Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 13


அவர்கள் பூஞ்சோலையை நெருங்கும் போது கதிர் முழிப்பு தட்டி எழுந்தான்.


அவர்கள் கார் நுழையும் போதே ஊர் மக்கள் அனைவரும் அவர்களை வரவேற்கும் விதமாக ஊர் எல்லையிலே இருந்தனர். மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து அங்கே இருந்து நடந்தே வான்மதியின் வீட்டிற்கு கூட்டிச் சென்றனர்.


அதைப் பார்த்த அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த ஊரிலுள்ள அனைவரும் வந்து இப்படி ஒரு வரவேற்பை அளிப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.


கதிர்-வான்மதி வரவேற்புக்கு சென்றவர்கள் கதிரின் நிலைமையையும் அவர்கள் குடும்பத்தையும் பார்த்து பிரமிப்போடு தானாக மரியாதையும் ஏற்பட்டிருந்தது. மேலும் அவர்கள் ஊர் பெரிய வீட்டு மாப்பிள்ளைக்கு என்ன செய்யனுமோ அதைத் தான் செய்தார்கள்.


வான்மதியின் வீடு வந்ததும் வாசலிலே ஆலம் சுற்றி உள்ளே அழைத்து சென்று அனைவருக்கும் அவர்களை விசாலம் ஆச்சி அறிமுகப்படுத்தினர்.


வான்மதியிடம் அவள் பெரியம்மா கதிரை வெகுதூரத்திலிருந்து பிராயாணம் செய்து வந்ததால்; ஓய்வெடுக்க மேலே இருக்கும் அவளுடைய அறைக்கு கூட்டிப்போகச் சொன்னார்.


பின் அவர் சுமித்ராவிடம் கிரி மற்றும் காவ்யாக்கு எனறு ஒதுக்கிய அறையை காட்டச் சொல்ல அவளும் அவர்களை அங்கு கூட்டிச் சென்றாள்.


சிறிது நேரம் ஓய்வெடுத்து அவர்கள் கீழே வர கந்தவேல் அங்குள்ள முக்கிய பெரியவர்களிடம் கதிரையும் கிரியையும் தனித்தனியாக அறிமுகப்படுத்தி அவர்களிடம் கதிரோடு வான்மதியையும் ஆசி வாங்கச் செய்தார்.


பின் அனைவருக்கும் தடபுடலாக விருந்து பரிமாறுதல், பெரியவர்களின் பேச்சு சத்தம், சிறுவர்களின் விளையாட்டு என கலகலப்பாக அந்த இடமே களைகட்டியது.


அங்குள்ளவர்கள் அவர்களை வந்து பார்ப்பதும் போவதுமாக இருக்க இரவு தான் அவர்களுக்கு ஓய்வு கிட்டியது.


அலைச்சல் மற்றும் சோர்வினால் கதிர் சீக்கிரமே உறங்கியதால் காலை வேகமாக எழுந்துவிட்டான். வான்மதி உறங்கிக் கொண்டிருக்கவும் கீழே வந்தவன் அங்கு வெற்றி இருக்கவும் அவனிடம் செல்ல
அப்போது தான் கதிரைப் பார்த்த வெற்றி,


“என்ன மாப்பிள்ளை தூக்கம் வரலையா?”


“ஆமா வெற்றி வெளியில காத்து நல்ல ஃப்ரஷ்ஷா அடிக்குது. அதான் அப்படியே ஒரு வாக் போகலாம்னு வந்தேன்” எனவும்


“வாங்க நானும் தோட்டத்துக்கு தான் போறேன்” என கதிர் அவனுடன் கிளம்பி வெளியே சென்றான்.


தோட்டத்துக்கு போய் வந்த ரத்னவேல் அப்பொழுது வெளியே கதிரைப் பார்க்கவும் அவனுடன் பேசிவிட்டு வெற்றியிடம் கதிருக்கு தோட்டத்தைச் சுற்றிக் காட்டிவிட்டு வீட்டுக்கு வரச் சொன்னார்.


வீட்டுக்கு வந்த ரத்னவேல் தன் மனைவியிடம்,
“எங்க பாப்பா?” என்று மகளைக் கேட்க


அவர் “என்னைக்கு உங்க பொண்ணு வெள்ளன எழுந்திரிச்சுருக்கா இன்னைக்கு எழுந்திரிக்க. மாப்பிள்ளை எழுந்து வெளியே வந்தது கூட தெரியாம இன்னும் தூங்கிட்டு இருக்கா” என்று நொடிக்க


“சரி சரி விடு நான் போய் பாப்பாவ எழுப்பறேன்”


“என்ன நீங்க போய் எழுப்ப போறிங்களா உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா” என வினவவுமே


அவரும் “ஏன் எப்பவும் நான் தான் எழுப்புவேன் இப்ப என்னாச்சுன்னு இப்படி கேட்கற”


“ம்ம் அப்ப அவ உங்க பொண்ணு. இப்ப அவளுக்கு கல்யாணம் ஆகி இன்னோருத்தரோட பொண்டாட்டி” என


அவரும் அதில் இருக்கும் உண்மையை புரிந்துக்கொண்டு பேசாமல் உள்ளே சென்று அமர்ந்து விட்டார்.


இத்தனை நாள் இந்த வீட்டில் தான் பெற்ற மகளாக இருந்தவள் இப்போது வேறுறொருத்தர் மனைவியாக இருக்கிறாள் என்றும், தன் மகள் அறைக்குச் சென்று அவளை எழுப்பவதற்குக் கூட சுதந்திரமாக செயல் பட முடியாத தன் நிலைமையை எண்ணி வருத்தம் கொண்டார்.


வான்மதி முழிப்பு தட்டி கீழே வரவும் நேராக தன் தந்தையிடம் சென்று “ஏன்ப்பா என்ன வந்து எழுப்பல” என்று கேட்டுக்கொண்டு அவர் மடியில் விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பிக்க


அவரும் தன் மகள் மாறவில்லை என்று பூரித்துப் போய் தன் மனைவியை ஒரு பார்வை பார்த்து “இங்க என்ன வேடிக்கை பாக்குற. போய் பாப்பாக்கு காபி போட்டு கொண்டு வா” எனவும்


அவரும் நொடித்துக் கொண்டு அவர் சொன்னதை செய்ய சமையல் கட்டுக்குச் சென்றார்.


கிரிதரன் முதலில் எழுந்து வர “வாங்க அண்ணா காபி சாப்டுறிங்களா?”


பயந்துக்கொண்டே “நீ போட போறயா மதி” எனக் கேட்க


“அச்சச்சோ இல்லண்ணா அம்மா இல்லேன்னா பெரியம்மா தான் போடுவாங்க. நான் வேணும்னா போட்டுத் தரவா அண்ணா”


அவன் அவசரமாக “இல்லம்மா சும்மா தான் கேட்டேன். நீ சித்தியவே போட்டுத் தர சொல்;லு” எனவும்


அவர்களது உரையாடலைக் கேட்டு சிரித்துக்கொண்டே வெற்றியும் கதிரும் உள்ளே வந்தனர்.


அவர்கள் வெளியே இருந்து வருவதைப் பார்த்ததும் “இவ்வளவு காலைல எங்க போயிட்டு வரறிங்க” என கிரி கேட்க


“தூக்கம் வரலை. அதான் அப்படியே வெற்றிக் கூட தோப்புக்கு போயிட்டு வந்தேன்”


தெய்வானை “காவ்யாவும் பாப்பாவும் தூங்கறாங்களா தம்பி” என


“ஆமா சித்தி”


“பெரியப்பாவா எங்க சித்தி காணோம்” என


“அவங்க பக்கத்து ஊரு வரைக்கும் போயிருக்காங்க கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க” என


லட்சுமி பெரியம்மா எல்லோருக்கும் வந்து காபி கொடுக்க அனைவரும் குடித்துவிட்டு அன்று கோயிலுக்குச் சென்று பொங்கலிட கிளம்ப போனார்கள்.


அனைவரும் கிளம்பி வரவும் கந்தவேலும் வந்து விட அருகிலிருக்கும் கோயிலுக்கு நடந்தே செல்ல புது பெண்ணும் மாப்பிள்ளையும் வருவதால் நின்று அங்கிருப்பவர்கள் வேடிக்கை பார்க்க கதிருக்குத் தான் நேற்றிலிருந்து அனைவரும் குறுகுறுவென்று பார்ப்பது ஒரு மாதிரியாக இருந்தது.


அவர்கள் பொங்கலிட்டு சிறப்பு பூஜை செய்து சாமிக்கு படைத்து விட்டு வீடு வந்தனர்.


விசாலம் ஆச்சி வெற்றியிடம் காலை உணவிற்கு பிறகு எல்லோரையும் கூட்டிக் கொண்டு தோப்பை சுற்றிக் காண்பிக்கச் சொன்னார்.


காலை உணவை உண்டுவிட்டு வெற்றி, வான்மதி, கதிர், கிரி, காவ்யா மற்றும் வர்ஷா பாப்பாவோடு அருகிலிருக்கும் சுமித்ரா வீட்டிற்குச் சென்று அவளையும் கூட்டிக் கொண்டு தோப்பிற்குச் சென்றனர்.


சுற்றிலும் தென்னை மரத்தோப்பும் நடுவில் கிணறு மற்றும் தோப்பு வீடும், தென்னந்தோப்புக்கு வடக்குப் பக்கம் கரும்பும், தெற்கு பக்கம் வாழையும், கிழக்கு பக்கம் நெல்லும், மேற்கு பக்கம் மாந்தோப்பும் இருந்தது.


தென்னந்தோப்பில் இரை தேடிக்கொண்டிருந்த மயில்களை பார்த்து மகிழ்ந்து வர்ஷா பாப்பா கைதட்ட அனைவருக்கும் அது மகிழ்ச்சியான இடமாக மாறியது.


வெற்றி அங்கு இருக்கும் வேலையாளிடம் இளநீர் சீவி தரச் சொல்லி அனைவருக்கும் கொடுக்க அது தேவாமிர்தம் போல் அவ்வளவு இனிப்பாக இருந்தது.
அவர்கள் தோப்பில் இயற்கையாக கிடைக்கும் இலை தழைகள் மற்றும் சாணம், பஞ்சகவ்யம் போன்ற பொருட்களையே உரமாக இடுவதால், அனைத்தும் நன்கு செழிப்பாக வளர்ந்து இளநீர் மிகவும் ருசியாக இருந்தது.


வெற்றி அனைவரோடு பேசினாலும் தன்னை பார்க்காமல் இருப்பது சுமிக்கு வருத்தம் தர அவள் முகம் கூம்பியது.


அதைப் பார்த்து வான்மதி தன் அண்ணனிடம் தயங்கிபடியே “அண்ணா என்னால தான சுமி கூட பேசமாட்றிங்க”


“அப்படி எல்லாம் இல்ல பாப்பா. ஏதோ ஒரு சின்ன கோபம் அதான் என்னால பேச முடியலை”


“சாரிண்ணா எல்லாம் என்னால் தான். நான் மட்டும் முன்னாடியே உங்ககிட்ட சொல்லியிருந்;தா எந்தப் பிரச்சனையும் வந்திருக்காதுல்ல”


“நீ வருத்தப் படாதே பாப்பா எல்லாம் சரியாயிரும்” எனவும்


அவளும் சுமியிடம் சென்று ஆறுதலாக பேச அவளும் சரியானாள்.


மற்றவர்களுக்கு வான்மதி பேசுவது கேட்டு வெற்றிக்கும் சுமித்ராக்கும் வான்மதியால் என்ன பிரச்சனை என்று யோசித்தாலும் வெளியே எதுவும் கேட்காமல் பின் தொடர்ந்தனர்.


பின் வயல் மற்றும் மாந்தோப்பை சுற்றி பார்த்து தோப்பு வீட்டிற்கு வந்து வெளியில் இருந்த வேப்ப மரத்தடியில் பாய் விரித்து அமர்ந்;து கதை பேச மதிய உணவை லட்சுமி பெரியம்மா தோப்பிற்க்கே கொடுத்து விட்டிருந்தார்.


அங்கிருந்த வாழையிலைகளை பறித்து அதிலே போட்டு உண்டு விட்டு, வர்ஷா பாப்பா தூங்கவும் கொஞ்ச நேரம் அங்கிருந்துவிட்டு பின் காவ்யா மற்றும் சுமித்ராவை வீட்டில் விட்டுவிட்டு கிரியும் வெற்றியும் தொழிற்சாலைக்குச் சென்றனர்.


அங்கு கதிரும் மதியும் மட்டுமே இருந்தனர்.
தோட்டத்தில் வேலை செய்பவர்கள் எல்லோரும் சீக்கிரமாக வேலை முடிந்ததால் அவர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

தோட்டக் காவலுக்கு நாய்கள்; இருப்பதால் தோட்டம் ஆரம்பத்தில் வேலை செய்பவர்களுக்கு என அவர்களின் வீடு இருக்கும்.


யாருமே இல்லாத காரணத்தால் சரி கிணற்றில் ஒரு குளியல் போடலாம் என நினைத்த கதிர் வான்மதியிடம் தான் கிணற்றில் குளிப்பதாகச் சொல்ல அவளும் சரி எனவும் தன் உடைகளை கழட்டிவிட்டு வெறும் ஜட்டியோடு சென்று குளிக்க ஆரம்பித்தான்.


அவன் குளிக்கப் போறதாக சொல்லவும் வான்மதி சோப்பு, துண்டு எடுத்து தரலாம் என வீட்டிற்குள் சென்று எடுத்து வந்து தர


அவன் அதை வாங்காமல் மதியிடம் “உனக்கு நீச்சல் தெரியுமா?”


“ம் தெரியும்;” எனவும் தண்ணிக்குள் இழுத்து விட்டான்.


இருவரும் சிறிது நீந்த தண்ணீரில் வான்மதியின் உடை உடலோடு ஒட்டியிருப்பதை பார்த்த கதிர் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் வான்மதியை இழுத்து கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளில் மூழ்கத் தொடங்கினான்.


அன்றைக்கு பிறகு இந்த இரண்டு நாட்களும் அவன் அவளை நாடவில்லை.


இன்று தான் அவளை நாட அவளும் எதிர்ப்பின்றி சம்மதிக்கவும் அவளை கைகளில் அள்ளிக்கொண்டு தோப்பு வீட்டிற்குச் சென்றான்.


அவனுடைய தேவை முடிந்து விலகி அமர அவளோ அவன் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்தாள்.


அவள் தானாக வந்து தன் மீது சாயவும் வெறுப்பு கொண்டு அவளை தள்ளிவிட அவனுடைய போனும் அடித்தது.


ஆனால் அவளோ போன் அடிப்பதால் தன்னை விலக்கினான் என்று நினைத்து விலகி அமர்ந்து அவன் பேசுவதை கேட்க ஆரம்பித்தாள்.


வெற்றி தான் இன்னும் வரவில்லையே என்று போன் செய்திருந்தான்.


தாங்கள் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக கூறி போனை கட் பண்ணியவன் ஞாபகம் வந்தவனாய் வெற்றிடம் ஏன் காலையில் அப்படி பேசினாள் என்று கேட்க


அவள் அந்த அருண் தன்னை கடத்தியதால் முதலிலே அவனை பற்றி எதற்கு சொல்லவில்லை என்று சுமி மீது அண்ணனுக்கு கோபம் என்று கூற,


அவனுக்கு நம்பிக்கை என்பது தானாக ஏற்படவேண்டும், அதைக் கட்டாயப்படுத்தி ஏற்படுத்த இயலாது. ஒருவர் மேல் நாம் வைத்த நம்பிக்கை மறையும் போது அதை அவர் தான் மறுபடியும் கொடுக்க முடியும்.

கதிருக்கு இதில் யாராலும் எதுவும் செய்ய இயலாது என்று புரிந்தது.


எனவே அதை விடுத்து மேலும் பேச்சை வளர்க்காமல் அவளுடன் வீட்டிற்கு வந்தான்.


அவர்களை பார்த்த விசாலம் ஆச்சிக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.


அவர்களை நேற்றிலிருந்து பார்த்ததில் அவருடைய அனுபவமும் வயதும் ஏதோ சரியில்லை போல் தோன்ற வெற்றியிடம் சொல்லி தனியாக தோப்பு வீட்டில் விட்டு வரச் சொல்ல அவனும் செய்தான்.

இப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்து புரிந்துக்கொண்டு அமைதியானார்.
அவர்கள் அனைவரும் மேலும் இருநாள் தங்கி ஏற்கனவே வெற்றியிடம் சொல்லியிருந்ததால் அவன் ஏற்பாடு செய்திருந்த படி திங்கட்கிழமை வான்மதியை காலேஜ்க்கு அழைத்துச் சென்று அவளுடைய படிப்புச் சான்றிதழ்களை வாங்கிக் கொண்டே வந்தார்கள்.


பின் அவர்கள் கிளம்பம் போது ரத்னவேலும் கந்தவேலும் தன் மகளுக்கு கொடுக்க ஏற்பாடு செய்திருந்த சீர் வரிசை அடங்கிய வண்டியை பார்த்து வேண்டாம் என்றான்.

அவர்கள் வற்புறுத்தியும் கேட்காமல் அவன் மறுத்து அவர்கள் தனக்கும்; தன் குடும்பத்திற்கும் கொடுத்த பரிசு பொருட்களை மட்டுமே வாங்கிக் கொண்டான்.


விசாலம் ஆச்சி “இது எங்க பரம்பரை நகை இத கண்டிப்பா வான்மதிக்கு தான் சேரனும்” என்று சொல்ல,
ரத்னவேலும் வான்மதிக்கு சேர வேண்டிய நகைகளையாவது வாங்கிக்கச் சொல்ல அவனும் வேறு வழியில்லாமல் அவளை வாங்கிக்கச் சொன்னான்.
அனைவரிடம் பிரியா விடைபெற்று அவர்கள் சென்னைக்கு கிளம்பினார்கள்.

Advertisement