விடியல் 16

சுடர் கண் கலங்க தேம்பி தேம்பி அழுது கொண்டே தீபாவை இருக்கி அணைத்தவாறு  “ ரொம்ப பயந்துட்டேன் நிலா ,உடம்பு முழுக்க வலி, கை கால அசைக்க முடியல , கஷ்டப்பட்டு கண்ணை தொறந்து பார்த்த, தலை பயங்கர வலி தலை சுத்திடுச்சி திருப்பி படுத்துட்டன்,  லைட்டா கூட அசைய முடியல,  வலில அழுதுட்டே இருந்தன் நிலா “ என சுடர் அழுதவாறே, அன்று நடந்த நாளுக்கு சென்றது போல உடல் நடுங்கி “ அப்பறம் பொருமையா எழுந்து பார்த்தேன் ஏதோ ரூம் நல்ல பெருசா இருந்திச்சி, பக்கத்துல பார்த்தேன், அவன் அவன் மகிழன் அது எப்படி சொல்ல நிலா …” என கதறி அழுதால் சுடர்.

“அழாத டி, போதும் நீ சொன்னது கஷ்டபடதா” என தீபா சுடரின் முதுகை வருடி விட்டால். கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்திய சுடர் “ இல்ல நான் முழுசா இதை யார் கிட்டயாவது சொல்லனும் , இல்லைனா சொல்லாம மனசுல வச்சி எதாவது எனக்கு ஆகிடுமோனு பயமா இருக்கு “ என எழுந்து தீபா முகத்தை சிறு பிள்ளை போல் பார்க்க, தீபா கலங்கிவிட்டால் சுடரின் கைகளை பிடித்தபடி “  இத நீ மாமா கிட்ட கூட சொல்லலயா “

“ இல்லை சொல்லல அப்போ மாமா கிட்ட இதை எப்படி சொல்ல அதான் சொல்லல “ அதை கேட்டு தீபா ,”சொல்லு சுடர் கேக்குறேன்” என கண்ணீருடன் கூறினால்.

சுடர் தீபா கைகளை இறுக்கி பிடித்தபடி தொடர்ந்தாள்.”அவன் அந்த மகிழன் அப்பறம் நானு ரெண்டு பேரும் ஒரே பொர்வைல இருந்தோம் , நான் அதை பாத்து பயந்துட்டன்,  எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை, கடைசியா அந்த ஜுஸ் குடிச்சது தான் நியாபகம் இருந்துச்சி என்ன பண்ண தெரியாம ரூம் சுத்தி பார்த்தேன், என் டிரஸ் ரூம் ஃபுல்லா சிதறி இருந்துச்சி , நான் மகிழன் எழுந்திருக்க முன்னாடி எடுத்து போட்டிட்டு அவனை எழுப்பினேன். அவன் எழுந்து முதலே சாரி கேட்டு பின்னாடி ஃபிரண்ஸ் ஏதோ ஜூஸ் ல கலந்துடாங்க சாரி சாரினு அதையே சொன்ன எனக்கு என்ன பேச கூட தெரியல. நீ எதுவும் யோசிக்காத நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம் எங்க அப்பா கிட்ட சமதம் வாங்கனும் கொஞ்சம் டைம் கொடுனு கேட்டான், அப்பவும் நான் அழுதுட்டே அமைதியா தான் இருந்தன், எனக்கு என்ன பண்ண தெரியல அந்த இடமே பயமா இருந்திச்சு. அப்புறம் அவன் என்ன யோசிச்சானோ வீட்டு கிட்ட விட்டுட்டு யார்கிட்டையும் சொல்லாதனு சொல்லிட்டு கிளம்பிட்டான். அப்புறம் அவன் என் கூட பேசுறத கம்மி பண்ணி டான் ரீசனா என் எஸ்சாம சொன்னா“ என தீபாவை பார்த்தபடி பேசி முடித்தால். இதை கேட்ட தீபா “ சுடர் நீ சொல்லரத பார்த்தா உன்னை அவன்..ரேப் பண்ணிருக்கா டி, இதை ஏன் நீ முன்னாடியே சொல்லாம விட்ட, சுடர், அட்லீஸ்ட் அன்னைக்கு ஏன் கிட்டையாவது வந்து சொல்லிருக்கலாம் ல “ ஆதங்கத்துடன் தீபா பேச

“ இல்லை நிலா நான் வீட்டுக்கு வந்து முதல்ல உன் கிட்ட சொல்லனும் தான் உன் ரூமுக்கு வந்த அங்க நீ காதுல கை வைச்சி என் கிட்ட வராதீங்க, அப்படினு பேசிட்டே இருந்த உன்னை தொட்டு நான் கூப்டன் அப்போ கூட நீ நான் வரமாட்டன் போ… னு கத்துன நீ அன்னைக்கு வெளிய  சமைக்க கூட வரல “ இதை கேட்ட தீபா திணறிய படி “அதுக்கு அடுத்த நாள் நம்ம அம்மா நினைவுநாள் அதான்.. சுடர் மன்னிச்சிடு மா “ என தலையை தெங்க போட

“பரவால அக்கா நீ என்ன பண்ணுவ “ என சுடர் சொல்லி தீபா கைகளை விட்டு அமர்ந்தாள் , தீபா உடனே “ நிலானே கூப்பிடு சுடர் அக்கா வேன ப்ளீஸ் டி “ என சொல்ல சுடர் “ அது அக்கா…” என இழுக்க, தீபா உடனே

“ நிலானே கூப்பிடு சுடர்“ குறள் உயர்த்தி சொல்ல, சுடர் தலை அசைத்தாள்.

பின் நியாபகம் வந்த தீபா “மாமா கிட்ட சொல்ல டிரை பண்ணியா சுடர் “ அதற்கு சுடர் “ ம்ம்.. வெயிட் பண்ண மாமா வர , அன்னைக்குனு பாத்து மாமா லேட்-அ தான் வந்தாங்க அதுவும் குடிச்சிட்ட “

“என்ன மாமா குடிப்பாங்கள “

“அமா குடிச்சாங்க அன்னைக்கு ஒரு நாள் மட்டும், குடிச்சிட்டு அம்மா நினைச்சி அழுதாங்க அதை பார்த்து தான் ஒன்னு புரிஞ்சிச்சு என்னை விட நீங்க தான் அம்மா நினைச்சி ரொம்ப கஷ்ட படுறிங்கனு, நான் தான் புரிஞ்சிக்காம இப்படி பண்ணிட்டேன் “ என மீண்டும் கண் கலங்க, அவள் கண்களை துடைத்த வாரு “சரி அன்னைக்கு தான் சொல்லல,  அப்பறமா கூட நீ ஏன் சொல்லல,  நீ சொல்லிருந்த அவன் ஜெயில்ல இருந்திருப்பான் “

“அது அக்கா…” என மீண்டும் சுடர் தடுமாற

“என்னும் எதை மறைக்கிற சுடர் சொல்லு டி” என தீபா சுடரையே பார்த்தால்

“அன்னைக்கு அப்புறம் குமரன் மாமா, உன்னை நினைச்சி நான் ரொம்ப கஷ்டபட்டன், இதுல அடுத்த நாள் நல்ல ஜுரம் வேற எனக்கு டூ டேஸ் எதுவும் மைன்டுக்கு வரல, மகிழனும் மெசேஜ் ல எங்க அப்பா கூட இருக்கன் நானே கால் பண்றேன்னு சொல்லிட்டான், நானும் எஸ்சாம் வர டென்சன்ல வேர எதுவும் யொசிக்கல , வேற என்ன நடந்துர போதுனு..” தீபா முகம் பார்க்க, தீபா அதிர்ந்து போய் இருக்க, சுடரே மீண்டும் தெடர்ந்தால். “ ஆமா அப்போ மகிழனை ரொம்ப நம்புன, அவனும் பயப்படாதே மேரேஜ் பண்ண சரி ஆகிடும் சொன்ன அதான் பயப்படாம இருந்தன், ஆன எஸ்சாம் நெருங்க நெருங்க மகிழன் பேசுறதையே நிறுத்திட்டான் நானும் என்ன டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு பண்ணல போலானு நினைச்சேன்,  எஸ்சாமும் முடிஞ்சது ஆன மகிழன் கால் பண்ணவே இல்லை நானா பண்ணாலும் கட் பண்ணி விட்டான் மெசேஜ் மட்டும் பண்ணான். அது அப்புறம் எனக்கு பயமா இருந்திச்சி அவனை பார்க்கணும்னு கால் பண்ணிட்டே இருந்தன் ரொம்ப நேரம் கழிச்சு தான் எடுத்தான்,  எடுத்ததும் திட்டிட்டு தான் பேசுனான் அது வரை என்னை அவன் திட்டுனதே இல்லை , நானும் சரி எதோ டென்சன்ல இருப்பானு, நேர்ல பாத்து பேசனும்னு சொன்ன அவனும்  வந்தான்.”

சுடரும் மகிழனும் சந்திக்கும் பார்க் அது மதியம் வேலை மணி ஒன்று இருக்கும் அது சின்ன பார்க்கும் கூட ஆட்கள் யாரும் இல்லை ,எப்போதும் சீக்கிரம் வரும் மகிழன் அன்று தாமதமாகவே வந்தான், வந்தவன் கத்தி “ எதுக்கு இப்போ கூப்ட சுடர், நான் தான் சொன்னல அப்பா கூட இருக்கனு “

“ அது வந்து எனக்கு கொஞ்சம் நாளா உடம்பு சரி இல்லை அத சொல்ல தான்….மகிழ வர சொன்ன “

“ உடம்பு சரியில்லனா டாக்டரை போய் பாக்க வேண்டியது தானா அத விட்டுட்டு என்ன டார்ச்சர் பண்ற நானே எவ்ளோ பிரச்சனைல இருக்க தெரியுமா “

“மகிழா நான் சொல்றத முழுசா முதல கேள “

“எதுவா இருந்தாலும் வேகமா சொல்லு நான் போகனும்” இதை கேட்டு திக் என்றது சுடருக்கு ஆனாலும் மகிழன் மேல் இருக்கும் அந்த நம்பிக்கையை பிடித்து கொண்டு “எனக்கு பயமா இருக்கு எனக்கு பாப்பா வந்திருச்சோனு” மகிழன் அதிர்ந்த முகத்துடன் “ உனக்கு எப்போ கடைசியா டேட் ஆச்சி” என கேட்டான், அதற்கு சுடர் “ அது எதுக்கு இப்போ கேக்குற “

“டென்சன் ஆக்காம சொல்லி தொளைடி “ என எறிந்து விழுந்தான்

“ அது உன் பார்த்டே பார்ட்டி முன்னாடி மாசம் “ என அலுங்காமல் இடியை இறக்க , இதை கேட்டு மகிழன் சுடரை அடிப்பது போல வந்ததை பார்த்து சுடர் பயப்படவும் “ டேட் தள்ளி போச்சினா முதலையே சொல்லாம மூனு மாசம் கழிச்சி சொல்ற “ என மகிழன் பல்லை கடித்து கொண்டு பேச, மகிழனை பார்த்து பயந்த சுடர்  “அது எனக்கு இப்படி தான் அடிக்கடி இரண்டு மாசம் வராது டாக்டர் ஆர்மோன் ப்ராப்ளம்-னு சொல்லி இருக்காங்க, இது தான் பஸ்ட் டைம் மூனு மாசம் ஆகியும் வராதது “ இதை கேட்டு டென்சன் ஆன மகிழன் “ நீ பிரக்ணன்ட் ஆனா எப்படி வரும் டி லூசு, இது கூட தெரியாம உன்ன “ என அங்கும் இங்கும் நடந்தான்.

அப்போது தான் சுடர் உண்மையில் பயந்து போனால், சுடர் மகிழனை பார்பதுக்காகவே இவ்வாறு பொய் சொல்லி வந்தது , அவளுக்கு இருக்கும் உபாதை கள் உண்மை தான் எஸ்சாம் முடிந்ததும் ஆஸ்பிட்டல் போக வேண்டும் என்று இருந்தால்.  அப்போது தான் மகிழன் சுடரிடம் சரியாக பேசாமல் போக, சுடர் என்ன செய்ய யோசிக்கும் போது தன் சித்தி அழைத்து கர்ப்பமாக இருப்பதை கூறியதும் இந்த ஐடிய வந்தது. மகிழன் பயப்படுவான் என்று நினைத்து வந்தவள் பயந்து நிற்கும் நிலை.

சுடர் முகம் வெளிற “ பயமுடுத்தாத மகிழன் நான் சும்மா தான் உன்னை பயமுடுத்த கூப்டன் “ என அவன் முகம் பார்க்க

“ நீ எதுக்கு கூப்டியோ எனக்கு தெரில அன நான் வந்தது இத சொல்லிட்டு போக தான் நல்லா கேட்டுக்கோ “ என்று சுடரை விட்டு தள்ளி நின்று “ இதோ பாரு சுடர் எனக்கும் உனக்கும் செட் ஆகாது என் ரேஞ்ச் வேற அதுவும் உங்க அம்மா , பாட்டி வரலாறு-க்கு‌க்குளாம் நான் உன் கூட பேசிருக்கவே கூடாது , ஆன எதோ உன்னை பாத்ததும் பிடிச்சிசு ஆன இதோட விட்டுடலாம், எங்க அப்பாக்கு வேரை விசியம் தெருஞ்சிருச்சி இதுக்கு மேல ரிஸ்க் அண்ட் நீ பிரக்னன்ட் அ இல்லைன ஹாப்பி, இன் கேஸ் நீ பிரக்னன்ட்னு ஆச்சினா போய் அபார்ட் பண்ணிடு அத விட்டுட்டு போலிஸ் கம்லேயிண்ட்னு போன உனக்கு இருக்க அந்த இரண்டு பேரையும் இல்லாம பண்ணிருவன் ஓகே” என கோபமான முகத்துடன் சொல்ல, சுடருக்கு மயக்கம் வராத குரைதான் , பயந்த முகத்துடன் மகிழனை பார்த்து “ மகிழன் நீ.. நீ விளையாட தானா இப்படி செய்ர, எனக்கு தெரியும் உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு, விளையாடுனது போதும், எனக்கு நிஜமா பயமா இருக்கு “ என பயந்த முகத்துடன் சுடர் பார்க்க

“சுடர், சுடர்…அச்சோ என் செல்லம் என்னுமா என்னை நம்புற? நான் ஏன் விளையாட போறேன் உன் கிட்ட , ஆமா எனக்கும் உன்னை பிடிக்கும் சொன்னது உண்மை தான் ஆனா இப்போ பிடிக்கலையே எனக்கு என்ன பண்ண? “ என இரு கைகளையும் விரித்து காட்ட, சுடரால் நம்ப முடியவில்லை தந்தைக்கு சமமாக அன்பை காட்டியவன் இப்படி பேசவும் ஒன்றும் புரியாமல் “ பொய் சொல்லாத மகிழ என்னை மறந்து, என்னை விட்டு உன்னால எப்படி இருக்க முடியும் “ என கண்ணில் நீர் வடிய காதில் கை வைத்தவாறு சுடர் “ இல்லை இது கனவுதானா,  ஆமா கனவு தான் என் மகிழன் இப்படி பேச மாட்டான் என பிதற்ற , அதை பார்த்து அவல் கன்னத்தை அழுத்தி பிடித்து தலை நிமிர்த்தி “ ஏய் நல்ல கேட்டுக்கோ என்னும் ரெண்டு நாள் தான் உன் முகம் கூட நியாபகம் இருக்காது… “ என்று சொல்லி பின் அவள் கண்களை பார்த்தபடி “ ஆனா இது மறக்காது உன் கண்ணு அதை மட்டும் மிஸ் பண்ணுவ , சொல்ல போனா அது தான் என்னை உன் கிட்ட கூட்டிட்டு வந்துச்சி அந்த கண்ணு அதுக்கு நீ வைக்குற மை, இப்போ கூட பாரு நீ அழுததுல அந்த மை கலஞ்சி உன் கண்ணை என்னும் அழகா காட்டுது பாரு…“ என அவன் கை அவள் கண்களை தொட போக , சுடர் வேகமாக பின் நோக்கி சென்றால்.

அதை பார்த்து நக்கலாக சிரித்த மகிழனை பார்த்து தன் கண்களை துடைத்த படி வெளியே செல்ல போனவளை பார்த்து “ ஏய் சுடர் டாக்டர் கிட்ட போய் பாரு கன்பார்ம் ஆச்சினா ஆபார்ட் பண்ணிரு, எதாவது ஹெல்ப் வேனும்ன “ என்று தன் கைகளை காதில் போன் பேசுவது போல சைகை செய்து “ கால் மீ, அண்ட் என் பேரு வெளிள வந்துச்சி உன் அக்கா , மாமாவ என்ன பண்ணுவனு சொல்லனுமா “ என சிரித்து கொண்டே கழுத்தை வெட்டுவது போல செய்து காட்ட, சுடர் பயந்து பூங்காவை விட்டு வெளியே வந்தாள்.

கண்களில் வழியும் கண்ணீரை துடைக்க கூட தோணாமல் கால் போன போக்கில் அந்த மேயின்ட் ரோட்டில் நடந்தால், வெயிலின் தாக்கதில்லா அல்லது அந்த பீஞ்சு மனம் தாங்க முடியாத பாறத்தை சுமந்ததால தெரியவில்லை சுடர் மயங்கி கீழே சரிந்ததால்.