Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 12

கதிர் முழுவதும் வான்மதியை தனதாக்கிக் கொண்டே விட்டான்.

கதிருக்கு வான்மதி மேல் ஏற்பட்ட விருப்பத்தினால், அவளை தன் மனைவியாக மனது ஏற்றுக்கொண்டதால் தான் அணுகினான்.

ஆனால் அவனால் அதை புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணால் ஏற்பட்ட தன் மனக்காயத்திற்கு வான்மதியிடம் தன் உரிமையை நிலைநாட்டி மருந்திட்டுக் கொண்டான்.

அவனுடைய மனது நிம்மதியடைந்தது. இந்த நிம்மதி நிலைக்குமா?

அவனுக்கு தெரியவில்லை.

யாரோ செய்த தவறுக்கு இவள் எப்படி பொறுப்பு ஆவாள். இவளுக்கு தண்டனை கொடுத்தால் என்ன நியாயம் இது.

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பூ போன்ற மென்மையான மதி, கதிர் என்ற புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி வாடிய மலரானாள்.
காலையில் சீக்கிரமே எழுந்த கதிர் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டான்.

கதிர் சென்று சிறிது நேரம் கழித்து எழுந்த வான்மதிக்கு உடலெல்லாம் வலி எடுத்தது. நேற்று இரவு நடந்த சம்பவங்கள் அவள் நினைவுக்கு வந்தது.

கணவன் மனைவிக்குள் இது தான் நடக்கும் போல என்று இப்போது சாதரணமாக எடுத்துக் கொண்டாள். தன் கணவன் தன்னிடம் தானே இவ்வாறு நடந்துக் கொள்ள முடியும் என்று எண்ணினாள்.

கிராமத்து பெண்ணான அவளுக்கு இதையெல்லாம் பெரிதாக நினைக்கத் தோன்றவில்லை. என்ன இருந்தாலும் பெண் மனம் அல்லவா.

பின் குளித்து கீழே வர மீனாட்சி, தெய்வானை மற்றும் விசாலம் ஆச்சி மட்டுமே இருந்தனர். மற்றவர்கள் இரவே லேட்டாக வந்ததால் உறங்கிக் கொண்டிருந்தனர். அவள் முகத்தில் சோர்வோடு ஒரு தனி தேஜஸ{ம் இருக்க அதைப் பார்த்த அவர்களுக்குப் புரிந்தது.

மீனாட்சி நேற்று இரவிலிருந்து அவன் பழைய சம்பங்களை மறந்து வான்மதியுடன் நன்றாக வாழ வேண்டும் என்று சற்று கவலையாகவே இருந்தார். வான்மதியைப் பார்த்தவுடன் அவருக்கு தன் மகன் அவன் வாழ்க்கையை தொடங்கியதற்காக வேகமாக மனதில் கடவுளிடம் நன்றி வைத்து, தன் மருமகளை அழைத்துச் சென்று முதலில் காபி கொடுத்தார்.

அவளுக்கு இருந்த பசியில் அவர் குடித்துவிட்டரா என்று கூடக் கேட்காமல் அவள் பாட்டுக்கு வாங்கிக் குடித்த பிறகு தான் ஞாபகம் வந்தது.

‘கல்யாணம் ஆயிருச்சு இன்னும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம நடந்துக்கிற’ என்று தன் அன்னை எதுவும் திட்டுவாரோ என்று தெய்வானையின் முகம் பார்க்க

அவரோ “என்னடா பாப்பா வேற எதாச்சும் வேணுமா” என்றுக் கேட்க, அவளுக்கு மயக்கம் வராத குறை தான்.
இத்தனை நாள் அவள் புகுந்தவீட்டில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்று கண்டிப்போடு வளர்க்கும் தாய்மார்கள் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிட்டால் அடியோடு மாறிவிடுவார்கள். ஏன்என்றால் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

ஒரு செடியை வேரொடு ஒரு மண்ணிலிருந்து பிடுங்கி வேறு மண்ணில் நடும்போது அதற்கு என்ன வேண்டும் என அந்த செடிக்கு மட்டுமே தெரியும். அவரும் திருமணமாகி தன் வீடு சொந்த பந்தமெல்லாம் விட்டு வந்த ஒரு சராசரி பெண் தானே.

அதுவும் வான்மதியின் திருமண நடந்த சூழ்நிலை எல்லாம் அவரை அடியோடு மாற்றி அவரது இயல்பான குணமான தாய்ப் பாசம் வெளிப்பட்டது.
விசாலம் பாட்டி தான் “போய் விளக்கேத்தி சாமி கும்பிட்டு வா பாப்பா” என

அவளும் பூஜையறைக்கு சென்று விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு வர கதிரும் தனது நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு வந்தான்.

கதிர் வரவும் மீனாட்சி காபியை வான்மதியின் கையில் கொடுத்தனுப்ப அவளும் நேற்று நடந்த நிகழ்வுகளால் சிறிது பயம் குறைந்தாலும், தயக்கத்தோடு வாங்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்.

அவள் உள்ளே நுழைந்ததும் கதிரைத் தேட அவன் பாத்ரூமில் இருந்தான். எனவே அவனுக்காக கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என்று அங்கு அமர அவனோ நிதானமாக குளித்துவிட்டே வெளியில் வந்தான்.

அவன் இடுப்பில் வெறும் டவலோடு வெளியே வர
அதைப்பார்த்து அவள் வெட்கத்துடன் திரும்பிக்கொண்டாள்.

அவன் அவளைக் கண்டுக்கொள்ளாது உடைமாற்றி பின் அவள் பக்கம் வர அவள் இதயத்துடிப்பின் ஓசை அதிகரிக்க ஆரம்பித்தது.

அவன் அருகே வரவும் அவள் வாய் தந்தியடித்துக் கொண்டே “கா…பி” என்று சொல்ல,

“ம்ம் கொடு”

அவள் கொடுக்கவும் குடித்துப்பார்த்தவன்,
“காபி ஆறிறுச்சு வேற கொண்டு வா” என
அவள் விட்டால் போதும் என்று கீழே ஓடிவிட்டாள்.

மேலே சென்ற மருமகள் வெகுநேரம் ஆகியும் கீழே வராமல் இருக்கவும் மீனாட்சி மாடிப்படியிலேயே கவனம் வைத்திருக்க, அவள்; சிவந்த முகத்துடன் வேகமாக இறங்கி வர அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தீர்ந்தது மனம் மகிழ்ச்சியானது.

வான்மதி “அத்தை நான் போறப்பப அவர் குளிச்சுட்டு இருந்தார். காபி ஆறிட்டதால வேற கொண்டு வர சொன்னார்” என

“இரும்மா வேற போட்டுத் தரேன்” என்று வேறு காபி போட

அதற்குள் கதிர் தயாராகி கீழே வரவும் அவனிடம் கொடுத்தார்.

அனைவரும் கீழே வர ஆண்கள் பேசிக் கொண்டே அமர்ந்திருக்க, பெண்கள் சமைத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.

இங்கே வேலைக்காரர்கள் இருந்தாலும் மீனாட்சி தான் சமைப்பார். அவருக்கு தன் கையாலேயே சமைத்து பரிமாறுவதில் அவ்வளவு மகிழ்ச்சி. வேலை செய்யும் பெண்மணி சாரதா மேல் வேலைகளை மட்டுமே பார்த்துக் கொள்வார்.

இன்று நிறைய சமைக்க வேண்டியிருந்ததால் அனைவரும் சேர்ந்தே சமைத்தனர். கடைசியாக வான்மதியை ஏதாவது ஒரு இனிப்பு செய்யச் சொல்ல அவளும் பாயாசம் செய்திருந்தாள்.

சாப்பிடச் சொல்லி ஆண்களை அழைக்க அவர்கள் அமரவும் கேசரி, இட்லி, பொங்கல், பூரி, வடை அதற்கு சட்னி, சம்பார், உருளைக்கிழங்கு மசால் என்று தடபுடலாக பரிமாற அவர்கள் சாப்பிட்டு முடித்தனர்.

இறுதியில் வான்மதி முதலில் பாயாசத்தை சுந்தரேசனுக்கு சாப்பிட ஊற்றிக் கொடுக்க, அவருக்கு சுகர் என்பதால் வேண்டாம் என்று கதிரவன் சொல்லவும்

மீனாட்சி “நம்ம மருமக இன்னைக்கு முத தடவை செஞ்சிருக்கா. அதனால கொஞ்சமா எடுத்துக்கட்டும் தப்பில்லை” என்று சொல்ல

வெற்றி ஐய்யோ என படக்கென்று எழுந்துவிட்டான்.
மீனாட்சி தான் “என்னப்பா அதுக்குள்ள எந்திரிச்சுட்ட இரு உனக்கு பாயாசம் தரேன்”

“இல்ல அத்தை எனக்கு வயிறு நிறைஞ்சுறுச்சு நான் அப்புறம் சாப்பிடுறேன்” என

“கொஞ்சமாச்சும் சாப்பிடுப்பா இல்லனா என் மருமக வருத்தப்பட போறா”

வெற்றி என்ன செய்வது என்று முழித்தவன் அவர் கிளாசில் ஊற்றிக் கொடுக்கவும் வேறு வழியில்லாமல் கையில் வாங்கியவன் அதை எப்படி குடிப்பது என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான்.

கதிரும் கிரியும் வெற்றி எழுந்ததில்லே உஷாராகி பாயாசத்தை குடிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க

சுந்தரேசன் தான் ஆவலாக வாங்கி ஒரு வாய் வைக்க அவரால் வாயை திறக்க முடியவில்லை.

கந்தவேலும், ரத்னவேலும் சுந்தரேசன் நிலைமையில் தான் இருந்தனர்.

அவர்கள் குடித்துவிட்டு அமைதியாக இருக்கவும் ஒரு வேளை நல்லாயிருக்குமோ என்று கதிரும் கிரியும் குடித்துப்பார்க்க அவர்களாலும் வாயை திறக்க முடியவில்லை.

வேறு வழியில்லாமல் வெற்றியும் குடிக்க அவனுக்கும் அதே நிலைமை தான்.

அவர்கள் முழிப்பதை பார்த்து விசாலம் ஆச்சி “எப்படி செஞ்சியிருக்கா உன் மக” என்று கந்தவேல், ரத்னவேலிடம் நக்கலாக கேட்க

அங்கே வான்மதி இருந்ததால் கந்தவேல் தான் கஷ்டப்பட்டு வாய்திறந்து “என் மகளுக்கு என்னம்மா சூப்பரா செஞ்சியிருக்கு” என

ரத்னவேல் “ஆமாம்மா பாப்பா செஞ்சது ரொம்ப நல்லாயிருக்கு”

அங்கிருந்தவர்களுக்கு அவர்கள் பதிலில் சிரிப்பு வந்தது.

சுந்தரேசனோ ஒரு படி மேலே போய் “இனிமேல் நீயே சமையல் செய் மருமகளே. உங்கத்தை சமையல் செஞ்சத சாப்பிட்டு எனக்கு நாக்கு செத்து போயிருச்சு” என

கதிரும், கிரியும் சுந்தரேசனை பாச பார்வை பார்த்து வைக்க

வெற்றியோ அவரை வேற்றுகிரகவாசி போல பார்த்து வைத்தான்.

வான்மதி சமையல் கட்டிற்குள் செல்லவும் காவ்யா அதை குடித்துப் பார்க்க அவளாலும் பேச முடியவில்லை.

விசாலம் ஆச்சி வான்மதியை சமையல் கத்துக்கச் சொன்னதற்கு அவளின் அப்பாக்கள் ‘பாப்பா இன்னும் குழந்தை. கல்யாணத்துக்கு பிறகு மெதுவாக கத்துக்கட்டும். என் பொண்ணு எது செஞ்சாலும் எல்லாரும் சாப்பிட்டுத் தான் ஆகனும்’ என்று சொன்னதால், அவளுக்கு சமையல் கட்டு சாப்பிட மட்டும் என்ற நிலைமைக்கு ஆளானது.

அப்படியும் தப்பித்தவறி எதோ ஒரு நாள் அவள் செய்ய அதை சாப்பிட்டவர்களின் நிலைமை தான் பாவம்.

அன்று பாவம் அவளிடம் மாட்டிக்கொண்டு முழித்தது வெற்றி தான். மற்றவர்கள் தப்பித் கொண்டனர்.
வான்மதி பாயாசம் செய்வதற்கு பதில் பசை செய்து வைத்திருந்தாள்.

ஆமாம் கோதுமை மாவு, பச்சரிசி மாவு, ஜவ்வரிசி எல்லாம் பாலில் போட்டு கிண்டி பசை மாதிரி செய்திருந்தாள். பாயாசம் வாய்க்குள்ளே ஒட்டிக் கொண்டது. என்ன இதில் அதிக இனிப்பு போட்டு இருந்ததால் வேண்டுமென்றால் இனிப்பு பசை என்று பெயர் சூட்டலாம்.

இன்று அவளிடம் அனைவரும் சேர்ந்து மாட்டிக்கொண்டனர்.

அனைவரும் அதனை தீர்த்தம் மாதிரி கொஞ்சம் அருந்திவிட்டு செல்ல, மீனாட்சி வேலைக்காரம்மாவிடம் வான்மதிக்கு தெரியாமல் தோட்டத்தில் குழி பறித்து ஊற்றச் சொன்னார்.
பிறகு பெண்கள் சாப்பிட்டு வர அனைவரும் அமர்ந்து பேசலாயினர்.

கந்தவேல் “நாங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்புறோம் சம்பந்தி” என

“என்ன சம்பந்தி இரண்டு நாளாச்சு இருந்துட்டு போங்க”

“இல்ல சம்பந்தி தோப்புல வேலை நிறைய இருக்கு. அப்புறம் பேக்டரிய வேற பாக்கனும்”

“சரி சம்பந்தி அப்ப மதியம் சாப்பிட்டு சாயங்காலம் போல கிளம்புங்க கொஞ்ச நேரமாச்சும் இங்க இருங்க” எனவும்

“சரிங்க சம்பந்தி” என ஒத்துக்கொண்டார்.

விசாலம் ஆச்சி அவர்களிடம் மறுவீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்க சுந்தரேசனும் மீனாட்சியும் கதிரைப் பார்க்க

கதிர் சிறிது யோசித்து விட்டு தான் வேலைக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்துள்ளதால் செல்லலாம் எனவும், நாளைக்கு போகலாம் என முடிவெடுத்து, சுந்தரேசன் கிரி- காவ்யாவோடு நாளை அவர்களை அனுப்பி வைப்பதாக அவர்களிடம் சொன்னார்.

பின் மாலையில் வான்மதியின் குடும்பத்தினர் விடைபெற்று தங்கள் ஊருக்குச் சென்றனர்.
அவர்கள் செல்லவும் கொஞ்சம் வருத்தத்திலிருந்த வான்மதியிடம் வர்ஷா பாப்பாவை கொடுக்கவும் அவளும் சரியாகிவிட்டாள்.

மறுநாள் கதிரவன்-வான்மதியோடு கிரி-காவ்யா மற்றும் வர்ஷ{க் குட்டி என எல்லாரும் அவள் ஊருக்குச் சென்றனர்.

கதிர் காரை ஓட்ட கிரி அவனருகிலும் பின் சீட்டில் காவ்யா மற்றும் வான்மதி மற்றும் வான்மதி மடியில் வர்ஷா பாப்பா என அமர்ந்திருந்தனர்.
காரில் செல்லும் போது வர்ஷ{க்குட்டியை வெகுநேரம் வான்மதியே வைத்திருந்ததால் அவளுக்கு கால் வலிக்குமே என்று கிரியும் காவ்யாவும் வாங்க கையை நீட்ட அவள் அவர்களிடம் வர மறுத்தாள்.

கதிர் கிரியை காரை ஓட்டச் சொல்லி காவ்யாவை முன்னே அமரச்சொல்லி தான் பின்னே சென்று வான்மதியோடு அமர்ந்து கொண்டு வாங்க முயற்சி செய்ய அவனிடமும் வரவில்லை.

இந்த ஐந்து நாட்களில் வர்ஷா பாப்பா நன்றாக வான்மதியிடம் ஒட்டிக் கொண்டாள். காவ்யா அழைத்தால் கூட செல்லாமல் முழித்திருக்கும் போதெல்லாம் மதியிடமே இருந்தாள்.

அந்த செல்ல சிட்டுக் கூட தன் பாசமான மாமாவின் மனைவியை கண்டுகொண்டு தன் அத்தையிடமே இருந்தாள்.

ஆனால் கதிர் வர்ஷ{க்குட்டி தன்னிடம் வராத கோபத்தில் வான்மதியின் பின்னே கைபோட்டு இடையை இறுக்கி பிடித்து வளைத்தான். அவன் திடீரென்று அவ்வாறு செய்யவும் பயந்தவள் கதிரை பாவமாக பார்க்க அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவள் தோள் மேல் தலை சாய்த்து உறங்கத் தொடங்கினான்.

அதனைக் கண்ணாடியில் பார்த்த கிரிக்கு அவன் வான்மதியின் மேல் உள்ள பொறாமையால் தான் இப்படி கோபமாக இருப்பது புரிந்து சிரிப்புவந்தது.

கதிர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கோபமாக இருக்கும் பொழுது தோளில் கையை போட்டு இறுக்கிக் கொள்வான்.

இதை கிரி அடிக்கடி அனுபவித்தவன் என்பதால் அவன் முகத்தை பார்த்தே அவன் தன்மேல் கோபமாக இருக்கும் போது அருகில் செல்ல மாட்டான். இப்போது மதி மாட்டிக் கொண்டாள்.

கோபமாக கையை போட்ட கதிர் அவளின் மென் இடையை தீண்டியதால் கையை எடுக்க முடியாமல் திண்டாடி அவள் தோள் மேல் தலைசாய்த்து தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தான்.

ஆனால் அவளுடைய காதோர முடிகள் காற்றில் அவன் முகத்தை வருடி தழுவ அவனால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

பிறகு தன்னையறியாமலே சிறிது நேரத்திலே அவள் மடியில் சாய்ந்து உறங்க தொடங்கினான். கதிர் உறங்கவும் வர்ஷா பாப்பா அவன் முதுகில் ஏறி விளையாடி களைத்து உறங்கத் தொடங்க காவ்யா வாங்கிக் கொண்டாள்.

Advertisement