டாக்டர் கமலா முன் குமரனும் சுடரும் அமர்ந்திருந்தன, அவர் தன் மூக்கு கண்ணாடியை சரி செய்த படி ரிப்போர்டை பார்த்து “குட் சுடர் பாப்பா அன்ட் உங்க ஹெல்த் ரெண்டும் நல்லா இருக்கு , இதையே மெயிண்டென் பண்ணுங்க “ என சிரித்தபடி பேச இடையில் புகுந்த குமரன் “ டாக்டர் இந்த ஆடாப்சன்க்கு எல்லாம் ரெடி பண்ணிடிங்கள “ என சீரியஸாக கேட்க இதை கேட்டதும் அவ்வளவு நேரம் சிரித்து கொண்டு இருந்த சுடர் முகம் வாடி டாக்டரை பாவமாக பார்த்தாள். இருவரையும் பார்த்த டாக்டர் என்னும் டெலிவரிக்கு டைம் நிறையவே இருக்கு சோ டோண்ட் வறி நான் பாத்துக்கறேன் “ என்று என்னும் சில சத்து மாத்திரைகளை எழுதி கொடுத்தார்.
அறையை விட்டு வெளியே வந்து ஓர் இருக்கையில் சுடரை அமர வைத்து “ நான் போய் மாத்திரை வாங்கிட்டு வரன் அது வரை இங்கயே இரு சுடர் “ என்று சென்று விட்டான். சுடர் கண்களை மூடியவாரு சுவற்றில் தலை சாய்ந்து தான் அணிந்திருந்த சுடிதார் வழியே தன் வயிற்றின் மீது கை வைத்து குமரனை எப்படி சம்மதிக்க வைக்க என்று யோசித்த படி இருந்தால்.
அப்போது ஒரு குறள் “ அது என் பாப்பா யாருக்கும் தர மாட்டேன் “ என்று இரண்டு வயது நிரம்பிய பெண் குழந்தை தனக்கு கிடைத்த புது தங்கைக்கு உரிமை போராட்டம் போட்டு கொண்டு இருந்தால் . இதை பார்த்த சுடருக்கு தன் அன்னை கூறியது நினைவுக்கு வந்தது சுடர் பிறந்த பொழுது தீபா சுடருக்கு யாரும் முத்தம் கொடுக்க விட மாட்டலாம் மாதவன் மற்றும் குழலி கூட ஒரு நாளைக்கு ஓரு முறை என்றுதான் தர வேண்டும் என்று சண்டை போடுவாலாம் “ ஏண்டீ இப்படி பண்ற நிலா “ என்று கேட்டால் “ அது ஏன் பாப்பா நான் கூட விளையாட காடவுள் கொடுத்ததுனு சொன்னிங்கள அப்போ அவ எனக்கு மட்டும் தான் சொந்தம் “ என கூறியதை வளர்ந்த பிறகு சுடரும் தீபாவும் சண்டை போடும் போது சொல்லி காட்டி திட்டியது நியாபகம் வர தீபாவை பார்க்க வேண்டும் போல் ஆசையாய் இருந்தது சுடருக்கு.
பின் குமரனுடன் வீட்டிற்க்கு சென்று, குமரனின் போனை வாங்கி தீபாவிற்க்கு வீடியோ காலில் அழைத்து ஆசையாக பேச தீபா முகத்தை கடின பட்டு வர வழைத்த புன்னகையுடன் பேச சுடர் கண்டுகொண்டால் “ என்ன ஆச்சி அக்கா ஏன் முகம் இப்படி ஒரு மாதிரி இருக்கு சரியா தூங்குறது இல்லையா “ என்று பதற்றத்துடன் பேசிய தன் தங்கையை பார்த்து முகத்தையும் மனதையும் கடின பட்டு இயல்பாக ஆக்கி “ லூசு சுடர் எனக்கு இன்டர்னல் பொய்டு இருக்கு அதுக்கு நைட் புல்ல முலிச்சி படிக்காம தூங்குவாங்கள “என சிரித்து கொண்டு பேச பின்பே இயல்புக்கு வந்தால் சுடர். பின் இருவரும் பேசி முடித்ததும் சுடர் “ இனிமே அடிக்கடி அக்கா கிட்ட பேசணும் “என முடிவு எடுத்து கொண்டால் .
போனை திருப்பி கொடுக்க குமரனை தேட அவனை காணவில்லை “ என்ன மாமாவ காணோம் , சரி மாமா வர வரை போனை பாத்துட்டு இருக்கலாம் “ என்று பார்க்க தொடங்கினால் . மகிழனிடம் எமாந்து வீடு மாற்றி வந்தவுடன் சுடர் செய்த முதல் விசியம் தன் போனை அனைத்து சிம்மை உடைத்து எறிந்து குமரனிடம் கொடுத்ததே. குமரன் கூட “ வச்சிக்கோ சுடர் எமர்ஜென்சினா கால் பண்ண யூஸ் ஆகும்ல நான் வேனா வேர சிம் போட்டு தரன்” “இல்லை மாமா இப்போதைக்கு வேன எப்ப தொனுதோ அப்போ வாங்கிக்கறேன் “ என்று சொல்லிவிட்டால். அதிலிருந்து தீபாவிடம் பேச மட்டுமே குமரனிடம் பேனை வாங்குவாள்.
குமரனின் போனை பார்த்திருந்த சுடரின் கண்களில் பட்டது அந்த செய்தி “ போலி ஆவணங்களை கொடுத்து குழந்தைகளை தத்து எடுத்து குழந்தைகளை விற்கும் அவலம் “ என்ற தலைப்பை படித்த சுடர் முகம் வேர்த்து கொட்ட “ இல்லை என் பாப்பாவ தர மாட்டேன் “ என்று அவலுக்கு அவலே பேசிக்கொண்டு குமரனுக்காக காத்திருந்தால்.
குமரனும் அரைமணி நேரம் கழித்து வீட்டுக்குள் கைகளில் பழங்களுடன் நுழைந்தவன் “ என்னம்மா காணோம்னு பாத்தியாமா, அது உனக்கு பழம் காலி ஆகிரிச்சி அதான் வாங்க போய்யிருந்தன் “ என உள்ளே வந்து பழங்களை வைத்து விட்டு “டயடா இருக்க சுடர் கொஞ்சம் நேரம் வேன நி படுமா டுடே வீட்டுல இருந்து தான் வேலை நான் சமச்சிக்கிறன் “ என்று பேசிக்கொண்டே சுடரை பார்க்க அவள் எதுவும் பேசாமல் குமரனையே பார்த்தபடி இருக்க “என்னம்மா, என்ன ஆச்சி சுடர் “ என அருகே வர சுடர் அருகில் இருக்கும் நாற்காலியை காட்டி “ உட்காருங்க மாமா பேசனும் “ என்ற சுடரை என்ன என்பது போல பார்த்த படி அமர்ந்தான் .
சுடர் குமரனிடன் சுற்றி வளைக்காமல் நேரடியாக “ நான் என் பாப்பாவ நானே வளர்க்க போற “ இதை கேட்டு குமரனின் முகத்தில் கடுமையை ஏற“ சுடர் என்ன ஒலருர, நான் ஆல்ரடி சொல்லிட்டன் இத பத்தி பேசாதனு”
“ இல்லை மாமா நானும் முடிவு எடுத்துட்டன் என் பாப்பா “ என ஆரம்பிக்கும் முன்னே “ சுடர் , நான் உன் முடிவ கேட்கல “
“ கேட்டு தான் ஆகனும் மாமா “ என சுடரும் கோபத்துடன் பேசினாள்.
சுடரை பார்த்த குமரன் மூச்சை இழுத்து விட்ட படி தன் கோபத்தை குறைக்க முயன்று “ மாமா உன் நல்லதுக்கு தான் சொல்றமா , உனக்குனு ஒரு வாழ்க்க இருக்குலம்மா அத வாழ வேனாமா கடைசி வரை குழந்தையோட தனியா வாழ பெரியாம்மா “ என சுடர் முன் மண்டி இட்டு பேசினான் “ சரி நீங்க சொல்றதும் கரைட் தான் தனியா வாழ முடியாது தான் , அப்போ நீங்க எப்போ உங்க தனிமைய விட்டு கல்யாணம் பன்ன பொறிங்க “ என நக்கலாக சுடர் பேச , அவளை பார்த்து முறைத்த குமரன் “ நானும் நீயும் ஒன்னா என்ன பத்தி தெரியாம ஒலறாத “
“ தெரியாமலாம் ஒலறல தெரிஞ்சி தான் பேசுறேன் அந்த லேடி பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க “ என சுடர் பேசிக்கோண்டே இருக்கும் போது
“ சுடர்….. வாயை மூடு “ என கத்தியிருந்தான் குமரன். அந்த சத்தத்தை கேட்டு பயந்த சுடர் பின்னோக்கி சேருடன் சாய , சுடர் விழும் முன் குமரன் பிடித்து நேராக சுடரை அமர வைத்து . பின் எழுந்து தண்ணீர் எடுத்து வந்து சுடரை அருந்த வைத்து, அவள் தலை வருடியபடி “என்னை பத்தி பேசாத நான் நீ வேற வேற சரியா , அப்புறம் எனக்கு உன்னையும் நிலாவையும் லைப்ல நல்லா வாழ வைக்கும், அதுக்காக யார் நடுவுல வந்தாலும் ஏன் அது உன் குழந்தையாவே இருந்தாலும் விட மாட்டேன் “ என பேசிய குமரனை பார்த்து “ என் பாப்பா கூட இருந்தாலும் நான் சந்தோஷமா இருப்பன் மாமா கொஞ்சம் என் நிலைமையில் இருந்தும் யோசியேன் மாமா “என குமரனின் கை பிடித்து கெஞ்ச எதையோ யோசித்த குமரன் பின் “ சரி உன் குழந்தைய நீயே வச்சிக்கோ “என சொன்னதும் மகிழ்ந்த சுடரை பார்த்து புன்னகை முகத்துடனே “ ஆனா ரெண்டு கண்டிஷன் இருக்கு அதுக்கு ஓகேன எனக்கும் ஓகே“
“ என்ன கண்டிஷன் மாமா “
“ அது நீ கண்டீப்பா கல்யாணம் பண்ணிப்பனு சத்தியம் பண்ணு “
“அப்படியே ரெண்டாவது கண்டிஷனையும் சொல்லுங்க மாமா“
“ இரண்டாவது கண்டிஷன் உன்னை கல்யாணம் பண்ணிக்க வரவன் இன் கேஸ் உன் பாப்பாவ ஏத்துக்கலனா பாப்பாவ என்கிட்ட கொடுத்துட்டு கல்யாணம் பண்ணிக்கணும் “ என அடுத்த வெடியை போட சுடர் பாவமாக முகத்தை வைத்து “ இது தப்பு மாமா “ என வாயை பிதுக்க “ இதுக்கு ஓகே னா சொல்லு இல்லனா குழந்தைய கொடுத்திடலாம் என சொல்லி எழுந்த குமரனை பார்த்த சுடர் வேரு வழியில்லாமல் சரி என்று ஒற்று கொண்டால் பின்னாடி நடக்கும் போது பாத்துக்கலாம் என்று அதை விட்டு குழந்தை தன்னுடனே இருக்க போவதை எண்ணி மகிழ்ந்து கொண்டு இருந்தாள்.
சுடர் அப்போது நினைக்க வில்லை இந்த நிபந்தனை வைத்து ஒருவன் எதிர்காலத்தில் தன்னை விதவிதமாக வைத்து செய்ய போவதை அறியாமல் இருந்தால் சுடர் ஒளி.