Advertisement

கோட்டில் முதல் விசாரணை 
“இந்த விஷயம் குழந்தைகளை பாதிக்கும் என்று அவர்களை கோட்டில் ஆஜர் படுத்த அவசியமில்லை” என்ற கோட்பாட்டோடையே விசாரணை ஆரம்பிக்க பட்டிருந்தது.
விசாரணையின் போது விஷ்வதீரனின் வக்கீல் விஷ்வதீரன், ஆரோஹியின் கல்யாண சான்றிதழ், மற்றும் மும்பையில் குழந்தைகள் பிறந்ததுக்கான சான்றிதழ் என்று முன் வைத்தும் எதுவும் எடுபடாமல் போகவே!  “இந்த ரெண்டு பசங்களில் உங்க பேரன் யார்?” என்று ஆகாஷின் அப்பாவிடம் கேக்க 
அவரோ இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு அஜய் வட நாட்டவர் போல் இருக்க, பெயரும் “அ” வில் தொடங்க,   அவன்தான் என்று சொல்ல ஆரோஹி நிம்மதி பெருமூச்சு விட்டாள். 
ஏனெனில் விஜய் தான் ஆகாஷின் குழந்தை. அவன் நிஷாவின் தந்தை போல் என்று ஆரோஹி நினைக்க, அவளின் நிம்மதியை கண்டு கொண்ட விஷ்வதீரனுக்கு விஜய் பல்லவனின் தந்தை பரமேஷ்வர் போல் தோன்றியது. 
ஆனால் அவரின் வக்கீலோ இரண்டு குழந்தைகளுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டதுக்கு இணங்க இரண்டு பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. 
இன்று தீர்ப்பு வழங்கும் நாள். குழந்தைகளை தந்தையிடம் விட்டு விட்டு ஆரோஹி, விஷ்வதீரன், மற்றும் தீரமுகுந்தன் டில்லி ஹை கோர்ட்டில் அமர்ந்திருக்க ஆரோஹி கண்கள் கலங்கியவாறு விஷ்வதீரனின் கையை இறுக்கிப் பிடித்திருந்தாள். 
குழந்தைகள் ஆரோஹி விஷ்வதீரனின் குழந்தைகளே! என்று தீர்ப்பு வழங்க விஷ்வதீரனை ஆரோஹி கட்டியணைத்துக் கொள்ள அவனோ பார்வை முழுவதும் தம்பியின் மீது வைத்திருந்தான். 
“அம்மா வயித்துக் குள்ள  இருக்கும் போதே உன் கூட  இருந்தவன் டா நான். உன் இதய  துடிப்பை கேட்டே வளர்ந்தவன் உன்  மனசுல என்ன இருக்குனு நீ சொல்ல முன்னாடி  கண்டு பிடிச்சிடுவேன். ஹாக் பண்ணி ரிப்போர்ட்ட மாத்திட்டேன்” என்று கண்சிமிட்டியவன் “விஜய்  யார் குழந்தைனா…” ஆகாஷ் குழந்தையா? பல்லவனின் குழந்தையா? என்ற உண்மையை தீரமுகுந்தன் சொல்ல விளைய 
தீரமுகுந்தனின் வாயில் விரலை வைத்து தடுத்தவன் “என் மகன்” என்று புன்னகைத்தான் விஷ்வதீரன். 
ஆகாஷின் தாய் ஆரோஹியின் அருகில் வந்து கைகளை பிடித்துக் கொண்டு “ரெண்டு குழந்தைல ஒன்னு என் பேரனா இருக்கும் என்ற நப்பாசைல தான் இன்னைக்கி இங்க வந்தேன். அவர் மாறவே இல்ல. இத்துனை வருஷம் கழிச்சு சொத்துக்கு வாரிசு வேணும்னு தான் கோட்ல கேஸ் போட்டு இருக்குறாரு” என்றவர் நகர 
அவரின் கைகளை பிடித்து நிறுத்திய ஆரோஹி, அலைபேசியில் இருந்த விஜய்யின் புகைப்படத்தை காட்டி பேரன் என்று சொல்ல பக்கத்தில் இருந்த அஜய்யையும் பார்த்து “ரெண்டு பேரும்” என்று கண்ணீர் மல்க புன்னகைதவர் “அவரோட ஜாதி வெரீல  சிக்குண்டாமா என் பேரன் உன் கூடவே இருக்கட்டும்”
“நாளைக்கு தான் ஊருக்கு போறேன். அப்பாவோட ஆஸ்ரமம் வாங்க” என்று ஆரோஹி விலாசத்தை வழங்க 
“கண்டிப்பாக” என்றவாறே அவர் அகல, நிச்சயமாக அங்க இருக்கும் குழந்தைகளை கண்ட பின் அவரின் ஏக்கம் குறையும் என்றே அனைவருக்கும் தோன்றியது.
சின்ன வயதிலிருந்தே கேள்வி கேட்டு பழக்க பட்ட அஜய்யும், விஜய்யும் பரிசோதனை மேற்கொள்ளும் போது தாறுமாறாக கேள்வி கேக்க ஆரோஹி பதில் சொல்ல முடியாமல் திண்டாட விஷ்வதீரன் ஏதேதோ சொல்லி சமாளித்திருந்தான். ஒருவாறு எல்லாம் நல்ல படியாக முடிய அனைவரும் வீடு திரும்பினார்.  
வாசலில் வண்டி நின்றதும் ஸ்கூபி அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க, ஸ்கூபியின் வாரிசுகள் டைகரும், சீட்டாவும் குறைக்க ஆரம்பிக்க அனைவரும் வெளியே வந்தனர்.    
அரோஹியை கண்டதும் பிங்கியின் கையிலிருந்து இறங்கி ஓடி வந்தான் யதீரன். ஆரோஹி விஷ்வதீரனின் அடுத்த வாரிசு, அஜய்,விஜய் ஆராதனா அப்பா செல்லமாக யதீரன் அன்னையின் வாலாகிப்போனான். 
“அப்பா வந்துட்டியா? இந்த இத உன் பொண்ணுங்களுக்கு ஊட்டு” என்றவாறு தீரனின் கையில் உணவு பாத்திரத்தை வைத்து விட்டு அகன்றாள் பிங்கி. காரணம் இன்னும் இரண்டு தினங்களில் அவளுக்கு பரீட்ச்சை. ஒருவாறு தத்தித் தடுமாறி கடைசி பரீட்ச்சைக்கு அமர போகிறாள். 
“வீட்டுக்கு காலடி வச்சாலே! ஏதாவது வேலைய சொல்லுறாளே!” நொந்தவாறே தீரன் குழந்தைகளுக்கு ஊட்ட, ஆராதனாவும் சேர்ந்து கொண்டாள்.
“அக்கா மாதிரி டீச்சராவே இருக்கேன். பசங்க கூடவே போய் அவங்க கூடவே வரேன். அதன் நல்லது” பல நாள் யோசித்து இந்த முடிவெடுத்திருக்க 
“உன் இஷ்டம்” என்று விட்டான் தீரன்.
“ஆயிஷா அம்மா போன் பண்ணாங்களா?” ஆரோஹி பிங்கியிடம் கேக்க 
“நைட் பண்ணுறேன்னு சொன்னாங்க”     
ஆயிஷாவுக்கும் சலீம் பாயிற்கும் கல்யாணமான கையேடு பிங்கியும், ஆரோஹியும் உண்டாகி இருந்ததால் எங்கயும் செல்ல அவர் விரும்பவில்லை. குழந்தை பிறந்த பின்னும் ஆரோஹியோடே இருக்க, ஆராதனாவுக்கு பதினோரு மாதம் இருக்கும் பொழுது ஆரோஹி யதீரனை சுமக்க அவரோ அவளை விட்டு நகரவில்லை. பிங்கியும் படிக்க ஆரம்பிக்க அவள் குழந்தைகளும் இவர் வசமே! இப்போ தான் நடக்க ஆரம்பிக்குறாங்க, சாப்பாடு ஊட்டணும் என்று குழந்தைகளோடு காலம் கடத்த ஒருவாறு அவரை இப்பொழுதுதான் சலீம்பாயோடு ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைத்தனர் மகன்கள் இருவரும்.
கவலை நிறைந்த முகமாகவே உள்ளே நுழைந்தார் திருமாறன்.
“என்ன திரு. என்ன பிரச்சினை” தீரமுகுந்தன் அவரின் தோளில் கைவைக்க
  
“இல்ல லோ பார்ம யார் பொறுப்புள்ள விடுறதுனு ஒரே டென்ஷன், நிஷாந்த்துக்கு கொடுக்கலாம்னு இருந்தேன். அவன் அம்மாக்கு உடம்பு முடியலன்னு மதுரை போறானாம்”
“பூ… இதுக்குத்தானா இவ்வளவு டென்ஷன்.முணு பேரன், மூணு பேத்தி யாராவது ஒருத்தங்க உன் லோ பார்ம பாத்துப்பாங்க. யு டோன்ட் ஒர்ரி” 
“அட ஆமாமில்ல” 
“ஆமாவா? இல்லையா?” 
“டேய் அவர் இன்னைக்கு தீர்வு சொல்ல சொன்னா இருவது வருஷத்துக்கு பிறகு வார பிரச்சினைக்கு தீர்வு சொல்லுற. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றவாறே விஷ்வதீரன் வர 
“அதுக்கு அவர் துள்ளி குதிச்சாரே நீ பாக்கலயா” அண்ணனை முறைக்க
“எதுக்குடா நீங்க ரெண்டு பேரும் இப்போ சண்டை போடுறீங்க போய் வேலைய பாருங்க நா தூங்க போறேன்” கிண்டலடித்தவாறே அகன்றார் திருமாறன்.  
“தாத்தா எங்க?” விஷ்வதீரன் கேட்டவாறே மாடிப்படிகளில் தாவியேற  
“கழுத்தை கெட்டா குட்டிச் சுவர்” தீரமுகுந்தனும் ஏறலானான். 
“ஓஹ் நண்பர பாக்க போய் இருக்கிறாரா? குட் நைட் டா” 
“பதவில இல்லனாலும் அவரு சும்மா இருக்க மாட்டார் போல. குட் நைட்” என்றவன் அறைக்குள் நுழைய பிங்கி உள்ளறையில் குழந்தைகளை தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். 
“நீயே தூங்க வை நா படிக்க போறேன்” என்றவள் முன்னறைக்கு செல்ல குழந்தைகள்  தூங்கியதும் கதவை சாத்திக் கொண்டு வந்தவன் கண்டது உதட்டை குவித்தவாறு பேனாவை முத்தமிட்டுக் கொண்டு மறுகையால் கூந்தலை காதோரம் ஒதுக்கும்  மனையாளை, அவள் உதடுகள் அவனை “வா வா” வென  அழைப்பது போல் இருக்க அவளை கைகளில் ஏந்தி இருந்தான். 
“டேய் விடுடா படிக்கணும்” 
“எக்ஸாம் அடுத்த வருஷம் எழுதிக்கலாம் டி. நீ பெயில் ஆனாலும் பரவால்ல” என்றவன் அவளை ஆளத்துவங்க 
“ஹுர்ரே..” என்று கத்தியவள் அவனுள் பந்தமாக அடங்கினாள்.  
கூடல் முடிந்து அவன் நெஞ்சில் தலை வைத்திருந்தவளின் எண்ணமெல்லாம் எங்கோ இருக்க 
“என்ன விஷயம்” ஒரு கேள்வியில் மடை திறந்த வெள்ளம் போல் 
“அகிலுக்கு வீட்டுல பொண்ணு பாக்குறாங்க நீ பேசினா அவன் ஓகே சொல்வான். பேசுறியா?”
“அவன் இப்போ தான் வேலைல சேர்ந்து இருக்கான். என்ன அவசரம்?” 
“உன் கூட தானே இருக்கான் எங்க உன் குணம் வருமோனு பயமா இருக்கு” பிங்கி அவனை வார 
“எப்படி பொண்டாட்டி தாசனாவா?” 
அவனை முறைத்தவள் “யார் நீ பொண்டாட்டி தாசனா?” 
“சரி சரி போய் படி. நாளான்னைக்கு எக்ஸாம் இருக்கில்ல” பிங்கி அவனை மொத்த ஆரம்பித்தாள். 
இந்த ஐந்து வருடங்களில் அவள் செல்லம் கொஞ்சுவதும் இவன் வம்பிழுப்பதும் மாறவே இல்லை. 
விஷ்வதீரன் அறைக்குள் வரும் போது ஆரோஹி சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை பாத்திருந்தாள். ஆரோஹி நாணம் சிந்தும் பார்வையை விஷ்வதீரனின் மேல் வீச விஷ்வதீரனும் ரசனையோடு அவளை பாதித்திருக்கும் புகைப்படம். ஆராதனாவின் பெயர் சூட்டும் விழாவின் போது தீரமுகுந்தன் பரிசளித்தது. அது காவேரி ஆற்றின் பாலத்தின் மேல் எடுக்கப்பற்றிருக்க, பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த ஆரோஹியை பின்னால் இருந்து அணைத்து அவன் இடது கன்னத்தை அவளின் வலது கன்னத்தின் மேல் வைத்தவாறே  விஷ்வதீரன். 
“என்ன பொண்டாட்டி யோசனையெல்லாம் பலமா இருக்கு” 
தனது இடதுகையால் அவனின் கையை பற்றிப் பிடித்தவள் வலது கையால் அவனது வலது கன்னத்தை தடவியவாறே 
“தங்க யு விஷ். ஐ லவ்  யு சோ மச்” என்று முத்தம் வைக்க 
“என்ன நன்றியெல்லாம் பலமா இருக்கு? இதயத்துல இருந்து காதல் உருகி  கசியும் போது தானே இதெல்லாம் உன் வாயில இருந்து வரும். இன்னக்கி எப்படி இம்ப்ரஸ் பண்ணேன்” கொஞ்சம் குரலில் கிண்டல் இருந்தாலும் காதல் நிறைந்து வழிய 
“என் லைப்ல வந்ததுக்கு தங்க யு” 
“அப்பொறம்”
“என்ன லவ் பண்ணதுக்கு தங்க யு”
“அப்பொறம்”
“என்ன கல்யாணம் பண்ணதுக்கும் தங்க யு”
“நிஜமாலுமே நான் தான் டி உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்”
அவனின் மூக்கோடு மூக்குரசியவள்  “சொல்லு” 
“நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்குன்னு பாடிகிட்டே கால்ல விழ சொல்லுவ போல இருக்கே!” 
அவனின் தலையை கோதியவள்  “விஷ் காதலிக்கும் போது   இந்த உலகத்துல இருக்குற எல்லாத்தயும் விட உன்ன நான் காதலிக்கிறேன். உன்ன கண்கலங்காம சந்தோஷமா பத்துப்பேன், உன் உயிரா நான் இருப்பேன் னு சொல்லலாம். வாழ்ந்து காட்டுறது தான் கஷ்டம். ஆனா நீ என் கூட இருந்த எல்லா நேரமும் உன் உயிரா நான் இருப்பேன்னு காட்டிட்ட தங்க யு”
“என் உயிராய் நீ இருக்க உன் உயிராய் நான் இருப்பேன் டி. தேங்க்ஸ் எல்லாம் இப்படி சொல்ல கூடாது பொண்டாட்டி” ஆரோஹியை கைகளில் ஏந்தியிருந்தான் விஷ்வதீரன்.  
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 
அன்பே!
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்  
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் 
கனவே!
கனவாய் உன் விழிகளை பாத்திருப்பேன் 
தினமே!
மலையாய் என் மனதில் நீ விழுந்தாய் 
விழுந்தாய் 
ஒரு விதையென நான் எழுந்தேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 
அன்பே! 
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்  
அண்ணன் தம்பி இருவரினதும் அலைபேசி ஒரே நேரத்தில் அடித்தது 
“ஹலோ… தீரன் ஸ்பீக்கிங்” 
“ஹலோ… தீரன் ஸ்பீக்கிங்”  
காதலும், கடமையும் அவர்களின் வாழ்க்கையில் தண்டவாளம் போல் இணைபிரியாமல் ஒன்றாக பயணிக்க,  வீட்டில் நிம்மதி இருக்கும் பொழுது நாட்டு பிரச்சினைகளை தீர்ப்பது அவர்களுக்கு ஒன்றும் சிரமமில்லை. என்றும் எதிலும் வெற்றிக் கொடி அவர்களுக்கே! 
நிம்மதியும், சந்தோஷமும் அவர்களின் வாழ்க்கையில் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோம்.    

Advertisement