Advertisement

மலரே மலர்வாய் 5

முத்துப்பாண்டி “தம்பி….. தம்பி” என்று பலமுறை கூப்பிட்டும் பயனில்லாமல் தோள் தொட்டு அழைக்க

அதில் சுய உணர்வு பெற்றவன் “ஆங் என்ன சொன்னிங்க நான் கவனிக்கல”

“இல்ல செல்வி உங்களவிட கம்மிய படிச்சுருக்குனு அவ மனசு வேதனைப்படுற மாதிரி எதுவும் சொல்லிற மாட்டிங்களே”

‘இனி அவள சொல்லி என்ன பிரயோஜனம்?’ என்று மனதில் ஓட

அவன் பதிலை எதிர்பாராமல் “ஏன்னா எனக்கு செல்வி மூத்த பொண்ணு மாதிரி தான். அவ பிறந்ததுலருந்து தூக்கி வளர்த்த பாசம்” என்று கண்கலங்க

செல்வன் “ஐய்யோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா. அவ படிக்கலைன்னா என்ன அதான் நான் படிச்சுருக்கேன்ல. அவளுக்கு தெரியாதத நான் சொல்லித்தரப்போறேன். இதுக்கு போய் கவலைபடாதிங்க” என்று அவரிடம் கூறியவன், உறக்கம் வருவதாகச்சொல்லிப் படுத்துக்கொண்டான்.

இன்பச்செல்வனுக்கு தன் மனைவி நிறைய படித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. செல்வியை பார்த்த போது ஒரு டிகிரியாவது முடித்திருப்பாள் என்று நினைத்திருக்க அவளோ எட்டாவது கூட முடிக்கவில்லை என்று தெரிந்ததில் இப்போது அவனுக்கு ஏனோ மனசெல்லாம் ஒரு மாதிரி பாரமாக இருந்தது.

ஆனால் கல்யாணம், காட்சி என எல்லாம் முடிந்தபிறகு என்ன செய்ய முடியும்? அவளையே ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தபிறகு அவள் படிப்பு, குணம், அழகு, வசதி என அனைத்தையும் அவன் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.

அவன் அமெரிக்க கலாச்சாரத்தில் வளர்ந்தாலும் வாழ்ந்தாலும் தன் வாழ்வில் ஒருமுறைத் தான் திருமணம் என்று உறுதி எடுத்தவன். மற்ற எத்தனையோ விஷயங்களில் அந்த நாட்டு கலாச்சாரத்தை ஒத்துக்கொள்பவன் ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமே என்ற இந்திய பண்பாட்டை,ஒழுக்கத்தை உயிர்மூச்சாக கடைபிடிப்பவன். எனவே அவளை தனக்கு ஏற்ற மாதிரி மாற்ற முடிவு செய்தான்.

அவளிடம் கேட்டு அவளுக்கு படிக்க விருப்பமா? என்றறிருந்து அவளுக்கு பிடித்த படிப்பை படிக்கச்செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவன் மற்;றொரு முடிவையும் எடுத்தான்.

அதாவது தனக்கு அவளை பற்றி சரியாக தெரியாததால் அவளை புரிந்துக்கொண்டு தனக்கு சமமாக அவளையும் உயர்த்தி மேலும் அவளும் தன்னை அவளாக புரிந்துக்கொள்ளும் வரை அவளிடமிருந்து விலகிஇருக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

தான் அவளை காதலித்து, அவளும் தன்னை காதலித்து தாங்கள் ஒன்று சேர வேண்டும் என்று விரும்பியவன் இதை பற்றி இன்று அவளிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டு அமெரிக்கா சென்ற பிறகு என்ன என்ன செய்ய வேண்டும் என்றும் யோசித்துக்கொண்டான்.

தான் எடுத்த முடிவை செயலாற்ற அவளிடம் எவ்வளவு கஷ்டப்பட போகிறான் என்று அவனுக்கு தெரியவில்லை. (ஹாஹாஹா சோதனைகாலம் ஆரம்பிக்கப்போகிறது)

மாலையில் செல்வி வந்து எழுப்பவும் எழுந்துக்கொண்டவன் முகம் கைகால் கழுவிவர அவனுக்கு சூடாக காபியும் சிற்றுண்டியும் அவள் கொடுக்க அவள் முகத்தை கண்அகற்றாமல் பார்த்துக்கொண்டே வாங்கி அதைச் சாப்பிட்டான்.

அதைப்பார்த்து செல்விக்கு தான் ‘என்ன இப்படி பாக்குறாக’ என்று வெட்கமாக போயிற்று. அவன் சாப்பிட்டவுடன் தட்டைவாங்கிக்கொண்டு சமையலறையில் சென்று மறைந்தாள்.

அவளின் அக்கா குழந்தைகள் இருவரும் இவனை விளையாடழைக்க அவனும் அவர்களுடன் சரிசமமாக தரையில் அமர்ந்து விளையாட ஆரம்பித்தான்.

இரவு கனிய ஆண்கள் அனைவரும் உணவருந்தி மாடிக்குப் படுக்கச் செல்ல,
செல்வியும் தன் பாட்டி, அம்மா மற்றும் அக்காவின் என அனைவரின் பல அறிவுரைகளையும் கேட்டுக்கொண்டு அவர்களிடமிருந்து விடைபெற்று லேசான அலங்காரத்துடன் உள்ளறைக்கு வந்தாள்.

அங்கு அறையில் மெத்தையில் போர்வை விரிக்கப்பட்டு அதில் மல்லிகை பூக்களை தூவி பக்கத்திலேயே சாம்பிராணி கொழுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே டேபிளில் இனிப்புகள், பழங்கள், பால் என அனைத்தும் வைக்கப்பட்டிருக்க சேரில் அவன் அமர்ந்திருந்தான்.

உள்ளே வந்தவள் நேராக சென்று அவன் காலில் விழ அதில் பதறி எழுந்த அவன்,

“என்ன இது ஏன் இப்படி காலுல விழுற முத எந்திரி”

“ம்கூம் மொத நீங்க என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா”

“நல்லாயிரு” என அவளை எழுப்ப முயற்சி செய்ய

“இப்படியா மாமா சொல்வாக. மஞ்சள் குங்குமத்தோட நூறாயிசு வாழு இல்ல பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்கனு சொல்லனும்” என

“சரிசரி நீ நூறு ஆயிசு நல்ல வாழு” என்று அவள் சொன்னது போல் சொல்லியவன் அவளைத் தன் காலடியிலிருந்து எழுப்பினான்.

பின் அவள் நேராக சென்று பாலை டம்ளரில் ஊத்தி “இந்தாங்க மாமா குடிங்க”

அவன் பாதி குடித்துக்கொண்டிருக்கும் போதே பிடுங்கியவள் “என்ன மாமா பூரா பாலையும் நீங்களே குடிச்சுருவிங்க போல. மொத ராத்திரியில பாதி தான் நீங்க குடிக்கனும். மீதி நானு” என்றவள் மீதியை அவள் குடிக்க, அவனுக்கு தான் அவள் பேச்சில் செய்கையில் ஒரு மாதிரி பயமானது.

பாலை குடித்துவிட்டு அவன் படுக்கச்செல்லவும்,
செல்வி “ஐய்யோ மாமா இது கூட உங்களுக்கு தெரியதா?” என்று தலையில் கைவைக்க

அவன் என்னமோ எதோ என்று அவள் அருகே சென்று “என்ன?” என விசாரிக்க

“உங்களுக்கு மொத ராத்திரியில என்ன பண்ணனும்னு சொல்லித்தரலயா?” வினவ

என்னடா இது நமக்கு வந்த சோதனைனு மனதில் நினைத்துக்கொண்டு வெளியே அவளிடம் “என்ன பண்ணனும்?” என்றுக் கேட்க

அவள் ‘இது கூட தெரியல்லையே யாரும் நமக்கு சொன்ன மாதிரி சொல்;லிக் குடுக்கலப்போல’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு அவனை பாவமாக பார்த்துவைத்து

“நான் சொல்லித்தரேன் மாமா” என்றவள் அவனை குனியச் செல்ல

அவன் எதற்கு குனியச் சொல்கிறாள்? என்று யோசித்தாலும் அவளுக்கு தோதாக குனிய அவள் அவன் இதழில் முத்தமிட்டாள்.

அவள் இதழில் முத்தம் தரவும் அவனுடைய செல்கள் எல்லாம் பரபரப்பாகி உடல் சூடாக அவளை விட்டு விலகமுடியாமல் அவனும் அவளுடைய உதடுகளைக் கவ்விக்கொண்டான்.
சிறிது நேரத்தில் தன்னுணர்வு அடைந்தவன் விலக்க முயற்சித்தும் விடாமல் அவள் அவனை அணைத்து இருக்கவும் அவனும் தன் கட்டுப்பாடை இழக்க ஆரம்பித்தான்.

அவள் இடுப்பில் ஒரு கையை கொடுத்து அவளின் மென் இடையை வளைக்க அவளும் அவனுக்கு வாகாக வளைந்துக் கொடுக்க அவன் கைகள் அவள் உடையை தாண்டி அவளின் மென்மையை உணரத் தொடங்கினான்.

அவன் தொடுகையில் கூசியவள் அவனை விட்டுவிலகி “என்ன மாமா இப்படி பண்ணுறிங்க. இப்படியெல்லாம் பண்ணக்கூடாது. உங்களுக்கு ஒன்னுமே தெரியாதா?” என்றுக்கேட்க

எல்லாம் தன் நேரம் என்று நொந்துக்கொண்டவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “எனக்காத் தெரியாது ம்ம்ம் சரி உன்கிட்ட இதப்பத்தி யார் என்ன பண்ணனும் சொன்னாங்க?” என வினவும்

அவள் பெருமையாக “எல்லாம் என் அப்பாத்தா தான் சொல்லுச்சு” என்றவள் மேலும் தொடர்ந்து அவர்கள் சொன்னதை சொல்லலானாள்.

அவளை தயார் செய்த செண்பகம் செல்வியிடம் “உள்ளார போனனே மாப்பிள்ள காலுல விழுந்து வணங்குடி. அப்புறம் மாப்பிள்ளைக்கு பால ஊத்திக்கொடு. அவுக குடிச்சிட்டு மீதி உனக்குத் தருவாக, அத நீ குடிச்சுரு” என்று சொல்ல

“ச்சீசீ எச்சியெல்லாம் குடிக்கமாட்டேன் போக்கா”

“எச்சினு சொல்லி குடிக்கமா இருக்கக் கூடாதுடி. மாப்பிள்ள என்ன சொன்னாலும் கேட்டுக்கனும்டி கூறுகெட்டவ” என அவள் பாட்டி சொல்லவும்,

“செரி வேற என்ன செய்யனும் அப்பத்தா?” என்று கோபமாகக் கேட்க

“அவர கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தா வாங்கிக்க, நீயும் கொடு” என சொன்னவர்

“பாத்து சூதானமா நடந்துக்க. எண்ணி பத்து மாசத்துல என் மடில உன் புள்ள விளையாடணும். புரியுதா?” என்றார்.

அவளுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். யார் குழந்தைக என்றாலும் அப்படி பார்த்துக்கொள்வாள்.
அவள் அக்காவிற்கு மகன் பிறந்தபோது அழகாக குட்டியாக இருந்த மகனை பார்த்து ஆசையில் தன் அக்காவிடம் ரொம்ப அழகா இருக்கான்க்கா பேசாம குழந்தையே எனக்கு கொடுத்துரு நான் வச்சுக்குறேன் என்று சொல்லி அடம்பிடிக்க
அவள் அப்பத்தா ‘உனக்கு பொறக்குற புள்ளய நல்லா வைச்சு கொஞ்சிக்க என்ன வேணும்னாலும் பண்ணிக்க அவ புள்ளய ஏன்டி கேட்கற” என்று திட்டிவிட்டிருந்தார்.

இப்போது அவர் இப்படி சொல்லவும் சந்தேகமாக அவள் “இதெல்லாம் பண்ணுனா புள்ள பொறக்குமா அப்பத்தா?” எனக் கேட்க

“அப்புறம் எப்புடிடி புள்ள பொறக்கும். இது பண்ணுனா தான் பொறக்கும்” என்றுச் சொல்ல அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

இப்போது அதையே அவனிடம் சொல்ல அவள் சொன்னதையெல்லாம் கேட்டு அவனுக்கு சிரிப்பாக இருந்தது.

அதே நேரம் தன் முடிவை ஆட்டங்கொள்ளச்செய்த அவள் அப்பத்தா மீது கோபமும் வந்தது.
அவளை அவள் அப்பத்தாவோடு சேர விடக்கூடாது இல்;லை கெட்டுப்போய்விடுவாள் என்று மிக முக்கியமான முடிவையும் எடுத்தான்.

அவளிடம் “உன்னோட அப்பத்தா சொல்றதெல்லாம் கேட்கக்கூடாது உனக்கு தப்புதப்பா சொல்லித்தராங்க. இனிமேல் நான் சரியா சொல்லித்தரேன்”

“சரிங்க மாமா”

“நீ ஏன் மேலே படிக்கல?”

“என்ன மாமா நாந்தென் இந்த ஊர்ல அதிகம் படிச்ச பொண்ணு. நீங்க என்ன இப்படி கேட்டுபுட்டிக” என கோபப்பட

“ம்ம் எட்டாவது பெரிய படிப்பா?”

“அப்பொறம் இல்லயா? எல்லாரும் அஞ்சாவது வரைக்கும் தான் இங்க படிச்சிருக்காக. நானே கஷ்டப்பட்டு கெஞ்சி பக்கத்து ஊருல இருக்குற ஸ்கூல்ல போய் படிச்சேன். அதுவும் நானு பெரியமனுஷி ஆனனே வெளிஊருக்கே போக விடல” என்று குறைபடவும்

அவனுக்கு புரிந்துவிட்டது, இங்கே பெண்களை பள்ளி இறுதிவரை கூட படிக்க வைக்க மாட்டார்கள் என்று.

“உனக்கு மேல படிக்க ஆசையா?” என்று வினவ

“ஆமா மாமா, ஆனா கணக்கு மட்டும் படிக்க மாட்டேன்”

“ஏன்?”

“எனக்கு கணக்குனாவே பிடிக்காது, வரவும் செய்யாது” என்றவள்

தன் அதிமுக்கிய சந்தேகமாக அவனை பார்த்து “ஏன் மாமா நீங்க கணக்கு வாத்தி தானே?”

“யாருடி உன்கிட்ட அப்படி சொன்னது? நான் காலேஜ்ல மேத்ஸ் ரிசர்ச் லெக்சரர்” என கோபமாக சொல்ல

“அப்பத்தா தான் மாமா சொல்லுச்சு. நீங்க என்னமோ சொன்னிங்கலல்ல மேத்க்குசு ரப்பருன்னு அப்படின்னா?”

சுத்தம் நார்மல் இங்கிலீசுக்கூட புரியாதா ம்ம் இவளுக்கு எப்படி சொல்லலாம் என்று யோசித்தவன்

“நான் காலேஜ்ல பாடம் நடத்துவேன்” என

அவள் “எங்க ஊருல பாடம் எடுக்குறவங்கள டீச்சர், வாத்தியாருன்னு தான் சொல்வோம். அப்ப நீங்க வாத்தி தானே” என குறுக்குக்கேள்விக் கேட்க
அவனுக்குத் தான் முழிபிதுங்கி அவள் சொன்னதை ஒத்துக்கொள்ளும் படி ஆனது.

“ஆமா நான் டீச்சர் தான் அதுக்கு என்ன இப்ப?”\

“அப்ப நீங்களே எனக்கு கணக்கு பண்ண சொல்லித்தருவீங்களா?” என்று கேள்வி கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்கவும் அதன் இருவேறு அர்த்தம் புரிந்தவன் சிரித்துக்கொண்டே “கண்டிப்பா நான் மட்டும் தான் சொல்லித்தருவேன்” என சொல்ல

அவளுக்குத் தான் அவன் ஏன் சிரிக்கின்றான் என்பது புரியாமல் ‘லூசு மாதிரி ஏன் சிரிக்கிறாங்க’ என்று முணுமுணுத்துக்கொண்டு “மாமாஆஆ” என இழுக்க

“என்ன?”

“தூக்கம் வருது” என்றவள் கைமறைவில் கொட்டாவியை வெளியிட,

“இங்க படுத்து தூங்கு” என்று மெத்தையில் தனக்கு வலதுப்பக்கம் காட்ட,

அவள் படுத்தவுடனே உறங்கிவிட அவனும் அவளருகில் படுத்துக் கொண்டான்.

Advertisement