Advertisement

மலரே மலர்வாய் 6

அவளை பார்த்துக் கொண்டே படுத்திருந்தவன் விடியற்காலையில் தான் உறங்க ஆரம்பித்தான்.
நடுஜாமத்திற்கு மேல் தான் அவர்கள் பேசிமுடித்து உறங்கத் தொடங்கியதால் செல்வியும் காலையில் லேட்டாக எழுந்திரித்தாள்.

முழிப்பு தட்டி எழுந்தவளுக்கு படுக்கையை விட்டு எழ முயற்சி செய்ய அவளால் அசைய கூட முடியாமல் தன் மேல் எதுவோ இருப்பது போல் தோன்ற கண்களை தேய்த்துவிட்டு நன்றாக உத்துப்பார்த்தாள்.

இன்பச்செல்வன் தான் அவள் தூக்கத்தில் புரண்டு தன் மேல் கைகால் போட்டு உறங்கவும் அவளை சுற்றி கைகளை போட்டு வளைத்து பிடித்து தன் கால்களால் அவள் கால்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டும் உறங்கிக்கொண்டிருந்தான்.

அவனிடமிருந்து விடுபட அவள் முயற்சி செய்ய, அவனும் விழித்து எழுந்தான்.

அவன் எழவும் செல்வியும் எழுந்து கண்ணாடி முன் போய் நின்றவள் தன் சேலையை நன்றாக கசக்கிவிட்டு தலையில் சூடியிருந்த பூவை எடுத்து பிய்த்து அங்கங்கே போட இன்பச்செல்வனுக்கு அவள் என்ன செய்கிறாள் என்று புரிந்துவிட்டது.

அடுத்து அவள் தன் பொட்டை கலைப்பதற்குள், மெதுவாக அவளருகே சென்றவன் அவள் காதோரோம் குனிந்து “அடுத்து பொட்ட கலைச்சு என்மேல பூசனும். என்ன சரியா?” சின்னச்சிரிப்போடுக் கேட்க

அவள் உற்சாகமாக “கரெக்ட்ங்க மாமா. நீங்களும் சினிமால மொத ராத்திரிக்கு அப்புறம் நடக்குறத பாத்துறுக்கிங்களா?” என

அவனோ “ம் கலைஞ்சுருக்குது சரி. ஆனா இப்படி கையால கலைக்கக்கூடாது” என்றவன்

அவளை இழுத்தணைத்து தன் இதழ்களால் நெற்றியில் முத்தமிட்டு அதை கலைத்தவன் “இப்படித்தான் கலைக்கனும்” என

அவளும் சரியென்பது போல் தலையாட்டி அவ்வறையைவிட்டு வெளியேற முயல
அவள் பார்க்கத்தான் பெரிய பெண்ணாக தெரிவதாக தோன்றியவனுக்கு அவளது பேச்சில் ஒரு குழந்தைத்தனம் தெரிந்தது.
அதைத் புரிந்துக்கொண்டவன் அவளது வயதை கேட்க வேண்டும் என்று அவளை கூப்பிட்டான்.

“என்ன மாமா? எதுக்கு கூப்பிடிங்க?”

அவளிடம் “உன்னோட வயசு என்ன?” எனக் கேட்க

“பத்தொம்பது மாமா”

“வாட்ட்ட்ட்?”

“என்னாச்சு மாமா?”

“உண்மையிலே உனக்கு பத்தொன்பது வயசு தானா?”

“சத்தியமா பத்தொம்பதுதான்” எனவும்

அவனுக்கு தான் நேற்றிலிருந்து அவளை பற்றி தெரிந்த விஷயங்களில் அதிர்ச்சியின் அளவு சற்று கூடியது.

அவள் தன்னைவிட பத்துவயது சிறியவள் என்று தெரிந்தவனுக்கு ஒன்றும் புரிவில்லை. அவளிடம் தான் நினைப்பதை சொன்னாலும் புரிந்துக்கொள்ள இயலாது என்று நினைத்தவன் அவள் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்து

“ஒன்னுமில்லை சும்மா தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன்” என்று கூறி அவளை போகச் சொன்னான்.

அவள் வெளியேறி பின்கட்டுக்குச் சொல்ல அங்கிருந்த அவள் அக்கா செண்பகம் அவளது கோலத்தை பார்த்து திருப்தியுடன் “எல்லாம் சரியா நடந்துச்சா?” என்று செல்வியிடம் கேட்க

அவளோ முத்தங்கொடுத்தநினைவில் வெட்கப்பட்டுக்கொண்டே “ம்ம்” என்று சொல்லவும்

“போய் தலைக்கு ஊத்திட்டு வா செல்வி” என்று பணிக்க
அவளும் குளித்து முடித்து வந்தாள்.

அவள் வரவும் செண்பகம் அவளை அழைத்துக்கொண்டு பூஜையறைக்குச் சென்று விளக்கேற்றி சாமி கும்பிடச்செய்தவள் பின் அவளிடம் “தம்பிக்கு சுடுதண்ணி போட்டு வைச்சுருக்கேன். நீ கொழுந்தனார கூப்பிட்டு வந்து குளிக்க உதவி பண்ணு” என

செல்வியும் அவனை கூப்பிட தனதறைக்குச் செல்ல அங்கே அவனோ ‘தனியாக வெளியில எப்படி போகுறது’ என்ற கவலையில் அமர்ந்திருந்தான்.
செல்வி வந்து இன்பச்செல்வனை அழைக்கவும் அவனும் அவளோடு பின்னாடிச்சென்றான்.

அவன் தனக்கு குளிக்கத் தேவையான அனைத்தையும் கையோடு எடுத்து வந்திருந்தால் பல் துலக்கி, குளித்து வர அவனை மறுபடியும் அழைத்துக்கொண்டு உள்ளறைக்குச் செல்ல அவன் வேறு உடை மாற்றி தயாராகினான்.

இவர்களுக்காக அனைவரும் காலையில் சாப்பிடாமல் காத்திருக்க அவர்கள் இருவரும் வந்ததும்
பஞ்சு பாட்டி “வாய்யா சாப்பிட” என்றழைக்க அவன் அமரவும் செல்வியையும் உட்காரச்சொல்லி அமுதாவும் செண்பகமும் பரிமாற மற்றவர்கள் சாப்பிட்டனர்.

சாப்பிட்டதும் செல்வியிடம் “வெளியில போய்ட்டு வரலாமா?” என்றுக் கேட்க

அவள் சரியெனவும் அவள் அக்கா குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இருவரும் வெளியே சென்றனர்.

அவன் காரில் அவர்களை திண்டுக்கலுக்கு அழைத்து வர அவள் பே என அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தாள்.

முதலில் திண்டுக்கலில் உள்ள பழமைவாய்நத அபிராமி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றவன் பின் அவர்களை துணிக்கடைக்கு கூட்டிச் சென்றான்.

அவள் வீட்டினர் அனைவருக்கும் துணிஎடுத்துவிட்டு அங்கிருந்து நேராக ஆன்லைன் முலமாக புக் செய்த ஹோட்டல் திண்டுக்கல் தலப்பாகட்டிக்கு கூட்டிச்சென்றான்.

அது மாதிரி ஹோட்டல்களை முன்பின் பார்த்திராத குழந்தைகள் செல்வியிடம் ஒட்டிக்கொள்ள அவளோ அவனை ஒட்டியே நடந்தாள். அவள் பயத்தை புரிந்தாற்போன்று மல்லிகா பாப்பாவைத்தூக்கிக் கொண்டு அவள் தோள் மேல் கையை போட்டு ஏசி ஹாலுல் தனி கேபின் போன்றதற்கு அழைத்துச்சென்றவன்,

“என்ன சாப்பிடலாம் தாமரை?” என்றுக் கேட்க

“ம் சாப்பாடு” என

“அதுதான் சாப்பாட்டுல்ல என்ன சாப்பிடலாம்?”

“சாப்பாட்டுல்ல என்ன மாமா இருக்கு என்னனாலும் சாப்பிடலாம்” என

“சாப்பாட்டுல நிறைய வகை இருக்கு. ம் எப்படின்னா இப்ப பிரியாணின்னு எடுத்துக்கிட்டாவே சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, இறால் பிரியாணி, நண்ட பிரியாணினு நிறைய வகை இருக்கு. இதுல என்ன சாப்பிடலாம்?”

அவள் சிக்கன் மற்றும் மட்டன் போட்டு பிரியாணி அவர்கள் வீட்டில் செய்தது தான் சாப்பிடிருக்காள். இப்போது பிரியாணிக்காகவே இப்படி ஒரு பெரிய ஹோட்டல் இருப்பதை பார்த்து வியந்தவள் அவனுக்கு பிடித்ததையே சொல்லச் சொன்னாள்.

அவன் ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்க சிறிது நேரத்தில் உணவு வரவும் அதைப் பார்த்தவள் ஆவென வாயை பிளந்தாள்.

அவன் வகைவகையாக அவ்வளவு ஆர்டர் சொல்லியிருந்தான்.

அவள் சாப்பிடாமல் பார்த்துக் கொண்டிருக்கவும் சிரிப்போடு “சாப்பிடு” என்று அவளைச் சொன்னவன் குழந்தைகளுக்கு தனித்தனியே அழகாக வைத்துக் கொடுத்தான்.

அவர்கள் ஆவலாக உண்பதை பார்த்து அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. சாப்பிட்டு விட்டு திண்டுக்கலிலே பிரபலமான டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு அழைத்துச் சென்றவன் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் என வாங்கிக் கொண்டு எதிரிலிருந்த பெரிய நகைக்கடைக்கு கூட்டிச் சென்றான்.

அவள் நகைகடைக்கு கூட்டிச் செல்லவும் “என்ன மாமா? ஏன் இங்க வந்திருக்கோம்?” என பதட்டப்பட

“நகைகடைக்கு எதுக்கு வருவாங்க, நகை வாங்கத் தான்” என்றவன்

செல்விக்கு மெலிதாக அதே சமயம் அழகாக வைரத்தில் தோடு மற்றும் சின்னதாக பிளாட்டினத்தில் செயின் மற்றும் வளையல்களை வாங்கியவன், மல்லிகா பாப்பாவுக்கும் குட்டீஸ் கலெக்ஷனில் வைரத்தில் தோடு மற்றும் தங்க நகைகள் வாங்கினான்.

செல்வி “இதெல்லாம் எதுக்கு?” என்ற மறுப்பு தெரிவிக்க அவனோ அதைக் கண்டுகொள்ளாமல் வீட்டில் அனைவருக்கும் சின்ன கிப்ட்டாக ஒவ்வொன்று வாங்கினான்.

பின் அவர்களோடு வீட்டுக்கு வர அவள் வரும் வழியெல்லாம் பேசாமல் அமைதியாக வந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் அனைவருக்கும் வாங்கிய துணிகளை கொடுக்க அதை வாங்காமல் அவர்கள் மறுக்க அவன் கட்டாயப்படுத்தவும் வாங்கிக் கொண்டார்கள்.

ஆனால் அங்கிருந்த மாணிக்கத்தின் அக்காக்களோ பொறாமையில் செல்வியுடைய நகைகளை பார்த்து “என்ன தம்பி எல்லாம் நல்லா தான் வாங்கியிருக்கிக. ஆனா பாருங்க செல்விக்கு போய் ஏன் வெள்ளில நகை வாங்கினிக. தங்கத்துல ஒரு தோடாவது வாங்கியிருக்கலாம்” என கவலைப் படுவது போல் சொல்லி

“எல்லாம் எந்தம்பிய சொல்லனும். அவென் செல்விக்கு எவ்வளவு நகை சேர்த்து வைச்சிருக்கான் தெரியுமா? இவரு போயும் போயும் வெள்ளில நம்ம புள்ளைக்கு வாங்கித் தருவாராம்” என்று கிண்டலடிக்க

அதைப்புரிந்துக்கொண்டவன் “என்னோட மனைவிக்கு நான் என்ன வேணும்னாலும் வாங்கித் தருவேன். அது என்னோட இஷ்டம். நீங்க யாரு இதப்பத்தி கேக்குறதக்கு. ம் என்ன சொன்னிங்க இது வெள்ளியாம். உங்களுக்கு யாரு சொன்னா இது வெள்ளினு? டைமண்ட் அன்ட் பிளாட்டின நகைகள வெள்ளினு சொல்லுறது நீங்க மட்டும் தான்”
“ம் பிளாட்டினம் வைரம்னா என்னன்னு தெரியுமா?” என்று அவர்கள் முகத்தைப் பார்க்க

அவர்கள் குழப்ப முகத்திலிருந்தே “இதேல்லாம் தங்கம் வைரத்தோட ரொம்ப விலை அதிகம்” என்றவன் கோபமாக உள்ளே சென்று விட்டான்.

தன் மாப்பிள்ளையை கோபமாக சென்றதில் மாணிக்கம் கோபமாக தன் அக்காக்களிடம் “எங்க மாப்பிள்ளய பத்தி எனக்கு தெரியும் நீங்க யாரு அவர கொரசொல்லுறதுககு. நம்ம உறவு நல்ல முறையில இருக்கனும்னா பேசாம இருங்க. எதுஞ்சொல்லமா இருக்கறதுனா இங்க இருங்க வாங்க போங்க, இல்ல நீங்க இப்படித்தான் பேசுவீங்கனா வராதிக” என்று சொல்லவும் அவர்களும் தன் தம்பியிடமிருந்து தான் எப்பொழுதும் அவர்களுக்கு பணஉதவி கிடைக்கும் என்பதால் வாயை இறுக மூடிக்கொண்டனர்.

அனைவரும் செல்லவும் இரவு அவர்கள் வீட்டினர் மட்டுமே இருக்க

மாணிக்கம் இன்பச்செல்வனிடம் “அவங்க பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்கறேன் மன்னிச்சுருங்க மாப்பிள” என

“ஐய்யோ அதெல்லாம் ஒன்னும் விஷயமில்ல மாமா இதுக்கு நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்குறிங்க” என்று சொன்னவன் அவர்களுக்கு வாங்கிய நகைகளையும் கொடுக்க, அதை வாங்க மறுக்கவும்

“என்ன மாமா உங்க மகன் கொடுத்த இப்படித்;தான் வாங்க மாட்டிங்களா?” என்று கேள்விக் கேட்கவும் வாங்கிக்கொண்டார்கள்.

அதே மாதிரி மல்லிகா பாப்பாவுக்கு வாங்கிய நகைகளை செண்பகத்திடம் கொடுக்கவும் “இதெல்லாம் எதுக்கு தம்பி?” என தங்கப்பாண்டியும் செண்பகமும் மறுக்க

“என்ன அண்ணா செல்விக்கு பொண்ணுன்னா எனக்கும் பொண்ணுதான். என்னோட பொண்ணுக்கு வாங்கித் தரக்கூடாதா” எனவும் அவர்களும் வாங்கிக்கொண்டார்கள்.

அவர்களுக்கு தன் பெண் நல்ல மாப்பிள்ளை மற்றும் பெரிய இடத்தில் வாக்கப்பட்டிருக்கிறாள் என்று சந்தோஷமாக இருந்தது.

இரவு உணவருந்திவிட்டு உள்ளே வரவும், செல்வி இவனை பார்த்துக்கொண்டே படுத்திருப்பதை பார்த்து “என்ன?” என பார்வையால் கேட்க

அவள் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்து அந்தப்பக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

அவன் செலவு செய்ததை பார்த்து இவளுக்குத் தான் ஒருமாதிரியாக இருந்தது.

‘விட்டா மொத்த சொத்தையும் ஒருநாளுல செலவு பண்ணி அழிச்சுருவாங்க போல’ என்று எண்ணியவள் அவன் புறம் திரும்பி மனதை மறையாமல் சொல்ல அவனுக்கு சிரிப்பாக இருந்தது.

அங்க அமெரிக்காவில் அவனுடைய சம்பளம் எவ்வளவு என்று தெரிந்திருந்தால் இதெல்லாம் அவனுக்கு ஒரு செலவே அல்ல என்று புரிந்திருக்கும். ஆனால் அவளால் அவனுடைய ஒரு மாத சம்பளம் இந்தியமதிப்பில் எவ்வளவு என்றே புரிந்துக்கொள்ளவே இயலாது. அப்படியென்றால் பாவம் அவளும் என்ன செய்வாள்.

“ஏன் சிரிக்கிறிங்க மாமா?” என அவள் அப்பாவியாக கேட்க

“இப்ப உனக்கு என்ன பிரச்சனை நான் நிறைய செலவு பண்றதா இல்ல உனக்கு செலவு பண்ணுனதா?” என வினவ

அவள் “ரெண்டுமே”

“ஏன்?”

“இல்ல மாமா என்னால உங்களுக்கு ரொம்ப செலவுல?” வருத்தப்பட

“என்னோட குடும்பத்துக்கு மனைவிக்கு நான் செய்றேன், இதுல நீ ஏன் இவ்வளவு கவலைப்படுற. சொல்லப்போனா நீ தான் எனக்கு அது வேணும் இது வேணும்னு கேட்கனும்”

“ஆத்தாடி நான் எதாச்சும் கேட்டேன் உங்கள கஷ்டப்படுத்துனேனு ஐயாவுக்கு தெரிஞ்சுச்சு அவ்வளவு தான். கல்யாணமான அடுத்த நாளே செலவு வைக்கிறியானு அப்பத்தா என்ன திட்டியே தீர்த்துரும்”

“இங்க பாரு யாரு எதுவும் சொல்வாங்கனு நீ நினைக்கக் கூடாது. நீ யாருகிட்ட கேட்கற, உன் புருஷன்கிட்ட தான. அதனால உனக்கு இனி எதுவேணும்னாலும் என்கிட்ட மட்டும் தான் கேட்கனும்” என அவளும் சரியென்று ஒப்புக்கொண்டாள்.

அடுத்தடுத்த நாட்கள் அவர்கள் மறுவீடு செல்வது, விருந்துக்குச்செல்வது என நாட்கள் சென்றது. அதற்குள் செல்விக்கு பாஸ்போர்ட் அவன் அப்பா ஏன்கனவே விண்ணப்பதிருந்ததால், அவர்கள் திருமண சான்றிதழ் வைத்து விசாவுக்கு அப்ளை செய்திருந்தான்.

இன்பச்செல்வன் இந்தியாவில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் தான் படித்தது முதல் இப்போது வேலை பார்ப்பது வரை என இருபது வருடங்களுக்கு மேல் அங்கேயே இருப்பதால் அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தான்.
எனவே செல்விக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்றவனை திருமணம் செய்ததால் ஈசியாக விசா கிடைக்க இதோ அவர்கள் மூவரும் அமெரிக்கா செல்லத் தயாராகி கொண்டிருந்தனர்.

செல்விக்கு அவள் அம்மாவும் அக்காவும் ஏகப்பட்ட அறிவுரைகள் வழங்கிக்கொண்டிருக்க, அவள் தயாராகி வெளியே வரவும் அவர்கள் இருவரும் அவள் அப்பத்தா பஞ்சவர்ணத்திடம் காலில் விழுந்து வணங்க “நல்லாயிருங்க சாமி” என்று தன் சுருக்கு பையிலிருந்து பணத்தை அவர்கள் கையில் கொடுத்து வாழ்த்தினார்.

அவளுக்கு அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்குள் கண்களில் கண்ணீர் கரகரவென வழிய அவள் அக்கா செண்பகமும் சேர்ந்து அழ

அவர்கள் அம்மா தான் “என்னடி இது கிளம்புற நேரத்துல அழுதுகிட்டு இருக்க சந்தோஷமா சிரிச்ச முகமா கிளம்பு” என அதட்டி காருக்கு கூட்டிச்சென்றார்.

அவர்களை வழியனுப்ப மதுரை விமானநிலையம் வரை செல்வியின் குடும்பத்தார்களும் உடன் வந்தனர்.

விமான நிலையத்தில் தன் பொருள் எதையோ குழந்தை போல் அவள் வழித்துக்கொண்டு நிற்கவும் அவள் அருகில் சென்ற அவள் அப்பா மாணிக்கம் “செல்வி” என அழைக்க
அவர் புறம் அவள் திரும்பவும்,

அவள் தலையை வருடிக்கொண்டே “நீங்க எதும் எங்களபத்தி கவலைப்படாதம்மா அததான் எங்க பக்கத்துல தான செண்பகம் இருக்கு. நீ மாப்பிளயோட சந்தோஷமா வாழனும். இங்க பண்ணுற மாதிரி அங்க சேட்டையெல்லாம் பண்ணக்கூடாது. உனக்கு எது வேணும்னாலும் என்னனாலும் ஐயாவுக்கு போன் போடு. ஐயா எப்பவும் உங்க நினைப்புலத் தான் இருப்பேன்” என்று சொல்லி அவள் கையில் கற்றையாக பணத்தை திணிக்க

அவள் உணர்ச்சி மிகுதியில் அவரைக் கட்டியணைத்து அழுக

“ச்சுசு இப்பத்தான சொன்னேன். நீ இனிமேல் சின்ன புள்ளயில்ல, நீதான் மாப்பிளயும் உன்ற மாமனாரையும் நல்லா பாத்துக்கோனும். இப்ப நீயே இப்படி அழுகுற. முத கண்ணைத் துடைச்சிட்டு உன்ற அம்மாகிட்டயும் நாலு வார்த்தை பேசு” என

“ம்மா” என்ற கூவலுடன் அவரை அணைத்து தேற்றியவள், அவள் அக்காவையும் தேற்ற

அவள் அக்கா கணவன் வந்து செல்வியிடம் “பாத்து சூதனாமா நடந்துக்க செல்வி. உனக்கு என்ன வேணும்னாலும் எனக்கு போன போடு” என்றவர்

இன்பச்செல்வனிடமும் “பார்த்துக்கோங்க தம்பி. ஊருக்கு போனனே போன் போடுங்க” என விடைகொடுக்க

அவள் அக்கா பையன் முத்துப்பாண்டியோ அவள் சேலையை பிடித்துக்கொண்டு “நீ எங்கயும் போகாத சித்தி” என்று அழது அடம்பிடிக்க செல்விக்கோ அழுகை மேலும்மேலும் பொங்கியது.

கடைசியில் இன்பச்செல்வன் தான் “உங்க சித்தி எங்கயும் போகல. உனக்கு சாக்லெட் பொம்மை இதெல்லாம் வாங்கத்தான் போறா. நீ அழுகாம இருந்தா தான் வாங்கித் தருவா” என சமாதானம் செய்தான்.

மாணிக்கம் தன் மருமகன் கையை பிடித்துக்கொண்டு “மாப்பிள செல்வி குழந்தை மாதிரி நடந்துக்கும். சேட்டை பண்ணுனா ஒரு அதட்டு அதட்டுனாவே அமைதியாயிரும். எதாவது தெரியமா தப்பு பண்ணுனா நீங்க திட்டுங்க ஆனா அடிச்சுராதிங்க. ஒரு தடவ நாம சொன்னாலே புரிஞ்சுக்கும் திரும்ப அதுமாதிரி தப்பா செய்யாது. நீங்க தான் செல்விய நல்லா பாத்துக்கனும்” என வேண்ட

“நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க நான் பார்த்துக்கிறேன் மாமா” என்று அவரிடம் உறுதியளித்தான்.

அமுதா திருநாவுக்கரசிடம் “அண்ணா கொஞ்சம் பாத்துக்கோங்க அண்ணா இது வரைக்கும் செல்விய வெளியில தனியா கூட அனுப்புனதில்ல” என
“நீ கவலைப்படாத தங்கச்சி. செல்வி இனி எங்க பொறுப்பு”
திருநாவுக்கரசிடமும் மாணிக்கம் தன் மாப்பிள்ளையிடம் பேசியதையே பேச “செல்வி இனி எங்க வீட்டு பொண்ணு. அவளப் பத்தி இனிமே நீங்க கவலையே படத்தேவையில்லை” என்று அவர் நம்பிக்கையளித்தார்.

விமானத்திற்கான அழைப்பு வரவும்,
அவள் அப்பா, அம்மா, அக்கா, மாமா மற்றும் அக்கா குழந்தைகள் என அனைவரிடம் பிரியா விடைபெற்று செல்வி கண்களில் குளம்கட்ட மூவரும் சென்னைசெல்லும் விமானத்தில் ஏறினார்கள்.

செல்விக்கு அதுதான் முதல் விமானப் பயணம் என்பதால் சிறிது பயத்தோட காணப்பட அவளுக்கு சீட்பெல்ட் போட்டுவிட்டவுடன் இன்பச்செல்வனின் கையை இறுகபற்றிக்கொண்டாள். அவனும் அவள் பயம் உணர்ந்து ஆறுதலாக கையை பிடித்துக்கொண்டான்.
விமானம் மேலெழும்பும் பயத்தில் கண்களை இறுகமூடி அவன் தோள் சாய்ந்தவள் சென்னையில் விமானம் தரையிறங்கிய பிறகே கண்ணைத் திறந்தாள். அனைவரும் விமானத்திலிருந்து வெளியேறுவதைப் பார்த்து “அதுக்குள்ள அமெரிக்கா வந்துட்டோமோ மாமா?” என இன்பச்செல்வனிடம் கேட்க

“இப்ப சென்னைக்குத் தான் வந்துருக்கோம். இன்னும் ரெண்டு பிளைட் மாறித்தான் அங்க போகனும்” என விளக்கம் சொல்ல

அவளும் புரிந்ததுபோல் தலையாட்டிக் கேட்டுக்கொண்டாள்.
அடுத்து அவர்கள் லண்டன் சென்று அங்கிருந்து மற்றொரு விமானம்; முலம் டெக்சாஸ் சென்றனர்.

Advertisement