Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 15


கதிர் உலுக்கிய உலுக்கலில் வான்மதி பயந்து பார்க்கவும் அந்தப் பார்வை அவன் நெஞ்சை கொள்ளை கொள்ள ஆசையாக அவளை அப்படியே தன் ஆளுமைக்கு கொண்டு வந்தான்.

விடிந்தும் விடாமல் அவன் அவளிடம் தேடிக் கொண்டே இருந்தான்.


அவள் மிகவும் சோர்ந்து போகவும் அவளிடமிருந்து விலகி அவளை தன் மேல் போட்டுக் கொண்டான், அவளை அணைத்துக்கொண்டே உறங்கியும் போனான்.


அவளும் சற்று நேரம் உறங்கி பின் உறக்கம் வராததால் எழ முயற்சி செய்ய அவனோ அவளை தன்னுள் மேலும் இறுக்கி உறங்க ஆரம்பித்தான். பின் அவனும் உறக்கம் களைந்து எழுந்து அமர்ந்து அவளை விட்டான்.


அவள் ஏதோ தைரியத்தில் அவளுக்கு இத்தனை நாள் தன் மனதிலிருந்த சந்தேகத்தை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று அவனிடம் “உங்களுக்கு என்னை பிடிக்கல்லையா?” மெதுவாகக் கேட்க


அவனோ “அப்படியெல்லாம் இல்லை” என்று சொல்ல


அப்போதும் விடாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்து “நீங்க வேற யாரையாவது விரும்புனிங்களா?” என

அவனுக்கு கோபம் வந்து விருட்டென்று எழுந்து வெளியே செல்ல முயற்சிக்க

அவள் சென்று தடுத்து “அப்புறம் ஏன் இப்படி நடந்துகிறிங்க?” எனவும்


“எனக்கு யாரையும் பிடிக்கல்லை. நான் யாரையும் விரும்பலை. என்னை கொஞ்ச நேரம் தனியா விடு” என்று கத்திவிட்டு அவளை அங்கிருந்த சோபா மேல் தள்ளிவிட்டு சென்றான்.


அங்கே கோவிலில் சஞ்சனாவுக்காக திதி கொடுத்துக் கொண்டிருந்த கதிரின் குடும்பத்தாருக்கு மீண்டும் ஏதோ தவறாக நடக்கப் போவது போல் மனது அடித்துக் கொண்டது.


ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இதே நாளில் நடந்த நிகழ்வுகளால் கனத்திருந்த மனது இன்று மேலும் கனக்க தொடங்கியது.


திதி கொடுக்க வேண்டிய அனைத்தும் முடிந்ததும் கதிரின் அம்மா மீனாட்சி வான்மதியிடம் பேசலாம் என்று அவளுக்கு போன் செய்ய ரிங் போய்க் கொண்டே இருந்ததே தவிர எடுக்கவில்லை. சரி கதிரிடமாவது பேசலாம் என்று அவனுக்கு அழைக்க அவனும் எடுக்கவில்லை.


பிறகு வீட்டில் வேலை செய்யும் சாரதாவிற்கு போன் செய்து வான்மதியிடம் கொடுக்கச் செல்ல அவர் மேலே சென்று பார்க்க வான்மதி அவள் அறையில் இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தாள்.


அதைப்பார்த்து அதிர்ச்சியுற்ற அவர் மதி பாப்பா என்று கத்தி எழுப்ப முயற்சி செய்ய


மீனாட்சிக்கு அவர் கத்தவும் “என்;னாச்சு மதிக்கு. நீங்க மதிக்கிட்ட போனை கொடுங்க” என்று பதட்டமாக பேச
அந்தப் பக்கத்திலிருந்து அவருக்கு பதில் தான் கிடைக்கவில்லை.


சாரதா அம்மா வேகமாக கீழே சென்று டிரைவர் மற்றும் வாட்ச்மேன் துணையுடன் அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்தார்.


ஹாஸ்பிட்டலுக்கு போகும் வழியிலே அப்போத தான் ஞாபகம் வந்தவராய் கதிரின் அம்மா மீனாட்சிக்கு போன் செய்து


“அம்மா மதி பாப்பா தலையெல்லாம் இரத்தத்தோட மூச்சு பேச்சில்லாமல் கீழ விழுந்து கிடக்கறாங்க. நாங்க ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறோம்” என்று அவசரமாகச் சொல்லி வைத்தார்.


வான்மதிக்கு அடிபட்டிருப்பதைக் கேட்டதும் அவர் அழுதுக் கொண்டே சென்று தன் கணவரிடம் கூற, அங்கே அவர்களுக்கும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.


சரி கதிரிடம் வான்மதிக்கு என்ன? எப்படி? என்று விசாரிக்கலாம் என அவர்கள் கதிருக்கு கால் செய்ய அவன் எடுக்கவில்லை.


மறுபடியும் சாரதா அம்மாவிற்கே போன் செய்து வான்மதியை பற்றிக் கேட்க


அவர் “அம்மா ஐ.சி.யுல சேர்த்துருக்காங்க வேற எதுவும் சொல்ல மாட்றாங்க” எனவும்


“கதிர் அங்க இருக்கானா?” என்றுக் கேட்க


“இல்லம்மா கதிர் தம்பிக்கு அடிபட்டிருக்கது தெரியாது போன் பண்ணா தம்பி எடுக்கல” எனவும்


பின் அவர்கள் எந்த ஹாஸ்பிட்டல் என்று கேட்டுக்கொண்டு தாங்கள் வரும் வரை அவரை வான்மதிக்கு துணையாக இருக்கும் படி சொல்லி போனை வைத்தனர்.


அவர்கள் பதட்டமாக கிளம்பி சென்னைக்கு வந்துக் கொண்டிருந்தனர்.


மீனாட்சி “நமக்கு மட்டும் ஏங்க எப்பவும் இப்படி எல்லாம் நடக்குது” என்று வரும் வழியெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தார்.


மதியம் கோபமாக வீட்டை விட்டுக் கிளம்பிய கதிரின் கையில் கார் பறந்துக் கொண்டிருந்தது. எங்கு செல்வது என்று இலக்கில்லாமல் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

அந்த உச்சி வெயிலில் கடற்கரைக்கு வந்து மணலில் அமர்ந்திருந்தான். அவனால் வான்மதி தானாக வந்து தன்னை அணைத்ததையும் அவள் யாரையாவது காதலிச்சிங்களா என்று கேட்டதையும் தாங்க இயலவில்லை.


அதுவும் இன்று அவள் அப்படி கேட்டதை எண்ணி கோபம் கோபமாக வந்தது. அதனாலேயே அவளை வேகமாக தன்னிடமிருந்து விலக்கி திட்டி அங்கிருந்த சோபாவில் தள்ளி விட்டு வந்தான்.


இருந்தாலும் அவனுடைய மனம் ஆறவில்;லை. இதே வேறொரு அவள் இவ்வாறு தன்னை நாடச் செய்திருந்தால் கூட அமைதியாக விலகியிருப்பான்.

ஆனால் இன்று அவனால் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் எங்கே கோபத்தில் அவளை அடித்து காயப்படுத்திவிடுவேனோ என்று எண்ணி அங்கிருந்த சோபா மேல் தள்ளிவிட்டிருந்தான்.


ஆனால் அவன் அறியாதது அவள் கால்கள் தடுமாறி அங்கிருந்த டேபிளில் மோதி அவள் தலையிலிருந்து இரத்தம் கொட்டி மயங்கியது.


தன்னுடைய கோபம் சிறிது குறையவும் நேரத்தைப் பார்க்க மணி மாலை ஆறு காட்ட சரி வீட்டிற்குச் செல்லலாம் என்று காருக்கு போனான்.


காரிலிருந்த போனை எடுத்துப்பார்க்க அத்தனை கால் அவன் வீட்டு நபர்களிடமிருந்து வந்திருந்தது.


‘அவர்கள் இங்கு இல்லையே எதற்கு இத்தனை தடவை போன் செஞ்சிருக்காங்க யாருக்கு என்னவாயிற்றே’ என்று பயந்து தன் அப்பாவிற்கு கால் செய்தான்.


அவர்கள் சென்னையை அடைய சில மணி நேரம் இருக்கும் போது கதிர் போன் செய்தான்.


அந்தப் பக்கம் போன் எடுத்தவுடனே “என்ன ஆச்சுப்பா? எதுக்கு அத்தனை தடவை கால் பண்ணியிருக்கிங்க? யாருக்கும் ஒன்னும் இல்லையே? எல்லாரும் நல்லா இருக்கிங்களா?” என்று மூச்சுக் கூட விடமால் கேள்வி மேல் கேள்வி கேட்க


“நீ மொத எங்க இருக்க கதிர்? ஏன் கால் பண்ணா எடுக்கமாட்டுற?”


“அங்க மதிக்கு அடிபட்டு ஹாஸ்பிட்டல சேர்த்துருக்காங்க நீ என்னன்னா எங்கள பத்தி கேட்டுட்டு இருக்க” என்று கோபத்தில் பொரிய


அவனுக்கு தன் காதில் சரியாக தான் விழுந்ததோ காரை ஓரமாக நிறுத்தி “என்னப்பா என்ன சொல்றிங்க” என


“வீட்டுல வேலை செய்றவங்க மதிக்கு தலையில் அடிபட்டு ….. ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்க நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துருவோம்” என்றுக் கூறி போனை வைத்தார்.


கதிர் வேகமாக அங்கு செல்ல அங்கே டிரைவரும் வீட்டு வேலை செய்யும் சாரதா அம்மாவும் இருந்தார்கள்.


அவர்களிடம் சென்று கேட்க “மதி பாப்பா சோபா பக்கத்துல்ல இருந்த டேபிளில்ல இடிச்சுக்குச்சோ என்னமோ தலைல அடிபட்டு முகமெல்லாம் இரத்தமா மயங்கி இருந்தது. நாங்க பார்த்தவுடனே இங்க வந்து சேர்த்திட்டோம் அந்த ரூம்ல தான் வைச்சிருக்காங்க மூணுமணி நேரத்துக்கு மேல ஆச்சு யாரும் ஒன்னும் சொல்லமாட்றாங்க” என்று சொல்லி ஐ.சி.யு பக்கம் கைகாட்ட


கதிருக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் தான் கீழே தள்ளி விட்டு சென்றதால் தான் மதிக்கு அடிபட்டது என்று புரிந்தது. அவனும் அங்கிருந்த டாக்டரிடம் சென்று விசாரித்தான்.


டாக்டரிடம் தன்னை வான்மதியோட ஹஸ்பண்ட் என்று அறிமுகப்படுத்தி அவரிடம் அவளைப் பற்றி விசாரிக்க


அவரோ “தலைல லேசா தான் அடிபட்டிருக்கு, தையல் போட்டுருக்கோம். ஆனா அடிபட்டதுல நிறைய ப்ளட் லாஸ் ஆகி இருக்கு. அடிபட்டு ரொம்ப நேரம் ஆகியிருக்கும் போல. இன்னும் இரண்டு மணி நேரம் கழிச்சி தான் சொல்ல முடியும் இப்ப எதுவும் சொல்ல முடியாது” என்று கையை விரிக்க அவனுக்கு உலகமே இருண்டது.


அங்கு போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து ‘நீ இல்லாமா என்னால இருக்கமுடியாது மதி. ப்ளிஸ் மதி நீ என் கிட்டயே திரும்ப வந்துரு. இனி உன்ன நான் பத்திரமா பாத்துப்பேன். உன்ன திட்டவே மாட்டேன். நீ என்ன கேட்டாலும் பதில் சொல்றேன்’ என்று மனது கதற கண்களோ அவளுக்காக கண்ணீரைச் சுரந்தது.


தன் கைகளில் ஏதோ பட்டது போல் இருக்க அப்போது தான் அவன் அழுவது அவனுக்கே தெரிந்தது.
இத்தனை நாள் அவள் மேல் தான் காதல் கொண்டுவிடுமோ என்று பயந்து அவளை தன்னிடமிருந்து விலக்க கோபத்தை ஆயுதமாக பயன்படுத்தினாலும், அவள் மேல் உள்ள அக்கறையினால் காதலால் எங்கே தன்னால் தன் செய்கையால் அவளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுமோ என்று பயந்து தான் விலகியிருந்தான்.


அவனுக்கு இப்போது தான் அவள் மேல் தான் கொண்டிருந்த காதல் புரிந்தது.


‘உன்னால தான அவளுக்கு இப்படி ஆயிறுச்சு. இதுக்கு உனக்கு என்ன தண்டனை?’ என்று இப்போது அவன் காதல் கொண்ட மனது வெளிவந்து அவனை குற்றம் சாட்டி அவனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது.


சில மணி நேரத்தில் கதிரின் குடும்பத்தாரும் வந்து விட அப்பொழுதும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை.
மீனாட்சி நேராக கதிரிடம் சென்று “உன்னால தான் மதிக்கு அடிபட்டுச்சா?” என்று கேட்டு கத்த


அவனோ எதுவும் பேச இயலாமல் தலையை மட்டும் ஆம் என்பது போல் அசைக்கவும்


கிரியோ “நீ மதிய என்ன பண்ணுன?” என


“நான் தள்ளுனதல கீழ விழுந்து தலைல அடிபட்டிருச்சு” என்று குரல் கமறச் சொல்ல


மீனாட்சி கோபம் வந்து “நீயெல்லாம் என் பிள்ளையாடா. ஏற்கனவே ஒருத்தி இன்னைக்கு தான் செத்தா. அவ உன்கூட வாழ்றதுக்கு சாகறதே நல்லதுனு செத்துட்டால என்னவோ. இப்ப இவளையும் கொல்ல போறியா?” எனவும்


சுந்தரேசன் தான் “மீனா வார்த்தைய விடாத. என்ன நடந்துச்சுன்னு பொறுமையா கேக்கலாம்” என


அவரோ அதையெல்லாம் கேட்காமல் அவனை அங்கிருந்து போகச் சொல்லிக் கத்தி அழ அவனும் எதுவும் பேச முடியாமல் அங்கே ஹாஸ்பிட்டல் ரிசப்ஷனில் வந்து அமர்ந்தான்.


கிரி அவன் பின்னேயே வந்து “அத்தை ஏதோ கோபத்துல சொல்லிட்டாங்க. நீ அத நினைச்சு கவலைப்படாத கதிர்” என்று சமாதானப்படுத்த


அவன் தன் மனக்காயத்தை மறைத்து “புரியுதுடா. நீ அங்கே போய் துணையா இரு. ஏதாவது வேணும்னா என்கிட்ட சொல்லு” என்றான்.


கிரியும் அவன் கொஞ்ச நேரம் தனியாக இருந்தால் சரியாகி விடுவான் என்று அங்கே ஐ.சி.யுவிற்கு வெளியே காத்திருக்க ஆரம்பித்தான்.


அவர்கள் அனைவரும் மதி முழிப்பதற்காகக் காத்திருக்க ஆரம்பித்தனர்.


அவர்கள் அனைவருக்கும் சில கடந்த கால நினைவுகள் நினைவில் வந்து சுழற்றியது.

Advertisement