Advertisement

அத்தியாயம் –3

 

 

கமிஷனர் அலுவலகத்தின் உள்ளே ஒரு பதட்டத்துடன் நுழைந்தாள் சஞ்சனா. ஏற்கனவே ஒரு போலீஸ் என்னை வறுத்தெடுத்தான். இங்க ஒரு போலீஸ் பட்டாளமே இருக்கு என்ன நடக்கப் போகுதோ என்ற பதட்டம் தான் அவளுக்கு.

 

 

இருந்தாலும் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டு உள்ளே சென்று புதிதாக வந்திருக்கும் அசிஸ்டெண்ட் கமிஷனரை பார்க்க வேண்டும் என்று சொல்ல அங்கிருந்த காவலர் அவளிடம் விபரம் கேட்டறிந்தார்.

 

 

“அவர் இன்னும் வரலைம்மா கொஞ்ச நேரத்துல வந்திடுவார். கொஞ்சம் காத்திட்டு இருங்க என்று சொல்லி அருகிலிருந்த இருக்கையை சுட்டிக் காட்டி அமருமாறு கூறிவிட்டு அவர் வேலையை செய்ய ஆரம்பித்தார்.

 

 

‘எனக்கு காத்திட்டு இருக்கறதே பொழப்பா போச்சு போல, அன்னைக்கு அந்த போலீஸ்க்கு காத்திட்டு இருந்தேன். இன்னைக்கு இந்த ஐபிஎஸ் ஆபீசர்க்கு ஹ்ம்ம் என்று தனக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

 

 

அவள் யோசனையில் இருக்கும் போதே வாசலில் டவேரா வந்து நிற்க அதிலிருந்து இரண்டு மூன்று அதிகாரிகள் இறங்கினர். எல்லோருமே சிறிய வயதாக தெரிந்தனர்.

 

 

‘ப்பா… எப்படி இருங்காங்க!!! இவர்கள் அல்லவோ போலீஸ்!!! பார்த்ததும் எழுந்து சல்யூட் வைக்கணும் போல இருக்கு.  அவளுக்கு உடனே நிரஞ்சன் ஞாபகம் வந்தது. அந்த போலீஸ்கிட்ட நீங்க கரப்பான்பூச்சி மாதிரி இருக்கீங்கன்னு சொன்னதுக்கு சும்மா கவுத்து போட்ட கரப்பான்பூச்சி கடகடன்னு துள்ளுற மாதிரி துள்ளினான்.

 

 

‘ஆனாலும் சஞ்சு உனக்கு ரொம்ப அறிவுடி… அந்த போலீஸ்க்கு நீ சரியான பேரு தான் வைச்சு இருக்க என்று மெச்சிக் கொண்டவளுக்கு அவனை நினைத்ததும் அவளுக்கு அன்றைய நாள் நினைவுக்கு வந்து புன்னகை முகமானாள்.

 

 

உள்ளே வந்த அந்த அதிகாரிகளில் கருப்பு கண்ணாடி அணிந்த ஒருவன் அவளையே பார்த்து சென்றதை அவள் அறிந்திருக்கவில்லை. கையை திருப்பி பார்ப்பதும் வாசலை பார்ப்பதும் என்று அவள் பொழுதை நெட்டி தள்ள முயல யாரும் வந்து அவளை அழைத்திருக்கவில்லை.

 

 

‘ச்சே… இந்த ஆளுக்கு ரொம்ப திமிரு போலவே… நாம வந்து எவ்வளவு நேரம் ஆகுது. இன்னும் வராம இருக்கானே… இவன் எப்படி பொறுப்பான அதிகாரியா இருப்பான் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவளுக்கு லேசாக பசிப்பது போல் இருந்தது.

 

 

மணியை பார்க்க அது உணவிற்கான நேரம் என்பதை அறிந்தாள். ‘இந்நேரம் அந்த ஐபிஎஸ் ஆபிசரை பார்த்திருந்தா நாம ஆபீஸ்க்கு போய் சாப்பிட்டிருக்கலாம். சாப்பாடை கையோடு கொண்டு வராம போனது நம்மோட தப்பு தான்

 

 

‘இப்போ என்ன செய்ய?? என்று யோசித்தவள் முதலில் அவள் விசாரித்த அந்த காவலரிடமே சென்று விசாரித்தாள். “சார் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் சாரை பார்க்க??

 

 

“அய்யோ சாரிம்மா நான் மறந்திட்டேன். சார் ஒரு மீட்டிங் போய்ட்டார், அது முடிய இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். அவர் வந்ததும் நீங்க போய் பாருங்க, சாப்பாடு நேரமாச்சே என்று மணியை பார்த்தவாறே கூறியவர் “நீங்க வேணா சாப்பிட்டு வந்திடுங்க. வந்ததும் சார்கிட்ட சொல்லிடறேன். நீங்க போய் பாருங்க

 

 

“ரொம்ப தேங்க்ஸ் சார் என்றவள் ‘அப்பா சாமி உனக்கு ரொம்ப தேங்க்ஸ் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அந்த காவலரிடம் அருகில் நல்ல ஹோட்டல் எங்கிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு அவள் ஸ்கூட்டியில் பறந்தாள்.

 

 

உள்ளே சென்று ஓரமாக இரண்டு பேர் எதிரெதிரே அமரும் இருக்கை ஒன்றில் சென்று அமர்ந்தவள் அவளை நோக்கி ஆர்டர் எடுக்க வந்தவரிடம் அவளுக்கு ஒரு வெஜ் ப்ரைடு ரைஸ் மற்றும் கோபி மஞ்சூரியன் சொல்லிவிட்டு காத்திருக்க தொடங்கினாள்.

 

 

அவர் நகர்ந்ததும் உள்ளே காலையில் கமிஷனர் அலுவலகத்தில் பார்த்த அந்த போலீஸ் அதிகாரிகள் மேலும் இரண்டு பேருடன் உள்ளே நுழைந்தனர்.

 

 

அவளுக்கு எதிர்புறம் அமைந்திருந்த எட்டு பெயர் அமரும் இருக்கையில் அமர்ந்து அவர்களும் உணவுக்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

 

 

திடிரென்று ஞாபகம் வந்தவளாக அவள் கைபேசியை எடுத்து அவள் அலுவலகத் தோழி ஜானுவிற்கு போன் செய்தாள். “ஹேய் ஜானு என்னடி பண்ணுற

 

 

“ஹ்ம்ம் நானா!!! என் கிரகம் ஹோட்டல்க்கு சாப்பிட வந்திருக்கேன்

 

 

“வேலையா… அது எங்க முடிஞ்சுது இன்னும் நான் பார்க்க வந்தவரை பார்க்கலை. ஏதோ மீட்டிங் போல… ஆமா இந்த ரமேஷ் ஏன் இன்னும் வரலை… போட்டோ யார் எடுக்கறதாம்… எங்க அந்த எடிட்டர் இதெல்லாம் பார்க்க மாட்டாராமாம் அவர்

 

 

“ஹேய் என்னடி கலாட்டா பண்ணுறியா… அதெல்லாம் நான் எடிட்டர் பேசினா அமைதியா இருக்க மாட்டேன்… எப்போமே அப்படியே இருக்க முடியுமா?? கேட்க வேண்டிய நேரத்துல கேட்டு தான் ஆகணும்…

 

 

“ரமேஷ் இல்லன்னா அந்த லூசு பையன் சுரேஷ் அனுப்ப வேண்டியது தானே??? சரி… சரி நானே கேட்டுக்கறேன்… ஹேய் நிஜமா தான்டி சொல்றேன் நானே கேட்டுக்கறேன்… போதுமா… நீ ஒரு வேலை பண்ணு என்னோட சாப்பாட்டை காலி பண்ணிடு

 

 

“என்னோட டேபிள்ல தான் வைச்சு இருக்கேன்… சரி… சரி எனக்கு சாப்பாடு வந்திடுச்சு… வேலை முடிஞ்சதும் உனக்கு கூப்பிடுறேன்டி… பை என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள் எடிட்டருக்கு போன் செய்தாள்.

 

 

“சார்… ரமேஷ் இன்னும் வரலையே சார்… போட்டோ எல்லாம் எப்படி சார் எடுக்கறது

“சார்… ரமேஷ்க்கு வேலை இருந்தா சுரேஷ் இல்லன்னா ஸ்ரீயை அனுப்பலாமே சார்

 

 

“ஓ!!! அப்படியா, சரி சார் நான் மானேஜ் பண்ணிக்கறேன் சார் என்று விட்டு போனை வைக்க எதிரில் இருந்த டேபிளில் இருப்பவர்கள் அவளை ஒரு மாதிரியாய் பார்க்க, ‘அய்யோ ரொம்ப சத்தமா பேசிட்டமோ… என்று நினைத்து அவர்களை பார்த்து சற்றே அசடு வழிந்துவிட்டு உணவருந்த ஆரம்பித்தாள்.

 

 

அவள் சாப்பிட்டு முடித்து பலூடா சொல்லிவிட்டு அமர்ந்திருக்க ஜானகி அவளை அழைத்தாள். “சொல்லுடி ஜானு… ஆமாம் அதுக்கு என்னடி பண்ண சொல்ற, எடிட்டர்கிட்ட போய் நான் என்ன பேச… உன்கிட்ட மட்டும் தான் பேச முடியும்… இதை கேட்க தான் போன் பண்ணியா

 

 

“எங்க அம்மா செஞ்ச வெஜ் பிரியாணி நல்லா மொக்கிட்டியா?? சரி நான் நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கறேன் உன்னை… பை… என்று சொல்லி போனை துண்டித்துவிட்டு பலூடாவை சாப்பிட்டு முடித்து பணம் செலுத்திவிட்டு வெளியில் சென்றாள்.

 

 

ஏதோ தோன்ற வெளியே சென்றவள் மீண்டும் கதவை திறந்து அந்த அதிகாரிகளை எட்டி பார்த்தாள். பின் கிழே இறங்கி சென்று விட்டாள். “டேய் என்னடா அந்த பொண்ணு வந்து எட்டி பார்த்திட்டு போகுது என்று ஒருவன் ஆரம்பித்தான்.

 

 

“யாருக்கு தெரியும் அந்த பொண்ணு நம்ம கூட்டத்திலே யாரையோ சைட் அடிக்குது போல…

 

 

“அந்த பொண்ணு அடிக்குதான்னு எனக்கு தெரியலை… இவன் தான் அந்த பொண்ணை சைட் அடிக்கிறான்… இல்லன்னா அந்த பொண்ணு வாங்கி சாப்பிட்ட ஐஸ் பார்த்திட்டு அதே வாங்குவானா…” என்று ஒருவன் சொல்ல மற்றவர்களும் அட ஆமாமில்லை என்றனர்.

 

 

ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க ஒருவன் இந்த பேச்சு பிடிக்காதவனாக “டேய் நாம எல்லாம் போலீஸ்டா அந்த நினைப்பிருக்கா உங்களுக்கு??? அதை விட்டு ஒண்ணுக்கும் ஆகாத ஒரு விஷயத்தை பத்தி பேசிட்டு இருக்கீங்க??

 

 

“இப்போ அது ரொம்ப முக்கியமா?? பேசாம சாப்பிட்டு கிளம்புவோம், நமக்கு சைட் அடிக்கிற வயசா இது?? என்று அவர்களை அடக்கினான்.

 

 

“டேய் என்னடா சொல்ற?? இருபத்தி எட்டு வயசு ஒரு வயசாடா??? அடப்பாவி நீ பேசுறதை பார்த்தா நான் தடி வைச்சுட்டு இருக்க கிழவனாட்டம் பேசுற??

 

 

“ஏன்டா?? நீ என்ன சாமியாராவா போகப் போறே?? கல்யாணம் தானே பண்ணப்போற… போடா… நீ வேற??

 

 

“நீங்க எப்படியோ போய் தொலைங்க, நான் கிளம்பறேன் என்று அவன் எழ முயற்சி செய்ய “எதுக்குடா கோவிக்கற இரு நாங்களும் வர்றோம் என்று மற்றவர்களும் எழ ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தவன் அவர்களை நிறுத்தினான்.

 

 

“டேய் இந்த ஐஸ் பார்க்க தான்டா நல்லா இருக்கு, உள்ள பூரா சேமியாவா இருக்குடா. எங்கம்மாவே நல்லா சேமியா பாயாசம் செய்வாங்க… நான் அதை விட்டு இதை போய் ஆர்டர் பண்ணிட்டேன். ப்ளீஸ் இதுக்கு யாராச்சும் ஆதரவு கொடுங்கடா

 

 

“மவனே புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிச்சாம் அது போல இருக்குடா நீ பண்ணுறது. உன்னை யாரு இப்படி செய்ய சொன்னது என்று அவனை எல்லோருமாக சேர்ந்து கலாய்த்து விட்டு பலூடாவை காலி செய்துவிட்டு நகர்ந்தனர்.

 

 

அவர்களுக்கு முன் கீழே சென்ற சஞ்சனா அருகில் இருந்த ஆவின் பூத்தில் அஞ்சனாவுக்காய் பால்கோவாவும், குலாப்ஜாமூனும் வாங்கிவிட்டு வீட்டிற்காய் நெய்யும் வாங்கிவிட்டு அவள் அன்னைக்கும் அஞ்சனாவிற்கும் போன் செய்து சொல்லிவிட்டு நகரப் போக அவளுக்கு பிடித்த மாங்கோ ஐஸ் கண்ணில் பட்டு உறுத்தியது அவளுக்கு.

 

 

‘எவ்வளோ செஞ்சிட்டோம் இதையும் செய்வோம் என்று அவளை அவளே கலாய்த்துக் கொண்டு ஐஸ்கிரீமை வாங்கி சுவைத்தபடியே நின்றிருந்தாள்.

 

 

சாப்பிட்டுவிட்டு கீழே இறங்கி வந்த போலீஸ் அதிகாரிகள் அவள் வாயில் ஐஸ் ஒழுக சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தங்களுக்குள் நகைத்துக் கொண்டனர்.வேகமாக ஒருவன் அவளருகில் வந்து “ஏங்க நீங்க ஒரு நாளைக்கு எத்தனை ஐஸ் சாப்பிடுவீங்க… என்று கேட்க அவள் அவனை பார்த்து முறைத்தாள்.

 

 

“சரி… சரி… முறைக்காதீங்க… இன்னொரு டவுட், நீங்க வாங்கி சாப்பிட்டீங்களே ஒரு ஐஸ் அது நல்லாவா இருந்துச்சு… அதை எப்படிங்க நீங்க சாப்பிட்டீங்க… ஒரே சேமியா பாயாசம் அது என்று முகத்தை சுளித்தான் அவன்.

 

 

அவள் அதற்கும் ஒரு முறைப்பையே பதிலாக கொடுக்க வேகமாக அவர்களுடன் இருந்த அந்த மற்றொருவன் வந்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தவனை கோபமாக முறைத்தான்.

 

 

“ஏன்டா உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?? நாம என்ன வேலையா வந்திருக்கோம், நீ என்ன வேலை பண்ணிட்டு இருக்க. பேசாம வாடா கிளம்புவோம். நமக்கு நெறைய வேலை இருக்கு, அதைவிட்டு வெட்டியா பேசிட்டு இருக்க என்று அவனை இழுத்துக் கொண்டு போனான்.

 

 

‘முதல்ல ஒரு லூசு வந்தான், லொடலொடன்னு ஏதோ பேசினான். ரெண்டாவது ஒரு லூசு வந்தான், ஏன் லொடலொடன்னு பேசுறன்னு அவனும் லொடலொடத்திட்டு தான் போறான். லூசு பக்கிக என்று மனதிற்குள் நன்றாக அவர்களை அர்ச்சனை செய்தாள்.

 

 

மணிக்கட்டை திரும்பி பார்க்க அது இரண்டை கடந்திருந்தது. ‘அய்யோ லேட் ஆகுதே என்று முணுமுணுத்துக் கொண்டே ஐஸ்கிரீமை உண்டு முடித்த கையை கழுவிக் கொண்டு அவள் ஸ்கூட்டியில் ஏறி அதை உசுப்பினாள்.

 

 

மீண்டும் அவள் கமிஷனர் அலுவலகம் வந்து அந்த காவலரை பார்க்க அவரோ “அய்யா இப்போ தான் வந்திருக்காங்க, நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்லிடறேன் அப்புறம் நீங்க போய் பாருங்க என்றவர் போனை எடுத்து பேசினார்.

 

 

“மேடம் நீங்க உள்ள போங்க… என்று அவளிடம் கூறி உள்ளே செல்ல வழி காட்டினார். சம்பிரதாயமாக கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைய எதிரில் இருந்த அதிகாரியை பார்த்து திகைத்தாள்.

 

 

அந்த ஹோட்டலில் அவள் பார்த்த அதிகாரிகளில் ஒருவனே அவன். சரியாக சொல்ல வேண்டுமென்றால் கடைசியாக உடன் வந்தவனை திட்டுவதாக சொல்லிவிட்டு அவளை மறைமுகமாக திட்டி சென்றவன்.

 

 

‘அய்யோ… என்னடா நடக்குது… எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது… நமக்கும் போலீஸ்க்கும் எப்பவும் செட்டே ஆகாது போலவே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே முன்னேறினாள். “உங்களுக்கு வேலையே கிடையாதா?? என்று சிடுசிடுப்பான பதிலில் அவளுக்கு கோபம் வந்தது.

 

 

அதை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் பார்க்க “என்ன முழிக்கறீங்க… உங்களுக்கு வேற வேலையே கிடையாதா??? இன்னைக்கு தான் நான் போஸ்டிங் ஆகி வந்திருக்கேன். அதுக்குள்ள மூக்கு வேர்த்திடுச்சா உங்களுக்கு??

 

 

‘இவன் என்னை என்ன தான் நினைச்சுட்டு இருக்கான் என்று நினைத்தவள் “என்ன சொல்றீங்க நீங்க?? இதுல என்ன தப்பிருக்கு என்னமோ உலகமகா குற்றம் செஞ்ச மாதிரி கேட்கறீங்க

 

 

“புதுசா ஒரு அதிகாரி வந்தா அதை பத்தி பத்திரிகைக்காரங்க போடத்தானே செய்வாங்க. இன்பாக்ட் நீங்களே அவங்களை கூப்பிட்டு அறிமுகம் கொடுத்திருக்கணும். நாங்களே தேடி வந்தாலும் இப்படி விரட்டுறீங்க என்று பதிலுக்கு எகிறினாள் அவள்.

 

 

“மாறி இருப்பீங்கன்னு நினைச்சேன், மாறவே இல்லை அப்படியே தான் இருக்கீங்க!! என்ற அவனது பதிலில் ஒன்றும் புரியாமல் விழித்தாள் அவள்.

 

 

“என்னை… என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா சார்…

 

 

ஏதோ தோன்ற மேஜையில் இருந்த அவன் பெயர் பலகையை வேகமாக அவள் கண்கள் ஆராய்ந்தது. ‘நிரஞ்சனா!! இவனா!! எப்படி!! ஆளே மாறி சூப்பர் ஹீரோவாகி விட்டானே என்று அவசரமாக மனம் நினைத்தது.

 

 

‘ஒரு வேளை நான் சொன்ன மாதிரி ஜிம்முக்கு எல்லாம் போய் உடம்பை தேத்திட்டான் போல. ஆளே மாறிட்டதுனால தான் நமக்கு அடையாளம் தெரியலை போல, ஹேர் ஸ்டைல் எல்லாம் கூட மாத்தியிருக்கான் என்று அவனை விழியகல ஆராய்ச்சி செய்தாள்.

 

 

“உங்க ஆராய்ச்சி எல்லாம் முடிஞ்சுதா… நீங்க சொன்னதுனால தான் நான் இரவு பகல் பார்க்காம ஜிம்மில இருந்து என் உடம்பு இப்படி ஏத்தி வைச்சு இருக்கேன்னு நினைச்சுக்கிட்டீங்க அப்படி தானே

 

 

“இப்போ உங்களுக்கு என்னை பார்த்தா சினிமா ஹீரோ மாதிரி தோணும் அப்படி தானே

 

 

‘ஆமா… ஆமா அதே தான் நான் மனசுல நினைச்சதை அப்படியே சொல்றாரே… என்று நினைத்தாலும் வெளியில் “ச்சே… ச்சே அப்படி எல்லாம் நான் நினைக்கலை சார்

 

 

“நான் போலீஸ் உங்க கண்ணும் பாவனையும் எண்ணமும் என்னன்னு எனக்கு அப்போவே புரிஞ்சு போச்சு. பொய் சொல்லாதீங்க

 

 

“ஹி…ஹி… என்று அசடு வழிந்தாள்.

 

 

“சொல்லுங்க நீங்க என்னை பார்க்க வந்த விஷயம் என்ன??

 

 

“எதுக்கு சார் நான் உங்ககிட்ட வரப் போறேன், ஐஸ்கிரீம் வாங்கி தரச் சொல்லி கேட்கவா. எல்லாம் உங்களோட சிறப்பு கட்டுரையை எழுதலாம்ன்னு தான் சார் வந்திருக்கேன். ஆரம்பிப்போமா

 

 

“நான் உங்களுக்கு பேட்டி கொடுக்கறேன்னு எப்போ சொன்னேன்?? என்னை கேட்காம என் அனுமதியில்லாம வந்துட்டு… என்ன நினைச்சுட்டு இருக்கீங்க யார் கொடுத்த தைரியம் இது?? எல்லாம் உங்க எடிட்டரை சொல்லணும்

 

 

“நீங்க கிளம்புங்க எனக்கு நெறைய வேலை இருக்கு இப்போ. உங்களுக்கு ஆறஅமர பேட்டி கொடுக்க எல்லாம் எனக்கு நேரமில்லை. நான் உங்க எடிட்டர்கிட்ட பேசிக்கறேன் என்றான்

 

 

“சார்…. என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது சார்… வேலை வெட்டி இல்லைன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா??

 

 

“ஆமாம்… அப்படி தான் நினைச்சுட்டு இருக்கேன்… இல்லைன்னா வந்த வேலையை விட்டுட்டு ஐஸ்கிரீம் வழியவிட்டு போஸ் கொடுத்திட்டு நிப்பீங்களா???

 

 

‘என்னை சொல்ல இவன் யார் என்ற கோபம் எழுந்து அவள் முகம் ஜிவுஜிவு என்று ஆத்திரத்தில் சிவந்தது.

 

 

‘போடா நீயும் உன் பேட்டியும் என்று ஆத்திரம் வர பேசாமல் எழுந்தாள். அதற்குள் அவன் அவளின் எடிட்டருக்கு போன் செய்திருந்தான். “ஹலோ… என்ன அங்கிள் இப்படி பண்ணிட்டீங்க… என்கிட்ட ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல

 

 

“அதெப்படி அங்கிள் செய்ய முடியும்… உங்களுக்கு மட்டும் நான் பதில் சொன்னா மத்த ரிபோர்ட்டர்ஸ்க்கு யாரு பதில் சொல்றது… பாரபட்சம் பார்க்கறீங்க நீங்க அவங்க கேட்க மாட்டாங்க

 

 

“முடியாது அங்கிள்… அது சரியா வராது… என்றவன் எதிர்முனையின் பேச்சில் சற்று அமைதியானான்.

 

“சரி அங்கிள் பத்து நிமிஷம் தான் அதுவும் உங்களுக்காக தான்… ஓகே நான் போனை வைக்கிறேன் என்றுவிட்டு போனை அணைத்தான்.

 

 

அடுத்த சில நொடிகளில் அவள் கைபேசி அழைப்பு விடுத்தது. அதை எடுத்து காதுக்கு கொடுத்தவள் அவன் அறையில் இருந்து வெளியே சென்று “ஹலோ என்றாள்.

 

 

“சார்… தப்பா எடுத்துக்காதீங்க நீங்க ஜானுவையோ இல்லை ரஞ்சித், ரதியையோ வந்து பார்க்க சொல்லுங்க சார்… வேணாம் சார்… என்னை கண்டாலே கத்துறார் சார்

 

 

“நான் என்ன சார் தப்பு பண்ணேன்… என்னமோ கொலைகுத்தம் பண்ண மாதிரி என்னை பார்த்து எரிக்கிறார் சார்… நல்லா நினைச்சீங்க போங்க சார்… முதல் முறையா இவர்கிட்ட போய் நின்னப்பவும் என்னை திட்டி தான் அனுப்பினார்…

 

 

“நீங்க அப்போ நடந்ததை வைச்சு மறுபடியும் என்னை இவர்கிட்ட மாட்டி விட்டுடீங்களே சார்… காலையிலேயே நீங்க இவர் தான் நான் பார்க்க போற ஆளுன்னு சொல்லி இருந்தா நான் அப்போவே வேணாம்ன்னு சொல்லி இருப்பேனே சார்…

 

 

எதிர்முனையில் எடிட்டர் அவளிடம் இனி மறுபடியும் அவனிடம் அவளை அனுப்புவது இல்லை இந்த முறை ஒரு பத்து நிமிடம் அவனிடம் பேசிவிட்டு முடிந்தவரை என்ன கேட்கமுடியுமோ கேட்டு விட்டு அதை தொகுப்பாக்கி கொடுக்க சொல்ல வேறுவழியில்லாமல் மண்டையை உருட்டி விட்டு மீண்டும் அவன் அறைக்குள் நுழைந்தாள்.

 

 

‘ச்சே… இவனுக்கு எவ்வளவு ஆணவம், எல்லாம் பதவி கொடுக்கற திமிர்… என்று நன்றாக அவனை திட்டிக் கொண்டே உள்ளே சென்றாள்.

 

 

அவள் பேசாமல் நிற்க “என்ன மேடம்? பேசாம நிற்கறீங்க, நீங்க வந்த வேலையை முடிக்கறீங்களா?? இல்லை கிளம்பரீன்களா???

 

 

“போதும் நீங்க மனசுக்குள்ள திட்டினது எல்லாம். எனக்கு வேற மீட்டிங் போகணும் என்று சிடுசிடுக்க அவள் கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.

 

 

பத்து நிமிடம் கடந்ததும் அவள் கைபேசியில் அவன் புகைப்படம் ஒன்றிரண்டை எடுத்து முடித்ததும் “ரொம்ப தேங்க்ஸ் சார்… முடிஞ்சிருச்சு நான் கிளம்பறேன் என்றவளை தடுத்து நிறுத்தினான்.

 

 

“இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆகாது மிஸ். சஞ்சனா

 

 

“அதை நீங்க சொல்ல தேவையில்லை சார்

 

 

“வார்த்தையை அளந்து பேசுங்க, யாருகிட்ட பேசுறீங்கன்னு ஞாபகம் வைச்சுக்கோங்க என்றான் அதிகாரமாக.

 

 

“ஓ!! நல்லா ஞாபகம் இருக்கு சார். அதிகார திமிர்ல இருக்கற ஒரு அதிகாரிகிட்ட பேசிட்டு இருக்கேன்னு நல்லா தெரியுது சார், நான் கிளம்பறேன் பேசிட்டே இருந்தா வார்த்தை தான் வளரும் என்றுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

“திமிர் பிடிச்சவ எவ்வளவு ஆணவமா பேசிட்டு போறா?? என்று சத்தமாகவே முணுமுணுத்தான் அவன். வாசலை தாண்டி சென்றவளின் காதுகளில் அந்த வார்த்தை ஸ்பஷ்டமாகவே விழுந்தது.

 

____________________

 

 

சங்கரின் கைபேசி தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க ‘ச்சே இவளுக்கு நேரங்காலமே கிடையாது. எப்போ பார்த்தாலும் எங்க இருக்கீங்க?? எப்போ வருவீங்கன்னு இதையே கேட்டு தொலைக்குறா?? என்று அவன் மனைவி ரஞ்சனியை திட்டிக் கொண்டே போனை எடுத்து காதுக்கு கொடுத்தான்.

 

 

“ஹலோ… எப்படி இருக்கீங்க?? என்ற இனிய பெண் குரலில் அவன் கோபம் சற்றே வடிந்து போக கைபேசியை பார்த்தான் அழைத்தது யாரென்று, அது பிரைவேட் நம்பர் என்றிருக்க “நீங்க யாரு?? என்று பதில் கேள்வி கேட்டான்.

 

 

“நான் யாருன்னு உங்களுக்கு தெரியாமயா போகப் போகுது. நான் உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கேன். நீங்க எப்போ ஊருக்கு வருவீங்க?? என்றது அந்த குரல் மீண்டும் மயக்கும் குரலில்.

 

 

‘யாரா இருக்கும்?? இவ்வளவு ஸ்வீட் வாய்ஸ் என்று மூளையை கசக்கி யோசித்துப் பார்க்க அவனுக்கு எதுவும் பிடிபடவில்லை. “நான் ஊருக்கு வரணும், நீங்க யாரு?? என்ன நம்பர் வேணும் உங்களுக்கு

“நான் யாருன்னு ஊருக்கு வந்து தெரிஞ்சுக்கோங்க என்றது அந்த குரல்.

 

 

சற்றே சலிப்பு தோன்ற “ஹலோ யாருங்க நீங்க?? சும்மா தேவையில்லாதாது எல்லாம் பேசிட்டு என்ன வேணும் உங்களுக்கு?? அனேகமா நீங்க எனக்கு தப்பா கால் செஞ்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்?? நான் போனை வைக்கிறேன்

 

 

“ஹலோ… ஹலோ நீங்க போனை வைக்க வேண்டாம். நான் சரியா தான் போன் பண்ணி இருக்கேன். உங்களோட சொந்த ஊர் எதுவோ அது தான் எனக்கும்

 

 

“என்னோட சொந்த ஊர் எதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்???

 

 

“தெரியும், உனக்கு இன்னும் விவரம் தெரியணுமா?? உங்கப்பா எப்படி செத்தார்ன்னு உனக்கு தெரிய வேணாமா??

 

 

“என்ன உளர்ற??

 

 

“உளறலை உங்கப்பா செத்தது எப்படின்னு தெரிஞ்சுக்கணும்ன்னா நீ ஊருக்கு வா… இல்லைன்னா வராதே??? என்றுவிட்டு போன் துண்டிக்கப்பட்டது.

 

 

“ஹலோ… ஹலோ என்று அவன் வெறும் காற்றுடன் பேசினான்.

 

‘ச்சே… யாரு இது என்னென்னமோ பேசி குழப்புறாளே. இவ யாரா இருக்கும் என்று யோசித்தவனுக்குள் சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற உடனே அவன் நண்பனுக்கு அடித்தான்.

 

 

“ஹலோ… பாலா நான் சங்கர் பேசறேன். எனக்கு கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு போன் வந்திச்சு, பிரைவேட் நம்பர்ன்னு வந்திச்சு. அது யாரு எங்க இருந்து பண்ணாங்கன்னு கண்டுபிடிக்க முடியுமா

 

 

“ஹ்ம்ம்…பார்க்கலாம் சங்கர். நம்பர் கண்டுபிடிக்க முடியுமான்னு தெரியலை, முயற்சி பண்ணறேன். உனக்கு ஒரு அரைமணி நேரத்தில கூப்பிடுறேன் என்றுவிட்டு போனை வைத்தான் எதிர்முனையில் இருந்த பாலா.

 

 

சொன்னது போல் அரைமணி நேரத்தில் போன் செய்தான். “ஹலோ… சங்கர் நான் தான்டா… உனக்கு கடைசியா வந்த போன் ரஞ்சனிகிட்ட இருந்து தான், கால் வந்த டைம் 7.31, நீ கடைசியா பண்ணது எனக்கு

 

 

“அதுக்கு முன்னாடி நீ போன் போட்டது இந்த நம்பருக்கு 9xxxx xxxxx, இடையில உனக்கு வேற கால் எதுவும் வரலைடா என்று பாலா சொன்னதும் தூக்கி வாரி போட்டது சங்கருக்கு.

 

 

“இல்லைடா எனக்கு வேற கால் வந்திச்சு, பிரைவேட் நம்பர் அப்படிங்கறதால உன்னால கண்டுபிடிக்காம போயிருக்கும் நினைக்கிறேன்

 

 

“டேய் பிரைவேட் நம்பர் வேணா கண்டுபிடிக்காம போகலாம், ஆனா உனக்கு கடைசியா எந்த லொகேஷன்ல இருந்து கால் வந்திருக்குன்னு என்னால சொல்ல முடியும்டா

 

 

“உனக்கு கடைசியா ரஞ்சனிகிட்ட இருந்து தான் கால் வந்திருக்கு. என்னடா எதுவும் பிரச்சனையா என்கிட்ட சொல்லுடா

 

 

எதையோ யோசித்தவன் “ஒண்ணுமில்லைடா நான் அப்புறம் பேசறேன் என்றுவிட்டு போனை அணைக்கவும் அவன் கைபேசி மீண்டும் அடித்தது.

“என்ன இன்னும் ஊருக்கு கிளம்பலியா என்ற குரலில் அவனுக்கு கோபமே வந்தது.

 

 

“ஹலோ… யாரு நீங்க எதுக்கு நான் ஊருக்கு வரணும். வரமுடியாதுங்க என்னால ஊருக்கு வரமுடியாதுங்க, நீங்க என்ன விஷயம்ன்னு சொல்லாம நான் வரமாட்டேன். சும்மா போனை பண்ணி கடுப்பேத்தாம போனை வைங்க

 

 

“நீ வருவ… வந்து தான் தீருவ… உங்கப்பாவுக்கு என்னாச்சுன்னு உனக்கு தெரிய வேண்டாமா அதுக்காகவாவது நீ வருவ

 

 

“வரமாட்டேன் கண்டிப்பா வரமாட்டேன்… எங்கப்பாவுக்கு பிரஷர் அதிகமாகி நெஞ்சு வலியும் வந்ததுனால தான் இறந்து போனார். இதை தெரிஞ்சுக்க நான் அங்க வேற வரணுமா என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் அறையில்இருந்த மின்விளக்குகள் அனைத்தும் அணைந்து போனது.

 

 

“ஹலோ… ஹலோ…. என்றவன் பதிலில்லாமல் போக போனை அணைத்துவிட்டு மின்விளக்கு ஏன் அணைந்தது என்று பார்த்துக் கொண்டிருந்தான். ‘யூபிஎஸ் போட்டிருக்கே அப்புறமும் எப்படி கரண்ட் போச்சு என்று யோசித்தவாறே கைபேசியில் உயிர்ப்பித்து வெளிச்சம் கொணர்ந்தான்.

 

இருளில் யாரோ அந்த அறையை கடந்து செல்வது போன்று தோன்ற “யாரது?? என்று குரல் கொடுத்தான். பதிலில்லாமல் போக மீண்டும் அழைத்து பார்த்தான்.

 

 

எந்த பதிலுமில்லாமல் போக ஏனோ அடிவயிற்றில் எதுவோ பிசைந்தது அவனுக்கு. மூச்சடைப்பது போல் தோன்றியது, அவன் அறைக்கு வெளியில் மற்றவர்கள் பேசுவது கேட்க குரல் கொடுத்து பார்த்தான்.அவன் பேசுவது வெளியே இருப்பவர்களுக்கு எட்டாமலே போனது.

 

 

‘இது எப்படி சாத்தியம் மற்ற அறைகளில் வெளிச்சம் இருக்கிறதே, இந்த அறையில் மட்டும் ஏன் இல்லை என்று நினைத்துக் கொண்டே அவன் அறை வாயிலை நோக்கி நடந்தான்.

 

அவன் நடக்க நடக்க அந்த அறை நீண்டுக்கொண்டே போனது போல் இருக்க அவனுக்கு வியர்த்து வடிந்தது. “நீ ஊருக்கு வரணும் என்று காதுக்கருகில் கேட்ட குரலில் அவன் மயங்கி விழுந்தான்.

 

 

காற்றாகநான்வருவேன்….

காற்றினில்உன்உயிர்குடிப்பேன்…

காலம்தான்முடியுமுன்னே…

காலன்கொண்டுசென்றானே…

 

பூமியிலேஇருந்தநாட்கள்….

பூவாய்மணக்கும்நெஞ்சுக்குள்ளே…

பூநாகம்போலஎன்னை….

வஞ்சித்துகொன்றாயே….

 

வண்ணமில்லாஎன்உருவம்

யார்கண்ணில்பட்டிடுமோ…

உயிரில்லாஎன்உள்ளக்

குமுறல்ஒலிகேட்டிடுமோ…

 

காற்றாய்காத்திருப்பேன்….

கண்கள்தான்வேர்த்திருப்பேன்….

கண்ணில்நீவிழுந்தநொடி…

என்சபதம்தீர்த்திடுவேன்….

அத்தியாயம் –4

 

 

“அம்மா நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்மா என்ற மகனின் குரலில் சற்றே கலவரமடைந்தார் மரகதம்.

 

 

“என்னப்பா சொல்ற?? நீ எதுக்கு ஊருக்கு போகப் போறே?? அங்க உனக்கென்ன வேலைப்பா??

 

 

“அம்மா… அப்பா கடைசியா ஊருக்கு போன வேலை இன்னும் முடியலையேம்மா. அதுவும் இல்லாம வாரிசு பேரு எல்லாம் சேர்க்கறது சம்மந்தமான எல்லா டாகுமென்ட் அங்க தானேம்மா இருக்கு

 

 

“அது என்ன ஏதுன்னு பார்த்திட்டு வரத்தான் நான் ஊருக்கு போறேன்மா

 

 

“என்னமோ தெரியலைப்பா… உங்கப்பா ஊருக்கு போயிட்டு திரும்பி வரமுடியாத இடத்துக்கு போனதில இருந்தே மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு. நீ ஊருக்கு போய் தான் ஆகணுமாப்பா

 

 

“அத்தை நீங்க என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா?? ஊருக்கு வேலை இருக்குன்னு போறவர்கிட்ட போய் ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க. அவர் நிம்மதியா போயிட்டு வர வேண்டாமா என்று சிடுசிடுத்தாள் மருமகள்.

 

 

அத்துடன் வாயை மூடிக் கொண்டார் மரகதம். அவர் முகம் வாடியது கண்ட மகன் “அம்மா நீங்க பயப்பட வேண்டாம், நான் ஊருக்கு போயிட்டு ரெண்டே நாள்ல திரும்பி வந்திடறேன் போதுமா என்று விட்டு ஊருக்கு கிளம்ப ஆயத்தமானான்.

 

 

அவனை வழியனுப்பி வைத்துவிட்டு வந்த ரஞ்சனி “அத்தை என்றழைத்தாள். நிமிர்ந்து மருமகளின் முகத்தை பார்த்தவர் மீண்டும் தலையை குனிந்து கொண்டார்.

 

 

“அத்தை தப்பா எடுத்துக்காதீங்க… அவர் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கார். நீங்க போக வேணாம்ன்னு பேசிட்டு இருந்தீங்க அதான் அப்படி பேசினேன், மன்னிச்சிடுங்க அத்தை

 

 

“உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லைம்மா. எனக்கென்னமோ அவன் ஊருக்கு போறதில விருப்பமில்லை. உங்க மாமா ஊருக்கு போன பிறகு என்ன நடந்துது தெரிஞ்சா நீ அவனை அனுப்பி இருக்க மாட்டேம்மா

 

 

“என்ன அத்தை சொல்றீங்க… அப்படி என்ன தான் நடந்துச்சு??

 

 

“உங்க மாமா ஊருக்கு போன அன்னைக்கு போன் பண்ணி என்னென்னமோ சொன்னாரு… அங்க ஏதோ பிரச்சனை நடந்திருக்குன்னு எனக்கு புரியுது. ஆனா என்னன்னு தான் புரியலைம்மா

 

 

“என்ன அத்தை அப்படி என்ன தான் நடந்துச்சு… மாமா என்ன சொன்னாங்க???

 

 

“ஊருக்கு போனதும் ஒரு தரம் போன் பண்ணிட்டு அவர் வீட்டுக்கு போயிட்டதா சொன்னார். அதுக்கு அப்புறம் திடிர்னு நைட் ஒரு தரம் போன் பண்ணார். சங்கர் நாளைக்கு தானே வரேன்னு சொன்னான் இன்னைக்கே வந்துட்டான் அப்படி பேசினார்

 

 

“ஆனா அன்னைக்கு சங்கர் நம்ம கூட தானேம்மா இருந்தான். அதை சொன்னதும் சரி அப்படியான்னு சொல்லிட்டு போனை வைச்சுட்டார். திரும்பவும் அன்னைக்கு நைட் ஒரு பன்னிரண்டு மணி இருக்கும் அப்போ போன் பண்ணி நான் போன் பண்ணி வைச்சதும் நீ சங்கரை திரும்பவும் அனுப்பி வைச்சுட்டியா அப்படின்னார்

 

 

“அவன் வீட்டில தூங்கிட்டு இருக்கான்னு சொல்லிட்டு நான் போன் வைச்சுட்டேன். நல்ல தூக்கத்துல அவர் போன் பண்ணதுனால என்னாலயும் சரியாவே பேச முடியலை

 

 

“நான் பிரஷர் மாத்திரை போட்டிருந்தேன் எனக்கு தூக்கம் வேற கண்ணை சொக்கிருச்சு. உங்க மாமா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் எனக்கு போன் பண்ணி இருக்கார். ஆனா எனக்கு எந்த சத்தமும் கேட்கலை

 

 

“காலையில தான் நமக்கு உங்க மாமா இறந்திட்டார்ன்னு தகவல் வந்திச்சு. அதுனால தான்ம்மா நான் சங்கரை ஊருக்கு போக வேண்டாம்ன்னு சொன்னேன். என்னமோ உங்க மாமா இறந்ததுல எனக்கு மனசே சரியில்லைம்மா

 

 

“ஒருவேளை அன்னைக்கு நான் போன் எடுத்திருந்தா அவர் எதுவும் என்கிட்ட சொல்லியிருப்பார்ன்னு தோணுது. அவரை காப்பாத்தி இருக்க முடியும்ன்னு தோணுது. என்னால தான் உங்க மாமா போய்ட்டார்ம்மா என்றவர் அந்த நினைவில் மீண்டும் அழ ஆரம்பித்தார்.

 

 

“அத்தை… என்றவள் ஏதோ சொல்ல அவரும் சமாதானமாக தலையசைத்தார்.

 

 

சங்கர் பஸ்ஸைவிட்டு கிழே இறங்கினான். ஏதோ சொல்லொணாத பயம் வந்து மனதை சூழ்ந்தது. அருகில் ஸ்டாண்டில் நின்றிருந்த ஆட்டோவை பிடித்தான். அவர்கள் வீட்டுக்கு செல்லும் வழி சொல்லி ஏறி அமர்ந்தான்.

 

 

அவன் கைபேசி அழைப்பு விடுக்க அதை எடுத்து காதுக்கு கொடுத்தான். “ஹலோ… என்று கூற “வந்துட்டியா??? என்ற அதே பெண் குரலில் சற்றே கலரவமடைந்தான்.

 

 

“ஹலோ… என்ன வேணும் உங்களுக்கு?? என்று அவன் கேட்டு முடிக்கும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. யோசனையுடனே மௌனித்து அமர்ந்திருந்தான்.

 

 

வீடு வந்ததும் இறங்கியவன் அவன் தந்தையின் நண்பர் ராமசாமியிடம் வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தான். வீட்டை திறக்கவும் வீடே ஒரு மயான அமைதியை கொடுத்தது போல் இருந்தது.

அந்த அமைதி கூட அவனை ஏதோ ஒரு விதத்தில் கலவரப்படுத்தியது. வீட்டில் இருந்த மின்விளக்கை எரிய விட பளீரென்ற அதன் ஒளி வெள்ளம் கூட அவனை கொஞ்சம் பயம் கொள்ளச் செய்தது.

 

 

உள்ளே சென்று கதவை பூட்டிவிட்டு வரவேற்ப்பில் இருந்த சோபாவிலேயே தொப்பென்று அமர்ந்தான். எதையோ எதிர்பார்த்து அவன் காத்துக் கொண்டிருக்க தன்னை மீறிய தூக்கத்தில் அப்படியே கண்ணயர்ந்து போனான்.

 

 

வாசல் கதவை யாரோ தட்டும் ஒலி கேட்க அவன் விழிப்பு நிலைக்கு வந்தான். ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித்தவன் கதவு தட்டும் ஒலி கேட்டு கதவை திறக்கச் சென்றான்.

 

 

அங்கு ராமசாமி கையில் உணவுடன் நின்றிருந்தார். “வாங்க அங்கிள், என்ன இந்த நேரத்தில்?? என்க “என்னப்பா நைட் நீ சாப்பிட்டு இருக்க மாட்டேன்னு உனக்கு சாப்பாடு கொண்டு வந்தேன், ரொம்ப நேரமா தட்டிட்டு இருக்கேன். நீ தூங்கிட்டியா??

 

 

“ஆமா அங்கிள் நல்லா தூங்கிட்டேன் போல, சத்தம் கேட்டு தான் எழுந்தேன். உங்களுக்கு எதுக்கு அங்கிள் தேவையில்லாத சிரமம் நான் போய் வெளிய சாப்பிட்டுக்க மாட்டேனா??

 

 

“இதுல எனக்கென்ன சிரமம் இருக்குப்பா… என் நண்பனோட பையன் நீ, உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன். கார்மேகம் தான் இப்போ இல்லாம போய்ட்டான் என்று சொல்லி வருந்தினார்.

 

 

“சரிப்பா நீ பொறுமையா சாப்பிடு, நான் உனக்கு துணையா இன்னைக்கு இங்கயே தங்கிக்கறேன்

 

 

“அங்கிள் அதெல்லாம் வேணாம்… நீங்க வீட்டுக்கு போங்க ஆன்ட்டி பாவம் தனியா இருப்பாங்களே…

 

 

“உங்க ஆன்ட்டி தனியா இருந்துப்பா… நான் இன்னைக்கு உன்கூட தான்ப்பா… உங்கப்பாவையே அன்னைக்கு நான் தனியா விட்டுட்டேன். நானும் கூட வந்து தங்கி இருந்தா என்ன ஏதுன்னு உடனே பார்த்து அவனை நல்ல முறையா கவனிச்சு இருப்பேன் என்று மீண்டும் வருத்தத்திற்கு போனார்.

 

 

“சரி அங்கிள் நான் சாப்பிட்டுக்கறேன், நீங்க உள்ள போய் படுத்துக்கோங்க… என்றவன் “அங்கிள் நீங்க சாப்பிட்டாச்சா என்றான் தொடர்ந்தவாறே.

 

 

“அதெல்லாம் ஆச்சுப்பா, நான் உள்ளே போய் படுத்துக்கறேன் என்று சொல்லி அவர் உள்ளே சென்று விட்டார்.

 

 

சங்கர் கையை கழுவிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தான். அவன் சாப்பிட்டு முடிக்கவும் அந்த அறையில் இருவாட்சி (நிஷாகந்தி) மலரின் மணம் வந்து அவன் நாசியை தொட்டது.

 

 

‘என்ன இது ஏதோ பூ வாசமா இருக்கு, கதவெல்லாம் மூடி இருக்கு எப்படி இந்த வாசம் என்று  யோசனையுடனே எழுந்து சென்று கையை அலம்பிக் கொண்டு வந்தவன் மீண்டும் சோபாவிலே வந்தமர்ந்தான்.

 

 

அவன் கைபேசி ஒலிக்க பொத்தானை அமுக்கியவாறே போனை காதில் வைத்து “ஹலோ என்றான்.

 

 

“என்னப்பா சங்கர்?? சாப்பிட்டியா?? என்ற குரலில் சற்றே அதிர்ந்தான்.

 

 

“என்ன அங்கிள் இப்படி கேட்குறீங்க?? நீங்க தானே இப்போ சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தீங்க… இங்க உள்ளே ரூம்ல இருந்துக்கிட்டே எதுக்கு அங்கிள் போன் பண்ணுறீங்க??

 

 

“என்னப்பா சொல்றே நீ?? நான் உனக்கு சாப்பாடு கொண்டு வந்தேனா, நீ வீட்டுக்கு வந்து சாவி வாங்கி போன பிறகு வெளிய கிளம்புனவன் தான் இப்போ தான் வீட்டுக்கே வந்தேன்

 

 

“அதான் உன்கிட்ட என்ன விபரம் கேட்கலாம்ன்னு கால் பண்ணேன்ப்பா… அங்க ஒண்ணும் பிரச்சனையில்லையே

 

 

“ஒண்ணு… ஒண்ணும் பிரச்சனையில்லை அங்கிள். ஆனா… ஆனா அங்கிள் நீங்க நைட் என்னோட வந்து படுத்துக்க முடியுமா என்றான் திக்கியவாறே.

 

 

“என்னப்பா என்னாச்சு… பிரச்சனையில்லைன்னு சொல்லிட்டு இப்படி சொல்ற. இங்க உங்க ஆன்ட்டி தனியா இருக்க பயப்படுவாளே, உங்கப்பா இறந்து போனதுக்கு அப்புறம் அவ ஆறு மணிக்கு மேல வீட்டை விட்டு வெளிய வரக் கூட பயப்பட ஆரம்ப்பிச்சுட்டா

 

 

“நான் எங்கயாச்சும் போனா கூட வீட்டில ஒரு ஆளை இருத்தி வைச்சுட்டு தான் போவேன். நீ வேற இப்படி கேட்குறியேப்பா, ஒண்ணு செய்யேன், நீ வேணா இங்க வந்து படுத்துக்கோயேன்

 

 

முதலில் அதுவே சரி என்று தோன்றிய போதும் ‘ச்சே… நாம் போய் பயந்து வெளியே ஓடுவதா… என்று எண்ணி “இல்லை அங்கிள் பரவாயில்லை… நான் பார்த்துக்கறேன், நீங்க தூங்குங்க குட் நைட் என்று போனை வைத்தான்.

 

 

‘அப்போ கொஞ்ச நேரம் முன்னாடி வந்தது யாரு என்று யோசித்தாவாறே உள்ளே அறைக்குள் சென்று பார்க்க அறை காலியாக இருந்தது.

 

 

“உங்கப்பா எப்படி இறந்து போனார்ன்னு இப்போ புரியுதா என்று காதுக்கருகில் அமானுஷ்ய குரல் ஒன்று கேட்க அரண்டு போனான் அவன். ஏதோ புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தது.

 

 

அறைக்குள் அவனை தவிர வேறு யாரோ இருப்பதாக உணர்ந்தான். ராமசாமியின் வீட்டிற்கு சென்று விடலாமா என்ற எண்ணம் தோன்ற வாசலுக்கு விரைந்தான்.

 

 

அவன் பின்னேயே வேகமான மற்ற காலடியோசை கேட்க இதயம் திக் திக்கென்று அடித்துக் கொள்ள மெதுவாக திரும்பி பார்த்தான். அங்கு யாருமில்லாதது அவனை மேலும் பயம் கொள்ளச் செய்தது.

 

 

திடிரென்று விளக்குகள் அணைந்து போனதில் அவன் சுவரோடு ஒட்டிப் போனான். “யார் அது??? சொல்லுங்க நீங்க யாரு?? எதுக்கு இப்படி என்னை பயமுறுத்தி பார்க்கறீங்க?? எனக்கு தெரியும் இங்க என்னை தவிர வேற யாரோ இருக்கீங்க

 

 

அவன் பேச்சுக்கு எந்த மறுமொழியும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது அறை. நிசப்தத்தை உடைக்குமாறு உள்ளே சிலிரென்ற சப்தத்துடன் ஏதோ விழுந்தது.

 

 

சோபாவில் சைலென்ட் மோடில் வைக்கப்பட்டிருந்த அவன் கைபேசி ஒளிரவும் இருளில் அவன் கைபேசி இருக்கும் திசை நோக்கி சென்றான். அருகில் செல்ல செல்ல கைபேசி தொலைவாக நகர்ந்து போய்க் கொண்டே இருந்தது.

 

 

சங்கருக்கு கிட்டத்தட்ட மயக்கமே வரும் போல் இருந்தது. முயன்று வரவழைத்த குரலில் “மறுபடியும் கேட்கிறேன் சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும் என்று அவன் கேட்கவும் சரியாக இருந்தது.

 

 

“உன்உயிர் தான்டா வேணும் என்ற அரூபமான உருவம் அவன் எதிரே நிற்க அவன் மூச்சடைத்து போய் கிழே விழவும் மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது……..

 

 

வீட்டிற்கு வந்தபின்னும் சஞ்சு கோபமாகவே இருந்தாள். அவளையே கவனித்துக் கொண்டிருந்த அஞ்சு இருவருக்குமாக காபியை கலந்து கொண்டு வந்தவள் “சஞ்சு வாயேன் அப்படியே மாடிக்கு போய் பேசிட்டே காபி குடிப்போம் என்றாள்.

 

 

அவளுக்குமே ரிலாக்ஸ்டாக காபி குடித்தால் நன்றாக இருக்கும் போல் தோன்ற “தேங்க்ஸ் அஞ்சு… வா போகலாம் என்றுவிட்டு ஒரு கோப்பையை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டாள்.

 

 

“சொல்லு என்னாச்சு… ஏன் ஒரு மாதிரியா இருக்க??

 

 

“என்ன ஒரு மாதிரியா இருக்கேன் நானு… என் முகத்தில அப்படியா தெரியுது என்றாள் சஞ்சு மறுமொழியாக.

“இல்லை நீ வந்ததுல இருந்தே ஏதோ யோசனையா இருக்கே. சொல்லுடி என்ன பிரச்சனை??

 

 

“எல்லாம் அந்த ஒல்லிப்பிச்சானால வந்தது… என்று முணுமுணுத்தாள்.

 

 

“யாரைடி சொல்ற??

 

 

“எல்லாம் நான் முத முதல்ல போய் ஒரு பேட்டி எடுத்துட்டு வந்தேனே அந்த மகராசனை தான் சொல்றேன்

 

 

“ஏதோ ஒரு போலீஸ் எஸ்ஐன்னு சொன்னியே அவரா??? ஏன்??? இப்போ அவருக்கு என்னாச்சு???

 

 

“அவன் இப்போ ஐபிஎஸ் ஆகிட்டான் அஞ்சு?? இந்த எடிட்டர் மறுபடியும் அவன்கிட்ட என்னை பேட்டி எடுக்க அனுப்பி வைச்சுட்டார் என்றவள் நடந்ததை அவளிடம் அப்படியே கூறினாள்.

 

 

அவள் கூறி முடித்ததும் அஞ்சு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். “ஏய்… பேசாம இருடி, சிரிச்சு நீ வேற என்னை வெறுப்பேத்தாதே??

 

 

“உனக்கெல்லாம் யாரு இந்த வேலையை கொடுத்தது. போய் பேட்டி எடுத்துட்டு வரச்சொன்னா கடையில ஐஸ்கிரீம் சாப்பிட்டு நின்னிருக்க, அதான் அந்த மனுஷனுக்கு அப்படி கோபம் வந்திருக்கு

 

 

“நான் என்ன அவன் காசுலையா ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். நான் ஐஸ்கிரீம் சாப்பிடுவேன் சாப்பிடாம இருப்பேன் அதை கேட்க இவன் யாரு?? என்று பொரிந்தாள் சஞ்சனா.

 

 

“நீ சொல்றதும் சரி தான்… ஆனா சஞ்சு எனக்கு ஒண்ணு தோணுது, சொன்னா அடிக்கக் கூடாது என்று நிறுத்தினாள் அஞ்சு.

 

 

“எப்படியும் நான் அடிக்க போற மாதிரி தான் ஏதோ சொல்லப் போறேன்னு தெரியுது… என்னனு சொல்லு பார்ப்போம்

 

“எனக்கென்னவோ நீ அந்த போலீசை விரும்பறியோன்னு தோணுது…

 

 

“சீய்… வாயை கழுவு… உனக்கு வேற நல்ல வார்த்தையே வாய்ல வரதா… போயும் போயும் அவனையா நான் விரும்புவேன்… அவனெல்லாம் காசு கொடுத்தா கூட சிரிக்க மாட்டான்

 

 

“அவனையெல்லாம் யாராச்சும் விரும்புவாங்களா… இவனுக்கெல்லாம் உலகத்துல பெண்ணே கிடைக்காது. அப்படி ஒரு பொண்ணு கிடைச்சா அந்த பொண்ணு தெய்வமா நினைச்சு அது கால்ல விழுந்து கும்பிடணும்

 

 

“எப்படிம்மா இப்படி ஒருத்தனை கட்டிக்கிட்டன்னு சொல்லி… யார் அந்த பாவப்பட்ட ஜென்மமோ தெரியலை… எனக்கு ஒரு சந்தேகம் இவன் கஞ்சி தொட்டியில விழுந்திருப்பானோ எப்போ பார்த்தாலும் விரைப்பாவே சுத்திக்கிட்டு இருக்கான் என்று சலித்துக் கொண்டாள்.

 

 

“எதுக்கு அஞ்சு சிரிக்கிற??

 

 

“இல்லை அது நீயோன்னு…

 

 

“அடியே இன்னொரு தடவை எதுவும் சொன்னே உன்னை காலி பண்ணிடுவேன் பார்த்துக்கோ… உனக்கு மட்டும் நல்லா ரொமான்ஸ் பண்ணுற மாமாவை செலக்ட் பண்ணுவ… நான் மட்டும் என்னடி பாவம் பண்ணேன் உனக்கு… இப்படி சபிக்கிற

 

 

“சஞ்சு அவரை எதுக்குடி இப்போ இழுக்குற, அவர் அப்படி என்ன ரொமான்ஸ் பண்ணிட்டார்… ஹ்ம்ம் என்று சலித்தாள் அஞ்சனா.

 

 

“அஞ்சு ஒண்ணு மட்டும் நிஜம்டி இந்த சென்னை மாநகரத்துக்கு மாமா உன்னை பார்க்க வரும் போதெல்லாம் இங்க தண்ணி பஞ்சமே வர்றது இல்லை ஏன்னு தெரியுமா??

 

 

“என்னடி உளர்ற??

 

 

“நான் ஒண்ணும் உளறலை… அது தான் உண்மை… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணுற ரொமான்ஸ்லயும் ஊத்துற ஜொள்ளுலயும் ஒரு ஆறே ஓடுது… அதான் தண்ணி பஞ்சம் இல்லை… என்று அவள் சிரிக்காமல் சொல்ல அஞ்சு அவளை அடிக்க துரத்திக் கொண்டிருந்தாள்.

 

 

அந்த வாரத்தின் சிறப்புப் பகுதியில் லட்சிய நாயகன் என்னும் தலைப்பில் நிரஞ்சனை பற்றிய பகுதி வந்திருந்தது. செய்தித்தாளை புரட்டியவன் முன்பு போலவே இப்போதும் பிரமித்து தான் போனான்.

 

 

அவன் முன்பு எஸ்ஐயாய் இருந்த போது நடந்த உரையாடலும் கட்டுரையும் சேர்த்து எஸ்ஐ இப்போது ஐபிஎஸ் அதிகாரி என்று அவனை பற்றி பெருமையான குறிப்புகள் பல கொண்டிருந்தது அந்த கட்டுரை.

 

 

ஐபிஎஸ் என்பது அவனது கனவு என்றும் காவல் துறையில் பணியாற்றுவது அவன் லட்சியமாக கொண்டு ஐபிஎஸ் ஆகும் வரை எஸ்ஐ பரீட்சை எழுதி முதலில் எஸ்ஐயாகவும் வேலையில் இருந்து கொண்டே ஐபிஎஸ்க்கு படித்து முன்னேறிய கனவு நாயகன் என்று புகழ்ந்திருந்தாள்.

 

 

குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பில் இடையில் படிப்பதற்கு ஏற்பட்ட சிறு தடங்கலையும் மீறி படித்து சாதித்து நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்துள்ளார்

 

 

மேலும் எஸ்ஐயாக இருக்கும் போதே அவர் அனைவரிடத்தும் நன்மதிப்பை கொண்டவர் என்றும் ஐபிஎஸ் அதிகாரியாக சென்னை மாநகரின் உதவி கமிஷனராக அவர் மேலும் திறன்பட செயல்படுவார் என்று எழுதியிருந்தாள்

 

 

தான் அவ்வளவு விரட்டியும் அவள் தன்னை பற்றிய குறிப்புகளை சேகரித்து எவ்வளவு விபரமாக பதிவிட்டிருக்கிறாள் என்று ஆச்சரியம் கொண்டான்

 

 

ஏனோ இந்த முறை அவளுக்கு போன் செய்து பாராட்ட அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

 

 

ஒரு மாதத்திற்கு பின் சென்னைக்கு டெல்லியில் இருந்து பிரதமர் ஒரு முக்கிய கருத்தரங்குக்காய் வருவதாக இருந்தது. கருத்தரங்கின் முடிவு நாள் அன்று அவர் பத்திரிகை மற்றும் மீடியாவின் கேள்விகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

 

விழாவின் முக்கிய பொறுப்பில் நிரஞ்சன் இருந்தான். பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு சஞ்சனாவும் அவள் உடன் பணிபுரியும் அவளுக்கு ஜூனியர் ராகவியும் சென்றனர்.

 

 

விழா நாளின் அன்றுஅவர்கள் அடையாள அட்டையை காண்பித்து உள்ளே செல்லப் போகையில் நிரஞ்சனை தூரத்தில் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டாள். மூளை வேகமாக யோசித்து உள்ளே செல்லாதே என்று அறிவுறுத்தியது.

 

 

‘இவன் முகத்தில நாம மறுபடியும் விழிக்கணுமா, இது தேவையாடி சஞ்சு உனக்கு என்று யோசித்தவள் உடன் வந்த ராகவியை கெஞ்சி கூத்தாடி கொண்டிருந்தாள் அவளை மட்டும் தனியே உள்ளே செல்லுமாறு.

 

 

“ராகவி நீ திரும்பி வர்ற வரைக்கும் நான் உனக்காக வெளியவே நிக்குறேன்… ப்ளீஸ் எனக்காக நீயே இதை பண்ணிடேன்…

 

 

“என்னக்கா நீங்க இப்படி திடுதிப்புன்னு என்னையவே போக சொல்றீங்க… நான் ட்ரைனியாச்சேக்கா… வெளிய தெரிஞ்ச பிரச்சனையாகிடுமேக்கா…

 

 

“அப்படி எல்லாம் எதுவும் ஆகாது ராகவி நான் பார்த்துக்கறேன்… யாருக்கும் எதுவும் தெரியாது…. என்று ஒருவாறு அவளை தாஜா செய்து உள்ளே அனுப்பி வைத்தாள்.

 

 

வெளியில் யாரையுமே நிற்க விடாமல் காவல்துறையினர் விரட்ட வேறு வழியில்லாமல் சஞ்சனா அந்த இடத்தை காலி செய்து அடுத்த தெருவில் சென்று நின்றாள். ராகவிக்கு குறுந்தகவல் அனுப்பியவள் அவளிடம் பதில் இல்லை என்றதும் அவளுக்கு இடைவெளி விட்டு தொடர்ந்த அழைப்பு விடுத்தாள்.

 

 

மெசேஜ் பார்க்காமல் போனாலும் மிஸ்டு காலை பார்த்தாவது அவள் பதில் அனுப்புவாள் என்று நினைத்து அவளுக்கு அழைப்பு விடுக்க அதுவே அவளுக்கு எதிரியாகி போனது.

 

 

சார்ஜ் ஏற்றப்படாமல் இருந்த ராகவியின் கைபேசி தொடர்ந்த அழைப்பினால் களைத்து போய் அதன் இயக்கத்தை நிறுத்தி அணைந்து போனது. சில நிமிட இடைவெளியில் மீண்டும் முயற்சி செய்த சஞ்சனா, ராகவி தான் போனை அணைத்து வைத்திருக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டு அவளுக்காக காத்திருக்கலானாள்.

 

 

விழா முடிந்து பிரதமரை தகுந்த பாதுக்காப்புடன் வழியனுப்பி வைத்த பின்னே தான் நிரஞ்சனால்னு சற்றே மூச்சு விட முடிந்தது. அப்போது அவன் திரும்பி பார்க்க ராகவி தனித்து நின்றிருந்தாள்.

 

 

அவளை சைகை செய்து வருமாறு கூற வேகமாக அவனை நோக்கிச் சென்றாள். “எதுக்கு இங்க நின்னுட்டு இருக்கீங்க??

 

 

“சார் என்னோட வந்தவங்க எங்க போனாங்கன்னு தெரியலை சார்… ஆபீஸ்க்கு இப்போ எப்படி தனியா போறதுன்னு தான் நின்னுட்டு இருக்கேன் சார்

 

 

“ஏன் உங்களோட ஒருத்தவங்க வந்தாங்களே அவங்க உங்களை தனியா விட்டு எங்க போனாங்க

 

 

“இல்லை சார் அது வந்து… என்றவள் சஞ்சனா அவளை மட்டும் தனியே அனுப்பிய விபரத்தை உரைக்க நிரஞ்சனுக்கு அவள் தன்னை தவிர்பதற்காகவே ராகவியை தனியே அனுப்பியிருக்கிறாள் என்று புரிந்தது.

 

 

“சரி அவங்களுக்கு ஒரு போன் பண்ணி கேளுங்க என்றான்.

 

“சார் என்னோட போன் ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு சார்

 

 

“அப்போ என்னோட போன்ல போடுங்க

 

 

“அவங்க நம்பர் இந்த போன்ல தான் சார் இருக்கு என்றவளை வித்தியாசமாக பார்த்தான்.“சார் நீங்க எதுக்கு அப்படி பார்க்கறீங்கன்னு புரியுது சார்… நான் இந்த ஊருக்கு புதுசு… இப்போ தான் இந்த வேலையில சேர்ந்தேன்… எனக்கு இன்னும் இந்த ஊர் பழக்கம் ஆகலை சார்… என்றாள்.

 

 

இப்படி இந்த பெண்ணை தனியே தவிக்க விட்டு அப்படி என்ன வீம்பு இவளுக்கு என்று சஞ்சனாவின் மேல் கோபமாக வந்தது அவனுக்கு.

 

 

“சரி என்னோட வாங்க… உங்க ஆபீஸ் தாண்டி தான் நான் போகணும் போற வழியில உங்களை ஆபீஸ்ல விட்டுட்டு போறேன் என்று அவளை காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.

 

 

அவர்களின் வண்டி சஞ்சனா நின்றிருந்த இருப்பிடத்தை கடந்து செல்லவும் எதேச்சையாக திரும்பி பார்த்தவள் ராகவி நிரஞ்சனுடன் செல்வதை கவனித்து விட்டாள். ‘அய்யய்யோ இவ நம்ம மெசேஜை பார்க்கலை போல இருக்கே

 

 

‘இவனோட வேற இப்போ கிளம்பி போறா, இவன் என்ன ஏழரையை கூட்ட போறானோ தெரியலையே… இதுக்கு நானே உள்ளே போய் இவன்கிட்ட ஏச்சு வாங்கியிருக்கலாமே என்று தன்னையே நொந்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தாள்.

 

 

சஞ்சனா அவர்களை பின் தொடர்வதை ஒரு திருப்பத்தில் சைடு மிரர் வழியாக நிரஞ்சன் கண்டுகொண்டிருந்தான். உடனே டிரைவரை வேறு திருப்பத்தில் திரும்பச் சொல்லி மின்னலென அவள் கண்ணிலிருந்து மறைந்து அவள் அலுவலகம் நோக்கி சென்றான்.

 

 

சஞ்சு புலம்பிக் கொண்டே வந்தாள் ‘எங்க போனான்னு தெரியலையே ஆபீஸ்க்கு போய் அவன் என்னை போட்டு கொடுக்கறதுக்கு முன்னாடி நாம அங்க போய்டணும் என்று விரைவாக வண்டியை அலுவலகம் நோக்கி சென்றாள்.

 

 

வண்டியை சைடு ஸ்டாண்ட் மட்டும் போட்டுவிட்டு அவசரமாக உள்ளே நுழைந்து லிப்டை தேட அது மேல் நோக்கி சென்றிருந்தது. லிப்டுக்காக காத்திராமல் அவசரமாக படிகளில் ஏறி மூன்றாம் மாடிக்கு வந்து சேர்ந்தாள்.

 

 

அக்செஸ் கார்டை காண்பித்து கதவை திறந்து மூச்சிரைக்க அவள் நின்றிருக்க நிரஞ்சன் வாசலில் நின்றிருந்தான். அவள் நின்றிருந்த கோலத்தை பார்த்து ஏளன புன்னகை பூத்தவன் அவளை கடந்து வெளியில் சென்றுவிட்டான்.

 

 

எடிட்டர் அறையில் இருந்து வெளியே வந்த ராகவி “சாரிக்கா… என்னால தான் எல்லாம். நான் வேணும்ன்னு செய்யலைக்கா… எடிட்டர்க்கு தெரிஞ்சு போச்சு, உங்களை பார்க்கணும்னு சொன்னார்க்கா

 

 

“சரி விடு நான் பார்த்துக்கறேன் என்று விட்டு எடிட்டர் அறையில் நுழைய அவர் கொடுத்த பலமான வரவேற்ப்பில் வை ப்ளட் சேம் ப்ளட் என்ற நிலைமையானது அவளுக்கு. காதில் ரத்தம் வருமளவிற்கு அவளை திட்டினார்.

 

 

எப்போதும் அவளை புகழும் அவர் அன்று மிகவும் கடுமையாக அவளை கண்டித்து இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு எச்சரித்தார்.

 

 

‘பக்கி… பக்கி… வந்து நல்லா போட்டு கொடுத்திட்டு போய்ட்டான் போல, எப்போமே திட்டாத என்னோட எவரெஸ்ட் எடிட்டர் இன்னைக்கு இப்படி திட்டிட்டாரே என்று புலம்பினாள்.

 

 

உண்மையிலேயே நிரஞ்சன் அவளை போட்டு கொடுத்திருக்கவில்லை. பத்திரிகை மற்றும் மீடியாவினர் பேட்டி என்பதால் ஒரு தனியார்  தொலைக்காட்சி அங்கு நடந்த பேட்டியை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது.

எடிட்டர் அதை கண்டுவிட்டே அவளை வறுத்தெடுத்தார் என்பது அறியாமல் அவள் நிரஞ்சனை வறுத்துக் கொண்டிருந்தாள்…

 

 

சில நாட்கள் கடந்திருக்க சஞ்சுவை அழைத்த எடிட்டர் “சஞ்சனா அலவா கோட்டை ஊரை பத்தி கேள்வி பட்டிருக்கியாம்மா என்றார்.

 

 

“சார் நல்லா தெரியும் சார், எங்களோட அப்பா ஊர் சிவகங்கை தானே சார்… அலவா கோட்டை அங்க இருக்கற ஒரு ஊர் தான் சார்… என்ன சார் என்ன விஷயம் திடிர்னு அந்த ஊரை பத்தி கேட்கறீங்க

 

 

“அங்க உன்னால போக முடியுமாம்மா… ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஒண்ணு போடணும்… அந்த ஊரை பத்தி எழுதணும்… அப்புறம் அங்க பேய் நடமாட்டம் இருக்கறதா ஒரு புரளி இருக்கு… அது என்ன ஏதுன்னு விசாரிச்சு எழுதணும்

 

 

“உன்னோட சொந்த ஊர் அந்த பக்கம் அப்படிங்கறதால எனக்கு உன் ஞாபகம் தான் வந்திச்சு… என்னம்மா உன்னால பண்ண முடியுமா

 

 

“என்ன சார் நீங்க இப்படி கேட்டுடீங்க??? கரும்பு திங்க யாராச்சும் கூலி கேட்பாங்களா… நான் ஊருக்கு போய் பல வருஷம் ஆச்சு… எனக்கு இது ஒரு சாக்கு… ஜாலியா எங்க ஊருக்கு போவேன்… எங்க அத்தை வீடு அங்க தான் இருக்கு… அங்க இருந்துக்கிட்டு நான் இதெல்லாம் செஞ்சுடுவேன் சார்…

 

 

“நீங்க கவலையே படவேண்டாம் அங்க என்ன நடக்குதுன்னு அக்கு வேறா ஆணி வேறா பிச்சு பிச்சு எழுதிடறேன் போதுமா சார் என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

 

 

அங்கு நடக்கப் போகும் அசம்பாவிதம் பற்றி முன்பே தெரிந்திருந்தால் சம்மதித்திருக்க மாட்டாளோ(?)…..

 

 

உண்மையானநேசத்துக்கு

உயிரில்லாமல்போனாலும்

நேசம்என்றும்மாறாது….

 

இருவாட்சியாய்இருந்தாலும்

இருளில்மலர்ந்துஆட்சிசெய்வேன்….

இன்னாரைக்கொன்றொழிக்க

இருட்டினிலேவந்திடுவேன்….

 

இரவில்மலர்ந்துஇரவில்மடிந்தாலும்

என்மணத்தில்என்றும்குறைவில்லை….

நிஷாகந்திப்பூவாய்நான்மலர்வேன்…

மணம்நிறைத்துஉந்தன்

மதிமயக்குவேன்…..

 

உயிரைக்எடுக்கநான்வருவேன்….

உயிரைக்கொடுக்கநீவருவாயா….

Advertisement