்டை வேலை பாக்காதனு நீ போய் உன் வேலைய மட்டும் பாரு நான் இவ்வளவு விசயத்தையும் உன் கிட்ட சொன்னதுக்கு ரீசன் இதுக்கு நடுவுல நீ வந்து எங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாது தான் இது டேன்ஜரசான வர்க் நீ வராதே “ இதை கேட்டு தீபா வாய்க்குள்  “ நான் பாக்குறதும் டேன்ஜரஸ் ஜாப் தான் ரொம்ப தான் சீன் போடுறான் “ என்று முனங்க, இதை கேட்டு ரஞ்சன் “ என்ன சொன்ன” என்று அவள் அருகே செல்ல, தீபா உடனே “ சரி நான் இனிமே உன் இன்வஸ்டிகேசன் உள்ள வரல ஆனா மத்த ஸ்கூல்லயும் இந்த மாத்திரை பத்தி செக் பண்ண சொல்லு “ என்று டாக்டர் இடம் திரும்பி “ டாக்டர் எனக்கு இந்த கெமிக்கல் டெஸ்ட் அண்ட் ட்ரக் பத்தி தெரியும் எனக்கு கொஞ்சம் சாம்பில் தாங்க நான் செக் பண்ணி சொல்றேன் “ அதற்கு ரஞ்சன்

“ அவ்ளோ பெரிய லேப்லயே டெஸ்ட்ல ஒரு ட்ர்க-ம் பத்தியும் கிடைக்கலனு சொல்லிடாங்க உனக்கு இதை பத்தி என்ன தெரியும்னு ஹெல்ப் பண்றனு சொல்ற”

“ஹலோ அந்த லேப்ல இருக்கவுங்க பொதுவா இருக்க நார்மல் ட்ரக் இருக்கானு தான் பாத்து சொல்லுவாங்க அத தவிர வேற என்ன இருக்குனு வேர டெஸ்டு எடுத்து பாக்க மாட்டாங்க அன நான் எல்லாம் வகைலையும் செக் பண்ணுவ அண்ட் இந்த விசியமும் லீக் ஆகாது” அதை கேட்ட டாக்டரும் தீபா சொல்றது சரி என்று சில சாம்பில்களை அவளிடம் கொடுக்க அதை வாங்கிய தீபா இருவரிடமும் சொல்லிவிட்டு சென்று விட்டால் .

தீபா சென்றதும் டாக்டர் ரஞ்சனிடம் “இவங்கள எவ்வளவு தூரம் நம்பலாம் ரஞ்சன் “ அதற்கு சிரித்த ரஞ்சன் “ என்ன எவ்வளவு தூரம் நம்புறீங்களோ அவ்வளவு தூரம் “ என்று சொல்லி செல்லும் ரஞ்சனை பார்த்து சிரித்தபடி தலை அசைத்த டாக்டர் “இந்த அடிக்சனுக்கு மருந்து இல்லை ரஞ்சன் “ என்று சொல்ல அதற்கும் ஒரு சிரிப்பையே பதிலாக தந்துவிட்டு சென்றான் ரஞ்சன்.

அது ஒரு அழகிய காலை நேரம் கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கும் பசுமை பூத்து குலுங்கி கொண்டு இருந்தது அந்த கிராமம் முழுவதும் வயலால் நிரம்பி இருந்தது தூய்மையான காற்று அருமையான மக்கள் என்று ரம்மியமான அந்த பகுதியில் விவசாயிகள் இடையே நின்று இருந்தார் அவர். நல்ல உயரம், வெயில் பார்க்காத உடல், வேர்வையில் நனைந்து இருந்தது. கழுத்தில் ஒரு தடித்த சங்களி, மோதிர விரலில் ஒரு சின்னம் பதித்த பெரிய மோதிரம், வெண்ணிற சட்டை மற்றும் வேட்டி உடுத்தி “உணவு தரும் உழவு தொழில் எங்கள் உயிர் தொழில் இந்த நாடு முன்னேற விவசாயத்தை வளர்க்க வேண்டும் அதுவே எங்கள் கட்சியின் உயிர் மூச்சி “ என்று அந்த வயல் ஓரம் நின்ற படி உரையாற்றினார் மினிஸ்டர் யசோகர்.

அரை மணிநேர உரையாடல் பின் அனைவருக்கும் வணக்கம் வைத்தபடி தன் காரில் ஏறி பீயேவிடம் “இந்த ஊர்ல தானே அந்த ஜூஸ் கம்பெனி காரன் ஃபேட்டரி வைக்கனும்னு அப்ருவளுக்கு வந்ததா சோன்ன, அந்த அப்ருவள கோடுத்துட சொல்லு “ இதை கேட்டு ஷாக் ஆன பீயே “சார் விவசாயம் உயிர் மூச்சினு சொன்னிங்களே “

“யாருடா இவன் அரசியல் பத்தி ஒன்னும் தெரியாம முதல இப்படி அப்ரூவல் தர மாதிரி கொடுத்து காசு பாத்துறனும் அப்புறம் இவன் ஃபேட்டரி கட்டும் போது மக்கள் போறாடுவாங்க விவசாய பூமினு அப்போ அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி அப்ரூவள க்ளோஸ் பண்ணிறனும் காசுக்கு காசும் கிடைக்கும் ஓட்டுக்கு ஓட்டும் கிடைக்கும் “

“அப்போ அந்த ஃபேட்டரி ஓனர் “

“அவன் கிட்ட பேசி வேற விவசாய லேண்ட காமிக்க வேண்டியது தான் மக்களும் எத்தன தடவ போறாடுறதுனு நம்ம நிலத்தை காப்பாத்துன வர போதும்னு விட்டுருவாங்க “ என்று தன் பற்கள் தெரிய சிரித்தார் மினிஸ்டர் யசோகர்.