விடியல் 13

சுடர்  கன்னத்தில் கை வைத்த படி ஆசிரியர் நடத்தும் பாடத்தை ஏதோ புரியாத மொழி படத்தை பார்ப்பது போல தூங்கி வழிந்த படி பார்த்து கொண்டு இருந்தால். அப்பொழுது  அருகில் இருந்த நேகா அவளை சுரண்ட,  இவளை பார்த்த சுடர் மிக மெதுவாக “ என்ன டி” என தலை சாய்த்து கேட்க, அதற்கு நேகா

“தூங்கி தொலையாத எருமை ,அப்புறம் இந்த மிஸ் நிக்க வச்சி உன்னோட சேத்து எங்களையும் கொஸ்டின் கேட்டு சாக அடிப்பாங்க “  இதை கேட்டும் மீண்டும் சங்கீத சுரங்கள் என பாட்டு கேட்பது போல தூங்க கண் சொருக,  அதை பார்த்த நேகா”  இவள “என நறுக்கென்று கிள்ளி வைக்க, வலியில் ஆ… என்று கத்தவும் அந்த பிரியட் பெல் அடிக்கவும் கரைட்டாக இருந்தது.

இதை பார்த்த ஆசிரியர் “நாளைக்கு டெஸ்ட்  எல்லாம் படிச்சிட்டு வந்துருங்க “ என சொல்லிட்டு இவர்களை முறைத்து விட்டு போக , அதை பார்த்த சுடர் நேகாவை அடித்த படி “எருமை எருமை உன்னால என்ன முரச்சிட்டு  போறாங்க “

“லூசு விடுடி, நாளைக்கு தானே அந்த மேம் பிரியட் இல்லைடி கத்தாத”இதை கேட்ட பின்னே பெரும் மூச்சி விட்டு “அப்போ சரி சரி “ என்று சொல்லி மீண்டும் தூங்க போக , அவள் முடியை பிடித்து இழுத்து “அட லூசு சுடர் ஸ்கூல் முடிஞ்சிருச்சி வாடி போலாம் “ என அவளை இழுத்து சென்றால். சுடர், நேகா ,நிர்மள, காவியா என நால் வரும் பேசிக்கொண்டே சென்றன,  இவர்கள் பள்ளி ஒரு தெரு தள்ளி  பெரிய மெயின்ட் ரோட் கடந்தே சுடர் வீடு செல்ல வேண்டும் மத்தவர்கள்  அதற்க்கு எதிர் புறமாக  செல்ல வேண்டும்  ஆனால் நேகா மட்டும் சுடரை அந்த மேயின்ட் ரோட் கடக்க வைத்து விட்டு செல்வாள்.

அது என்னமோ சுடருக்கு சாலையை கடக்க வராது , ஒரு நாள் சாலையை  கடக்க முடியாமல் முழித்து கொண்டு இருக்கும் போது தான் உதவ வந்தால் நேக ,அதன் பின்னே சுடரும் நேகாவும்  உயிர் தோழியானர்கள்.  அவ்வாறே சுடர் இவர்கள் குழுவில் ஓர் ஆளாக மாறினாள் . எப்பொழுதும் சுடர் பள்ளி முடிந்து அருகில் உள்ள பூங்காவில் வெகு நேரம் விளையாடி விட்டே வருவாள், வருபவளை அங்க பார்த்து கொள்ள யாரும் இல்லை இருந்த ஒரே உறவான புனிதா சித்திக்கும் திருமணம் ஆகி விட்டது பார்க்க வந்த மற்ற சொந்தங்களையும் அவர்கள் மேல் இருந்த கோபத்தில் குமரன் அருகே சேர்க்க வில்லை. குமரன் வீடு திரும்ப இரவு 9-க்கு மேலே ஆகி விடும் தீபாவும் கல்லூரி முடிந்து பின் நூலகம் சென்று விட்டு வீட்டுக்கு வந்து இரவு உணவு சமைத்து விட்டு படிக்க சென்று விடுவாள் நிஜத்தை மறக்க புத்தகத்தை எடுத்தால் தீபா, பல நாட்கள் ஆனது இவர்கள் ஒருவரின் முகத்தை மற்ற ஒருவர் பார்த்து பேசி. குமரன் -க்கு தன் தாய் தன்னை விட்டு சென்றது கூட வலித்தது இல்லை ஆனால் தன்னை தாயை போல பார்த்து கொண்ட அக்காவின் இழப்பை ஏற்க முடிய வில்லை இதில் இவன் பார்க்க தவறியது சுடரையும் தீபாவையும் தான் .

ஒரு நாள் சுடர், நேகா , நிர்மள, காவியா அனைவரும் பூங்காவில் விளையாடி கொண்டு இருக்கும் போது நிர்மள அனைவரையும் அழைத்து “ என்ன எல்லாரும் சின்ன பசங்க மாதிரி பார்க்-லயே விளையாட போரிங்களா “ அதற்கு சுடர் “நீ சொல்லல நாளும் அதான் நிஜம், நம்ம சின்ன பசங்க தான் “ அவளை பார்த்த படியே நிர்மள “ சரி சரி நீ சின்ன பிள்ளையாவே இரு நாங்க மட்டும் வளர்ந்துக்குறோம் “ என்று நேகா அருகில் அமர,  சுடர் தன் வாயை இறுக்கி மூடி கொண்டால் ,அதன் பின் மீ்ண்டும் அவளே “ நாம எல்லாம் ஏன் பீச் போக கூடாது “ என்று அனைவரது முகத்தையும் பார்க்க அதற்கு காவ்யா “ ஐயோ எங்க அம்மா விட மாட்டாங்க-ப்பா “ அவளை தொடர்ந்து அனைவரும் அதையே சொல்ல, நிர்மள அதற்கு “வீட்டுக்கு சொன்ன தானே, நாமே யார் கிட்டையும் சொல்லாம ஸ்கூல்க்கு போறோம்-னு சொல்லிட்டு போலாம் “ என்று மோசமான ஒரு ஐடியாவை சொல்ல. இதை கேட்ட அனைவரும் யோசிக்க நேகா முதலில் வந்து போகலாம் என்று சொல்ல பின்னே வரிசையாய் அனைவரும் சரி என்று ஒற்று கொண்டு, வரும் வெள்ளி செல்லலாம் என்று முடிவும் செய்தன.

சொன்னது போல பீச் வந்து இறங்கினர் அங்கே இவர்களுக்காக நான்கு பேர் கொண்ட கல்லூரி மாணவர்கள் காத்து இருந்தனர்.  அதை பார்த்து அதிர்ந்த சுடர் திரும்பி நேகாவை பார்க்க அவள் அதிராமல் புன்னகைக்க சுடர் குழம்பி போனால் பின்னரே அதில் ஒருவன் நிர்மள-வின் காதலன் என்றும் இவர்கள் வருவதை முன்னரே சுடரை தவிர மற்றவங்களுக்கு தெரியும் என்று சொல்ல. இதை கேட்டு சோகம் ஆன சுடரை பார்த்த நேகா “ சுடர் அது உன் கிட்ட சொன்ன நீ ஒத்துக்க மாட்டனு தான் சாரி டி இங்க பாரு அந்த அண்ணா நம்மள பாக்கணும் ஆசை பட்டு கேட்டுருக்காங்க டி இந்த ஒன் டைம் மட்டும் கோச்சிக்காத என்று அவளை சமாளித்து அனைவரும் கடலை நோக்கி செல்ல, இது எவையும் சுடருக்கு பிடிக்க வில்லை ஆனால் நேகாவிற்காக சென்றால்.

சுடரிடம் பேச முயன்ற கல்லூரி மாணவர்களை கண்ணாலையே மிரட்டிய படி அவர்களை விட்டு சற்று தள்ளியே நடந்தாள். பின் அனைவரும் தனி தனியே அமர்ந்து பேசுவதை பார்த்த சுடர் நேகா அருகே போக கால் எடுத்து வைக்க அவளும் அவர்களுல் ஒருவன் அருகே அமர, சோர்ந்த முகத்துடன் கடலை பார்த்தால். அங்கே ஓடிக்கொண்டு இருந்த நண்டுகளை பார்த்து அதை பிடிக்க முயன்று கொண்டு இருந்தால்.

சுடர் நண்டு உடன் ஓடி ஒரு நண்டை கையில் பிடித்து விட்டால், அந்த மகிழ்ச்சியில் அவள் பின்னே நகர்ந்த வாரு “ கடைசியா பிடிச்சிட்டேன் “ என்று சொல்லி யார் மீதோ மோதியதில் கையில் இருந்த நண்டு கீழே விழுந்து விட கடுப்பான சுடர் முறைத்த படி திரும்ப அங்கே ஆறு அடியில் நின்று கொண்டிருந்தவனை பார்த்து “ யோவ் உணக்கு நிக்க வேற இடம் இல்லையா பரு நண்டு போய்டுச்சி “ என கோபத்துடன் பார்த்த அந்த மையிட்ட விழிகளை பார்த்த படி “நான் வந்து ஹெல்ப் பண்ணவா?” என முகத்தில் இருந்த சிரிப்புடன் கூறினான் அவன் மகிழன்.