இரவு நேரம் பூச்சிகள் சத்தம் காதில் விடாமல் கேட்டுக்கொண்டிருக்க, அதை எதுவும் உணராத வேதா கையில் விடைத்தாளை வைத்தபடி அதையே வெறித்துக்கொண்டு இருந்தாள் .
மூளை வேலை செய்வேனா என்று அடம்பிடிக்க, பைத்தியம் பிடிக்காத நிலை தான். வேதா இன்றும் எப்போதும் போல் பள்ளி முடிந்து மகிழ்ச்சியாகவே வீடு திரும்பினாள்.
வீட்டில் அம்மா அப்பா கையில் இவளின் ஜோசிய நோட்டை வைத்த படி எதோ பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவள், அமைதியாக சென்று என்ன பேசிகிறார்கள் என்று கேட்க தொடங்கினாள்.
“ இந்த வருஷமே முடிச்சிடலாம்னு பாத்த ஜோசியர் வேற நேரம் சரியில்ல குறு பெயர்ச்சின்னு அடுத்த வருஷம் பாக்க சொல்லிடாரே “ என்று சுவற்றில் சாய்ந்து சோகமாக பேசியபடி இருந்தார் ஜோதி
“ ஒரு வருஷம் தான …” என்று சாதாரணமாக முருகர் சொல்ல
“ ஒரு வருஷம் தானன்னு ஈசியா சொல்றீங்க, இப்போவே அவளுக்கு வயசு இருபத்தி இரண்டு. இந்த வருஷம் பாத்தா தான இருபத்து மூணுல முடிக்க முடியும், அடுத்த வருஷம்னா எப்படி இருபத்தி நாளு, அந்த வயசுல பண்ணக் கூடாதுங்க இரட்டைப்படை வயசு”
“என்னம்மா… அப்படிலாம் தள்ளி போகாது இருபத்து மூனுலயே முடிச்சடலாம் நீ பயப்படாத “ என்று இருவர் பேசியதை கேட்டு தான் இப்படி அமர்ந்திருகிறாள் வேதா.
இதுவரை திருமணம் பற்றி சிறிதும் யோசிக்காதவள் ,இன்றி அம்மா அப்பா அவள் திருமணம் பற்றி பேசவும் விக்ரமன் முகமே மின்னி மறைந்தது. அதில் பயந்து போய் தான் முழித்து கொண்டு இருக்கிறாள்.
“என்னது வேதா இது , இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்க அவங்க நம்ம ஆளுங்க இல்லடி, நம்ம வீட்டில ஒத்துக்க மாட்டாங்க, அப்படியே அதிசயமா ஒத்துக்கிட்டாலும் அவங்க வீட்டில்ல மாட்டவே மாட்டாங்க, எந்த தைரியத்துல உனக்கு இப்படி ஆசை வருது “
என்று தலையைப் பிடித்தபடி இருந்தவள் கண்கள் கலங்கி கண்ணீர் வலிய தொடங்கவும்
“ ஆசை படாத வேதா , இது வேண்டாம், அவுங்க இப்படி நினச்சி உன் கிட்ட பழகல “ என்று மனதோடு போராடிக்கொண்டிருக்கும் போது காலை விக்ரமன் அவளை பார்த்து நினைவு வர
“ என்ன பார்வை அது, ஒரு வேளை என்ன அவருக்கு பிடிக்குமோ” என்று நன்றாக யோசித்தவளுக்கு , கிடைத்த பதில் “ஒரு வேல இருக்குமோ, வாய்ப்பு இருக்கு, பேசாம நம்ம நேர்லயே போய் கேட்டிருவோமா “ என்று யோசித்தவள்.
பின் தலையை உலுக்கி கொண்டு “ நோ, இல்ல இப்போதைக்கு வேண்டாம். அதான் ஒரு வருஷம் டைம் இருக்குல, அதுக்குள்ள அவனா வந்து சொல்றானான்னு பாப்போம் இல்ல நம்மளே அவன தூக்கிடலாம் “
என்று எண்ணியவள் முகம் தெளிந்து அழுகையில் இருந்து புன்னகைக்கு மாற “காலையில்ல கூட வேதாளத்தை தூக்கும்போது பாருன்னு சொன்னான்ல” என்று யோசித்தவள், அவள் முன் விக்ரமன் அமர்ந்திருப்பது போல எண்ணிக்கொண்டு
“இதோ பாருங்க விக்ரமன், நீங்க தூக்கமா போனாலும் இந்த வேதாளம் உங்கள விடாது, உன் தோளில்ல தான் கடைசி வரையும் இருப்பேன் என்ன ஆனாலும் சரியா “ என்று சொல்லியபடி நிம்மதியாக தூங்கச் சென்றாள்.
இப்படியே ஆறு மாதங்கள் கண் இமைக்கும் நேரத்தில் சென்றுவிட்டது. இந்த ஆறு மாதங்களும் விக்ரமன் வேதாவை பார்க்கும் இடம் எல்லாம் செல்லமாக சீண்டிவிட்டு போவதோடு சரி காதலை இவளும் சொல்லவில்லை அவனும் சொல்லவில்லை.
காலை அந்தச் மெயின் ரோட்டில் ஜீப்பை வேகமாக ஓட்டியபடி மாறன், அவர்களின் ஆபீஸ் நோக்கி சென்றான். அங்கு அலுவலகத்தில் விக்ரமனும் பதட்டத்துடன் வெளியே நின்று யாரிடமோ போன் பேசியபடி இருந்தான்.
வந்த வேகத்தில் ஜீப்பை விட்டு இறங்கிய மாறன் , விக்ரமனிடம் வந்து
“ ராம் , சேஃப் தானே விக்கி “ என்று பதட்டமாக கேட்டான்.
“அது மாறா… ராம்ம காணோமடா..” என்று தயங்கி விக்ரமன் சொன்னதை கேட்டு தலையை பிடித்த மாறன்
“ அவன பத்திரமா பார்த்துக்க சொல்லி தானடா விட்டு வந்தோம், அவன பாத்துக்காம என்ன பண்ணாணுங்கலாம் ”
“நைட் எல்லாரும் தூங்கிட்ட பிறகு போயிருக்கான்டா. “
“ இந்த ராம்கு ஒரு நாள் வெயிட் பண்ண முடியாத “ என்று தரையை உதைக்க, விக்ரமன்
“உனக்கு எப்படி மாறா தெரியும் ராம் ரூம்ல இல்லன்னு “
“அது இங்க கிளம்பி வரும் போது அப்பாவும் பெரியப்பாவும் வாழைத் தோப்புக்கு போறத பார்த்தேன், அவங்க அங்க இப்போ எதுக்கு போகணும் வேலை எதுவும் இல்லையே, அதுவும் சேர்ந்து ரெண்டு பேரும் போகவும் டவுட்ல தான் வந்தேன் “
“விக்கி , எனக்கு ஒரு ஐடியா, இப்போ ராம் அங்க மாட்டியிருக்கும் போது அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கம்மியா தான் இருக்கும் . எதவது ரூம்ல தான் அடச்சி வச்சிருப்பாங்க , கரைட்டா“
“ஆமாடா அங்க அந்த பெண்ணைக் கொல்லைப்புற ரூம்ல தான் அடச்சி வச்சிருக்காங்கன்னு பக்கத்து வீட்டு ரேவதி சொன்னா “
“அப்போ ஓகே நீ என்ன பண்ணு நம்ம குறும்ல கொஞ்ச பேரை விட்டு அந்த பொண்ண தூக்கிடச் சொல்லு. அதே டைம் நான் எங்க அப்பாவ எதோ சாக்கு சொல்லி பார்க்கப் போறேன், அப்படியே அங்க ராமை எங்க வச்சிருக்காங்கன்னு பார்த்துச் மெசேஜ் அனுப்புறன், நீ உடனே பசங்களை விட்டு அவனையும் தூக்கிடு “
“ ஓகேடா மாறா, இவங்க இங்க வந்த ஒடனே நம்ம ஆல்ரெடி ப்ளான் போட்டு வச்சிருக்க மாதிரி நம்ம த்ரூவ் சார் கிட்ட அனுப்பி வச்சிறேன் “
“ம்ம்ம் .. ரெண்டு பேரையும் டைம் வேஸ்ட் பண்ணாம இந்த ஊர விட்டு அனுப்பிடுடா. அன்ட் நம்ம பசங்க யாரும் மாட்ட கூடாதுடா பாத்து “ என்று சொல்லியபடி மாறன் ஜீப்பில் தோப்பை நோக்கி சென்றான்.
தோப்பை நோக்கி செல்லும் வழியில் ஒரு பெண் கவுன் ஒன்றை அணிந்துகொண்டு தெருவில் நடந்து செல்வதை யோசனையாக பார்த்த படி அந்த பெண்ணை கடந்து சென்றான் மாறன்.
அங்கு வாழை தோப்பில் ராமை போட்டு அடித்துவிட்டு, பின் அவனை கட்டி அங்கேயே போட சொல்லிவிட்டு வெளியே இவர்கள் வர, இவற்றை எல்லாம் மறைந்து நின்று பார்த்த மாறன், விக்ரமனுக்கு மெசேஜ் செய்து விட்டு ஒன்றும் அறியாதது போல அவன் அப்பா மற்றும் பெரியப்பா முன் வண்டியை கொண்டு நிறுத்தினான்.
மாறன் மனதில் “ இப்போ ஏன் இங்க வந்தா ன்னு கேட்ட நான் என்ன சொல்ல “ என்று யோசித்தபடி இருக்க, தங்கப்பாண்டி மற்றும் வீரப்பாண்டி இருவரும் மாறனிடம் எந்த கேள்வியும் கேட்காமல் ஜீப்பில் ஏறி அமர்ந்தனர்.
“யாரு தம்பி அந்த பொண்ணு ஊருக்குள்ள சின்ன பிள்ளைங்க கவுன் போட்டுட்டு வந்திருக்கான் “ என்று தங்கப்பாண்டி முறைத்தபடி கேட்க, மாறன் முதலில் என்ன என்று பார்த்தவன் பின் தெளிந்து
“அது பிள்ளைத்தாச்சி புள்ளைங்க போடுற ட்ரெஸ், அது அப்படி தான் இருக்கும் “ என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு பேசினான், உடனே வீரப்பாண்டி
“ ஏன் நம்ம ஊருலலாம் பிள்ளைத்தாச்சி பொண்ணுங்க இல்லையா என்ன, அவுங்களாம் இப்படியா போட்டுட்டு இருக்காங்க “
“கிராமத்துக்கு வந்த எப்படி உடுப்பு போட்டு வரணும்னு தெரியாதா அந்த பொண்ணுக்கு “ என்று தங்கப்பாண்டி சொல்ல இது எதையும் காதில் வாங்காத மாறன் மனதில்,
“எல்லாம் சரியா நடந்துரும்மா “ என்று யோசித்தபடியே வீட்டை நோக்கி ஜீப்பை விட்டான்.
இவர்கள் செல்லும் வழியில் இவர்கள் இருந்த தெருவில் வசிக்கும் ஒருவர் கையை ஆட்டி ஜீப்பை நிறுத்த, மாறன் ப்ரேக்கை அமுக்கி நிறுத்தியவன் .
“ சொல்லுங்க அண்ணா என்ன ஆச்சு “ என்று கேள்வியாக பார்க்க, உடனே அவர்
“ தம்பி உங்க பழைய வீட்டுக்கு புதுசா யாரோ பொண்ணு வந்துருக்கு என்ன தூரத்து சொந்தம்மா உங்களுக்கு “ என்று கேட்கவும் , ஒன்றும் புரியாத மாறன்.
“யாரு வந்திருக்கா அண்ணா “ என்று குழப்பமான முகத்துடன் கேட்டான்.
“அதான் தம்பி புதுசா பிள்ளைத்தாச்சி பிள்ளை ஒன்னு ஊருக்குள்ள வந்துச்சே, அந்த புள்ள தான், உங்க பழைய வீட்டுக்குள்ளே தான் போச்சி , ஏன் உங்களுக்கு தெரியாதா என்ன” என்று அவர் யார் என்று விவரம் கேட்கும் ஆர்வத்தில் உள்ளே இருந்த தங்கப்பாண்டி மற்றும் வீரப்பாண்டியை பார்க்கவே இல்லை.
மாறன் யாரென்று யோசிக்கும் நேரத்தில் வீரபாண்டி “ இதைக் கேட்க தான் வண்டியை நிறுத்தினியோ இப்போ “ என்று வீரபாண்டியன் கோப குரல் கேட்டு அந்த நபர் பவ்வியமாக,
“ அது இல்ல ஐயா, நான் வந்து , சொல்ல தான் வந்தேன் ஐயா, சரி நான் போய்ட்டு வறேன் ஐயா “ என்று அங்கிருந்து நகர்ந்து விட்டான் , அவர் சென்றதும் தங்க பாண்டி
“ பழைய வீட்டுக்கு போங்க தம்பி, யாருன்னு பார்த்துடுவோம் “ என்று யோசனையாக மீசையை முறுக்கியவரை கண்ணாடி வழியே பார்த்து விட்டு வண்டியை எடுத்தான் மாறன்.