Advertisement

மலரே மலர்வாய் 7

ஹ_ஸ்டன்(hழரளவழn) நகரம் ஆகஸ்ட் 28, 1836 ஆம் தேதி பஃப்போலோ பாயு நதிக்கிளையில் கண்டறியப்பட்டு ஜூன் 5, 1837இல் நகரமாக உருவாக்கப்பட்டது. இந்நகரம் முன்னாள் படைத்தளபதியும், குடியரசு டெக்சாஸ் பகுதியின் முன்னாள் தலைவரும், சான் ஜெசினிடோ போரை வழிநடத்தி வெற்றி கண்டவருமான சாம் ஹ_ஸ்டன் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.

ஹ_ஸ்டன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். தென் கிழக்கு டெக்சாஸில் கால்வென் பே மற்றும் மெக்சிகோ வளைகுடாவிற்கு அருகே அமைந்திருக்கும் இது ஹார்ஸ் கவுண்டி மற்றும் கிரேட்டர் ஹ_ஸ்டன் பெருநகரப் பகுதியின் முதன்மை நகரம் ஆகும்.
இந்நகரம் பல கலாச்சார நிறுவனங்கள் மற்றும் கண்காட்சிகளைக் கொண்டுள்ளது.
இது அருங்காட்சியகத்திற்கு வருடத்திற்கு 7மில்லினுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கிறது. குறிப்பாக தி மியூசியம் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், ஹ_ஸ்டன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் சைன்ஸ், தற்கால கலை கலை அருங்காட்சியகம் ஹ_ஸ்டன், ஸ்டேஷன் மியூசியம் ஆஃப் தற்கால கலை, ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் ஹ_ஸ்டன் மற்றும் ஹ_ஸ்டன் உயிரியல் பூங்கா ஆகியவை அடங்கும்.

திரையரங்கு மாவட்டம் டவுன்டவுன் ஹவுஸ்டன் மையத்தில் 17-பிளாக் பகுதி ஆகும், இது பாயூ பிளேஸ் பொழுதுபோக்கு வளாகம், உணவகங்கள், திரைப்படங்கள், ப்ளாஸ்கள் மற்றும் பூங்காக்கள் ஆகிய இடங்களுக்கு அமைந்துள்ளது. பாயூ பிளேஸ் என்பது முழு சேவை உணவகங்கள், பார்கள், நேரடி இசை, பில்லியர்ட்ஸ் மற்றும் சன்டான்ஸ் சினிமாவை உள்ளடக்கிய ஒரு பெரிய பன்மடங்கு கட்டிடமாகும்.

காலெரியா (டெக்சாஸின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்), பழைய சந்தை சதுக்கம், டவுன்டவுன் அகார்யம் மற்றும் சாம் ஹ_ஸ்டன் ரேஸ் பார்க் உள்ளது.

ஜெரால்ட்டி. ஹின்ஸ் வாட்டர்வால் பார்க் ஒரு பிரபலமான சுற்றுலா மையமாகவும், திருமணங்கள் மற்றும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காவும் பயன்படுகிறது.

ஹ_ஸ்டனில் சாம் ஹ_ஸ்டன் நினைவுச் சின்னம், ரைஸ் பல்கலைக்கழகம், ஹ_ஸ்டன் பல்கலைக்கழகம், டொயோட்டா மையம், தி காலெரியா, உடைந்த ஓபெலிஸ்க், டவுன்டவுன் ஹ_ஸ்டன், ஜார்ஜ் புஷ் பார்க் மற்றும் ஹ_ஸ்டன் கப்பல் சேனல் ஆகியவை முக்கியமான இடங்கள் ஆகும்.

ஹவுஸ்டன் கப்பல் சேனலின் கட்டுமானம் மற்றும் டெக்சாஸ் எண்ணேய் ஏற்றம் போன்றவற்றால் பொருளாதாரம் கூர்மையடைந்தது. இது டெக்சாஸ் மருத்துவ மையத்திற்கு (உலகின் மிகப்பெரிய சுகாதார மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு) மற்றும்; மிஷன் கட்டுப்பாட்டு மையம் அமைந்துள்ள நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் மையம் ஆகியவற்றின் வீடாக மாறியது.
எனவே 1967 ஆம் ஆண்டில் ஹ_ஸ்டன் “ஸ்பேஸ் சிட்டி” என அதிகாரப்பூர்வ புனைபெயரைப் பெற்றது.

இது “ஸ்பேஸ் சிட்டி”, “பியு சிட்டி”, “க்ரஷ் சிட்டி”, “மேக்னொலியா சிட்டி” மற்றும் “எச்-டவுன்” எனப் பல புனைப்பெயர்களையும் கொண்டது.

விடியற்காலையில் ஹ_ஸ்டனில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர்கள் மூவரும் வெளியே வந்தனர்.

அவர்களை அழைக்க அவன் நண்பன் கிஷோர் ஏர்போர்ட் வந்திருக்க இன்பச்செல்வன் அவனை அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணி தாமரையைத் தேட அவளோ அவர்கள் பின்னே வராமல் அங்கிருந்தவற்றை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

செந்தாமரைச்செல்வி அங்குள்ள மக்களை கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளுக்கு அனைத்தும் ஆச்சரியமாக இருந்தது.
அவள் அருகில் சென்றவன் அவளை “தாமரை” என சத்தமாக அழைக்கவுமே அவன் புறம் திரும்பியவள்
“என்ன மாமா கூப்பிட்டிங்களா?”

“ம் தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன். நீ ஹாயா கூப்பிட்டிங்களானு கேட்குற” என புகார் படித்தவன்,

“அங்க பாரு என்னோட ப்ரெண்ட் உனக்கு அவன அறிமுகப்படுத்தத் தான் கூப்பிட்டேன்” என்று அவளை அழைத்துக்கொண்டு அவர்களிடம் சென்றவன்

கிஷோரிடம் “ஷீ இஸ் மை வைப் செந்தாமரைச்செல்வி” என்று அறிமுகப்படுத்தி

செல்வியிடம் “என்னோட பெஸ்ட் பிரெண்ட் கிஷோர். என் கூடத்தான் வேலை பாக்குறான்” என அறிமுகப்படுத்த

‘ஓ அப்ப இவரும் வாத்தி தானா என்ன பாடம் இவரு எடுப்பாரு’ என்று எண்ணியவள்

கிஷோர் “ஹலோ சிஸ்டர்” என புன்னகைக்கவும்

அவனிடம் அமைதியாக “வணக்கம் அண்ணா” என்று சொன்னாள்.

அதைப்பார்த்து கிஷோர் ‘ரொம்ப அமைதியான டைப் போல’ என்று நினைத்தான். (யார பார்த்து அமைதினு சொல்லிட்ட இனி நம்ம செல்வி உன்ன இதுக்காகவே வைச்சு செய்யப்போறா பாரு. எல்லாம் உன் தலையெழுத்து இனி அத மாத்த முடியுமா ராசா)

அவர்கள் லக்கேஜ் எடுக்கச்செல்லும்போது அதையே இன்பச்செல்வனிடம் “உன்னோட ஒய்ப் ரொம்ப அமைதி போல. இவங்கள கல்யாணம் பண்ணிக்கத்தான் அவ்வளவு யோசிச்சயா” என்று திட்டி

“உனக்கு கரெக்ட் மேட்சிங்கா இருக்காங்க யூ ஆர் மேட் பார் இச் அதர்” என்றான்.

அவனோ மனதுக்குள் ‘ஆமாடா ரொம்பபபப அமைதி’ என்று நினைத்துக்கொண்டவன் வெளியிலோ புன்னகைத்து வைத்தான்.

கிஷோரும் இன்பச்செல்வனும் போய் செக்கிங் செய்து பெட்டிகளை எடுத்துவந்து காரில் வைத்து இன்பச்செல்வனின் வீடு நோக்கிச் சென்றனர்.

திருநாவுக்கரசு கிஷோரிடம் “குட்டிப் பையன் எப்படி இருக்கான்?”என அவன் குழந்தையை பற்றி விசாரிக்க

“குட் டாட்” என்று சொல்ல

செல்வி அவனிடம் “உங்களுக்கு குழந்தை இருக்காண்ணா? குழந்தை பேரு என்ன?” என்று ஆர்வமாக பேச

“ஆமா சிஸ்டர் பையன் பிறந்து இரண்டு மாசம் தான் ஆகுது பேரு யாதவ் கிருஷ்ணா” எனவும் அப்படியே அவனோடு பேச ஆரம்பித்தாள்.

அவர்கள் அனைவரும் முதலில் பேசிக்கொண்டு வந்தாலும் கடைசியில் வீடு வரும் வரை செல்வி நிறுத்தவேயில்லை.

அவன் ஹிஸ்டரி ஜாக்கிரபி என அனைத்தையும் பேசியே வாங்கி விட்டாள்.

அவர்களை அப்பார்ட்மென்ட்டிலவிட்டுவிட்டு அப்படியே கிஷோர் சென்று விட லிப்ட் மூலம் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
அவர்கள் வீடு பன்னிரெண்டாவது தளத்தில் உள்ள மூன்று படுக்கையறை கொண்ட பெரிய பிளாட்.
திருநாவுக்கரசு தான் “வலது காலை எடுத்து வைச்சு உள்ள வாம்மா. இனிமே இதுதான் உன்னோட வீடு” என்று அன்போடு வரவேற்றார்.

பின் அந்த வீட்டின் சாவியை அவள் கையில் ஒப்படைத்து விட்டு இன்பச்செல்வனிடம் “உன்னோட ரூம்க்கு மருமகள கூட்டிட்டு போ” என்று சொன்னவர் ஓய்வெடுக்க அவர் அறைக்குச்சென்றுவிட்டார்.

அவளை அழைத்துக்கொண்டு தனதறைக்குச் சென்றவன் முதலில் அவள் வீட்டுக்கு அழைத்து பேசிவிட்டு செல்வியிடம் போனை கொடுத்து பேசச் சொல்லிவிட்டு அவளுடைய பெட்டியை கபோர்டில் ஒருபக்கம் வைத்தவன்; அங்கிருந்த மற்றொரு கபோர்டை திறந்து துண்டை எடுத்துக்கொண்டு குளியலறை சென்று ப்ரஷ்ஷாகி வரச்சென்றான்.

அவள் போனை வாங்கி “அலோhhh” என கத்த (செல்வி நீ போனு இல்லமா நேரா பேசுனாவே கேட்கும் போல)

அந்தப்பக்கமும் அதேபோல் “ஏத்தா செல்வி, எப்படி இருக்க?” என அவள் ஐயா நலம் விசாரிக்க

“ம் எனக்கு என்னய்யா நான் சுகமா இருக்கேன். நீங்க அப்பத்தா, அம்மா, அக்கா, மாமா குழந்தைக எல்லாம் எப்படி இருக்கீங்க ஐயா?” என பேச ஆரம்பித்தவள் அவள் வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசிவிட்டே போனை வைத்தாள்.

அவள் போன் பேசி முடித்துவிட்டு அந்த அறையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அறை முழுவதும் வெள்ளை மற்றும் தங்கநிறத்தில் இருக்க அங்கிருந்த பொருட்களும் ரசனையோடு அழகாக இருந்தது. அப்படியே சினிமாவில் வரும் ஹீரோவின் அறை போல் இருக்கும் அவர்களது அறையை சுற்றிசுற்றி வந்து பார்த்தாள்.

முதலில் நுழைந்தவுடன் சின்ன வரவேற்பறை, அடுத்து பெரிய படுக்கையறையும் அதுனுள்ளே அட்டாச்டு பாத்ரூம் மற்றும் சிறிய பால்கனியும் இருந்தது. அந்த பால்கனியில் கூடை மூங்கில் ஊஞ்சல் மற்றும் சில தொட்டிச் செடிகள் என அழகாக இருந்தது.
அந்த பால்கனி முழுதும் கண்ணாடியால் சூழப்பட்டிருந்தது.

பின் அசதியில் அங்கிருந்த படுக்கையில் படுத்திருந்தவள் அப்படியே உறங்கியிருந்தாள்;
அவன் வெளியே வந்ததும் அவளைத் தேட அவளோ நன்றாக உறங்கிக்கொண்டிருக்கவும் அவளுக்கு இடையூறு இல்லாமல் அருகில் படுத்த அவனும் உறங்கிப் போனான்.

மதியம் போல் தான் முழிப்பு தட்டி எழுந்தவன் அவளைப்பார்க்க அவளோ ஜெட்லாக்கால் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள்.

அறைக்கதவை சாற்றிவிட்டு வெளியே வந்தவன் போன் மூலம் சில உணவுப்பொருட்களை ஆர்டர் செய்து விட்டு காத்திருக்க அவன் அப்பாவும் அப்போது தான் எழுந்து வந்தார்.

“என்ன அப்பா அதுக்குள்ள எழுந்திட்டிங்க இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்ல” என

“இல்ல செல்வா இவ்வளவு நேரம் தூங்குனத ஒரு மாதிரி இருக்கு. அதான் எழுந்திரிச்சுட்டேன். ஆமா செல்வி தூங்குதா?”

“ஆமாப்பா. நான் ஃபுட் ஆர்டர் பண்ணியிருக்கேன்ப்பா. வந்ததும் சாப்பிட்டுட்டு நீங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்கப்பா”

“ம் சரி செல்வா”

உணவு வரவும் சாப்பிட்டுவிட்டு திருநாவுக்கரசு அவர் அறைக்குச் சென்று விட இன்பச்செல்வன் வீட்டில் அவ்வளவாக தூசி படியாவிட்டாலும் நன்றாக சுத்தம் செய்தவன் பின் தன் மடிக்கணினியில் வேலை செய்ய ஆரம்பித்தான்.

இரவு பதினொருமணி போல் தான் முழிப்புதட்டி செல்வி எழ அப்போது படுக்க தயாராகிகொண்டிருந்த இன்பச்செல்வனை பார்த்து “மணி எத்தனை மாமா?”

“நைட் பதினொருமணி” எனவும்

“என்னது பதினொண்ணா? ஐய்யோ இவ்வளவு நேரமா நான் தூங்கிட்டேன் மாமா. நீங்க என்ன எழுப்ப வேண்டியதுதானே மாமா” என்று அவனிடம் கேட்க

“ஜெட்லாக்கால அப்படித்தான் தூக்கம் வரும். இப்ப சரியாயிருக்கும். நீ முகம் கழுவிவிட்டுவந்து சாப்பிடு” என அழைக்க

“சரிங்க மாமா. ஆனா என்னோட பெட்டி”என்று இழுக்கவும்

கபோர்டிலிருந்த அவள் பெட்டியை எடுத்துக்கொடுத்தவன் “சீக்கிரம் குளிச்சுட்டு வா தாமரை. காலையிலேருந்து சாப்பிடமா இருக்கது பசிக்கும்” எனவும்

அவளும் சரியென்று பெட்டியை திறந்து தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்மு குளியறைக்குச் சென்றவள் அங்கு நிறைய குழாய்கள் இருக்கவும் எல்லா பைப்பையும் திருகிப்பார்த்தவள் தண்ணீர் வரவில்லை என்பதால் போனவுடனே திரும்பி வர

“என்ன தாமரை ஏன் வந்துட்ட”

“மாமா எந்த பைப்புலேயும் தண்ணி வரல மாமா”

“இல்லயே இங்க தண்ணி எப்பவும் வருமோ” என்றவன் அவளை அழைத்துக்கொண்டுச் சென்றான்.

அவளுக்கு குழாயை லேசாக அழுத்தினால் தண்ணீர் வரும் என்பது தெரியாததால் எல்லா குழாயின் வேகம் மற்றும் குளிர் மற்றும் சுடுதண்ணீர் புறம் என அனைத்தையும் திருப்பிப் மாற்றி வைத்திருந்தாள்.

அவன் பைப்பை அழுத்தவும் ஷவரிலிருந்து தண்ணீர் மிக வேகமாக அவர்கள் மீது மழைபோல் கொட்ட அவர்கள் இருவரும் தொப்பலாக நனைந்தனர்.

அவளை பார்த்து முறைத்தவன் “ம் என்ன பண்ணி வைச்சிருக்க. உன்னைய குளிச்சு வரச்சொன்னா என்னையும் சேர்த்து குளிக்க வச்சிட்ட” என்று கடிந்தவன் எப்படியோ எல்லா குழாய்களையும் திருகி நிறுத்திவிட்டான்.

அவளுக்கு குளியலறையில் உள்ளவற்றை எப்படி யூஸ் செய்வது என்று சொல்லிக்கொடுத்தவன் “நீ குளிச்சுட்டு வா” என்று கூறி விட்டு வெளியேறினான்.

அவள் வந்ததும் இரவு உணவை அவளுக்கு சூடுபடுத்தி வைத்திருக்கவும் அவள் வரவும் பர்கரை சாப்பிட கொடுக்க

அவள் அதை வேடிக்கை பார்த்தாலே ஒழிய மறந்தும் சாப்பிட நினைக்கவில்லை. அவள் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்து “சாப்பிடு தாமரை” என்றான்.

அந்த சீஸ் பர்கர் பச்சை முட்டைக்கோஸ் மற்றும் தக்காளி போன்றவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு ஒரடி நீளத்திற்கு இருந்தது.

அவளுக்கு அதை எப்படி சாப்பிடுவது என்று சந்தேகம் தோன்ற அதை அப்படியே “எப்படி மாமா இதை சாப்பிடறது?” என பாவமாக கேட்க

அவனுக்கு புரியவில்லை.

“என்ன தாமரை”

“இல்ல மாமா இட்லி, தோசை இப்படி எதுவும் இல்லயா? பழைய சோறு இருந்தாக் கூட போதும்” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க

“இங்க நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கறது கஷ்டம். அப்படி வேணும்னா நம்ம வீட்டுலேயே தான் சமைச்சுக்கனும். இங்க இது மாதிரி தான் கிடைக்கும். சீஸ் பர்கர் நல்லாயிருக்கும் சாப்பிட்டு பார்” எனவும்

அவள் கஷ்டப்பட்டு சாப்பிட முயற்சி செய்ய சீஸ் ஒழுகி அவள் முகமெல்லாம் ஆகி முதன்முதலாக சாப்பிடுவதால் லைட்டாக அவளுக்கு உமட்டவும் அதைப்பார்த்தவன்

“இது வேணாம்னா விடு வேணும்னா பிரெட் ஆம்லெட் சாப்பிடுறியா” எனக்கேட்க

“அப்படின்னா மாமா?”

“ம் ரொட்டியும் முட்டையும் சாப்பிடுறியா?”

“ம் சரி மாமா” என அவள் சொல்லவும்

அந்த பர்கரை அவன் சாப்பிட்டுவிட்டு அவளுக்கு சமைப்பதற்காக சமையலறைக்குச் சென்றான்.
அவன் சமையலறைக்குச் செல்லவும் அவன் பின்னாடியே சென்றவள் அவன் சமைப்பதற்கு ஆயுத்தமாவதை பார்த்து

“நான் சமைக்குறேன் மாமா நீங்க வெளியே இருங்க” எனச் சொல்லவும்

“மொத உனக்கு இங்க இருக்குற அடுப்ப பத்த வைக்கத் தெரியுமா?” என

“ஆமால்ல சரி நீங்க எப்படி செய்யனும்னு சொன்னா நான் செய்றேன் மாமா”

“இல்ல இப்ப நான் சமைக்குறேன் நாளைக்கு உனக்கு சொல்லித் தரேன் அப்புறம் நீயே சமை” எனவும்

“அப்ப நீங்களா மாமா சமைக்கப் போறிங்க” என ஆச்சர்யமாக கேட்க

“ஏன் நான் சமைக்கக் கூடாதா? நான் நல்லாவே சமைப்பேன் தைரியமா நீ சாப்பிடலாம்” என்றவன் அவளுக்கு செய்துக்கொடுத்து சாப்பிடவுடன் அவர்களது அறைக்குச்சென்றனர்.

அவர்களது அறைக்கு வந்து இன்பச்செல்வன் படுத்துறங்க செல்விக்குதான் நன்றாக உறங்கியதால் மறுபடியும் உறக்கம் வரவில்லை.
எனவே அவள் புரண்டு புரண்டு படுக்க அதில் தூங்க இயலாமல் எழுந்துமர்ந்தவன் “தூக்கம் வரலையா தாமரை?”

“ஆமா மாமா”

“சரி அப்ப நீ படம் பாக்குறயா?”

“சரி மாமா” என அவள் சொல்லவும்
அவளுக்கு ஒரு ஆங்கில படத்தை லேப்டாப்பில் போட்டு விட்டான்.

படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது “மாமாhhh” என அவனைச் சுரண்ட

“என்ன தாமரை?”

“ஒரு எம்.ஜி.ஆர் படம் இல்ல சிவாஜி படம் போடுங்க மாமா” எனவும்

“அவங்க எல்லாம் யாருடி?”

“அவங்க தான் மாமா நம்ம ஊரு சிவாஜி ம் அப்பொறம் நம்ம வாத்தியார் படமெல்லாம் பாத்திருக்கிங்களா, ரொம்ப சூப்பாயிருக்கும்” என அவள் சொல்லிக்கொண்டே போகவும்,

அவன் லேப்டாப்பில் நெட்டை ஆன் செய்து சிவாஜி மூவி என தேட

சூப்பர் ஸ்டார் நடித்த சிவாஜி படம் வரவும் அதை ஓடவிட்டான்.

அதைப்பார்த்தவள் “என்ன மாமா நான் சிவாஜி படம் கேட்டா நீங்க யாரு படமோ போடுறிங்க” எனக் கேட்க

“இது சிவாஜி படம்தான்டி”

“இபோங்க மாமா நீங்க பொய்யு சொல்றிக. இது அவரு படம் இல்ல”

அவள் சொல்வதில் குழப்பம் அடைந்தவன் மறுபடியும் சிவாஜி படம் என்று டைப் செய்து ஆன்லைனில் தேட அதே படம் தான் வந்தது.
அவளிடம் அதை காண்பிக்க “சரி எம்.ஜி.ஆர் படமாவது போடுங்க மாமா” எனவும்

அவன் தேடிய சொற்களை அழிக்கும்போது வேறும் சிவாஜி என்று மட்டிருக்கும்போது சிவாஜி கணேசன் போட்டோ வர அதைப் பார்த்து குதூகலித்தவள் “இவரு தான் மாமா சிவாஜி” என்று சொல்லவும்
அவரைப் பற்றிய வீடியோவை பார்க்க ஆரம்பித்தான்.
அதில் அவருடைய பிறப்பு முதல் இறப்பு வலை போட்டோக்கள் மற்றும் நினைவுகளை பற்றிச் சொல்லியிருக்க அதைக்கேட்டுக்கொண்டிருந்தவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.

இன்பச்செல்வனோ பதறிப்போய் “என்னாச்சுமா? எதுக்கு அழற? ஏன் இப்படி அழுகுற? ப்ளிஸ் அழாத தாமரை? அட்லீஸ்ட் என்னனு சொல்லிட்டாவது அழு?” என பலவாறாக கெஞ்ச அதற்கு அவள் கூறியதைக் கேட்டு அவனுக்கு சிரிப்பதா? அழுவதா? என்று அவனுக்கு தெரியவில்லை.
அவள் தேம்பிதேம்பி அழுதுக்கொண்டே “மாமாமா” என

“என்னம்மா?”

“ம்ம் சிவாஜி செத்துட்டாராம்” என்று சொன்னாலே பார்க்கலாம் அவனுக்கு சுத்தமாக சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவள் அழுதுக்கொண்டே இருக்கவும் “ஆமா செத்துட்டாரு அதுக்கு எதுக்கு இப்ப நீ அழற?” என கேட்கவும்

“இல்ல மாமா போன வாரம் தான் முதல் மரியாதை படத்துல அவர பாத்தேன். அதுக்குள்ள இவ்ளோ சின்ன வயசுல போய்ட்டாரே” என மூக்கை சீந்தி அழ

அவர் இறந்து பல வருடங்கள் கடந்த நிலையில் இவள் இப்படி அழுது புலம்புவதை அவனால் பார்க்க(சகிக்க) முடியவில்லை.

“தாமரை தாமரை” என கூப்பிட்டு அவன் எவ்வளவு ஆறுதல் சொல்லியும் அவள் அழுதுக்கொண்டே இருக்க பிறகு அப்படி இப்படி என்று எப்படியோ சமாதானப்படுத்தினான்.

Advertisement