Advertisement

வரமென வந்தவளே…
அத்தியாயம் 06
கல்லூரியில் சேர்ந்த இந்த ஒரு மாதத்தில் ,அவளால் அங்கிருந்த பாடத்திட்டங்களை பார்த்து விழி பிதுங்கி போனாள் வாசவி.
அவள் ஏதோ பன்னிரெண்டாம் வகுப்பு போல் சுலபமாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு இது ஏனோ இமையமலைக்கே செல்வது போல் கடினமாக இருப்பது போல் தோன்றியது.
அவளுக்கு ஒன்று தெரியவில்லை , படிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் படித்தால் அது பார்க்கும் கண்களுக்கு பூதாகரமாக தான் தெரியும். அதுவே விருப்பத்தோடு கூடிய முயற்சி இருந்தால் எளிதாக அதனை அறிந்து கொள்ள முடியும் என்று.
அதுவும் மருத்துவம் என்பது வெறும் படிப்பு மட்டும் அல்லவே. பல உயிரை காக்க வேண்டிய கடமை உள்ளவர்கள் அல்லவா அவர்கள் .
எல்லா இடங்களிலும் உயிரை காக்க வேண்டி கடவுளே வரமுடியாது என்பதால் தான் மருத்துவர்கள் என்ற வடிவத்தை கொண்டு கடவுளை உருப்பெற்றிருந்தது.
இன்னும் ஒருவாரத்தில் அவளுக்கு தேர்வுகள் இருப்பதாக தகவல் வந்து சொல்லி சென்றிருக்க ,அன்றைய நாளே அவளுக்கு மோசமானதாக தான் அமைந்திருந்தது.
எழுந்ததும் பொறுமையாக கிளம்பியவளை நோக்கி ,ஒரு மாணவி வருகை புரிந்தாள்.
” ஹே நித்யா ,உன்ன வார்டன் மேம் சீக்கிரமா கீழ வர சொன்னாங்க ” என்க
” சரி நான் வரேன் ” என்றவள் தனது ஷாலை பின் செய்த பின்னரே கீழே சென்றாள்.
கீழே வந்தவளை பார்த்த வார்டன் ,” உன்ன கீழ வர சொல்லி பத்து நிமிஷமாச்சி. ஆனா நீ இப்போ தான் இங்க வர ” என கடுமையுடன் பேச
” சாரி வார்டன் மேம் , ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு இருந்தேன் அதான் கொஞ்சம் லேட்டாகிட்டு ” என தன்மையாக சொன்னவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
“சரி , உன்னைய பார்க்க உன்னோட பேரன்ஸ் வந்திருக்காங்க. அங்க இருக்கிற விசிட்டர்ஸ் ஏரியாவுல தான் இருக்காங்க. போ போய் பார்த்திட்டு சீக்கிரமா வா காலேஜ்க்கு டைமாகுது ” என கடுமையாகவே சொல்லி சென்றார்.
” ப்பா வந்திருக்காரா ” என்று நினைத்தவளுக்கு வருமாறு இருந்த கண்ணீர். துளி கொஞ்மாக வெளியே எட்டிப்பார்த்தது.
கலங்கிய விழிகளுடன் சந்தோத்துடனே , தன் தாய் தந்தையை காணச் ஓடோடிச் சென்றாள் மகள்.
தன் மகள் ஓடி வருவதை கண்ட பெற்றோர்கள் எழுந்து நின்று கொள்ள ,”அப்பா” என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் வாசவி.
மகளை வாஞ்சையாக அணைத்தவர் ,” எப்படி இருக்க மா..?” என்று தலையை கோதியவாறே கேட்க
” உங்களை பிரிஞ்சி நான் சோகமா இருக்கேன் பா “என்றாள் சிணுங்கிக்கொண்டே..
“ஏய் ,அப்பா கிட்ட இப்படி தான் பதில் சொல்லுவியா .ஒழுங்கா நல்லா இருக்கேன்னு சொல்லி பழகு ” என மாதவி மகளை அதட்ட
“பச் , ஏன் மா திட்ற.? நான் உண்மையை தானே சொல்றேன் .எனக்கு உங்களை விட்டு இருக்கவே பிடிக்கலை மா ” என முழுக்கென்ன கண்ணீர் விடுத்தாள் வாசவி.
” பாப்பா ” என தந்தை அதட்டல் விட
தந்தையிடமிருந்து பிரிந்தவள் ,” எனக்கு அழுகையா வருதே பா ” என குழந்தையாய் சொல்ல
அவளின் பேச்சினை கேட்ட அன்னை மற்றும் தந்தைக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே புரியவில்லை.
“இப்படி அழுகை வர அளவுக்கு ,இங்க உன்னை என்ன செய்திட போறாங்க சொல்லு ” என அன்னை கேட்க
“பச் ம்மா , எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை மா. ஏனோ எனக்கு பயமா இருக்கு நீங்க ரெண்டு பேரும் இல்லாம ” என கண்ணை கசக்கியவளை பார்த்து இருவரும் ஆயாசமாக உணர்ந்தனர்.
அவளின் இக்குணத்தை மாற்ற வேண்டி தானே ,மகளை சென்னை வரை அழைத்து வந்து கல்லூரியில் சேர்த்தது. சேர்த்தும் இவள் இப்படி இருப்பது பெற்றோருக்கு கஷ்டத்தை கொடுத்தது.
” இங்க பாரு வாசு , எல்லா நேரமும் நானோ அப்பாவோ உன்கூட எப்பவும் இருக்க முடியாது. நீ தான் எதுனாலும் தனியா இருந்து உன்னை பாதுக்காதுக்கனும். இப்படி நீ சிறுப்பிள்ளையாவே இருந்தா எப்படி சொல்லு .பெரியப்பொண்ணா அதுக்கு தகுந்தாற்போல் நடந்துக்கணும் “
” ம்மா , நான் ஒன்னும் பெரிய பிள்ளை இல்ல. பதினேழு வயது சின்ன பொண்ணு தான் ” என வேகமாக சொல்ல
  ‘அய்யோ ‘ என்றிருந்தது இருவருக்கும்..
அதன்பின் ,அவளை சமாதானம் செய்து  அவளை தேற்றி அவளுக்காக வாங்கி வந்த உணவு பண்டங்களை கொடுத்து சிறிது நேரம் அவளுடன் நேரத்தை கழித்து விட்டே சென்றனர் பெற்றோர்கள்.
அன்றைய நாள் தொடக்கம் தாய் தந்தையை பார்த்த சந்தோஷத்தில் இருந்தாலும் ,அவர்களை பிரிந்த கவலையில் இருந்தவளிடம் தான் அடுத்தவாரம் தேர்வு என்று ஆசிரியர்கள் சொல்லி சென்றது..
மாலை நேரம் படிக்கலாம் என்று புத்தகத்தை எடுத்தவளுக்கு ,விழி பிதுங்கி வெளி வருவது போல் இருந்தது.
புத்தகத்தை கண்டாலே ஏதோ தவறு என்ற பார்வையை அவள் பார்த்து வைக்க , சோர்ந்து போய் சிட் ஔட்டில் சோகமாய் வந்தமர்ந்து விட்டாள் வாசவி.
‘ நமக்கு என்ன படிக்கவே பிடிக்க மாட்டேங்கிது ,அது மட்டும் இல்லாமல் அப்பா அம்மா கிட்ட பேசணும்னு நினைச்சதை கூட பேச மறந்துட்டேனே கடவுளே ,எதுக்கு எனக்கு இந்த மாதிரி ஒரு தண்டனை ‘ என கடவுளிடம் தன் புலம்பளை துவங்கியிருந்தாள்.
“ஹலோ வாசு மேடம்.! இங்க என்ன பண்றீங்க..??” என அவள் பின்னாலில் இருந்து கேள்வி எழுப்ப
அது யாரென்று தெரிந்த வாசுவிற்கு சந்தோஷமாக இருந்தது.
” ஏன் எப்ப பாரு பின்னாடி இருந்தே கேள்வி கேட்டுட்டு வரீங்க ” என்று முகம் சுருக்கி கேட்க
” இதுக்கு எதுக்கு இப்படி முகத்தை சுருக்கி கிட்டு இருக்க ” என அதட்டியவன் ,
” தெரியலையே , எப்போ நான் உன்ன பார்த்தாலும் நீ திரும்பி தான் இருக்க “என்றான் ஆதித்யா.
” சரி விடுங்க , நான் சோகமா இருக்கேன். அதுனால பேச கூடாது அமைதியா தான் இருக்கனும் ” என  சொல்லி வாயில் கை வைத்தாள் .
அவளின் சிறுபிள்ளையான பேச்சில் சிரிப்பு வந்தாலும் ,அவளை பற்றி ஓரளவிற்கு அறிந்து கொண்டவனாக அதனை கட்டுபடுத்தி கொண்டான்.
” சரி ,நித்து பேபி ஏன் சோகமா இருக்காங்கன்னு நான் தெரிஞ்சிக்கலமா..?”
” நான் எப்படி பேசுறது . நான் தான் சோகமா இருக்கேனே ” என கண்ணை உருட்டி கேட்டிட
‘ இவ கண்ணு ஒன்னு மட்டும் போதும். நான் ஃப்ளாட் ஆகுறதுக்கு. என்ன கண்ணு டா சாமி ‘ என மனதிற்குள் நினைத்தவனுக்கு ஏன் இப்படி தோன்றியது என புரியவில்லை.
” உனக்கு பிடிச்சவுங்க கிட்ட நீ சொல்லலாம் வாசவி . என்னைய உனக்கு பிடிக்கும் தானே ” என எதிர்ப்பார்ப்போடு கேட்க
” ஏன் பிடிக்காது ,இந்த காலேஜ்லையே எனக்கு உங்களை மட்டும் தான் பிடிக்கும் தெரியுமா. ஏன்னா ,நீ ரொம்பவே நல்லவன் அந்த ஏவி மாதிரி கிடையாது  ” என சிறுபிள்ளையாய் கண் சிமிட்டி சொல்ல
‘ போச்சி டா ‘ என தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் ஆதித்யா.
” என்னாச்சி..?”
” நத்திங் டா “
” ஆமா நீ ஏன் சோகமா இருக்க.? அதை சொல்லு முதல ” என ஆதி கேட்க
” அதுவா….” என அவள் இழுக்க
” ம்ம் ,அதுவே தான் சொல்லு”
” அது இன்னைக்கு அம்மா அப்பா வந்தாங்க . நான் ரொம்பவே சந்தோஷமா இருந்தேன். ” என நிறுத்த
“அதான் நித்து பேபி ஹாப்பி தானே அப்புறம் எதுக்கு இந்த சேட் ஃபேஸ் ” என்க
” நான் ,என்னைய அவுங்க கூட கூட்டிட்டு போங்கன்னு சொல்ல நினைச்சேன். அது மட்டும் இல்லாமல் இங்க ஹாஸ்டல் சேர்ந்தா இங்கேயே தான் கம்ப்ளீட் பண்ற வரைக்கும் இருக்கனுமாம், மோனி அன்னைக்கு ஒரு நாள் சொன்னா . நான் எப்படி என்னோட அப்பா அம்மா அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் விட்டு இருக்கிறது ” என சோகமாய் சொல்ல
” இதை விட இப்போ என்ன பிரச்சனைன்னா , நெக்ஸ்ட் வீக் எக்ஸாம் வருது ‌‌. எனக்கு புக்ஸை பார்த்தாலே தலை சுத்தலா இருக்கு. எனக்கு படிக்கவே பிடிக்கலை “என அழுதிடும் குரலில் சொன்னாள்.
” ஹோ , இதுதான் நித்து பேபி சோகமா இருக்க காரணமா ” என்க
“ஆமாம் ” என மேலும் கீழும் தலையை ஆட்டி வைத்தாள்.
” இதெல்லாம் பெரிய விஷயமா சொல்லு., நாம ஈசியா படிக்கலாம் சரியா. உனக்கு நான் சொல்லி தரேன் ஓகே வா.நான் சொல்லி தரதை நீ கவனிச்சாலே போதும்  எக்ஸாம் நல்ல படியா பண்ணுவ ” என அவளை ஊக்க வித்தான்.
அதனை  கேட்ட வாசவிக்கு சந்தோஷமாக இருக்க ,” உண்மையாவா..?” என தலையை சாய்த்து அழகாய் கண்ணில் நயனங்கள் காட்டி கேட்டாள் வாசவி.
அதில் அழகாய் தொலைய துவங்கினான் ஆதித்யா.
” உண்மையா தான் நித்து பேபி ” என அவளின் மூக்கை பிடித்து ஆட்ட ,
” ரொம்ப தேங்க்ஸ் . நான் பயந்துட்டே இருந்தேன். இப்போ இந்த நித்யா ஹாப்பி ” என்றவள் எழுந்து அவனின் நெற்றியில் பட்டும் படாமலும் முத்தத்தை பதித்து ” பொய்ட்டு வரேன் ” என கூறி சிட்டாக பறந்து விட்டாள்.
இந்த மாதிரியான முத்தங்கள் அவளது தோழர் தோழியருக்கு கொடுப்பதுண்டு. அந்த நினைவிலே இவனுக்கும் கொடுத்து விட்டு ஓடினாள்.
அதில் அவன் விழிகள் விரிந்து சிலைப்போல் இருந்து விட்டான். சிறிது நேரம் கழித்து சுயநினைவுக்கு வந்தவன் ,அவள் இதழ் பட்ட இடத்தை தடவி பார்க்க ,அவனின் உடலெல்லாம் ஒருநொடு  சிலிர்த்து அடங்கியது.
” சின்ன பொண்ணா இருக்காலே , இவளை வச்சி நான் எப்படி தான் எங்களோட வாழ்க்கையை ஓட்டப் போறேனோ ” என்று மனம் நினைப்பதை அறிந்து கொண்ட அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“‘இவளை வச்சி நான் எப்படி வாழ்க்கையை ஓட்டப் போறேன்னா ‘ இந்த வரிக்கு என்ன அர்த்தம் .எப்படி சுத்தி வழிச்சு யோசிச்சாலும் அது தான் வருதே ” என வாய்விட்டு சொல்ல
” எது.?” என்ற கேள்வியோடு மனம் கேட்க
” காதல்…” என்று சொல்லும் போதே அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
” அப்போ அப்போ நான் என்னோட வாசவியை காதலிக்கிறேன்னா ,ஆனா இது எப்படி சாத்தியமாகும். அவளை நான் நாலு தடவை தான் பார்த்துருக்கேன் . இதுல எப்படி எனக்கு காதல் வந்திருக்கும் ” என மனதிடமே கேள்வி கேட்டு யோசிக்க
” காதல் எப்போ வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது ஆதி. காதல் வரதுக்கு ஒருத்தரை நாம இத்தனை டைம் மீட் பண்ணா தான் வரும்னு இல்லை. உனக்கு தோணும் அவ தான் உனக்கானவன்னு ,அவளோட சோகத்தை கரைக்க தோணும்.‌அவளை சந்தோஷமா வச்சிக்கனும் நினைக்க வைக்கும் டா. அவளுக்காக எல்லாமுமா இருக்க தோணும். அது ஒரு அழகான உணர்வு ,யார் யார் மேலையோ எல்லாம் வராது .உனக்கானவ மேல மட்டும் தான் உண்மையான காதல் வரும். அது தான் உனக்கு வாசவி மேல வந்திருக்கு ” என நீண்டதொரு விளக்கத்தை அளித்தது அவனின் மனது. 
அதை கேட்டவனுக்கு வானத்தில் தான் மட்டுமே பறப்போது போல் உணர்வு தோன்ற ,இத்தனை நாள் இருக்கின்ற அமைதி மறைந்து அவன் மனது ஆர்பாட்டத்துடன் உள்ளுக்குள்ளே நடனமாடியது.
‘இனி அவள் வாழ்வை அழகாய் மாற்ற வைப்பது என்னுடைய கடமை ‘ என்று நினைத்தவன் வீட்டை நோக்கி நடையிட்டான்.
அந்த இரவு நேரத்தில், ஹாஸ்டலில் உட்கார்ந்து பெண்கள் யாவும் படித்து கொண்டிருக்க , வாசவி மட்டுமே படிக்க விரும்பாமல் வெறும் புத்தகத்தில் இருக்கும் படத்தை பார்வையிட்டு கொண்டிருந்தாள்.
அதனை ஓரக்கண்ணால் பார்த்த மோனி , மெதுவாக அவளின் புறம் தலை சாய்த்து “ஸ்ஸ் ஸ்ஸ் ” என்றழைக்க
அவளிடம் எந்த மாற்றமும் இல்லாமல் போனது.
“ஸ்ஸ் ஸ்ஸ் ” என மீண்டும் அழைக்க
இந்த முறை அவள் காதினில் விழுந்து ,மெதுவாக பார்வையை சுழல விட்டாள் வாசவி.
மோனி அவளை பார்த்து புருவம் உயர்த்திட ,
” என்ன டி வேணும் உனக்கு..?”
” ஹே, படிக்காம என்ன பண்ணிட்டு இருக்க.? அடுத்தவாரம் நமக்கு எக்ஸாம் இருக்கு”
” இருந்துட்டு போது “என அவள் அசால்டாக சொல்லி புகைப்படத்தை பார்க்கலானாள்.
“ஏய் , கொஞ்சமாவது இப்போ படிச்சு வச்சிக்கோ டி . அப்போ  தான் எக்ஸாம் டைம் புல்லா படிச்சு முடிக்க முடியும் ” என்க
” அதெல்லாம் அந்த ஆண்டவன் ( ஆதி) பாத்துக்குவான் ” என கூறி மேலே பார்க்க அவர்கள் இருவருக்கும் நடுவில் வார்டன் முறைத்தபடி நின்றிருந்தார்.
இத்தனைக்கும் இருவருமே மெல்லமாக தான் பேசிக்கொண்டனர். ஆனாலும் அதை கச்சிதமாக கண்டுபிடித்து தான் வார்டன் என்று நிறுபித்திருந்தார்.
‘ பாம்பா பிறந்திருக்க வேண்டியது போல ‘ என வாசவியின் மனது நினைத்தது.
” ரெண்டு பேரையும் படிக்க சொன்னா ,பேசிட்டுருக்கீங்க ” என்க
” அது வந்து மேம்…” என்று மோனி இழுக்க
” படிக்கிற நேரத்துல கதை பேசினா ,என்ன பணிஷ்மெண்ட்னு தெரியுமா ” என‌ கோபமாக கேட்க
“என்னது பணிஷ்மெண்டா ” என வாயை பிளந்தாள் வாசவி.
“போங்க ரெண்டு பேரும் எல்லாரும் முன்னாடி நின்னு தோப்பு காரணம் போடுங்க ” என்று உத்தரவிட
” ஞே ” என விழிகள் விரித்து பார்த்தனர் இருவரும்..
“ஓகே மேம்..” என்று கூறி வாசவி முன்னே நடக்க ,அவளுக்கு பின்னே சோகத்தோடு நடந்தாள் மோனிகா.
வாசவிற்கு இது ஒன்னும் பெரிய விடயமாக தெரியவில்லை. அவர்கள் தோழியர் கூட்டத்துடன் இருக்கும் போது இது மாதிரி எதாவது செய்வது உண்டு தான்.‌ ஆனால் மோனிக்கு அப்படியில்லை , இது அவளிற்கு ஏனோ   அவமானமாகவே தோன்றியது.
வார்டன் ,அவர்கள் பத்து தோப்புக்கரணம் போட்டவுடன் ‘போதும்’ என்று சொல்லிவிட , இருவரும் அவர்களது இடத்திற்கு சென்று படிக்க ஆயத்தமானார்கள்.
அதன்பின், அனைவரும் சிறிது நேரத்திலே அறைக்கு சென்று விட ,வாசவி தான் ஆதி தனக்கு சொல்லி கூடுப்பார் என்ற நம்பிக்கையில் பிள்ளையாருக்கு ஒரு நன்றியை தெரிவித்து விட்டு படுத்து கொண்டாள்.
ஏனோ , வாசுவிற்கு ஆதி வேற்றாளாக தெரியவில்லை. அவனின் பேச்சை கேட்கும் போது எல்லாம் ,அவளுக்கு அவளின் தந்தையை தான் ஞாபகம் படுத்துவான். தன்னை ஒரு குழந்தை போல் பாவிக்கும் ஆதியை சிறிது சிறிதாக வாசவிக்கு பிடிக்க ஆரம்பித்தது.
அதேபோல் இங்கே வீட்டிற்கு கோபத்துடன் வருகை புரிந்தான் ஏவி.
வருவாள்…

Advertisement