Advertisement

அத்தியாயம் 36
மூன்று மாதங்களுக்கு பின் 
இன்று தீரமுகுந்தனும் பிங்கியும் காஸ்மீரிலிருந்து திரும்புவதால் வீடே விழாக்கோலம் பூண்டது. அதுக்கு மற்றுமொரு காரணம் சலீம் பாய் ஆயிஷாவின் திருமணம். 
டில்லியிலிருந்து திரும்பிய உடன் ஆயிஷாவிடம் பேசிப்பேசியே சம்மதம் வாங்கி இருந்தாள் ஆரோஹி. பிங்கியும் தீரமுகுந்தனும் இல்லாமல் திருமணம் நடக்காது என்று அவர் சொல்ல அவர்கள் வரும் வரை காத்திருக்க இன்று அவர்களும் வீடு திரும்ப விடிந்தால் கல்யாணம். 
ஆயிஷா சம்மதம் சொன்ன உடன் சலீம்பாய் முதலமைச்சரின் சமையல்காரர் ஆனார். 
பொண்ணும், மாப்பிள்ளையும் ஒரே வீட்டிலா? கூடாதே! என்று முடிவு செய்த தீரமணி நண்பனோடு பேசி அவரை அங்கே அனுப்பி இருக்க, முகம் சுருங்கியவராகவே புறப்பட்டு சென்றார். இதுதான் திருமாறன் தீரமுகுந்தனுக்கு அலைபேசிவழியாக சொன்ன கதை
“ஆரா பாத்து போடி. உன் தங்கச்சி தானே வாரா இந்த ஓட்டம் ஓடுற, உன் வயித்துல இருக்குற என் பொண்ணு பயந்துட போறா” விஷ்வதீரன் அதட்டியவாறே படிகளில் ஓடாத குறையாக இறங்கும் ஆரோஹியை பிடித்து நிறுத்த 
“நான் டான்ஸ் டீச்சர் போலீஸ்காரரே உங்க பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது” என்றவள் அவனோடு சேர்ந்து இறங்க வாசலில் தீரனோடு பிங்கியும் வந்திறங்கலானாள். 
இந்த மூன்று மாதங்களில் வேற எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் வாழ்க்கை சுமூகமாக செல்ல, விஷ்வதீரனுக்கும் பெரியதாக வேலை இருக்கவில்லை. நடந்த ஒரே ஒரு சம்பவம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சுகாதார அமைச்சர் பரமேஸ்வர மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தது தான். விசாரித்ததில் இரவில் “பேய் பேய்” என்று அவர் அலறியவாறு அங்கும், இங்கும் ஓடுவதாக தகவல் கிடைத்தது.
கல்யாணம் முடிந்த கையேடு மறு வீட்டு சடங்கு சடங்கு என்று ஒன்றிருக்க போலீசில் இருக்கும் மாப்பிள்ளிகள் இருவரும் வேலையில் மூழ்கி விட மகள்கள் இருவரும் “வந்தார்கள், சாப்பிட்டார்கள் சென்றார்கள்” என்ற நிலையில் தான் வந்து விட்டு சென்றனர். அதன் பின்  தாய்வீடு வரவே இல்லை. குழந்தை உண்டான பின் அழைத்து செல்லலாம் என்று புஷ்பா ஆவலாக காத்திருக்க விஷ்வதீரேனோ ஆரோஹியை அனுப்ப மறுத்து விட, பிங்கியையாவது அழைத்து செல்லலாம் என்று அவளின் வரவுக்காக எதிர்பாத்திருந்தார். 
நல்ல செய்தியோடு உள்ளே நுழைந்தவர்களை ஆலம்  சுற்றியே வரவேற்று அமர வைக்க 
“பெங்களூர் தக்காளி  மாதிரி இருந்த இப்போ காஷ்மீர் ஆப்பிள் போல ஆகிட்டா” ஆயிஷா நெட்டி முறிக்க அவள் குண்டுக் கன்னங்கள் குழந்தை உண்டானதால் மேலும் உப்பி இருக்க,  வெயில் படாததாலையோ சிவந்து இருந்தாள்.
“ஹாய் கல்யாண பொண்ணு” என்று கண்ணடித்து அவரை கலாய்த்தாள் பிங்கி. நலம் விசாரிப்புகளும். காலநிலை, பனி என்று கண்களை விரித்து அவள் பேச மனையாளின் அழகில் மயங்கி நின்றான் தீரமுகுந்தன். இந்த மூன்று மாதம் எவ்வளவு வேலை இருந்தாலும், அவளுடன் இருந்த பொழுது சுவர்க்கமா இனித்தது.
“தம்பி எல்லாரும் இங்க தான் இருக்காங்க. கொஞ்சம் அடக்கி வாசி” விஷ்வதீரன் அவன் புறம் சாய்ந்து சொல்ல தீரனின் முகத்தில் அழகான வெக்க புன்னகை. 
“அட கல்யாணமே வேண்டாம்னு இருந்தவன பாரேன்” விஷ்வதீரன் காலைவார ஸ்கூபி ஓடி வந்து தீரனிடமும், பிங்கியிடமும் செல்லம் கொஞ்சலானது. 
ஆரோஹி கொஞ்சம் கொஞ்சமாக ஸ்கூபியோடு ஒன்றி விட ஸ்கூபிக்கு வீட்டுக்குள் வரும் தடை நீக்கப் பட்டது.
அஜய் விஜய் அகில் என்று அனைவரும் அங்கே இருக்க வீடே சத்தமாக சந்தோசம் நிரம்பி வழிந்தது.   
ஆயிஷாவுக்கு இருந்த ஒரே மனக்குறையும் மகள் நஸீஹாவின் வருகையால் தீர்க்கப்பட்டது. அவரே எதிர்பார்க்காத விதத்தில் காலையில் மகளும், மருமகனும் குழந்தைகள் இருவருடன் வந்திறங்க மீண்டும் ஒரு பாசமழை ஆரங்கேற்றத்தோடு புதிதாய் கிடைத்த நண்பர்களுடன் அஜய், விஜய்யின் ஆட்டம் அதிகரிக்க ஸ்கூபியும் சேர்ந்து கொண்டது. 
ஆயிஷா, சலீம் பாய் நிகாஹ் மிகவும் எளிமையாக, வீட்டார் மட்டும் இருக்க நடை பெற்றது. மஹராக சலீம்பாய் ஆயிஷாவுக்கு ஆறு லட்சம் பெறுமதிமிக்க தங்க நகைகளை கொடுத்து திருமணம் முடித்துக் கொண்டார். {மஹர்- இஸ்லாமிய திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்கு கொடுக்கும் பணம் அல்லது பொருள்} அவருடைய மொத்த சேமிப்பும் அதில் இருக்கும் என்று பெண்கள் பேசிக்கொள்ள தீரமுகுந்தனின் முகத்தில் கேலிப் புன்னகை. 
கல்யாணத்தின் திடீர் திருப்பம் முதலமைச்சரின் வருகையே! யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் வந்திறங்கியவர். தீரமணியோடு அவர் அறையில் ஐக்கியமானார். 
கதவை தட்டிக் கொண்டு தீரமுகுந்தன் உள்ளே செல்ல அவர்கள் சாப்பிட்டு வைத்த தட்டுக்களை எடுத்துக் கொண்டு சலீம்பாய் நகர்வதற்கும்,  முதலமைச்சர் தீரனிடம் கேள்வி  கேட்கவும் சரியாக இருந்தது. 
“வாடா நல்லவனே ஒரு கேஸ கைல கொடுத்தா அத முடிக்காம காஷ்மீருக்கு ஓடி போயிட்ட” 
“சலீம்பாய் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லும் போது நீங்களும் இங்க இருந்தா நல்ல இருக்கும் ப்ளீஸ் உக்காருங்க” என்றவன் 
பெரியவர்கள் என்றும் பாராது அவர்கள் முன்னால் காலுக்கு மேல் காலை போட்டு ஸ்டைலாக அமர்ந்து.
“ஒட்டுக்கேட்கலாம் ஒட்டு போடலாம் ரேடியோ ஸ்டேஷன் கேஸ் தானே! நா கண்டு பிடிக்கலைனு யார் சொன்னா? நான் கண்டு பிடிக்க கூடாதுனு தான் என்ன காஷ்மீருக்கு பேக் பண்ணீங்க” கிண்டலாக புன்னகைத்தவன்.
எப்படி சலீம் பாய் ஆர்மில  வேல பாத்த நீங்க சமையல்காரர் ஆனீங்க. பொய் சொல்ல உங்க குலத்தொழில் கை கொடுத்திருச்சு இல்ல. மொட்டமாடில வச்சு அழகா ஒரு கத சொன்னீங்களே! நியாபகம் இருக்கா? படிப்பு ஏறலானு அது மட்டும் தான் நீங்க சொன்ன பொய். மத்ததெல்லாம் உண்ம. என் கல்யாண நாள் அன்னைக்கி ப்ரோட்காஸ்ட் பண்ண பாக்கும் போது ஆயிஷாம்மா வந்து உங்க கதவை தட்டி அவங்க பேன் ஓடலைனு சொல்லவும் அத பாக்க போயிட்டீங்க. அதனால அன்னைக்கி தப்பிச்சீங்க. உங்க அறைய வெளிய பூட்டிட்டு போனது உங்க மேல சந்தேகம் வந்துதான். நீங்க வெளில இருந்து வரவும் உங்க கைல பேனோட காபிஷாடற பாத்தேன். பிங்கி நீங்களும் ஆயிஷாம்மாவும் பேசினது சொன்னப்போ தான் என்ன நடந்திருச்சுனு புரிஞ்சிக்க கிட்டேன். 
என்ன தாத்தா வீட்டுல சீசீடிவி பிக்ஸ் பண்ணா உண்ம வெளில வரும்னு வேணாம்னு சொன்னீங்களே! அப்போ கூட உங்க மேல சந்தேகம் வரல. ஆனா பாருங்க உங்க நண்பன் முதலமைச்சர் தான் இது எல்லாத்துக்கும் உதவியா இருக்காருன்னு கண்டு பிடிச்சப்போ அப்படியே நான் ஷாக் ஆகிட்டேன்” பொய்யாக முகத்தில் அதிர்ச்சி பாவங்களை காட்ட உள்ளுக்குள் மெச்சிக் கொண்டனர் மூவரும். 
அவரே குற்றமும் செய்வாராம் அவரே கண்டு பிடிக்க சொல்வாராம். நா கண்டு பிடிச்சிடுவேனோனு கொஞ்சமா என்ன பாத்து பயந்தீங்கள்ல அதான் தீரன். இப்போ சொல்லுங்க நா கண்டு பிடிச்சத ப்ரோட்காஸ்ட் பண்ணிடவா?” கிண்டலாக கேட்டவன் 
“உங்க வேல நடக்கணும் வெளில யாருக்கும் தெரிய கூடாதுனு கல்யாணத்த சாக்க வச்சி சலீம் பாய இங்க இருந்து கிளப்பிட்டீங்க”  
“சலீம் பாய் ஆயிஷாம்மா ஒரு சமையல்காரனத்தான் கல்யாணம் பண்ணாங்க. பாத்து” என்றவனின் குரலில் மிரட்டல் தான் இருந்தது. மூவரையும் முறைத்தவாறே அறையை விட்டு தீரமுகுந்தன் வெளியேற அறைவாசலிலேயே அவனை பிடித்துக் கொண்ட விஷ்வதீரன் 
“யப்பா இவ்வளவு கோவம் ஆகாது டா தம்பி” 
“பின்ன என்னடா வயசான காலத்துல சும்மா இருக்காம நாட்ட காக்க பெரிய போராளிகள் மாதிரி கிளம்பிட்டாங்க” 
 
“பேஸ்புக் போராளிய விட இது பெட்டர் தான். டோன்ட் ஒர்ரி. எனக்கு என்னனா சுகாதார அமைச்சர் பத்தி எல்லாம் தெரிஞ்சி கிட்டே அலையை விட்டுட்டுட்டாங்க. நேரடியாக சொல்லி இருந்தா அவனுங்கள எப்பயோ போட்டு தள்ளி இருப்பேன்” விஷ்வதீரன் புன்னகை முகமாக சொல்ல 
“அந்த ஆளு கேஸ் னு வந்து நின்னா ஒத்துக்காத” முதலமைச்சரை திட்டியவாறே அகன்றான் தீரமுகுந்தன்.  
அவன் வெளியேறவும் உள்ளே சென்ற விஷ்வதீரன் “என்ன மாயான அமைதி நிலவுது.  உங்களுக்கு இது வேண்டாத வேலைனு அவன் நினைக்கிறான்” தீரமணியை பார்த்தவாறே கூறியவன்.
“எனக்கு திறமை இருக்குனு சோதிக்கிறீங்களா?” என்று முதலமைச்சரை முறைக்க 
“சில விஷயங்களில் நானே நேரடியாக இறங்குவேன், நம்பிக்கையான திறமையான ஆட்கள் என் கூடவே இருக்குறது, நாட்டுக்கு நல்லது பா” என்று புன்னகைக்க எதுவும் பேசாமல் வெளியேறினான் விஷ்வதீரன்.
தாய் வீடு செல்ல ஆரோஹி மறுத்து விட அதையே காரணமாக சொன்னாள் பிங்கி. “நா மட்டும் வந்தா அக்கா மனசு கஷ்டப்படும். வேணும்னா நீயும் இங்க வந்து தங்கு” வேறு வழியில்லாது புஷ்பாதான் இறங்கி வரவேண்டி இருந்தது.
மசக்கையால் பிங்கி அதிகம் அவஸ்தை படாவிட்டாலும் தீரமுகுந்தன் கூட இருக்கும் போது அவனை படுத்தியெடுக்கலானாள். 
“உன்னாலதான் இப்டியாச்சு” என்று  சொல்லி சொல்லியே அவளுக்கு சாப்பாடு ஊட்டுவதிலிருந்து, இரவு தூங்க போகும் போது காலை பிடித்து விடவேண்டும், அவளோடு வாக்கிங் போகவேண்டும், எல்லாம் அவனையே செய்யவைத்தாள். அவனும் அவளை வெறுப்பேத்தி விட்டே செய்யலானான். அவள் படிப்பை பற்றி பேசினால் மட்டும் அவனை விட்டு தூர ஓட ஒருவாறு படிக்கிறேன் என்று ஒத்துக்க கொண்டு குழந்தைகள் பிறக்கட்டும் என்று அவனை சம்மதிக்க வைத்திருந்தாள். 
முறையான சிகிச்சையின் பின் ஆரோஹி விஷ்வதீரனின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போலே இருந்தது. கணவனின் வேலையை கவனத்தில் கொண்டு வீட்டையும் சரியாக பராமரிக்கலானாள். 
தீரமுகுந்தனின் குடோனறை குழந்தைகளின் அறையாக மாற்றப்பட்டது. ஆனால் அஜய்யும் விஜய்க்கும் வேறாக அறையொதுக்க ஆரோஹி விரும்பவில்லை.    
ஒரு அழகிய விடிகாலை பொழுதில் ஆரோஹி பெண்குழந்தையை பிரசவிக்க “ஆராதனா” என்று பெயர்சூட்டி மகிழ்ந்தனர் வீட்டார்கள். முதல் பெண் வாரிசு அவளானதால் அனைவரும் கையிலேயே வைத்திருக்க யார் வைத்திருப்பது என்பதில் பல நேரம் சண்டை கூட நடந்தது. 
அடுத்து இருவாராம் கழித்து பிங்கி இரட்டை பெண்குழந்தைகளை பிரசவிக்க ப்ரியங்கா, ப்ரியந்தி என பெயரிட்டனர். பெயர் சூட்டு விழா வீட்டிலேயே விழாக்கோலமாக கொண்டாடப்பட மூன்று தேவதைகளின் வருகையால் வீடே மாறிப் போய் இருந்தது. 
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
ஐந்து வருடங்களுக்கு பின் 
காலை ஓட்டத்தை முடித்துக் கொண்டு அண்ணனும் தம்பியும் வீடு வர ஆரோஹி கையில் ஒரு காகிதத்தோடு ஒரு திக்கை வெறித்து அமர்ந்திருந்தாள். 
விஷ்வதீரன் அவளை உலுக்க “ஆ….” என்றவள் கண்களில் வழியும்  கண்ணீரை துடைத்தவாறே உதடு கடித்து மனவேதனையை கட்டுப்படுத்த ஆரோஹியின் கையில் இருந்த காகிதத்தை எடுத்து வாசிக்கலானான் விஷ்வதீரன்.
    
அதை பார்த்து அவனும் அதிர்ச்சியாக ஆரோஹியை ஆறுதல் படுத்த அவன் நெஞ்சிலே சாய்ந்து அழலானாள். 
இத்தனை வருடங்கள் கடந்து இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று விஷ்வதீரன் எதிர் பார்த்திருக்க வில்லை. எந்த விஷயத்தை வீட்டாரிடமிருந்து மறைத்தானோ அதை சொல்லும் நேரம் இதோவோ என்று அவனுக்கு தோன்ற 
“ஏன் விஷ் ஆகாஷ் குழந்தைனு உறுதியானா?  அங்கள் அவன கூட்டிட்டு போய்டுவாரா?” 
ஆரோஹியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே விஷ்வதீரனுக்கு புரியவில்லை. 
டெல்லியிலிருந்து ஆகாஷின் தந்தை ஆகாஷின் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு டில்லியில் வழக்கு பதிவு செய்திருக்க, வக்கீல் நோட்டீசை பார்த்து தான் ஆரோஹி கலங்கி நிற்க விஷ்வதீரன் அவளை ஆறுதல் படுத்திக்க கொண்டிருந்தான். 
அண்ணனின் கையில் இருந்த நோட்டீசை எடுத்து பார்த்த தீரமுகுந்தன் யோசனைக்குள்ளாக இருவரையும் அழைத்துக் கொண்டு அவர்களின் அறையை அடைந்து கதைவடைத்தவன் 
“என்ன நடந்ததுன்னு சொன்னா என்னால ஆனா உதவிய செய்றேன்” அண்ணியை ஏறிட்டு கூறியவனுக்கு தாயின் வயிற்றில் இருந்தே ஒன்றாக இருந்தவர்கள். இதுவரை எதையும் மறைக்கவில்லை என்று அவன் நினைத்திருக்க இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து விட்டானே என்று அண்ணனின் மேல் கோபம் இருந்தது. 
விஷ்வதீரனின் சிந்தனையோ! பல்லவனுக்கு ஆகாஷுக்கும் ஒரே ப்ளாட் குரூப். இதில் குழந்தை ஆகாஷுடையதா? பல்லவனுடையதா? என்ற குழப்பம் வேறு. ஆகாஷின் குழந்தையாகவே இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து கொண்டிருந்தவன் ஏனோ இன்று குழந்தை பல்லவனின் குழந்தையாக இருக்கக் கூடாதா என்று தோன்ற தன் எண்ணப்போக்கை நினைத்து நொந்து கொண்டான். 
ஆரோஹி ஒருவாறு நடந்தவைகளை சொல்லி முடிக்க அண்ணனை விழிவிரித்து வியப்பாக பார்த்த தீரமுகுந்தன் பெருமையாக அவனை அணைத்துக் கொணடான்.   
அவர் வேற இப்போ டில்லில மினிஸ்டரா இருக்குறாரு. பத்திரிக்கை டிவி னு செய்தி வரும். இந்த கேஸ வாதாட அப்பா கிட்ட சொல்லலாமா? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” விஷ்வதீரன் கவலை நிறைந்த முகமாக சொல்ல 
“இல்ல வேணா அப்பாக்கு தெரியாவேனா டிவி நியூஸ் னு வந்தா ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்” தீரமுகுந்தன் புருவம் நீவ 
“அவனுக்கு இப்போ பதினோரு வயசாகுது இப்போ போய் உண்மைய தெரிஞ்சி கிட்டா என்னமா பீல் பண்ணுவான்” ஆரோஹி அழுதவாறே சொல்ல 
“அண்ணி என்ன நம்புங்க, எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்” என்றவன் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கலானான். 

Advertisement