Advertisement

அத்தியாயம் பதினான்கு :

திருமணம் முடிந்து எல்லோரும் ஸ்மிரிதியின் புகுந்த வீட்டிற்கு செல்ல, நிகிலுக்கு ஒன்று நன்றாக புரிந்தது, அவர்களின் செல்வ நிலை மிக அதிகம் என,

அதனால் தான் அப்பா தேர்ந்தெடுத்தார் போல என்று நினைத்தான். ஆனால் ஒரு கார் கூட இல்லாமல் டூ வீலரில் வேலைக்கு செல்கின்றாள், அந்த பிளாட்டில் தனியாக இருக்கின்றாள். அவளின் அப்பாவோ அம்மாவோ அபிமன்யுவோ விடவில்லை. ஆனாலும் இவள் ஏன் இப்படி இருக்கின்றாள் என நினைத்தான்.

மண்டபத்தில் இருந்து சென்ற பின் எந்த திருமண நிகழ்வுக்கும் அக்ஷரா வரவில்லை. ஷ்ரத்தா நிகிலோடும், துர்காவோடும், மாலை வரை சுற்றிக் கொண்டு இருந்தவள், “நான் மம்மா கிட்ட போறேன். என்னை கொண்டு போய் விடுங்க!” என்று சிணுங்கிக் கொண்டே இருந்தாள்.

“இரு ரூ பேபி, கொஞ்சம் நேரத்துல போகலாம்!” என்று அபிமன்யு சமாதானம் சொல்லிக் கொண்டே இருந்தான்.

இரவு உணவு வீட்டில் பரிமாறப்பட இருக்க, பெண் வீட்டினரை சாப்பிட உபசரிக்கவும், நிகில் எழுந்த போது ஷ்ரத்தாவையும் அழைக்க, “வேண்டாம்” என்றாள்.

“ஏன் பசிக்கலையா?” என, “பசிக்குது! மம்மா கூட சாப்பிடறேன். என்னை கொண்டு போய் விடுங்க” என பிடிவாதம் பிடித்தாள். நிகிலும் பொறுமையாக சொல்ல, அபிமன்யுவும் சொல்ல, கேட்கவேயில்லை!

“அப்படியே அம்மா மாதிரியே பிடிவாதம், என்ன பழக்கம் இது? சொன்னாக் கேட்கணும்! என்ன பொண்ணை வளர்க்கிறாளோ? இங்கயும் விடறதே இல்லை” என பாட்டி சொல்ல, ஷ்ரத்தா அழ ஆரம்பிக்க, ஆங்காங்கே இருந்த எல்லோரும் ஷ்ரத்தா அழுவதைப் பார்க்க..

அக்ஷராவைப் பேசியதும் நிகிலின் முகம் தானாக இறுகியது. 

“என்ன பாட்டி நீங்க? அவ அம்மாவை விட்டு இவ்வளவு நேரம் நம்மோட இப்போ தான் இருக்கா. அவளை அதட்டுறீங்க?” என அபிமன்யு பேச,

நிகில் ஷ்ரத்தாவை தூக்க முற்பட, அவனிடம் வரவில்லை, துர்காவிடமும் செல்லவில்லை, அபிமன்யு அருகில் செல்லவும் “வீட்ல விடுங்க” என்று தான் அழுதாள், தூக்க விடவில்லை.

“சரி, நம்ம போகலாம் வா!” என நிகில் அழைக்க,

“நிஜம்மா!” என்றவளிடம், “நிஜம்மா” என்றான்.

நிகில் கிளம்பவும், “சாப்பிட்டு போங்க” என்று வீட்டினர் சொல்ல, “இல்லை, நீங்க பாருங்க” என்று அவன் கிளம்ப, “இவ்வளவு சொல்றாங்க, இருடா!” என்று வரதராஜன் சொல்ல,

நிகில் அவரை பதிலுக்கு பார்த்த பார்வையின் தீவிரத்தில், “நீ போ! போ!” என்று அவரே அனுப்பி வைத்தார். காவ்யாவிடம் “ரொம்ப கோபமா இருக்கான்!” என்றும் சொல்ல, இருவருக்கும் கவலையாகிப் போனது.

அபிமன்யு அவர்களை விட கிளம்ப, “ஐ வில் மேனேஜ் அபிமன்யு, நீ இங்கேயே இரு!” என்றவன், “ஒரு நல்ல ட்ரீட்மென்ட் அக்ஷராக்கு நீங்க ஏன் குடுக்கறது இல்லை, ஏதாவது பேசிடறீங்க, உங்க பேச்சு எல்லாம் கேட்டா தான் நல்லா நடத்துவீங்களா? அவங்க அவங்க வாழ்க்கையை அவங்கவங்களுக்கு வாழ உரிமையிருக்கு. அவ இந்த வீட்ல பிறந்து இருக்கா, அவளுக்கே இப்படி?”

“ஸ்மிரிதி வாஸ் பார்ன் அண்ட் பிராட் அப் இன் யு எஸ், அவ எப்படி உங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்க்கு ஸ்டிக் பண்ணுவா, ஐ அம் ரியல்லி வெரி மச் வொர்ரீட், தட் டூ ஸ்மிரிதி இஸ் வெரி மச் சென்சிடிவ். திஸ் இஸ் நாட் தி வே டு ட்ரீட் எனி படி. ஐ கான்ட் டாலரேட் ஆல் தீஸ் திங்க்ஸ். சோ ஐ அம் லீவிங்” என்றவன் ஷ்ரத்தாவை தூக்கிச் சென்று விட்டான்.

சில நொடி அமைதி அந்த இடத்தில்,

தாத்தா தன் மனைவியை பார்த்தவாறே, “இவ எதோ உரிமையில பேசப் போய் இப்படியாகிடுச்சு” என்று வரதராஜனிடம் வருத்தம் தெரிவித்து, “உங்க பொண்ணுக்கு எந்த குறையும் இங்க இருக்காது!” என்று விளக்கம் கொடுத்தார் வீட்டின் பெரியவராக.

“அச்சச்சோ! நாங்க அப்படி எல்லாம் நினைக்கவேயில்லை, எங்களுக்கு தெரியும், எங்க பொண்ணுக்கு எந்த குறையும் இங்க இருக்காதுன்னு, நம்ம ஊர் பழக்க வழக்கம் எல்லாம் அவனுக்கு பழக்கமில்லை, பக்கத்துக்கு வீட்டுக்குப் போறதுன்னா கூட ஃபோன் பண்ணி வரட்டுமான்னு கேட்டு போகற ஊர்ல இருக்குறவனுக்கு நம்மளோட உரிமையான பேச்சுக்கள் எல்லாம் தெரியாது”

“அதுதான் அவனுக்கு வித்தியாசமா படுது.. ரொம்ப கோபக்காரன் கூட, பழகினா சரியாகிடுவான். ஆனா அவன் சொன்னதுல ஒரு வார்த்தை ரொம்ப நிஜம். அவங்க அவங்க வாழ்க்கையை வாழ, அவங்க அவங்களுக்கு உரிமை இருக்கு, நாம நினைக்கற மாதிரி இருக்கணும்னு கட்டாயப் படுத்தக் கூடாது. இப்ப இருக்குற சின்ன பசங்க அப்படி ஒரு மனப்பான்மையில தான் இருக்காங்க. நம்ம அதையும் மதிக்கணும்!”

“தயவு செஞ்சு நான் சொன்னதை தப்பா எடுத்துக்காதீங்க. நான் என் பொண்ணுக்காக இந்த வார்த்தைகளை சொல்லவே இல்லை. அவ இந்த வீட்டோட கட்டு திட்டங்கள் என்னவோ அதை மீறவே மாட்டா. நான் சொல்றது உங்க பொண்ணுக்காக”

“இங்க வந்த நாளா பார்த்துட்டு இருக்கேன், ஒரு தப்பும் எனக்கு அக்ஷரா கிட்டத் தெரியலை. ஏதாவது சின்ன சின்ன வார்த்தைகள் பேசிடறீங்க, அது அங்க யு எஸ் ல வளர்ந்தவங்களுக்கு தப்பா தெரியுது. அதுதான் பேசிட்டான். நீங்க பெரியவங்க புரிஞ்சிக்குவீங்கன்னு நினைக்கிறேன்” என்று நீளமாக பேசினார்.

“எப்போதுமே அதிகம் பேசாத அப்பா, எதற்கு இவ்வளவு பேசினார்!” என்று ஸ்மிரிதி விழிக்க, ஷங்கரும் துர்காவும் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றார்கள். அவர்களுக்கு ஒரே குற்ற உணர்ச்சியாகப் போய் விட்டது. “முதலில் இருந்தே வீட்டினர் அக்ஷராவைப் பேசும் போது எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டுமோ” என,

“அது ஒன்னுமில்லை வரதராஜன், இவளுக்கு சந்தோஷ்க்கு அக்ஷராவை கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு. அது நடக்கலைன்ற ஆதங்கத்துல பேசுவா, கொஞ்ச நாள் சரியாகிடும்” என தாத்தா கூசாமல் சொல்ல,

“எட்டு வருஷமாகிடுச்சு, கொஞ்ச நாளா” என்று அபிமன்யு மனதிற்குள் பொங்கினாலும், வீட்டின் மகனாக அமைதி காத்தான்.

“வாங்க, வாங்க சாப்பிடுவோம்” என்று வரதராஜனே சூழ்நிலையை சகஜமாக்க, பின்பு உணவு பரிமாறப்பட, “பேசாம உங்க பையனுக்கு இங்க இருக்குற பழக்க வழக்கம் கத்துக் கொடுக்க, இங்க இருக்குற ஒரு பொண்ணையே கட்டி வைங்க” என தாத்தா சொல்ல,

“உங்களுக்கு விருப்பமிருந்தா எங்க அக்ஷராவை கூட கல்யாணம் பண்ணலாமே” என்றான் சந்தோஷ்.

“ஆகா! ஊருக்குள்ள இருக்குற அத்தனை பேருக்கும் காட்டியிருக்கான் போல என் பையன்” என நொந்தவர்,

“எங்க விருப்பம் எல்லாம் என் பையன் கிட்ட நடக்காது. அவன் விருப்பம் தான். உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன? இருபத்தி நாலு வயசுலயே தனியா போயிட்டான். அப்போ இருந்து தனியா தான் இருக்கான் . எல்லாம் அவன் விருப்பம் தான். ஆனா அவனுக்கு அப்படி ஒரு விருப்பம் இருந்தா, எங்களுக்கு சந்தோசம் தான்!” என்றார் உண்மையாக. 

“ஏற்கனவே கல்யாணம் ஆனவங்களுக்கு திரும்ப எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது!” என்று பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்தான் அபிமன்யு.

“என்ன?” என்று எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்க்க, “அவங்க ரெண்டு பேருமே சொல்ல மாட்டேங்கறாங்க, ஆனா அவர் தான் அக்கா வீட்டுக்காரர்ன்னு நினைக்கிறேன்!” என,

“ஆமாம், நாங்களும் அப்படி தான் நினைக்கிறோம். நிகில் கிட்ட கேட்டோம், அது அக்ஷராவோட பெர்சனல். அவ தான் சொல்லணும்ன்னு சொல்லிட்டார்!” என நிர்மலா சொல்ல,  

ஷங்கரும் துர்காவும் “இது நிஜமா?” என்ற அதிர்ச்சியில் இருந்தனர். அக்ஷராவின் வாழ்வு மலர்ந்து விடுமா என்று ஷங்கர் நினைக்க, என்ன என்று தெரியாமல் துர்காவிற்கு அழுகை வந்தது. 

பாட்டி அதை பார்த்தவர், “எதுக்கு அழற, மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சிடுச்சு தானே. நம்ம பொண்ணோட வாழாம இந்தியா விட்டு போயிடுவாரா அவர், பார்த்துக்கலாம்!” என்று மிரட்டலோடு சமாதானம் செய்ய,

“அவர் பிரச்சனையில்லை, இவ வாழணுமே!” என்று துர்கா அழ..

“அச்சோ, அச்சோ! எதுக்கு அழற? அவளை வாழ வைக்கலாம்!” என்று மருமகளை வெகுவாக சமாதனம் செய்தார். 

“பரவாயில்லை! இந்த அம்மா கத்தினாலும் மருமகளை நல்லா பார்த்துக்கறாங்க. நம்ம பொண்ணுக்கு ஒன்னும் குறை இருக்காது!” என்று காவ்யா வரதராஜனின் காதைக் கடிக்க..

“பையன் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணியிருக்கான்! திரும்ப விட்டுட்டும் போயிருக்கான்! பெரிய பேத்தி இருக்கா, அதை விட்டு நீ இப்பவும் உன் பொண்ணையே பாரு!” என்று வரதராஜன் கடிய,

அசடு வழிந்தார் காவ்யா. “அதனால் தான் நம்ம கிட்ட கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கான் போல!” என்றும் சொல்ல.. அங்கே உணவோடு பேச்சுக்களும் நீண்டது.  

அங்கே ஒரு ஜீவன் ஊனுமின்றி, உறக்கமின்றி இருந்தாள். பெல் அழுத்தி நிகில் நிற்க, சில நிமிடம் ஆகவும் ஷ்ரத்தா “மம்மா” என்று கதவை தட்ட ஆரம்பித்தாள்.

“அம்மாக்கு மெதுவா தானே நடக்க முடியும். வருவா!” என அக்ஷரா மெதுவாக வந்து கதவை திறக்கவும் சரியாக இருந்தது. என்ன உடையில் வந்தாளோ அதே உடையில் இருந்தாள். ஷ்ரத்தாவோடு நிகிலை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் விழிகளேயே தெரிந்தது.

அம்மாவை பார்த்த ஷ்ரத்தா, “மம்மா, காய்ச்சலா!” என குனிய செய்து தொட்டுப் பார்க்க, “இல்லை பேபி!” என ஷ்ரத்தா சொல்ல, “இல்லை, காய்ச்சல்மா!” என்று திரும்பவும் ஷ்ரத்தா சொல்ல, நிகில் கன்னத்தை தொட்டுப் பார்த்தான்.

சற்று சூடாகத் தான் இருந்தது. “காய்ச்சல்க்கு அங்கே தொட்டுப் பார்க்கக் கூடாது இங்கே பார்க்கணும்!” என்று ஷ்ரத்தா கழுத்தைக் காட்ட,

“ஓகே” என்று அவன் அக்ஷராவைத் தொடப் போக, “பேபி” என்று அக்ஷரா அதட்ட, “என்ன?” என்று புரியாமல் ஷ்ரத்தா விழிக்க, “இன் கூப்பிட மாட்டியா?” என்றான் நிகில். “டைம் ஆகிடுச்சு நீ உன் ஃபிளாட் போ!” என்று ஷ்ரத்தாவை மட்டும் உள்ளே அழைக்க,

“தள்ளு நீ!” என்று அவளை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். “நிகில்” என்று அக்ஷரா அதட்ட, “கொஞ்ச நேரத்துல போயிடலாம்ன்னு நினைச்சு இருக்கேன். நீ ஏதாவது சொன்னா போகவே மாட்டேன், நைட் இங்கே தான் இருப்பேன். அப்புறம் நடக்கற எதுக்கும் நான் ரெஸ்பான்சிபில் இல்லை” என,

“என்ன ஓவரா பேசற?” என்று அதட்டியவளிடம், “பேச மட்டும் செய்யறேன்னு சந்தோஷப் படு!” என்று பதில் கொடுக்க,  

“தோடா, என்ன செய்வ?”

“நிக்கவே முடியலை, ஆனா திமிர் மட்டும் குறையலை, என்ன செய்வேன்னு அப்புறம் காட்டுறேன். நீ முதல்ல உட்கார்!” என்றான்.

திரும்ப விந்தி விந்தி நடந்தாள், வலியில் முகமும் சுருங்க, அதைக் காண முடியாமல் அவளைத் தூக்கின்னான். ஷ்ரத்தா அவர்களையே பார்க்க, “ஹேய்! நீ என்ன பண்ணற, பேபி முன்னால” என அக்ஷரா பதற,

“ஏன்? இன்னும் நான் அவ அப்பான்னு சொல்ல மாட்டியா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

அக்ஷரா பேச முடியாமல் தடுமாற, “நாம சேர்ந்து வாழறோம்? இல்லை? தட் இஸ் எ டிஃப்பரன்ட் என்ட்டிடி, பட் அப்பா யாருன்னு அவளுக்கு தெரியாம இருக்கக் கூடாது. தட் வில் மேக் ஹர் கோ டவுன் இன் திஸ் சொசைட்டி. அந்த தப்பை செய்யதே. உலகத்தோட எந்த பார்ட்ளையும் அது நெசசரி.

“சொல்லலாம் அம்மாவோட ஐடென்டிடி மட்டும் போதும்னு, ஆனா அப்படி நான் காட்ட முடியாத அளவுக்கா இருக்கேன்?” என,

அக்ஷரா அவனை விழி விரித்துப் பார்த்தாள், கண்களில் நீர் நிறைந்தது. அவன் சோஃபாவில் இறக்கி விட, அம்மாவின் கண்களில் கண்ணீரை பார்த்தவள் “மம்மா, வலிக்குதா?” என ஷ்ரத்தா முகத்தைத் தடவ,

“ஆமாம்ன்னு சொல்லிடு, இல்லை நான் தான் ரீசன்னு இவ கோபிப்பா” என்றான்.

“ரூ பேபி!” எனக் கை நீட்ட, அம்மாவின் கைகளுக்குள் சுகமாக அடங்கிய ஷ்ரத்தா, உடனே முகத்தை எடுத்து “குத்துதும்மா” என, இன்னும் நகைகளை கழட்டவேயில்லை அக்ஷரா.

“ஓஹ் எஸ்” என்றவள், அதைக் கழட்ட, ஒவ்வொன்றும் கழட்டுவதற்கு சில நொடிகள் எடுக்க, அதிலும் ஒன்று முடியவேயில்லை. “ஹெல்ப் பண்ண மாட்டியா நீ” என்று நிகிலை முறைக்க,

“அதை மட்டுமே என்னால கழட்ட முடியாது, உன்னோட கன்னம் தொட்டுடே என்னால கை எடுக்க முடியலை. ஓகே வா, ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று கைகளை அருகில் கொண்டு வர, “வேண்டாம்! வேண்டாம்!” என்றவள்.

ஷ்ரத்தா அறியாமல் “இப்படி பேபி முன்னே பேசாதே” என்று சைகையில் மிரட்டினாள். “ஓகே, ஓகே” என்று வாய் மேல் கைவைத்து பேச மாட்டேன் என்று நிகில் வாக்குறுதி கொடுக்க..

“மா, பசிக்குது!” என்றாள் ஷ்ரத்தா, “பேபி நீ இன்னும் சாப்பிடலையா?” எனக் கேட்டவளிடம்,  “இல்லை” என,

“சாப்பிட வெச்சு கூட்டிட்டி வரலையா?” என்றாள் நிகிலைப் பார்த்து,  “எங்கே இவ ஒரே பிடிவாதம் இங்கே வரணும்னு”

“ஆனா இங்கே ஒன்னுமே இல்லை”  “அப்போ நீ என்ன சாப்பிட்ட” “ஒன்னுமே சாப்பிடலை, காலையில இருந்தே!”

“என்ன?” என்று கோபப்பட்டவன், “என்ன இருக்கிறது?” என்று சமையலரை பார்க்கப் போக, பெல் அடித்தது. “யார்?” என்று கதவை திறந்து பார்க்க, யாரோ ஒருவர்.. “இதை அக்ஷராம்மா வீட்ல இருந்து குடுத்து விட்டாங்க” என்று பெரிய கேரியர் கொடுக்க, வாங்கினான்.

“உங்க பேர் சார்” என்று அவன் கேட்க, “நிகில்” என்றவனிடம்,  “டாக்டர் சார், அவங்க யாராவது வரணுமா? இல்லை நீங்களே பார்த்துக்குவீங்களா அக்ஷரா மேடமைன்னு கேட்டுட்டு வரச் சொன்னாங்க?”

“அங்க எல்லோரும் டாக்டர்! நீங்க எந்த டாக்டரை சொல்றீங்க!” எனக் கேட்டவனிடம், “பெரிய டாக்டர்!” என்றான் அவன்.

“அது யாரு பெரிய டாக்டர்?” எனத் திரும்ப கேட்க, “நிகில், யாரு?” என்று அக்ஷரா சத்தம் கொடுக்க,

“யாரோ பெரிய டாக்டர், நானே உன்னை பார்த்துக்குவேணா, இல்லை யாராவது வரணுமான்னு கேட்டாங்களாம்?” என,  

“என்ன?” என்று அதிர்ந்தாள் அக்ஷரா, “யாரு?” என்றவனிடம், “அது என் தாத்தா” என்றவள், “வாட்ஸ் கோயிங் ஆன் நிகில். அவர் எப்படி அப்படி உன்கிட்ட கேட்பார்?” என,

அக்ஷராவின் தொலைபேசி அப்போது அடித்தது, வீட்டின் லேண்ட் லைனில் இருந்து வரும் அழைப்பு, அதிலிருந்து பாட்டி தான் பேசுவார்.

“யாரு, எடு” என, “பாட்டி!” என்றாள் அக்ஷரா. “இப்போ என்னவாம், கொடு!” என்று நிகில் வாங்கி அதை அட்டன்ட் செய்ய,

“ஹல்லோ, நான் பாட்டி பேசறேன்!” என்ற குரல் கணீரென்று ஒலிக்க, “என்ன, சொல்லுங்க” என்றான் நிகில்.

“நீங்களே எடுத்துட்டீங்களா, சந்தோஷம்” என்றவர், “உங்க வீட்டுக்காரம்மாவை, நீங்க பார்த்துக்கறிங்களா, இல்லை நாங்க வரணுமா?” என,

“என்ன பேசறீங்க?” என்றான் புரியாமல். “உங்க வொய்ஃபை, நீங்க பார்த்துகறிங்களா, இல்லை நாங்க வரணுமா?” என்று அவர் திரும்ப கேட்க

“வொய்ஃபா” என்றான் அக்ஷராவை பார்த்தவாறு.. அக்ஷ்ராவை மனதில் எதோ பாரமாக அழுத்த, “என்ன சொல்லப் போகிறான்?” என்று அவனையே பார்த்தாள்.  

“என்ன சொல்லட்டும்?” என்றான் அக்ஷராவிடம், “நான் எல்லோர் கிட்டயும் கல்யாணகிடுச்சு தான் சொல்லியிருக்கேன்” என மெதுவாக சொல்ல,

“பார்த்துக்கறேன் பாட்டி, யாரும் வர வேண்டாம்!” என்றான். “சந்தோஷம்” என்று அவர் வைக்க, பின்பு நிகிலிடம் இருந்த இலகுத்தன்மை மறைந்து யோசனைக்கு சென்றான். ஆனாலும் கைகள் தானாக உணவினை எடுத்து ஷ்ரத்தாவிற்கும் அக்ஷராவிற்கும் கொடுத்து அவனும் உண்டு, எல்லாம் ஒதுங்க செய்து, ஷ்ரத்தாவை கொண்டு படுக்கையில் விட்டு, அக்ஷராவையும் சென்று படுக்கையில் விட்டு,

“தூங்குங்க!” என்று லைட் ஆஃப் செய்து வெளியில் வரப் போக. அக்ஷராவும் அதுவரையிலும் எதுவும் பேசவில்லை. ஷ்ரத்தா உறங்கி விட்டால் என தெரிந்த பிறகு வெளியில் செல்ல முயன்றவனிடம், “நிகில்” என,

“என்ன அக்ஷி?” என திரும்பியவனிடம், “அது..” என்று வெகுவாகத் தயங்கினாள்.

“சொல்லு” என்று நிகில் ஊக்குவிக்க, “இங்க வந்த பிறகு தான் நான் கன்சீவ்வா இருக்குறது தெரிஞ்சது. என்னால பேபியை கலைக்க எல்லாம் நினைக்கக் கூட முடியலை. அது ரொம்ப தப்பு மாதிரி தோணினது” 

“ஆனா என்னால நம்ம  ரிலேஷன்ஷிப்பை யார் கிட்டயும் சொல்ல முடியலை. அதனால கல்யாணமாகிடுச்சு, ஆனா ஹஸ்பன்ட் பிடிக்கலை, வந்துட்டேன்னு பொய் சொன்னேன், சும்மா ஒரு செயின்ல நானே தாலியைக் கோர்த்து மாட்டிக்கிட்டேன். ஆனா கல்யாணமாகிடுச்சுன்னு நான் பொய் சொன்னதால, இப்போ அது நீதான்னு ஒரு மாதிரி எல்லோருக்கும் கெஸ் பண்ணிட்டாங்க. அது அப்படியே மெயின்டைன் பண்ணறியா?”

“அதுக்காக நம்ம கல்யாணம் பண்ணிக்கணும்னு எல்லாம் இல்லை. யு லிவ் யுவர் லைஃப். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். உனக்கு ஃபியுச்சர்ல யாரையாவது கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணினா பண்ணிக்கோ” என சொல்ல,

அவள் சொல்லிய விதமே இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்ல மிகவும் யோசித்து இருப்பாள் எனப் புரிந்தது.

அக்ஷராவும் அவனும் சேர்ந்து வாழ்ந்திருந்தாலும், அதில் அவளுடைய ஒப்புதலும் இருந்தாலும், கிட்ட தட்ட ஒரு வருடம் விடாமல் அவளின் பின் சுற்றியது, அவளை தன் வீட்டிற்கு அழைத்தது, எல்லாம் அவன் தான். சொல்லப் போனால் அதிக பங்கு அவனது தான்.

ஆனாலும் ஷ்ரத்தாவின் பொறுப்பை முழுமையாக அவள் தான் எடுத்திருக்கின்றாள். “நீ ஏன் என்னை எதுக்குமே ப்ளேம் பண்ணலை?” என,

“எப்படி ப்ளேம் பண்ண முடியும்! நீ பண்ணினது எதுவுமே உனக்கு தப்புன்னு சொல்லிக் கொடுக்கப்படலை.. ஆனா நான் பண்ணினது எல்லாமே எனக்கு தப்புன்னு தான் சொல்லி சொல்லி வளர்ந்திருக்காங்க. ஆனாலும் நான் மீறியிருக்கேன். சோ! என்னை மட்டும் தான் நான் ப்ளேம் பண்ண முடியும்” என்றவளிடம், என்ன பேசுவது என்று அவனுக்கு தெரியவேயில்லை.

மிகவும் நெகிழ்வாக உணர்ந்தவன், “இட்ஸ் ஓகே பேபி, நீ சொல்ற மாதிரியே மெயின்டைன் பண்ணிக்கறேன். இஸ் இட் ஓகே பார் யு நொவ்!”

“எஸ்! தேங்க்ஸ்! தேங்க் யு வெரி மச்! பட்! ஒன் திங், ஐ அம் வெரி ஸுயூர். ஃபுயுச்சர்ல நான் மேரேஜ் பண்ணனும்னு நினைச்சா என்னோட ஆப்ஷன் நீயா மட்டும் தான் இருப்ப!” என,

அக்ஷரா பதில் எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டாள்.     

      

 

Advertisement