பின்னே திருமண மலர்களை தருவாயோ….. என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்க சற்று தள்ளி அமர்ந்திருந்த அடி ஆட்கள்
“ அப்பா…. நாளையோட இவன் தொல்லை இருக்காது “ என்று சந்தோஷப்பட
“ எப்படி தான் இவன வச்சி மேய்கிறாங்களோ வாய் மூடுவானான்னு சொல்லுது… என்னும் இரண்டு நாள் இருந்துருந்தா நான் பைத்தியமா ஆகி ஓடியிருப்பன்டா “
“ ஆமா மச்சான். கோபப்படாத உன்னையே கோபப்பட வச்சிட்டான், இவன அந்த சார் மட்டும் என்ன வேணா பண்ணிக்கோ ன்னு சொல்லியிருக்கணும் இவன போட்டு பொளந்திருப்பேன் “ என்று பேசிக்கொண்டு இருக்கும் போது தங்கத்திடம் இருந்து கால் வர
“ஹாலோ சொல்லுங்க சார் “
“அவன் என்ன பண்ணிட்டு இருக்கான் “
“தூங்கிட்டு இருக்காரு சார் “
“ஓ… தூங்குறானா…. தூங்கட்டும் தூங்கட்டும். நீங்க நான் சொன்ன மாதிரி சரியா மூணு மணிக்கு கூட்டிட்டு வந்துருங்க டா அவன “
“ம்ம்ம் கண்டிப்பா சார் “
“நீங்க அவன விட்டதும் பேலன்ஸ் அமௌன்ட்டா போட்டுறன் “ என்று சொல்லி வைத்தவர் முகம் கர்வத்தில் மிளிர்ந்தது.
நாளை சாயங்காலம் ஐந்து மணிக்கு நிச்சயம் அதற்கு மறு நாள் காலை ஆறு மணிக்கு திருமணம் என்று இருக்க அனைத்தையும் சாதித்து விட்ட கர்வத்தில் பறந்து கொண்டிருந்தார் தங்கம்.
அதன் விளைவாக மாறனை பார்க்கும் போது எல்லாம் நக்கலாக சிரித்த படி தான் செல்வார். ஆனால் மாறனோ இவற்றை எதையும் கண்டுகொள்ளாது
“இவர் வேற காமெடி பண்ணிட்டு…” என்று முழு திருமண வேலையைத் தூக்கி போட்டு செய்து கொண்டிருந்தான்.
இங்கே இப்படி என்றாள், அங்கு வேதாவோ விக்ரமுடன் பேச முடியாமல் போனதில் மிகவும் கலங்கி போய் இருந்தாள். விக்ரமனின் நிலையைப் பற்றி அவனை கடத்திய அன்று மாறன் சொல்லியிருந்தான்.
அனைத்தும் புரிந்ததுதான் இருந்தது இருந்தும் மனமோ அதை எதையும் கேட்காமல் விக்ரமன் வேண்டும் என்று சதி செய்து கொண்டிருந்தது.
இப்படி இங்கு இருப்பவர்கள் நிலை பற்றி எதையும் அறியாமல் விக்ரமன் இது தான் அவனுக்கான நாள் என்று அங்கிருந்த அந்த அடியாட்களுக்கு அடுக்கு அடுக்காக வேலையை ஏவியபடியே இருந்தான்.
போடுவதற்கு புது சோப்பில் இருந்து அவன் சொல்லியிருந்த சென்ட் வரை வாங்க வைத்திருந்தான். அதுவும் இவன் சொன்ன கடையில் தான் வாங்க வேண்டும் என்று அட்டுழியம் செய்து கொண்டிர்ந்தான்.
விக்ரமனுக்கு இந்த கடத்தலில் துளி அளவு கூட பயம் இல்லை. அவனை கடத்தும் போதே கடத்தியது தங்கம் தான் என்று அவன் மயக்கத்திலே இருந்த போது தங்கத்தின் பேச்சு சத்தத்தில் இவர் தான் என்று கண்டு கொண்டிருந்தான்.
கடத்தியது இவர் என்றதும் “ இவன் இதுக்கு சரி பட்டு வர மாட்டார்…..” என்று இருந்த கொஞ்ச பயமும் விலகி போய் விட்டது. அதனாலேயே பயம் என்பது துளியும் இன்றி மிக சந்தோஷமாகவே இருந்தான்.
தங்கம் சொன்னதுபடி மதியம் உணவை முடித்துக்கொண்டு விக்ரமன் கண்ணைக் கட்ட போக அதை கை நீட்டி தடுத்தவன்
“ என்னுமாட நீங்க என்ன கிட்நாப் பண்ணி வச்சிருக்கிங்க ன்னு நினைச்சி இருக்கிங்க “ என்று சிரித்தவனை புரியாமல் அனைவரும் பார்க்க
“நேத்து நைட் பவர் கட், கத்து வரலன்னு காலார நடந்து போய் பக்கத்துல இருக்க கடையில டீ குடிச்சிட்டு வந்தேன். “
“டீ குடிச்சியா…” என்று அனைவரும் சாக் ஆகி அவனை பார்க்க
“பின்ன கடத்திட்டு வந்தவன் கரெக்டா வேலைய பார்க்காம நல்லா குடிச்சிட்டு உருண்டா நான் என்ன பண்ண.
பாத்தன் அவன் சட்டையில சாவியோட காசு இருந்துச்சி அதான் எடுத்துட்டு நைட் வாக் போயிட்டு வந்தேன் “ என்று எழுந்து சென்றவனை.
அதிர்ந்து போய் அனைவரும் அவரவர் முகத்தை மாற்றி மாற்றி பார்த்து
“ இது தெரியாம காசு காணோம்னு உன்ன அடிச்சிடேனேடா “ என்று அடிவாங்கியவனை அவன் பார்க்க
“நீ என்ன அடிக்கும் போது கல்லாட்டும் சிரிச்சுட்டு பார்த்திட்டு இருந்தானே ஒரு வார்த்த சொன்னான “ என்று அடிவாங்கியவன் புலம்பும் போது
“காய்ஸ் டைம் ஆச்சி, போலாமா…” என்று வெளியில் இருந்து விக்ரமன் குரல் கொடுக்கவும் தான் அனைவரும் நினைவு வந்து
“டேய் இவன் நம்மல விட்டுட்டு தனியா போனாலும் போய்டுவான்டா .அப்பறம் காசு கிடைக்காம போய்டும்டா… “ என்று வேகமாக ஏறி அமர்ந்தனர்.
காரில் விக்ரமனின் விசில் சத்தம் மட்டுமே கேட்டது அப்படி ஒரு அமைதி என்ன பேச என்று புரியாமல் அனைவரும் வர விக்ரமன்
“ என்ன ட்ராப் பண்ணிட்டு போய்டாம இருங்க. நாளைக்கு எனக்கு மேரேஜ் இருக்கு வந்து அட்டெண்ட் பண்ணிட்டு போங்க, ஃபுல் நான் வெஜ் மீல்ஸ் தான் என்ஜாய். இத்தன நாள் கம்பெனிக்கு என் டிரிட் “
என்று சிரித்தபடி காற்றில் கலைந்து ஆடிய முடியை கோதிய படி கண்ணாடியில் முகத்தை சரி செய்த கொண்டு வந்தவனிடம் இதை கேட்போமா இல்லை வேண்டாம்மா என்று யோசித்த படி வண்டியை ஓட்டி வந்தவன் அடிக்கடி விக்ரமன் முகம் பார்க்க.
அதை பார்த்த விக்ரமன் “ ம்ம்ம் என்னன்னு சொல்லுங்க ப்ரோ. எதோ கேட்கணும்னு நினைக்கிறிங்க என்னென்னு தைரியமா கேளுங்க “ என்று விக்ரமன் கேட்கவும் அவனும் வாயை திறந்தான்.
“அது….. அந்த சார் உங்கள ஏன் கடத்தி வச்சி இன்னைக்கு வீட்டுக்கு விடுறாருன்னு தெரிஞ்சுக்கலாமா“
“ஓ… நீ அதை கேக்குறியா அந்த சார்க்கு நான் என் கல்யாணத்தை நிறுத்திருவனோன்னு பயம். அதான் என்ன கடத்தி வச்சி இப்போ விடுறாரு “
விக்ரமன் சொன்னதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர்.
இவர்கள் பார்த்த பார்வையில் “ அவருக்கு என்ன கிறுக்கா? இவன விட்டா இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கிறவன் மாதிரி இருக்கான். இவன் போய் கல்யாணத்தை நிறுத்திடுவானா “ என்று தான் பார்த்தனர்.
அவர்கள் நினைப்பதிலும் தவறில்லை இத்தனை நாளில் தினமும் முகத்தில் ஏதாவது பேக் போடுவது எக்சர்சைஸ் செய்வது என்று கல்யாணத்துக்கு அவன் செய்த அளப்பறைகள் எத்தனை.
ஒரே கல்யாண பாடல்களாக கேட்டு டார்சர் செய்தது என்று இவன் செய்த அட்டூழியம் பார்த்தவர்களால் நம்ப முடிய வில்லை இதை.
இவர்கள் பார்வையிலேயே அனைவரின் எண்ணம் புரிந்து சிரித்தவன் அதன் பின் அவர்களை கண்டுகொள்ளாமல் திரும்பிக்கொண்டான்.
பின் அனைவரும் அவனை அவன் ஊர் முன் இறக்கி விட்டு செல்ல அங்கே இருந்து தங்க பாண்டி அவனை முறைத்த படி இழுத்து வந்தார்.
தங்க பாண்டியை பார்க்கவும் முகத்தை இறுக்கமாக வைத்தவன் வேதா கழுத்தில் தாலி கட்டும் வரையும் கூட முகத்தை அப்படியே தான் வைத்தபடி இருந்தான்.
தாலி கட்டி சம்பிரதாயம் முடிந்து அனைவரும் வீடு திரும்பும் வரை வயிற்றில் புளியை கரைத்த படி தான் தங்கம் சுற்றி வந்தார்.
கல்யாணம் வேலை அனைத்தும் முடிந்து “எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சிதே”
என்று எண்ணியபடி கால் நீட்டி நீண்ட நாள் கழித்து தங்க பாண்டி மற்றும் வீர பாண்டி காப்பிக்காக அமர்ந்திருக்கும் நேரம் மயூரி ஆர்யன் கையை பிடித்தபடி சென்னைக்கு செல்ல கிளம்பி வந்திருந்தாள்.
அவள் பெட்டியுடன் நிற்பதை புரியாமல் பார்த்த வீரா “ என்ன ஆச்சு ம்மா மருமகனுக்கு வேலை வந்திருச்சுன்னு ஊருக்கு போறாரா “
“ம்ம்ம் வேலை தான், அதான் சென்னைக்கு கிளம்புகிறோம் “
“ம்ம்ம். “ என்று மட்டுமே பதில் வர. அவளின் பதிலை கேட்டு தங்கம்
“என்ன உளறிட்டு இருக்க இந்த வயித்த வச்சிட்டு சென்னைக்கு அலையப் போறியா “ என்று கத்தியவரை சலனமின்றி பார்த்தவள்
“ ஒரு மாசம் முன்னாடியும் இதே வயித்தோட தான் இருந்தேன். அப்போ நிங்க போக சொல்லும் போது எப்படி இந்த வயித்த வச்சிட்டு போயிருப்பேனோ அதே மாதிரி தான் இப்பவும் போக போறேன் “ என்று மயூரி சொன்னதை கேட்டு தங்கம் வாயடைத்து போய் நின்றார்.
பின் சுதாரித்தவராக “ அது அப்போ ஏதோ கோபத்துல சொன்னது அதான் எல்லாம் சமாதானம் ஆகி இங்க கூட்டி வந்திருக்கோம்ல “
“எப்படி உங்களுக்கு சாதி வேணும்னா போகனும் அதே சாதி வேணாம்னா இருக்கணும்மா..“
“மயிலு மன்னிச்சிரு ம்மா… அப்பா.. நாங்க.., ஏதோ தெரியாம அப்போ பேசிட்டோம் “ என்று தினறி நின்ற வீராவை பார்த்து
“என்ன தெரியாம பேசினீங்க” என்று மயூரி பேசும் போது இடையில் தடுத்த தங்கம்
“ பொம்பள புள்ளைய அடங்கி இருக்காம என்ன அப்பனையே எதிர்த்து பேசுற “
“ மகளை மகளா பார்க்காம போக சொன்னவரை எல்லாம் அப்பாவா எப்படி நினைக்க.
அப்பாவ நினைச்சா தான எதிர்த்து பேசாம இருக்க தோணும். நான் தான் அவர அப்படி நினைக்கவே இல்லையே “ என்று மயூரி பேசியதை கேட்டு வீரா உடைந்து போனவறாக மயூரியை பார்க்க,
அப்போது தான் சத்தம் கேட்டு அனைவரும் கூடத்துக்கு வந்தனர்.
மாறன் மாடியில் இருந்து இறங்கியவன் மயூரி மற்றும் ஆர்யனை புரியாமல் பார்த்து விட்டு அவள் பின்னாலேயே பைகளை தூக்கி கொண்டு வந்த அதித்தி, கிருபா, யாழினி, மொழி என்று அனைவரையும் பார்த்தவன்.
“என்ன அக்கா எங்க எல்லாம் கிளம்பி இருக்கிங்க “
“நாங்க எல்லாம் சென்னைக்கு கிளம்பிட்டோம் மாறா. மொழியையும் கூட்டிட்டு போறோம் கொஞ்ச நாள் அவன் எங்க கூட இருக்கட்டும் “
“என்னது சென்னைக்கா என் கிட்ட யாருமே ஒரு வார்த்தை சொல்லல”
“நான் எப்போ சொன்னேன் மாறன். அப்படி நீங்களா சொல்லிக்கிட்டிங்க. என் கிட்ட ஒரு வார்த்தை இருக்கியா ன்னு யாரும் கேட்கலயே “
“அது வந்து க்கா… “ என்று மாறன் திணறும் போது
“நீங்க கேட்டுருந்த கூட நா இங்க இருந்திருக்க மாட்டேன்.” என்று தங்கம் முகம் பார்க்க, அவர்
“பாத்தியா பெத்த அப்பா அம்மாவ விட இப்போ வந்த புருஷன் உசத்தியா போய்ட்டான் உன் பெண்ணுக்கு “ என்று தங்கம் இளக்காரமாக பேச
“ஆமா…. அப்பா அம்மாவ விட என் புருஷன் எனக்கு மேல தான் “ என்று மயூரி கோபத்தில் கத்தியவளின் கையை ஆர்யன் பிடிக்க அவனின் கையை கெட்டியாக பிடித்து கோண்டு .
“உங்க வீட்டு பொண்ணு நான், சின்ன வயசுல காணாம போய் திரும்பி வந்திருக்கேன். என்ன நீங்க தூக்கி வச்சி கொண்டாடால னாலும் பரவாயில்லை. ஆனா பெண்ணுன்னு கொஞ்சமாவது பார்த்தீங்களா .
நான் நல்லா வந்தபோதே ,சாதிப் பெயரை சொல்லி, என்ன ஏதுன்னு இத்தனை பாத்த உங்களுக்கு…” என்று பேச்சை நிறுத்தியவள் எச்சிலை கூட்டி விழுங்கி கோண்டு தன் நடுங்கிய கையை ஆர்யன் கையோடு இருக பிடித்து கோண்டு
“ நான் ஒரு விபச்சார விடுதில இருந்து தப்பிச்சு வந்தவன்னு சொல்லியிருந்தா, என்ன உங்க மரியாதைக்காக கொன்றிருக்க மாட்டீங்க “ என்று சொன்னவளை அதிர்ந்து போய் அனைவரும் பார்க்க
“அக்கா…” “மயிலு….” என்று ஆர்யன் மற்றும் மாறன் அவளை தடுக்க நிறுத்த பார்க்க அவர்களை கண்டு கொள்ளாது தொடர்ந்தாள் மயூரி
“கண்டிப்பா பண்ணியிருப்பீங்க. உங்கள பாத்த மொதல்லயே அதை புரிஞ்சு தான் இவரும் எதுவும் சொல்ல வேணாம்னு தடுத்துட்டாரு போல “ என்று விரக்தியாக சிரித்தவள் தங்கம் பக்கம் திரும்பி
“ என்ன சொன்னிங்க புருஷன் உசத்தியான்னு கேட்டிங்கள?
அமா…. உங்க…. எல்லாற…. விட. எனக்கு. அவர். பெருசு தான். “ என்று நிறுத்தி அழுத்தி பேசியவள் கை நீட்டி அனைவரையும் சுட்டி காட்டி
“ நான் யாருன்னு எனக்கே தெரியாம என்ன தொலச்சிட்டேனோ ன்னு நான் பரிதவிக்கும் போது, நான் இருக்கேன் உனக்கு, நீ யாரா இருந்தாலும் உனக்கு என்ன ஆகியிருந்தாலும் எனக்கு பரவாயில்லை ன்னு எனக்காகவே என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்க மாமாவை விட்டு அஞ்சு மாசம் இங்க இருப்பான் ன்னு எப்படி நினைச்ச மாறன். மத்தவங்களுக்கு தான் எதுவும் தெரியாது. ஆனா உனக்கு தெரியும் தான “
என்று மாறனை பார்த்து பேசியவள் மெல்ல அங்கிருந்த அனைவரையும் ஒரு முறை சுற்றி பார்த்தாள்.
அவர்களின் அதிர்ந்த முகத்தை இயல்பாக பார்த்து கடந்தவளின் கண் அங்கு கண்ணில் வழியும் நீரோடு நெஞ்சில் கைவைத்த படி மயூரியை பார்த்து உறைந்து போய் நிற்கும் வள்ளியை பார்க்கவும் அதற்கு மேல் முகத்தை இயல்பாக அவளால் வைக்க முடியவில்லை.