மேகங்கள் நிறைந்த வானம், நிலவை மறைத்த மேகங்கள், அதனால் வானம் இருளாக இருந்தது, அந்த இருட்டை போக்கும் விதமாக அந்த பெரிய சாலையில் மின் விளக்குகள் பொருத்த பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தின் கீழே காலில் செருப்பு இல்லாமல் குளிரில் நடுங்கிய வாரு சாலையில் நின்று கொண்டு, அந்த இரவிலும் நிற்காமல் போகும் வாகனங்களை பார்த்த படி தனியாக எப்படி சாலையை கடப்பது என்று பயத்துடன் நின்று கொண்டு இருந்தால் அவள் சுடர் ஒளி .
அப்பொழுது ஒரு பெரிய கரம் ஒன்று அவள் தலையை தடவ, திடிகிட்டு பயந்து தலையை நிமிர்த்தி பார்த்தால். பயம் விலகி முகத்தில் தோன்றிய புன்னகையுடன் சுடர் “ அப்பா…” என அழைத்தால், அதற்கு அவள் அப்பா சிரித்தபடி அவர் கால்களில் இருந்த செருப்பை அவள் கால்களில் மாட்டி ஒரு போர்வையை அவல் மீது போத்தி அவள் கைகளை பிடித்தபடி இரைச்சல் நிறைந்த சாலையை கடந்து அமைதியான சாலையில் கூட்டி சென்றார். சுடர் முகத்தில் பூத்த சிரிப்புடன் தன் தந்தையின் கைகளை பிடித்த படி நடந்து போகும் பொழுது, அங்கே ஒரு ஓரமாக இருந்த பூவை பார்த்து அதை பறிக்க அப்பாவின் கைகளை விட்டு சென்று அதை பறித்து விட்டு திரும்ப, தன் தந்தையை காணவில்லை பயந்து சுடர் “அப்பா அப்பா..” என்று கத்தி கொண்டு சுற்றி சுற்றி தேடினால், எங்கும் அவள் தந்தையை காணவில்லை. அழுது கொண்டே அந்த இருளை பார்த்தால் தனிமை மிரட்டியது பயந்து சத்தமாக “அப்பா…” என்று கத்திக்கொண்டே எழுந்து அமர்ந்தால் எழு வயது நிரம்பிய சுடர் ஒளி .
படுக்கையில் இருந்து கத்திக்கொண்டு எழுப்பிய தன் மகள் சத்தம் கேட்டு ஓடி வந்தார் மாதவன் சுடரின் தந்தை “என்னம்மா ஆச்சி அப்பா பாரு பக்கத்துல தான் இருக்கன் இங்க பாருங்க “ என சுடரை மடியில் போட்டு கொஞ்ச அந்த அறையை ஒட்டி இருந்த சமையல் அறையில் இருந்து குழலி “கொஞ்சினது போதும் போய் வேலைக்கு கிளம்புங்க டைம் ஆகுது லேட் ஆச்சினா சம்பளத்துல பிடிக்க போறாங்க “ என சொல்லி விட்டு பின் “அப்படியே நிலாவையும் எழுப்பி விட்டு போங்க “ இவை எல்லாம் கேட்டும் கண்டுக்காமல் “என்ன ஒலி-ம்மா கெட்ட கனவு கண்டிங்கள”
“ஆமா…ப்பா நீ கனவுல என்னை விட்டு போய்ட்ட தனிய இருந்தன பயந்துடன் “ என தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டாள்,
அப்போது அருகில் உறங்கி கொண்டு இருந்த தீபா எழுந்து அவலும் மறு மடியில் அமர்ந்து “நானும் “ என தந்தையின் மிது சாய்ந்து கொண்டால், இருவரையும் சிரித்த படி பார்த்து வாரு அப்பா எப்பவும் உங்க கூடதான் இருப்பான் இப்போ அப்பா வேலைக்கு போய்டன் உங்களுக்கு பயமா இருக்கு அப்போ என்ன பண்ணுவீங்க “ சுடரும் தீபாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “உங்களை தேடி ஓடி வந்துருவோம்”
“அது தப்பு எப்பவும் அப்பாவயே எதிர் பார்க்க கூடாது என் பொண்ணுங்க யாரு நல்ல ஸ்டாங் ஆன பொண்ணுங்க தான அதனால யார் ஹெல்ப் காகவும் பயந்து யாரை நம்பியும் தயங்கி இருக்க கூடாது. யாராவது உங்க கிட்ட வம்பு பண்ண என்ன பண்ணணும் “ என இருவரையும் பார்க்க, இருவரும் சேர்ந்த மாதிரி”டிஷ்யூம் டிஷ்யூம்-னு குத்தனும் “ இதை கேட்டு கொண்டே உள்ளே வந்த குழலி “நல்லது இப்படியே வேலைக்கு போகம எல்லாரும் சண்ட போடுங்க வீடு நல்ல இருக்கும் “ என திட்டியவாரு அனைவரையும் கிளப்பினாள் குழலி.
இவர்கள் இருந்தது தமிழ் நாட்டில் ஒரு கிராம பகுதி அங்கு மாதவன் குழலி இருவரும் வயல் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தனர், பணம் அதிகம் இல்லை என்றாலும் அளவான வருமானம் என்று மகிழ்ச்சியுடனே இருந்தான, அந்த ஒரு நாள் வரும்வரை மாதவன் காணாமல் போகும் வரை “எனக்காக உன் தம்பி வீட்டில் காத்திரு நான் முடிந்த அளவு சீக்கிரமாக வந்துவிடுவேன் “ என்று எழுதி வைத்து விட்டு மாதவன் போய்விட்டான்.
இதை படித்த குழலி கண்கள் கலங்கி பின் மாதவன் கண்டிப்பாக திரும்பி வருவான் என்று மாதவன் சொன்னபடி தன் தம்பி விட்டில் தஞ்சம் அடைந்தாள் முதலில் பாசத்துடன் வரவேற்ற சொந்தங்கள் நாட்கள் செல்ல செல்ல குமரனிடம் சென்று “அவல கூட வச்சிக்காத இரண்டும் பொண்ணுங்க அதான் மாதவன் கூட ஓடி இருப்பான் “ என நாக்கில் விஷம் தேய்த்து பேச இதை கேட்ட குழலி மறுமாதமே வேலை ஒன்று பார்த்து விட்டு அருகில் ஒரு வீட்டில் குடியேரினால் இதில் குமரனுக்கு விருப்பம் இல்லை “அக்கா யார் என்ன சொன்ன என்ன இது நான் கெட்டுன வீடு இந்த நிலம் தாத்தா உடையது இவங்க யார் கேட்கிறது இதுல உனக்கும் பங்கு இருக்கு “
“குமரா நான் ஒன்னும் அதுக்காக போலடா “
“அப்பறம் எதுக்காக போன “
“உனக்கு இப்போதான் பொண்ணு பாக்குறாங்க இப்போ போய் நான் எப்படி குமரா கூட இருப்பேன் “ என்று சொல்லி இரு மகளையும் அழைத்து சென்று விட்டால். குழலி என்றாவது ஒரு நாள் மாதவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தால். தீபாவும் அம்மா விற்க்காக அப்பாவின் ஏக்கத்தை மறைத்து படிப்பில் முழு கவனமும் கொண்டு சென்றாள்.
ஆனால் இங்கு சுடரின் நிலைமையே மோசமானது. தந்தை இன்றி எதுவும் செய்து பழக்கம் இல்லாதவள் நத்தை போல் அவல் கூட்டில் தன்னை சுருக்கி கொண்டால்.
யாரையும் அருகில் சேர்க்காமல் தனியே இருந்தால் அதிக நேரம் உறங்கத்திலே இருப்பால் தன் தந்தை உடன் இருந்த நாட்களை எண்ணிய படி இருந்தால். இதை கவனித்த குழலி குமரன் இடம் சொல்லி புலம்ப பின் அவன் தீபா, சுடர் இருவருக்கும் தந்தை ஆகி போனான். அதன் பின்னே சுடர் தன் இயல்புக்கு திரும்பி படிப்பு நன்பர்கள் என மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொண்டால். ஆனால் அதுவும் நிலைக்காமல் தாயின் மரணம் இடியாக வந்து விழ மூவரும் நொருங்கி போனார்கள்.
குமரன் உடன் மூவரும் வேரு வேரு மனநிலையில் இருந்தன. குமரனுக்கு தாய் போல பார்த்து வளர்த்த தன் அக்கா இறந்த கஷ்டம் என்றால், தீபாவுக்கு தன்னால் தான் தாய் இறந்து விட்டால் என்ற குற்ற உணர்வு இதில் சுடரை யாரும் கவனிக்க வில்லை.
முதலில் தந்தை இல்லை இப்போது தாயும் இல்லை, தந்தை போல பார்த்து கொண்ட குமரனும் யாரையும் கவனிக்காமல் தன் போக்கில் வேலை ஒன்றே உயிர் என்பது போல இருந்தான். இதை பார்த்து சோகத்தில் மூழ்கிய சுடரை மகிழ்ச்சியாக வைத்ததே அவளின் நம்பர்கள் மட்டுமே. தன் வாழ்க்கையில் வெளிச்சம் என்று என்னிய நன்பர்களே தனக்கு இருளை பரிசாக தரப்போவதை அறியாமல் .
தீபா காலேஜ் முதல் ஆண்டு படித்து கொண்டு இருந்தாள் ,சுடர் பதினொன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த சமயம்,வீட்டை விட்டு தூரம் சென்று விடலாமா என்று சுடர் தவித்த சமயம் அது தன் அம்மாவின் மரணத்தால் பெரிதும் பாதித்து ஆறுதல் கூற யாரும் இன்றி தவித்த நேரம் கை கொடுக்க வந்தவளே நேகா மற்றும் அவள் தோழிகள். தாய் மடி தேடி அலைந்த குழந்தைக்கு தாயாய் மடி தாங்கினால். ஆனால் அவள் மறந்த ஒன்று அவளே ஒரு குழந்தை என்பதை.