அந்த குளிரூட்டிய அறையிலும் வேர்க்க அமர்ந்திருந்தார்கள் குமரனும், ஆதியும் , எதிரில் கண்ணில் கண்ணாடி அணிந்து சில வெள்ளி முடி எட்டி பார்க்க ,அமர்ந்திருந்த டாக்டர் கமலாவை பார்த்த படி ,அவர் என்ன சொல்ல போகிறாரோ என்ற பயத்துடன் அமர்ந்திருந்தன. இவர்களை பார்த்த டாக்டர் “ இதுல சுடர் மாமா… “ என இழுக்க, உடனே குமரன் “ அது நான் தான் டாக்டர் “ என அறிமுகம் ஆகிக்கொண்டான், டாக்டர் கமலா உடனே ஆதியை யார் என்பது போல பார்க்க, அதை புரிந்து கொண்ட குமரன் “ இது என் நன்பன் ஆதி எனக்கு தம்பி போலா , நீங்க சுடர் க்கு என்னனு சொல்லுங்க டாக்டர் ஏன் அவ திருப்பி மயக்கம் ஆனா “
“ அது வந்து குமரன் நான் சுடர் கிட்ட பேசுன வரை என்ன தெரிஞ்சதுன மகிழன்னு யாரோ ஒரு பையன் சுடர் கிட்ட லவ்னு ஏமத்துனதும் இல்லாம இவன பத்தி யார் கிட்டையும் சொல்ல கூடாதுன்னு மிரட்டி இருப்பான் போல அதான் அவன் பேரை தெரியாம சொன்னதும் பயத்துல மயங்கிட்ட “
“ அன அவ படிச்சது பொண்ணுங்க மட்டும் படிக்கிற ஸ்கூல், அந்த மகிழன எங்க போய் தேட என் பொண்ண இப்படி ஆக்கிட்டானே, என் தப்பு தான் சுடர தனியா விட்டுருக்க கூடாது “ என மீண்டும் புலம்ப
“சுடர தப்பு சொல்லாதிங்க குமரன் அவ பாவம் சின்ன பொண்ணு “ என டாக்டர் பேச
“ அனா அவ பண்ணியிருக்க காரியத்தை பார்த்தா அப்படி தெரியலையே, நான் என்னும் ஸ்டீர்ட்-ஆ இருந்துருக்கனும் என் தப்பு தான்“ என்று தலையில் அடித்து கொள்ள, அவன் கைகளை பிடித்து தடுத்தான் ஆதி
“உங்க அக்கா பொண்ணு பண்ண தப்புக்கு நீங்க ஏன் அடிச்சிக்கிறிங்க “ என பேச , அதை கேட்ட டாக்டர்
“ ரெண்டு பேரும் நான் சொல்றத மொதல்ல கேக்குறிங்களா “ என சொல்லிய பிறகே இருவரும் அமைதி ஆனார்கள்.
“சுடர் அம்மா அப்பா க்கு என்ன ஆச்சி “ என கேட்க , அதை கேட்ட குமரன் சுருக்கமாக கூறி முடித்தான்
“ ஓ…. சரி , நீங்க சுடரை எப்படி பாத்துபீங்க டேயிலி என்னெல்லாம் பேசுவீங்க , சுடர் உங்க கிட்ட கடைசிய எப்போ சிரிச்சி பேசுனது” இந்த கேள்விகளை கேட்ட குமரன் தலை குனிந்த படி அது நான் இரண்டு பேர் கிட்டயும் அவ்வளவா பேச மாட்டேன் “ அதை கேட்ட டாக்டர் அதிர்ந்து பார்க்க , ஆதியும் அப்படி தான் குமரனை பார்த்தான் .
குமரனே தொடர்ந்தான் “ அது எங்க அக்கா அவ இழப்பை என்னால தாங்க முடியல , தீபா சுடர் இவங்கள பாக்கும் போதுலாம் என் அக்கா நியாபகம் அதிகம் வரும் , அதான் …” என டாக்டர் முகம் பார்க்க , டாக்டர் மட்டும் அல்ல ஆதியும் இவனை முறைத்து பார்த்து இருந்தன். டாக்டர் முறைத்த படி “ என்ன குமரன் நீங்க , உங்களுக்கே கஷ்டம்-ன தீபா சுடர் என்னும் சின்ன பசங்க அப்போ அவுங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும் , அந்த மகிழன் என்ன சொல்லி சுடரை எமாத்திருக்கான் தெரியுமா “ என்றதும் என்ன என்பது போல இருவரும் பார்க்க “ சுடரை அப்பா அம்மா மாதிரி பாத்துகுறனு சொல்லிருக்கான் , அப்படி சொல்லி தான் எமாத்திருக்கான், சுடர் பிரக்னன்ட் ஆனாது முதல்ல அவன் தான் கண்டுபிடிச்சிருக்கான், அத சுடர் கிட்ட சொல்லி இவள விட்டு போய்ருக்கான் இதை கேட்ட அதிர்ச்சில தான் சுடர் ரொட்ல மயங்கிருக்கா, அது வர அந்த பெண்ணுக்கு எந்த ஐடியாவும் இல்லாம தான் இருந்துருக்கா “
இதை கேட்டு நெஞ்சில் கை வைத்த குமரன் “ சுடர் , சுடர் ம்மா “ என முனங்கிய படி பின்னொக்கி சாய, குமரனை விழாமல் பிடித்தான் ஆதி அங்கு இருந்த டாக்டர் அவனுக்கு முதல் உதவி செய்த படி “ பீப்பி அதிகம் ஆகிருக்கு “ என ஊசி ஒன்றை போட அதன் பின்னையே குமரன் இயல்பு வந்தான் . டாக்டர் குமரனை பார்த்து “ உங்க கில்ட்-அ விட்டுட்டு இனிமே ஆவது அந்த ரெண்டு பொண்ணுகளையும் நல்ல படியா பாத்துக்கோங்க இப்பவும் இந்த ரெண்டு பேருக்கும் உங்கள விட்ட வேற யாரும் இல்லை, “.
“ ஆமா … சுடர் , தீபா ரெண்டு பேறையும் நான் பாத்துக்கறேன் அவுங்களுக்கு நான் இருக்கன் “ என்று அமைதியானான் .
டாக்டர் மீண்டும் இருக்கையில் அமர்ந்து , கையில் ரிப்போர்ட் எடுத்து “ சுடர் மனச பத்தி சொல்லிடன் இப்போ அவ பேபி பத்தி பேசலாமா” அதற்கு குமரன் “ டாக்டர் சுடர் சின்ன பொண்ணு பதினேழு வயசு தான் ஆகுது இந்த குழந்தை வேனாமே “ என்று தயங்கிக் தயங்கி பேச , டாக்டர் “ நீங்க சொல்ல வரது புரியுது தான் அன பேபி பார்ம் ஆகி மூனு மாசம் அகுது இதுல சுடர் வேற மனசாலையும் உடம்பலையும் வீக்கா இருக்க இந்த டைம் ல அபார்ஷன் கஷ்டம் “ என்று கையை விரித்து விட்டார், மீண்டும் அவரே “ ஆனா இந்த பேபிய பெத்துகுறது நால சுடருக்கு ஒன்னும் ஆகாது என்ன கொஞ்சம் கேர்புல்லா பாத்துக்கனும்”
குமரன் “ அன அவ வாழ்க்க டாக்டர் சுடர் சின்ன பொண்ணு அவ என்னும் வாழவே ஆரம்பிக்களையே “ அதை கேட்ட டாக்டர் “ உங்க கஷ்டம் புரியுது குமரன் , வேனும்னா பேபி பிறந்ததும் ஒரு நல்ல பேறன்ட் க்கு அடாப்ஷன்க்கு கொடுத்துருங்க “
“ அது எப்படி டாக்டர் பாசிபில்”
“ ஏன் பாசிபில் இல்லனு சொல்றிங்க இங்க எவ்வளவோ பேரு குழந்தை இல்லாம கஷ்ட படுறாங்க தெரியுமா , நீங்க வேன இப்போ சுடரை போய் பாருங்க அப்பறமா வந்து வேன என்ன பண்ணலாம்னு சொல்லுங்க “ என்றதும் குமரனும் டாக்டருக்கு நன்றி சொல்லி விட்டு சுடரின் அறைக்கு சென்றான் .
அங்கே சுடர் விட்டத்தை வெறித்த படி இருந்தாள் முகம் உயிர்ப்பை விட்டு இருந்தது, சுடர் அருகே சென்று அவள் தலையில் கை வைத்து “ சாரி மா மாமா தப்பு பண்ணிட்டேன் மண்ணிச்சிரு சுடர் “ என சொல்லி முகம் பார்க்க , சுடர் அப்போழுதும் விட்டதைத் வெறித்தபடியே இருக்க . குமரன் கண் கலங்க “யாரும் மா அது உன்னை இப்படி இந்த நிலைக்கு தள்ளுனது அவன் யாருன்னு சொல்லும்மா நான் பாத்துக்கறேன் “ அதற்கு சுடர் குமரன் கையை பிடித்தவாறு இந்த பாப்பாவ நானே வச்சிக்கிட்டுமா , நான் நல்ல பாத்துபன் மாமா “ என குமரன் முகம் பார்க்க குமரன் கோபமான முகத்துடன் “ உனக்கு குழந்தை பிறந்தவுடனே வேற ஒருத்தவுங்க கிட்ட கொடுத்துடலாம், உன்னால குழந்தைய வழக்க முடியாது “ என்று சொல்லி ஆதியை வாடா என்று டாக்டரிடம் விஷயத்தை சொல்லி விட்டுக்கு கிளம்பினான்.
ஆதி வீடு வரை கொண்டு வந்து விட்டுட்டு சென்றான்.
குமரன் அன்று இரவு உறங்காமல் யொசித்தபடி இருந்தான், எங்கே இங்கு இருந்தால் குழலிக்கு நடந்தது போல சுடருக்கும் நடந்து விடுமோ என்ற பயத்தில் குமரன் சுடர் மற்றும் தீபாவை அழைத்து “ நான் சொல்றவரை இந்து விசயத்தை யார் கிட்டையும் சொல்ல கூடாது “ என்று சத்தியம் வாங்கி கொண்டான் இதை பற்றி ஒன்றும் தெரியாத தீபா “ எந்த விசியத்தை யார் கிட்ட சொல்ல கூடாது மாமா “ என்று சுடரை பார்க்க சுடர் சேர்ந்து போன முகத்துடன் “ எனக்கு பாப்பா பிறக்க போதுல அத தான் யார் கிட்டையும் சொல்ல கூடாதுனு மாமா சொல்றாங்க “
இதை கேட்டு தீபா திரு திரு வென்று முழித்தபடி “ இங்க என்ன நடக்குது மாமா இவ என்ன லூசு மாதிரி பேசுறா “ என தன் மாமாவை பார்க்க , குமரனொ மேலோட்டமாக சுடரின் நிலையை கூறி “ இப்போதைக்கு வெளிய யார்கிட்டயும் பேசாதீங்க, தீபா இரண்டு நாள் லீவ் போட்டுட்டு நீ சுடர பாத்துக்கோமா” என்று இருவரையும் பார்த்து பின் ஏதோ யோசித்தபடி ” ஆமா ரெண்டு பேறும் சாப்பிட்டீங்களா “ என்று கேட்க, அதற்கு இருவரும் ஆம் என்று தலையை ஆட்ட , குமரன் “ சரி போய் தூங்குங்க “ என்று அனுப்பி வைத்தான்
தீபாவும், சுடரும் அருகருகில் படுத்து இருக்க சுடர் விட்டத்தை வெறித்தபடி கண் இமைக்காமல் படுத்து இருந்தால், தீபா சுடரையே பார்த்த படி கையை எடுத்து அவல் தலை வருடி பயப்படாத ஒன்னும் ஆகாது என கூறினாள்.
சுடர் மிகவும் பயப்படும் நேரம் மட்டுமே நேராக படுத்து விட்டத்தை பார்ப்பாள் இதை தெரிந்து வைத்து இருந்த தீபா , இவ்வாறு கேட்க ,சுடர் தீபாவை கட்டி கொண்டு” அக்கா பயமா இருக்கு என்னை உனக்கு பிடிக்காம போய்டுமோனு “ இதை கேட்ட தீபா சுடரை அனைத்து முதுகில் அறுதலாக தடவிய படி “லூசு சுடர் போய் தூங்கு ஒலறாம “ என்று தூங்கவைத்தால் தீபா.