“எப்படி என்றாலும் இன்னும் சிறிது நேரத்தில் நீ என்னருகே தானே வரவேண்டும்”, என்று நினைத்து கொண்டு ஈர உடையை மாற்றி விட்டு மஞ்சத்தில் அமர்ந்தான் நரேந்திரவர்மன்.
ஈர உடையை மாற்றி விட்டு வந்த வான்மதி தன்னையே பருகுவதை போல் பார்த்து கொண்டிருந்த நரேந்திரவர்மன் அருகில் வந்தாள்.
அவன் பார்வையில் அவள் நாணம் கொண்டு தலை குனிந்து கொண்டாள். அவளுடைய நாணத்தில் கர்வம் கொண்டான் நரேந்திரவர்மன்.
அருகில் நின்றவளை கரம் பற்றி இழுத்து தன் அருகே அமர வைத்தான். அவள் தோள் வளைவில் வழிந்த மலர் சரத்தில் இருந்த மணம் அவன் நாசியை துளைத்தது. மோகத்தீ அவனை பற்றி கொண்டது.
மோகிக்கும் அவன் பார்வையை தாங்க முடியாமல் அந்த பாவை மேனி செந்தணலாய் கொதித்தது. அவள் விழிகள் அங்கும் இங்கும் அலைந்து அலைபாய்ந்தது. அவளுடைய கண்களின் சுழட்சியில் அவன் இதயமும் சுழன்றது.
அவளை நெருங்கினான். அவள் பின்னே நகர்ந்தாள்.
நரேந்திரவர்மனின் கரம் வான்மதியின் கரத்தை பற்றி அவன் அருகே இழுத்தது. பூமாலை என அவன் மீதே விழுந்தாள் வான்மதி. அவன் நெஞ்சில் முகம் புதைந்திருந்தவளின் தலையை மென்மையாக வருடி விட்டான்.
அழகு முகத்தை உயர்த்தி அவனை பார்த்தாள். அவளுடைய கண்களில் தெரிந்த காதலில் அவன் பிரம்மித்து விட்டான். அவன் நெஞ்சத்தில் தஞ்சமென சாய்ந்திருந்தவளை அவன் கரங்களும் தழுவி கொண்டன. அவளுடைய உச்சந்தலையில் முகம் புதைந்திருந்தவனின் நாசி அவளுடைய மலர் சரத்தை வாசனை பிடித்தது.
உச்சந்தலையிலே முத்தத்தை பதித்தான் அவன். அதில் அவள் உடல் சிலிர்த்தது. அவள் மேனி நடுங்கியது. வெண்ணையை போல குழைவான அவளுடைய மென்மையான உடலில் அவன் கரம் அழுத்தி படிந்து ஆங்காங்கே அலைந்து அவளுக்கு இன்ப அவஸ்தையை கொடுத்தது. அதை தாங்க முடியாமல் பல்லால் உதட்டை கடித்து கொண்டாள்.
மென்மையாக தன் விரல் கொண்டு அந்த உதட்டை அவள் பல்லில் இருந்து விடுவித்தவன் தன்னுடைய உதட்டை அழுத்தமாக அவள் உதடுகளில் பதித்தான்.
அவள் கரங்களும் அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தன. சிறிது நேரம் கழித்து தன் உதடுகளை பிரித்தவன் அவளுடைய கழுத்து வளைவில் இதழ் பதித்தான்.
அவளுடைய மலர் வாசனையில் நரேந்திரவர்மனின் ஆண்மை விழித்து கொண்டது. அவன் கரங்கள் ஆவேசத்துடன் அவள் உடலில் பிரவேசித்தது.
அத்துமீறி பிரவேசித்த அவன் கரங்களை தடுக்க முடியாமல் துவண்டாள் வான்மதி. கரையுடைத்த வெள்ளமாக அவளை ஆக்கிரமித்த அவனுடைய ஆண்மையில் கரைந்து காணாமல் போனாள் வான்மதி.
அவளை விட்டு விலகி எழுந்தவன் சுற்றி எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அணைத்து விட்டு அவளை நெருங்கினான். அழகான சங்கமம் அங்கே ஆரம்பித்தது.
காலையில் பறவைகளின் கலவையான ஒலியில் கண் விழித்தவன் தன் கைக்குள் உறங்கி கொண்டிருந்த வான்மதியை சிறு புன்னகையுடன் பார்த்தான்.
அவன் கைகளும் அவளை தன்னை நோக்கி இறுக்கி கொண்டது. அதில் சிணுங்கி கொண்டே அவன் மார்பில் சாய்ந்தாள். அந்த நெருக்கத்தில் அவனுடைய ஆண்மை மறுபடியும் அவளை வெற்றி கொள்ள துடித்தது. அதற்கான சமையம் இதுவல்ல என்று புரிந்து கொண்டவன் “தேவி, சூரியன் உதித்து வெகு நேரம் ஆகி விட்டது”, என்றான்.
தன் கண்களை திறந்து அவனை பார்த்தவள் “ஆம், அதற்கென்ன?”, என்று கேட்டாள்.
“அதற்கு ஒன்றும் இல்லை தான். ஆனால் எழுந்து நீராட வேண்டும்”
“சரி எழுந்து செல்லுங்கள்”
“நான் மட்டுமா?”
“பின் யார் வர வேண்டும்? தங்களுக்கு வேண்டியதை பணிப்பெண்கள் எடுத்து வைத்திருப்பார்கள். புத்தாடை தயாராக இருக்கும். பிறகு என்ன?”
“அது சரி தான். ஆனால் நீயும் நீராட வேண்டும் அல்லவா?”
“ஆம், எனக்கென்று இருக்கும் தெப்பத்தில் என் நீராடலை நான் முடித்து கொள்வேன்”
“சரி உன் தெப்பத்தில் நீராடி கொள். எழுந்து செல்”
“எதற்காக இப்போது என்னை எழ சொல்கிறீர்கள் என்று நான் அறிவேன் இளவரசே. தாங்கள் இந்த அறையில் இருந்து வெளியே செல்லாமல் என்னால் எப்படி எழுந்து கொள்ள முடியும்? முதலில் தாங்கள் செல்லுங்கள்”
“ஏன் தேவி? நான் இருந்தால் என்ன?”, என்று சிரிப்புடன் கேட்டான் நரேந்திரவர்மன்.
“வேண்டுமென்றே சிரிக்கிறீர்களா? என் உடை தங்களுக்கு எதிரியாக இருக்கிறது என்று கூறி போர்க்களத்தில் காட்ட வேண்டிய தங்களின் வாளின் திறமையை என் உடை மீது காட்டி அது நார் நாராக கிடக்கிறது. அப்படி இருக்கும் போது, இப்படி பட்ட நிலையில் நான் எவ்வாறு தங்கள் முன் எழுந்து செல்வது?”
“ஹா ஹா, தந்தை எனக்காக காத்து கொண்டிருப்பார். அதனால் நான் இப்போது செல்கிறேன். இல்லை என்றால் என் முன்னே நீ எழுந்து செல்லும் வரை நான் இந்த இடத்தை விட்டு அசைந்திருக்க மாட்டேன்”, என்றவன் அவள் பதில் கூறும் முன் அவள் இதழ்களில் தன் இதழ்களை ஒற்றி விட்டு எழுந்து சென்று விட்டான்.
“கள்ளன்”, என்று நினைத்து கொண்டவள் தன் மீது போர்த்த பட்டிருந்த அவனுடைய அங்கவஸ்திரத்தை எடுத்து தன்னை சுற்றி கொண்டு அவனுடைய அறைக்குள்ளே இருந்த மற்றொரு அறைக்கு சென்றாள்.
பின் இருவரும் நீராடி, இந்திரவர்மரை காண சென்றார்கள்.
அப்போது தான் அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க வேண்டும் என்ற பேச்சை ஆரம்பித்தார் இந்திரவர்மர்.
அதை அறிந்து திகைத்தவன் “தந்தையே, தாங்கள் நலமாக இருக்கும் போது இது தேவை தானா? பெரிய தந்தையே தங்களாவது கூறுங்கள்”, என்றான் நரேந்திரவர்மன்.
“இந்திரவர்மன் கூறுவது சரியே நரேந்திரா. செங்கல்வராயனும் வல்லவரையனும் அடிக்கடி உன் மாமனை சென்று சந்திக்கிறார்கள் என்று ஒற்றர்கள் மூலம் தகவல் வருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் நம் நாட்டை போர் மேகம் சூழலாம். உன் மாமனை எதிர்த்து உன் தந்தை எவ்வாறு போர் முரசை கொட்டுவான்? அதனால் அதற்கு முன்னேற்பாடாக நீ அரியணையில் அமர வேண்டும். உனக்கென்று இளவரசியும் வந்த பிறகு அதற்கு தடை ஏது? இன்னும் ஒரு திங்களில் உனக்கு பட்டாபிஷேகம் நடக்க வேண்டும்”, என்று முடிவாய் கூறி விட்டார் வராக சித்தர்.
அரைமனதுடன் சம்மதித்தான் நரேந்திரவர்மன். “ஒரு திங்களுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறதே. அது வரை நான் இளவரசனாகவே இருக்கிறேன். நான் இப்போது மாறுவேடம் போட்டு கொண்டு நகர்வலம் செல்ல போகிறேன்”, என்றான்.
“இன்றே செல்ல வேண்டுமா? இப்போது நீ புது மாப்பிள்ளை நரேந்திரா”, என்றாள் பாண்டிமாதேவி.
“அன்னையே, எத்தனை நாட்கள் தான் புது மாப்பிள்ளை என்று கூறுவீர்கள்? என் கடமையையும் நான் செய்ய வேண்டும் அல்லவா? மக்களிடையே எதுவோ சாதி சண்டை பரவுவதாக அறிந்தேன். அதை முளையிலே கிள்ளி எரிந்து விட வேண்டும். அதனால் நான் செல்கிறேன்”, என்றான்.
“அவன் கூறுவது சரியே தேவி. சிறிது நேரம் சென்று விட்டு வந்த பின்னர் வான்மதியுடன் தானே நேரத்தை செலவிட போகிறான். அதனால் தவறு ஒன்றும் இல்லை. நீ போய் வா மகனே”, என்றார் இந்திரவர்மர்.
“இப்படியேவா போக போகிறாய் நரேந்திரா?”, என்று கேட்டார் வராகசித்தர்.
“இல்லை தந்தையே, இந்த உடை, ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து விட்டு தான் செல்ல வேண்டும்”
“அதானே பார்த்தேன்? ஆடையுடன் நீ சென்றதாக சரித்திரமே இல்லையே. அனைத்து கன்னி பெண்களின் மனதிலும் காதலை விதைக்கும் ஆண்மகனாக தானே உலாவ செல்வாய்? வான்மதி, இதை எல்லாம் நீ தான் தடுத்து நிறுத்த வேண்டும்”, என்று கூறினார் சித்தர்.
“தந்தையே தாங்கள் எங்கள் இருவருக்கும் பகை மூட்டி விடாதீர்கள். கட்டாயம் மேலாடை அணிந்து தான் செல்வேன்”, என்று சிரித்து கொண்டே அங்கிருந்து அகன்றான் நரேந்திரவர்மன்.
புன்னகைத்தவாறே அவன் பின்னே சென்றாள் வான்மதி. அவள் செல்லும் போது, அவன் வித்தியாசமான தோற்றத்தில்
தயாராக இருந்தான்.
அதை பார்த்து வியந்தவள் “என்னாலே தங்களை கண்டு பிடிக்க முடியவில்லை”, என்றாள்.
“அது தான் இந்த நரேந்திரவர்மனின் கலை திறமை. சரி சென்று வருகிறேன் தேவி. வந்த பின்னர் நேற்று போல் இன்றும் நீராட வேண்டும்”, என்றான்.
அவன் பேச்சில் சிவந்தவள், அவனை முறைத்தாள். அவன் எழுந்து செல்லும் போது அவன் கரத்தை பற்றி நிறுத்தினாள் வான்மதி.
“என்னவாயிற்று தேவி?”
“தாங்கள் மிகவும் மோசம். அத்தனை சொல்லியும் மீண்டும் மேலாடை இல்லாமல் செல்கிறீர்கள் பார்த்தீர்களா?”
“ஹா ஹா, சிறு வயதில் இருந்தே என்னுடைய பழக்கத்தை திடீர் என மாற்ற சொன்னதும் மறந்து போனேன் தேவி. இப்போது என்ன? மேலாடை அணிய வேண்டும் அவ்வளவு தானே? இதோ அணிகிறேன்”, என்று கூறி அணிந்து கொண்டான். அவனை பார்த்து புன்னகைத்தாள் வான்மதி.
அவனும் கிளம்பி சென்ற பின்னர் மகாராணி பாண்டிமாதேவியை காண சென்று அவளுடன் நேரத்தை செலவிட்டாள் வான்மதி.
நாட்களும் அதன் போக்கில் சென்றன. காலையில் அரசவை, பின் நகர்வலம், அதன் பின் வான்மதிக்காக அவன் அமைக்கும் நந்தவனம் என்று பொழுதை ஓட்டும் நரேந்திரவர்மன் அதன் பின் வான்மதியே கதி என்று கிடந்தான்.
சுதமனும், சாந்தாவும் கூட மிக ஆனந்தமாக வாழ்ந்தார்கள். அவளை அவன் குழந்தை என பார்த்து கொள்வதில் முற்றிலுமாக சுதமனிடம் மனதை பறி கொடுத்தாள் சாந்தா. இளவரசர் பற்றி எண்ணியது எல்லாம் இப்போது நினைத்து பார்த்தால் அவளுக்கே நகைசுவை போல தோன்றியது.
வான்மதியும், நரேந்திரவர்மனின் அன்பில், அவன் கரைகாணா காதலில் கட்டுண்டு கிடந்தாள்.
இவர்களுக்கு ஆனந்தமாக தருணம் செல்லும் போது செங்கல்வராயனோ நிம்மதி இல்லாமல் தவித்தான். அவனால் தோல்வியை சிறிதளவும் சகித்து கொள்ள முடியவில்லை. வல்லவரையனும் எவ்வளவோ கூறி பார்த்து விட்டான்.
ஆனால் செங்கல்வராயனோ “எனக்கு கிடைக்காத வான்மதி ஒருக்காலும் மகிழ்ச்சியாக வாழ கூடாது. அவள் வாழ்வை கெடுத்தே ஆக வேண்டும்”, என்று கூறி விட்டான்.
தமையனின் மனதில் இருக்கும் கவலையை கண்டு வல்லவரையனும் வான்மதியை எதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணினான்.