Advertisement

அத்தியாயம் –13

 

 

எல்லோரும் கார்த்திக் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ மனமார நிரஞ்சனை திட்டிக் கொண்டிருந்தான்.

 

 

அவன் பதிலுக்காய் அவனை ஒவ்வொருவராய் பார்க்க “இல்லை… அது வந்து… ரெண்டு பேரும் பீல்ட் அப்படி… எப்போ அவங்க ஒண்ணா சந்திச்சாலும் அவங்களுக்குள்ள சண்டை தான் வருது…

 

 

“அதை… அதை தான் அவன் சொல்லிட்டு போறான்… இப்போவாச்சும் போய் ஒரு ரெண்டு வார்த்தை ஒழுங்கா பேசிட்டு வர்றேன்னு என்கிட்ட சொல்லிட்டு போறான்… என்று ஒருவாறு திக்கி திணறி தட்டுத்தடுமாறி சமாளித்துவிட்டதாக நினைத்து அவனே சபாஷ் போட்டுக் கொண்டான்.

 

 

அவனருகில் அமர்ந்திருந்த கவிதாவின் கணவர் அவனை பார்த்து ரகசியமாய் சிரிக்க ‘அடப்பாவிகளா இது தான் உண்மை நம்புங்கடா என்று பதில் பார்வை பார்த்தான் கார்த்திக்.

 

 

சஞ்சுவுடன் படியேறி சென்ற நிரஞ்சன் அவள் பின்னேயே சென்றான், அவளோ சும்மா இல்லாமல் அவர்கள் வீட்டின் மாடியை சுற்றி சுற்றி வந்தாள். “ஹேய் சஞ்சு என்ன பண்ணுற, நான் உன்கிட்ட பேசணும்னு வந்தா உங்கவீட்டை எனக்கு சுத்தி காட்டிட்டு இருக்க என்றான்.

 

 

“பின்னே வீட்டு மாப்பிள்ளைக்கு வீட்டை சுத்தி காட்ட வேண்டாமா… என்று கூற அவளை முறைத்தான். அவர்கள் நடந்து செல்ல அடுத்து வந்த அறைக்கு வெளியே நின்றவள் ஒரு நிமிடம் தாமதிக்க சட்டென்று புரிந்தவனாக அவள் கையை பிடித்து உள்ளே இழுத்து சென்றவன் கதவை அடைத்தான்.

 

 

“என்ன பண்றீங்க??? இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க?? இது எங்கப்பாம்மா ரூம் என்று அவள் பொய்யுரைத்தாள்.

 

 

“ஓ அப்படியா!!! அப்போ இதென்ன?? என்று அங்கிருந்த மேஜையில் சஞ்சுவும் அஞ்சுவும் இருந்த புகைப்படத்தை காட்ட வாயை மூடிக் கொண்டாள் அவள்.

 

 

“நேத்து தான் என்னை ஏமாத்திட்ட உன்னோட பேசலாம்ன்னு வந்தா… கும்பகர்ணனுக்கு தங்கச்சி மாதிரி தூங்கி என்னை கடுப்பாக்கிட்ட… இப்போ என்னடான்னா வீட்டு மாப்பிள்ளை வீட்டை சுத்தி காண்பிக்கிறேன்னு கதை விடுற…

 

 

“இந்த வீட்டுக்கு மாப்பிள்ளைன்னா உனக்கு முதல்ல நான் வீட்டுக்காரன் சோ முதல்ல நான் உன்னை சுத்தி பார்க்கறேன்… உன் வீட்டை அப்புறம் சுத்தி பார்க்கறேன்…

 

 

“சீய் பேட் பாய்… என்ன தப்பு தப்பா பேசறீங்க… என்று அவள் கூற “ஹேய் லூசு நான் நீ நினைக்கிற அர்த்தத்தில எதுவும் சொல்லலை… உன்னையே நான் முழுசா தெரிஞ்சுக்கலையேங்கற அர்த்ததுல தான் அப்படி சொன்னேன்…

 

 

“நீ பாட்டுக்கு தப்பர்த்தம் பண்ணிக்காதே… நான் தப்பு தப்பா பேசறேனா… அன்னைக்கு அந்த தோப்பு வீட்டுக்கு போற வழியில ஒண்ணு நடந்திச்சே அதுக்கு நானா காரணம் என்று அவன் கூறவும் சட்டென்று அன்றைய நாள் நடந்தது நினைவுக்கு வர சஞ்சு அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள்.

 

 

நிரஞ்சன் அவளருகில் நெருங்கி வந்தவன் அவள் முதுகில் அவனுடைய ஈரமான உதடுகளை ஒற்ற அவள் உடலில் சூடு பரவ ஆரம்பித்தது. “சஞ்சு… என்று அவளை தன் புறம் திருப்பியவன் அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

 

 

“சொல்லு சஞ்சு… ஏன் எதுவுமே பேச மாட்டேங்குற?? என்னை பார்த்தா உனக்கு பேசணும்னு தோணலையா?? நேத்து ஏன் அப்படி செஞ்ச?? என்று அவள் தோள் வளைவில் முகம் பதித்தவாறே அவள் காதில் மெல்ல கிசுகிசுத்தான்.

 

 

“இல்லை… அது… அது வந்து… அஞ்சுவும் கார்த்திக் மாமாவும் பாவம் நிரு… அவங்க பேசிக்கவே முடிஞ்சது இல்லை… இந்த அஞ்சு அத்தை முன்னாடி மாமாகிட்ட பேசவே மாட்டா…

 

 

“ஆனா பேச முடியலைன்னு ரொம்ப வருத்தப்படுவா… மாமாவும் அப்படி தான், நேத்து நீங்க மாமாகிட்ட பேசிட்டு இருந்தது கேட்டேன்… அதான் அவங்க பேசட்டும்ன்னு அப்படி செஞ்சேன்… சாரி நிரு…

 

 

“பரவாயில்லை சஞ்சு… இப்படி தான் எதாச்சும் இருக்கும்ன்னு நினைச்சேன்… இப்போவாச்சும் பேசலாம்ன்னா ஏன் அப்படி முழிச்ச

 

 

“இப்படி எதுவும் நடக்கும்ன்னு தெரியும் அதுவும் ஒரு காரணம் தான் நேத்து உங்ககிட்ட பேசாம விலகி போனதுக்கு… என்று அவள் கூறவும் அவனுக்கு சங்கடமாகியது.

 

 

“உன்னை கஷ்டப்படுத்தி நான் எப்பவும் சந்தோசப்பட மாட்டேன், சஞ்சு என்றவன் அவள் நெற்றியில் இதழ் ஒற்றிவிட்டு அவளிடம் இருந்து தன்னை பிரித்துக் கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேற போனான்.

 

 

“நிரு… ப்ளீஸ் போகாதீங்க… என்றவள் வேகமாக வந்து அவனை இறுக்கிக் கொண்டாள். “இப்படி நீங்க நடந்துக்குவீங்கன்னு சொல்லலை. நான் உங்களை விட்டு விலக முடியாம இப்படி எதுவும் செஞ்சுடுவேன்னு தான் பயந்தேன்…

 

 

“எப்படி செஞ்சுடுவே… என்றான் மெல்லிய குரலில்.

 

 

சட்டென்று நிமிர்ந்தவள் அவன் முகம் முழுதும் முத்திரை பதித்து அவன் மார்பில் முகத்தை மறைத்து மூடிக்கொண்டாள்.

 

 

“சஞ்சு உன்னை பார்க்கலாம்ன்னு வந்தா இப்படி முகத்தை மூடிக்கிற, நான் கீழே போகணும். கொஞ்சம் நிமிர்ந்து என்னை பாருடி…

 

 

அவளோ முன்னிலும் இறுக்கமாக அவன் மார்பில் தன்னை புதைத்துக் கொள்ள அவனே அவளை தன்னில் இருந்து விலக்கி அவள் முகத்தை நிமிர்த்தினான்.

 

 

“இவ்வளோ ஆசை இருக்கா உனக்கு என் மேல… அப்புறம் ஏன் எப்போ பார்த்தாலும் என் கூட மல்லுக்கு நிக்குற

 

 

“உண்மையை சொல்லுங்க உங்க கூட நானா மல்லுக்கு நிக்குறேன்… நீங்க தானே என்கிட்ட எப்பவும் சண்டைக்கு வர்றீங்க என்று சிணுங்கினாள்.

 

 

“ஹ்ம்ம் உண்மை தான்… நான் தான் உன்கிட்ட சண்டைக்கு வர்றேன்… பாவம் நீ எல்லாமே சரியா பண்ணிட்ட, அதான் உன் கூட நான் சண்டை போட்டேன்… என்று பதிலுக்கு கொடுத்தான் அவன்.

 

 

அவளின் அன்பில் நெகிழ்ந்தவன் அவளை இறுக்கி ஒரு முறை அணைத்துவிட்டு “நிச்சயதார்த்தத்தில சந்திக்கலாம் என்றுவிட்டு கிளம்பினான்.

 

 

அடுத்த இரண்டு நாளில் அவர்கள் நிச்சயம் நடக்க அவர்கள் திருமணத்தை உறுதி படுத்தும் விதமாக இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ள சஞ்சுவின் கால்கள் தரையில் இல்லை.

 

 

கம்பீரமாய் நின்றிருந்தவனின் அருகில் நிற்பதே பெருமிதமாய் இருந்தது அவளுக்கு. அவன் அலுவலகத்தில் இருந்து வெகு முக்கியமானவர்களை மட்டுமே அழைத்திருக்க போலீஸ் கமிஷனர் மற்றும் அவனின் நெருங்கிய நண்பர்கள் வந்திருந்தனர்.

 

 

அவனுடன் இணைந்து நின்ற அந்த தருணம் மனம் கொள்ளா மகிழ்ச்சியில் அவள் திளைத்திருக்க நிரஞ்சனின் தங்கை கவிதா அவளருகில் நின்றுக் கொண்டு வந்தவர்களை சஞ்சுவுக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருந்தாள்.

 

 

சட்டென்று சஞ்சுவின் காதில் ஒரு குரல் கேட்டது, இந்த குடும்பமே அழியப் போகிறது என்று. சுற்று முற்றும் பார்த்தவள் ஏதோ பிரமையாய் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு மீண்டும் அவள் கவனத்தை விழாவில் திருப்பினாள்.

 

 

அதே குரல் மீண்டும் ஒலித்தது, ‘உனக்கு இவங்க சொந்தமாக மாட்டாங்க… இந்த குடும்பமே அழியப் போகுது… நீ போய்டு விட்டு விலகி போய்டு… என்ற ஆக்ரோஷமான குரல் அவளை கதிகலங்க செய்ய கவிதாவின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

 

 

கவிதாவின் தோளில் அவள் முகம் புதைக்க வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்த நிரஞ்சன் அப்போது தான் சஞ்சுவை பார்த்தான். அவள் தன்னிடம் போல் கவிதாவை அணைத்து நிற்பதை பார்த்தவன் என்னவாயிற்றோ என்று அவள் தோளை தட்டினான்.

 

 

“சஞ்சு… என்ற அவன் அழைப்பு அவள் உயிர் வரை தீண்ட கவிதாவிடம் இருந்து விலகியவள் பல பேர் நிறைந்த சபை என்றும் பாராமல் நிரஞ்சனின் மார்பில் சரண் புகுந்தாள்.

 

 

“ஹேய் என்னாச்சு சஞ்சு… என்று அவன் கேட்க அவளோ பதில் சொல்லாமல் கண்கள் பனித்தாள்.

 

 

அவளை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைய என்னவோ ஏதோவென்று எல்லோரும் கூடி விட கார்த்திக் தான் எல்லோரையும் அமைதியாக இருக்குமாறு கூறி சமாதானம் செய்து வெளியில் அழைத்து வந்தான்.

 

 

கண்களாலேயே கார்த்திக்கிற்கு நிரஞ்சன் நன்றியுரைத்தவன் “சஞ்சும்மா என்னடா ஆச்சு… என்று கேட்க “எனக்கு பயமாயிருக்கு நிரு, எதுவும் அசம்பாவிதம் நடந்திடுமோன்னு ரொம்ப பயமாயிருக்கு

 

 

“ப்ளீஸ் நிரு என்னை இப்போவே கல்யாணம் பண்ணிக்கோங்க… என்னை உங்களோடவே கூட்டிட்டு போய்டுங்க நிரு… உங்களை விட்டு என்னால இருக்க முடியாது… நான் உங்களோடவே இருந்தா தான் எனக்கு நிம்மதியே

 

 

“சொல்லுங்க நிரு இப்போவே கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுங்க நிரு… என்று அவன் மார்பில் சாய்ந்தவள் கண்ணீர் உகுக்க “ஏன் சஞ்சு இப்படி முட்டாள்தனமா நடந்துக்கற…

 

 

“எல்லாரும் என்ன நினைப்பாங்க சஞ்சு… நான் உன்னை தானே கல்யாணம் பண்ணிக்க போறேன்… இப்போவே கல்யாணம் பண்ணிக்க என்ன அவசரம் அதை சொல்லு முதல்ல…

 

 

“இப்போ யாரு வந்து எனக்கு என்ன ஆகிடும்ன்னு உன்கிட்ட சொன்னாங்க… ஏன் இப்படி அடிக்கடி நடந்துக்கற சஞ்சு… பாரு எல்லாரும் எப்படி பயந்து போய் இருக்காங்க… நமக்கு இன்னும் ஒரு மாசத்தில கல்யாணம் நடக்க போகுது…

 

 

“அதுக்குள்ள என்னடா ஆகிடும், நான் உன்னை விட்டு எப்பவும் போக மாட்டேன் சஞ்சு… என்னை நம்பு…

 

 

“இல்லை நிரு… நீங்க என்னை விட்டு போக மாட்டீங்க… எனக்கு தெரியும்… ஆனா அது உங்களை விடமாட்டேன்னு சொல்லுது… நம்ம குடும்பமே அழிஞ்சுடும்ன்னு சொல்லுது…

 

 

“யாருக்கும் எதுவும் ஆகக்கூடாது நிரு என்று அழுதவள் மயங்கி விழ அவளருகிலேயே இருந்து அவள் மயக்கம் தெளியவும் அவளை சமாதானப்படுத்தி அவர்கள் வீட்டில் விட்டுச் சென்றான் நிரஞ்சன்.

 

 

மறுநாள் நிரஞ்சன் ஊருக்கு கிளம்ப சஞ்சுவுக்கு போன் செய்து தகவல் சொன்னான். அவளோ தானும் வருவதாக கூறி அடம் பிடித்தாள். நிரஞ்சன் அவளை திட்டிவிட்டு போனை வைத்தான்.

 

 

அவளோ அவள் தந்தை முன் சென்று நின்றாள் “அப்பா… என்று அவள் அழைக்கவும் நிமிர்ந்தவர் “என்னடா சஞ்சு… என்றார் அன்பாக.

 

 

“நான் ஊருக்கு போகணும்ப்பா… எனக்கு அங்க வேலையிருக்கு இன்னைக்கே கிளம்புறேன்ப்பா.. என்றாள்.

 

 

“எதுக்குடா இனி உனக்கு அந்த வேலை… வேலையை விட்டுடு சஞ்சும்மா… இன்னும் ஒரு மாசத்தில உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நீ எதுக்கு வேலைக்கு எல்லாம் போயிட்டு வேணாம்டா…

 

 

“அப்பா நான் வேலைக்கு போயே ஆகணும்பா… ப்ளீஸ்ப்பா என்னை புரிஞ்சுக்கோங்கப்பா… என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

 

 

அவரோ மிஞ்சுவது போல் இருக்க இப்போது மிஞ்சுவது சஞ்சுவின் முறையானது.அவர் வாய் தவறி “மாப்பிள்ளைக்கும் நீ வேலைக்கு போவது பிடிக்கவில்லை என்று வார்த்தையை விட சஞ்சு ருத்திர தாண்டவமே ஆடினாள்.

 

 

அவள் வீட்டினரை கெஞ்சி கொஞ்சி சமாளிக்க அவர்களோ இனி நீயாவது நிரஞ்சனாவது என்று விட நிரஞ்சனுக்கு போன் செய்தாள். அவன் ஊருக்கு செல்ல அவன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவன் சஞ்சுவின் அழைப்பை கண்டு உடனே எடுத்தான்.

 

 

“சொல்லு சஞ்சு… என்று கூற “நான் கிளம்பி தயாரா இருக்கேன்… நீங்க ஊருக்கு போகும் போது என்னையும் கூட்டிட்டு போங்க என்றாள்.

 

 

“சஞ்சு மாமா தான் நீ வேலையை விட போறேன்னு சொன்னாங்களே… என்றதும் சஞ்சனாவிற்கு வந்ததே கோபம் “ஓ!! ஓஹ்!! அப்படி எங்க அப்பா உங்ககிட்ட சொன்னாங்க…

 

 

“ஏன் நிரு பொய் சொல்றீங்க… நான் வேலைக்கு போக வேண்டாம்ங்கறது உங்களோட விருப்பம்… இதை நீங்களே சொல்லாம என் அம்மா அப்பாவை சொல்ல வைச்சு இருக்கீங்க… என்று தாம்தூம் என குதித்தாள்.

 

 

அவனும் பலவிதமாக பேசி அவள் ஊருக்கு போக வேண்டாம் என்று தடுத்து பார்க்க அவளோ தான் பிடித்த பிடியே சரி என்று நிற்க அவனும் ஒத்துக் கொண்டான் வேறுவழியில்லாமல்.

 

 

கார்த்திக், சஞ்சு, சுந்தரியை அழைத்துக் கொண்டு அவன் ஊருக்கு செல்ல அவனுக்கு தலைக்கு மேல் வேலை இருந்தது. ஏற்கனவே நிரஞ்சன் சென்னையில் இருக்கும் போதே மாறன் அவனுக்கு போன் செய்து பலவேசத்தின் உடைமைகள் அவன் காரில் இருக்கும் விபரம் உரைத்திருந்தான்.

 

 

ஞாபகம் வந்தவனாக வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக பலவேசத்தின் உடைமைகள் அடங்கிய பையை காரில் இருந்து எடுத்து வந்து சோபாவில் வைத்தான். பின் குளித்து உடைமாற்றி வந்தவன் முன்னே அந்த பலவேசத்தின் பெட்டியும் பையும் தென்பட அவனே அதை ஆராய முற்பட்டான்.

 

 

முதலில் இருந்த பெட்டியில் அவர் துணிமணிகள், பாஸ்புக், கொஞ்சம் பணம், பத்திரங்கள் என்று இருந்தது. அடுத்த பையை திறக்க மேலோட்டமாக அவர் உடைகள் இருக்க உள்ளே சில புகைப்பட ஆல்பமும் ஒரு டைரியும் இருந்தது,

 

 

முதலில் அந்த ஆல்பத்தை மேலோட்டமாக பார்த்தவன் அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ந்தான். அதில் இறந்த மற்ற மூவருடன் இன்னும் ஒருவரும் உடன் அவன் தந்தையும் இருந்தார்.

 

 

அந்த புகைப்படம் அவர்களின் வாலிப பருவத்தில் எடுத்திருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றாக ஒரே மாதிரி சிகை அலங்காரத்துடனும் கீழ் நோக்கி சென்ற மீசையும் பெல்ஸ் பேண்ட்டும் போட்டுக் கொண்டு பஞ்சபாண்டவர்கள் போல் நின்று சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

 

நிரஞ்சனுக்கு கார்மேகத்தை தவிர மற்ற யாரையுமே தெரியாது. இதுவரை யாருமே ஒன்றாக சந்தித்தது கூட இல்லை.

 

 

ஏன் அப்படி இவ்வளவு நெருக்கமான சிநேகிதர்கள் என்றால் பார்க்காமல் கூட ஏன் இருந்தனர் என்று ஆராய்ச்சி செய்தது அவன் போலீஸ் மூளை.

 

 

அவன் கையில் இருந்த பலவேசத்தின் டைரியின் பக்கங்களை அவன் புரட்டவும் அவன் கைப்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது. கையில் இருந்தவற்றை அப்படியே எடுத்துக் கொண்டு கதவை பூட்டி வண்டியில் ஏறி அலுவலகம் சென்றான்.

 

 

ஒரு பக்கம் இவன் இப்படி ஆராய சஞ்சுவும் வேறு விதமாக உண்மையை கண்டறிய முயன்றாள். அதன் முதல் முயற்சியாக அவள் சுந்தரியின் முன் சென்று நின்றாள்.

 

 

“அத்தை… என்று அவள் அழைக்க “என்னம்மா சஞ்சு எப்போடா வேலைல இருந்து வந்தே… அடடே இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட போல… காபி சாப்பிடுறியாடா என்று சமையலறைக்கு செல்ல முயல “அதெல்லாம் எதுவும் வேண்டாம் அத்தை உங்ககிட்ட பேசணும் என்றாள்.

 

 

“எங்கிட்டயா?? என்னடா பேசணும் சொல்லு… என்றார் அவர் வாஞ்சையாக.சுந்தரிக்கு சஞ்சனா என்றால் எப்போதும் கொள்ளை பிரியம் அவருக்கு.

 

 

இரட்டை பிள்ளைகளாய் பிறந்த சஞ்சுவையும் அஞ்சுவையும் ஒன்றாக வைத்துக் கொண்டு ராணி தவித்திருக்க சுந்தரி சஞ்சுவை தான் பார்த்துக் கொள்வதாக கூறி தன்னுடன் சிவகங்கைக்கு கூட்டி வந்துவிட்டார்.

 

 

சஞ்சுவும் கார்த்திக்கும் உடன்பிறந்தவர்கள் போன்றே ஒன்றாக வளர்ந்தனர். சஞ்சுவும் ஐந்தாம் வகுப்பு வரை கார்த்திக்கின் பள்ளியிலேயே படித்தாள். அதன் பின்னே தான் ராணி அவளை சென்னைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்.

 

 

சஞ்சுவுக்கும் சுந்தரி என்றால் எப்போதும் பிரியமே. முதலில் நிரஞ்சனை சுந்தரி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கார்த்திக் ஒரு நாள் அவளிடம் சொல்லியிருக்க அப்போது சாதாரணமாக அந்த விஷயத்தை எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

 

ஆனால் சென்னையில் சுந்தரி நிரஞ்சனின் தந்தையை வேண்டா வெறுப்பாக பார்த்ததை சஞ்சு கண்டுவிட்டிருந்தாள். நிச்சயத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை அன்பாக வரவேற்றவர் நாகேந்திரனை மட்டும் வாவென்று கூட அழைக்கவில்லை என்பதை மனதில் குறித்து வைத்திருந்தாள்.

 

 

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று மனதிற்க்குள்ளேயே முடிச்சி போட்டிருந்தவள் அதை பற்றி கேட்கவே சுந்தரியிடம் பேச்சு கொடுத்தாள். “என்னடா பேசணும்னு சொல்லிட்டு பேசாம இருக்க சொல்லுடா என்றார் சுந்தரி.

 

 

“அத்தை நான் சுத்தி வளைக்கலை நேராவே கேட்கிறேன்… உங்களுக்கு முதல்ல ஏன் நிருவை பிடிக்காம இருந்துச்சு. அப்புறம் எப்படி பிடிச்சுது… எனக்காகவா அத்தை…

 

 

“அப்புறம் நிருவோட அப்பாவை நீங்க பார்த்த பார்வையில ஒரு வெறுப்பு இருந்துச்சே அது ஏன் அத்தை?? என்று அவர் முகத்துக்கு நேராகவே கேட்டுவிட்டாள்.

 

 

சற்றே திடுக்கிட்டவர் நாகேந்திரனை அவர் வெறுப்புடன் பார்த்திருந்ததை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்திருக்க சஞ்சு அதை பற்றி அவரிடம் கேட்பாள் என்று அவர் நினைத்திருக்கவில்லை.

 

 

“நிரஞ்சன் தம்பியை நான் முதல்ல தப்பா நினைச்சிட்டேன்டா… அவர் உன் மேல வைச்சிருக்கற அக்கறையை பார்த்ததும் நான் பண்ணது தப்புன்னு தோணிச்சு… அதான் நான் இப்போ புரிஞ்சுக்கிட்டேனேடா

 

 

“அதெல்லாம் இருக்கட்டும் அத்தை, அவரை நீங்க தப்பா நினைக்கற அளவுக்கு என்ன நடந்துச்சு அத்தை… அவர் தப்பானவர் இல்லைன்னு எனக்கு தெரியும், ஆனா அவரை உங்ககிட்ட தப்பா காமிச்சது எது அத்தை??? என்று அடுத்து ஒரு கேள்வியை ஆரம்பித்தாள்.

 

 

“அது… அதெல்லாம் இப்போ எதுக்கு சஞ்சும்மா… விடு… என்று உள்ளே செல்ல அவர் எழுந்திருக்க “அத்தை இப்போ நீங்க சொல்லப் போறீங்களா இல்லையா…

 

 

“ப்ளீஸ் அத்தை சொல்லுங்க… ஏற்கனவே அவர் உயிருக்கு ஆபத்து நீ விலகிடுன்னு அந்த பேய் என்னை மிரட்டுது… எனக்கு தெரியும் அவர் எந்த தப்பும் பண்ணலை, பண்ணவும் மாட்டார்… ஆனா தப்பு வேற எங்கயோ நடந்திருக்கு…

 

 

“அது எனக்கு தெரியணும் அத்தை… அவரை காப்பாத்தணும் ப்ளீஸ் அத்தை எனக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க அத்தை என்றாள் கண்ணில் நீருடன்…

 

 

“என்னடா சொல்ற, பேயா அது வந்து உன்கிட்ட பேசிச்சா… என்ன நடந்துச்சு சொல்லு… என்றார் சஞ்சுவிடம். அவருக்கு சஞ்சு ஏதோ பயந்து தான் அவள் உடல் நிலை சரியில்லை என்று தெரியுமேயொழிய நடந்த விபரம் எதுவும் அவருக்கு முழுதாக தெரியாது.

 

 

கார்த்திக் அவரிடம் மேலோட்டமாக மட்டுமே சொல்லியிருந்ததால் சஞ்சுவின் கண்ணீர் அவரை உலுக்கியது. சஞ்சு முதலில் இருந்து நடந்ததை ஒவ்வொன்றாக கூற சுந்தரியின் நெஞ்சில் யாரோ பாறாங்கல்லை வைத்தது போல் பாரம் ஏறி நெஞ்சின் மீது அமர்ந்தது.

 

 

“சொல்லுங்கத்தை… என்று அவள் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருந்தாள். மனதிற்குள்ளே வைத்திருந்ததை மருமகளிடம் கூற ஆரம்பித்தார் அவர். “நிரஞ்சன் தம்பியோட அப்பா நல்லவர் இல்லைடா…

 

 

“அவர் பெண்கள் விஷயத்தில ரொம்ப மோசமானவர்டா… அவர் இப்போ எப்படியோ எனக்கு தெரியாது… அவரோட வாலிப வயசுல அவரோட நண்பர்களோட கூட்டு சேர்ந்து பண்ணாத தப்பே இல்லை…

 

 

“என்னோட தோழி ஒருத்திகிட்டையும் ரொம்ப தப்பா நடந்துகிட்டாங்க, அதை வெளியில சொல்ல முடியாத அவ ஒரு நாள் தூக்கு போட்டு இறந்து போய்ட்டா…

 

 

“அவளுக்கு நடந்தது எனக்கு மட்டும் தெரியும், என்னாலயும் வெளிய யார்க்கிட்டயும் சொல்ல முடியலை… கொஞ்ச நாள் கழிச்சு அவங்க யாருமே இந்த ஊருக்கு வர்றதே இல்லை… முப்பது வருஷத்துக்கு மேல ஆகுது… யாரையுமே நான் இங்க பார்க்கலை

 

 

“நிரஞ்சன் தம்பி இந்த ஊருக்கு வந்த புதுசுல அவரோட சொந்த ஊரு இது தான்னு சொன்னப்ப, நம்ம சொந்தகாரங்களா இருப்பாங்களோன்னு தான் அவங்கப்பா பத்தி விசாரிச்சேன்… அவர் பேரை கேட்டதும் தான் எனக்கு அந்த தம்பி யாரோட பிள்ளைன்னு புரிஞ்சுது

 

 

“அதனால தான் அந்த தம்பியை நான் முதல்ல வெறுத்தேன்… ஆனா உன் மேல அவர் வைச்சிருந்த அன்பை நேர்ல பார்த்த பிறகு எனக்கு அவர் மேல கோபப்பட முடியலை… அவங்கப்பாவை காரணம் காட்டி உனக்கு அமைய இருக்கற நல்ல வாழ்க்கையை கெடுக்க எனக்கு மனசில்லை

 

 

“அதான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன்… ஆனா நீ சொல்றது எல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா… இந்த கல்யாணம் நடக்க வேண்டாம்ன்னு எனக்கும் இப்போ தோணுது…

 

 

“பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைங்களையும் சும்மா விடாதுன்னு சொல்லுவாங்க… அதுனால தான் அருண் இறந்து போயிட்டார்ன்னு எனக்கு தோணுது, நிரஞ்சன் தம்பிக்கு அப்படி எதுவும் ஆகிட்டா உன்னோட நிலைமைஎன்று பதறினார் அவர்.

 

 

“வேண்டாம்டா சஞ்சு… இந்த கல்யாணத்தை இப்போவே நிறுத்திடலாம்டா… உனக்கொரு கஷ்டம்ன்னா என்னால பார்த்திட்டு சும்மா இருக்க முடியாதுடா… என்றார் சுந்தரி வேதனையான குரலில்…

 

 

“அத்தை நீங்க கவலைப்படாதீங்க… அவருக்கு எதுவும் ஆகாதுன்னு எனக்கு தெரியும்… எனக்கு நீங்க ஒரு விஷயம் சொல்லணும்… என்று நிறுத்தினாள்.

 

 

“சொல்லுடா சஞ்சு என்றார்… “உங்க பிரிண்ட் இறந்து போயிட்டாங்கன்னு சொன்னீங்களே அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்றாள் சம்மந்தமில்லால்.

 

 

“ஏன் சஞ்சு அப்படி கேட்குற… அவளுக்கு கல்யாணம் ஆகலை…என்று அவர் கூற சஞ்சுவோ எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் “சரி அத்தை… என்று அவள் எழ சுந்தரிக்கு தான் பெரும் கவலை வந்தது.

சஞ்சுவுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. அவளுக்கு புரிந்தது ஒன்றே ஒன்று தான் அது நாகேந்திரன் நல்லவர் இல்லை என்பதே, அவருக்கும் இறந்து போன பலவேசதிற்கும் என்ன சம்மந்தமாக இருக்கும் என்று யோசித்தாள்.

 

 

அவள் கேள்விக்கு விடை அந்த தோட்ட வீட்டில் தான் இருக்கிறது என்று அவளுக்கு புரிந்தது. இனி எதற்கும் கலங்கக் கூடாது துணிவுடன் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டவள் சுந்தரியிடம் வெளியில் செல்வதாக சொல்லிவிட்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்றாள்.

 

 

சஞ்சு அவள் அத்தையிடம் பேசிக்கொண்டிருந்த அதே நேரம் நிரஞ்சன் கையில் பலவேசத்தின் டைரியின் பக்கங்களை புரட்டினான். அவனுக்கு அப்போது தான் தன் தந்தையின் மறுபக்கம் தெரிந்தது.

அத்தியாயம் –14

 

 

இளையான்குடியை ஒட்டியிருந்த அந்த கிராமத்தில் கடைசி தெருவில் இருந்த வீடு வாசல் தோரணம் கட்டி வாழை மரம் பூட்டி விழாக் கோலம் கண்டிருந்தது.

 

 

மணப்பெண் செண்பகத்தை உடனிருந்த பெண்கள் அழைத்து வர அப்போது தான் மாரி அவனின் வருங்கால மனைவியை நேரில் பார்த்தான். அவர்கள் பக்கத்தில் பெண்ணோ மாப்பிள்ளையோ திருமணத்திற்கு முன் நேரடியாக பார்க்கும் வழக்கமில்லை.

 

 

செண்பகத்தை பார்த்ததும் அடி நெஞ்சில் சில்லென்றிருந்தது. அவ்வளவு அழகாக இருந்தாள் அவள், அவளை பார்த்தவனால் கண்களை வேறு பக்கம் திருப்பக் கூட முடியவில்லை.

 

 

அவளுக்கு தான் இணையானவன் தானா என்ற எண்ணம் வந்ததும் குனிந்து தன்னை பார்த்துக் கொண்டான். ஒல்லியாக ஒடிந்து விழுந்து விடுவது போல் இருக்கும் அவனெங்கே அளவான தேகக்கட்டுடன் அழகான தங்கசிலை போல் இருக்கும் அவளெங்கே…

 

 

ஏணி வைத்தாலும் எட்டாதே என்று நினைத்தாலும் அவள் இன்னும் சில மணித்துளிகளில் தனக்கு சொந்தமாக போகிறாள் என்று நினைத்ததும் அவனுக்கு குதூகலமாக இருந்தது.

 

 

செண்பகம் அவனருகில் வந்து அமர வந்திருந்தவர்களின் ஆசியுடன் தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான். அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருக்க அவள் தன்னை பார்த்துவிட மாட்டாளா என்று அவ்வப்போது அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

அன்றைய இரவு நேரம் சரியாக அமையாததால் அவர்களின் சாந்தி முகூர்த்தம் தள்ளிவைக்க பட்டிருக்க செண்பகத்தை வேறு ஒரு அறையில் தங்க வைத்துவிட மாரி தவித்து போனான்.

 

 

மறுநாளே அவன் ஊருக்கு கிளம்ப வேண்டியிருந்ததால் விருந்தை முடித்துக் கொண்டு பெண்ணும் மாப்பிள்ளையுமாக அலவாகோட்டையை நோக்கி பயணமானார்கள்.

 

 

கிளம்பும் போது அன்றைய இரவு அவர்களுக்கு நல்ல நேரம் குறித்துக் கொடுத்திருக்க அதை செண்பகத்திடமும் மாரியிடமும் தனித்தனியே நினைவுபடுத்தி அனுப்பினர்.

 

 

அவளை விட்டுவர அவள் வீட்டு ஆட்கள் ஓரிருவர் அவர்களுடனே கிளம்ப மாரியோ தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிட எல்லோரும் அவர்களை வழியனுப்ப வந்தனர்.

 

 

செண்பகத்திற்கு தாயில்லை தந்தை மட்டுமே என்பதால் அவள் தாயை பற்றிய ஏக்கம் அந்த கணம் அவளுக்கு எழுந்தது. எல்லோரும் விடைகொடுக்க மாரியுடன் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.

 

 

மாரியின் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட அப்போதே அவன் பெரிய வீட்டில் வேலைக்கு சேர்ந்துவிட்டான். சிதம்பரமும் அவர் மனைவி நல்லம்மாளும் அவனை பெற்ற பிள்ளை போலவே பார்த்துக் கொண்டனர். நல்லம்மாளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போயிருக்க மாரியின் திருமணத்திற்கு சிதம்பரமும் அவரும் வரமுடியாமல் போனது.

 

 

அவர்களின் ஒரே மகன் நாகேந்திரனின் மேல் அவர்களுக்கு கொள்ளை பிரியம் அவனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணியவர்கள் அவனை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைத்தனர்.

 

 

நாகேந்திரனோ பெற்றவர்களை போல் குணம் கொண்டிராமல் கெட்ட வழக்கங்களை படித்திருந்தான். கைநிறைய பணம் விடுதி வாசம், அவனை போன்ற நண்பர்கள் என்று இருந்தவனுக்கு எல்லா கெட்ட பழக்கமும் வந்திருந்தது.

 

 

ஆனால் அப்பா அம்மாவின் முன் மிக்க நல்லபிள்ளையாகவே நடந்து கொள்வதால் அவனை பற்றி அவர்கள் அறியவில்லை… அவர்கள் ஒரு பேச்சு சொன்னால் மறுபேச்சு பேசாமல் அப்படியே நடப்பவன் போல் காட்டிக் கொள்வான்.

 

 

அவன் தேவைகளை அவன் அன்னையை காக்கா பிடித்து நடத்திக் கொள்வான். ஒரே பிள்ளை என்பதால் அவர்களும் பெரிதாய் எந்த எதிர்ப்பும் அவனுக்கு தெரிவிக்க மாட்டார்கள்.

 

 

மாரி செண்பகத்தை அழைத்துக் கொண்டு பெரிய வீட்டிற்கு வர நல்லம்மாள் தானே எழுந்து வந்து அவர்களுக்கு ஆரத்தி சுற்றி வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.

 

 

“இவங்க நல்லம்மா எனக்கு அம்மா மாதிரி… என்று மனைவியை பார்த்து சொன்னவன் “அய்யா எங்கம்மா… எங்க ரெண்டு பேரையும் ஆசிர்வாதம் பண்ணுங்க என்றான்.

 

 

அதற்குள் மாரியின் குரல் கேட்டு உள்ளிருந்து வந்த சிதம்பரமும் நல்லம்மாளும் இணைந்து நிற்க இருவரும் அவர்கள் காலில் விழுந்து வணங்கினர்.

 

 

நல்லம்மாள் சிதம்பரத்தை பார்க்க அவர் ஒரு சாவியை மனைவியிடம் கொடுத்தார். “இந்தாம்மா இது தோட்டவீட்டு சாவி என்று சொல்லி அவள் கையில் கொடுத்தார்.

 

 

செண்பகமோ திரும்பி மாரியை பார்க்க “என்னம்மா என்ன இதெல்லாம்… என்றான் அவன் நல்லம்மாவிடம்.

 

 

“மாரி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, நீ இன்னமும் இங்க இருக்க வேண்டாம்… ஊருக்கு வெளிய நம்ம தோட்ட வீடு இருக்கு இல்லையா… அங்க போய் நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க… அந்த வீடு கட்டுனதுல இருந்து சும்மா பூட்டி தானே கிடக்குது

 

 

“நீ போய் காவலுக்கு இருந்த மாதிரியும் ஆச்சு, அங்க தோட்டத்துக்கு வர்ற ஆளுங்களை கவனிச்சு தோட்டத்தையும் பார்த்த மாதிரி இருக்கும்… என்றவர் அவன் கையில் ஒரு பத்திரத்தை கொடுக்க என்ன அது என்பது போல் அவரை பார்த்தான்.

“இது நம்ம தோட்டத்துல மேற்கு பக்கமா இருக்க பூந்தோட்டத்தோட பத்திரம்… உங்களுக்கு எங்களோட கல்யாணபரிசு என்றார் அவர்.

 

 

“அம்மா என்னம்மா இதெல்லாம்… அய்யா நீங்களும் இதுக்கு கூட்டா… எனக்கு எதுக்குங்க இதெல்லாம்… எனக்கு இனாமா வாங்கறது பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதுங்களா என்றான் வருத்தமாக

 

 

“எல்லாம் தெரியும் மாரி… இது உன்னோட சம்பள பணத்துலயும் மேல உன் கல்யாணத்துக்கு நாங்க செய்ய நினைச்ச மொய் பணத்துலயும் வாங்கினது சரியா…

 

 

“இதுக்கு மேல நீ எந்த மறுப்பும் சொல்லாம பேசாம அங்க கிளம்புற வழியை பாரு… நேத்தே அங்க நம்ம பொன்னனை அனுப்பி மளிகை சாமான் எல்லாம் வாங்கி போட்டுட்டேன்…

 

 

“சமையலுக்கு காய்கறி எல்லாம் நம்ம தோட்டத்துல இருந்தே பறிச்சுக்கோங்க, இன்னைக்கு மதிய சாப்பாடு உங்களுக்கு இங்க தான் வாங்க வந்து சாப்பிட்டு பொறுமையா கிளம்புவீங்க… என்று நீளமாக பேசினார் நல்லம்மாள்.

 

 

“அம்மா நீங்க அதிகமா பேசிட்டீங்க… பாருங்க ரொம்ப மூச்சிரைக்குது, செண்பகம் நீ அம்மாகூட போய் ஒத்தாசை பண்ணு… அவங்களை எந்த வேலையும் செய்ய விடாதே என்றான் மனைவியை நோக்கி.

 

 

“சரிங்க என்றவள் நல்லம்மாளின் பின்னேயே சென்றாள். இருவருக்கும் தலைவாழையிலையில் விருந்து வைத்து இருவருக்குமாக துணிமணிகள் தட்டில் பூ பழம் வைத்து கொடுத்து நேரமாக கிளம்புமாறு கூறி அனுப்பினார் அவர்.

 

 

“மாரி போகும் போது உன் சைக்கிளையும் எடுத்துட்டு போ… உனக்கு அங்க தேவை படும்… என்று கூற அந்த வீட்டின் பின்னால் சென்றவன் அவன் சைக்கிள் மற்றும் அங்கிருந்த அவன் உடைமைகளை எடுத்துக் கொண்டு வந்தான்.

 

 

கையில் இருந்த பைகளை ஒன்றாக சேர்த்து சைக்கிளின் பின்புறம் வைத்து கட்டிவிட்டு மனைவியை பார்த்து “போகலாமா என்றதும் அவள் இம்மென்று தலையசைக்க சைக்கிளை தள்ளிக் கொண்டு போனான்.

 

 

“எதுவும் பேச மாட்டியா?? நான் கேட்கறதுக்கு மட்டும் தான் பதில் சொல்ற… உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லையா?? என்று மெதுவாக ஆரம்பித்தான் அவன்.

 

 

“அப்படி எல்லாம் எதுவுமில்லைங்க… என்றவளிடம் “அப்போ உனக்கு என்னை பிடிக்கலையா???நீ ரொம்ப அழகா இருக்கே… உனக்கு என்னை மாதிரி ஒருத்தனை பார்த்ததும் பிடிக்கலையா???

 

 

“எதுக்கு இப்படி எல்லாம் பேசறீங்க… எங்கம்மா போன பிறகு எங்கப்பா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை தனியே விட்டுட்டு போய்ட்டாங்க… எங்க பெரியம்மா தான் என்னை வளர்த்திச்சு

 

 

“அவங்க எனக்கு கெடுதல் செய்வாங்களா என்ன??? உங்களை அவங்க எனக்கு கட்டி வைச்சு இருக்காங்கன்னா நீங்க எவ்வளவு நல்லவரா இருக்கணும்… உங்களை பத்தி பெரியம்மா நெறைய சொல்லி இருக்காங்க

 

 

“நிஜமாவா… என்னை பார்க்கணும்ன்னு உனக்கு தோணினது இல்லையா???

 

 

“உங்களை பார்க்கலைன்னு யார் சொன்னது, நான் உங்களை பார்த்துருக்கேன்… நம்ம ஊர் கோவில் திருவிழா விசேஷம் எது வந்தாலும் நீங்க வந்திடுவீங்களே…

 

 

“அதுல நடக்குற போட்டில எல்லாம் கலந்துக்கிட்டு நீங்க ஜெயிக்கிறதை எல்லாம் பார்த்திருக்கேன்

 

 

“நான் தான் மாப்பிள்ளைன்னு உனக்கு தெரியுமா??

 

 

“அப்போ தெரியாது??? என்று கூற “ஹ்ம்ம்… என்றவன் அப்போது தான் நினைவு வந்தவனாக “வா… வா… வந்து வண்டியில ஏறு என்றான்.

 

 

‘வண்டியில ஏறணுமா?? எப்படி ஏறுறது?? அதான் பின்னாடி பூரா மூட்டை கட்டி வைச்சு இருக்காரே… என்று திருதிருவென்று அவனை பார்த்து முழித்து வைத்தாள்.

 

 

“என்ன இப்படி முழிக்கிற, இன்னும் பத்து கிலோமீட்டர்க்கு மேல போகணும்… நடந்தே போக முடியாது வா… வந்து முன்னாடி ஏறிக்கோ...” என்றவன் சைக்கிளில் ஏறி அமர்ந்துக் கொண்டு அவள் ஏறுவதற்கு வசதியாக ஒரு கையால் பிடித்துக் கொண்டு நின்றான்.

 

 

“நாம நடந்தே போகலாமே… என்று தயங்கினாள். “சொன்னா கேளு செண்பகம் காலு வலிக்கும்… இவ்வளவு தூரம் உன்னை நடத்தி கூட்டிட்டி வந்ததுக்கு காரணம்… அங்க ஊருக்குள்ள வைச்சு உன்னை முன்னாடி ஏத்தி கூட்டிட்டு போனா ஊர்க்கார பயலுக எல்லாம் ஒரு மாதிரியா பார்ப்பானுங்க

 

 

“அதான் ஊருக்கு வெளிய வந்ததும் ஏறச் சொன்னேன்… வா போகலாம் என்று கூற அதற்கு மேல் தாமதிக்காமல் தயங்கி தயங்கி ஏறி அமர்ந்தாள். அவனின் அருகாமை அவளுக்குள் குறுகுறுவென்றிருந்தது.

 

 

“நான் ரொம்ப வெயிட் நீங்க எப்படி ஓட்டுவீங்க, கஷ்டமா இருக்காதா

 

 

“ஆளு இப்படி குச்சியா இருக்கேனே என்னால முடியுமான்னு பார்க்கறியா… நான் எல்லாம் ரெண்டு மூடை அரிசியையே அசால்ட்டா தூக்கிட்டு போவேன்… உன்னை வைச்சு ஓட்டிட்டு போக மாட்டேனா…

 

 

ஒரு வழியாக அவர்கள் அந்த வீட்டை வந்தடைந்தனர். வரும் போதே பால் வாங்கி வந்திருந்ததால் பாலை காய்ச்சி அவர்கள் குடித்தனத்தை தொடங்கினர் அவர்கள்.

 

 

மாரி அவளை சைக்கிளில் கூட்டிக் கொண்டு தோட்டத்தை சுற்றி காண்பித்தான். மேற்கு மூலையில் இருந்த அந்த பூந்தோட்டம் அவளுக்கு மிகவும் பிடித்தது.

விதவிதமான மலர்களை தாங்கி அழகுற இருந்தது அந்த தோட்டம். தோட்டத்தை சுற்றி கருவேலமுட்கள் வேலியாய் இருக்க மூங்கில் தட்டி இருந்தது.

 

 

திரும்பி செல்லும் முன் இரவு உணவிற்கு காய்கறிகளை பறித்து சென்றனர். இரவு உணவை முடித்து செண்பகம் பாத்திரங்களை அலம்பி வைத்துவிட்டு வெளியில் வர மாரியோ முன்வாசலில் இருந்த வேப்பமரத்தின் அடியில் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தான்.அருகில் வந்து பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.

 

 

செண்பகத்திற்கு அவனை எழுப்புவதா வேண்டாமா என்ற யோசனை வர ஒன்றும் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாள்.ஊரில் இருந்து கிளம்பு போதே அவளின் பெரியம்மாவும், அடுத்த வீட்டில் இருந்த பாட்டியும் மாற்றி மாற்றி அவளிடம் அன்று நல்ல நாள் என்பதை அவளுக்கு நினைவுப்படுத்தி அனுப்பியிருந்தனர்.

 

 

“ஆம்பிளைக அப்படி இப்படி தான் இருப்பாங்க… நீ பாட்டுக்கு பேசாம இருக்காதே, அவங்க எங்கயும் வேலைன்னு கிளம்பி போய்ட போறாங்க… நீயாச்சும் அவங்களுக்கு ஞாபகப்படுத்து என்ற பெரியம்மாவின் குரல் காதில் கேட்டது.

 

 

அவளுக்கு தான் அவனை எழுப்ப கூச்சமாகவும் வெட்கமாகவும் இருந்தது. அவனை எழுப்பினால் தப்பாக எடுத்துக் கொள்வானோ என்று வேறு தோன்ற கட்டிலின் அருகில் வந்து மெதுவாக அமர்ந்தாள்.

 

 

சட்டென்று ஒன்று தோன்ற அவனுக்கு கால் பிடித்துவிட ஆரம்பித்தாள். அவளின் தொடுகை அவனுக்கு விழிப்பை கொடுக்க எழுந்து அமர்ந்தான். “நீங்க அசந்து தூங்குறீங்க, அதான் கால் பிடிச்சு விட்டேன்… நீங்க தூங்குங்க…

 

 

“மேலே ஏறி உட்காரு… என்று அவளுக்கு கைக்கொடுத்து அவனருகில் அமர வைத்தான். அவனருகில் அமர்ந்தவள் தலையை நிமிர்த்தாமல் நிலத்தையே பார்க்க “என்ன செண்பகம் என்கிட்ட ஏதோ சொல்ல நினைக்குற, ஆனா சொல்ல மாட்டேங்குற

 

 

“என்ன விஷயம் எதுவானாலும் சொல்லு… இனிமே உனக்கு நான் எனக்கு நீ… நம்மோட இன்பம் துன்பம் எல்லாம் நாம பகிர்ந்துகிட்டு தான் ஆகணும் சொல்லு

 

 

“இல்… இல்லை… அ… அது வ… வந்து… என்று இழுக்க “ஹ்ம்ம் என்று அவன் ஊக்க “இன்னைக்கு… இன்னைக்கு நாள் நல்ல நாள்ன்னு பெரியம்மா சொ… சொன்னாங்க என்று திக்கி திக்கி சொல்லி முடித்தவளுக்கு வெட்கமாக போய்விட அவனை பார்க்க முடியாமல் தலையை கவிழ்ந்தாள்.

 

 

“ஓ… ஆமாமில்லை… நான் தான் அசதியில தூங்கிட்டேன் செண்பகம்… சரி வா உள்ள போவோம்… என்றவன் கட்டிலை மடித்து சுவர் ஓரமாக சாய்த்து வைத்துவிட்டு செண்பகத்தை அணைத்தவாறே உள்ளே சென்றான்.

 

 

அவர்கள் இல்லறம் இனிமையாய் ஆரம்பித்திருக்க நாட்கள் அழகாக நகர்ந்தது அவர்களுக்கு. தினமும் காலையில் மாரி நேரமாக தோட்டத்திற்கு கிளம்பிவிட வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு செண்பகமும் பின்னர் அவனோடு சேர்ந்து கொள்வாள்.

 

 

வேலையாட்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதும், கணக்கு வழக்குகளை கவனிப்பதும் அதை நல்லம்மாவிடம் வாரந்தோறும் சென்று சேர்ப்பதும் என்று அவர்கள் பொழுது சென்றது.

 

 

இந்நிலையில் செண்பகம் கருவுற்றாள், அதை உறுதி செய்துக் கொள்ள அவர்கள் ஊருக்குள் சென்று மருத்துவரிடம் காண்பித்து உறுதி படுத்திக் கொள்ள யாருமற்று தனியாக இருந்த அவர்களுக்கு அவர்களையே உறவாக கொண்டு பிறக்க போகும் குழந்தை மீது மிகுந்த பற்று வந்தது.

 

 

மாரியோ செண்பகத்திற்கு கூடமாட உதவிகள் செய்வதும் அவள் தேவைகளை நிறைவேற்றுவதும் என்று நல்லதொரு கணவனாக எப்போதும் துணை நின்றான்.

 

 

அவளுக்கு பிடிக்குமென்று தினமும் இரவு தோட்டத்திற்கு சென்று இருவாட்சியை பறித்து வந்து அவன் கைகளாலேயே அவளுக்கு சூடுவது அவனுக்கு மிகப்பிடித்த ஒன்று…

 

 

அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வை அஸ்தமிக்க வைக்கவென வந்து சேர்ந்தான் சிதம்பரம் நல்லம்மாளின் சீமந்த புத்திரன் நாகேந்திரன். காலையில் பொன்னனை அனுப்பி மாரியை கையோடு அழைத்து வரச் சொன்னார் நல்லம்மாள்.

 

 

மாரியும் செண்பகத்திடம் சொல்லிவிட்டு நல்லம்மாவை பார்க்க சென்றான். “மாரி நாகு ஊர்ல இருந்து வந்திருக்கான்… உனக்கு தான் தெரியுமே தம்பி இங்க வந்த தோட்டத்து வீட்டுல ஒரு வாரம் தங்கும்ன்னு… அதான் எப்படி சொல்றதுன்னு தெரியலை…

 

 

“என்னம்மா இதுக்கு எதுக்கு சங்கடப்பட்டுக்கிட்டு அய்யா அங்க வந்து தங்கிக்கட்டும்… நாங்க அதுவரைக்கும் இங்க வந்து இருந்துக்கறோம்…

 

 

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா… நீங்க அங்க கிழே அறையில இருந்துக்கோங்க… தம்பி எப்பவும் மாடியில தானே தங்கும் அதுனால ஒண்ணும் பிரச்சனையில்லை… உங்களுக்கு ஒண்ணும் தொந்திரவில்லையே…

 

 

“ஐயோ என்னம்மா நீங்க எங்களுக்கு என்ன தொந்திரவு வந்திட போகுது… நாங்க இருக்கறது சின்னய்யாவுக்கு எதுவும் சங்கடமா இருக்கக்கூடாது… நீங்க சின்னைய்யாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுங்க…

 

 

“அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்லை நான் நாகுகிட்ட பேசிட்டேன்… அப்புறம் இன்னொரு உதவிப்பா, தம்பி அங்க இருக்க வரைக்கும் அதுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடணும்…

 

 

“பாவம் செண்பகம் மாசமா இருக்கு, எனக்கு கேட்கவே கஷ்டமா இருக்கு… என்னாலையும் முன்ன மாதிரி செய்ய முடியலை…

 

 

“அம்மா நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் அய்யாவை வீட்டில தான் சாப்பிட சொல்லியிருப்பேன்… நீங்க சங்கடப்பட வேணாம், நாங்க பார்த்துக்கறோம்… அய்யா எப்போ வர்றாங்க

 

 

“நாளைக்கு வந்திடுவான், அவனோட சில சிநேகித பசங்க வருவாங்க… எல்லாம் நம்ம அக்கபக்க ஊர்க்கார பசங்க தான் பார்த்துக்கோ மாரி… இந்தா இந்த காசை வைச்சுக்கோ… எதுவும் வேணும்னா சொல்லி அனுப்பு… நான் பொன்னனை தினமும் காலையில அங்க வரச் சொல்றேன்

 

 

“என்ன வேணும்னு சொல்லி அனுப்பினா நான் வாங்கி கொடுத்துவிடறேன் என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார். மகனின் குணம் முழுதும் அறிந்திருந்தால் அவர் அப்படி செய்திருக்க மாட்டார்.

 

 

நாகேந்திரன் அவன் நண்பர்கள், கார்மேகம், மயில்வாகனன், மேகநாதன் மற்றும் பலவேசத்தை கூட்டிக் கொண்டு மறுநாள் காலை நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான்.

 

 

செண்பகம் தோட்டத்திற்கு சென்றிருக்க மாரியே அவர்களை வரவேற்று உபசரித்தான். அவர்களை உடைமைகளை எடுத்து சென்று மாடியில் இருந்த அறையில் வைத்தவன் அவர்களுக்கு வேண்டியது கேட்டு செய்தான்.

 

 

மதிய நேரத்திற்கு மேல் வீட்டிற்கு வந்த செண்பகம் சாப்பிட்டு உறங்கிப் போனாள். மாலை நேரம் பூப்பறிக்க அவள் தோட்டத்திற்கு கிளம்பி வெளியில் வர மாடி சன்னலின் வழியே நான்கு கண்கள் அவளை இமைக்காது நோட்டமிட்டது. அந்த கண்களுக்கு சொந்தக்காரன் நாகேந்திரனும், மேகநாதனும்.

 

 

“டேய் நாதா யாருடா இந்த பொண்ணு இவ்வளவு அழகா இருக்கு… ஒரு வேளை இவ தான் மாரியோட பொண்டாட்டியா… என்றவன் அவள் நடந்து செல்லும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

 

 

“ஆமாடா நாகு அப்படி தான் இருக்கும் நினைக்கிறேன்… விளக்குமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டினாப் போல அவனுக்கு போய் இப்படி ஒரு அழகான பொண்டாட்டியா… அவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கும் போல

 

 

நாகேந்திரனுக்கோ எண்ணம் வேறு எங்கோ செல்ல அவன் பார்வை சொன்ன சேதியை மேகநாதன் கவனித்துவிட “டேய் நாகு நீ என்ன நினைக்கிறன்னு புரியுதுடா… ஆனா இதெல்லாம் நடக்குமாடா…

 

 

“டேய் அவளை பார்த்துல இருந்து எனக்கு என்னென்னமோ பண்ணுதுடா… அவளை நெருக்கத்துல பார்க்கணும்ன்னு தோணுது… எதாச்சும் பண்ணனும்டா… எனக்கு அவ வேணும் என்றான்.

 

 

“என்னடா நடக்குது இங்க யாரு வேணுமாம் இவருக்கு என்றவாறே பலவேசம் அவர்களருகே வந்தான்.

 

 

“அதோ போறாளோ அவ வேணுமாம்… என்றான் மேகநாதன்.

 

 

“டேய் யார்றா அந்த பொண்ணு?? என்று ஆரம்பிக்க மேகநாதன் விளக்கி முடித்தான். “ஏன்டா இது சரியா வருமாடா?? உங்க வீட்டுக்கு வேலை செய்ய வந்தவங்கடா… உங்க அம்மா அப்பாக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடப் போகுது

 

 

“அதெல்லாம் வராத அளவுக்கு ஒரு திட்டம் போடணும்… யோசிக்கிறேன் என்று எழுந்தான் நாகேந்திரன்.“டேய் உங்க வீட்டுக்கு தண்ணி எடுக்க வந்த அந்த மல்லிகா கதை மாதிரி ஆகிட போகுதுடா… என்றான் மயில்.

 

 

“டேய் அவ ஒரு லூசுடா… நான் தான் ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறேன்னு சொன்னேனே அப்புறம் எதுக்கு தூக்குல தொங்கணும். இதுல என் தப்பு என்ன இருக்கு சொல்லு… என்று அவன் செய்த தப்பை நியாயப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

 

அன்று இரவு உணவை தயார் செய்து மாரியே கொண்டு சென்று எல்லோருக்கும் பரிமாறிவிட்டு வர நாகேந்திரன் அவனை அவன் வீட்டிற்கு சென்று சில புத்தகங்களை எடுத்து வரச்சொல்லி அனுப்ப மாரி தயங்கிக் கொண்டே அவன் மனைவியை பத்திரமாக உள்ளே இருக்கச் சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.

 

 

மாரி கிளம்பி சென்றதை பார்த்துவிட்டு சில நிமிடங்கள் கடந்து மயில்வாகனனும் கார்மேகமும் இறங்கி கீழே வந்தனர்… ஏற்கனவே மற்ற மூவரும் அவளை பற்றி சொல்லியிருக்க அவளை பார்க்கும் ஆவல் கொண்டு வந்தனர்…

 

 

வெளியே ஏதோ உருட்டும் சத்தம் கேட்க கதவை திறந்து எட்டி பார்த்தாள் செண்பகம். “என்ன என்ன வேணும்… என்றாள் அவர்களை பார்த்து…

 

 

“இல்லை மேல தண்ணி தீர்ந்து போச்சு… அதான் எடுக்கலாம்ன்னு… என்று இழுத்தான் மயில்.

 

 

“இருங்க நான் எடுத்து தரேன்… என்றவள் உள்ளே சென்று தண்ணீரை கொண்டு வந்து அவர்கள் கையில் கொடுத்தாள்.

 

 

அவளுக்கு நன்றி கூறி படியேற கார்மேகம் சற்று தாமதித்து “ஏங்க உங்க பேரு என்னங்க???

 

 

“செண்பகங்க… என்றாள்

 

 

“ஏங்க செண்பகம் ஒரு உதவிங்க, நான் சரியா சாப்பிடலைங்க… எனக்கு கொஞ்சம் பால் கொண்டு வந்து தரமுடியுங்களா… நானே வந்து கொஞ்ச நேரம் கழிச்சு வாங்கிக்கறேன்… என்றான் கார்மேகம்.

 

 

“டேய் கார்மேகம் அதென்ன உனக்கு மட்டும் கேட்குற, ஏங்க எங்க எல்லாருக்குமே வேணுங்க… என்றான் அதிகாரமாக.

 

 

“நீங்க போங்க நானே கொண்டு வந்து தரேன்…

 

 

“உங்களுக்கு சிரமம் நானே வந்து எடுத்துக்கறேன் என்றான் கார்மேகம்.

 

 

“அதான் அவங்களே எடுத்துட்டு வர்றேன் சொல்றாங்களே… நீ வா போகலாம் என்று அவனை இழுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.

 

 

மாடிக்கு சென்றதும் “டேய் நாகு நீ சொல்லும் போது கூட நான் நம்பலைடா… பொண்ணு சும்மா தேவதை மாதிரி இருக்காடா… இவளை அடைஞ்சே தீரணும்டா… என்றான் மயில்.

 

 

“நம்ம திட்டப்படி இப்போ அவ மேல வருவா… அப்புறம் என்ன பண்ணுறதுன்னு யோசிக்கணும் என்று சொல்ல மற்றவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர்.

 

 

“டேய் நாம லேசா ஒரு விளையாட்டு விளையாடி பார்ப்போம்… எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அவ புருஷன் வந்திடுவான்… அதுனால இன்னைக்கு நாம எதுவுமே செய்ய முடியாது…

 

 

“எதுவா இருந்தாலும் நாளைக்கு தான், அதுக்குள்ளே ஏதாச்சும் திட்டம் போடுவோம்… என்று பலவேசம் ஐடியா கொடுக்க மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

 

 

செண்பகம் பாலை காய்ச்சி எடுத்துக் கொண்டு மேலே வர நாகேந்திரன் அவள் முன்னால் வந்தான். பால் தட்டை அவள் கையை தடவியவாறே வாங்கியவனின் பார்வை அவள் மேனி முழுதும் படர நன்றி என்றான்.

 

 

அவன் பார்வை போகும் திக்கு அவளுக்கு புரிய, வேண்டுமென்றே அவன் கைகளை தொட்டதும் அவளுக்கு உள்ளே ஒரு குளிரை பரப்பியது.

 

 

மற்ற நால்வரின் பார்வையும் கூட அவள் மேலேயே இருப்பதை உணர்ந்தவளின் முகம் வெறுப்பை வெளிப்படையாக காட்டிவிட்டே சென்றது.

 

 

வேகமாக கீழே இறங்கி வந்தவள் அவர்கள் அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொள்ள எப்போதடா கணவன் வருவான்… என்று இவர்கள் இங்கிருந்து கிளம்புவார்கள் என்று வேண்ட ஆரம்பித்தாள்.

 

 

சற்று நேரத்தில் மாரி வந்துவிட அவளுக்கு அப்போது தான் நிம்மதியே வந்தது. நாகேந்திரனும் அவன் நண்பர்களும் மறுநாளே அங்கிருந்து கிளம்பிவிட செண்பகத்திற்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

 

 

ஒரு வாரம் சென்றிருக்கும் அன்று ஊருக்குள் திருவிழா என்பதால் தோட்டத்திற்கு யாரும் வேலைக்கு வரவில்லை… மாரியை அழைத்து வர நல்லம்மாள் பொன்னனை அனுப்பியிருக்க மாரியோ மனமில்லாமல் இருந்தான்.

 

 

“செண்பகம் எனக்கு உன்னை தனியா விட்டு போக மனசில்லை… நீ பிள்ளைத்தாய்ச்சி பொம்பளை அதான் உன்னை என்னோட சைக்கிள்ள அவ்வளோ தூரம் கூட்டிட்டு போக யோசனையா இருக்கு…

 

 

“என்னங்க நீங்க… நான் இங்க தனியா இருந்ததில்லையா… நீங்க போயிட்டு வாங்க… நான் பார்த்துக்கறேன் என்று சமாதானப்படுத்தினாள் அவள்.

 

 

“செண்பகம் நீ பார்த்து இருந்துக்க நான் மதிய சாப்பாட்டுக்கே எப்படியும் வீட்டுக்கு வரப்பாக்குறேன் என்றுவிட்டு திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றான்.

 

 

அவன் அப்புறம் சென்றதும் செண்பகத்திற்கு ஒரு யோசனை தோன்ற அவள் துணிகளை எடுத்துக் கொண்டு கதவை பூட்டிவிட்டு வெளியில் நடந்தாள். செண்பகத்திற்கு பம்புசெட்டில் குளிப்பதென்றால் கொள்ளை பிரியம்.

 

 

பக்கத்து வயலுக்கு சொந்தக்காரர்கள் இவர்களையே அவர்கள் வயலையும் பார்த்து கொள்ள சொல்லியிருக்க அந்த மோட்டார் அறையின் சாவியை கையில் எடுத்துக் கொண்டு அவள் அங்கு சென்றாள்.

 

 

மோட்டாரை போட்டுவிட்டு பம்புசெட்டிற்கு வந்தவள் சுற்று முற்றும் பார்த்துவிட்டு உடைகளை களைந்தாள். இடுப்பு பாவாடையை ஏற்றி மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டவள் குளிக்க ஆரம்பித்தாள்.

 

 

மாரி கிளம்பிச் சென்றதை பார்த்துவிட்டு நாகேந்திரனும் அவன் நண்பர்களும் அங்கு வர வீடு பூட்டி இருப்பதை பார்த்தனர். எங்க போயிருப்பா என்று யோசித்துக் கொண்டே தோட்டத்திற்குள் நுழைந்தனர்.

 

 

ஆளுக்கு ஒரு பக்கமாக சென்று அவளை தேட நீர் விழும் சத்தம் கேட்டு நாகேந்திரன் அங்கு செல்ல செண்பகம் குளித்துக் கொண்டிருப்பதை பார்த்தான்.

 

 

அங்கிருந்த செடியின் மறைவில் நின்றுக் கொண்டிருந்தவன் அவளை முழுதுமாக ரசிக்க தொடங்கினான்.

 

 

சோப்பு போட்டு குளித்து முடித்தவள் மஞ்சளை கரைத்து உடலில் தேய்த்து பூச நாகேந்திரனுக்கோ உடல் சூடேற ஆரம்பித்தது.

 

 

அதற்கு மேல் தாமதிக்க அவன் விரும்பாதவனாக நண்பர்களுக்கு சைகை செய்து அழைத்தான். செண்பகத்திற்கு உள்ளுணர்வு தோன்ற சுற்று முற்றும் பார்த்தாள்.

 

 

செடி மறைவில் இருந்து நாகேந்திரன் வருவதை பார்த்ததும் சட்டென்று எழுந்தவள் கைகளை மார்புக்கு குறுக்காக வைத்துக் கொண்டு தூரத்தே வைத்திருந்த அவள் உடையை எடுக்க வேகமாக சென்றாள்.

 

 

அதற்குள் வேக நடை போட்டு அவளருகே வந்த நாகேந்திரன் எட்டி அவள் கையை பிடிக்க அவள் விடு விடு என்று அவனை கெஞ்ச ஆரம்பித்தாள். அவளின் எதிர்ப்பை மீறி அவன் அவளை அணைக்க அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

 

 

நகத்தினால் அவனை கீறிவிட்டாள் கோபமடைந்தவன் நண்பர்களை அழைத்து அவளை பிடித்துக் கொள்ளுமாறு கூற ஓவென்று கதறினாள் அவள். தன் தேவை தீர்ந்த பின்னே அவளை விட்டு விலகினான் நாகேந்திரன்.

 

 

ஒவ்வொருவராக அவளை அனுபவிக்க கடைசியாக இருந்த பலவேசதிற்கு ஏனோ உடல் நடுங்கியது. அவளை அனுபவிக்க ஆசையிருந்தாலும் தயக்கம் உண்டாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் முட்டி மோதிக் கொண்டு வர அவளருகே சென்றான்.

 

 

அவளோ மயங்கிய நிலையில் இருக்க அவள் உடலில் இருந்து உதிரம் வெளியேறிக் கொண்டிருந்தது. அவள் வயிற்றில் உருவான அந்த முதல் கரு உலகத்தை பார்க்காமலே அழிந்து அவள் உதிரத்தோடு கலந்து வந்தது.

 

 

அருகே சென்ற பலவேசம் அதை கண்டதும் நடுங்கிப் போக “டேய் நாகு இங்க பாரு இவளுக்கு ரத்தமா வருது… என்று அவன் அலற அருகே சென்ற மற்றவர்கள் அதை பார்த்து முகம் சுளித்தனர்.

 

 

அவளை தட்டி எழுப்ப அவள் முழுதும் உணர்வற்ற நிலையில் இருந்தாள்… “டேய் இவ தாங்க மாட்டா போல, இவளை இங்கயே மண்ணு தோண்டி புதைச்சுடுவோம்டா என்றான் கார்மேகம்.

 

 

“ஆமாடா எனக்கு மயில் சொல்றது தான் சரின்னு தோணுது என்றான் மயில்.

 

 

“டேய் இவளை காணோம்ன்னா பிரச்சனை வராதாடா… அங்க பிடிச்சு இங்க பிடிச்சு நம்மளை பிடிச்சுட்டா என்னடா பண்ணுறது என்றான் பலவேசம் பீதியுடன்.

 

அங்கு யோசனையுடன் நின்றிருந்த நாகுவோ “டேய் இவ யார் கூடவோ ஓடி போய்ட்ட மாதிரி சொல்லிடுவோம்டா… அது மாதிரி செட்டப் பண்ணிட்டு நாம இங்கிருந்து கிளம்புவோம்…

 

 

“சீக்கிரம்… சீக்கிரம் குழியை தோண்டுவோம்… என்று அங்கு தோட்டத்தை பண்படுத்த வைத்திருந்த மண்வெட்டி, கடப்பாறையை ஆளுக்கு ஒன்றாக கையில் எடுத்துக் கொண்டு குழியை வெட்ட துவங்கினர்.

 

 

“டேய் பலவேசம் அந்த பக்கமா போ அங்க ஒரு பூந்தோட்டம் இருக்கும், அங்க வேலிக்கு கருவேலம் முள்ளு போட்டிருப்பாங்க அதை எடுத்துட்டு வா என்று அவனுக்கு உத்தரவிட்டான் மேகநாதன்.

 

 

“அவனை எதுக்குடா அதை எடுத்துட்டு வர சொல்றே என்ற நாகேந்திரனுக்கு “எல்லாம் காரணமா தான்… என்று அமைதியாய் இருக்க சொன்னான்.

 

 

மற்ற இருவர் குழியை வெட்டி முடித்திருக்க “டேய் அவளை தூக்கிட்டு வந்து போடுங்கடா… என்றான் மயில்.

 

 

“என்னது தூக்கிட்டு வர்றதா… அய்யே இதெல்லாம் ஒட்டிக்கும்… என்று அசூசையாக முகம் வைத்துக் கொண்டு மேகநாதனும் நாகுவும் சொல்ல “அப்போ என்ன பண்ணுறது என்றான் பலவேசம்.

 

 

“டேய் அந்த கடப்பாறையை எடுத்திட்டு வா… என்ற நாகு அதை கையில் வாங்கி அவளுக்கு உடம்புக்கு அடியில் வைத்து நெம்பி கொஞ்சம் கொஞ்சமாக அவளை உருட்டி குழிக்குள் தள்ளவும் அவளுக்கு லேசாக நினைவு வந்து முனகினாள்.அடிவயிற்றில் ஒரு வலி எழ வயிற்றை பிடித்துக் கொண்டாள், கண்கள் இருளுவது போல் இருக்க முயன்று வாயை திறந்து கத்த முனைந்தாள்.

 

 

யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில் அவர்கள் மண்ணை தள்ளி குழியை மூட தொடங்கவும், அங்கு மாரி வந்து சேரவும் சரியாக இருந்தது. மனைவியை தனியே விட்டு சென்றுவிட்டோமே என்று எண்ணியிருந்தவன் விரைவாக திரும்பியிருந்தான்.

 

 

வீட்டிற்கு சென்று பார்க்க அவளை காணாதவன் அவள் பம்பு செட்டிற்கு குளிக்க சென்றிருப்பாள் என்று தோன்ற அங்கு விரைந்தான். அவளுக்கு அங்கு சென்று குளியல் போடுவது பிடிக்கும் என்பது அவன் முன்னமே அறிந்ததால் அங்கே சென்றான்.

 

ஆனால் அங்கு அவன் கண்ட காட்சியோ அவன் உயிரை உறைய வைத்தது… “டேய் பாவிகளா என்னடா செய்யறீங்க… என் பொண்டாட்டி எங்கடா என்றவன் அங்கு தோண்டப்பட்டிருந்த குழியை பார்த்து அங்கு விரைந்தான்.

 

 

அவள் உடலில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டிருப்பதை பார்த்தவன் “எங்க வம்சத்தையே அழிச்சுட்டீங்களேடா… என்று கத்திக் கொண்டே குழிக்குள் இறங்கி செண்பகத்தை தூக்க முனைய “டேய் என்னடா பார்த்திட்டு இருக்கீங்க…

 

 

“ஏதாச்சும் பண்ணுங்கடா… நாம மாட்டிக்குவோம்டா என்று நாகு கத்த எங்கே அவர்கள் மாட்டிக் கொள்வார்களோ என்ற பயம் ஒவ்வொருவருக்கும் வர ஆரம்பித்தது.

 

 

தங்களை காத்துக் கொள்ள ஒவ்வொருவரும் அவசரமாக யோசிக்க மேகநாதன் கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து மாரியின் தலையை குறிப்பார்த்து அடிக்க அவனை பின்பற்றி மற்றவர்களும் கையில் கிடைத்ததை கொண்டு அவனை அடிக்க அவன் மயங்கி விழுந்தான்.

 

 

செண்பகத்தை தள்ளியிருந்த குழியை மண் போட்டு மூடியவர்கள் பலவேசம் எடுத்து வந்த கருவேலமுள்ளை அதன் மேல் பரப்பினர். யாரும் அறியாதவாறு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

 

 

மாரியை இழுத்துக் கொண்டு அந்த வீட்டிற்கு சென்றவர்கள் ஒரு கயிறை எடுத்து பேனில் போட்டு சுருக்கிட்டு மாரியை அதில் தொங்கவிட மயக்கத்தில் இருந்தவன் துடிதுடித்து இறந்தான்.

 

 

செண்பகம் யாருடனோ ஓடிவிட்டது போல் செட்டப் செய்தவர்கள் விஷயம் அறிந்த மாரி அவமானம் தாங்காமல் தூக்கிட்டு இறந்துவிட்டது போல் கதைக்கட்டி விட்டனர்.

 

 

அதன்பின் அவர்கள் சில காலத்திற்கு அங்கு இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து ஒவ்வொருவரும் வேறு வேறு ஊருக்கு சென்று விட்டனர். நாகேந்திரன் சென்னையிலேயே இருந்துவிட கார்மேகமும் அவனுடன் இணைந்து கொண்டான்.

Advertisement