நெஞ்சம் 37

அந்தக் குளிரூட்டப்பட்ட அறையில் சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு முகம் முழுக்க பூசி இருந்த புன்னகையுடன் விக்ரமனை பார்த்துக் கொண்டிருந்தான் மாறன்.

மாறனின் சிரிப்பில் மேலும் கடுப்பாகிய விக்ரமன் அவனை முறைத்தபடி எதிரில் இருந்த சேரை விட்டு எழுந்து வந்து

“என்னடா உனக்கு இப்போ.

அது முக்கியமான ஆர்டர் தான் நான் ஒத்துக்குறன் . அன அதுக்காக நான் நேர்ல போய் பேசுனும்ற  அளவு முக்கியம் இல்லடா.

அதுவும் நாளைக்கு காலைல எனக்கு பெண்ணு பார்க்கிறதை விட்டுட்டு போற அளவு முக்கியம் இல்ல மாறா “

“விக்கி…… வெய் டென்சன் பொறுமையா பேசலாமே “ நேராக அமர்ந்தான்.

“பீச்..” என்று தலை கொதியவன்.

“சரி பொறுமையா கேக்குறன் சொல்லு, எதுக்கு சென்னைக்கு என்ன இப்போ போக சொல்ற. கண்டிப்பா அந்த ஆர்டர் காக கிடையாது ன்னு எனக்கு தெரியும் “

“ இதோ பாரு விக்கி நீ நாளைக்கு வேதா வீட்டுக்கு போனா கண்டிப்பா சொதப்பி வச்சிருவ ன்னு எனக்கு தெரியும்.

அதுவும் இல்லாம பெரியப்பாக்கு டவுட் வந்துரும் என்ன மொத ஆள கிளம்பு வந்துருக்கானேன்னு. சோ நான் ரிஸ்க் எடுக்க விரும்பல“

“ மாறா அதை நான் பாத்துக்குறன்டா. ப்ளீஸ் நான் சென்னைக்கு மட்டும் போலடா “

என்று அவன் அருகே சேரில் அமர்ந்தபடி கண்களைச் சுருக்கி அவன் கேட்க பதிலுக்கு அவன் ஒன்று தான் கேட்டான் விக்ரமன் மறுவார்த்தை இன்றி சென்னைக்கு போக ஒத்துக்கொண்டான்.

“ உனக்கு டீச்சர் வேணுமா வேணாமா “ அவ்வளவு தான் அமைதியாக எழுந்தவன் முகத்தை தொங்கப் போட்டபடி

“ போய் தொலையிறன் “ என்று சொல்லி செல்ல போனவனை தடுத்த மாறா

“ போயிட்டு உடனே வந்துறாத விக்கி அக்கா சீமந்தம் வர சென்னைலயே இரு “ என்றதும் மேலும் அவனை முறைத்து

“சரி அங்கேயே இருக்கிறேன்…” என்று இறங்கிய குரலில் சொல்லி விட்டு சென்றான் .

ஆசைபட்ட பெண்ணுடன் திருமணம், ஆனால் பிடிக்காத திருமணம் போல நடித்தி நடக்க வேண்டும், இதை எங்கே போய் சொல்ல.

என்று புலம்பிய மனதை தட்டி அடக்கி கொண்டான். எத்தனை போரட்டத்திற்கு பிறகு அந்த சாதி என்ற முள் செடியில் இருந்து இவர்களை வெளியே கொண்டு வந்திருக்கின்றனர்.

அதை இந்த சிறு சிறு இன்பத்திற்க்கு ஆசை பட்டு உடைக்க பார்ப்பான என்ன. அவனுக்கு தொன்றிய அனைத்து ஆசையையும் பெரிய குழிக்குள் தள்ளி மூடி போட்டு முடியவன்.

மறுநாள் காலை யாருக்கும் தெரியாமல் அவன் உடைகளை பெட்டியில் எடுத்து வைத்து விட்டு கிளம்பியே விட்டான்.

அதை கேள்விப்பட்டு ராஜன் கொதித்து கொண்டு “ இவன்லாம் எருமை மேய்க்க தான் லாக்கி. இவனுக்கு போய் கல்யாணம் பண்ணி வச்சி ஏன் அந்த புள்ள வாழ்க்கைய கெடுக்க.

இப்படியே போனவன் அப்படியே தனியாவே இருக்கட்டும் காலை முலுக்க அப்ப ஆச்சி புத்தி வருதான்னு பாப்போம் “

என்று கத்தி கொண்டு இருந்தவரை தங்கம் மற்றும் வீரா எதேதோ பேசி சமாளித்து கூட்டி செல்லவே போதும் போதும் என்றாகி போனது.

அங்கே பெண் வீட்டில் வேறு என்ன கேட்பார்களோ என்று ஒரு வித பதட்டத்தோடு தான் அனைவரும் சென்றனர்.

ஆனால் இவர்கள் நினைத்தது போலே இல்லாமல் பெண் வீட்டில் சம்பிரதாயத்துக்கு மாப்பிள்ளை வரவில்லையா என்று கேட்டதோடு சரி மற்றபடி எதையும் தூண்டி துறுவாமல் கல்யாணத்தை பற்றி பேச தொடங்கி விட்டார்கள்.

அதில் அனைவருக்குமே நிம்மதி வர மேலே பேச தொடங்கினர்.

இப்படி பெண் வீட்டில் விக்ரமனை பற்றி கேட்காமல் இருந்ததுக்கு காரணம் கல்யாண பெண் வேதா தான் நேற்று இவர்கள் பேசிவிட்டு சென்றதும்.

இரவு நேரம் வேதா அவளின் அப்பா அம்மாவிடம் விக்ரமன் சொல்ல சொல்லியிருந்ததை அப்படியே எதுவும் மாறாமல் சொல்லி விட்டாள்.

அது என்ன வென்றாள், விக்ரமனுக்கு வேதாவை பிடித்து போய் காதல் வந்து சொன்னதாகவும் அதற்கு வேதா, விக்ரமன் மீது பிடித்தம் இருந்தும் தன் அம்மா அப்பா மீறி எதுவும் செய்ய முடியாது என்று மறுத்து விட்டாதாகவும் கூறினாள்.

அதனாலேயே வீட்டில் பேசி இப்படி பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். அதில் விக்ரமனுக்கு என் மேல் கோபமும் கூட அவன் கேட்டு நான் முடாயாது என்று கூறியதில், அதனாலேயே கோபத்தில் ஏதாவது செய்வான் அதை பெரிதாக்க வேண்டாம் என்று அழுத்தி கூறியிருந்தாள்.

அதனை மனதில் வைத்தே இன்று விக்ரமன் வராதது இவர்களுக்குத் பெரிதாக தெரியவில்லை.

பின் இவர்கள் அனைவரும் பேசி மூன்று வாரம் கழித்து திருமணம் என்று தங்கம் சொல்லி முடிவு செய்தனர். ஏன் இவ்வளவு அவசரமாக வைக்க வேண்டும் என்று ராஜன் கேட்டதற்கு

“ உன் பையனுக்கு அடுத்த மாசமே கல்யாணம் முடிஞ்சா அவன் வாழ்க்கை அருமையா இருக்கும்னு எனக்கு தெரிஞ்ச ஒரு ஜோசியர் சொன்னாரு “ என்று தங்கம் பாட்டுக்கு அவர் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தார்.

அவர் சொன்னதை உண்மை என்று நம்பிய ராஜனும் சரி என்று ஒத்துக்கொண்டார்.

திருமணத்திற்கு முன்தினம் நிச்சய தார்த்தம் மருநாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் அதை தொடர்ந்து வரவேற்ப்பு என்று முடிவு எடுத்தனர்.

அதன் படி மயூரியின் சீமந்தம் முடிந்து ஆறு நாட்களில் விக்ரமனுக்கு திருமணம் என்று முடிவு ஆனது.

சென்னைக்கு சென்ற விக்ரமனும் சரியாக மயூரியின் சீமந்தத்திற்கு தான் திரும்பி ஊருக்கு வந்தான். அப்படி திரும்பி வந்த விக்ரமனை அவன் கதறக் கதற அதற்கு மறுநாளே ஆள் வைத்து தூக்கி இருந்தனர்.

புல்லட் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே மயூரி எட்டிப் பார்த்து விட்டு அது வரை வேலை செய்து கொண்டிருந்தவள் எழுந்து அவள் அறைக்குச் சென்று அடைந்து கொண்டாள்.

மயூரி சென்றதை பார்த்த அனைவரும் பாவமாக வெளியே வாசலை தான் பார்த்தனர். அங்கே வீரா உள்ளே நுழைந்து வீட்டையே கண்களால் துலாவியபடி வந்து கொண்டிருந்தார்.

உள்ளே வந்தவர் அங்கிருந்த அவர் மனைவியை பார்த்து “ எங்க மயிலு “ என்று ஏக்கம் கலந்த குறளுடன்  கேட்டு நின்றார்.

“அவ தூங்கப் போயிருக்கா ங்க” என்று வள்ளி அவர் கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் சொல்லி விட்டு அவர் வேலையை தொடர்ந்தார்.

வள்ளி சொன்னதை கேட்டு சோர்ந்து போனவர் வராந்தாவில் சென்று அமர்ந்து கொண்டார். அங்கிருந்து நிமிடத்திற்கு ஒரு முறை மயூரியின் அறையை பார்ப்பது பின் திரும்புவது என்று தான் இருந்தார்.

கடந்த ஐந்து நாட்களாக இதுதான் வாடிக்கையாக நடந்து வருகிறது. விக்ரமனுக்கு பெண் பார்த்து விட்டு வந்த மறுநாளில் இருந்து இப்படி நேரம் கிடைக்கும் போதெல்லாம் மயூரியை பார்க்கப் புல்லட்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்து விடுவார்.

முதல் நாள் இவர் மயூரி அருகில் அமர்ந்து பேசும்போது மயூரி அமைதியாக அவர் பேசுவதை கேட்டுக்கொண்டாள், ஆனால் எந்த பதிலும் தரவில்லை.

அதில் அவருக்கு வருத்தம் இருந்தாலும் வீரா தளராமல் அவள் பதிலை எதிர்பார்க்காமல் சின்ன வயதில் மயூரி செய்த ஒவ்வொன்றையும் கதை போல பேசி விட்டு சென்றார்.

அதே போல மறு நாளும் சென்று பேசி மன்னிப்பு கேட்டு என்று சென்றிருந்தார். ஆனால் மூன்றாம் நாள் மயூரி தூங்கி விட்டாள் என்று செய்தியே வந்தது.

எவ்வளவு நேரம் காத்திருந்தும் அவள் எழுந்து  வரவில்லை அன்றிலிருந்து இன்று வரை வீரா வரும்முன் சென்று படுத்துக் கொள்வாள் மயூரி.

அதன்பின் வீரா திரும்பி சென்ற பின்தான் அவள் வெளியேவே வருவாள்.

வீராவும் சளைக்காமல் இன்றுவரை மயூரியை பார்க்க வந்த வண்ணமே இருந்தார். அன்றும் அதே போல தான் மயூரி சென்று படுத்துக் கொள்ள வீரா முகம் வாட அமர்ந்திருந்தார்.

இவற்றை எல்லாம் பார்த்திருந்த மொழி மெல்ல எழுந்து அவரிடம் சென்று

“என்ன வேணும் உங்களுக்கு “ என்று பயந்த பார்வையுடன் தூணின் பின் இருந்து தலை மட்டும் தெரிய எட்டிப் பார்த்தபடி கேட்டான்.

மொழியின் குரலில் அவன் பக்கம் திரும்பிய வீரா அவனை ஒரு நிமிடம் உற்று பார்த்தார்.

தன் மகனின் மகன் என்று அழைத்து வந்த சிறுவன் அவன் பெயர் கூட நினைவு இல்லை. இங்கு வந்து காத்திருக்கும் நேரம் இவனை பார்ப்பதோடு சரி அவனை பார்த்து எப்போதும் ஒரு முறைப்பை தந்துவிட்டு தலையை திருப்பி கொள்வார்.

அப்படி இருக்கையில் தைரியமாக அவனே வந்து பேசவும் வெறுப்பு காட்ட ஏனோ தோன்றவில்லை.

அதனாலேயே இயல்பாக பேசினார் “எனக்கா… என் பொண்ணு வேணும். அவள பார்த்துப் பேச வந்திருக்கான் “ என்று பேசியபடி மயூரியின் அறை வாசலை பார்த்தார்.

மொழியும் அந்த அறையைப் திரும்பி பார்த்து விட்டு “ மயில் அத்தையா வேணும் உங்களுக்கு “ என்று கேட்டான்.

அவன் மயில் அத்தை என்ற அழைப்பில் லேசாக சிரித்தவராக

“ஆமா மயில் அத்தை தான் “

“ அவங்க…அவங்க இல்லை அவங்க என் மயில் அத்தை தான “  என்று மயூரி அவனின் அத்தை என்பதை சொன்னான். அவருக்கு தெராயாத ஒன்றை சொல்லி தரும் நோக்கில்

“ ஆமாடா வாண்டு அவங்க உன் மயில் அத்தை தான். அதே மாதிரி அவங்க என் பொண்ணும் கூட “

“நான் மொழி… வாண்டு நோ “ என்று சிறிது கிட்டே வந்து மொழி சொல்ல

“சரி சரி மொழினே கூப்பிடறேன் உன்ன சரியா. “

“ம்ம்ம்… நான் வேணா மயில் அத்தை கிட்ட சொல்லிட்டு வரட்டா நீங்க வந்தத “ என்று மயூரியின் அறைக்கு இவர் பதில் சொல்லும் முன் ஓடிச் சென்று விட்டான். வீரா

“மொழி வேணா….” என்று இவர் கத்துவதை கேட்காமல் அவன் ஓடி விட்டான்.

“மயில் அத்த… டுப் டுப் தாத்தா வந்திருக்காங்க “ என்று ரூமுக்குள் இருந்து அவனின் பேச்சு சத்தம் சத்தமாக கேட்டது.

அதை கேட்டு சிரித்த வீரா “ நான் டுப் டுப் தாத்தாவா…” என்று மீசையை நீவியபடி அந்த அறையையே பார்த்திருக்க தலையை தொங்க போட்டபடி மொழி தான் வந்தான்.

அவன் அப்படி வருவதிலேயே என்ன என்று புரிந்தவர் மனமும் வாடி தான் போனது.

“மயில்…த்தை உங்க கிட்ட கா….வான் சோ வரலயாம் சாரி….” என்று உதட்டைப் பிதுக்கி சோகமாக சொல்லும் குழந்தை மேல் பாசம் தான் சுரந்தது.

எத்தனை நாள் இங்கு இப்படி அமர்ந்திருந்தார் அவர் மனைவி அம்மா என்று அனைவரும் வேடிக்கை தான் பார்த்தனரே தவிர இதை பற்றி ஒரு சமாதானம் கூட ஒருவரும் சொல்லியது இல்லை.

தவறுதான் இவர் செய்தது அண்ணன் பேச்சைக் கேட்டு மகளை விட்டது அதற்கு மன்னிப்பே கிடையாதா என்ன என்று அவர் மீதே கோபத்தில் இருந்த நிலையில் இந்த சிறுவனின் துணை ஆறுதலாக தான் இருந்தது.

இங்கு வந்ததில் இருந்து இவனை பார்த்து இவர் சிரித்தது கூட இல்லை அப்படி இருக்க இவன் சோக முகத்தை கண்டு வந்து பேசும் அவன் மீது பாசம் பாய தான் செய்தது.

சிறுவர்களுக்கு தீங்கு தெரியாது என்று எவரோ சொன்னது நினைவுக்கு வர

“ மொழி இங்க வாங்க” என்று அழைக்க தயங்கி தயங்கி அவர் அருகே சென்றான். அருகே சென்றவனை மடியில் அமர வைத்தவர் அவன் கன்னம் கிள்ளி கொஞ்சி

“மொழி தங்கமான பையன் “ என்று சிரித்தார்.

அன்றிலிருந்து மயூரியை பார்க்க வருகிறாரோ இல்லையோ மொழிக்கு கடலை மிட்டாய், பதனி, நொங்கு, பனம்பழம், புளிப்பு மிட்டாய் என்று வித விதமாக வாங்கி வருவார்.

அவனுடன் விளையாடுவது பைக்கில் அழைத்து செல்வது என்று நான்கு நாட்களில் டுப் டுப் தாத்தாவிலிருந்து வீரா தாத்தா என்ற பதவி உயர்வு பெற்றிருந்தார்.

இவர் மொழியுடன் விளையாடுவது அவனை வைத்து பைக்கில் சுத்துவது என்று செய்தி காற்றின் வழியே தங்கம் காதுக்கு செல்ல அவர்

“ இந்த கல்யாணம் மொதல்ல முடியட்டும், அப்பறம் அந்த பொடிசுக்கு ஒரு வழி பண்றேன். என் தம்பியாவே மடக்கி போட்டானா அவன் “ என்று மீசையை முறுக்கினார் தங்கம்.