நெஞ்சம் 44

மாறன் சொன்னதை கேட்டு அதிர்ந்த மயூரி “என்னடா சொல்ற அவர் அப்படியா பண்ணாரு…. அச்சோ பெரியம்மா….” என்று மீனாட்சியின் கையை பிடித்துக் கொண்டவள்

“நீங்க இங்கயே என் கூடவே இருங்க பெரியம்மா. நான் உங்கள பார்த்துக்கிறேன். நீங்க இல்லாம அவரு ஊர்லயே கஷ்டப்படட்டும் அப்போ தான் உங்க அருமை அவருக்கு தெரிய வரும் “

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா எல்லாம் பழகிடுச்சு இத விட எத்தனையோ பார்த்துட்டேன் இது என்ன “ என்று அவர் இயல்பாக சிரிக்க, அதை பார்த்த மயூரிக்கு தான் மனமே கேட்க வில்லை

“ இல்ல பெரியம்மா நான் நிஜமா தான் சொல்றன். சரின்னு சொல்லுங்க உங்கள நான் பாத்துக்குறன் “

“அச்சோ தங்கப்புள்ளை…” என்று அவள் நாடி பிடித்து கொஞ்சியவர் “ இத அப்பறமா பேசிக்கலாம் ம்மா “ என்று சொல்லவும் தலை அசைத்து கேட்டு கொண்டாள் மயூரி.

அதன் பின் எல்லோரும் ஒன்றாக பேசி சிரித்து என்று அந்த இடமே மகிழ்ச்சியில் நிரம்பி இருந்தது.

பின் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மயூரிக்கு குழந்தை பிறக்கும் வரை இங்கே தான் வாசம் என்று முடிவு எடுத்து விட, மாறன்

“அப்பா என்ன நீங்களும் இங்க இருக்கன்னு சொல்றிங்க. விக்கியும் ஒரு மாசம் வரமாட்டேன்னு சொல்லிட்டான் தனியா நான் ஒருத்தன் என்னன்னு பாப்பான். பிசினஸை பார்க்கவா வயல் தோப்பு காட்ட பாக்கவா “

“ஒரு மாசம்தானே தம்பி பாருங்கடா அப்பா பாவம்ல “ என்று வள்ளியும் சப்போர்ட் செய்ய மாறன் அங்கிருந்து அடுத்த நாளே புலம்பியபடி ஊருக்கு சென்றான்.

இவன் செல்வதை யாழினிதான் ஏக்கம் கலந்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“எருமை மாடு எல்லாம் சரியா செய்றான் என்ன மட்டும் டீல்ல விட்டுறான். இன்னும் ஒழுங்காகக்கூட பேசுனது இல்ல கேட்டா லவ் பண்றானாம் போடா….” என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டாள்.

இவளின் சொகமான முகத்தைப் பார்த்த ஆர்யன் நல்ல முடிவு ஒன்று எடுத்தான்.

வீரா தனியாக இருக்கும் போது அவரிடம் சென்று “ மாமா….” என்று அழைத்த படி அவர் அருகே அமர்ந்தான்.

“வாங்க மருமகனே சொல்லுங்க மயில் ஏதாவது சொல்ல சொல்லுச்சா “

“அது இல்ல மாமா மாறன் கல்யாணத்தை பத்தி  பேச வந்தேன் “

அதை கேட்டு அவர் முகம் உடனே வாடிவிட

“ எனக்கும் அவன் ஒரு கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கணும் தான் ஆசை. ஆனா அவன் எங்க கேக்குறான்” என்று அங்கே விளையாடிக்கொண்டிருந்த மொழியை பார்க்க

“ அவன நான் பேசி ஒத்துக்க வைக்கிறேன் மாமா “

“அவன் ஒத்துக்கிட்டா போதுமா மருமகனே பொண்ணு குழந்தையோட இருக்குறவன ஏத்துக்கணுமே “

“ அதெல்லாம் ஏத்துக்க ரெடியா தான் இருக்காங்க மாமா “ என்று சிரித்தவனை புரியாமல் பார்த்த வீரா

“என்ன சொல்றிங்க மருமகனே யாரு அந்த பொண்ணு “

“ பொண்ணு தங்கமான பொண்ணு. ஆனா உங்க ஆளுங்கள்ல வராது அதான் யோசிக்கிறேன் “

“அட போங்க தம்பி இப்போலாம் நான் அதை நினைப்பதே இல்ல. அவன் அவன் கண்டம் விட்டு கண்டம் கல்யாணம் பண்ணிட்டு  இருக்காங்க நம்ம இதுலயே மாட்டிட்டு இத்தன நாள் இருந்திருக்கோம் “

“ இப்பவாது உங்களுக்கு புரிஞ்சுதே அது போதும் “ என்று மூச்சை இழுத்து விட்டவன்

“என் தங்கச்சி யாழினி பத்தி என்ன நினைக்கிறீங்க மாமா “ என்று சொல்லிவிட வீரா கண்கள் மின்ன

“ அந்த புள்ள யாழினியா அது நல்ல புள்ளயாச்சே அந்த புள்ளையையா சொல்றிங்க “ என்று நம்ப முடியாமல் அவர் கேட்க

“ ஆமா மாமா அவள தான் சொல்றேன் “

“அந்தப் பிள்ளை ஒத்துக்குமா மருமகனே நம்ம மாறன அவன் மகனோட ஏத்துக்குறதுக்கு “

“அதெல்லாம் ஓகே சொல்லிட்டா மாமா அவன் சரி சொன்ன பிறகு தான் உங்க கிட்ட கேக்குறேன் “ அதை கேட்டு மகிழ்ந்த வீரா ஆர்யன் கையை இறுக பிடித்து கொண்டு

“ரொம்ப சந்தோஷம் மருமகனே…” என்று மகிழ்ந்தவர் “ இப்போதைக்கு மாறனுக்கு சொல்ல வேண்டாம் மருமகனே நம்ம மயூரிக்கு குழந்தை பிறந்ததும் உடனே கல்யாணத்தை வச்சிக்கலாம் “

அதற்கு ஆர்யனும் தலையசைத்து கொண்டான். இப்படி இங்கே அனைத்தும் நல்ல விதமாக சென்றது என்றால் அங்கே தங்கம் நிலையோ நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருந்தது.

தங்கத்திற்கு காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கு முன் வரை மீனாட்சி அவர் அருகே இருக்க வேண்டும்.

அது என்னவோ காலை எழுந்ததும் அவர் தரும் காப்பியில் தான் நாளே விடியும் காலை உணவு உண்ணும் போது அவர் அருகேயே மீனாட்சி இருக்க வேண்டும்.

இவரும் மீனாட்சியை எதாவது சொல்லிய படியே இருக்க வேண்டும். மதியம் என்ன தான் தம்பியுடன் உண்டாலும் இரவு மீனாட்சி சுட்டு தரும் சூடான தோசையை அவர் முகம் பார்த்து உண்ணாவிட்டால் அவருக்கு உறக்கம் பறந்து தூரம் தான் போய்விடும்.

இப்படி இருந்தவருக்கு தனியாக அந்த வீட்டில் இருக்கவே நரகமாக இருந்தது. சரி தம்பி வருவான் எப்படியும் அவனிடம் பேசி அவளை வரவைத்து விடலாம் என்றால் அவனும் வர மாதிரி இல்லை.

போனில் அவளை அழைக்கவும் தன்மானம் இடம் கொடுக்காமல் போக பசி தூக்கம் இன்றி அழைத்து திரிந்தார்.

அதில் உடல் மெலிந்து கண்ணை சுற்றி கருவளையம் என்று இருந்தவரை பார்த்து ஊரே என்ன என்று கேட்டிருக்கும். இவர் வாயை திறப்பேனா என்று யாரிடமும் சொல்ல வில்லை.

பல நாள் இரவு முழுதும் தூங்காமல் இருந்ததில் டாக்டரிடம் சென்று தூக்க மாத்திரை வாங்கி போடும் நிலைக்கு வந்து விட்டார்.

புரிந்தது, அவர் செய்த தவறு ஆனால் அதை ஒத்துக்கொள்ள தான் மனம் வரவில்லை. இப்படியே ஒன்றரை மாதம் ஆகியிருக்கும்.

இரவு மூன்று மணி தூங்காமல் அமர்ந்தவாக்கில் அவரின் திருமண புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தார்.

இவரொன்றும் கொடுமைக்காரன் அளவு எல்லாம் துன்புறுத்தல் செய்பவர் இல்லை எப்போதாவது மிகுந்த கோபத்தில் இருக்கும் போது இவரை மீறி கை நீட்டி விடுவார்.

அது தவறு என்று மீனாட்சியின் கலங்கிய முகத்தை பார்த்ததும் புரிய வரும் ஆனால் ஆண்  என்ற கர்வத்தில் மன்னிப்பு கேட்க மாட்டார்.

அதே சமயம் மறுநாள் மீனாட்சிக்குப் பிடித்த மஸ்கோத் அல்வா இனிப்பு சேவ் என்று வாங்கி வந்து கொடுத்து ஒரு பார்வை பார்த்து விட்டு போவார்.

அந்த பார்வைக்கு அர்த்தம் மன்னிப்பு என்று தங்கம் நினைத்து வைத்திருக்க மீனாட்சியோ

 “ என்ன இந்த மனுஷன் நேத்து அடிச்சதும் இல்லாம இப்படி மொரச்சிட்டு போறாரு… ரொம்ப தான் “ என்று தலையை திருப்பி கொண்டு செல்வார்.

மீனாட்சி அல்வா சாப்பிடுவதிலே அவர் கோபம் சென்றுவிட்டது போல என்ற எண்ணத்தில் மீசையை முறுக்கி விட்டு செல்லும் தங்கம் இன்று வரை இதை தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த முறை தான் கோபத்தில் அனைவரின் முன் கை ஓங்கி, பலமாக அடித்து விட்டார். இப்படி கன்னம் சிவக்க இது வரை அடித்திறாதவர் இம்முறை கண் முன் தெரிய கோபத்தில் அடித்து விட்டார்.

 பின் செய்த தவறில் வருந்த தான் செய்கிறார். இருந்தும் மனைவியிடம் தாழ்ந்து செல்வதில் அவரின் கர்வம் இடம் கொடுக்க வில்லை.

என்ன தான் நாடு ராக்கெட் வேகத்தில் முன்னேறி சென்றாலும் இன்றும் பல பெண்கள் மீனாட்சியை விட மோசமான நிலையில் தான் இருக்கிறார்கள்.  அது மறுக்க முடியாத உன்னையும் கூட.

தங்கத்தின் நிலையை பார்த்து மாறனுக்கே பாவமாக போய்விட்டது. அவரிடம் சென்று பேசலாம் என்று போனால் அவர் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி கொண்டு போக மாறன் சென்னைக்கு கிளம்பி சென்றுவிட்டான்.

அங்கே மீனாட்சியிடம் இதை சொல்ல மறுநிமிடமே அவர் ஊருக்கு கூட்டி போ என்று புலம்பி தீர்த்து விட்டார்.

“பெரியம்மா பீச் பார்க்கணும் ஆசைப்பட்டீங்கதானே எப்படி இருந்தாலும் நம்ம ஊருக்கு பஸ் நைட் தான் இருக்கும். சோ இப்போ பீச் மட்டும் போயிட்டு வாங்களேன் “

“ஆனா மயிலு….” என்று அவர் இழுக்க வீரா

“தம்பி எனக்கும் ஒரு டிக்கெட் போடுப்பா நானும் ஊருக்கு வரேன் அண்ணாவ இப்படி விட்டது என் தப்பு தான்“

“சரிப்பா… அப்போ அம்மா மஞ்சு இங்க இருக்கட்டும் நம்ம மூணு பேரும் மட்டும் போவோம் “

“ம்ம்ம் தம்பி”

“மாறா அப்போ அப்படியே பீச்சுக்கு இவங்கள இன்னைக்கு கூட்டி போய்டு வந்துடு டா “

என்று மயூரி சொன்னபடி வள்ளி, மீனாட்சி, வீரா, மஞ்சு, யாழினி, மொழி என்று ஆர்யனை , மயூரியை தவிர அனைவரும் கடற்கரை சென்றிருந்தனர்.

வீட்டில் இருந்த ஆர்யன் லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்த நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்த மயூரிக்கு சுருக்கென்று அடிவயிற்றில் வலிப்பது போல இருக்க மெதுவாக எழுந்து ஆர்யனிடம் செல்லும் முன் வலி அதிகமாக எடுக்க

“ஆரி….” என்று கத்தியிருந்தாள் அதில் பதட்டமான ஆர்யன் மயூரியை அழைத்து கோண்டு கதவை திறக்க அங்கே தங்கம் கைகளை பிசைந்த படி நின்று கொண்டிருந்தார்.