Advertisement

மீனாட்சி கதிரின் ‘அம்மாhh” என்ற கத்தலில் வேகமாக அறைக்குச் செல்ல அங்கு மயக்கமாக கிடந்த வான்மதியை பார்த்து
அவளை எழுப்ப அவரும் முயற்சி செய்ய அதற்குள் மற்றவர்களும் வந்துவிட

கிரி “டாக்டருக்கு கால் பண்ணிட்டியாடா?”

ம் பண்ணிட்டேன்” என பதில் சொல்ல அப்போது அவளும் மயக்கம் தெளிந்து மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.

டாக்டரும் வேகமாக வந்துவிட, அவளை பரிசோதனை செய்ய ஆரம்பிக்கவும்
கதிர் தன்னால் தான் அவள் மயங்கி விட்டதாக குற்றவுணர்ச்சியில் அமைதியாக வெளியில் வந்து அமர்ந்தான்.

காலையில் இருந்து சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்ததால் ஒருமாதிரி மயக்கமாக இருக்க அவன் முத்தமிடவும் அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள். ஆனால் அது தெரியாமல் அவன் கவலையாக அமர்ந்திருந்தான்.

டாக்டர் பரிசோதித்து விட்டு செல்லவும் மீனாட்சி அவனிடம் வந்து இனிப்பு ஊட்ட ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தவன்

என்னம்மா” என்று கேட்கவும்

நீ அப்பாவாக போற கதிர். நான் பாட்டியாக போறேன்” என்று சந்தோஷமாகச் சொல்ல

அவன் வேகமாக அவளை பார்க்க தங்கள் அறைக்குச் சென்றான்.

அங்கே சோர்வோடு மதி படுத்திருக்க அவளை சென்று அணைத்தவன் அவள் உச்சியில் முத்தமிட்டான்.
அவர்களை பார்த்த மற்றவர்களுக்கும் நிறைவாக இருந்தது.

வான்மதி வீட்டுக்கும் போன் செய்து அந்த நல்ல விஷயத்தைக் கூற அங்கும் சந்தோஷத்திற்கு குறைவில்லாமல் போனது.

மதி உண்டாகி இருந்ததால் அன்று கிளம்பாமல் கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு கூட்டி வருவதாக சொல்ல வான்மதி வீட்டினரும் சம்மதித்திருந்தனர்.

மதிக்கு வாந்தி மயக்கம் இருந்ததால் அவளை அப்படியே பூப்போல் கதிர் பார்த்துக்கொண்டான்.
சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பே வெற்றி கல்யாணத்திற்கு அனைவரும் பூஞ்சோலைக்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றவர்கள் மதியின் சோர்வை பார்த்து அவளை ஓய்வெடுக்க அனுப்ப பின்னாடியே கதிரும் செல்ல அவர்களுக்கு சிரிப்பாக இருந்தது.

கல்யாண மாப்பிள்ளை வெற்றியை விட கதிர் செய்த அலம்பலில் அவர்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோஷமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.

கல்யாணம், மறுவீடு என எல்லாம் முடிந்து அனைவரும் கிளம்ப கதிரிடம் “மதிக்குட்டி கொஞ்ச நாள் இங்க இருக்கட்டுமா?” என்று தெய்வானையும் லட்சுமி பெரியம்மாவும் கேட்க

வான்மதியின் முகத்தை பார்த்தவன் அதில் சம்மதம் தெரியவும் சரி என ஒத்துக்கொண்டான்.

அவளிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிச் சென்றவன் சென்ற இரண்டு நாளிலே திரும்பியும் வந்தான்.
அதைப்பார்த்து வெற்றி கூட கிண்டல் செய்ய,
ரத்னவேலுக்கும் கந்தவேலுக்கும் தன் மருமகன் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு முகம் பூரித்தது.

பின் பத்து நாட்கள் அவளோடு தங்கி அவளையும் உடன் அழைத்துக்கொண்டே சென்னைக்குச் சென்றான்.
அவளுக்கு முதல் மூன்று மாதங்கள் வாந்தி அதிகமாக இருக்க அவளை விட கதிர் தான் பதறி “நீங்க நல்லா சமைச்சா எதுக்கு வாந்தி வரப்போகுது? உங்களுக்கு ஒன்னுமே தெரியலை” என்று சொல்லி மீனாட்சியிடமும் காவ்யாவிடமும் நன்றாக திட்டு வாங்கிக் கொண்டான்.

கதிர் மதியின் கால் கூட தரையில் படவிடமால் தாங்கினான்.

அவளுக்கு ஏழாம் மாதத்தில் வளைகாப்பு செய்ய அவளுடனே அவள் பிறந்த வீடு சென்று ஒருவாரம் இருந்துவிட்டு பிரசவத்திற்கு சென்னைக்கு கூட்டி வந்தான்.

மீனாட்சியும் காவ்யாவும் அவளை நன்றாக பார்த்துக்கொள்ள, சுந்தரேசன் ஒரு தந்தை போலவும், கிரியோ ஒரு அண்ணனாக அவளுக்கு துணை நின்றான்.

கதிரைவிட கிரிதான் மதிக்கு பார்த்துபார்த்து செய்தான்.
தனக்கு பிறந்த வீட்டு சொந்தமாக மதியை தன் உடன்பிறந்த தங்கையா கிரி பார்த்துக்கொண்டான்.
பிரசவத்திற்காக மதியின் பெரியப்பா, அப்பா, பெரியம்மா, அம்மா, பாட்டி என அனைவரும் சென்னைக்கு வந்தனர்.

சுமிக்கு அது நான்காம் மாதம் என்பதால் சுமியும் வெற்றியும் மட்டுமே வரவில்லை. குழந்தை பிறந்ததும் அவர்களும் வந்தனர்.

ஒரு ஞாயிறு அதிகாலையில் வான்மதிக்கு வலி எடுக்க கதிர் குடும்பத்தினரோடு அவளை ஆஸ்பிட்டலில் சேர்த்தான்.

அவள் உள்ளே துடிக்கும் ஒவ்வொரு துடிப்பிற்கும் வெளியே இவனும் துடிக்க மதியை அதிகம் கஷ்டப்படுத்தாமல் அவர்களது மகன் ஜனித்தான்.

நர்ஸ் வந்து குழந்தையைக் கொடுக்க முதலில் அவனை வாங்கிய கதிருக்கு அந்த நிமிடம் உலகத்தையே வென்ற கர்வம் வந்து அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

வான்மதியை பார்க்க அனுமதி கொடுக்கவும் தன் மகனோடு உள்நுழைந்தவன் மகனை அவள் அருகில் கிடத்தி அவள் மேல் சாய்ந்து கண்ணீர் வடிக்க மயக்கம் தெளிந்து எழுந்த மதிக்கு ஒன்று தான் தோன்றியது.

கதிரைப் பார்த்தவள் அவனை குனியச்செய்து அவன் நெற்றியில் முத்தமிட்டு “ஐ லவ் யூ” என

அவனுக்கு அந்த உண்மையான காதலை நேசத்தைத் தவிர வேற என்ன வேண்டும். அவளாக சொல்வதற்காக இத்தனை நாள் காத்திருந்தவன் இன்று அவள் உணர்ந்து சொல்லவும் அவனும் “ஐ லவ் யூடா. ஐ லவ் யூ சோ மச். லவ் யூ மை மூன்” என்று ஒவ்வொரு லவ் யூவுக்கும் அவள் முகத்தில் முத்தங்களை வாரியிறைத்தான்.

கதிர் மதியை கொஞ்சுவது பொறுக்காமல் அவன் தந்தை போலவே அவன் மகனும் பிடிவாதமாக அழுது அவர்களை தன் பக்கம் திருப்ப அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

கதிரவன்-வான்மதி இணைந்து தங்கள் மகனுக்கு ஆதித்யா என்று பெயர் சூட்டினர்.

ஆதித்யாவை பார்த்ததிலிருந்து வர்ஷா பாப்பாவும் தனக்கும் தம்பிபாப்பா வேண்டுமென கேட்க காவ்யா இப்போது மூன்று மாதம்.

வெற்றிக்கும் சுமித்ராவுக்கும் மகன் பிறக்க சக்திவேல் என்று பெயரிட்டனர்.

மீனாட்சி கதிருக்கு மகன் பிறந்ததிலே மகிழ்ந்தவர்கள் ஆதித்யாவை கீழே விடமால் தன் கைகளிலே வைத்துக்கொண்டு கொஞ்சுவார்.

இதில் சுந்தரேசனுக்கு தான் சற்று பொறாமை. பின்னே பேரனையும் கொஞ்சவிடாமல் அவரையும் கொஞ்சவிடாமல் தடுத்தால் என்ன தான் செய்வார் பாவம்.

கிரிக்கும் காவ்யாவுக்கும் அவர்கள் விருப்பப்படியே மகன் பிறக்க வருண் என்று பெயர் வைத்தனர்.
கதிருடைய அனைத்து பிரச்சனையும் மாயமாக மறைய வைக்கும் தேவதை போல் வான்மதி அவன் வாழ்க்கையில் வந்து பூவாக மலர்ந்து வாசம் வீசினாள்.

சில வருடங்களுக்குப் பிறகு,

ப்ளிஸ்டி செல்லம்” என கெஞ்ச

முடியாதுனா முடியாது தான்” என்று வான்மதி சத்தம் போட

கதிர் “என்ன பார்த்தா உனக்கு பாவமா இல்லையா?”

இல்லை”

இதெல்லாம் அநியாயம்டி. நீயும் உன் பையனும் சேர்ந்து எப்பப்பார்த்தாலும் என்ன தனியா விட்டுறிங்க. எனக்கு சப்போர்ட்டுக்கு ஒரு பொண்ணும் வேணும்டி” என

ம்ஹ{ம் எனக்கு உங்கள மாதிரி பையன் தான் வேணும்”

அதான் ஆதி அப்படியே அச்சு அசலா என்ன மாதிரி இருக்கிறான். உருவத்துல தான் என்ன மாதிரின்னா எல்லா விஷயத்திலயும் என்ன மாதிரியே இருக்கிறான்” என்று குறைபட்டு சொல்வது போல் பெருமையாக கூறி

எனக்கு ஒரு வில்லன் போதும்டி. எனக்கு குட்டி மதிதான் வேணும்” என்று கோபமாகச் செல்ல

அவன் கோபத்தில் முதலிலெல்லாம் பயப்படுபவள் இப்பொழுது அதில் தன் மேல் உள்ள காதல் புரிந்து மயங்கி அவனுக்கு சம்மதித்தாள்.

அவனும் மகிழ்ச்சியாக அவளை எடுத்தக்கொள்ள ஆரம்பிக்க

அம்மாhhhhhhhh” என்று கத்திக்கொண்டே ஆதி வர கதிர் மதியை விட்டு விலகி

எப்படித்தான் தெரியுமோ நான் பக்கத்துல போனா கரெக்டா வந்துறான்” என்று தன் மகனை அள்ளி தூக்கிப் போட்டு பிடித்து விளையாட

ம்மா மீனு காலிங்” என

அவன் மீனாட்சி வான்மதியை கூப்பிட்டதைச் சொல்ல அவ்வளவு அழகாகச் சொல்ல
தன் மகனோடு அவள் தன் அத்தையை தேடி கீழே சென்றாள்.

கீழே வந்த மதியை பார்த்த காவ்யா “என்ன மதி அண்ணி இப்படி முகமெல்லாம் சிவந்திருக்கு. நான் வேணும்னா அண்ணாட்ட சொல்லவா? அவங்க சரியான மருந்து கொடுப்பாங்க” என்று கிண்டல் செய்ய

ஏன் அண்ணி கிரி அண்ணாகிட்ட சொல்லி உங்களுக்கும் கொடுக்க சொல்லவா?” என திருப்பிக் கேள்வி கேட்க

மீனாட்சிக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.
முதலில் என்ன சொன்னாலும் கேட்டு வெக்கப்பட்டு ஒளிபவள் இப்போது மறுகேள்வி கேட்டு அவர்களை வெக்கத்தில் ஓட வைத்துவிடுகிறாள்.

ஆனால் கதிரிடம் மட்டும் அவள் என்றும் பழைய மதியாக மாறிவிடுவாள்.

இரவு தன் மகனை கதிர் தன் அம்மா அறையில் விட்டு வந்து மதியை அள்ளிக்கொண்டு “உன்ன மாதிரி அப்படியே நிலா போல ஒரு பொண்ணு பெத்து தர்றயா?” என

கதிர் மேல் மயக்கத்தோடு அவள் சம்மதிக்க அவனும் அதற்குண்டான வேலையை ஆரம்பித்தான்.

ஒரு வருடத்தில் மதியை போன்று அழகான பெண் தேவதையை தர கதிருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
தன் மகளுக்கு வெண்ணிலா என்று பெயரிட்டவன் அவளை விட்டு பிரிந்து வேலைக்கு செல்லக் கூட வருத்தப்பட்டான்.

தன் மகளை அப்படி உள்ளங்கையிலேயே தாங்கினான்.
அவள் பாதம் கூட மண்ணில் படாதவாறு தாங்க அந்தச் செல்ல சிட்டும் தன் தாயைப் போல தன் அப்பாவிடம் மட்டுமே அழாமல் சமத்தாக இருப்பாள்.

கதிரவன் பெண்களை, எந்த பெண்ணினத்தை வெறுத்தானோ அதை வான்மதி தன் குணத்தால், செய்கையால், அன்பால் மாற்றி அவனை குளிர்வித்து அவன் மனதை கொள்ளைக்கொள்ள, கடவுளிடம் வேண்டி மதியை போலவே தனக்கு மகள் வேண்டும் என்று அடிம்பிடித்து வாங்கிக் கொண்டான்.

புயலாக இருந்த கதிரவன் வாழ்வில் பூப்போன்ற மென்மையான வான்மதி நுழைய, தன் வாழ்வில் வந்த அந்த மதி பூவிற்காக வீசும் பூங்காற்றாக மாறினான்.

இனி இவர்கள் வாழ்வில் என்றும் பூங்காற்று வீசட்டும் என்று வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.

Advertisement