Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஒன்று :

நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா!                                                                                               நின்னைச் சரணடைந்தேன்!                                                                                                                      பொண்ணை உயர்வை புகழை விரும்பிடும்                                                                                                                  என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று…….  

( பாரதி )

கண்ணாடியை தலையை சுற்றி வீசுங்கள் என்று சொன்ன சக்தியின் குரலில் அத்தனை கோபம்……

சில நொடிகளே கட்டுக்குள் வந்தாள்……… தன் பிரச்சனையை அடுத்தவர் மத்தியில் கொண்டு வருவதில் விருப்பமில்லை…….. அதே சமயம் அவர்கள் மகிழ்ச்சியையும் கெடுக்க விருப்பமில்லை.

முகத்தை புன்னகைக்கு மாற்றியவள்…. “என்கிட்ட குடுங்க பிரபு”, என்று கார்த்திக்கின் கண்ணாடியை வாங்கிக்கொண்டாள்.

பிறகு பேரர் வர தேவையானதை சொல்ல…… வேறு பேச……. என்று பொழுது இனிமையாக கழிந்தது.

சக்தி எல்லோரிடமும் கலகலப்பாக பேச…… கார்த்திக் எண்ணி ஒன்றிரண்டு வார்த்தைகளே… அவனாக எதுவும் பேசவில்லை…… யாராவது பேச்சில் இழுத்தாலும் முடிந்தவரை புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தான்.

இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் நிமிஷத்துக்கு நிமிஷம் மற்றவர் கவனம் கவராமல் இயல்பு போல தழுவி மீண்டது.

சக்தி இப்போது அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள் என்பது தான் நிஜம்…… முன்பு அவனை தன்னக்குரியவன் கோலத்தில் பார்க்கவில்லை……. அவன் தனது தேவை என்றுணர்ந்த போது அவன் விலகியிருந்தான்….. அவன் தேடி வந்த போது கோபம் மட்டுமே பிரதானமாயிருந்தது.

இப்போது தான் சற்று இயல்பாக இருந்தாள்….. அதனால் கார்த்திக்கின் தோற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

நன்றாக தான் இருக்கிறான்…. ரசித்து பார்த்தாள். கம்பீரமாக இருந்தான்.. எப்போதும் கார்த்திக்கிடம் எந்த அசட்டுதனங்களும் காண முடியாது…. பேச்சில் நடை உடை பாவனைகளில் எப்போதும் ஒரு பெரிய மனித தோரணை இருக்கும்….   

அவனுடைய முகம் லட்சனம் எல்லோரையும் மரியாதையாக தான் பார்க்க வைக்கும்…… கார்த்திக்கின் மீசை இப்போது சக்தியை அதிகம் கவர்ந்தது… எப்போதும் இருப்பதை விட இன்னும் அதிகம் இறக்கி சற்று தொங்கு மீசையாக வைத்திருந்தான்.

அவளை பொறுத்தவரை மீசை புருஷ லட்சனம்.   

பெண் பார்க்கும் படலம் என்று யாரவது சொன்னால் சக்திக்கு கோபம் வரும்….. “ஏன் பொண்ணை மட்டும் தான் பார்க்கனுமா, மாப்பிள்ளையை பார்க்க கூடாதா”, என்று……. 

அது போல அவளின் மாப்பிள்ளையை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள்……. ஆனால் அதை வெளிப்படுத்தும் எண்ணம் அவளுக்கு சற்றும் இல்லை…

விருந்து முடிந்து அதன் பிறகும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்…… “கிளம்பிட்டியா சக்தி பத்து மணிக்கு மேல ஆச்சு”, என்று தெய்வானையிடம் இருந்து போன் வர….

“லேட் ஆச்சு”, என்றபடி எழுந்தாள்…….

“தேங்க்ஸ் ஃபார் தி ட்ரீட் சிவா….”,

“நீங்க எப்போ இந்த மாதிரி ட்ரீட் குடுக்க போறீங்க மேடம்”, என்று பிரபு சொல்ல….

“அது கார்த்திக் கூட இருக்குற வரை கஷ்டம் தான்”, என்றான் சிவா……

சக்தியும் கார்த்திக்கும் ஸ்தம்பித்து நிற்க……

“என்ன சிவா சொல்றீங்க?”, என்று பிரபு கேட்க….

“கார்த்திக் கூட இருந்தா யாருக்கும் சக்தியோட பேச பயம்…… அப்புறம் எப்படி அவங்க கல்யாணம் நடக்கும், வர்ற மாப்பிள்ளைங்க எல்லாம் கார்த்திக்கோட ஒரு பார்வையில கிரேட் எஸ்கேப் ஆகிடுவாங்க”, என்று உடைத்தே சொன்னான்.

கார்த்திக் ஒரு மென் நகையோடு…. “பேசினாலும் பேசலைன்னாலும் காதல் வரனும்னா வந்து தான் ஆகும்”, என்றான் கார்த்திக்.

“அப்போ உங்களுக்குள்ள ஒரு பெரிய காதல் கதை இருக்குன்னு சொல்லுங்க! உங்க குரலை பார்த்தா அப்படிதான் தெரியுது…”,

அதற்கும் ஒரு புன்னகை கார்த்திக்கிடம் இருந்து……..

அவனின் புன்னகையை பார்த்த சக்திக்கு எரிச்சலாக இருந்தது…… “இவனுக்கா லவ்வா”, என்று சக்தி கிண்டலாக கேட்டாள்……

“இவனுக்கா”, என்று சக்தி கேட்டது வைஷ்ணவிக்கு ஒரு மாதிரி இருந்தது…. அவன் இவன் என்று ஏன் பேசுகிறார்கள் என்பது மாதிரி…..

வைஷ்ணவியின் இயல்பு குணம் தலை தூக்க…… “ஏன் அண்ணாவை அவன் இவன்னு பேசறீங்க”, என்று கேட்டே விட்டாள்……

எல்லோருடைய பேச்சும் அப்படியே நின்றது……. நன்றாக போய் கொண்டிருந்ததில் ஏதோ அபஸ்வரம்….

பிரபு வைஷ்ணவியை முறைத்தான்…… “இல்ல, அண்ணா பெரியவங்க… அதான்….”, என்று வைஷ்ணவி இழுத்தாலும்…….. என்னவோ தப்பாக பேசிவிட்டோம் என்று பிரபுவின் முறைப்பிற்கு பயந்து சுமித்ராவிடம் போய் நின்று கொண்டாள் வைஷ்ணவி…..   

“என்ன பேசற வைஷ்ணவி…. கார்த்திக் சக்தி வீட்ல நிறைய வருஷமா இருக்கார்…. அவங்க கிட்ட வேலை…….”, என்று சிவா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே……     

“அண்ணா…… பெரியவங்க”, என்ற வார்த்தை சக்தியை உசுப்ப……. கோபம் வந்தே விட்டது… இனி நின்றால் ஏர்போர்ட் போல ஏதாவது பேசிவிடுவோம் என்று தோன்றியது.

அப்போதும் வைஷ்ணவியி பார்த்து, “அவன் பெரியவன்னு எனக்கு தெரியவே தெரியாது….. அவன் என்னை விட சின்னவன்னு சொல்லியிருந்தான்…. இப்போ தான் பெரியவன்னு தெரியும்……. திடீர்ன்னு என்னால மாத்த முடியலை, ட்ரை பண்றேன்”, என்றாள் சொல்லும் போதே குரல் கமறியது..   

ஏமாற்றப்பட்டது போல தோன்ற…..

நின்றால் உடைந்து விடுவோம் என்று பயந்து….. வேகமாக படியை நோக்கி போகப் போக போனாள்.

கொஞ்ச தூரத்திற்கு மேல் நகர முடியவில்லை……. கார்த்திக் அவளின் கையை பிடித்து நிறுத்தியிருந்தான்.

“கையை விடு கார்த்திக்……..”, என்று சொல்லியபடி கையை இழுக்கப் பார்த்தாள்…. சக்தியால் முடியவேயில்லை.

“என்னோட லவ் ஸ்டோரியை கேட்டுட்டுப் போ”, என்றான் ஒரு முடிவோடு….

“அதை கேட்டு நான் என்ன பண்ண போறேன்……”, 

“என்ன பண்றதுன்னு அப்புறம் டிசைட் பண்ணு….. வா”,

“வேண்டாம் கார்த்திக்! நான் போறேன்!”, சொல்லும் போது குரல் உடைந்தே விட்டது…..

“சாரி! சாரி! நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லலை!”, என்று வைஷ்ணவி ஏறக்குறைய கெஞ்சினாள்…….. “தானா வந்துடுச்சு”,….. என்று சொல்ல….

சட்டென்று சுதாரித்தவள், “இட்ஸ் ஓகே….”, என்றாள்.

பிடிவாதமாக சக்தியை இழுத்து போய் அமரவைத்தான் கார்த்திக். அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவளின் முழங்கால்களுக்கு மேல் அழுத்தி பிடித்து அவள் எழுந்துகொள்ள முடியாமல் செய்தான்.

“கேளு ப்ளீஸ்”, என்றான் கெஞ்சலான குரலில்……. 

அவன் குரலும் அவளை எழ விடாமல் செய்தது.

எல்லோரும் அவர்களை பார்த்து அவர்களை விட்டு சற்றே தள்ளி நின்றிருந்தனர்.

“அப்போ நான் பிளஸ் டூ முடிச்சிருந்தேன்……. என் தாத்தா கூட சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு அந்த ஊரை விட்டு வந்துட்டேன்…….”,

“இங்க இருக்குற ஒரு லாட்ஜ்ல தங்கியிருந்தேன்… என் அப்பாவோட ஃபிரண்டை தேடிட்டு இருந்தேன்…… ஒரு நாள் காலையில டீ குடிக்க போனேன்…….. போகும்போது ஒரு பொண்ணு என்னை க்ராஸ் பண்ணி போனா….”,

“ஏஞ்சல் மாதிரி இருந்தா”,

“என்னை அவளோட முகம் அவ்வளவு கவர்ந்துச்சு…… ஜஸ்ட் ஒரு சில நொடி தான் பார்த்தேன்…….. அந்த பொண்ணு போயிட்டா………”,

“மறுபடியும் டீ குடிச்சிட்டு திரும்ப வரும்போது….. அந்த பொண்ணு வருமான்னு பார்த்துக்கிட்டே வந்தேன்….. அப்போ எதிர்ல அந்த பொண்ணு திரும்ப வந்துட்டு இருந்தா…..”,

“வண்டில வந்துட்டு இருந்தா….. அவ வரும்போது ஒரு பையன் சைக்கில்ல வேகமா ஒரு கட் ரோட் ல இருந்து வந்தான்”,

“அந்த பொண்ணு கன்ட்ரோல் பண்ண முடியாம இடிச்சிட்டா……. அந்த பையன் வேகமா வந்ததால இடிச்சவுடனே அந்த பையனை தூக்கி எறிஞ்சிடுச்சு…..”,

“பையன் மண்டை உடைஞ்சு ரத்தம் கொட்டுது…… அவ முகத்துல அப்படி ஒரு பயம்…. உடனே ஓடிப்போய் வண்டியை வாங்கிட்டு அவளை அனுப்பி விட்டுடேன்…..”,

சக்திக்கு அப்போது தான் கார்த்திக் அவளை பற்றி தான் பேசுகிறான் என்று புரிந்தது. ஒரு கலவையான உணர்வோடு அவன் பேசுவதை ஊன்றி கேட்க ஆரம்பித்தாள். 

“அது மட்டும் தான் எனக்கு தெரியும்….. அங்க கும்பல் கூட ஆரம்பிச்சது…… நான் தான் அந்த பையனை இடிச்சிட்டேன்னு நினைச்சு வாங்குனேன் பாரு அடி….. வந்தவன் போனவன்னு அத்தனை பேரும் அடிச்சாங்க…….”,

“தர்ம அடி…… வலி உயிர் போச்சு….”,

“மயங்கிட்டேன்னு நினைக்கிறேன்…….”,

அவன் சொல்ல சொல்ல அந்த நாளின் ஞாபகத்திற்கு போனாள் சக்தி……

“கண்முழிச்சு பார்த்தா ஹாஸ்பிடல்ல இருக்கேன்……. என்ன நடந்திச்சுன்னு கூட எனக்கு தெரியாது….. பக்கத்துல பார்த்தா என் ஏஞ்செல்….. எனக்கு எதுவும் ஞாபகத்துக்கு வரலை……. நான் எதுக்கு வீட்டை விட்டு வந்தேன்னு என் ஞாபகத்துலயே இல்லை……. அங்க எப்படி வந்தேன்னு கூட தெரியாது..”,

“ரெண்டு நாள் அடிப்பட்டு மயக்கமாவே இருந்திருக்கேன்… உடம்பு முழுக்க இருந்த வலி, எனக்கு அவளைப் பார்த்ததும் தெரியவேயில்லை……”,

சக்தியை பற்றி ஏதாவது சொல்லுவான் என்று பார்த்தால் இவன் யாரை பற்றி சொல்லுகிறான் என்பது போல பிரபுவும் சிவாவும் பார்த்திருக்க……..

வைஷ்ணவி “மறுபடியும் நான் இன்னைக்கு அத்தான் கிட்ட அடி வாங்க போறேன் போல”, என்று பயந்து நிற்க…….

“என்னை திருமணம் செய்வேன் என்று வீட்டை விட்டு போய் அப்பொழுதே ஒரு பெண்ணிற்காக இவ்வளவு செய்திருக்கிறானா”, என்பது போல சுமித்ரா நினைத்திருக்க…….   

சட்டென்று சிவாவை பார்த்து திரும்பியவன்…. “நான் எப்படி ஹாஸ்பிடல் வந்தேன்னு கேட்க தோணலை உங்களுக்கு……. கேளுங்க சிவா”, என்றான்…

கார்த்திக் எதற்கு அப்படி கேட்கிறான் என்று புரியாத போதும்….. “எப்படி வந்தீங்க”, என்றான் சிவா.

“எனக்கே தெரியலை.. கண்முழிச்சப்போ என் முன்னாடி ஏஞ்சல் இருந்ததனால எனக்கு கேட்கனும்னு தோணலை, நான் எப்படி வந்தேன்”, என்று அவனுக்கு அவனே கேட்பது போல கேட்க…..

“என்னடா பேசறான் இவன்”, என்பது போல் சுமித்ரா, வைஷ்ணவி, பிரபு, சிவா பார்த்திருக்க……

“நான் போய் அப்பாவை கூட்டிட்டு வந்தேன்….. அங்க பார்த்தா நீ மட்டும் ரோட்ல அடிபட்டு மயக்கமா இருந்த…… நான் இடிச்ச பையன் அங்க இல்லை…. அப்பாவும் கருப்பண்ணனும் உன்னை தூக்கிட்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க”, என்றாள்.

எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷமான புன்னகை…..    

“என்ன சிவா ஏஞ்சல் தானே இவங்க……”,

“நிச்சயமா”,

“ஆனா பாருங்க இந்த ஏஞ்சல் நான் கண்முழிச்ச உடனே ஏதோ பேசும்போது என்னை அண்ணான்னு கூப்பிட்டிச்சு…….”,

“என் மனசு தாங்குமா சொல்லுங்க…… இவங்க யாரு என்னன்னு தெரியாது…. ரொம்ப நேரம் பார்த்தது கூட கிடையாது…. சில நிமிஷம் பார்த்திருந்தாலே அதிகம்…… அப்போவே அவ்வளவு அடி வாங்கி படுத்திருக்கிறேன்……”,

“அடிப்பட்ட பையன் சீரியசா இருக்கான்….. நான் தான் இடிச்சேன்னு நினைச்சு என் மேல கேஸ் ஆகிடுச்சு….. அப்போ கூட நான் இடிக்கலைன்னு சொல்லலை…….. அந்த பையனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நான் கண்டிப்பா ஜெயில் போற சூழ்நிலை……”,

சக்தியிடம் திரும்பி….. “இப்படி இருந்த என்னை பார்த்து நீ அண்ணான்னு சொல்ற…..”,

“எனக்கு சட்டுன்னு என்ன சொல்றதுன்னு தெரியலை….. நீ அண்ணான்னு கூப்பிடக் கூடாதுன்னு நினைச்சு…… நான் உன்னை விட சின்னவன்னு சட்டுன்னு சொல்லிட்டேன்…… அதும் ஜஸ்ட் பத்து நாள்ன்னு சொன்னேன்……”,

“அப்போ தானே ஃபிரண்ட்ஸ் ஆக முடியும், மேல டெவலப் ஆனாலும் பத்து நாள் ஒரு பெரிய விஷயமா தெரியாது இல்லியா….. ஒரே கிளாஸ் மாதிரி தானே வரும்……”,

சக்தியின் மனதின் பாரங்கள் எல்லாம் பனி போல விலகியது….. “இதற்காக தான் வயதை குறைத்து கூறினானா….. எனக்காக அப்போதே அவ்வளவு அடி வாங்கியிருந்தானா….”,

சக்தியின் முகம் செம்மையை பூச…….   

“என் டேட் ஆப் ஃபர்த் உனக்கு எப்படி தெரியும்……”,

“அப்போ தான் நீ என்னை விசாரிக்க வந்த போலிஸ்கிட்ட எனக்கு பதிலா மாத்தி உன் டீடைல்ஸ் சொல்லிட்டு இருந்த, அதை வெச்சு சொன்னேன்….”, 

“அப்போவே நீ பெரிய கிரிமினல்ன்னு சொல்லு”,

“ம், உன்னை பார்த்த உடனே ஆகிட்டேன்……”,

“ஒரு வாரம் கோல்டன் டேஸ் இன் மை லைஃப்….. அப்புறம் ஒரு நாள் உங்கப்பா என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனார்……. அப்போ தான் அது நான் தேடிவந்த வீரமணி அய்யாவோட வீடுன்னு தெரியும்….”,

“அதுக்கப்புறம் இந்த விஷயத்தை என்னால சொல்ல முடியலை…..”,

“ஏன்?”,

சிறு பிள்ளைக்கு சொல்வது போல் வேறு விஷயங்கள் அவள் ஞாபகத்தில் அப்போது வரக்கூடாது என்பதற்காக…..

“பதினஞ்சு வயசு பொண்ணுகிட்ட யாரவது காதல் சொல்வாங்களா…… அது தப்பு”,

“அப்போ இப்போ சொல்லு……”, என்றாள் சிறு பிள்ளையை போல அவளும்… அவளுக்கும் வேறு விஷயங்கள் ஞாபகத்தில் வரவில்லை. 

பார்த்துகொண்டிருந்த சிவா, சுமித்ரா, வைஷ்ணவி, பிரபு எல்லோரும் சத்தம் போட்டே சிரித்தனர்….. 

“என்ன சிவா என்னோட லவ் ஸ்டோரி எப்படி இருக்கு…..?”,

“நிச்சயம் சூப்பர் தான்……… ரெண்டு நிமிஷம் பார்த்து….. அவங்களுக்காக ரெண்டு நாள் மயக்கமா இருக்குற அளவுக்கு போயிருக்கீங்க……..”,

“கோபம் போயிடுச்சா”,

“நீ ஏன் வயசை குறைச்சு சின்னவன்னு சொன்னேன்ற விஷயத்துக்கு போயிடுச்சு… மத்தது அப்படியே தான் இருக்கும்…”,

“அதுக்கும் காரணம் சொல்லிடேண்டா…….. அதுவும் போகட்டும்”, என்று பிரபு எடுத்து கொடுக்க…….

“அது என்னால இப்போ மட்டுமில்லை……. எப்போவுமே முடியாது….”, என்றான் ஒரு கசந்த முறுவலுடன்…… அவன் தந்தை அவன் ஞாபகத்தில் வந்தார்.

அவன் குரலில் இருந்த கனம் அங்கே ஒரு கனமான அமைதியை உலவ விட்டது….. யாருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை…..

எல்லோரும் நிற்க…..

எந்த விளக்கமும் கார்த்திக் சொல்லாத போதும்…… சகதிக்குள் அது ஏன் என்ற கேள்வி இருந்த போதும்……. அவன் செய்தது ஒத்துக்கொள்ள முடியாத போதும்…. அது துரோகம் என்று தெரிந்த போதும்……. அவள் மனதின் அவன் மேலான சஞ்சலங்கள் அப்படியே இருந்த போதும்…….   

எதுவாகினும் அவனை மன்னிக்க தயாராக இருந்தாள்…… அந்த க்ஷணத்தில் ஒரு பயம் இது நடக்குமா என்று…… 

“பாஸ்!”, என்றபடி மூச்சு வாங்க வந்து நின்றான் செல்வம்……அவன் வந்து நின்ற கோலம்……… ஃபார்மல்சில் இல்லாமல் காசுவல்சில் ஷார்ட்ஸ் டீ ஷர்ட்டில் இருந்தான்….

“என்னடா….. இங்க வந்து நிக்கற”,

“என்ன… டா… வா… நான் என்ன சொன்னேன், மேடமை வீட்ல விட சொன்னேனா இல்லையா”,

“ஆமா! சொன்ன! நானும் விடறேன்னு சொல்லிட்டேனேடா”,

“ஆனா எப்போ விடுவீங்கன்னு சொல்லலையே”, என்றான் சிவாஜி பாணியில்….

எல்லோரும் சிரித்தனர்.

“அங்க மேடமோட அம்மா என்னை தாளிச்சு எடுக்கறாங்க”,

“என்கூட இருக்காங்கன்னு சொல்ல வேண்டியதுதானேடா”,

“தெரியாத்தனமா அதை வேற சொல்லி தொலைச்சிட்டேன்……. சொன்னதுக்கபுறம் கொஞ்ச நேரம் சும்மா இருந்தவங்க….. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குவீங்கன்னு என்னை போ போன்னு ஒரே நொச்சு….”,

“நானும் கதவை திறந்துட்டேன்…… வண்டியை எடுத்துட்டேன்…… ஸ்டார்ட் பண்ணிட்டேன்……. ஹோட்டல்ல இருக்கேன்னு….. எவ்வளவு நேரம் சமாளிக்கறது…. முடியலை……”,

“முதல்ல கிளம்புங்க……”,

“அதுக்குன்னு டிரஸ் கூட சேஞ் பண்ணாம இப்படியா வருவ…”, என்று சொல்லி கார்த்திக் சிரிக்க.. 

“ம், கிண்டலு, ஏன் பண்ண மாட்டீங்க…….. நான் போறேன்……. கதவை தொறந்துட்டேன்…… வண்டில ஏறப்போறேன்னு எனக்கும் மேல அவங்க ப்ளாக்மெயில் பண்றாங்க…….. அலறி அடிச்சிட்டு ஓடி வர்றேன்…..”,

சக்தி அவளின் அம்மாவை அழைத்தவள்… “அம்மா வந்துடறேன் மா! கார்த்திக்கூட தான் இருக்கேன்….. இங்க தான் இன்னும் எல்லோரும் இருக்காங்க…….. இங்க என்னை பேச விடாம வீட்டுக்கு போகலாம்னு செல்வம் டிஸ்டர்ப் பண்றான்”, என்று சொல்ல…….

“போச்சுடா!”, என்று தலையில் கை வைத்து அப்படியே தரையில் உட்கார்ந்தான் செல்வம்…..

“போனை அவன்கிட்ட குடு!”, என்று தெய்வானை சொல்ல…….

“அம்மா உன் கிட்ட பேசனுமாம்”, என்று சக்தி அவனிடம் நீட்ட……

“இதுக்கு நீங்க என்னை ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்”, என்று முனகியபடியே செல்வம் போனை வாங்கினான்.  

“ரெண்டு பேரும் சண்டை போடலையே…..”,

“பார்த்தா அப்படி தெரியலைங்கமா…….”,

“அப்போ நீ வந்துடு…….”,

“சரிம்மா…..”, என்று சக்தியிடம் போனை கொடுத்தவன்…..

அப்போதுதான் சூழ்நிலையை கவனித்தான்….. சக்தி சேரில் அமர்ந்திருக்க….. அவள் முன் மண்டியிட்டு கார்த்திக் அமர்ந்திருந்தான்….. அவனின் கைகள் சக்தியின் மடியில் அவளை எழுந்துகொள்ள விடாமல் அழுத்தி பிடித்திருந்தது….

எழ முயற்சித்தால் அழுத்தி பிடிக்கலாம்……… ஆனால் சக்தி தான் எழ முயற்சிக்கவேயில்லையே…..

செல்வத்தின் முகத்தில் ஒரு குறும்பு புன்னகை…. போனை கொடுத்தவன் எதற்கு இப்படி சிரிக்கிறான் என்று பார்த்த சக்தி…… அவனின் பார்வையை உணர்ந்து….. மெதுவாக கார்த்திக்கின் கையை விலக்கினாள்.   

கார்த்திக்கும் அதை உணர்ந்தவனாக கையை எடுத்தான்.

இருவரையும் ரசனையோடு பார்த்த செல்வம்….. அந்த குறும்பு புன்னகையோடே….. “கிளம்புங்க, கிளம்புங்க”, என்றான்……

“அம்மா சொன்னாங்க தானே, நீங்க போங்க”, என்று சக்தி சொல்ல….

“அம்மா சொல்வாங்க, ஆனா என்னால விடமுடியாது…… பசங்க எவ்வளவு நேரம்னாலும் வெளில இருக்கலாம்……. பொண்ணுங்க இருக்க முடியாது…. யார் கூட இருந்தாலும் என்னால விட முடியாது……..”,

“அஞ்சு அக்கா தங்கச்சியோட பொறந்தவன் நான்…….. இங்க மூணு பொண்ணுங்க இருக்காங்க……. முதல்ல கிளம்புங்க……..”, என்றான் எல்லோரையும் பார்த்து.

சக்திக்கு கிளம்ப மனமேயில்லை… “இப்போ தான் வாய் திறந்து கார்த்திக் லவ் ஸ்டோரிய சொல்லி இருக்கான், அப்போவும் லவ் சொல்லலை….. அதுக்குள்ள இவன் வேற”, என்று செல்வத்தை பார்த்து முறைக்க….

“நீங்க என்னை பார்த்து முறைக்கவே கூடாது….. சொல்லப் போனா எனக்கு அஞ்சு சிஸ்டர் இல்லை….. ஆறு சிஸ்டர்…… அந்த வாக்குறுதிக்கு அப்புறம் தான் சார் என்னை உங்க கூட வேலை பார்க்க விட்டாரு……. அதுக்காக…..”, என்று அவன் அடிவாங்கியதை சொல்ல போகும்போது வேகமாக எழுந்து வந்து அவன் வாயை மூடிய கார்த்திக்………

“கிளம்பலாம்”, என்றான் எல்லோரையும் பார்த்து…..     

கார்த்திக் சொன்ன அவசரத்தை பார்த்து எல்லோரும் மனம் விட்டு சிரித்தனர்.   

அவர்களுடன் சேர்ந்து சிரித்த கார்த்திக்கும்….. “என்னை இன்னைக்கு காமெடியன் ஆக்கிட்டடா நீ”, என்று செல்வத்தை பார்த்து சொல்லிக்கொண்டே கையை எடுக்க…..

“மொத்தமா சரண்டர் ஆகி கால்கிட்ட உட்கார்ந்துட்டீங்க…… நீங்க காமெடியனா….. ஆக்ஷன் ஹீரோல இருந்து எப்போ பாஸ் நீங்க லவர் பாயா மாறினீங்க”, என்றான் கார்த்திக்கிற்கு மட்டும் கேட்குமாறு……

திரும்ப அவன் வாயை மூடிய கார்த்திக்…. “மானத்தை வாங்காதடா”, என்றான் செல்வத்திற்கு மட்டும் கேட்குமாறு….   

என்னவென்று புரியாத போதும் எல்லோர் முகத்திலும் புன்னகை…….

சக்தி என்ன பேசுகிறார்கள் என்பது போல் ஆர்வமாக பார்த்தாள், ஒரு உரிமையான புன்னகையோடு அவளை திரும்ப பார்த்தான் கார்த்திக்…….

“உன்னிடம் மயங்குகிறேன்…..                                                                                                     உள்ளத்தால் நெருங்குகிறேன்….                                                                                                           எந்தன் உயிர் காதலியே…                                                                                                                   இன்னிசை தேவதையே…….”,

கார்த்திக்கின் கண்கள் இதை பிரதிபலித்தன…..  

Advertisement