Advertisement

அத்தியாயம் இருபத்தி ரெண்டு:

குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது இப்போது. ஆகாஷ் தொழிலையும் கவனித்துக் கொண்டான், அதே சமயம் அவனுடைய நண்பர்கள் மூலமாக ப்ரோக்ராம்மிங்கும் செய்துக் கொண்டிருந்தான்.

அதற்காக கனி அவனுக்கு நிறைய சமாதானம் சொல்ல வேண்டி இருந்தது. ஆகாஷ் அவன் அப்பாவின் தொழிலைப் பார்க்க தயாராகவே இல்லை. “நல்லா நடந்துட்டு இருக்குற தொழில், அதை நான் வந்து நஷ்டப்படுத்திட்டு இருக்கேன்”, என்று அதைப் பார்க்கவே மாட்டேன் என்றான்.

“எனக்கு என்னோட சாப்ட்வேர் லைன் தான் பிடிச்சிருக்கு”, என்றவனிடம்……. அவள் கட்டாயப்படுத்தவும் ஒரு உடன் படிக்கைக்கு வந்தான்.

“சரி! கொஞ்ச நாள் நான் கவனிச்சுக்கறேன்! ராகவுக்கு  ஒரு வயசு ஆன அப்புறம் நீ என் கூட வா…….. அனிதா கூட இரு……… வேலையைக் கத்துக்கோ! அப்புறம் நீ இதைப் பாரு! நான் என் வேலையைப் பார்க்கிறேன்!”, என்றான்.

“நானா?”, என்று விழிவிரித்த போது….

“நீதான்! நீயே தான்!”, என்றான் கறாராக……. பிறகு உடனே பாவனையை மாற்றி.

“எனக்காக நீ இதுக் கூட செய்ய மாட்டியா!”, என்று பாவம் போல வினவ…….

அவனின் பாவனையில் உருகியவள்……. “அவ்வளவு தானே! நான் பார்த்துக்கறேன்! ஆனா நீங்க முழுசா ஃபீல்ட் மாறக் கூடாது. இதுலயும் என்கூட இருக்கணும்!”, என்றாள்.

அவள் போலவே, “அவ்வளவு தானே! நான் பார்த்துக்கறேன்!”, என்றான்.   தொழில் வாழ்க்கை இப்படி செல்ல……… அவர்களின் காதல் வாழ்க்கை அவர்களின் சிறு சிறு சீண்டலோடு மட்டுமே இருந்தது. அதற்கு மேல் முன்னேறவில்லை.   

அன்று காலை ஆகாஷ் குளித்துக்கொண்டு இருந்த போது செந்தில் அவனுக்கு போன் செய்தான். அது செந்திலிடமிருந்து வந்த அழைப்பு என்பதால் அதை எடுத்த கனிமொழி, “சொல்லுங்கண்ணா……..”,

“ஆகாஷ் இல்லைம்மா……..”,

“அவங்க குளிக்கறாங்க……. குடுக்கட்டுமா?”,

“வேண்டாம்! குளிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் பேசிக்கறேன்”, என்றவன்……… “ஒரு சந்தோஷமான விஷயம் அவனோட பகிர்ந்துக்கலாம்னு கூப்பிட்டேன்”, என்றான்.

“என்னண்ணா?”, என்றாள் ஆர்வமாக…..

“ராஜிக்கு இப்போ இது மூணாவது மாசம்”, என்றான் தயங்கி வெட்கமாக……

“நீங்க அப்பாவாகப் போறீங்கன்னு சொல்லுங்க”, என்றாள் சந்தோஷமாக.

“ம்!”, என்றான் அவனும் சந்தோஷமாக.

“ராஜி இருக்காளா? நான் அவ கிட்டப் பேசறேனே!”,

“இதோ!”, என்று பக்கத்தில் இருந்த ராஜியிடம் கொடுக்க…….

“கங்ராட்ஸ் ராஜி!”,

“தேங்க்ஸ் கா!”,

“பார்த்து ஜாக்கிரதையா இரு! காலேஜ் எப்போ முடியுது……?”,

“இன்னும் ஒரு சிக்ஸ் மந்த்ஸ் இருக்கு!”,

“எதுலப் போற?”,

“இவர் கார்ல தான் கொண்டுபோய் விட்டுட்டு கூட்டிட்டு வர்றார்!”, என்றாள், அதை சொல்லும்போது அவள் குரலில் தெரிந்த வெட்கத்துடன் கூடிய காதல்,

“இந்த செந்திலண்ணா ரொம்ப லக்கி!”, என்று கனிக்குத் தோன்ற வைத்தது.     

“பத்திரமா போ! பார்த்து பதுவிசா நட !கவனமா இரு! டாக்டர் கிட்ட கேட்காம எந்த மாத்திரையும் சாப்பிடாத! ஃபோலிக் ஆசிட் சாப்பிடறியா!”, போன்ற கேள்விகளை கேட்டு…… ராஜியிடம் பத்து நிமிஷம் பேசியப் பிறகே போனை வைத்தாள்.  

அவள் வைத்த பிறகு சிறிது நேரம் கழித்துத் தான் ஆகாஷ் வந்தான்.

அவள் விஷயத்தை கேள்விப்பட்டதில் சந்தோஷமாக இருக்க……

“என்ன அழகி? முகத்துல ஒரு தேஜஸ் தெரியுது!”, என்று அவளின் அருகில் வந்தான். அவன் கவனம் முழுவதும் அவள் மேல் இருந்தது. அவனுக்கு சற்று முன்னர் தான் அவள் தலைக்கு குளித்திருந்தாள். தலை காய்வதற்காக அதை விரித்து போட்டிருந்தாள். முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை. ஒரு வட்ட பொட்டு நெற்றியில் அதுமட்டுமே.

அந்த பொட்டு அவளின் முகத்திற்கு தந்த அழகை ரசித்துக்கொண்டிருந்தான். அவள் அழகினில் முழுதாக லயித்திருந்தான். அந்த நேரத்தில் அவனின் எண்ணம் செயல் சொல் எல்லாம் கனி மட்டுமே.

அவன் அருகில் வரவும், “ராஜி இருக்காள்ள……..”, என்று அவள் ஆரம்பிக்கவும்……. அவளில் லயித்திருந்தவன் மனது யார் ராஜி என்பது போல போல் கனியைப் பார்த்தான். அந்த நொடி ராஜி யார் என்று அவனின் ஞாபகத்திற்கு சுத்தமாய் வரவில்லை.

அவன் பார்வை யார் ராஜி என்றா என்னிடம் கேட்டது என்று கனி ஒரு நிமிடம் உறைந்தவள்……… “நம்ம ராஜி! செந்திலண்ணா ஃவைப்……..”, என்று அவள் விளக்கம் கொடுக்குமுன்னே அவனுக்கு ஞாபகம் வந்திருந்தது.

“அவளுக்கு என்ன?”, என்றான் வெகு பாந்தமாக அவளின் இடையை சுற்றிக் கை போட்டு.

கனிக்கு அந்த ஒரு நொடி……… அவன் ராஜியை மறந்த அந்த ஒரு நொடி……. போதுமானதாக இருந்தது. தான் ராஜியை அவனிடமிருந்த மறையச் செய்கிறோம் என்ற நினைவே அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தது.

அவன் எதிர்பாராத போது அவனை வேகமாக அணைக்க…… அவன் பேலன்ஸ் தவறி படுக்கையில் விழ……… அவன் மேலேயே விழுந்தாள். கூடவே ஆழமான ஒரு கன்னத்து முத்தத்தையும்  பதித்தாள்…….

அவளின் இந்த எதிர்பாராத தாக்குதலில் சமன்பட முடியாமல் இடுப்பில் இருக்கும் துண்டு அவிழ்ந்து விடுமோ என்று இறுக்கப் பிடித்தான்.

“ஏய் பிசாசு! எதுக்குடி இப்படித் தள்ளுன! எதுக்கு இவ்வளவு சந்தோஷம்!”, என்றான் புரியாமல்…….. அவளை அணைத்த ஒரு கையை அப்போதும் விலக்காமல், அவளை வாசம் பிடித்துக்கொன்டே.

நீங்கள் ராஜியை மறந்தது என் சந்தோஷம் என்றா சொல்ல முடியும். “ராஜி கன்சீவ் ஆகியிருக்கலாம்! செந்தில் அண்ணா உங்களுக்கு போன் பண்ணினாங்க!”, என்றாள்.

“அதுக்கா உனக்கு இவ்வளவு சந்தோஷம்”, என்றான் சந்தேகமாக……

“அதுக்குத் தான்! ஏன்?”, என்றாள் முகத்தில் வேறு எதையும் காட்டாமல்.

அவளை நம்பியவன், “அதுக்காக என் துண்டை உருவி, என் மானத்தை இந்நேரம் வாங்கியிருப்ப!”, என்றான் குறும்பாக….   

“சாரி! சாரி!”, என்றபடி அவசரமாக அவன் மேலிருந்து எழ எப்போதும் போல பதட்டத்தில் திரும்பவும் மேலேயே விழுந்தாள்.

“இதுகெல்லாம் சாரி சொல்றப் பொண்டாட்டி நீயாதான் இருப்ப!”, என்றான்.

அவள் லஜ்ஜையோடு அவன் மார்பினிலேயே முகம் புதைத்தாள்…..

“இரு”, என்றவன் அவன் எப்போதும் செய்வது போல அப்படியே ஒரு பக்கமாக திரும்ப பக்கத்தில் படுக்கையில் விழுந்தாள்.

“இப்போவாவது தோணுதா!”, என்றான் சீரியஸாக.

“என்ன?”, என்றாள் புரியாமல்.

“நான் முதல்ல கேட்டது தான்! ஒரு சிலிர்ப்பு, ஒரு படபடப்பு, நான் வேணுங்கற மாதிரி!”, என்று அவன் சொல்ல……..

பயங்கரச் சிரிப்பு கனிமொழிக்கு…… “சாரி டு சே திஸ் பாஸ்! பட் எனக்குத் தோணலை!”, என்று அவள் தோளைக் குளுக்க…..

அசடு வழிய எழுந்தான் ஆகாஷ். ஆனால் அவனுள் ஏதோ ஏமாற்றம்.

நன்றாகப் போய் கொண்டிருந்ததில் தான் ஏதோ சொதப்பி விட்டோம் என்று கனிக்குப் புரிய……. “நான் ஏதாவது ஹர்ட் பண்ணிட்டேனா”, என்றாள்.

“இல்லை”, என்று சொல்லி ஆகாஷ் அவன் ரெடியாகப் போக….. செய்யும் வகைதெரியாது நின்றாள்.  

இருந்தாலும் ராஜியின் ஞாபகங்கள் அவனிடம் மங்கத் துவங்கியிருப்பது அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷத்தையும் மன உற்சாகத்தையும் கொடுத்தது.

இப்படி சில சமயம் சில அபஸ்வரங்கள்……… மற்றபடி வாழ்க்கை ஸ்வர லயத்தோடு அதனோடு கூடிய தாளத்தோடு சென்றது.              

ஆகாஷ் கனியை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் என்றே சொல்ல வேண்டும். கனியும் அதற்கு சற்றும் குறையாத பிரியத்தை ஆகாஷ் மீது காட்டினாள்.

தங்களுக்குள் மிகுந்த காதல் இருந்தாலும் உடல் ரீதியான உறவு தங்களுக்குள் ஏற்படாதவரை அது முற்றுப் பெறாத ஒன்றாகவே இருக்கும் என்பது கனியின் எண்ணமாக………. அவ்வப்போது ஆகாஷின் பார்வைகள் கொடுத்த செய்தியில் தோன்ற ஆரம்பித்தது.  

ஆனால் ஆகாஷ் அதைப் பற்றி கவலைப்பட்டவனாகவே தெரியவில்லை. பார்வை ஒன்றேப் போதும் என்பது மாதிரியாக இருந்தான்.

தானாக எப்படி அவனிடம் பேசுவது என்று கனிக்கு சங்கோஜமாக இருந்தது. அவனோ அதைப் பற்றி யோசித்ததாகவே தெரியவில்லை. அவளாக அதை பற்றி பேசவும் பிடிக்கவில்லை. ஆனால் அதை தள்ளித் தள்ளி போடுவது அவனுக்கு தான் சரியாக நடந்துக்கொள்ளாததாக தோன்றியது.

அதே சமயம் தன்னால் இந்த உறவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் சந்தேகமாக இருந்தது. என்னவோ வித விதமான சஞ்சலங்கள் அவளின் மனதில். 

சற்று எரிச்சலான மனநிலையில் இருந்தாள்.   

அவளாகவே குழந்தைக்கு உடம்பு காட்ட போனபோது ஒரு லேடி டாக்டரிடம் போய் சில ஆலோசனைகளை அவளே கேட்டு வந்தாள். இதற்கு ஹாஸ்பிடலுக்கு அவளுடன்  ஆகாஷ் தான் வந்திருந்தான்.

பீடியாட்ரீஷனை பார்த்துவிட்டு வரும்போது, “எனக்கு ஒரு லேடி டாக்டரை பார்க்கணும்”, என்றாள்.

“ஏன் கனி உடம்பு சரியில்லையா?”, என்றான் அக்கறையாக……

“நல்லாத் தான் இருக்கு”,

“அப்புறம் எதுக்குப் பார்க்கணும்!”,   

“எதுக்கோப் பார்க்கணும்! எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்ல முடியாது”, என்றாள் பட்டென்று.

வெளியிடம் என்பதால் அமைதியாகி விட்டான். அதுவுமில்லாமல் இப்படி கனி அவனிடம் கோபப்பட்டு நிறைய நாட்கள் ஆகிவிட்டது. திருமணத்திற்கு முன் இப்படி தான் அவனை கடித்து குதறுவாள். இன்று அப்படி ஒரு கனியை அவளிடம் பார்த்தான்.

ஆகாஷிற்கு, “என்னப் பிரச்சனை என்றே தெரியவில்லையே”, எனக் கவலையாகப் போய்விட்டது.   

வீட்டிற்கு வந்ததும் மறுபடியும் மெதுவாக கேட்டான்…. “ஏதாவது பிரச்சனையாக் கனி”, என்று….

இன்னும் எரிச்சலாக வர…….. “நீ இன்னும் பிரமச்சாரியா இருக்குறது தான் என் பிரச்சனை, போதுமா!”, என்றாள் பட்டென்று.

முதலில் ஆகாஷிற்கு ஒன்றும் புரியவில்லை. பின்பு மெதுவாகப் புரிய அவனின் முகம் முழுக்கப் புன்னகை. அவளை இடையோடு அணைத்து தோளில் முகம் வைத்தவன்….. “எனக்கு அது ஒண்ணும் பிரச்சனையில்லைடா, உன்கூட இருக்கறதே எனக்குப் போதும்”, என்றான் கனிவாக.

அவனின் குரலில் தெரிந்த அக்கறை அவளை வருத்த…… “நான் உங்ககிட்ட சரியா நடந்துக்கலையோன்னு எனக்குத் தோணுது”, என்றாள் குரல் கம்ம….

“அப்படியெல்லாம் நீ எதுவும் போட்டுக் குழப்பிக்க வேண்டாம்…….. ஐ லவ் யூ! ஐ லவ் யூ வெரி மச் அழகி……..!”, என்று அவனின் அணைப்பை இறுக்க……

அவனிடம் இருந்து திமிறி விலகியவள், “நீ முப்பது வயசு இல்லை நாப்பது வயசானாலும் பிரம்மசாரிதாண்டா இடியட்!”, என்று கோபமாக முணுமுணுத்தாள்.

“என்ன? என்ன சொன்ன?”, என்று ஆகாஷ் அதைக் கேட்க…..  

“ம்! கதவை திற! காற்று வரட்டும்னு சொன்னேன்!”, என்று கத்திவிட்டு ராகவை கவனிக்கப் போய்விட்டாள்.   

ஆகாஷ் இப்போது வாய் விட்டுச் சிரித்தான். “கதவை திற! காற்று வரட்டுமா!…… யப்பா என்னமா பேசறாடா இவ!”, என்று நினைத்துக்கொண்டே வேலையைப் பார்க்கப் போனான். இருந்தாலும் முழுக்க முழுக்க கனியின் ஞாபகங்களே…….

அவளுள் தன்னிடம் சரியாக நடந்துக்கொள்ளவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி தோன்ற ஆரம்பிப்பதை உணர்ந்தான்.

அவனென்ன அவளை வேண்டாம் என்றா சொல்வான்……… அவளுக்காகத் தான் பார்த்தான். இனியும் அவளுக்கு எந்த மனப்போராட்டமும் கொடுக்க அவனுக்கு இஷ்டமில்லை. போராட்டங்களை முடித்துக் கொள்வது என்ற முடிவோடு அவன் வீட்டிற்கு வர……   

கனியோ அவனுக்கு எதிர்மாறான மனநிலையில் இருந்தாள். “எப்படியோப் போகட்டும் எனக்கென்ன? இவன் பிரம்மச்சாரியா இருந்தா எனகென்ன? இல்லாட்டி எனக்கென்ன?”, என்று மனதிற்குள் காய்ந்துக் கொண்டிருந்தாள்.

இப்படி ஒரு புறம் நினைத்தாலும், அவனே சும்மாயிருக்க அவனை சீண்டி விட்டு விட்டோமோ? தன்னால் அவனுடனான உறவை அறிவரசுவின் நினைவு வராமல் எதிர்க்கொள்ள முடியுமா என்றும் சஞ்சலமாக இருந்தது.

அவளுக்கு அப்படி ஒன்றும் அறிவரசுவை பற்றிப் பிடித்தமான நினைவுகள் இல்லை தான். இருந்தாலும் நடந்த நிகழ்வு நடந்ததுதானே! அதற்கு சாட்சியாய் ராகவ் வேறு இருக்கிறானே…….. இப்படி ஏதோ நினைவுகள் மனதிலே…… 

ஆகாஷ் ரூமிற்குள் வரும்முன்னரே ராகவ் உறங்கியிருக்க………. ராகவின் அம்மா உறங்குவதுப் போல கண்களை மூடியிருந்தாள். அவள் உறங்கவில்லை என்று அவனுக்குத் தெரியும். பக்கத்தில் போய், “அழகி”, என்றான்.

பதிலில்லை…… இரண்டு மூன்று முறை அழைத்தும் பலனில்லை.

அவன் உடை மாற்றும் வரையில் அறையில் அப்படி ஒரு அமைதி. அவன் இருக்கிறானா இல்லையா என்று தெரியாமல் கனி கண்களைத் திறக்கலாமா என்று நினைத்த போது அவளை தாண்டி உறங்கும் ராகவை மெதுவாகத் தூக்கினான்.

அவள் உணர்ந்தாலும் கண் திறக்கவில்லை. “பார்ப்போம்! எத்தனை நேரம் கண் திறக்காம இருக்கேன்னு”, என்று சொன்னவன், ராகவை அலங்காமல் தொட்டிலில் போட்டான்.  

அவன் சொன்னது கனிக்கு கேட்டாலும் பிடிவாதமாக கண்ணைத் திறக்காமல் இருந்தாள். வரப்போவது புரிந்தாலும் மனம் முழுவதும் ஒரு சஞ்சலம்….. ஒரு தயக்கம் இருக்க……. அதை மயக்கமாக மாற்றும் வழியில் போக ஆரம்பித்தான் ஆகாஷ். 

அவளருகில் நெருங்கிப் படுத்தவன் அவளின் காதுக்குள் ஒரு இயற் போனை மாட்டி மற்றொரு இயற் போனை தன்னுடைய காதுக்குள் மாட்டி பாட்டை ஓடவிட்டான். அவர்கள் எப்போதும் இதுப்போல கேட்பது தான். ஆனால் தள்ளித் தான் இருப்பான். கனியாக தான் அவன் மேல் அமர்ந்தோ சாய்ந்து கொண்டோ இருப்பாள்.

இந்த முறை ஆகாஷ் தான் அவளை மிகவும் நெருங்கியிருந்தான்.      

  இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்…

முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்
நெஞ்சுக்குள்ளே தீயிருந்தும்
மேனியெங்கும் பூவசந்தம்…
கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்…

கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்க
வந்துதொடும் உன் கைகள் வகிடெடுக்க
போதைக்கொண்டு பூ அழைக்க
தேடிவந்து தேனெடுக்க
தங்கக்கொழுந்து தொட்டவுடன் பூவாக…

இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்…

மிகவும் மிகவும் நெருங்கியிருந்தான். பாடலின்  சாராம்சத்தை செயலில்  கொண்டுவந்தான். கனி முழுவதும் மயங்கி இருந்தாள். அவள் பயந்ததுப் போல அவளுள் வேறு நினைவுகளே இல்லை. ஆகாஷ் ஆகாஷ் மட்டுமே இருந்தான்.

எங்கணம் போர்வை மட்டுமே ஆடையாய் அவள் மேல் மாறிய விந்தை அவளே அறியாள். உணர்ந்த பொழுது, “ஐயோ!”, என்று கத்தப் போக…… “ஷ்! ராகவ்!”, என்று அவசரமாக அவளின் வாய் பொத்தினான் ஆகாஷ்.

தன்னிலை அவளை மயக்கத்தில் இருந்து கலக்கத்திற்கு கொண்டு சென்றிருக்க…… இனி ஒரு க்ஷணமும் உன்னை விடேன் என்பது போல போர்வைக்கு பதிலாய் அவனே ஆடையாய் மாறியிருந்தான்.

என்னதான் ஆகாஷுடன் மனம் ஒன்றியிருந்தாலும், முத்தம் பெறுவதும் கொடுப்பதும் சாதாரணமாக நடந்தாலும்.. இப்போது அவளையும் மீறிய ஒரு சிறு எதிர்ப்பு அவளின் உடல் மொழியில் இருந்தது தான். அதை உணர்ந்தானோ என்னவோ எளிதாக முறியடித்தான்.  

இயற் போனை தூக்கி தூர வீச…….. இப்போது ஸ்டீரியோவில் இருந்து பாட்டு தானாக ஒலித்தது.

விடிய விடிய சொல்லித் தருவேன்                                                                                                            பொன் மாலை நிலாவினில் வேதங்கள்                                                                                                                          என் மார்பில் உலாவரும் தாகங்கள்                                                                                                                                 இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்

அதையும் நிறுத்தியவன்……

சொல்லி தர நான் இருக்கேன் ராஜாத்தியே……..

என்ற பாடியபடி தொடர………            

கனிமொழி இப்போது முழுதாக கனிமொழி ஆகாஷ் ஆகியிருந்தாள். பாட்டின் பொருள் போலவே அவன் மார்பில் உலா வந்த தாகங்களுக்கு எல்லாம் வடிவம் கொடுத்தான்.

ஆகாஷின் திருப்தி மட்டுமே கனிமொழியின் எண்ணமாக இருந்தது.

சொன்னபடி விடிய விடிய சொல்லிக்கொடுத்து, “தேங்க்ஸ் அழகி”, என்று அவன் அவளை விட்டபோது ராகவ் அவளை தேடத் துவங்கியிருந்தான்.

எப்போதும் ராகவ் எழுந்தால், ஆகாஷ் அவனை கவனித்தாலுமே, கனி அவனை வாங்கி கவனிப்பாள். நம்பிக்கையின்மை என்று சொல்ல முடியாது, அதே சமயம் முழு நம்பிக்கையும் வர மறுத்தது. அவளே கவனித்தாள் தான் அவளுக்கு திருப்தி.

இன்று அதுப் போல எல்லாம் எதுவும் செய்யவில்லை. அவர்களின் உறவு ஒரு புதிய பரிமாணத்தை பார்த்திருந்ததால் ராகவை தூக்கிக்கொண்டு ஆகாஷே போய் பால் கலக்கி கொடுக்கவும் அமைதியாகப் பார்த்திருந்தாள்.

கண்களில் எப்பொழுதையும் விட ஒரு சொந்தம் ஒரு உரிமை…….  உடலின் அயர்ச்சி ஒரு உறக்கத்தை வேண்ட…. அமைதியாக அவனை பார்த்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன், “நீ தூங்கு!”, என்றபடி ராகவை தூக்கிக்கொண்டு ரூமிற்கு வெளியே போனான்.

“நீங்க…….”, என்று கனி கூப்பிட…….

“இப்போவே நாலு மணி ஆச்சு! இவன் இப்போதைக்கு தூங்க மாட்டான். இன்னும் ஒரு மணிநேரம், அனி எழுந்துக்குவா! அவக்கிட்ட விட்டுட்டு வர்றேன்!”, என்றபடி வெளியேப் போனான்.

என்னவோ ஒரு நிம்மதி கனியின் மனதுக்குள்….. தனது இரண்டாவது திருமணம் சரியா? தவறா?…….. தான் எங்கேயாவது தவறு செய்துவிட்டோமா? என்று மனதின் மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த சிறு சிறு சஞ்சலங்களும் மறைந்துப் போயிருந்தன. 

அவளுடைய மனதின் போராட்டங்கள் எல்லாம் முடிந்தது போலவே தோன்றியது.   

அவள் எப்பொழுதும் சொல்வது போல, “இன்னைக்கு நைட் தூங்கி நாளன்னைக்கு காலைல தான் எழுந்திருப்பேன்”, என்பது போல தூங்கினாள்.

ஆகாஷ் வந்து அவளுடன் சிறிது நேரம் உறங்கியதோ……. பிறகு எழுந்து ஆபிஸ் போனதோ…. அனிதா வந்து ராகவிற்காக அவளைப் பார்த்ததோ…. அவளின் உறக்கத்தை பார்த்து அனிதாவே அன்று முழுவதும் ராகவை கவனித்துக்கொண்டதோ எதுவுமே கனிக்கு தெரியாது.

ஆகாஷே வந்து திரும்பவும் அவளை எழுப்பவும் தான் எழுந்தாள்.

நேரம் பார்த்தவள், “அச்சச்சோ எட்டு  மணி ஆயிடுச்சா?”, என்று காலை எட்டுமணி என்று நினைத்து அவள் கேட்க…….

“இது நைட் எட்டு மணி!”, என்று சிரித்தான் ஆகாஷ். அவள் நன்கு உறங்கட்டும் என்பதற்காக ஜன்னல் மூடி…….. ஸ்க்ரீன் எல்லாம் இழுத்துவிட்டிருந்தான். அதனால் அவளுக்கு இரவா பகலா என்றுக் கூடத் தெரியவில்லை. 

வேகமாக எழுந்து ஸ்க்ரீனை விலக்கிப் பார்த்தாள்…… இரவு கவிழ்ந்திருந்தது, நிலவு தெரிந்தது. முகம் முழுவதும் வெட்கத்தைப் பூச, “அச்சோ! அண்ணி என்ன நினைச்சிருப்பாங்க!”, என்றுப் பதறி………. “ராகவ் தேடியிருப்பான்”, என்று கவலைப்பட…

“ஈஸி! ஈஸி! எதுக்கு இவ்வளவு பதட்டம்! ராகவ் தூங்கறான் பாரு!”, என்று காட்ட….. அவன் ரூமில் இருந்த தொட்டிலில் தான் தூங்கிக்கொண்டு இருந்தான்.

சற்றே நிம்மதியானவள், “அண்ணி……!!!!!!!!”, என்று இழுக்க…….

“தலைவலி மாத்திரை போட்டுட்டு தூங்கிட்டேன்னு சொல்லு!”,

“நம்புவாங்களா?”,

“ஏன் நம்பமட்டாங்க?”, என்று ஆகாஷ் குறும்புடன் கேட்க………..

அவனின் மார்பிலேயே முகம் புதைத்தாள். இருவர் மனதிலும் மிகுந்த நிம்மதி.

தலை தூக்கி அவனைப் பார்த்தவள்……. “உங்களுக்கு தெரியுமா? எனக்கு ஆண்கள் யாரையுமே அவ்வளவு சீக்கிரம் பிடிக்காது. பெருசா வெறுப்பு அப்படின்னு எல்லாம் இல்லை. ஆனாலும் யாரைப் பார்த்தாலும் அவங்க குறை மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். அதான் எனக்கு மாப்பிள்ளை பார்த்தப்போவும் யாரையும் பிடிக்கலை……”,  

“அப்புறம் அப்பா கட்டாயப்படுத்தி ஒரு கல்யாணம் பண்ணி வெச்சார். அது பிடிச்சதா பிடிக்கலையான்னு தெரியும் முன்னே கலைஞ்சு போச்சு”,

“இப்போ எதுக்கு அந்தப் பேச்சு”, என்றான் ஆகாஷ்.

“இல்லை அதைப் பத்தி பேசலை…. இது வேற….. அதுக்கு செவென் மந்த்ஸ் அப்புறம் தான் உங்களைப் பார்த்தேன். உங்களை பார்த்ததுக்கு அப்புறமும் பெருசா ஈர்ப்பெல்லாம் இல்லை…… அப்போவும் உங்களை அனலைஸ் பண்ணத் தான் தோனுச்சு, உங்களுக்கு ஏன் என்னை பிடிச்சிருக்குன்னு…………. அப்புறம் என்னோட இந்த விதவை கோலம்தான் பாதிச்சதோன்னு நினைச்சேன்…..”,

“ஆனா என்னை மேல யோசிக்க விடமா ஒவ்வொரு செகண்டும்….. ஏதாவது நான் பிரச்சினையில இருக்கும் போது நீங்க வந்தீங்க….. நான் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லியும் விடாம என்னை தொடர்ந்தீங்க…… என்னை கல்யாணமும் பண்ணிக்கிடீங்க……..”,

“ஒரு வேளை நீங்க என்னை விட்டிருந்தா என் வாழ்க்கையில எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை மிஸ் பண்ணியிருப்பேன்…..”, என்றவள் இறுக்கமாக    அணைத்துக்கொண்டாள்.

அவள் கண்களின் நீர் அவன் சட்டையை நனைக்க…. “அழுமூஞ்சி அழகி, என்ன இது?”, என்று அவளை விலக்க முற்பட…..

“தேங்க்ஸ்! தேங்க்யூ வெரி மச்! நான் வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னதையும் மீறி என்னை விடாம துரத்தி என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு…..”, என்றாள்.

“நீ என் வாழ்க்கையில் கிடைச்ச வரம்!”, என்று அவன் சொல்ல….

அதே சமயம்………

“நீங்க என் வாழ்க்கையில் கிடைச்ச வரம்”, என்று அவளும் சொன்னாள்.

இருவரும் ஒரே சமயம் சொல்லவும்………

“சேம் பின்ச்!”, என்று சிறுபிள்ளை போல சொல்லியவள்……. “எனக்கு சாக்லேட்”, என்று கேட்டாள்.

“கொடுத்துட்டாப் போச்சு!”, என்று சொன்னவன்…… அவன் பாக்கெட்டில் நந்தனுக்கு கொடுப்பதற்காக ஒரு சாக்லேட் இருந்தது. அதை எடுத்தவன் பிரித்தான்…… கனி ஆசையாக வாயைத் திறக்க அதை தன் வாய்க்குள் போட்டான்.

“அங், என்ன இது அழுகுணி ஆட்டம்”, என்று கனி சிணுங்க……

அவளைக் காதல் பார்வை பார்த்தவன்…….. “சாக்லேட் தானே வேணும் எடுத்துக்கோ!”, என்றான்.

“ம்! எங்க நீங்க தான் வாயில போட்டுகிட்டீங்களே…..”,

“அங்கயிருந்து எடுத்துக்கோ!”, என்று அவளின் இடையை வளைத்துப் பிடிக்க…..

“அங்கயிருந்து எப்படி எடுக்க?”, என்று அவள் விழிக்க…..

“சரி! நீ எடுக்காத……… நான் கொடுக்கறேன்”, என்றான். 

அவன் சொல்வதை அப்போதுதான் புரிந்தவள்……. “அங், இது செல்லாது! செல்லாது! நிஜமாவே அழுகுணி ஆட்டம்!”, என்றாள் சிணுங்கலாக .

“என்ன செல்லாது? செல்லாது? எனக்கு இது தான் சூப்பர் ஆட்டம்!”, என்று சொன்னவன், சொன்னது சொன்னபடி அவளுக்கு சாக்லேட்டை மாற்றினான்.

அந்த சாக்லேட் சுவையைக் கொடுத்ததா……. இல்லை அது பரிமாறப்பட்ட விதம் சுவையைக் கொடுத்ததா இருவருமே அறியர்.

எதுவாகினும் அதன் சுவையைப் போலவே வாழ்க்கையும் இருவருக்கும் இனித்தது.

“எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்……”, என்றாள் அவன் மார்பில் சாய்ந்துக்கொண்டே…..       ஆகாஷும் உடனே அவள் சொல் பணிந்தான்……

: விழியிலே…….. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்..:                  உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்..                              ஓஓஓஓ………….. அர்த்த ஜாமங்களில் நடக்கும்ம்ம் இன்ப யாகங்களில்                                                                                     கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்…….. !!!!!!!!!!!!!!!!!!!!                                                          

                                                     முற்றும்.

Advertisement