நெஞ்சம் 42

இங்கு வந்தது முதல் முகத்தைப் பார்த்து, அவள் அருகேயே இருந்து, இவளை பற்றியே நினைத்து உருகிக்கொண்டு இருக்கும் வள்ளி நின்ற நிலையை பார்க்க முடியாத மயூரி தலையை குனிந்தபடி

“ என் நம்பர் என் அட்ரஸ் மாறனுக்கு தெரியும் ம்மா. எப்போ வேணும்னாலும் நீங்க எல்லாரும் என்னைப் பார்க்க வரலாம். நான் சாதிலாம் பாத்து உங்கள கஷ்டப்படுத்த மாட்டேன் “

என்று சொல்லி முடித்தவள் வெளியே செல்ல போக அங்கே விக்ரமன் மற்றும் வேதா வந்து நின்றனர்.

இவர்களை பார்த்த மாறன் “ என்ன விக்கி காலையிலேயே வந்திருக்க மறுவீட்டுக்கு போலயா “

“முதல்ல ஹனிமூன் போய்டு மறுவீட்டுக்கு பொயக்காலாம்னு அக்கா சொல்லிட்டாங்க டா “

“என்னது ஹனிமூனா ?”

“ம்ம்ம் மாறா சென்னைல ஓஎம்ஆர்-ல் ரிசார்ட் ஒன்னு அக்கா புக் பண்ணிருக்காங்களாமே “

“ இது எப்போ நடந்துச்சு “

“அக்காவோட மேரேஜ் கிஃப்ட் மாறா. டூடேஸ் அக்கா வீட்டுல ஸ்டே பண்ணிட்டு  அங்க இருந்து ரிசார்ட் போற பிளான் அப்படியே கொடைகானால்ன்னு டூவீக் ட்ரிப்டா உனக்கு தெரியாத “

என்று விக்ரமன் ஷாக் ஆகா  “ எதுவுமே சொல்லாம தெரியாதன்னு கேக்குற “

“நீயும் அக்காவும் சேர்ந்து பிளான் பண்ணதுன்னு நினச்சேன் டா “ என்று மயூரியை அவன் பார்க்க

“ மாறா டைம் ஆச்சு. நாங்க இப்போ கிளம்புறோம் நீ அவன் கிட்ட போன்ல பேசிக்கோ “ என்று விக்ரமனுக்கு கண் காட்ட அவனும் அங்கிருந்தவர்களின் முகத்தை பார்த்து விட்டு

“என்ன பேய் அரஞ்ச மாதிரி நிக்குறாங்க” என்று எண்ணியவன்

“நான் போய்டு வந்து பேசுறேன் பாய்…..” என்று கையை அசைத்து விட்டு மயூரிக்கு பின்னாலேயே சென்றுவிட்டான்.

இங்கு மயூரி சென்ற பின்னுமே அவள் சொல்லிச் சென்றதின் தாக்கம் அகலாமல் தான் நின்று கொண்டிருந்தனர்.

மாறனும் “அடுத்து என்ன சென்னைக்கு போய்டுவோமா , இந்த யாழ் கூட ஒரு வார்த்தை சொல்லலையே “

என்று வருந்திய படி நின்று கொண்டிருந்த போது அவன் போனில் நோட்டிபிகேஷன் சத்தம் கேட்கவும் அதை என்ன என்று திறந்து பார்த்தான்.

அதில் மயூரி வாட்ஸ்அப் மெசேஜாக “ சாரி மாறா உன் கிட்ட சொல்லாம இப்படி போறதுக்கு.

அண்ட் என்ன பத்தி கேட்டா எல்லாம் சொல்லிரு அவுங்க தெரிஞ்சுக்கட்டும். அப்படியாவது அவுங்க நெஞ்சு உருகுதான்னு பாப்போம்.” என்று அனுப்பி வைத்திருந்தாள்.

அதன் பின்னும் இன்னொரு மெசேஜ் அனுப்பி வைத்திருந்தாள்.

“ என்ன பத்தி எல்லாம் சொல்லு ஆனா லட்சுமி ம்மா யாருன்னும் அவுங்க ஆரியோட அத்தைன்னும் சொல்லிடாத அது மட்டும் யாருக்கு தெரிய வேண்டாம் “

இவற்றை படித்த மாறன் கண்களை இறுக மூடி திறந்தவனாக போனை வைத்து விட்டு.

“இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் அவங்களா கேட்கட்டும்“ என்று நினைத்து அவன் அறை செல்ல மாடி ஏறும் போது

“ தம்பி….உன் அக்கா… அவ சொன்னது உண்மையா “ என்று தங்கம் தான் கேட்டிருந்தார்.

அவர் குரலில் அவரை திரும்பி மாறன் பார்க்க அங்கிருந்த அனைவருமே அவன் முகத்தை தான் மயூரி சொன்னது உண்மையா இருக்க கூடாது என்ற பரிதவிப்போடு பார்த்திருந்தனர்.

அவர்களின் முகங்களை பார்த்து விட்டு கீழே இறங்கியவன் “ எல்லாரும் மொதல்ல உட்காருங்க இங்க ….” என்று சோபாவை காட்டினான்.

அவன் அமர சொல்லியும் அனைவரும் அமராமல் ஒரு வித பதற்றத்தோட நின்று கொண்டிருக்க மஞ்சு

“உட்காருங்க சித்தி… அண்ணா சொல்றன்ல உட்காரு ம்மா, பாட்டி உக்காருங்க “என்று அனைவரையும் அமர வைத்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து நிதானப்படுத்தியவள்.

அவர்கள் பின்னே சென்று நின்று கொண்டாள். அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு சொல்ல தொடங்கினான்.

 மயூரியை பற்றி அவளை இங்கு இருந்து கடத்தி சென்றதிலிருந்து.

கல்கத்தாவில் அவளை விற்று அங்கிருந்து லட்சுமி உதவியுடன் தப்பி வந்து அங்கே ஜெய்யிடம் மாட்டிக்கொண்டது வரை சொல்லி முடித்தான்.

“ ஐயோ….. என் புள்ள….” என்று வெள்ளையம்மா கத்தி அழ தொடங்கிவிட

“ இவ்ளோ கஷ்டப்பட்டு வந்த புள்ளைய நானும் என் அண்ண பேச்சி கேட்டு கஷ்டப்படுத்திட்டேனே “ என்று புலம்பிய வீராவை கண்கள் சிவக்க பார்த்த வள்ளி சடார் என்று சோபாவை விட்டு எழுந்து

“ மாறா என்ன சென்னைக்கு கூட்டிட்டு போ “  என்று குறள் கறகறக்க பேசினார்

“ இப்போவேவா ம்மா நான் டிக்கெட் இருக்கான்னு பாத்து சொல்றேன் “

“சரி நீ பாத்துட்டு என்ன எங்க அம்மா வீட்டுல வந்து பாரு “ என்று செல்லி செல்ல போனவரை தடுத்தது தங்கம் குரல்

திருமணம் முடிந்து இத்தனை வருடத்தில் வள்ளி மீனாட்சி இருவரையும் அவரவர் அம்மா வீட்டுக்கு விரல் விட்டு எண்ணும் அளவே அனுப்பி வைத்திருந்தார்.

அப்படி இருக்க இன்று திடீரென வள்ளி போறேன் என்று கூட சொல்லாமல் கிளம்ப நிற்பதில் வார்த்தை அவர் பாட்டுக்கு வந்து விழ இத்தனை வருடம் வாயை திறக்காத வள்ளி மற்றும் வீர் வெடித்து விட்டனர்.

“ என்னம்மா வள்ளி இப்படி வீட்டுக்கு போறன்னு சொல்லாம போற என்ன புதுசா கல்யாணம் ஆன நினப்பா “

“கல்யாணம் அப்பறம் இப்படி தான் என்ன என் புருஷன் வச்சிருப்பாருன்னு தெரிஞ்சிருந்தா கல்யாணம் புதுசுலயே போயிருப்பேன் “

“என்ன வள்ளி பேசுற, சபையில உன் புருஷன அண்ணா கிட்ட இப்படி தான் பேசுவியா “

“எதுவும் மறக்கல மாமா, கல்யாணம் ஆனதுல இருந்து எங்க பொண்டாட்டி பேச்ச கேட்டு பின்னாடியே போய்டுவானோன்னு தம்பிய கைகுள்ளயே வச்சிருந்தவர் நீங்க ன்னு மறக்காம தான் பேசுறன் “

“வள்ளி,… ஏன் ம்மா இப்போ அண்ணாவ இப்படி பேசுற இப்போ இது வேனாமே மோதல்ல நம்ம போண்ண போய் பாத்துட்டு வந்துடலாம் ம்மா“

“என்னது நம்ம பொண்ண… இது நீங்க எப்ப சொல்லிருக்கணும் தெரியுமா? என் பொண்ணு நம்மல தேடி வந்தப்ப உன் அண்ண வயித்து புள்ளைக்காரின்னும் பாக்காம சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணிட்டான்னு வெளிய தொறத்துனாரே அப்போ சொல்லிருக்கனும் இதை நீ.. “

“என்னை விட்டா ஓவரா பேசிவிட்டுப் போற. பொல்லாத பிள்ளைய பொத்துட்ட அந்த புள்ளய பார்த்துக்க முடியாம தொலச்சவளே நீதானே.

அன்னைக்கு மட்டும் அவள நீ நல்ல பார்த்திருந்தா இன்னைக்கு அவ இப்படி கண்ட இடத்துக்கு போயிட்டு வந்திருப்பாளா “ என்று தங்கம் சொன்னது தான் தாமதம்

“பெரியப்பா…….” என்று மாறன் கத்தினான் என்றான் வீர்

“ அண்ணா…. என்ன பேசுறீங்க அவ என் பொண்டாட்டிண்ணா “

“அதான் மேல கை வைக்காம இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கேன் வீரா “

“என்னது மேல கை வைப்பீங்களா “

“அவ இவ்ளோ பேசிட்டு இருக்கா அவள நாலு அறை அறைஞ்சு உள்ள சாத்தாம என்ன கேள்வி கேட்டுட்டு இருக்க வீரா “

“அண்ணா நீங்க பேசுறது தப்பு ண்ணா பொண்ணுங்க மேல கை வைக்கிறது தப்புன்னு நீங்க தான ண்ணா சொல்லுவீங்க “

“பொண்ணுங்க மேல தான் கை வைக்க கூடாது வீரா, பொண்டாட்டி மேல வைக்கிறது தப்பு இல்ல. நம்ம கை வைக்காம விட்டா இப்படி தான் சபைல நம்ம முன்னாடி திமிரு எடுத்து பேசுவாங்க. அவளுங்கள எப்பவும் காலுக்குக் கீழே தான் வச்சுக்கணும் வீரா “

என்று தங்கம் பேசியதை கேட்க முடியாத வீரா “ மாறா அம்மாவ நீ பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போ நான் அப்பறம் பேசுறேன் உன் கிட்ட.  இப்போ அவ இங்க இருக்க வேனா “

“வீரா என்ன சொல்ற உன் பொண்டாட்டிய இங்க நான் போக கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்.

நீ என்னன்னா அவள போக சொல்லிட்டு இருக்க. இத்தனை நடந்திருக்கு ன்னா அதுக்கு எல்லாத்துக்கும் காரணம் உன் பொண்டாட்டி மட்டும் தான் அவள அப்போவே தட்டி வச்சிருந்தா. உன் பொண்ணுக்கு இப்படி ஆகிருக்குமா “

“அண்ணா நிறுத்துங்க…. என்ன பொண்டாட்டி காரணம் மனசைத் தொட்டு சொல்லுங்க வள்ளியா காரணம் “

“ஆமா.. அவளை யாரு புள்ளைய தனியா திருவிழாவுக்கு அனுப்ப சொன்னா “

“ அதையே திருப்பி திருப்பிசொல்லாதீங்க ண்ணா”

“நான் சொல்லல னாலும் அது தான் உண்மை, வீரா “

“என்ன உண்மை…. அன்னைக்கு எத்தனை வாட்டி கேட்டேன் வள்ளி தனியா புள்ளைய வச்சிட்டு இருப்பா நிறைமாசம்  வேற நான் வீட்டுக்கு போறேன் ண்ணா. கோயில்ல வேலைய நீங்க பாருங்கன்னு. என்ன விட்டிங்களா …” என்று கோபத்தில் கத்தியவரை திடுக்கிட்டு போய் தங்கம் பார்க்க

“ கோவில் தான் முக்கியம்னு இருக்க வைக்கல. பாவம்…. என் புள்ள அன்னைக்கு முன்னாடி நாள் ராத்திரில கேட்டிருந்தா திருவிழாக்கு கண்டிப்பா கூட்டிப்போறேன்னு நான் தான் சொன்ன.

அதான் அடம் பிடிச்சு பக்கத்து வீட்டு அக்காவோட பொய்டா போல. அன்னைக்கு நான் மட்டும் உங்க பேச்ச கேக்காம போய்யிருந்தா இந்நேரம் என் புள்ள நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பா “

“வீரா….. நான் நல்லதுக்கு தான்டா அன்னைக்கு சொன்ன “

“எது நல்லது கோவில்ல நம்ம குடும்பத்து பேரை பெருமையா சொல்லணும்கிறதுக்காக என்ன அங்க எல்லாத்தையும் பார்க்க வச்சது நல்லதா. இல்ல உங்க புள்ளைக்கு உடம்பு சரியில்லன்னதும் என்ன மட்டும் அங்க விட்டுட்டு போனது நல்லதா “

“வீரா…” என்ற தங்கத்திற்கு வார்த்தையே வரவில்லை

“உங்க பையனுக்கு னதும் கோவில் வேலன்னு பாக்காம போனிங்க… ஆனா நான் மட்டும் போக கூடாதுல.”

“அது வீரா உன் நல்லதுக்கு தான்டா பண்ண”

“ஆமால்ல நீங்க எப்பவும் என் நல்லதுக்கு தான பண்ணுவிங்க. அதை கேட்டு கேட்டு தான் மொதல்ல என் புள்ளைய தொலைச்சேன் இப்போ என் மனைவியையும் சேத்து தொலைக்க வைக்க போறிங்கள “

வீரா பேசியதைக் கேட்டு அனைவருமே உறைந்து போய் நிற்க வீரா, வள்ளி அருகே வந்து நின்று கை கூப்பி

“என்ன மன்னிச்சிரு வள்ளி….. என்னால உனக்கு எந்த சந்தோஷத்தையுமே தர முடியாம போய்டுச்சே “

“என்னங்க… என்ன இது”

“ எனக்கு என்ன சொல்லத் தெரியல ம்மா நம்ம பொண்ணு சொன்னது சரி தான் அவ என்ன அப்பான்னு கூப்பிட முடியாத அளவு தான் நான் இருந்திருக்கேன் “

“அது எதோ கோபத்துல அவ சொல்லிட்டு போயிருக்காங்க “

“ வள்ளி நான் பண்ணது தப்பு தான் அதுக்காக என்ன விட்டு நீயும் போய்டாத வள்ளி என்னையும் சென்னைக்கு கூட்டிட்டு போ வள்ளி “ என்று குழந்தை போல கண்கள் கலங்கி நிற்பவரை பார்த்த மாறன் தோளோடு அணைத்த படி

“ நான் கூட்டிட்டு போறன் ப்பா நீங்க அழாதீங்க நான் மொதல்ல போய் டிக்கெட் புக் பண்ணிட்டு வர்றேன் “

என்று செல்ல போனவனை தடுத்து நிறுத்திய மீனாட்சி

“எனக்கும் என் பொண்ணுக்கும் சேர்த்து டிக்கெட் போடு ப்பா “ என்று சொல்லியவரை தங்கம் முறைத்து பார்க்க

“என்னையும் கூட்டிட்டு போய்டுங்க ப்பா… என் பேத்தி…. அவன் கையை பிடிச்சா தான் என் உசுரே வரும் போலடா “ என்று வெள்ளையம்மா கதறி அழ தொடங்கினார்.