நெஞ்சம் 8

“தம்பி நீங்க எந்த ஊரு..”

என்று சிரித்தபடியே தங்கப்பாண்டி கேட்கவும் தயக்கம் இன்றி பதில் சொல்ல தொடங்கினான் ஆர்யன்

“நான் பொறந்தது சென்னை தான், ஆனா அம்மா அப்பாக்கு சொந்த ஊர் திருச்சி “

“திருச்சியா…., சரி தம்பி சென்னைல என்ன பண்றீங்க”

“சென்னைல ஒரு கம்பெனில டிஎல்-அ இருக்கன் “

“என் பையன் கூட அங்க தான் கம்பெனில கம்பியூட்டர்ல வேல பாக்குறான்,  நல்ல கைநிறைய சம்பளம் வருமா , அது மாதிரியா தம்பி “

“எங்க நேரடியா நீங்க எந்த அலுங்கன்னு கேட்ட தப்பா ஆகிடிமோன்னு எப்படிலாம் சுத்து சோப்பு போடுறாரு இந்த பெரியப்பா “ என்று மனதில் திட்டிய படி மாறன் இவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

“அமாங்க,  அந்த மாதிரி வேலை தான் கம்ப்யூட்டர் வச்சி பாக்குறது “

“ அப்போ அங்க சென்னைல தான் இருக்கணும் சரியா தம்பி”

“அமாங்க அங்க தான் இருக்கணும் ”

“சரி தம்பி, அப்பறம் நீங்க எந்த ஆளுங்க “ என்று கேட்டு விட்டார்.

இந்த கேள்வியில் ஆர்யன் “ என்ன இது, இதலாம் கேட்குறாங்க “ என்று மயூரியை பார்க்க, அவளும் ஒன்றும் புரியாமல் அவள் அப்பாவை தான் பார்த்தாள்.

அவளின் அப்பாவோ மிக ஆர்வமாக ஆர்யனை பார்க்க,  அவள் திரும்பி அவள் அண்ணையை பார்த்தாள். அவர் என்ன சொல்ல என்று தெரியாமல் மயூரி கைகளை மட்டும் இறுக்கி பிடித்திருந்தார்.

அவரின் கை லேசாக நடுங்கி கொண்டிருப்பதை உணர்ந்த மயூரிக்கு பயம் தான் வந்தது. என்ன பூதம் கிளம்ப போகிறதோ என்று.

ஆர்யனுக்கும் உள்ளே பயம், ஒரே சாதி இல்லை என்றாள் கொலை செய்வது போல எத்தனை படங்கள் பார்த்திருப்பான். எங்கே அதே போல எதவது செய்து விடுவார்களோ என்று பயம் இருந்தாலும் அதை வெளி காட்டாமல்

“அது எதுக்கு இப்போ “  என்று அவர் கண்ணை பார்த்து பேசினான்.

“இது கிராமம் தம்பி இங்க ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு முறை இருக்கும் அதை பாத்து சரியா முறை பண்ண வேனாம்மா எங்க பொண்ணுக்கு. எத்தன நாள் கழிச்சி வந்திருக்கா எங்க த்ரிப்திக்கு  நாங்க செய்யனும்ல “ என்று சிரிக்கவும்,

ஆர்யனுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது

“இதுக்கா… “ என்று அவனும் சொல்லிவிட்டான்.

மறுநொடி தங்கப்பாண்டி முகம் கோபத்தில் மாற எழுந்து நின்று விட்டார்.

“எது நடக்கக் கூடாதுன்னு இருந்தேனோ, அதுவே நடக்குதே , இப்போ என்ன பண்ண போறாங்கன்னு தெரியல்லையே “ என்று பயத்தில் மாறன் யோசிக்க தொடங்கினான்.

தங்கப்பாண்டி கோபமாக எழுந்து நிற்பதை புரியாமல் பார்த்த ஆர்யன் “ என்ன ஆச்சு “ என்று கேட்டான்.

“இதுக்கு மேல இனி என்ன ஆகணும், அதான் எல்லாம் தப்பா போயிடுச்சே,  ஏம்மா நம்ம ஆளுங்கள்ல உனக்கு பையனே கிடைக்கலயா “

என்று தங்கப்பாண்டி மயூரியிடம் கேட்க,  மயூரி

“என்னது .. இல்ல எனக்கு புரியல “ என்று அவள் புரியாமல் முழிக்க

“தம்பி, அங்க இருந்து எழுந்திச்சி இங்க வா “ என்று தங்கப்பாண்டி கோபமாக அழைக்கவும்,  வீரப்பாண்டி மயூரியின் கையை “ ஒன்னும் ஆகாது ம்மா “ என்பது போல கையில் அழுத்தத்தை கொடுத்து விட்டு எழுந்து சென்றார்.

“ஏன் உங்க எல்லாரையும் தனி தனியா வெத்தல பாக்கு வச்சி கூப்பிட்டா  தான் வருவீங்களோ “ என்று அதட்டவும் அங்கிருந்த அனைவரும் தன்னை போல எழுந்து தங்கப்பாண்டியுடன் அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று மறைந்தனர்.

கடைசியாக தன் அக்காவின் கலங்கிய முகத்தை பாவமாக பார்த்தபடி மாறன் சென்றான்.

இவர்கள் அனைவரும் சென்றதும் மயூரி கலங்கி போய் ஆர்யனை பார்க்க அவன் ஆதரவாக மயூரியின் கையை பிடித்துக்கொண்டு

“ஒன்னும் ஆகாது மயிலு, நான் பாத்துக்குறேன் “ என்று போனில் முன்னெச்சரிக்கையாக தனது நண்பன் கிருபா விடம் மெசேஜில் லைவ் லொகேஷன் அனுப்பிவிட்டு எதற்கும் தயாராக இருந்தான் ஆர்யன்.

இங்கு அறைக்குள் அனைவரையும் அழைத்து வந்த தங்கப்பாண்டி “ தம்பி இது சரிப்பட்டு வராது,  நீ என்ன பண்ற , உன் பொண்ண சென்னைக்கே அனுப்பிடு இங்க இருக்க யாருக்கும் அவ உன் பொண்ணுன்னு தெரியும் முன்னாடியே அனுப்பிடு “ என்று சொல்வதை கேட்டு ஆத்திரமடைந்த மாறன்

“என்ன பெரியப்பா பேசுறிங்க,  எத்தனை வருஷம் கழிச்சி அக்கா திரும்பி வந்திருக்கிகா. அவ நல்ல படியா வந்திருக்கிறாளே ன்னு சந்தோஷம் படாம இப்படி துரத்தி விட சொல்றீங்க “

“தம்பி , இதுல நீங்க வராதீங்க, இதுல எவ்வளவு பிரச்சனை இருக்குன்னு உங்களுக்கு ஒன்னும் தெரியாது “

“என்ன ஒன்னும் தெரியாது, மாமா நம்ம சாதி இல்லைன்னு தான இப்படி பேசுறிங்க “

“ தம்பி கோபப்படாம யோசிங்க , இப்போ ஊருக்கு இப்படி சின்ன வயசுல தொலைஞ்ச பொண்ணு வேற சாதி பையன கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கா ன்னு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா தம்பி “

“ம்ம்ம்…,நல்ல தெரியும் உங்கள மாதிரி ஆளுங்க வேற என்ன பண்ணுவிங்க பெத்த பொண்ணுன்னு பார்க்காம, என் அக்காவ கொன்னு போடுவீங்க “ என்று சொல்லி முடிக்கும் முன் வீரப்பாண்டி

“மாறா…” என்று கோபத்தில் கத்தியிருந்தார்.

வள்ளியின் உடல் நடுங்கி, கண்கள் கலங்கி அழுதவர்  கைகூப்பி தங்கப்பாண்டியிடம்

 “  அத்தான்,  உங்கள கெஞ்சி கேட்கிறேன். என் பொண்ணு,  என் பொண்ண என் கூட  இருக்கலனாலும்  பரவாயில்லை, ஒரு பத்து நாளாவது அவ கூட என்ன இருக்க விடுங்க,  அதுக்கு அப்பறம் நானே அவள அனுப்பிடுறேன் .  அவள அதுவற எதுவும் பண்ணிடாதீங்க அத்தான் “

என்று அழுதவரின் கையை இறக்கிய மாறன் அவர் கையை இருக பிடித்தபடி “ அம்மா அழாதம்மா நான் பார்த்துக்கிறேன், அக்கா இங்கயே இருக்கட்டும் “

“வேண்டாம் தம்பி என் பொண்ணுக்கு என்னால கஷ்டம் வேண்டாம். அவ எங்கேயாவது நிம்மதியா இருந்தா போதும் எனக்கு. என்னால இத்தன பேரை எதிர்த்து நிக்க முடியாது தம்பி “ என்று அழுதவரை

“அம்மா…” என்று அணைத்த மாறனுக்கு என்ன செய்ய என்று ஒன்றும் புரியவில்லை.

தங்கப்பாண்டி “ சரி ம்மா நீ சொன்ன மாதிரி ஒரு பத்து நாள் உன் பொண்ண உன் கூடவே வச்சிக்கோ. ஆனா, இந்த வீட்டுல தான் வச்சுக்கணும் அந்த பத்து நாளும் , வெளியில யாரவது கேட்ட கூட மாறன் பிரண்டு ஊர் சுத்தி பார்க்க தான் வந்துருக்காங்கன்னு சொல்லனும், சரியா “

“சரி அத்தான் “ என்று குரல் கம்ம சொன்னார். இவை அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த வீரப்பாண்டி ஒரு வார்த்தை கூட பேசவில்லை முகத்தை இறுக்கமாக வைத்தவர் அப்படியே கல்போல நின்றிருந்தார்.

அந்த அறையை விட்டு வெளியே வந்த தங்கப்பாண்டி ஒன்றும் பேசாமல் மயூரியின் முகம் கூட பார்க்காமல் வாசல் நோக்கி சென்றவர், அவர் பின்னே அவர் தம்பி வரவில்லை என்றதும் திரும்பி பார்த்தார்.

அங்கே அறையை விட்டு வந்த வீரப்பாண்டி மயூரியை நிமிர்ந்து பார்த்தபடி இருந்தார். முகத்தில் சற்று நேரம் முன் இருந்த மகிழ்ச்சி சுத்தமாக இல்லை முகம் இறுகி போய் அவர் என்ன யோசிக்கிறார் என்று கணிக்க முடியாத படி இருந்தார்.

அவரை பார்த்த தங்கப்பாண்டி “ தம்பி போலாம் வா “ என்று அண்ணன் குரல் கேட்கவும் கீ போட்ட பொம்மை போல உணர்வின்றி சென்றார்.

பின் தங்கப்பாண்டி மயூரியைத் திரும்பிப் பார்த்து “ இது கிரமம் இந்த மாதிரி சின்னப் பிள்ளை டிரஸ்லாம் போட கூடாது, இங்க இருக்கிற வரை “ என்று விரைப்பாகச் சொல்லிவிட்டு செல்பவரை பார்த்த மயூரிக்கு

“இங்க என்னயா நடக்குது “ என்று ஒரே குழப்பம்.

வெளியே வந்த மாறன் கோபமாக சென்று வெளி தின்னையில் அமர்ந்து கொண்டான். வள்ளியோ கண்கள் சிவந்து வந்தவர் மயூரியின் கையைப் பிடித்து கொண்டு அழத் தொடங்கி விட்டார்.

“நான் பாவி ….நான் பாவி …. என் பொண்ணைக் கூட என்னால கூட வச்சிக்க  முடியல்லையே, நான் பாவிம்மா…”

“அம்மா… என்ன ஆச்சிம்மா, அழாதீங்க…ஏன் அழுறிங்க , பாட்டி… அம்மாவ அழ வேணாம்னு சொல்லுங்க “

“அவள அழ விடும்மா, இங்க எங்களால வேற என்ன பண்ண முடியும் “ என்று வெள்ளையம்மாவும் அழுதபடி முந்தானையில் கண்களைத் துடைக்க

“பாட்டி… நீங்க ஏன் இப்போ அழுறிங்க,  உள்ள அப்படி என்ன ஆச்சி, அவுங்க என்ன சொன்னாங்க உள்ள போய் “ என்று மயூரி அனைவரது முகத்தையும் பார்க்க , மஞ்சுல உள்ளே நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவள்.

“ அக்கா, இங்க எல்லாரும் இப்படி தான். சாதியை மூச்சா பார்ப்பாங்க க்கா, நம்ம சொல்லி புரிய வைக்க நினைச்சா போட்டு வெளுத்துடுவாங்க க்கா, பாவம் சித்தி, நீங்க இல்லாம எவ்வளவு கஷ்ட பட்டாங்க தெரியுமா அக்கா. நீங்க எங்க இருந்தாளும் பத்தரமா இருக்கணும்னு வேண்டாத நாள் இல்லை.

சாரி அக்கா, எங்க அப்பா முன்னாடி எங்களால எதுவும் பண்ண முடியல்லை “ என்று அவளும் லேசாக தேம்பிய படி பேசி முடித்தாள்.

இவற்றை எல்லாம் பார்த்த ஆர்யனுக்கு மயூரியை எதவது செய்து விடுவார்களோ  என்று பயம் அதிகமாக “மயிலு, நம்ம இப்பவே சென்னைக்கு கிளம்பலாம் வா..” என்று எழுந்து நின்றுவிட்டான்.