விடியல் 27

ஏகே டிடக்டிவ் ஏஜன்சி  என்ற பேர் பலகையை வாசித்த படி அந்த மூன்று மாடி கொண்ட கட்டிடம் முன் நின்று இருந்தாள் தீபா. முகத்தில் எப்போது போல மாஸ்க் அணிந்துபடி அந்த பலகையை பார்த்து கொண்டு “இங்க போய் ஏன் வர சொல்லிருக்கான் இந்த ரஞ்சன்“ என்று யோசித்தபடி நின்று கொண்டு இருந்தவள் உள்ளே நுழைந்தாள் ரிசப்ஷனில் ரஞ்சன் சொன்னது போல “ஹாய், நான் சத்தியாவ பாக்க வந்துருக்கேன் “ என்று சொல்ல அந்த ரிசப்ஷனில் நின்று இருந்த பெண் “இந்த பக்கம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் “ என்று வழி காட்டா அவள் காட்டிய திசை நோக்கி சென்றால் அங்கே ஒரு பெரிய ஹால் இருந்தது அதில் நிறைய நாற்காலிகள் போட பட்டு இருந்தது. அதில் ஒன்றில் அமர்ந்து அந்த அறையை சுத்தி பார்த்து கொண்டு இருந்தாள். அந்த அறையில் நிறைய அலமாரிகள் பூட்டு போட பட்டும் பூட்டு போடமலும் இருந்தது ஜன்னல்கள் எதுவும் இன்றி மின் விசிறிகள் மூலமே கற்று வந்து கொண்டு இருந்தது.

இவ்வாறு சுற்றி பார்த்த படி “என்ன இந்த ரஞ்சன என்னும் காணோம்” என்று எண்ணியவாரு இருக்க திடீர் என்று அங்கு பூட்ட பட்டு இருந்த  அலமாரியில் இருந்து சத்தம் கேட்டது, முதலில் எலியாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்து விட்டால் ஆனா‌ல் சத்தம் தொடர்ந்து அதிகம் ஆக பயந்த தீபா அதன் அருகே சென்று பார்க்க போக திடீர் என்று படார் என்ற சப்தத்துடன் அலமாரியில் இருந்து ஒருவன் “ஹாய் தீபா மேம் “ என்று வர பயந்த தீபா கையில் இருந்த பையை அவனை நோக்கி வீசி இருந்தால் .

அதை சுதாரித்து அவன் அந்த பையை பிடித்து “ உள்ள என்ன வச்சிருக்கிங்க இவ்ளோ வேய்டா இருக்கு இது என் தலைல மட்டும் பட்டு இருந்துச்சி நான் சுவாக அயுருப்பேன் போலயே “ என்று அந்த பேகை தீபாவிடமே கொடுத்துவிட, அதை வாங்கிய தீபா “ சாரி திடீர்னு சத்தம் கேட்டதும் பயத்துல தூக்கு அடிச்சிட்டேன் “ என்று அவனை மேலும் கீழும் பார்க்க அவள் பார்பதை பார்த்து விட்டு “ என் ட்ரஸ் ஏன் இப்படி இருக்குனு பாக்குறிங்கள “

“ஆமா.. உங்க ட்ரஸ் பாத்தா மாடல் மாதிரி இருக்கு” அவனும் அப்படி தான் உடை அணிந்து இருந்தான் சட்டையை மேலே திறந்து விட்டு அதில் வரிசையாக செயின் அணிந்து ஒரு பக்க காதில் ஸ்டட் அணிந்து அவன் ஆறு அடிக்கு முழு மேக்கப் உடன் வந்து நிற்பவனை பார்த்தால் பின் எப்படி தோனுமாம்.

தீபா சொன்ன பதிலில் சிரித்த படி “ அது ஒரு கேஸ் காக போட்டது , சாரி என்ன நான் இன்டரோவே பண்ணல பாருங்க, நான் ஆஜூன் இந்த டிடக்டிவ் ஏஜென்சி என்னோடது தான் “ என்று கைகளை நீட்ட அதற்கு சிரித்தபடி தீபாவும் கைகளை குலுக்கினால். பின் ஆஜூன் “உள்ள வாங்க “என்று அலமாரிக்குள் அழைக்க தீபா தயங்கியே பிண்ணடி சென்றால் அலமாரி வழியே வேறு ஒரு அறை இணைந்து இருந்தது அதை பார்த்து தீபா “நீங்க நார்னியா மூவி ஃபேனா”

“எப்படிங்க கரைட்ட சொல்றிங்க “

“இந்த அலமாறி டேர பாத்துதான்”

“அது நல்ல ஐடியாவ இருந்துச்சி அதான் சுட்டுடேன் “ என்று பேசியவாரு வேறு அறையை அடைந்தனர்.

அந்த அறையை பார்க்க மினி ஆஸ்பிட்டல் போல இருந்தது ஐந்து படுக்கைகள் போட பட்டு இருந்தது அதில் ஐந்து வாலிபர்கள் படுக்க வைக்க பட்டு இருந்தன அந்த ஐவரும் அசையாமல் கண்கள் திறந்த படி சீலிங்கையே வெறித்த படி இருந்தன.கண்கள் சிமிட்ட வில்லை இதை பார்த்த தீபா ஆஜூனிடம் திரும்பி பார்க்க அவன் “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சத்தியா வந்துடுவான்” என்று அங்கு இவர்களை பார்த்து கொண்டு இருந்த ஒரு டாக்டரிடம் எதோ பேசி கொண்டு இருந்தான் அந்த அறையும் ஜன்னல் இன்றி வெறும் அலமாரிகள் உடன் காட்சி அளித்தது. தீடிர் என்று ஒரு அலமாரியை திறந்து கொண்டு ரஞ்சன் டீ சட் மற்றும் வீட்டில் அணியும் ட்ரக் பேண்ட் அணிந்தபடி வர அவன் பின்னால் தீபா எட்டி பார்க்க அது எதோ மசாஜ் செய்யும் இடம் போல் இருந்தது ரஞ்சன் உள்ளே வந்ததும் வேகமாக அலமாரி கதவை பூட்டி விட்டான்.

இதை பார்த்த தீபா “வாசலே கிடையாத இந்த இடத்துக்கு” என்பது போல ஆஜூனை பார்க்க. அவன் சிரித்த படி ரஞ்சனிடம் சென்று “என்னாடா இப்பவும் ஃபாளோவ் பண்றாங்கள “

“ஆமாடா வேற வேலையே இல்ல போல நான் நேத்து தீபா வீட்டுக்கு போன நியூஸ் கிடைச்சிருக்கும் போல “ என்றபடி தீபாவை பார்த்து “மார்னிங் போலிஸ் ஸ்டேசன் போனிங்களே என்ன ஆச்சி “

“இதுக்கு முன்னாடி நான் சால்வ் பண்ண கேஸ் வெஞ்சன்ஸ்ல வந்தாங்களாம் “

“நினைச்சன், ஆமா அதுக்கு நீ என்ன சொன்ன “

“நானா, ஒன்னும் சொல்லலயே ஓகேனு இங்கே வந்துட்டன் “ அவளை சந்தேகமாக பார்த்த ரஞ்சன் “ உண்மையாவா நம்ப முடியலையே “

“நம்பி தான் ஆகணும் நீங்க இப்போ இந்த கேஸ் பத்தி சொல்ல போரத வச்சி தான் டிசைட் பண்ணனும் நெஸ்ட் என்ன பண்றதுன்னு “

“அதன பார்த்தேன் என்ன சுண்டெலி பதுங்குதுனு”

“ என்ன எலியா யார எலினு சொல்றிங்க” என்று ரஞ்சன் மீது பாய போக நடுவில் வந்து தடுத்த அஜூன் “ ஏன் வந்தோம்னு மறந்து சண்ட போட்டுட்டு இருக்கிங்க “ அதன் பின்னே இருவரும் அமைதி ஆகின.

பின் ரஞ்சன் “ அஜூன் நீ போ நான் பாத்துக்கறேன் “ என்று அவனை அனுப்பி விட்டு தீபாவை அழைத்து அங்கு படுத்து இருந்த படுக்கையில் இறுதியாக படுத்திருந்தவனின் அருகே சென்று “இவன் யார்னு தெரியுமா “ என்று தீபாவிடம் கேட்க அதற்கு அவள் இல்லை என்று மறுப்பாக தலை அசைத்தாள். மீண்டும் ரஞ்சனே “ இவன் நேம் ராகுல் இறந்து போன ரம்மியா ஓட தம்பி “ இதை கேட்டு அதிர்ந்த தீபா “ரம்மியா தம்பியா “

“ஆமா இவன் வயசு என்ன இருக்கும் சொல்லு பாக்கலாம் “ தீபா அவனை உற்று பார்க்க உடல் மெலிந்து போய் கண்கள் சுற்றி கருவலையம் தோன்றி கன்னம் ஒட்டி ஏதோ 50 வயது நபர் போல காட்சி அளித்தான் அதையே ரஞ்சனிடம் தீபா கூற

அதற்கு ரஞ்சன் “அவனுக்கு 25 வயசு தான் ஆகுது அவன் யார் தெரியுமா போன இயர் யுபிஎஸ்சி எஸ்சாம்ல பஸ்ட் அட்டம்டுல அதுவும் செகன்ட் ப்ளேஸ்ல வந்தானு நீயுஸ் புல்ல தம்பட்டம் அடிச்சி பறட்டுநாங்கள அது இவன் தான் “ அதை கேட்டு மேலும் அதிர்ந்த தீபா “ என்ன அந்த ராகுலா இவரு இப்படி இருக்காங்க இவருக்கு என்ன ஆச்சி “ என நெஞ்சில் கை வைத்து கேட்க

“நேத்து கீதா கீரை முட்டாய்னு ஒன்னு சாப்டால அதே மாதிரி ஒன்னை இரண்டு வருசமா சாப்டது நாள வந்த விளைவு தான் இது “

“என்னன்னு தெளிவா சொல்லுங்க ரஞ்சன் எனக்கு  பயமா இருக்கு “ என்று தீபாவின் முகத்தில் இருக்கும் பதற்றதை பார்த்து அவளை அங்கு இருக்கும் நாற்காலியில் அமர வைத்து பின் “ இதை தெரிஞ்சிகிட்ட ஆபத்து நிச்சயம் இனிமே நான் சொல்றத தான் நீ கேக்குற மாதிரி இருக்கும் இதுக்கு சரினா சொல்லு நான் சொல்றேன் என்று சொன்னதும் தீபா தலையை வேக வேகமாக உருட்ட அதை பார்த்து இதழில் தோன்றிய புன்னகையை மறைத்து சொல்ல தொடங்கினான்.

நான் இதுக்கு முன்னாடி நார்த்ல வர்க் பண்ணும் போது தான் எல்லாம் ஸ்டாட் ஆச்சி ஒரு இடத்துல ட்ரக் இருக்குறத டிப் கிடச்சிது நாங்களும் போய் பாத்தோம் அங்க ட்ரக்ஸ் க்கு பதிலா நிறைய டேப்லட்ஸ் தான் கிடைச்சது. அது என்ன டேப்லட்னு பாத்தப்போ இன்சோமினியா ன்ற தூங்க கஸ்டபடுற நேய்க்கு குடுக்குற டேப்லட்ஸ்னு தான் ரீப்போட் வந்துச்சி சரி ராங் இன்பர்மேசனா இருக்கும்னு விட்டுடோம் அது அப்புறம் சில மர்டர் அன்ட் சுசைட் கேஸ் ஸ்பாட்லயும் இந்த டேப்லட்ஸ் கிடைச்சது. அப்போ தான் டவுட் எங்களுக்கு வர தோடங்கிச்சி நாங்களும் இதை பத்தி நல்ல தெரிஞ்சிக்க வந்து மீட் பண்ண டாக்டர் தான் சேதுராம் ட்ரக்ஸ் பத்தி ரிசர்ச் பண்ணிட்டு இருந்த டாக்டர்.

“நம்ம கீதாவ பாத்த டாக்டர் தானே“

“ஆமா அவர் தான், அங்க தான் எங்களுக்கு கிடைச்ச அடுத்த ஷாக் நியூஸ் ராகுல், அவன் யுபிஎஸ்சி எஸ்சாம் க்கு பிரப்பர் பண்ணும்போது இவனோட காலேஜ் சீனியர் ரெக்கமெண்ட் பண்ணானு இந்த டேப்லட்ஸ் அ யூஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கான் ஸ்டாட்டிங் எல்லாம் நல்லா தான் போய்ருக்கு எஸ்சாம் ரிசல்ட் வர வரைக்கும்”.