Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 19

கதிர் தன் மடியில் உறங்கவும் அவளுக்கு ஒன்று தான் தோன்றியது.

அவன் வாழ்வில் என்ன நடந்து இருந்தாலும், அவன் மனதில் யார் இருந்திருந்தாலும் இப்போது நான் தான் அவனுடைய மனைவி. எனவே அவனுடைய கவலையை வருத்தத்தை புரிந்துக்கொண்டு அவன் மனதிற்கு ஆறுதலாக நடக்க வேண்டும் என்று நினைத்தாள்.

மேலும் கதிருடன் வாழக்கொடுத்து வைக்காத சஞ்சனாவை எண்ணியும் கவலைக் கொண்டாள்.
அப்படி எதையெதையோ யோசித்துக்கொண்டிருந்த மதியும் சோபாவில் சாய்ந்து அப்படியே உறங்கிப் போனாள்.

தூக்கத்தில் அவள் கால் வலிக்கவும் அசைந்துக் கொடுக்க அதில் முழித்தவன் அவளை தூக்கிச்சென்று படுக்கையில் விட்டவன் பின் உறக்கம் வராததால் அவள் முகத்தையே பார்த்துப் பருகிக் கொண்டிருந்தான்.

அவள் நெற்றியில் ஏற்பட்டக் காயம் அவள் முகத்திற்கு திருஷ்டி போல் மேலும் அழகாக அவளைக் காட்ட அவள் தலையில் முத்தமிட்டவன் எங்கே தன்னை மீறி அவளை காயப்படுத்திவிடுமோ என்று பயந்து அவளை அணைத்துக்கொண்டு படுக்க அவனையும் நித்ராதேவி ஆட்கொண்டது.

விடியலில் எழுந்தவளுக்கு கதிர் இரவு தன்னிடம் தாய்மடி தேடும் குழந்தைப் போல தன் மடி தேடியவன் நினைவு வந்து அதெல்லாம் கனவோ என்று தோன்றியது. ஆனால் இப்போது தன்னை அணைத்துக் கொண்டு உறங்கும் நிலையை பார்த்து இதழில் புன்னகையை பூக்கச் செய்தது.

சிறிது நேரம் அப்படியே இருந்தவள் பின் விலகி பல் துலக்கி, முகம் கழுவி கீழே சென்றாள்.

மதி தங்கள் அறையிலிருந்து வெளியேறியவுடன் ழுழித்த கதிர் தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள குளியலறைக்குள் நுழைந்தான்.

ஹாலில் அமர்ந்து சுந்தரேசனும் கிரியும் பேப்பர் படித்துக்கொண்டிருக்க
எப்போதும் முதலில் எழும் கதிருக்கு பதிலாக இன்று வான்மதி எழுந்து வெளியே வர மீனாட்சிக்கு ஆச்சரியமாக இருந்தது.

என்னம்மா இவ்வளவு காலையில எழுந்துட்ட. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியதுதான” எனக் கேட்க

இல்லை அத்தை தூக்கம் வரலை”

சரிம்மா இரு உனக்கு ஹார்லிக்ஸ் தரேன்” என்று அவர் போடப் போக அவர் பின்னாடியே வந்த மதியை பார்த்து

என்னடா வேற எதாவது வேணுமா?”

அது வந்து ….” என்று இழுக்க

எது வேணும்னாலும் சொல்லும்மா” என

அவருக்கும் காபி கொண்டு போய் கொடுக்கவா” எனத் தயங்கியபடியே கேட்க

வான்மதிக்கு அடிபட்டதில் கதிர் மேல் கோபம் கொண்டு இருந்தவர் அவள் இப்படி கேட்கவும் அவளின் மனதை புரிந்துக்கொண்டு கதிருக்கும் காபி போட்டுத் தந்தார்.

அதை வாங்கிக் கொண்டு அவள் படியேறி செல்வதை பார்த்த கிரியும் காவ்யாவும் கண்களாலே பேசிக்கொண்டனர்.

அப்போது தான் குளித்து வெளியே வந்த கதிரிடம் அவள் காபியை நீட்ட அவனும் வாங்கிக் கொண்டான்.
காபியை குடித்ததும் காலி கோப்பையை அவளிடம் நீட்ட அவளும் அவன் அருகே சென்று வாங்கி டேபிளில் வைத்து நிமிர அவன் இறுகிய அணைப்பில் கட்டுண்டாள்.

கதிருக்கு அனைத்தையும் இன்றே பேசி முடித்தவிட வேண்டும் என்று தோன்றியதால் அவளை மெல்ல தன்னிடமிருந்து பிரித்து சோபாவில் அமரச்செய்தவன் நேற்று இரவு செய்தது போல் இன்றும் அவள் மடியில் தலைசாய்த்தான்.

உன்கிட்ட கொஞ்சம் பேசனும். பேசலாமா?” என அனுமதி கேட்க

சொல்லுங்க”

நான் சஞ்சனா பத்தி உன்கிட்ட பேசனும்” என்று அழுத்தமாக சொல்ல

எங்கே அவனையும் கஷ்டப்படுத்தி, தன்னையும் எதாவது சொல்லிவிடுவானோ என்று பயந்து
சஞ்சனா அக்காவ பத்தி எனக்கு எல்லாம் தெரியும். காவ்யா அண்ணி சொல்லிட்டாங்க” எனவும்

எல்லாமே உனக்குத் தெரியாது. நீ தெரிஞ்சுக்கனும் அதுக்காகத் தான் சொல்ல போறேன்” என

அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் தன் கண்ணை உருட்டி விழிக்க,

அவள் விழிவீச்சில் ‘இப்பப் போய் எப்படி அழகா பாக்கறா பாரு. அவ கண்ண பார்க்காத கதிர், சொல்ல வந்ததெல்லாம் மறந்துரும் போல’ என்று நினைப்பில் சிறிது மனச்சுமை குறைந்தவன் முழுதையும் குறைக்க அவளிடம் பேச ஆரம்பித்தான்.

சஞ்சனா எங்களோட அத்தைப்பொண்ணு. அவளுக்கு பணத்துமேலத் தான் எப்பவும் ஆசைபோல அது தெரியாமா நாங்க இருந்துருக்கோம் என்று ஆரம்பித்து, அவள் வயிற்றில் குழந்தையுடன் இறந்ததையும்,

அவள் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் தான் தனக்கு அவளுடைய சுயரூபங்கள் அவளுடைய வாயாலே பேசி போனில் பதிவாகியிருந்ததை கேட்டது என அனைத்தையும் சொல்லினான்.

சஞ்சனாவைப் பற்றி முழு உண்மையும் அவளிடம் சொன்ன கதிர் பிறகு தான் நிம்மதியாக உணர்ந்தான். ஆனால் அவன் தான் மதி மேல் கொண்டுள்ள காதலை பற்றி மட்டும் சொல்லமால் அதை அவளே புரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

அனைத்தையும் கூறி அவளைப் பார்க்க எதற்குமே அவ்வளவு கோபப் படாத மதி கூட சஞ்சனாவின் செயலால் முகம் சிவந்து கதிரிடம்
நீங்க ஏன் இதை அத்தை மாமாக்கிட்ட கூட சொல்லலை. அவங்க உங்க மேல கோபத்துல இருந்தப்பக் கூட சொல்லலை” என திட்ட

அவனோ “சஞ்சனா யாருனு தெரியாத உனக்கே காவ்யா அவளப் பத்தி சொன்னதும் அவள நினைச்சு பாசம் வந்துருக்கும். இதுல தான் வளர்த்த தன் மக போல ஒருத்திய பத்தி, அவளோட நடத்தையப் பத்தி தெரிஞ்சா அம்மா என்னாவங்க தெரியுமா. நிச்சயமா அவ மேல பாசம் வெச்சதுக்கு தண்டனையா உயிரையே விட்டுருவாங்க.”

இதுல என் வாழ்க்கைல அவ விளையாண்டது தெரிஞ்சது அப்பாவும் அம்மாவும் அவங்களால் நான் இப்படி ஆனனே; என்று குற்றவுணர்ச்சியில அவங்களவே அவங்க மன்னிக்க முடியாது. அதனால தான் நான் எதையுமே சொல்லல” எனவும்

அப்படியும் நடக்க வாய்ப்புண்டு என்பதால் அவளுக்கு அவன் சொன்னது புரிந்தது.

சரிங்க நானும் யாருகிட்டேயும் சொல்ல மாட்டேன்” என உறுதிக்கொடுத்தாள்.

அங்கு நிலவிய அமைதியை கலைத்து கதிரே மீண்டும் பேசத் தொடங்கினான்.

எனக்கு என்னமோ கிரிக்கு சஞ்சனா பத்தி சந்தேகம் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால கிரியும் காவ்யாவும் கூட எனக்காக அவங்க சந்தோஷமா இல்லையோனு தோணுது. நம்ம கல்யாணத்துக்கு பிறகு நாம வாழ ஆரம்பிச்ச பின்னாடி தான் அவங்க வாழ்க்கையை மறுபடியும் ஆரம்பிச்சு இருப்பாங்க” என சரியாக கணித்துக் கூற

அவளுக்கு கதிர் மற்றும் கிரியின் நட்பை நினைத்து பெருமையாகவும் சிறிது பொறாமையாகவும் இருந்தது.
அதையே “நீங்களும் கிரி அண்ணாவும் எப்பவும் இப்படியே ஒண்ணா நட்பா இருக்கணும்” என்று மனதாரச் சொல்ல

அவன் சற்றே விஷமமாக சிரித்தவாறே “அதுக்கு நீ தான் மனசு வைக்கணும்” என

நீங்க என்ன சொல்றிங்க புரியல”

ம் நான் சந்தோஷமா இருந்தா தான் உங்க கிரி அண்ணாவும் சந்தோஷமா இருப்பான். என்னோட சந்தோஷம்…..” என்று பாதியில் நிறுத்தி அவளைப் பார்க்க

மதி சம்மதமாக அவன் நெஞ்சில் சாய,

அவள் அவனுக்கு இப்போது தேவைப்பட்டதால் அவனும் எடுத்துக்கொண்டான்.

அதற்கு பின் வந்த நாட்களில் வான்மதி மீனாட்சி தன் மகன் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தாலும் சஞ்சனா என வரும்போது கதிரைவிட அவள் மேல் அதிகம் பாசம் வைத்திருந்ததை உணர்ந்து மீனாட்சிக்கு கதிரின் மேலிருந்த பாசத்தை மெதுமெதுவாக கதிரைப் பற்றி பேசிபேசியே துண்டிவிட்டாள்.

மீனாட்சியை முழுதாக சமாதானப்படுத்தி கதிருக்கும் அவன் அம்மா மீனாட்சிக்கும் இடையிலான பாசப்பிணைப்பை உறுதிப்படுத்தினாள்.

சஞ்சனாவை பற்றி தெரிந்ததில் இருந்து மதியும் கதிருடன் இணக்கமாக நடந்தாள்.

அவளுக்கு கதிர் தன்னுடைய கணவன் அதனால் அவனுக்கு இன்பம் துன்பம் அனைத்திலும் துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலே ஒழிய அவன் மேல் காதல் வரவில்லை.

ஒருவேளை அவன் கோப முகத்தையே பார்த்து பழகியதலோ என்னவோ அவன் மேல் பாசம் வராமல் ஒரு பயமே வந்தது.

ஆனால் அதைப்புரிந்துக்கொண்ட கதிரோ தான் எப்படி அவள் மேல் காதல் கொண்டு தேடுகிறேனோ அதே போல் அவளும் தன்னைத் தேட வேண்டும் என்று விரும்பினான்.

எனவே அவளுக்கு அதை எப்படி புரிய வைப்பது என்று யோசித்தவனுக்கு ஒரே வழித்தான் கிட்டியது.
நாம் எதைக் கொடுக்கிறோமோ அது தான் நமக்கு திரும்பக் கிடைக்கும் என்ற பொன்மொழிக்கேற்ப அவன் தன் காதலை ஒவ்வொரு சின்ன செயலிலும் வெளிப்படுத்த ஆரம்பித்தான்.

ஆனால் மதியோ அவன் செய்கைகளுக்கு தனக்கு அவரால் அடிபட்டதால் தன்னிடம் இப்போது நன்றாக நடந்துக்கொள்வதாக தோன்றியது. எனவே அவனுக்கு தான் மேலும் வருத்தம் அளிக்க கூடாது என்று எண்ணி அவனுக்கு ஒத்துழைத்தாள்.

கதிரும் அவளை விட்டு விலகி இருக்க முடியாமல் அவளை நாடினான்.

தனக்கு மதி மேல் இருக்கும் அன்பை, காதலை விதவிதமாக வெளிப்படுத்த தொடங்கினான்.
மதியும் தன் படிப்பை வெற்றிகரமாக முடிக்க இன்னும் பத்துநாட்களில் வெற்றிக்கும் சுமிக்கும் திருமணம் என்பதால் ஊருக்கு செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

கதிர் மட்டும் வேலையின் காரணமாக வரவில்லை.
அப்போது வேகமாக உள்ளே வந்த கதிர் அவள் தன்னை விட்டு ஊருக்கு செல்வதால் ஆழமாக தன் முத்திரைகளை அவளிடம் பதிக்க அவள் அப்படியே மயங்கி அவன் கைகளில் விழுந்தாள்.

அவன் அவளை அப்படியே படுக்கையில் படுக்க வைத்து தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைக்க முயற்சிசெய்ய அவள் எழாததால் அம்மா என்று கத்திக்கொண்டே டாக்டருக்கு அழைத்தான்.

Advertisement