உண்மையிலே சத்யா இப்படி செய்திருந்தால் அடித்திருப்பார். ஆனால் விட்டிருப்பாரா? நிச்சயம் இல்லையே. தவறு செய்து விட்டோமோ என்று அவர் யோசிக்க “பரவால்ல மாமா, நான் போறேன். இந்த உலகத்தை விட்டே போறேன். கடைசியா உங்க கிட்ட மட்டும் பேசணும்னு தோணுச்சு. ஏன்னா எங்க அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா. நான் போறேன். அம்மா தங்கச்சியை பாத்துக்கோங்க. நீங்க பாத்துக்குவீங்கன்னு தெரியும்”, என்றான்.
“என்ன டா சொல்ற? மாமாவும் தப்பு பண்ணிட்டேன் டா. நானே எல்லாம் சரி பண்ணுறேன். ஸ்ரீயை உனக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”, என்று அவரே வாயை விட சத்யாவைக் கொலை செய்வதை விட ஸ்ரீயை திருமணம் செய்து காலம் முழுக்க அவர்களை அழ வைக்கலாமோ என்றும் யோசித்தான்.
அவன் மனதோ “அவளைக் கல்யாணம் பண்ணி மறுபடியும் இந்த குடும்பத்துக்குள்ள நுழைஞ்சு உன் நிம்மதியை கெடுத்துக்க போறியா? ஜி சொன்ன மாதிரி சிங்கப்பூர் போனா உனக்கு வேற விதமா வாழ்க்கை இருக்கும். சத்யாவைக் கொன்னுட்டு தீனாவை அழ வச்சிட்டு நாட்டை விட்டு போய் நிம்மதியா இருக்க பாரு”, என்று சொன்னதும் அது தான் சரி என்று பட்டது.
“என்னால இங்க இருந்து வர முடியாது மாமா. என்னை பிடிச்சு வச்சிருக்காங்க. என்னை நம்பி முப்பது லட்ச சரக்கு கொடுத்தாங்க. அது குணா கிட்ட மாட்டிக்கிட்டு. இப்ப அவனும் போலீஸ் கிட்ட. அதனால என்னைக் கொன்னுருவாங்க”
“முப்பது லட்சம் என்ன? என் மருமகனுக்காக முப்பது கோடி கொடுப்பேன் டா. நீ எங்க இருக்க சொல்லு? நான் வரேன்”
“சத்யா வந்தா அடிச்சு கொன்னுருவான் மாமா”
“அவன் கிட்ட சொல்லாம வரேன் டா. அவன் ஸ்ரீக்கு நடந்ததுக்கு கோபமா இருப்பான். நான் மட்டும் நேர்ல வரேன். நீ லொகேஷன் அனுப்பு”, என்று சொன்னவர் அவன் அனுப்பியதும் தனியே கிளம்பி விட்டார்.
அவன் திருந்தி விட்டானா என்ற சந்தேகம் எல்லாம் வரவில்லை. அவர் மனதில் இருந்ததெல்லாம் உயிர் நண்பன் மற்றும் தங்கையின் மகனை அப்படியே விட்டுவிட்டோம். இனி அவனை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
அவன் சொன்ன இடத்துக்கு செல்ல அங்கே அகில் மட்டும் தான் இருந்தான். “அகில்”, என்று அழைத்த படி அவர் பாசமாக அருகே செல்ல “வாயா பெரிய மனுசா. இப்படி தனியே வந்து மாட்டிக்கிட்டியே?”, என்று சிரித்தான் அகில்.
அவர் திகைத்துப் பார்க்க “நம்பிட்டல்ல? நான் திருந்திட்டேன்னு நினைச்சியா? உன் மகனைக் கொன்னு உன் நிம்மதிய கெடுக்காம நான் எப்படி சாவேன்?”, என்றான்.
“நீ தப்பு பண்ணுற அகில். நீயும் எனக்கு பையன் தான் டா”
“இத்தனை நாள் இந்த நினைப்பு எங்க யா போச்சு?”
“மன்னிச்சிரு டா மாப்பிள்ளை. ஸ்ரீயை உனக்கு கட்டித் தரேன் டா”
“அட போயா? யாருக்கு வேணும் உன் மக. உன் மகளுக்கு இனி வாழ்க்கையே இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கேன்”
“ஏய்?”
“என்ன புரியலையா? உன் மகளை நாங்க எதுவும் செய்யலை தான். ஆனா உடம்புல ஒத்த துணி இல்லாம வீடியோ எடுத்து வச்சிருக்கேன். பாக்குறியா?”, என்று சொல்ல அதிர்ந்து போனார் மனிதர்.
“அகில், அந்த வீடியோவைக் கொடு”
“இதோ இந்த போன்ல தான் இருக்கு. கொடுப்பேன், ஆனா இப்ப இல்லை. நீ அவளுக்கு எப்பலாம் மாப்பிள்ளை கொண்டு வந்து நிறுத்துறியோ அத்தனை பேருக்கும் அனுப்புவேன். இப்ப நீ உன் மகனை இங்க வரச் சொல்லு. அவனை என் கையால கொல்லனும். போலீஸ் எல்லாம் வரக் கூடாது. அப்படி வந்தா இப்பவே இந்த வீடியோவை நெட்ல விட்டுருவேன். அவளை இந்த ஊரே பாக்கட்டும்”, என்று அவன் சொல்ல அடுத்த நொடி தீனா சும்மா இருக்க வில்லை. அவன் மீது பாய்ந்திருந்தார்.
இருவருக்கும் நடந்த சண்டையில் அங்கிருந்த கட்டை மீது சென்று விழுந்தான் அகில். அதில் அவன் பின் மண்டையில் நன்கு அடிபட்டு அப்போதே அவன் உயிர் அவனை விட்டுச் சென்றிருந்தது.
அவன் இறந்து விடுவான் என்று அவரே நினைக்க வில்லை. முதலில் பயந்து போனவர் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டு அவனை அவனுடைய காரில் ஏற்றிக் கொண்டு அந்த பள்ளத்தில் உருட்டி விட்டார். அதற்கு முன் அவன் காரில் இருந்த போதை மருந்தை அவன் வாய்க்குள் போட்டார். காரை தள்ளி விடுவதற்கு முன் முடிந்த அளவுக்கு தடையத்தை அளித்து விட்டார்.
அங்கிருந்து வீடு வந்து சேர்வதற்குள் அவருக்கு அவ்வளவு பயம் தான். ஆனாலும் பிள்ளைகளை அந்த அரக்கனிடம் இருந்து காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதி அவருக்கு.
வரும் வழியிலே ஒரு இடத்தில் காரை நிறுத்தி அவனுடைய போனை எரித்து சாம்பலாக்கி தண்ணீரில் கரைத்து விட்டு தான் வந்திருந்தார்.
அவர் பக்கம் எந்த கேசும் திரும்ப வில்லை. சாரதாவே மகன் போதை பழக்கம் உள்ளவன் தான் என்று ஒத்துக் கொள்ள யாரும் தூண்டி துருவ வில்லை. குணா மற்றும் மாலினி இருவரும் போலீசில் இருந்து விடுபட சர்வேஷ் அவர்களை விட வில்லை. ஆள் வைத்து கொலை செய்திருந்தான். இப்போது அதை எல்லாம் எண்ணிப் பார்த்து படுத்திருந்தவருக்கு தூக்கம் வர வெகு நேரம் ஆனது. இந்த உண்மை அவரைத் தவிர யாருக்கும் தெரியாது. இனி தெரியப் போவதும் இல்லை. அவர் செய்தது தவறு தான். ஆனால் ஒரு தந்தையாக அவர் செய்தது சரியே. ஆனாலும் ஒரு குற்ற உணர்வு அகிலை வாழ வைத்திருக்கலாமோ என்று.
சத்யா அறையில் அன்னை தந்தை நினைவில் இருந்த வீணா இப்போது அழுகையை விட்டிருந்தாலும் அவள் முகம் லேசாக சிணுங்களுடன் தான் இருந்தது.
“அழாத வீணா நாளைக்கே நம்ம அங்க போகலாம். எப்ப உனக்கு தோணுதோ அப்ப எல்லாம் நம்ம அங்க போகலாம். உன் அப்பா அம்மாவுக்கு நானும் இனி மகன் தான். என்னை எதிர் பாக்காம நீயே கூட போய்ட்டு வா. ரொம்ப தூரத்துல ஒண்ணும் அத்தை மாமா இல்லை”, என்றான் சத்யா.
“புரியுது, ஆனா கஷ்டமா இருக்கு. உங்களுக்கு மட்டும் இந்த கஷ்டம் இல்லைல? நீங்க மட்டும் உங்க வீட்ல உங்க அம்மா அப்பா கூட உங்க ரூம்ல இருக்கீங்க?”
“எம்மாடியோ இப்ப பெண்ணியம் எதுவும் பேச ஆரம்பிச்சிறாத. இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கு. தூங்கலாமா? நீயும் படு. இது உன்னோட பெட்ஷீட் தான். மது கொண்டு வந்தா. திடீர்னு எல்லாத்தையும் மாத்தினா உனக்கு கஷ்டமா இருக்கும்”, என்றவன் இயல்பாக படுத்து விட அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இன்று இருவருக்கும் முதலிரவு. ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த வழிசலும் இல்லாமல் இயல்பாக சத்யா இருந்தான்.
அது ஒரு பக்கம் அவளுக்கு சந்தோஷம் தான். இப்போது வாழ்க்கையை ஆரம்பிக்க அவள் தயாராக இல்லை தான். ஆனாலும் அவன் ஒதுங்கி போவது சிறு வருத்தமாகவும் இருந்தது.
அவள் ஏதோ யோசனையிலே இருக்க “என்ன மேடம் தூங்குற ஐடியா இல்லையா?”, என்று கேட்டான்.
“இல்ல ஒரு குழப்பம் அதான்”
“என்ன குழப்பம் இந்த சின்ன மண்டைக்குள்ள?”
“பேசாம படுத்துட்டீங்க?”
“வேற என்ன பண்ண?”
“இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? இன்னைக்கு நம்ம பர்ஸ்ட் நைட்”
“அதுக்கென்ன? உன் மண்டைகுள்ள என்ன ஓடுது? வெளிப்படையா கேட்டுரு மா”
“என்னை உண்மையிலே உங்களுக்கு பிடிக்கலை தானே? அதனால தான் இப்படி..”, என்று தடுமாற அவள் கேள்வி அவனுக்கு புரிந்தது.
“லூசு, சத்தியமா உன்னை எனக்கு பிடிக்கும். ஆனா நீ என்ன மன நிலைல இருக்குறன்னு தெரியாம எல்லாம் ஆரம்பிக்க சொல்லுறியா? எல்லாம் இயல்பா இருக்கட்டும் வீணா. உனக்கு நான் புதுசு. எனக்கும் அப்படி தான். கொஞ்சம் லவ் பண்ணலாமே?”
“நான் ஒண்ணும் இப்பவே ஆரம்பிக்கணும்னு எதிர் பாக்கலை”
“எனக்கு உன்னை புரிஞ்சிக்க முடியுது. இங்க வா”, என்றவன் அவள் அருகில் வந்ததும் அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவன் அவனுடைய கை அணைப்பிலே அவளை படுக்க வைத்து “எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்கு. நமக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு”, என்றான்.
அவளுக்கு அதுவே போதுமானதாக இருக்க அவனுடைய கை அணைப்பில் நிம்மதியாக உறக்கத்தை தழுவினாள்.