விடியல் 17

கண்ணீர் கண்ணில் திரை இட்டு மறைக்க, கண்ணில் வைத்த மை கரைந்து கன்னத்தில் ஓட , எங்கு போகிறோம் என்று தெரியாமல் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்று கொண்டு இருந்தாள் சுடர் ஒளி.

அங்கு ஒரு ஹோட்டலில் தன் நன்பன் ஓடு உணவு உண்டு விட்டு சிரித்தபடி பைக்கில் அமர்ந்த குமரன் கண்டது,  அழுதுக்கொண்டே வரும் சுடரை தான் .

சுடரை பார்த்த குமரன் “ இவ இங்க என்ன பன்றா அதுவும் அழுதுட்டே போறா என்ன ஆச்சி “ என வாய் விட்டு புலம்பிய குமரனை பார்த்த ஆதி “ யாரு அண்ணா அந்த குட்டி பொண்ணு , இப்படி அழுதுட்டே போது“ என்று கேட்ட படி சுடரை பார்த்தான் , ஆதி பார்த்து கொண்டு இருக்கும் போதே சுடர் மயங்கி விழ, குமரன் “ சுடர்… “ என கத்தி கொண்டு ஓடினான்,  ஆதி அவன் பிண்ணாலயே  ஓடினான்.

சுடரை நெருங்கிய குமரன் அவளை மடி தாங்கி “ சுடர் சுடர் எண்ணம் மா ஆச்சி மாமாவ  பாருடா “ என கன்னம் தட்டி, குமரன் புலம்பியும் சுடர் முழிக்க வில்லை ,இதை பார்த்த ஆதி என்கின்ற ஆதித்யன் ,அருகில் பார்க்  செய்த தன் காரை எடுத்து வந்து சுடர் இடம் நிறுத்தி “ அண்ணா பாப்பாவ தூக்குங்க ஆஸ்பிட்டல் போலாம் , சீக்கிரம் எழுந்திரிங்க “ என்று சுடரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தன.

வெளியே குமரன் ஆதியின் கைகளை பிடித்தபடி “ ஒன்னும் ஆகாது தானே “ என்று ஏதோ ஆதி ஆம் என்று சொன்னால் அது நடந்து  விடும் என்பது போல பார்க்க , ஆதியும் “ஒன்னும் ஆகாது  அண்ணா பயப்படதிங்க சாதாரண மயக்கமா தான் இருக்கும் “ என்று குமரன் கைகளை பிடித்தவாறு அந்த தனியார் மருத்துவமனையின் வளாகத்தில் தவிப்புடன் காத்திருந்தன. அப்போது அங்கே வந்த நர்ஸ் “இங்க சுடர் ஒளி பெசன்ட் ஓட ரிலேட்யூவ்ஸ் யாரு “  உடனே குமரன் “நான் தான் , சுடரு முழிச்சிடால? அவளுக்கு என்ன ஆச்சி சிஸ்டர் “

“அத சொல்ல தான் டாக்டர் கூப்பிடுறாங்க,  நேரா போனிங்கனா லாஸ்ட் ரூம் “ என்று சொல்லி செல்ல , அதை கேட்டு பயத்துடன் டாக்டர் அறைக்கு சென்றான் .

முகம் முழுக்க நிறைந்த பதற்றத்துடன் டாக்டர் முன் அமர்ந்திருந்தான் குமரன். டாக்டர் குமரனை பார்த்து “ அவங்க அப்பா அம்மா வரலய “ என கையில் இருந்த ரிப்போட்டை திருப்பி பார்த்த படி கேட்க , அதற்கு குமரன் “ ரெண்டு பேருமே இல்லை நான் தான் பாத்துக்கறேன், ஏன் டாக்டர் எதாவது பிரச்சனையா”  இதை கேட்ட டாக்டர் குமரனை மேலும் கீழும் பார்த்து “ நீங்க அவுங்களுக்கு என்ன வேனும் , வேற யாரும் இல்லையா அவுங்களுக்கு “ என கேட்க , குமரன் கடுப்பாகி “ நான் சுடருக்கு தாய் மாமா அப்புறம் அவளுக்கு ஒரு அக்கா இருக்கா அவ காலேஜ் படிச்சிட்டு இருக்கா எங்களுக்குனு வேற யாரும் இல்லை , இப்பவாது என்ன ஆச்சினு சொல்லுங்க “ என கத்த, டாக்டர் ஒரு அலட்சிய பாவனை யோடு “ ஹாலோ, இது ஆஸ்பிட்டல் கத்தாதிங்க , அந்த பொண்ணு பிரக்ணன்ட் -ஆ இருக்கு எனக்கு என்னமோ உன் மேல  டவுட்-ஆ இருக்கு அந்த பொண்ணு கண் முலிக்கிற வர நீ  இங்கே தான் இருக்கனும் தப்பிச்சி போக நினைக்காதிங்க “ என சொல்லிவிட்டு செல்ல , இதை கேட்டு உடைந்தே போனான் குமரன்.

வேளியே வந்த டாக்டரை பார்த்த ஆதி என்ன குமரன் அண்ணாவ காணோம் என எட்டி பார்க்க, தலையில் கை வைத்து முகம் கலங்க அந்த டாக்டர் அமர்ந்து இருந்த இடத்தையே பார்த்த படி அசையாது இருந்த குமரனை பார்த்த ஆதி “ ஏதோ பெரிய பிரச்சனை போல “ என்று வேகமாக குமரனை நோக்கி வந்தான்.

“ அண்ணா, அண்ணா என்ன ஆச்சி , பயப்படாதீங்க அண்ணா ஒன்னும் ஆகாது “ என ஆறுதல் கூற , இதை கேட்ட குமரன் , ஆதியின் கையை எடுத்து கண்ணில் வைத்து கண்ணீர் கசிய “ சுடர் பிரக்ணன்ட்-னு சொல்றாங்க டா , அதுவும் இல்லாம என்னை  சந்தேகம் படுறாங்க டா “ என தொண்டை வலிக்க திணறிய கூறலுடன் பேசியதை கேட்டு , ஆதி அதிர்ந்து போனான் அவனுக்கு என்ன சொல்ல வென்று தெரியவில்லை . மீண்டும் குமரனே “ அவளையும் தீபாவையும் என் அக்கா குழந்தையா நான் பாக்கள டா என் சொந்த குழந்தையா தான் பார்த்தன் , உனக்கு தெரியும்ல நீங்களாம் பர்த்டேனு வீட்டுக்கு வரனு சொன்னா கூட வேனானு தானே சொல்லுவன் , அப்படிப்பட்ட என்னை போய் ..,ஆதி நான் இல்லைட சுடர் என் பாப்பா டா நம்பு …நீ என்னை நம்புற தானா “ என்று உடைந்து பேசும் அந்த ஆறு அடி ஆண்மகனை பார்த்து சுடரின் மீது கோபமே வந்தது ஆதிக்கு.

ஆதி குமரனை பார்த்து” அண்ணா , உங்கள பத்தி இந்த டாக்டருக்கு என்ன தெரியும் ஏதோ தெரியாம பேசிருப்பாரு “ என எதேதோ பேசி குமரனை சுடர் இருக்கும் அறைக்கு  அழைத்து வந்து வெளியே நின்றனர்.

சுடர் அப்போது தான் பொருமையாக கண் விழித்து சுற்றி பார்த்தாள் , இவள் படுத்திருந்த படுக்கை அருகே ஒரு பெண் மருத்துவர் இவளை பார்த்து சிரித்தார் , அதை பார்த்து  சுடரும் சிரிக்க பின் சுடரின் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்து “ உங்க பேர் என்ன “

அதற்கு சுடர் கண்களை உருட்டி பார்த்த படி “ என் மாமா எங்க “ என கேட்க, அதற்கு டாக்டர் சிரித்த படி “ உங்க மாமா உங்களுக்கு சாப்பிட எதவது வாங்க பொய்ருக்காங்க , அவுங்க வரவரை நாமா பேசலாமா”  அதற்கு

“ம்ம்ம்” என தலை அசைத்தாள் சுடர்

“ உங்க நேம் என்ன “

“ சுடர் ஒளி “

“குட், என்ன படிக்கிரிங்க”

“12-த் எஸ்சாம் எழுதிருக்கன்”

“ ஓ… சூப்பர், நல்ல எழுதிரிக்கிங்களா “

“ம்ம்ம்.. இந்த வாட்டி பேப்பர் ஈசி “ என சிரித்தாள் சுடர், அதற்கு டாக்டரும் சிரித்துவிட்டு

“ உங்க வீட்டுல யார் யார் இருக்கா “

“ அது நானு எங்க குமரன் மாமா அப்புறம் எங்க அக்கா, இது ஏன் நீங்க கேக்குறிங்க “

“ அது ஏன் எதுக்குன்னு நான் சொல்றன்,  அதுக்கு முன்னாடி நீங்க ஏன் இங்க இருக்கிங்கனு உங்களுக்கு  தெரியுமா “ இதை கேட்டு முகம் வெளிற கைகளை இருக்கி பிடித்தவாறு “ தெரியும் “ என சுடர் கூற , அவளையே கவனித்த டாக்டர் அவள் மாற்றத்தையும் கவனித்த படி “ தெரியுமா.. அப்போ நீங்களே சொல்லுங்க நீங்க ஏன் இங்க இருக்கீங்கனு  “

“ அது, அது வந்து நான் பிரக்ணன்ட் அதான் இங்க இருக்கன்” இந்த பதிலில் அதிர்ந்த டாக்டர் “ யார் சொன்ன உங்க மாமாவ “ அதை கேட்ட சுடர் உடனே மறுப்பாக தலை ஆட்டி “ நான் பிரக்ணன்ட்-னு எங்க மாமாக்கு தெரியாது “ என சோகமாக தலையை தொங்க போட ,டாக்டர் கமலா உடனே

“ அப்போ நீ பிரக்ணன்ட்-னு உனக்கு எப்படி தெரியும் “

“ அது…அது.. அவன் சொன்னான் “ என தலையை குனிய

“ அந்த அவனுக்கு எப்படி தெரியும் “

“அது இந்த பாப்பா வந்து.. வந்து “ என மூச்சி வாங்க, உடனே டாக்டர் “ சுடர் இங்க பாருங்க ஒன்னும் இல்லே, மூச்ச இழுத்து விடுங்க “ என்று சுடரை நார்மள் ஆக்கியபின்” சுடர், அவன் பேர் என்ன “ அதற்கு சுடர் தன் வாயை கைகளால் மூடியபடி மறுப்பாக தலையை ஆட்ட , அதற்கு கமலா “ ஏன் பேர் சொல்ல கூடாதா “ அதற்கு ஆமாம் என்று தலையை ஆட்ட , உடனே “ அந்த அவன் உங்க மாமாவா சுடர், பயப்படாம சொல்லு நான் ஹெல்ப் பண்ற “ இதை கேட்டு கோபத்தில் சுடர் “ அவனொட எங்க மாமாவ சேக்காதீங்க எங்க மாமா நல்லவரு அவன் பேட் அவன் என்னை எமத்துனவன் அவன் கெட்டவன் , அவன் என்னை எமத்திட்டான் “ என திரும்பி திரும்பி அதையே சொன்ன சுடரை பார்த்து “ சரி சுடர்,அமைதி அமைதி , அவன் என்னன்னு எமாத்துனா “

“அது நிறையா எமாத்துனா எப்படினா அவன் என்னை அப்பா மாதிரி பாத்துபேனு, உன் கூடவே இருப்பனு அப்பறம் ஆ.. லவ் பண்றனு அது தான்  ஒரு பெரிய பொய் , அவன  நான் எங்க வச்சிருந்த தெரியுமா எங்க அப்பா பாசத்தை காட்டுரனு சோன்ன, அவனை அவனை எதவது பண்ணணும் ,அனா ..அனா. ஒன்னும் பண்ண முடியாதே, “ என அழுகிற சுடரை பார்த்த டாக்டர் “ அழாத சுடர் “ என அவள் தலை வருட

“ நா தப்பு பண்ணிடன் , நான் பேட், இனிமே யாருக்கும் என்னை பிடிக்காது “

“ அப்படி இல்லை சுடர் இங்க பாரு உன்னை பிடிக்காம தான் உங்க மாமா உனக்காக வெளிய வெயிட் பண்றாங்கல“

“ இல்லை நான் செஞ்சது தெரிஞ்ச என் கூட பேச மாட்டாங்க”

“அதெல்லாம் , பேசுவாங்க நீ பயப்படாத சரியா அப்புறம் அந்த அவன் பேரு என்ன சொன்ன “

“அது மகிழன் ,” என கூறி பின் அதிர்ந்து  வாயை முடியவாரு “ தெரியாம சொல்லிட்டேன் அச்சோ… என் மாமா என் அக்கா “ என்று மயங்கி சரிந்தாள்.