Advertisement

மலரே மலர்வாய் 1

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹ_ஸ்டன் யுனிவர்சிட்டியில் உள்ள கணித ஆராய்ச்சி பிரிவுக்குச் செல்ல அங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த விதவிதமாக அனைத்து வயது ஆண்களும் பெண்களும் நிறைந்து ஒன்றாக அமர்ந்திருந்தனர்.

அவர்கள் முகத்தைப் பார்த்தாலே அறிவு ஜீவிகள் என்று கண்டுபிடித்துவிடலாம்.

அதோ அந்த முதல் வரிசையில் இரண்டாவதாக அமர்ந்துள்ளவன் வயது எப்படியும் முப்பதுக்குள் தான் இருக்கும். அமெரிக்கர்களுக்கு உரிய வெள்ளை நிறத்தில் ப்ரவுன் முடியுடன் அழகாகத் தான் உள்ளான்.

அவனுக்கு அருகில் அமர்ந்துள்ளவன் அவனும் அழகாகதான் இருக்கிறான். அவன் அப்பா சிங்கப்பூரிலே முதன்மையாக உள்ள மிகப்பெரிய தொழில் அதிபர்.

அதோ இந்தப் பக்கம் கடைசியில் மாயக்கண்ணன் போல் புளு கலர் கண்ணணோடு மிகவும் அழகாக நான்கு கோபியர்களோடு அமர்ந்திருப்பவனை பார்த்தால் நிச்சயமாக குறும்புக்கண்ணன் பாட்டை கண்டிப்பாக படிக்கத் தோன்றும்.

இப்படி அங்கிருப்பவர்களில் அனைவரும் அழகாக அனைத்திலும் உயர்ந்தவர்களாக இருக்க யாரை சைட் அடிப்பது, யாரை விடுவது, யாரை புகழ்ந்து என் கதையில் எழுதுவது என எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கு.

ஆனால் என்ன செய்ய இவங்க யாரும் நம்ம ஹ{ரோ இல்லயே. ம் வேணும்னா அடுத்த கதைக்கு யூஸ் பண்ணிக்கலாம். (ம்ஹ_ம் நம்ம கொடுத்து வச்சது அவ்வளவுதான்)

அப்போது அந்த அறையில் புதிதாக ஒருவன் நுழைந்து  “ஹாய் கய்ஸ். லெட்ஸ் ஸ்டார்ட் த கிளாஸ்” என்று ஆரம்பித்தவன் கிளாஸ் முடியும் வரை அனைத்து நாட்டு மாணவ,மாணவிகளையும் தன் வசீகர குரலால் கட்டுப்படுத்தி மகுடிக்கு ஆடும் பாம்பு போல தன்வசப்படுத்தியிருந்தான்.

அவனைப் பார்த்தால் அமெரிக்கர்களின் வெள்ளை நிறமும் ஆனால் முக மற்றும் உடல் வடிவமைப்பு இந்தியன் என்றும் சொல்லியது. ஆறடிக்கும் அதிகமாக உயரம், வெள்ளை நிறம், சிறிய ஆனால் கூர்மையான கண்கள், பரந்த நெற்றி அவன் அறிவை எடுத்துக்காட்ட, எப்போதும் சிரிக்கும் உதடுகள், தினமும் செய்யும் உடல்பயிற்ச்சிகள் விளைவால் சிறிதும் அதிக சதைகள் இன்றி திரண்ட புஜங்களுடன் கட்டுப்கோப்பான உடலுடன் ஆணழகனாக திகழ்ந்தான்.

அவனை பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
அவன் தான் இன்பச்செல்வன், இருபத்தொன்பது வயது இளைஞன். கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று ஹ{ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கணித ஆராய்ச்சிப் பிரிவில் பேராசிரியராக பணியாற்றுகிறான். வீட்டுக்கு ஒரே பிள்ளை.

அப்பா திருநாவுக்கரசு, அம்மா மங்கையர்க்கரசி. திருநாவுக்கரசு ஒரு தமிழாசிரியர். திருநாவுக்கரசு நல்ல கருப்பு. அவரு மனைவி மங்கையர்கரசி நல்ல வெள்ளை நிறம். அவங்க மகன் இன்பச்செல்வனோ அப்படியே அவங்க அம்மா மாதிரி.

அவன் அம்மா இவனுக்கு மூன்று வயதிருக்கும் போதே விஷக்காய்ச்சலில் இறந்துவிட இவனை தூக்கிக்கொண்டு இந்தியாவிலிருந்து அவன் அப்பா அமெரிக்கா வந்துவிட்டார்.

இங்கு ஹ_ஸ்டனில் உள்ள இந்திய பள்ளியில் தமிழாசிரியராக வேலையில் சேர்ந்தவர் போன வருடம் தான் ரிடையர்டு ஆனார்.

இன்பச்செல்வன் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை. அவனுக்கு திகட்டத்திகட்ட ஒருத்தியை காதலித்து பிறகு காதல் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை.

தனக்கு வரப்போகும் மனைவி தன்னைப்போல படித்து அறிவானவளாகவும் அதே சமயத்தில் அழகாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் அப்படி ஒரு பெண்ணை அவன் இன்னும் நேரில் பார்க்கவில்லை. இனிமேல் பார்ப்பானா? (ம்ஹ{ம் நோ சான்ஸ்)

சில மாதங்களுக்கு முன்னாடி தன் அப்பா இந்தியாவிற்கு போய் தன் சொந்தங்களை பார்க்க வேண்டும் என்று ஆசையை அவனிடம் செல்ல அவன் அவரை ஒரு மாத சுற்றுலா மாதிரி இந்தியா அனுப்பியிருந்தான்.

இரண்டு நாள் முன்பு அவர் திடீரென போன் செய்து அவனை இந்தியா வரச்சொல்லவும் “எதுக்குப்பா நீங்களே இன்னும் பத்துநாள்ல இங்க வந்துருவிங்க. இப்ப எதுக்கு இவ்வளவு அவசரமா என்ன வரச் சொல்றிங்க” என்றுக் கேட்க

“நான் சொன்னா நீ கேட்பியா? மாட்டியா?” என்று எதிர் கேள்வி கேட்க

அவனும் “சரிப்பா ஒரு வாரம் லீவ் போட்டு வரேன்” என்று இதோ இந்தியாவிற்கு இன்று போகப்போகிறான்.

இரண்டு மணி நேரம் சென்றதே தெரியாத அளவிற்கு கிளாஸ் எடுப்பதில் மூழ்கியிருந்தவன் அடுத்து ஒரு பேராசிரியர் வரவும் தான் நிறுத்தி,
“ஓகே சி யூ ப்ரண்ட்ஸ். இப் யு ஹேவ் எனி டௌட்ஸ் மெய்ல் மீ கய்ஸ்” என்று சொல்லி விடைபெற்றான்.

அவன் விடைபெறவும் தான் மற்றவர்களும் அந்த கணித உலகத்திலிருந்து பூலோகத்திற்கு திரும்பினர்.

வெளியே வந்த அவனை அவன் நண்பன் கிஷோர் பிரசாத் “ஹே செல்வா வெயிட் வெயிட்” என்று பிடித்துக்கொள்ள

“என்னடா வேணும் உனக்கு?”

“இரு நான் வந்து உன்ன ஏர்போர்ட்ல விட்டுட்டு வரேன்” எனவும்

“ஓகே” என்று தலையசைத்தவன் அவனோடு கிளம்பியிருந்தான்

கிஷோர் அவனை சென்று ஏர்போட்டில் விட்டு “என்ஜாய் தி வெகேஷன்டா” என்று சொல்ல

“ம் பை டா” என்று விடைபெற்றவன் இந்தியா செல்லும் விமானத்தில் ஏறிஅமர்ந்தான்.
இந்தியாவில் குறிப்பாக தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஆலமரத்துப்பட்டியில் உள்ள அந்த வீட்டின் மச்சில்(மாடியில்) அமர்ந்துக்கொண்டு,

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் தொளசண்ட்
வாட்ஸ் பவரு
கருப்புதான் எனக்கு
புடிச்ச கலரு
சாமி கருப்புதான்
சாமிசிலையும் கருப்புதான்
யானை கருப்புதான்
கூவும் குயிலும் கருப்புதான்
என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது
குத்துற மீச கருப்புதான்
அசத்தும் கருப்புதான்
கருப்புதான் எனக்கு
புடிச்ச கலரு

என்ற பாட்டைக்கேட்டுக்கொண்டு காலாட்டிய படியே கனவு கண்டுக் கொண்டு இருந்தாள் நம் நாயகி செந்தாமரைச்செல்வி.

திண்டுக்கல் நிலக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள ஆலமரத்துப்பட்டியில் தான் நம் நாயகி பிறந்தது, வளர்ந்தது என அனைத்தும்.
அந்த ஊரிலுள்ள பெண்கள் யாரும் ஐந்தாம் வகுப்பை தாண்டி படித்ததில்லை.
அங்க ஐந்தாவது வரைக்கும் தான் படிக்க முடியும். மேல படிக்கணும்னா பக்கத்து ஊருக்கு போய்தான் படிக்கனும். அந்த ஊருக்கு போக இரண்டு வழி இருக்கு.
ஒண்ணு அவங்க இரண்டு ஊருக்கும் நடுவுல இருக்க ஆத்த கடந்து போகணும் இல்ல பன்னிரெண்டு கிலோமீட்டர் சுத்தி இருக்க மண்சாலைல நடந்துபோய் தான் படிக்கணும்.
அந்த ஊருக்கு இன்னும் ரோடே போடல அதனால பஸ்ஸ{ம் போகாது.

நம்ம செந்தாமரைச் செல்வி மட்டும் தான் எட்டாவது பாதி வரைக்கும் படித்தவள். அவ பெரிய மனுஷி ஆகவும் படிச்சது போதும்னு எட்டாவது பாதியிலே அவங்க வீட்டுல நிப்பாட்டிட்டாங்க.
அதனால் அந்த ஊரிலேயே அவ தான் அதிகம் படிச்ச பொண்ணு. அதுல அவளுக்கு கொஞ்சம் கர்வம்.

அவள பத்தி பார்க்குறதுக்கு முன்னே நம்ம அவ குடும்பத்த முத பார்த்துட்டு வருவோம்.

பஞ்சவர்ணம் பாட்டி கருப்புசாமி தாத்தா கல்யாணம் பண்ணி இந்த ஊருக்கு வந்தவங்க தான். அவங்களுக்கு மூணு பொண்ணு ஒரு ஆணு. பையன் பேரு மாணிக்கம். மாணிக்கத்தோட மனைவி அமுதா.

மாணிக்கத்துக்கு இரண்டும் பொண்ணுங்க தான். அதனால பஞ்சு பாட்டிக்கு கொஞ்சம் என்ன ரொம்பவே வருத்தம். ஆனா மாணிக்கத்துக்கு சந்தோஷம் தானுங்க.
ஏன்னா அவரோட இரண்டாவது பொண்ணு அப்படியே அவரு அப்பத்தா கலருல அவங்கள மாதிரி பிறந்தது.

அவரோட முதல் பொண்ணு செண்பகவல்லி. தன்னோட அத்தை மகன் முத்துப்பாண்டிய கட்டிக்கிட்டாங்க. அவங்களுக்கு நாலு வயசுல தங்கப்பாண்டினு ஒரு மகனும,; இரண்டு வயசுல மல்லிகானு ஒரு மகளும் இருக்கு.

மாணிக்கம்-அமுதா அவங்களோட இரண்டாவது மக தான் நம்ம செந்தாமரைச் செல்வி.
சரியான வாயாடி. ஊர்ல இருக்க யாரையும் விடமாட்டா. எல்லாரும் இவள பாத்துதான் பயப்படுவாங்க. ஆனா இவளும் பார்த்து பயப்படுறது ஒருத்தர் தான்.
அது அவங்க ஐயன்(அப்பா மட்டும் தான்). அவரு எது சொன்னாலும் இவளால எதிர்த்து பேச முடியாது. செஞ்சுத் தான் ஆகணும்.

நம்ம செந்தாமரைச் செல்வி நல்ல மாம்பலக் கலர்(அதாங்க பொன்னிறம்). என்ன கொஞ்சம் குட்டை.

அவங்க அக்காவுக்கு இருக்கமாதிரி தனக்கு முடிநீளமா இல்லேன்னு மேடம்கு ரொம்ப வருத்தம். அவளுக்கு முடி கொஞ்சம் கம்மி தான்.
கொஞ்சம் பூசுன உடல்வாகு. ஆனா அது தான் அவளுக்கு அழகே. மொத்தத்துல அவளும் அழகி தாங்க.

பத்து நாளுக்கு முன்னாடி பஞ்சு பாட்டிக்கு அண்ணன் மகன் முறையான அரசு இவங்க வீட்டுக்கு வந்தார்.

வந்தப்ப நம்ம செல்விய பார்த்து புடிச்சுப் போய் தன் மகனுக்கு கேட்க நம்ம பஞ்சும் வாய் சும்மா இருக்காமா சரின்னு சொல்லிருச்சு.

அவரும் தன் மகனோட போட்டோவ காமிச்சு அவன பத்தி சொல்லவும் மாணிக்கத்துக்கும் திருப்தியா இருக்க அவரும் ஒத்துக்கிட்டாரு.

அரசு திரும்பி ஊரு போறதுக்குள்ள கல்யாணத்த வச்சு கூடவே தன் மருமகளையும் கூட்டிப்போகலாம்னு முடிவெடுத்து தன்னோட மகன இந்தியாவுக்கு வர சொல்லிட்டாரு.
ஆனா தன் பையனுக்கு இன்னும் இந்த விஷயத்த சொல்லல.
அவரு வந்தப்ப செல்வி கொஞ்சம் நேரம் தான் வீட்டுல இருந்தா. அப்புறம் தோட்டத்துக்கு போயிட்டா.

ஒருவேளை இருந்துருந்தா அவனோட வேலை பத்தி தெரிஞ்சிருந்;தா கண்டிப்பா சம்மதிச்சிருக்கமாட்டா.
ஆனா அவங்க ஐயன் தன்னோட சின்ன நோக்கியா போன்ல போட்டோவ எடுத்து அவளுக்கு காண்பிக்க அவளுக்கும் அவன போட்டோ பார்த்ததுல புடிச்சி போயிருச்சு. அதனால அவ வீட்டுல கேட்டதுக்கு “உங்க இஷ்டம்னு” சொல்லிட்டா.

அவள் தோழி அம்பிகா வந்து “என்னடி பாட்டுக் கேட்டு கனவுகான்ற மாதிரி உக்காந்துருக்கவ. என்ன விஷயம்?” எனக் கேட்கும் வரை பாட்டுக்கொண்டே கனவுலகத்தில் இருந்தாள்.

அவள் இவளை கையில் இடித்துக்கொண்டு அமரவும் தான் சுயஉணர்வு வந்தவள் அம்பிகாவை பார்த்து வெக்கப்பட்டுக்கொண்டே “என் மாமன் கிளம்பிட்டாங்களாம் இப்பத்தேன் போன் பண்ணுனாங்களாம். அப்பத்தா சொல்லுச்சு” என

“சரி புள்ள. அதுக்கு இன்னும் ஆறு நாள்ல கல்யாணத்த வெச்சிக்கிட்டு அப்படி என்ன நினைப்புல இங்க வந்து தனியா உக்காந்து இருக்க”

“அது வந்து உனக்குத் தெரியும்தான எனக்கு கருப்பு கலர்னா ரொம்ப பிடிக்கும்னு. அதான் அவங்க போட்டோவ பாத்துட்டு இருக்கேனு” என அந்த சின்ன நோக்கியா பிளாக் அன்ட் ஒயிட் மொபைலை பார்த்துக்கொண்டே சொல்ல

“உனக்கு என்னடி கருப்பு கலர் பைத்தியம் போய் பிடிச்சுருக்கு” என ஆரம்பிக்க

“அப்ப உனக்கு பிடிக்காதா. இரு இரு ராசு அண்ணாட்ட டெல்லில இருந்து போன் வரவும் சொல்றேன்” என மிரட்ட

“ஆத்தி அவுகட்ட எதுவும் சொல்லிக் கொடுத்துறாதடி. அப்புறம் எங்க ஐய்யன்(அப்பா) என பொளி போட்டுருவாரு” எனவும்
செல்வி கெத்தாக அவளை பார்த்தாள்.

தனக்கு அண்ணன் முறையாகும் ராசுவைத் தான் அம்பிகாவுக்கு பரிசம் போட்டிருப்பதால் அவளை இப்படி அடிக்கடி செல்லமாக மிரட்டுவாள்.

அவளுக்கு எப்போதும் கருப்பு கலர் என்றால் ரொம்ப பிடிக்கும். அவங்கப்பா கூட கருப்பா தான் இருப்பாரு. அவங்க ஊர்ல பாதி பேர் நம்ம திராவிட நிறமான கருப்பு தான்.
அவளோட வருங்கால புருஷன் போட்டோ பார்த்து கிண்டலடிச்சா சும்மாவா இருப்பா, அதான் அப்படி மிரட்டிட்டு இருக்கா.

அவனை அவள் பர்த்த பிறகு என்ன நடக்கப் போகிறது என்று காத்திருந்து பார்ப்போம்

-மலரட்டும்.

Advertisement