Advertisement

சக்தி வரவும் அவளை ரசனையோடு பார்க்க…. அவனின் பார்வை மாற்றத்தை கவனிக்காமல்…

அவனருகில் வந்து ஆதர்ஷை அவன் மேலிருந்து தூக்கி படுக்க வைத்தாள். அவனருகில் அமர்ந்து, “ஜெயில்ல ரொம்ப கஷ்டமா இருந்ததா கார்த்திக்”, என்றாள்.

“முடிச்சே வந்துட்டேன்! இப்போ அதை பத்தி என்ன?”, என்றான் அவளை பார்வையிட்டுக் கொண்டே…..

“அப்போ கஷ்டமா இருந்தது! அதான் பேச்சை மாத்தற….”,

“நான் கொஞ்சம் ஹை ஃபையா வளர்ந்துட்டேன்! ஹை ஃபையா இருந்து பழகிட்டேன்… அப்படி பார்த்தா அந்த வாழ்க்கை கஷ்டம் தான்…. மத்தபடி கஷ்டம்ன்னு பெருசா ஒன்னுமில்லை சக்தி…”,

“சாப்பாடு தான் கொஞ்சம் பிடிக்கலை….. தூங்குனா கொசு கடிக்கும்…. பிரைவசி கஷ்டம்…… இப்படித்தான்…. பட் ஓகே! என்னால இதோட எல்லாம் அட்ஜஸ்ட் பண்ண முடிஞ்சது… முதல்ல கஷ்டமா இருந்தாலும் அப்புறம் பழகிடுச்சு”, என்றான்.

“கல்லெல்லாம் உடைக்க சொல்வாங்கலாமே…”,

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை! என்னால செய்ய முடியாத அளவுக்கு எந்த வேலையும் இல்லை… அதையெல்லாம் விடு! நீ என்ன பண்ணின..?”,

“நான் தானே!…….. உங்க பையனும் பொண்ணும் என் நேரத்தை முழுசா எடுத்துகிட்டாங்க…. அதுவும் ஆதர்ஷ் சொன்னா கேட்டுக்குவான்! ஆனா காயத்ரி, இப்போவே அவளுக்கு என்ன தெரியும்…….. நாம பேசறது கூட சரியாய் புரியாது! எதையாவது செய்யாதேன்ற மாதிரி நாம சொன்னா உடனே செய்றா…. என்னை அசையவிடறதில்லை”,

“காலேஜ் கூட சில சமயம் அவளை தூக்கிட்டு போவேன்!”, என்றாள்..

அவள் ஆர்வமாக பேசுவதை ரசனையுடன் பார்த்தவன்…. “ரெண்டு வருஷத்துல உன்கிட்ட நிறைய சேஞ்”, என்றான்.

“என்ன சேஞ்”, என்றாள் புரியாமல்.

“உனக்கு வயசு கூடுதா குறையுதான்னு தெரியலை…… ரெண்டு குழந்தைக்கு அம்மா மாதிரியே இல்லை! யு லுக் யங்!”, என்றான் பார்வையால் அவளை அங்குலம் அங்குலமாக அளந்தபடி.  

“ஹேய்! நீ ஜெயில்ல பொண்ணுங்களையே பார்க்காம காஞ்சு போய் வந்திருக்க இல்லையா……. அதனால கொஞ்சம் பசுமை ரொம்ப பசுமையா தெரியுது”, என்றாள் குறும்புடன்.

“யார் சொன்னா நான் ஜெயில்ல பொண்ணுங்களை பார்க்கலைன்னு?”, என்றான் சரசமாக…  

“ஒஹ்! உன்னோட ஜெயில் கோ எஜுகேஷன்னா”, என்றாள்…. அவனை பார்த்ததும் பழைய சக்தி திரும்பியிருந்தாள்….

அவள் காதை பிடித்து திருகுவது போல கார்த்திக் பாவனை செய்ய……

“சரி! சரி! டிஸ்டர்ப் பண்ணலை! மேல சொல்லு!”,

“எதை!”,

“உன்னோட ரொமாண்டிக் டைலாக்கை”,

“அப்போ நான் என்ன பேச வந்தேன்னு உனக்கு தெரியுமா?”,

“இது கூட சக்திக்கு தெரியாதா?”, என்று அவனையே பதிலுக்கு கேட்டாள்.  

“எங்கே சொல்லு”, என்று அவன் சவால் விட…

“கண்ணை மூடினா உன் உருவம் தான் தெரியும்னு சொல்லுவ! கரக்டா!”,  

கார்த்திக் உற்சாகமாக, “ஹேய் பப்ளி! நிஜமாவே அதுதான் சொல்ல வந்தேன்!”, என்றான்….

“அது என்ன பப்ளி….”,

“குச்சி குச்சியா இருந்த உன் கை பாரு இப்போ சதை போட்டு அழகா இருக்கு….”, என்று சொல்லிக்கொண்டே அவளின் கையை வருடி அவளை சிலிர்க்க வைத்தான்…..

“அப்புறம் உன் கன்னம் பார்த்தவுடனே கடிக்க தோணுது….”, என்று சொன்னதை செயலில் காட்டினான்.  

“இதுவரைக்கும் உனக்கு இடுப்பு இருக்குமா இல்லையான்னு யோசிக்கற மாதிரி இருக்கும்….. இப்போ தான் அது ஒரு ஷேப்ல இருக்கு”, என்று சொல்லிக்கொண்டே அவளை இடுப்பில் அணைத்து பிடித்து அங்குலம் அங்குலமாக வர்ணிக்க ஆரம்பிக்க…..

“ஹேய்! கார்த்திக் ஸ்டாப்! ஸ்டாப்!”, என்று விலக முற்பட….  

“no stop baby… this is non stop…….. you turned as a beautiful lady…  நிஜமாவே உன்னோட வளைவுகள் அதிகமாகிடிச்சு”, என்றான் கண்ணடித்தபடி.

“ஷ்! கார்த்திக்! என்ன இது?”, என்றவளின் குரல் உள்ளே போயிருந்தது…

“ஆமாம்! சரியாய் பார்க்காம சொல்லக் கூடாதில்லை…. வா பார்க்கலாம்”, என்றவன் அதை செயலில் காட்ட விரும்ப…..   

“குழந்தைங்க!”, என்று லாவகமா விலகியவள்…… “என்ன கார்த்திக் ரொம்ப ரொமாண்டிக்கா இருக்குற இன்னைக்கு”,

“ரெண்டு வருஷம் ஒரு மனுஷன் பொண்டாட்டிய பார்க்காம இருந்து பார்க்கிறேன்! இவ்வளவு ரொமாண்டிக்கா கூட இருக்க மாட்டானா என்ன? அதுவும் உண்மையா நீ இன்னும் அழகா மாறிட்ட”,

“எத்தனை தடவை சொல்லுவ அதை”….. சக்தி முகச் சிவப்பை மறைக்க முயன்றாலும் முடியவில்லை….    

“நான் முதல்ல உன்னை உன்னோட டீன் ஏஜ்ல பார்க்கும் போது இப்படி தான் பப்ளியா இருப்ப…”, என்று கன்னத்தில் முத்தமிட….

சக்தி மயங்க ஆரம்பித்தாள் என்று சொல்வதை விட கார்த்திக் அவளை மயக்க ஆரம்பித்தான்….

“i missed you baby…… i missed you very much”, என்ற வார்த்தைகள் கார்த்திக்கின் வாயிலிருந்து வந்த போது சக்தி உலகையே மறந்திருந்தாள் என்பதை விட உலகையே மறக்க செய்திருந்தான் கார்த்திக்….. 

“i love you baby….. i love you very much”, என்று அவன் சொன்ன போது அவனுள் கரைந்தே போயிருந்தாள்…….

அது இருவருக்குமே  மீளா மயக்கம்….

சரியாக மூன்று மணிக்கு காயத்ரி அழுத அழுகையில், அடித்து பிடித்து எழுந்தான் கார்த்திக்….

சக்தியும் விழித்து அவளை கைகளில் தூக்கி இருந்தாள்…

“எதுக்கு சக்தி இவ இப்படி அழறா?”, என்று கார்த்திக் பதற….

“பசின்னு வந்துட்டா இந்த கத்து தான் கத்தும் இந்த சின்ன குட்டி…..”, என்று அவளை தூக்கி கொண்டு சக்தி கதவை திறந்து சமையலறை போக முற்பட……

அவளை கையில் வாங்க முயன்றான் கார்த்திக்… புதியவனை பார்த்தும் அழுகையின் வீரியம் அதிகமாகியது….  

குழந்தை கத்திய கத்தலில்……. “இல்ல! இல்ல! நான் தூக்கலை”, என்றான் பதட்டமாக…

“அவ அப்படிதான் கத்துவா”, என்று கார்த்திக்கை சமாதானப்படுத்திக் கொண்டே…… கதவை திறக்க….. வாசலில் ஒரு ட்ரேயில் பிளாஸ்க்கில் பால், அவளின் சிப்பர் என்று இருந்தது…….

காயத்ரியை பற்றி அறிந்திருந்த தெய்வானை…. அதை வைத்துவிட்டு தான் உறங்க போயிருந்தார். 

அவளை இடுப்பில் வைத்துக் கொண்டே பாலை கலக்க ஆரம்பிக்க… பாலை பார்த்தும் அவளின் அழுகை சற்று மட்டுப்பட்டது…..

அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு பாலைக் குடித்தவள்….. அந்த பால் காலியாகும் முன்னரே உறங்கியிருந்தாள்…..

“இவளா சக்தி அந்த கத்து கத்துனா! அதுக்குள்ள தூங்கிட்டா……?”,

“அப்படிதான் உங்க பொண்ணு!”, என்று சிரித்தாள் அவனின் மனைவி…..

காலையிலும் விழித்ததில் இருந்து தூரமாக தான் காயத்ரி நின்று அவனை வேடிக்கை பார்த்தாள், அருகில் வரவில்லை…..

காலை எழுந்து வந்த ஆதர்ஷிடம் தமிழ் பேப்பர் ஒன்றை கையில் வீரமணி கொடுக்க…… அவன் அதை வைத்துக் கொண்டு…. எழுத்துக் கூட்டி வார்த்தையை கூட படிக்கவில்லை… வெறும் எழுத்தை க, ம, ற, ல என்று வேண்டுமென்றே அவனின் இஷ்டத்திற்கு சொல்லிகொண்டிருந்தான்.

பார்த்த கார்த்திக், “என்ன சக்தி இது!”, என்று கேட்க…….

“எங்கப்பா அவனை அரசியல்வாதி ஆக்க போறாராம்…… அதுக்கு இப்போ இருந்தே தமிழ் பேப்பர் படிக்க ட்ரைனிங் குடுக்கறார்”, என்று சக்தி சொல்ல…..

கார்த்திக்கினால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை…. வாய் விட்டு சத்தமாக சிரித்தான்….

வீடே அதை ஆசையாய் பார்த்தது….

பின்பு ஆதர்ஷும் சக்தியுமாய் கார்த்திக்கை, “அப்பா”, என்று சொல்லி காயத்ரியை அவனிடம் போக வைத்தனர்…

இரண்டே நிமிடம் இருந்து அன்னையிடம் தாவினாள்….

மீண்டும் சக்தி அவனிடம் கொடுக்க முற்பட…. “அவளா வருவா! விடு!”, என்று விட்டான்.

பின்பு காலையில் மனைவி மக்களுடன் வாசுகியை பார்க்க போனான்…..

இவர்கள் வருவது தெரிந்து பிரபு, வைஷ்ணவி, அவன் மக்கள் மட்டுமல்ல சிவா சுமித்ராவும் கூட அவர்களின் பிள்ளைகளுடன் இருந்தனர்….

அவனின் தாத்தா பத்ரிநாத் இன்னும் ஆரோக்யமாக நன்றாக இருந்தார்…

வாசுகியை பார்த்ததும் ஆதர்ஷும் காயத்ரியும் அவருடன் ஒட்டிக் கொண்டனர்.. சக்தி பழக்கி வைத்திருக்கிறாள் என்று புரிந்தது. 

அவர்களுடன் பொழுது இனிமையாக கழிந்தது….

மாலையில் வீடு வந்த போது குழந்தைகளை அம்மாவிடம் விட்டு, “கார்த்திக்! உன் கிட்ட பேசனும்”, என்று சக்தி சொல்ல….

“என்ன”, என்று ரூமிற்குள் வந்தவனிடம்……

“நான் உனக்கு சொல்லாம கொஞ்ச வேலையை செஞ்சிட்டேன்”, என்றாள்….

“என்ன”, என்று கார்த்திக் பார்க்க….

“நீ வர்ற வரைக்கும் சினிமா தயாரிக்க வேண்டாம்னு சொன்னியாம்… நான் ஃபர்ஸ்ட் காபி பேசிஸ்ல பண்ணிட்டு தான் இருந்தேன்”, என்றாள்…..

இது கார்த்திக்கிற்கு தெரிந்தது தான்…. அமைதியாக அவளை பார்த்தான்….

“அப்புறம் குவாரி அதை நீ கை மாத்தி விட சொன்னியாம்…. அதை நான் தான் வாங்கினேன்”, என்றாள்…

இதுவும் அவனுக்கு தெரியும்….. அதற்கும் அவன் அமைதியாக இருக்கவும்….

சக்தியாக அவனிடம் சொன்னதில்லை, இப்போது சொல்கிறாள் அவ்வளவே.

“இதெல்லாம் அதோட அக்கௌன்ட்ஸ்”, என்று சில ஃபைல்களை காட்டியவள்……

“நீ வேணா இதையெல்லாம் கடனா வெச்சிக்கோ! அப்புறம் நீ வேணா எனக்கு திருப்பி கொடு! இதையெல்லாம் வேண்டாம்னு சொல்லாத!”, என்றாள் கண்களில் பயத்தோடு.

“என்னது கடனா திரும்ப குடுக்கறதா…… ஆகவே ஆகாது! சான்சே இல்லை….. எல்லாத்தையும் நீயே வெச்சிக்கோ… இனிமே இந்த கடன் கட்டுறது…. சொத்தை திரும்ப குடுக்கறது! எதுவும் என்னால ஆகாது…”,

“ஏன், உன்னோடது என்னோடது இல்லையா?”, என்று கார்த்திக் கேட்க…

“கார்த்திக்!”, என்று உணர்ச்சி மிகுதியில் கட்டிக் கொண்டாள்… “நீ இதையெல்லாம் யூஸ் பண்ண மாட்டியோ! வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு எவ்வளவு பயந்துட்டு இருந்தேன் தெரியுமா?”,

“உன்னையே யூஸ் பண்றேன்! உன்னோடதை யூஸ் பண்ண மாட்டனா!”, என்று சொல்லி சக்தியை முகம் சிவக்க வைத்தான்….. கூடவே….. “இருக்கறது உன்கிட்டேயே இருக்கட்டும்! இனிமே எல்லாம் புதுசா நான் பார்த்துக்கறேன்!”, என்றான்.

அவனை விட்டு விலகி “அதானே நீயெல்லாம் மாறவே மாட்ட……. நீ திருந்தாத ஜென்மம்டா!”, என்று மொத்தினாள்…..    

அதற்குள், “அப்பா! செல்வம் அங்கிள் உங்களை பார்க்கனுமாம்!”, என்றபடி ஆதர்ஷ் வர….

கீழே சக்தியும் கார்த்திக்கும் இறங்கி வந்தனர்…… 

“பாஸ்! நேத்து வந்துட்டு என்னை நீங்க இன்னும் பார்க்கவேயில்லை!”, என்று குறைபட்டான்….

“நேத்து நான் யார்கிட்டயும் பேசலை… இன்னைக்கு காலைல உன்னை கூப்பிட்டேன், நீ போன் எடுக்கலை…..”,

“நீங்க மேடம் நம்பர்ல இருந்து கூப்பிடீங்க… அதான்”,

“ஏண்டா மேடம் போன் பண்ணினா எடுக்காத அளவுக்கு பெரிய ஆளா நீ….”, என்று மிரட்ட…..

“பாஸ்! தெரியாம பேசாதீங்க…….. நேத்து காலைல இருந்து ஒவ்வொரு பத்து நிமிஷத்துக்கும் போன்….. நீங்க எப்போ வருவீங்க! எப்படி வருவீங்கன்னு….. சொன்னதையே நேத்து சாயந்தரம் வரைக்கும் நூறு தடவையாவது சொல்லியிருப்பேன்..”,

“காலைல குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல்ல இருந்தேன்.. அதான் எடுக்கலை…. உடனே வந்து கூப்பிட்டேன்! மேடம் எடுக்கலை௧”, என்றான்.

“ஏன் சக்தி…?”,

“அதுவா யாராவது எதுக்காவது கூப்பிடுவாங்கன்னு ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டேன், இன்னும் ரெண்டு நாளைக்கு ஆன் பண்ண மாட்டேன்”, என்றாள் புன்னகையோடு.

அவளை காதலாக பார்த்தவாரே, “விட்றா! விட்றா! ஏதோ மிஸ் ஆகிடுச்சு!”, என்று செல்வத்தை சமாதானப்படுத்தினான்.

பத்து நாட்கள் கழித்து….. மனைவி மக்களோடு குலு மணாலி சுற்றுலா செல்ல முடிவெடுத்து, டெல்லி ஃபிளைட் ஏற பெங்களூர் ஏர்போர்டிற்கு சென்று கொண்டிருந்தான் கார்த்திக்…..    

கருப்பண்ணன் வண்டியை ஓட்ட……. முன்னால் செல்வம் அமர்ந்திருந்தான், அவன் மடியில் அமர்ந்து ஆதர்ஷ் அவனுடன் கதை பேசிக் கொண்டிருந்தான்…. “நாங்க போயிக்குவோம்”, என்று சொல்லியும், செல்வம், “நான் தான் அனுப்புவேன்!”, என்று வந்திருந்தான்.

காயத்ரி கார்த்திக்கின் மடியில் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்… அவனை விட்டு இப்போது நகர்வதில்லை…

“இந்த சின்ன குட்டி பத்து நாளைக்கு முன்னாடி என்னை விட்டு நகர மாட்டா…. இப்போ நானா கூப்பிட்டா தான் பக்கத்துல வர்றா…. அப்பா அப்பான்னு உங்களையே சுத்துறா!”,

“அவங்கம்மாவே என்னை தான் சுத்துறா!”, என்று கார்த்திக் பேச ஆரம்பிக்க…..

செல்வமும் கருப்பண்ணனும் இருப்பதை கண்களால் காட்டியவள், மேலே பேசாதே என்று கண்களால் அடக்கினாள்…..

“உன் கண்ணு ரொம்ப பேசுது வர, வர”, என்று கார்த்திக் புன்னகையோடு சொல்ல….   சக்தியும் புன்னகைத்தாள்.

ஏர்போர்ட் வந்து அவர்கள் அமர்ந்திருக்க.. எதிர்பாராத விதமாக கங்காதரனும் அங்கே அமர்ந்திருந்தான்…

இவர்கள் அவனை பார்க்கவில்லை.. அவனாக வந்து, “ஹலோ மேடம்!”, என்று பேச…… “ஹலோ சர்!”, என்று சக்தியும் ஆர்வமாக பேசினாள்.

“எப்படி இருக்கீங்க மேடம்”,

“நல்லா இருக்கேன்! நீங்க சர்…..!”,

“நல்லா இருக்கேன்!”, என்றவன்….. அவர்களை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து, “சாரை எனக்கு அறிமுகப்படுத்த மாட்டீங்களா”, என்றான் கங்காதரனாகவே..

கார்த்திக்கிற்கு அவன் கலெக்டர் கங்காதரன் என்று தெரிந்தாலும் ஒரு அறிமுகமானவனை பார்க்கும் பார்வையோடு கங்காதரனை பார்த்துக் கொண்டிருந்தாலும்……. அவனாக பேச முயற்சிக்கவில்லை….   

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்…

“கார்த்திக்”, என்று சக்தி அழைக்க…. காயத்ரியை தூக்கி கொண்டே அருகில் வந்தவன்…..

“கார்த்திகேயன்!”, என்று அவனின் பெயரை சொல்லி கங்காதரனை நோக்கி கை நீட்ட…… “கங்காதரன்!”, என்று சொல்லி அவன் கையை பற்றி கங்காதரன் கை குலுக்கினான்.

“சக்தி டெல்லில இருந்தப்போ நீங்க நிறைய அவளுக்கு வொர்க்ல ஹெல்ப் பண்ணுணிங்கலாமே தேங்க்ஸ்!”, என்றான் கங்காதரனை பார்த்து.                                              

அதை விடுத்து, “ரொம்ப தைரியமான முடிவு உங்களோடது!”, என்று கங்காதரன் சொல்ல…. எது என்று யாரும் கேட்காமலேயே அது அவன் ஜெயில் சென்றதை குறிக்கிறது என்று புரிந்தது.

“நான் ஜட்ஜ்மென்ட் வந்த அன்னைக்கே மேடம் கிட்ட பேசினேன்…… உடனே பெயில் அப்ளை பண்ண ப்ரோவிஷன் இருக்குன்னு சொன்னேன்.. சொல்லப்போனா அஸ் எ பப்ளிக் செர்வென்ட் நான் அதை பத்தி சொல்லக் கூடாது….. இருந்தாலும் மேடம்காக அதை சொன்னேன்… she is a good friend of mine and i know she loves you a lot……”,  

“மேடம் தெரியும்னு ஒரே வார்த்தைல முடிச்கிட்டாங்க…. அப்புறம் நடந்ததை பேப்பர்ல பார்த்தேன்…. பிரேவ் டெசிஷன்”, என்றான்.

“இது என்னோட டெசிஷன்றதைவிட இது சக்திக்கான என்னோட கிஃப்ட் , she deserves this”, என்றான் கார்த்திக் சக்தியை கரை காணாத காதலோடு பார்த்துக் கொண்டே….

“நான் கூட கேட்டேன், இவ்வளவு சீரிய சிந்தனைகளோட இருக்குற நீங்க எப்படி கார்த்திக்கை செலக்ட் பண்ணுணீங்கன்னு………..  but now I think you deserve this”, என்றான் கார்த்திக்கை பார்த்துக் கொண்டே……

சக்தியும் பெருமையாக கார்த்திக்கை பார்த்தாள்…… “இவ சும்மா பில்ட் அப் குடுப்பா, நம்பாதீங்க”, என்றான் சகஜமாக கங்காதரனை பார்த்து கார்த்திக்.

“நிஜமாவே நான் அவங்க கிட்ட உங்களை பத்தி பேசினப்போ பில்ட் அப் மாதிரி தான் நினைச்சேன்….. ஆனா இல்லை, நிஜம் தான் சொல்லியிருக்காங்க……. நான் அங்க இல்லை நீங்க ஈசியா கேஸ்ல இருந்து வெளில வந்திருக்கலாம்…… இல்லை இன்னும் ஒரு இருவது வருஷத்துக்காவது இழுத்திருக்கலாம்….. நீங்க எதுவும் பண்ணலை…….”,

“சக்தி மேடம் உங்களை பத்தி சொன்னது நிஜமான வார்த்தைகள் தான் போல!”, என்றான் புன்னகையோடு கங்காதரன்.

அங்கே ஒரு மென் புன்னகை மூவரின் முகத்திலும்….. நீங்கள் பேசியது போதும் என்பது போல கார்த்திக்கின் தோளில் இருந்த காயத்ரி இறங்கி ஓட….

சக்தி அவளை பிடிக்க போனாள்…..

“நைஸ் மீட்டிங் யு சர்!”, என்று கார்த்திக் விடை பெற…..

“கீப் இன் டச் சர்!”, என்று கங்காதரனும் விடை பெற்றான்…. இந்த வார்த்தைகளை பணியின் நிமித்தம் அவன் எப்போதும் யாரிடமும் சொன்னது இல்லை. ஆனால் கார்த்திக்கை பார்த்து சொல்லி விடைபெற்றான்.

காயத்ரியை தூக்கி கொண்டு மூச்சு வாங்க வந்து நின்ற சக்தி…. “ம்கூம்! முடியலை, இவ அட்டகாசம்…… நீயே பிடி உன் பொண்ணை”, என்று கார்த்திக்கின் கையில் திணித்தாள்…

“உன்னையே இன்னும் அடக்க முடியலை என்னால…..”, என்று கார்த்திக் சலிப்பது போல காதலாக அவளை பார்த்து பேச……

“நான் தான் அதை சொல்லனும்!”, என்று சக்தி இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் அடங்குபவர்களே…. ஆனால் அது அவர்களாக நினைத்தால் மட்டுமே…..

“எது நிஜம், எது பொய்ன்னு நைட் பேசிக்கலாம்”, என்று கார்த்திக் சொல்லிய விதத்தில்  இருவருக்குமே உற்சாகம் பொங்க…… சிரித்தனர்.      

“அப்பா போகலாமா!”, என்று ஆதர்ஷ் கேட்க…. ஃபிளைட் அனௌன்ஸ்மென்ட்டும் கேட்க…. செல்வத்திடம் ஒரு சிறு தலையசைப்போடு விடைபெற்று……. அவர்களின் மக்களோடு கார்த்திக்கும் சக்தியும் ஃபிளைட் ஏற சென்றனர்.     

தேடிச் சோறு நிதந்தின்று – பல                                                                                                                  சின்னஞ்சிறு கதைகள் பேசி- மனம்                                                                                                                     வாடித் துன்பமிக உழன்று- பிறர்                                                                                                             வாழ பல செயல்கள் செய்து- நரை                                                                                                            கூடிக் கிழப்பருவம் எய்தி- கொடுங்                                                                                                     கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல                                                                                                  வேடிக்கை மனிதரை போலே- நானும்                                                                           வீழ்வே னென்று நினைத்தாயோ!!!  

 

                                     ( நிறைவுற்றது )

    

Advertisement