கதவை திறந்த சுடர் சரவணனை மட்டும் பார்த்த சுடர் “ யார் வேணும் “
“சிஸ்டர் கொஞ்சம் வழி விட்டிங்கனா உள்ள போய் பேசலாம் “
“நீங்க முதல யாருன்னு சொல்லுங்க “
“இந்த பொண்ணு நாமா யாருன்னு சொல்லலன உள்ள விடாது போல “ என்று எண்ணி தனது விஷ்டிங் காடை காட்டி “ நான் ஒரு வக்கீல் மா இப்பவாது உள்ள விடுவீக்கள “
“ நீங்க வக்கில்னு எனக்கு எப்படி தெரியுமா முதலயே இத காட்டிருக்க வேண்டியது தானே “ என்று உள்ளே செல்ல வழி விட்ட சுடர் கார்டை பார்து கொண்டே “ ஆமா இங்க என்ன விசியம வந்துருக்கிங்க “ என்று பேசிக்கொண்டே நிமிர்ந்து பார்க்க அப்போது தான் மகிழன் சுடர் முகம் பார்த்த படி உள் நுழைந்தான்.
மகிழனை பார்த்த சுடர் அதிர்ந்து அங்கேயே நின்று விட்டால். சுடரை தாண்டி வந்தவர்களை குமரனும் தீபாவும் இது யூத் மினிஸ்டர்ல இவருக்கு இங்க என்ன வேலை என்பது போல பார்க்க, ஆதி மட்டும் மகிழனை பார்த்து “ அது நீயா தான் இருக்கும்னு நினைச்சன் டா அப்போவே “ என மனதோடு பேசியவாறு “அட நம்ம சந்திரா சாரு, நீங்க இங்க என்ன பண்றீங்க சார் “ என்று சோபாவில் நன்றாக சாய்ந்து தலை பின்னால் கைகளை கட்டி கொண்டு பேச, மகிழன் முதலில் ஆதியை பார்த்து “ இவன் ஸ்கூல் பிரின்சிப்பல் தானே இங்க என்ன பண்றான் “ என யோசித்தபடி அவனை பார்க்க பின்பே அவன் பேசும் நக்கலான தொனியில் இவனுக்கு எல்லா விசயமும் தெரியும் போல என்று அவன் கேட்ட கேள்விக்கு “ஹாய் ஆதி சார், நான் இங்க வரது இருக்கட்டும் நீங்க இங்க என்ன பண்றிங்க “
“நானா, நான் இவங்களோட ஃபேமிலி ஃபிரண்ட், அப்படி தானே குமரன் அண்ணா “ என்றபடி குமரன் தோளில் கைப்போட்டான் , ஆதியை பார்த்த குமரனோ மனதில் “ டேய் என்ன சீனுன்னு சொல்லாம டைலாக் எப்படிடா பேச சரி மண்டைய மட்டும் ஆட்டி வைப்போம்” என்று ஆம் என்பது போல மண்டையை ஆட்ட, இவர்கள் இடையில் வராது சரவணன் தீபாவிடம் சென்று “சிஸ்டர் ஒரு ஹெல்ப் டீ வாசனை கதவை திறக்க போதே ஹெவியா வந்துச்சி இவன் வேற டீ கூட குடிக்க விடாம இழுத்துட்டு வந்துட்டான் இஃப் யு டோன்ட் மைண்ட் எனக்கு மட்டும் டீ கிடைக்குமா “
தீபா இவனை மேலும் கீழும் பார்த்து அவளுக்காக வைத்திருந்த டீயை கொடுத்துவிட்டு “யார் நீங்க என்ன வேனும் எங்க மாமாக்கு தெரிஞ்சவங்களா, எதுக்கு இங்க வந்துருக்கிங்க “
“அத சொல்ல தான் அவன் வந்துருக்கான்,” என்று ஆதி மகிழனின் வார்த்தை போரை எட்டி பார்த்து விட்டு “இன்னைக்குள்ள சொல்லிருவான், நான் நம்புறேன் நீங்களும் நம்புங்க” என்று டீயை ரசித்து குடிக்க, தீபா எதையோ யோசித்த படி இருந்தாள்.
இங்கு மகிழன் “ ஃபேமிலி ஃபிரண்ட் தானா ஃபேமிலி இல்லையே “
“ஃபேமிலி ஃபிரண்ஸ்-அ கூட இருக்கலாம் ஃபேமிலி எனிமியா தான் இருக்க கூடாது “ என அழுத்தமாக முகத்தை வைத்து பேச இதை கேட்டே குமரனுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. மகிழன் “ விட்ட இவன் காரியத்தையே கெடுத்துடுவான் போல டைம் வேஸ்ட் பண்ணாம நம்ம குமரன அப்ரோச் பண்ண வேண்டியது தான்” என்று எண்ணி ஆதியை கண்டுக்காமல்
“குமரன் நான் யாருன்னு சோல்லனும்னு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன், இருந்தாலும் சொல்றேன் நான் சந்திர மகிழன் யூத் மினிஸ்டர் அண்ட்…வேந்தனோட அப்பா “ இந்த சொல்லை கேட்டதும் சிலைக்கு உயிர் வந்தது போல நினைவுக்கு வந்த சுடர் , “யாரோட பையனுக்கு யார் அப்பா “ என கத்தியிருந்தால், பின் வேகமாக மகிழன் அருகே வந்து “வேந்தன் என் பையன் அவனுக்கு யார் அப்பானு நான் தான் சொல்லனும், எவனோ ரோட்ல போறவன் இல்லை “
“திருப்பி, திருப்பி சொல்றன் அவன் எனக்கு மட்டும் தான் பையன் அண்ட் அவன பத்தி என்ன யோசிக்கனும் என்ன கூடாதுன்னு எனக்கு தெரியும் “ என்று சிவந்த முகத்தோடு தன் ஆள் காட்டி விரலை நீட்டி பேசிய சுடரை ஆதி வியந்து பார்த்தான்.
“என்ன பேசுற சுடர் அவன் அப்பா இல்லாத பிள்ளையா வளரனுமா “
“அப்பா இல்லாம கூட வளர்ந்துடலாம் தப்பான அப்பாவோட தான் வளர கூடாது “
“சுடர் நீ என்ன தப்பானவனு சொல்றியா “ என முகம் கசங்கி சுடரை பார்த்தான் அப்போதும் சுடர் முறைத்த படியே நிற்க.
பின் குமரனிடம் திரும்பி இவன் சுடரை விட்டு போன காரணத்தை கூறி “ எலெக்சன் முடிஞ்சி சுடரை தேடி வந்தன் அன அங்க நீங்க யாரும் இல்ல அப்பறம் அவள தேடாத இடம் இல்லை இத்தனை வருஷமா சுடரை தான் நான் தேடிட்டு இருந்தான் குமரன் நீங்களாவது புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ் நான் அவல அவ்ளோ லவ் பண்ண “ இதை சொன்ன மறுகணம் மகிழனின் கன்னத்தில் இடி போல கரங்களை பதித்து இருந்தாள் தீபா .
மகிழன் கோபத்தின் உச்சிக்கு சென்று ஏய் என தீபாவை அடிக்க போக சரவணன் மகிழனை பிடித்து கொண்டான். இதை பார்த்து அனைவரும் சுதாரித்து தீபா அருகே வரும்முன், தீபா மீண்டும் மகிழனை அடித்து ஆக்ரோஷமாக “லவ் பன்ன பெண்ணுக்கு தான் ட்ரக் கொடுத்து நினைவு இல்லாதப்ப ரேப் பண்ணுவியாட உன்ன உன்ன சும்மா விட மாட்டன்டா “ என்று கத்தியபடி மயங்கி சரிந்தாள் தீபா.
கீழே விழுந்த தீபாவை மடியில் தாங்கிய சுடர் “அக்கா அக்கா “ என்று எழுப்ப அசை வில்லை தீபாவிடம் இதை பார்த்த குமரன் தீபாம்மா என்ற படி அருகில் வந்து பின் மகிழனை பார்த்து “ இப்போதைக்கு வீட்டை விட்டு வெளிய போங்க எதுவா இருந்தாலும் சுடர் எடுக்குர முடிவு தான், எங்க பொண்ணு பட்ட கஷ்டத்துக்கு அனுபவிப்பிங்க, உங்க பொஷிஸன் காகா தான் நான் அமைதியா பொறன் இப்போ நீங்க போலாம்” என்று வாசலை பார்த்து கை நீட்ட முகம் சிவக்க கோபத்தை அடக்கிய வாரு வெளியே சென்ற மகிழன் அருகே சென்று ஆதி “ பாய் ப்ரோ நெஸ்ட் மீட்டிங்ல உங்கள பாக்குறேன் ஃபேமிலி ஃபிரண்ஸ்-அ இல்ல ஃபேமிலி மெம்பர இந்த பதவி மட்டும் உன்ன விட்டு போகட்டும் அப்போ இருக்கு உனக்கு “ என்று சொல்லி மகிழன் பேசும் முன் கதவை முகத்தில் அடித்தது போல சாத்தி இருந்தான் ஆதி.
காரில் ஏரியா மகிழன் காரின் சீட்டை குத்தியவாரு “ஆ……..என்னை என்னை அடிச்சிட்டா அதுவும் ஒரு பொண்ணு அடிச்சிட்டா-டா அவளை எதாவது பண்ணணும் எதாவது பண்ணுவேன் உனக்கு இருக்கு டி “ என தலையை பிடிக்க
“டேய் அவுங்க சுடர் ஓட அக்கா அத நியாபகம் வச்சிக்கோ “ என்றபடி காரில் இருந்த ஐஸ் வாட்டரை கை விரல்கள் பதிந்து இருந்த சிவந்த கன்னத்தில் வைக்க “இஷ்… பொருமைய டா “ என்ற படி சீட்டில் சாய்ந்து கொண்டான்
“ஆமா நானும் கேக்கணும் நினைச்சேன் அங்க போய் சுடர் கிட்ட பேசாம பட்டி மன்றம் நடதிட்டு இருக்கா அந்த ஆதி கூட”
“நானா பேசலடா அவனாதான் பேசுனா, போனதுல இருந்தே அவன் பேச்சு எதுவும் சரியில்லை அவனுக்கு என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சி இருக்கும் போல, இதை இப்படியே விட கூடாது சுடர நெருங்க வேற தான் யோசிக்கனும் ” என்றபடி அங்கிருந்து இருவரும் கிளம்பின.