Advertisement

அத்தியாயம் 35
தனது வேலையால் ஆரோஹிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக  விஷ்வதீரன் இருக்க அவனை ஒருவன் ஆரோஹியின் பெயர் சொல்லி பயம் காட்டுவதா?  அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவன் சிம்லா புறப்பட்டு போக அவனது கட்டளைக்கு இணங்க அவன் டில்லியில் தங்கி இருந்த ஹோட்டலின் எதிர்புறம் உள்ள கட்டிடத்தின் சீசீடிவி காட்ச்சிகள் மிக இரகசியமாக கைப்பற்றி ஆரோஹியை கண்காணித்தது யார்? என கண்டு பிடிக்க, அது ஒரு பெண் என்றே அறிய வந்தது. 
நீதுவுக்கு கூட பிறந்தவர்களும் யாருமில்லை. ஆண் குரலில் பேசிய இவள் யார்? விசாரணைகள் இன்னும் தீவீரமாக அவள் பெயர் மம்தா என்றும் பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து மாமாவின் வீட்டில் அத்தையின் ஏடாகூடமான பேச்சுக்களோடு வளந்தவள். நீதுவின் பக்கத்து வீட்டு பெண் என்றும் அறியவர நீதுவுக்கும் அவளுக்குமான உறவு அம்மா மகள் போன்றதென்றும், மம்தாவின் அண்ணனுக்கு நீதுவை கல்யாணம் செய்து வைக்க மம்தா ஆசைப் பட இருவரிடமும் பேசி சம்மதம் வாங்கி பின் தான் நீது  டில்லிக்கு படிக்க வந்ததே அவள் இறந்தது ஒரு விபத்து என்று கவலையில் இருந்தவள் அவள் உடலை கண்ட பின் ஏனோ சந்தேகம் வர அதே காலேஜுக்கு வேதியல் படிக்க வரவும் உண்மையை கண்டு பிடித்து  விட்டாள். தக்க தருணம் பார்த்து காத்திருந்தவள் பழிவாங்க ஆரம்பிக்க அவள் தேர்ந்தெடுத்த வழி அந்த கயவர்கள்  உடல் அவயவயங்கள் கரைந்து கொடூரமாக சாகவேண்டும் என்பதே!  
இருவரும் இரண்டு இடத்தில் இருக்க அண்ணனும் தங்கையும் இரண்டு இடத்திலும் இருந்து சுனிலுக்கும், பல்லவனுக்கு போதை மருந்தை விற்று அந்த பணத்தை கொண்டு வேறுவகை போதை மருந்தை வாங்கி மெஸ்மரிஸமாக மாறி விற்க ஆரம்பித்தனர். பல்லவன் ஒருவாறு இறந்து போக, அடுத்த குறியாக சுனிலை கொல்ல டில்லிக்கே குடிவந்தனர். இதில் அவர்களே எதிர் பார்க்காதது பல்லவனும், சுனிலும் மெஸ்மரிஸத்தை அவர்கள் பிறருக்கு விற்பார்கள் என்பது. போதை மருந்தை கொழுத்த பணம் கொடுத்து நுகர்வார்கள் மாத்திரம் நல்லவர்களாக இருக்கவா முடியும்? செத்துத் தொலையட்டும். பல்லவனும், சுனிலும் துடி துடித்து செத்தால் போதும் என்று தாங்கள் வேலையிலேயே கவனமாக இருக்க போலீஸின் வலை விரிப்பில் சிக்கிக் கொண்டது அவர்கள் அறியவில்லை.
விஷ்வதீரன் டில்லி வந்து விசாரணையை துரிதமாக்கவும் மனைவியை காரணம் காட்டி அவனை பயங்காட்டும் போதே ஆராஹியை அழைத்துக் கொண்டு சிம்லா சென்றவனின் எண்ணமெல்லாம் இவர்களை எவ்வாறு பிடிப்பதென்பதே! அதன் படி அவர்களின் அடிவேர் வரை அலசி கண்டு பிடித்திருந்தார் விஷ்வதீரனின் டீம். 
விஷ்வதீரன் பின்னடைந்து விட்டான் என்று ஆசுவாசமடைந்த தங்கை அண்ணனிடம் கூறியபோது “போலீஸ் பின்னடைவதா? ஏதோ பிளான் பண்ணிட்டாங்க” என்று கூறியவன் நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின் சுனிலை கொலை செய்து விட்டு போலீசில் சரணடையலாம் என்று முடிவு செய்தனர். 
அவர்கள் சுனிலை கொலை செய்ய முயற்சிக்கும் போதே விஷ்வதீரன் கைது செய்யும் படி உத்தர விட்டிருந்தான். அதன் படி சுனிலின் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருந்தவர்களை கைது செய்து சிம்லாவில் இருந்து விஷ்வதீரன் வரும் வரை காத்திருந்தனர்.
“விஷ் நாம ஊருக்கு போகலையா? இப்போ எங்க போறோம்?” ஆரோஹி கேள்வியாய் ஏறிட 
“முக்கியமான ஒருத்தர பாக்க போறோம்” புன்னகைத்தவனின் மனதுக்குள் “இவ எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ என்றிருக்க” 
“கேட்டாலும் கண்டிப்பா சொல்ல மாட்டான் யார்தான் னு போய் பாத்துடலாம்” என்று அமைதியாக வந்தாள். 
பெரிய மதில் சுவரோடு, கனி தரும் மரங்களும், பூத்துக் குலுங்கும் பூக்களோடும் ஒரு பெரிய வீடு. வீடா? இல்லை ஆசிரமம் போல் தான் ஆரோஹிக்கு தோன்றியது. பத்து குழந்தைகள் வாசலிலேயே! விளையாடிக் கொண்டிருந்தனர். இல்லை ஊனமுற்ற குழந்தைகளுக்கு நான்கு பேர் விளையாட்டை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். பார்ப்பதற்கே ஆரோஹியின் நெஞ்சுக்கு குழி இறுகியது. ஏன் தான் கடவுள் இந்த பிஞ்சுகளை இவ்வாறு சோதிக்கிறார்கள் என்றே தோன்றியது. அவள் யோசனையில் விழுந்தவாறே விஷ்வதீரனோடு நடக்க அந்த ஆசிரமத்தின் காரியாலய அரை வரவே ஆரோஹியின் தோள் தொட்டு உள்ளே செல்லு மாறு சைகை செய்த விஷ்வதீரன் பின்னடைந்தான். 
விஷ்வதீரனை ஒரு பார்வை பார்த்தவாறே அந்த அறையினுள் புகுந்த ஆரோஹி அங்கே யாருமில்லாது போகவே திரும்ப போனவள் அங்கே சுவரில் மாட்டி இருந்த  பூவராசியின் புகைப்படத்தை கண்டு கண்களில் கண்ணீர் வழிய அருகில் சென்றவள் தாயின் புகைப்படத்தை தடவிக் கொடுக்க தாயோடு இருந்த நாட்களும் நியாபகத்தில் வந்து கண்களில் கண்ணீரும், உதடுகளில் புன்னகையும் மலர நின்றாள். 
இமைகளை தட்டித் தட்டி  கண்ணீரை வெளியேற்ற புகைப்படத்தின் கண்ணாடியினூடாக ஹிமேஷ் கைகளை கட்டிக்க கொண்டு அவளையே பாத்திருப்பதை கண்டவள் “அப்பா” என்று அழைத்தவாறே அவரின் நெஞ்சில் சாய்ந்து கதறியழலானாள்.  
“ஷ்… ஆரு பேபி. எதுக்கு இப்போ அழுகை?” என்றவாறே அவளின் கண்ணீரை துடைத்து விட அழுகையை கட்டுப்படுத்த அவளால் முடியவே இல்லை. 
கிட்ட தட்ட எட்டு, ஒன்பது வருடங்களுக்கு பின் தந்தையை காணுகின்றாள். அன்னை இருக்கும் வரை தந்தையோடு அவளின் உறவு பிரியாதது. இனிமையான நாட்கள். அவள் ஒரு தேவதையாய், இளவரசியாய் வாழ்ந்த நாட்கள். யார் கண் பட்டதோ எல்லாம் தலை கீழாய் மாறிப் போனதே! 
தந்தையும், மகளும் கடந்த நாட்களை அசை போட விஷ்வதீரன் என்ற ஒரு ஜீவன் தன் வாழ்க்கையில் இருக்கிறான் என்பதையே! மறந்து போனாள் ஆரோஹி.
அவனும் அவர்களை தொந்தரவு செய்யாது அங்கே இருந்த குழந்தைகளை பார்வையிட சென்றான். 
“ஐம் ரியலி சாரி பா” என்றவள் “சித்தி எங்க? ஆமா  நீங்க எப்போ இந்தியா வந்தீங்க? இந்த ஆசிரமம்” ஆயிரம் கேள்விகளை முகத்தில் தக்கவைத்துக் கொண்டு தந்தையின் முகம் நோக்கினாள் ஆரோஹி. 
“ஆரு பேபி நா இப்போ சொல்ல போற விசயத்த கேட்டு ப்ளீஸ் அப்சட் ஆகாத” புதிரோடு ஆரம்பிக்க ஆரோஹியின் மனம் அடிக்க ஆரம்பித்தது.
“நீ இல்லாம நா அமெரிக்கா போய் இருக்கவே கூடாது. உங்கம்மாவ இழந்து உன்னையும் பிரிஞ்சி என் வேலைல சரியா கான்ஸ்டன்ரேட் பண்ணவே என்னால முடியல. என் பாஸ் தான் ஜெனிபர். அவ ஒரு ஹாண்டிகேப். அவளை முதல்ல பாக்கும் போது பாவமா இருந்துச்சு. ஆனா அவளோட வேல செய்ய ஆரம்பிக்கும் போது பிரம்மிப்பு மட்டும் தான். 
பத்து வயசு வரைக்கும் நல்லா இருந்தவ, பேரன்ட்ஸ் கூட வண்டில போகும் போது ஆக்சிடன்ட் ஆகி அப்பா இறந்து போய் அவளோட இரண்டு காலுமே பறிபோய், இடுப்புக்கு கீழ ஊனமாகிட்டா. எல்லாத்துக்கும் அம்மாவையே நாடனும் என்கிற நிலை. அவங்க ஒரு டீச்சர். வேலைய விடவும் முடியாது, குழந்தையையும் பாக்க முடியாது, ஆனாலும் தனி மனிசியா அவங்க சாகும் வர ஜெனிய அவங்க தான் பாத்து கிட்டு இருந்து இருக்காங்க. பலநாள் சொல்லி அழுது இருக்கா. அவங்க அம்மா தான் அவளுடைய சப்போர்ட்டே! அவங்க கொடுத்த தைரியத்துல நல்லா படிச்சவ இன்னைக்கி ஒரு கம்பனியையே! தனியா நிருவாக்கிற நிலைமைக்கு வந்துட்டா. 
எல்லார் கிட்டையும் அன்பா பேசி வேல வாங்குவா, என்னோட சோகம் புரிஞ்சிக்க கிட்டு அவள் வாழ்க்கைல நடந்த எல்லாத்தையும் பத்தி சொல்லி தைரியம் ஊட்டினா. அவ கிட்ட உன்ன பத்தியும், பூவரசிய பத்தியும் நிறையவே சொல்லி இருக்கேன். அமைதியா கேட்டுக் கொண்டு இருந்துட்டு, 
“உங்க வைப் இல்லனு ஏன் நினைக்கிறீங்க, அவங்க உங்க கூடவே இருக்கிறதா பீல் பண்ணுங்க னு சொல்வா. அவளை கல்யாணம் பண்ண பிறகு நீ, பூவரசி அவ அம்மா எங்க கூட இருந்தா எப்படி இருக்குமோ அப்படிதான் பேசுவா, பாக்குறவங்களுக்கு லூசு மாதிரி தோணும் எங்குறதால வீட்டுல மட்டும் தான்” என்று புன்னகைத்தவர். 
“அவளை கல்யாணம் பண்ண முடிவெடுத்தது நான், உன் கிட்ட ஒரு வார்த்த கூட கேக்காம முடிவெடுத்ததுக்கு சாரி, அப்போ எனக்கு வேற வழி தெரியல” 
ஆரோஹி திகைத்து தந்தையை பாத்திருக்க, அவர் மீண்டும் சொல்ல ஆரம்பித்தார். 
“அவள வீட்டுல நைட் பாத்துக்க ஒரு நர்ஸ் வச்சிருந்திருக்கா, அன்னைக்கி அவ வரல போல, காத்து காத்து இருந்தவ சரி காலைல வருவான்னு, கால் கூட பண்ணி என்னனு கேக்காம விட்டுட்டா, பீரியட்ஸ் வரும் போது ரொம்ப கஷ்டப்படுவ அன்னைக்கி அவளுக்கு அந்த நாள்னு நியாபகத்துல இல்ல, நடு ஜாமத்துல, வயித்து வலியும், இரத்த போக்கும் எந்திரிக்க முடியாம, ரொம்ப அவஸ்த பட்டிருக்கா, போன எடுக்க கைய நீட்டி அது விழுந்து உடைஞ்சு போச்சு. 
காலைல ஆபீஸ் போய் வெயிட் பண்ணா அவ வரல, முக்கியமான மீட்டிங் வேற, போன் பண்ணா எடுக்கவும் மாட்டேங்குறானு எண்ணும் போது உங்கம்மா செத்து போனது தான் நியாபகத்துல வந்தது. யார் கிட்டயும் சொல்லிக் கொள்ளாம அவ வீட்டுக்கு போனேன். அது ஒரு சின்ன வீடு அவளுக்கு இருக்குற பணத்துக்கு வேலைக்கே பத்து பேர வைக்கலாம், கதவை உடைச்சி கிட்டு தான் உள்ள போனேன், அவ பரிதாபமான நிலைல தான் இருந்தா, அவ மேல கோபம் கூட வந்துச்சு, அவள பாத்துக்க ஒரே ஆள வைக்காம இன்னும் ரெண்டு பேர வைக்க சொல்லி சத்தமும் போட்டேன், அவள குளிப்பாட்டி சாப்பாடு ஊட்டி, பெட்டெல்லாம் க்ளீன் பண்ணி ஆப்பீஸ் வேலையும் அங்க இருந்து தான் பாத்தேன், அவ நர்ஸுக்கு கால் பண்ணா அவளுக்கு உடம்பு முடியலையாம் வர ரெண்டு நாளாகும் னு மேடமோட ஆபீஸ்க்கு இன்போர்ம் பண்ணினேன்னு அந்தம்மா சொல்லுறாங்க. அவள விட்டுட்டு போக மனசு வரல. அங்க தங்கவும் முடியாது. என்ன பண்ணுறதுனு ஒரே குழப்பம்” 
“அம்மா இருக்கும் வர முகம் சுளிக்காம எல்லா வேலையும் பண்ணாங்க, காசுக்காக வாறவங்க முகம் சுளிக்கும் போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு, அதான் நல்லா தெரிஞ்சவங்கள மட்டும் வேலைக்கு வச்சிக்க கிட்டேன். அம்மாக்கு பிறகு நீங்க தான்…. தேங்க்ஸ்” ஜெனிபர் ஹிமேஷின் முகம் பார்க்காமல் எங்கையோ பார்த்தவாறே சொல்ல அவள் மனநிலையை அவரால் நன்றாகவே உணர முடிந்தது. 
“அதுக்கு பிறகு தான் அவ என் கூட நல்லா பழக ஆரம்பிச்சா, என்ன பொறுத்த வரைக்கும் அவ ஒரு குழந்த, அன்புக்கு எங்கும் குழந்த. என்ன இருந்தாலும் அவளும் உணர்ச்சி உள்ள ஒரு மனிசி தானே நா தொட்டு தூக்கும் போது கூசிப் போவா, அவ நர்ஸ் வேற ரொம்ப வயசானவங்க அவளுக்காக வேற நர்ஸ் கூட தேட ஆரம்பிச்சேன், கூடவே இருக்க யாரும் சம்மதிக்கல, அதிக நேரம்  நான் தான் கூட இருந்தேன். 
 “எங்கம்மா இருக்கும் போது கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லுவாங்க, என்னால அத ஒத்துக்குவே முடியல, ஏன்னா என்னால தாம்பத்திய வாழ்க்கைல ஈடு பட முடியாது, யாராவது கல்யாணம் பண்ணாலும் காசுக்கு தான் பண்ணுவாங்க நா மாட்டேன்னு சொல்லிட்டேன்” அந்த நேரம் தான் எனக்கு தோணிச்சு அவள கல்யாணம் பண்ணி கூடவே இருக்கணும்னு, உடனே கேட்டுட்டேன், அவளுக்கும் ஆச்சரியம் தான்
“சும்மா விளையாடாதீங்க. உங்க வைப்ப எவ்வளவோ லவ் பண்ணுற நீங்க இன்னொருத்திய கல்யாணம் பண்ணுறதா? இனிமேல் இந்த மாதிரி விளையாடாதீங்க” 
“நோ. சிரியஸ்ஸா தான் கேக்குறேன்” அவ ஒத்துக்குவே இல்ல. நா அவள வற்புறுத்தவும் இல்ல. கொஞ்சம் நாள் கழிச்சி அவளே வந்தது என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களானு கேட்டா
“என் மனைவியோட நோயை கடைசி வரைக்கும் அவ சொல்லவே இல்ல, அவள பாத்துக்கவும் எனக்கு கொடுத்து வைக்கல, உன்ன பாத்து கிட்டா ஒரு ஆத்ம திருப்தி வரும்னு தான் கேட்டேன். இப்போ தான் உன்ன பாத்துக்க நாலு நர்ஸ் ஏற்பாடு பண்ணி இருக்கேனே” அன்னைக்கி என்னோட மனநிலைல ஏதோ கேட்டுட்டேன்னு எனக்கே தோணிருச்சு நாசுக்காக மறுத்தேன். 
அப்போ அவ கைல இருந்த மெடிக்கல் ரிபோர்ட்ட என் கைல கொடுத்துட்டு “என்னோட கடைசி ஆச” னு சொன்னா 
“உங்கம்மாக்கு வந்த அதே இரத்த புற்று நோய், ஜெனிபர் முகம் தெரியல உங்கம்மா முகம் தான் என் கண் முன்னாடி தெரிஞ்சது. சார்ச்ல வச்சி சிம்பலா கல்யாணம் பண்ணிக்கிட்டோம். உன் கிட்ட சொல்லணும் கூட அப்போ தோணல. ஒரு மாசமும் பத்து நாள் தான் அவ கூட இருந்து பாத்துக்க கிட்டேன். சந்தோசமா தான் என் கைல உசுர விட்டா. அவ ஆத்மா சாந்தியடைஞ்சி இருக்கும்  சாகுறத்துக்கு முன்னாடி நீ, நான், அவ ஒண்ணா இருக்கனுன்னு ஆச  பட்டா அதான் உனக்கு போன் பண்ணி கல்யாணம் பண்ணாத சொல்லி அவளை பேச வச்சேன்” கண்கள் கலங்க சொல்லி முடித்தார் ஹிமேஷ். 
தொண்டையடைக்க, கண்கள் கலங்க இருந்த ஆரோஹியிடம் அசாத்திய அமைதியே நிலவியது. தந்தையை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.
அவர் ஆரோஹியிடம் பகிராதது அந்த குறுகிய கல்யாண வாழ்க்கையில் ஜெனிபருக்கும் அவருக்குமான அந்நியோன்யமான வாழ்க்கையை. தனது கூட்டுக்குள்ளேயே சுருங்கி இருந்த ஜெனிபர் கல்யாணத்தின் பின் தான் காதலை உணர ஆரம்பித்தார். ஹிமேஷின் தொடுகையால் சிலிர்க்கும் மனதை அடக்க முடியாமல் திண்டாடும் போதெல்லாம் ஒதுங்க நினைத்தவள் சாவு என்று ஒன்றை எதிர் நோக்கும் போது வாழ்ந்து பார்த்திடலாம்னு முடிவெடுத்தாலோ! கல்யாணத்துக்கு பின் ஹிமேஷை விட்டு பிரியவே இல்லை. தாம்பத்திய வாழ்க்கையில் ஈடு பட முடியாததை நினைத்து அழும் போதெல்லாம் அவளுக்கு ஆறுதலானது ஹிமேஷின் இதழ் ஒற்றல்களே! காதலை திகட்ட திகட்ட அனுபவித்து விட்டே இறைவனடி சேர்ந்தாள் ஜெனிபர். 
“அவளோட ஆச தான் ஊனமுற்ற குழந்தைகளுக்காக ஒரு ஆசிரமம் நடத்த வேண்டும் என்பது. அவ எல்லா சொத்தையும் ஒரு ட்ராஸ்ட்டா மாத்தி அங்க ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சேன். அதெல்லாம் செய்ய ரொம்ப நாள் தேவ பட்டது, உன் கூட ஆகாஷ் இருக்குறதால உன்ன பத்தி யோசிக்கல, கம்பனி மட்டும் என் பேர்ல இருக்கு. ஒரு கட்டத்துக்கு மேல வாழவே பிடிக்கல நீயும் வளந்துட்ட உன்ன நீ பாத்துப்பான்னு நினச்சேன். சாரி…. எல்லாத்தையும் விட்டுட்டிரு உன் கூட இருந்திருக்கணும். ஜெனியோட இறப்பு, ட்ரஸ்ட் வேலைனு காலம் ஓடிருச்சு, ஆகாஷ் இறந்தது கூட ஐஞ்சு வருஷம் கழிச்சு தான் தெரியும். குழந்தைகளை நீ தத்தெடுத்தனு விசாரிச்சு தெரிஞ்சி கிட்டேன். அத பத்தி நீயே சொல்லுவானு வெயிட் பண்ணேன்.  நீ என் கூட சரியாவே பேசுறதில்லன்னு புரிஞ்சிக்கவே பல வருஷம் ஆச்சு. உங்க அம்மா பேர்ல இங்க ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கனும்னு என்னோட நீண்ட நாள் ஆச. அதுக்கு நிறைய காசும் தேவ பட்டது. உழைக்க முடிஞ்ச வர உழச்சி எல்லாம் இங்க கொண்டு வந்துட்டேன். இங்க இருக்குற என் சில நண்பர்கள் மூலம் அவங்க உதவியோடு தான் ஆரம்பிச்சேன். நான் இங்க வந்து ஒரு வாரம் கூட இல்ல. மாப்பிள்ளைக்கு எல்லாம் தெரியும்” 
மாப்பிளை என்றதும் தான் விஷ்வதீரனின் நியாபகமே ஆரோஹிக்கு வந்தது. கண்களை துடைத்துக் கொண்டவள் அவனை தேட வெளியே சில குழந்தைகளுடன் சிரித்துப் பேசுவது ஜன்னலினூடாக தெரிந்தது. 
“ரியலி சாரி அப்பா” என்னவெல்லாமோ எண்ணங்கள் மனதில் உதித்தாலும்  ஆரோஹியின் வாயிலிருந்து வேற எந்த வார்த்தையும் வரவே இல்லை. 
“பசங்க எப்படி இருக்காங்க?” 
அந்த ஒரு கேள்வியில் “டெய்லியும் மாப்புள கூடயும் பசங்க கூடயும் செல்லம் கொஞ்சிட்டு இப்போ என் கிட்ட கேக்குறீங்களா” கணவன் குழந்தைகள் என்றதும் முகம் மலர்ந்தவள்  செல்லமாக கோபப் பட 
சத்தமாக சிரித்தவாறு “மாப்புள நல்லா உன் கிட்ட மயங்கி போய் இருக்கிறார் போல ஒன்னையும் மறைக்க மாட்டாரோ!” கிண்டலாக கேட்டவர்  “ஆரு இனிமேல் இங்கயும் இருப்பேன், அங்கேயும் போகணும் உனக்கு லீவ் இருக்கும் போது வருவியா?” ஏக்கமாக கேக்க 
“நீங்க இருக்கும் போது போன் பண்ணுங்க எத்தன நாள் என்றாலும் லீவ் போட்டுட்டு வரேன்” துள்ளலாக ஆரோஹியின் குரல் ஒலிக்க
“அடிப்பாவி எனக்காக லீவ் போடுன்னு சொன்னா ஒரு நாள் கூட போட மாட்ட உங்கப்பாக்கு என்றா எத்தன நாள் வேணாலும் லீவ் போடுவியா?” சுவிங்கத்தை மென்றவாறே கண்ணில் கூலருடன் உள்ளே நுழைந்தவனை காதல் ததும்ப பாத்திருந்தாள் ஆரோஹி. 
“இப்படித்தான் மாமா என்ன திட்டினாலும் உங்க பொண்ணு மரம் மாதிரி நிக்குறா மரமண்ட மரமண்ட” 
“மாப்புள அதுக்காக என் பொண்ண இப்படியெல்லாம் திட்ட கூடாது. இது தான் சாக்குன்னு இப்படி திட்டுறீங்க” 
“என்ன மாமா நேத்து வரைக்கும் மாப்புள மாப்புளனு சொல்லிக்கிட்டு இருந்தீங்க, இன்னைக்கு பொண்ண பாத்ததும் இப்படி மாறிட்டீங்க?” விஷ்வதீரன் நெஞ்சில் கைவைத்து கேக்க 
“எனக்கிருக்கிறது ஒரே பொண்ணு மாப்புள, மறந்துடாதீங்க” இவர்களின் பாசப்பிணைப்பை பார்த்த ஆரோஹி மனம் குளிர கண்களும் கலங்கியது. 
“ஹேய்” என்றவாறே தந்தை ஒரு புறம் கணவன் மறுபுறம் அவளை தாங்க தேவதையாகவும், இளவரசியாகவும் உணரலானாள் ஆரோஹி. 
ஹிமேஷிடமிருந்து விடை பெற்று கிளம்பியது விமானநிலையத்துக்கு அமைதியாக வரும் ஆரோஹியை பார்த்தவாறே அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் விஷ்வதீர. 
விமானத்தில் ஏறியும் ஆரோஹியின் முகம் தெளிவாகவில்லை. 
“என்ன ஆரா” அவளின் கைக்குள் கையை கோர்த்தவாறே விஷ்வதீரன் அவள் முகம் பார்க்க 
“அப்பாக்கு ஒரு காரணம் இருந்த மாதிரி ஆகாஷுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும் என்று தோணுது” அடி நுனி இல்லாது அவள் மொட்டையாக சொல்லும் விஷயம் என்ன வென்று அவனுக்கு புரிந்தாலும் அமைதியையே கடைபிடித்தான். 
“கண்டிப்பாக காரணம் இருக்கும்” என்று சொல்ல துடிக்கும் மனதை அடக்கியே ஆகா வேண்டிய நிலை. பல்லவனை பற்றி சொல்ல அவன் ஒருபோதும் தயாராக இல்லை. அவன் அமைதியாகவே இருக்க 
“விஷ் எனக்காக கண்டு பிடி ப்ளீஸ்” கெஞ்சாத குறையாக கண்களை சுருக்க அவள் கண்ணழகில் மயங்கியவன் தலையை மட்டும் ஆட்ட  ஆரோஹி அமைதியாக அவன் தோள் சாய்ந்தாள்.
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்  
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
 
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ……
 
நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையின் முன் பார் பிம்பம்
 
நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதல் வெப்பம்
நான் கையில் மாற்றிக்கொள்ள
பொண்ணுன் கூந்தல் விழும்
விஷ்வதீரனின் எண்ணமில்லாம் உமேஷ், மம்தாவுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்வார்களா என்றிருந்தது.
“ஹாய் கைஸ்” விஷ்வதீரன் மம்தா மற்றும் அவளுடைய அண்ணன் உமேஷ்  இருவரும் இருந்த அறைக்குள் நுழைந்தவன் ஒரு கதிரையை இழுத்துப் போட்டு வலதுகாலை தூக்கி இடது காலின் மேல் போட்டு அமர்ந்தவாறே புன்னகைக்க அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் அர்த்தம் நிறைந்த பார்வையை பார்த்துக் கொண்டனர். 
அவர்கள் ஆவேசப்படுவார்கள் என்று விஷ்வதீரன் காத்திருக்க அவர்கள் அமைதியாகவே இருந்தனர்.
“சோ கைஸ் சாக போற சுனில எதுக்கு கொலை பண்ண பாத்தீங்க” சுவிங்கத்தை வாயில் இட்டவாறே அவர்களை ஏறிட அவர்கள் பார்வை பரிமாற்றம் செய்தார்களே ஒழிய பதில் சொல்லவில்லை. 
“ஓஹ் புரியலையா? நீங்க பழிவாங்க மெஸ்மரிசத்த அவனுக்கு சப்லை பன்னீங்களே! இன்னும் ரெண்டோ, மூணோ நாள்ல ஹாஸ்பிடல் அட்மிட் ஆவான் அப்பொறம் டாக்டர்ஸ் கைய விரிச்சுடுவாங்க, செத்துட்டான்னு நல்ல சேதி வரும். அது வரைக்கும் பொறுமையா இருக்காம எதுக்கு அவசரப்பட்டு கொலை பண்ண பாத்தீங்க?”   அவன் நிறுத்தி நிதானமாக, தெளிவான விளக்கத்தோடு சொல்ல அண்ணன் தங்கை இருவரினதும் முகத்தில் அதிர்ச்சி. 
என்னோட பாயிண்ட் ஒப்பி வீவ்ல பாதிக்கப் பட்ட நீங்க பலி வாங்க கிளம்பியது கூட ஓகே. ஆனா உங்களால நிறைய பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறாங்க. சிலர் செத்தே போய்ட்டாங்க அதுக்கு நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க? சுவிங்கத்தை மென்றவாறே பேசிக்கொண்டிருந்தவனின் திட்டம் அவனே அறிவான். 
“அவனுங்க என்ன உத்தம புத்திரர்களா? சமுதாய சீர் கேடு சார் செத்து தொலையட்டும்” உமேஷ் கத்தியே! விட்டான்.
அவர்கள் கொலை செய்து விட்டு சரணடைய இருந்ததை கூறிய பின் விஷ்வதீரன் முடிவு மாறியது. 
“சுனில் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள செத்துடுவான். உங்க ரெண்டு பேராலயும் ஒரு காரியம் ஆகா வேண்டி இருக்கு” விஷ்வதீரனை இகழ்ச்சியாக பார்க்க அதை சரியாக புரிந்துக் கொண்டவன் 
“எனக்காக இல்ல நாட்டுக்காக” என்ன எது என்று விலாவரியாக பேச அவர்களும் ஒத்துக்க கொண்டனர்.

Advertisement