“போகலாம் மா. ஸ்ரீக்கு ஏதாவது வாங்கணுமான்னு கேட்டுக்கோ”
“அவளையும் தானே கூட்டிட்டு போறோம்”, என்று சொன்ன மனைவியை கட்டி அணைக்க வேண்டும் போல இருந்தது.
அவன் பார்வை அவளை எதுவோ செய்ய “இதென்ன எப்ப பாத்தாலும் வச்ச கண்ணு வாங்காமல் இப்படியே பாக்குறது?”, என்று கேட்டே விட்டாள்.
“இப்ப இந்த நிமிஷம் உன்னை இறுக்கி கட்டிக்கணும் போல இருக்கு போதுமா?”
அடுத்த நொடி அவனை நெருங்கியவள் அவனை இறுக்கி அனைத்து அவன் மார்பில் முகம் புதைத்த படி “யார் வேண்டாம்னு சொன்னதாம்?”, என்று முணுமுணுத்தாள்.
அவள் அருகாமையில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை இழக்கத் துவங்கினான் சத்யா. அவன் கரங்களும் அவளை இறுக அணைத்துக் கொண்டது.
அவள் முகத்தை அவன் ரசித்துப் பார்க்க அவளுடைய குண்டு கண்கள் மூடிக் கொண்டது. அவள் விரல்கள் அவனுடைய டீஷர்ட்டை இறுக்கிக் பிடித்திருந்தது.
மூடிய இமைகளுக்குள் அசையும் கண்கள், ஈர உதடுகள், லேசாக துடிக்கும் நாசி என அவள் அழகு இருக்க இமைக்க மறந்து அவளை ரசித்தான்.
அவளை இவ்வளவு நெருக்கத்தில் கண்டு மயங்கியவன் அவளை இடுப்பை வளைத்து நொடியும் தாமதிக்காமல் அவளிதழை சிறை செய்திருந்தான்.
இருவரின் உணர்வுகளும் மற்றவர்களின் தேடலை அப்பட்டமாக வெளிப்படுத்த இதழ் முத்தத்தை முடிக்க முடியாமல் திணறினார்கள்.
அவன் கைகளில் இருந்த படி ஒரு கையால் சத்யாவின் கழுத்தை வளைத்து தன்னை நோக்கி இழுத்தவளின் மற்றொரு கை அவனின் தலை முடியில் அலைபாய்ந்தது. அவளது இணக்கம் சத்யாவை பித்து கொள்ள செய்ய அவளை தூக்கியவாறே நகர்ந்தவனை அவனின் மொபைல் ஒலி எழுப்பி நிறுத்தியது.
பட்டென்று உணர்வுகள் அறுந்து விழ அவனை விட்டு விலகி நின்றாள். அவ்வளவு நேரமாக மூச்சுக்காற்றை அடக்கியதின் விளைவு இருவருக்கும் மூச்சு வாங்கியது.
முதல் முறையாக அவன் பார்வை எல்லை கடந்து அவளை ரசிக்க “நான் கீழ போறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
சிறு சிரிப்போடு “யாரு டா அந்த கரடி முக்கியமான நேரத்துல ஃபோன் பண்ணி இம்சை பண்ணினது?”, என்று புலம்பிய படியே எடுத்தான். உண்மையிலே அந்த கரடி அவனது நண்பன் அறிவழகன் தான்.
“சொல்லு டா கரடி?”
“என்னது கரடியா?”
“தெரியாம சொல்லிட்டேன், சொல்லு டா. என்ன கால் பண்ணிருக்க?”
“வீட்ல இருக்க போர் அடிக்குது? அப்படியே வெளிய போகலாமானு கேக்க தான் கூப்பிட்டேன்”
“நம்ம ரெண்டு பேர் மட்டுமா?”
“சே சே, கல்யாணம் வேண்டாம், பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிட்டு இப்ப வீணா கூடவே தான் இருக்க. தங்கச்சி இல்லாம நீ வருவியா என்ன? சும்மா எல்லாரும் ட்ரிப் மாதிரி போகலாம்ன்னு தான். ஸ்ரீயும் வரட்டும்”, என்றான்.
“டேய் வீணாவை தங்கச்சின்னு சொல்லாத. அப்புறம் அவ தங்கச்சியும் உனக்கு தங்கச்சி ஆயிருவா”, என்று சத்யா சொல்ல அறிவு வெட்கப் பட்டான்.
“கருமம், நீ வெக்கப் படுறதை கற்பனைல கூட நினைச்சுப் பாக்க முடியலை. இரு வீட்ல கேட்டுட்டு கூப்பிடுறேன்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு கீழே சென்றான்.
அப்போது குல்கர்னி, அம்சவேணி, மது மூவரும் வீணாவைப் பார்க்க வந்திருந்தார்கள். நலம் விசாரிப்பு முடிந்ததும் சத்யா அனைவரையும் வெளியே அழைக்க பெரியவர்கள் தாங்கள் வரவில்லை என்று சொல்லி விட்டார்கள்.
வீணா, மது, ஸ்ரீ, சத்யா மற்றும் அறிவு மட்டும் கிளம்பி வெளியே சென்றார்கள். அந்த நாள் இனிமையாக கழிந்தது. மது மற்றும் அறிவு வேறு பார்வையை பரிமாறிக் கொள்ள அதைக் கண்ட சத்யா கூடிய சீக்கிரம் மது வீட்டில் பேச வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
“மித்துவும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். நாம அவனை கூப்பிடவே இல்லை”, என்று வீணா சொல்ல ஸ்ரீயும் மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“இன்னைக்கு திடீர்னு தானே பிளான் பண்ணினோம். அடுத்த தடவை மாப்பிள்ளையையும் கூப்பிட்டுக்கலாம்”, என்று சொல்லி மனைவியை சமாதானப் படுத்தினான் சத்யா.
வெளியே சுற்றி விட்டு இரவு உணவையும் முடித்து விட்டு தான் வந்தார்கள். மது பெரியம்மா பெரியப்பாவுடன் வீட்டுக்குச் சென்று விட்டாள். இரவு தங்களின் அறைக்கு வந்ததும் தான் சத்யா மற்றும் வீணாவுக்கு அவ்வளவு தயக்கம். என்ன இருந்தாலும் மதியம் அந்த அறையில் நடந்தது மறக்காது தானே?
அவன் கண்கள் அவளை ரசனையாக மொய்க்க அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. தலையில் அம்சவேணி வாங்கி வந்திருந்த மல்லிகைச் சரம், நெற்றியில் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் பொட்டு, கழுத்தில் அவன் கட்டிய தாலியுடன் ஒரு சின்ன செயின், ஒரு கையில் தங்க வளையல், மற்றொரு கையில் அதுவும் இல்லை.
தாலி பிரித்து கோர்த்த பிறகு தான் பெரிய செயின் போடுவதாக முடிவு எடுத்திருந்தார்கள். சாதாரண இரவு உடையில் கூட தேவதை போல இருந்த பெண்ணவளை ரசித்துப் பார்த்தான். அதுவும் அவள் வெட்கம் அவனை முன்னேறத் தூண்டியது. அவள் வெட்கத்தைக் கண்டவன் அவளை நெருங்கி விட்டான். அவள் இதயத் துடிப்பு அதிகமாகியது.
“வீணா, மதியம் மாதிரி உன்னை கிஸ் பண்ணிக்கவா?”, என்று கேட்க வேறு செய்ய “ஆண்டவா, மதியம் கேட்டுட்டா பண்ணுனீங்க?”, என்று கேட்டு அனுமதி கொடுத்தாள்.
அடுத்த நொடி எந்த தயக்கமும் இல்லாமல் தன் இதழ்களை அவள் இதழ்களோடு பொருத்திக் கொண்டான். அவளது வாசனையும் நெருக்கமும் அவன் மூளையை கிறுகிறுக்க வைக்க அவனால் அவனை கட்டுப் படுத்தவே முடியவில்லை.
கணவனுக்கான முழு உரிமையையும் அவன் எடுத்துக் கொள்ள அவன் செய்கைக்கு உடன் பட்டாள். அங்கே அவர்கள் வாழ்க்கை இனிமையாக ஆரம்பித்தது. இடையில் “எவ்வளவு அழகு வீணா நீ?”, என்று அவன் வர்ணிக்க வேறு செய்ய அதில் வெட்கம் கொண்டவள் தயக்கம் உதறி அவன் தலையில் கொட்டி வைத்தாள்.
அவர்கள் தூங்க ஆரம்பித்த போது விடியலின் ஆரம்பத்தில் இருந்தது. இரவு இருவருக்குள்ளும் நெருக்கம் இயல்பாக வந்தது. இருவருமே சந்தோஷமாகவே அதை ஏற்றுக் கொண்டார்கள். காலையில் முதலில் கண் விழித்தது வீணா தான். அவனுடைய கையானைப்பில் தான் இருந்தாள்.
சட்டென்று இரவு நடந்தது அனைத்தும் நினைவில் வந்து அவளை முகம் சிவக்க வைத்தது. மெதுவாக அவன் கையணைப்பில் இருந்து விலகப் போக அவள் அசைவில் கண் விழித்தவன் அவளை விடாமல் இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“சத்யா விடுங்க, நேரம் ஆச்சு ஸ்கூல்க்கு போகணும்”
“அதுக்கு இன்னும் நேரம் இருக்கு. இப்போதைக்கு உன்னை விட முடியாது, என் கைக்குள்ளே இரு”, என்று சொன்னவனின் விரல்கள் மெதுவாக அவள் உடலில் பயணிக்க அவனிடம் இருந்து தப்பித்து குளியல் அறைக்குள் செல்வதற்குள் போதும் போதும் என்று ஆனது வீணாவுக்கு.