நெஞ்சம் 36

விக்ரமன் மாறன் காதில் ஏதோ சொல்ல அதற்கு பதிலுக்கு இவன் எதோ சொல்ல என்று இருந்தவர்களை தீயென முறைத்த படி தங்கபாண்டி இருந்தார்.

அதை எதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் பேசிக்கொண்டே போக அதிலும் விக்ரமன் மாறன் தொடையை தட்டி எதோ பேசுவதை பார்த்தவர் கடுப்பில்

 “ எல்லார் முன்னாடியும் எம்புட்டு தைரியம் இருந்தா தொடைய தட்டி பேசுவான். சுத்தி இருக்க இவனுங்களும் மரம் மாதிரி உக்காந்துட்டு இருக்காங்க “ என்று நினைத்தபடி

“மிக்கும்..” என்று குறளை சிறுமியவர் இவர்கள் இருவரையும் நன்றாக முறைத்து விட்டு ராஜன் புறம் திரும்பி

“ அப்பறம் என்ன.. நீயே விஷயத்தை சொல்லிடு ராஜன் “

“நான் சொல்றத விட ராஜாத்தி சொன்ன சரியா இருக்கும் “ என்று திரும்பி அவர் மனைவியை பார்க்க அவர்

“நாளைக்கு காலைல நம்ம விக்ரமனுக்கு பொண்ணு பாத்து பூ வைக்க போறோம். நீங்களும் எல்லாரும் வந்திரனும் “ என்று அவர் அழகாக சிரித்தார்.

  ராஜாத்தி சொன்னதை கேட்ட விக்ரமன் அவனின் முப்பத்தி இரண்டு பற்களும் தெரிய சிரித்த முகமாக இருந்தவனின் கையில் நறுக்கென்று கிள்ளிய மாறன்.

“பக்கி பக்கி பல்லை காட்டாத அப்பறம் மாட்டிப்போம் “ என்று  அவன் காதில் மெல்ல சொல்ல

“அட மறந்துட்டன் பாரு “ என்று வேகமாக முகத்தை கடுமைக்கு கொண்டு வந்து மெலிந்த குரலில்

“என் பெர்ஃபார்மன்ஸை இப்போ பாரு மாறா “ என்று வேகமாக எழுந்தவன்

“யார கேட்டு இப்போ பொண்ணு பார்த்தீங்க நான் தான் மாறன் கல்யாணத்துக்கு அப்பறம் பண்ணிக்கிறன்னு சொன்ன தான, இப்போ என்ன அவசரம் உங்களுக்கு “

“ நீ எங்களுக்கு ஒரே பையன்டா அதான் அவசரம் படுரோம் “ என்று ராஜன் முறைக்க

“ ப்ச்… நான் ஒன்னும் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலயே ப்பா. மாறனுக்கு முடிச்சிட்டு அடுத்த மாசமே நாளும் ஓகேன்னு தான சொன்ன “

“ உன் இஷ்ட வெங்காயத்துக்கு லாம்  இங்க கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. பொண்ணு கிடைக்கும் போதே பண்ணிகிட்டா தான் உண்டு இல்லனா பொண்ணு கிடைக்காம சாமியாரா போக வேண்டியது தான் “

“ எனக்கு பொண்ணே கிடைக்கல்லை னாலும் பரவாயில்லை “ என்று மாறன் பக்கம் திரும்பி புருவம் ஏற்றி இறக்க

அதை பார்த்து கொண்டிருந்த வீரா தங்கம் இருவரும் நெஞ்சில் கை வைத்து

 “ அண்ணா இவனைப் பேச விட்டா நம்ம பையன் நமக்கு இல்ல ண்ணா. இப்போவே வாடான்னு கூட்டிட்டு போய்டுவான்  போல “

“ஆமாடா வீரா… அவன் வாயை உடனே அடைக்கணும் இல்ல காரியம் கெட்டுடும்   “  என்று ராஜன் புறம் திரும்பி

“அவன் கிட்ட போய் என்ன பேசுற ராஜன் சின்ன பையன் இப்படி எதவது உளற தான் செய்வான். கல்யாணம் முடிஞ்சா எல்லாம் வழிக்கு வந்துருவான்”

“ஆமா ண்ணா நீங்க நாளைக்கு அங்க போற வேலையைப் போய் பாருங்க நாங்க கரெக்டா நேரத்துக்கே வந்துறோம் “

“அனா தம்பி …”என்று ராஜன் இழுக்க

“தைரியமா போங்க ராஜன் “ என்று இருவரும் அவரை பேசி அனுப்பி விட்டனர் , வள்ளி

“யார் பொண்ணு ன்னு கேக்குறதுக்கு  முன்னாடி அனுப்பிடீங்களே ங்க “

“பொண்ணு தான யாருன்னு நான் சொல்றன்,  நம்ம ஊர் டீச்சர் பேரு வேதா பக்கத்து ஊரு தான் “ அதை கேட்ட மறுநொடி

“என்னது அந்த பொண்ணா” என்று விக்ரமன் ஷாக் ஆவது போல நடிக்க,  அவன் நடிப்பை நம்பிய தங்கம் மற்றும் வீரா திருப்தியாக சிரித்தபடி

“ஆமா அந்த பொண்ணு தான் “ என்று வீரா அவனைப் பார்க்க,  விக்ரமன்

“அந்த பொண்ண ? அவ எப்படி ? அவ…” என்று அவன் இழுப்பிலேயே அடுத்து என்ன சொல்ல போகிறான் என்று புரிந்தவராக தங்கம்

“ஆமா அந்த பொண்ணு நம்ம சாதி இல்லை தான். அதுல உங்க அப்பாவுக்கே பிரச்சனை இல்ல உனக்கு என்னடா “ என்று முறைத்து விக்ரமனை பார்க்க

தங்கம் சொன்ன செய்தியை கேட்ட மற்ற அனைவரும் “ என்னடா இங்க நடக்குது “ என்று குழம்பி போய் அனைவரும் பார்த்தனர். அப்போது மஞ்சு

“ உங்களுக்கு கோபம் வரலையாப்பா” என்று கேட்க

“ நான் ஏன் கோபப்படணும் மஞ்சு “

“ இல்ல சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணா உங்களுக்கு பிடிக்காது தான ப்பா “

“ உங்க அப்பாக்கு இப்பல்லாம் ஒரே சாதில கல்யாணம் பண்றது தான் ம்மா பிடிக்க மாட்டேங்குது “ என்று கிருபா மைண்ட் வாய்ஸில் பேச , தங்க பாண்டி

“இங்க பாருமா மஞ்சு எல்லாரும் எப்போவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. அன்னைக்கு இது தப்பா தெரிஞ்சிது இன்னைக்கு இதை விட பெரிய தப்பெல்லாம் தெரியுது. அதுக்கு இது பரவாலன்னு தான் ஏத்துக்கிட்டேன் “

“ அப்போ என் பொண்ணையும் அப்படி தான் ஏத்துக்கிட்டீங்களா “ என்று வள்ளியின் திடீர்  கேள்வியில் அவர் முகத்தை ஒரு நொடி பார்த்து விட்டு

“ ஆமா ம்மா அது தான் காரணம் “ என்று தலையை திரும்பியவர் எங்கோ பார்த்தபடி

“ நாளைக்கு பத்து மணிக்குலாம் கிளம்பி இருக்கணும் நல்ல நேரமா போய் சேரனும் சீக்கிரமா கிளம்பி இருங்க “ என்று சென்று விட்டார்.

வீர பாண்டி வள்ளி அருகே சென்று “ அது வந்து வள்ளி ..” என்று எதோ பேச போக அவர் அதற்கு நிமிர்ந்து பார்க்க தான் செய்தார்.

அந்த பார்வையே ஆயிரம் சொன்னது போல வீராவுக்கு அதற்கு மேலே எதுவும் சொல்லாமல் கிளம்பி வெளியே சென்று விட்டார்.

இவர்கள் சென்றதும்  விக்ரமன்  “ இவங்க சொல்லிட்டு போயிட்டா இந்த கல்யாணம் நடந்துடுமா என்ன. நானும் நடக்க தான் விட்டுருவேனா “ என்று சொல்லிவிட்டு மாறன் புறம் திரும்பி

“வா… மாறா இவுங்க இந்த கல்யாணத்தை எப்படி நடத்துறாங்கன்னு பாத்துறேன் “ என்று அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றுவிட்டான்.

அவன் செல்வதை பார்த்த கிருபா ஆர்யனிடம் “ பையன் நல்லா நடிக்கிறான்லடா நான் கூட உண்மையோன்னு நம்பிட்டன் ஒரு நிமிஷம்.  இவன் கம்பெனி வச்சதுக்கு பதில நடிக்க போயிருக்கலாம் போல “ என்று பேசியபடி “என்ன ரிப்ளைய காணோம்” என்று திரும்ப

ஆர்யன் முகம் தொங்க சோகமே உருவென இருந்தான். அவன் முகத்தை பார்த்த கிருபா

“என்னடா மூஞ்ச இப்படி வச்சிட்டு இருக்க “

“மயிலுடா…. என்ன மட்டும் சென்னைக்கு போக சொல்றாங்க டா அவ இல்லாம நான் எப்படி டா அங்க தனியா இருக்குறது “

“அட இதுக்கா இப்படி மூஞ்ச வச்சிருக்க ஏன் உன் தங்கச்சிய கூட தான் சீமந்தம்னு ஒரு வருஷம் உன் கூட வச்சிகிட்ட அதே போல தானட “

“ அந்த ஒரு வருஷத்துல பத்து மாசம் நீ எங்க கூட தானடா இருந்த “

“பத்து மாசமா இருந்த இல்ல இருக்காதே நல்ல யோசிச்சு பாரு பதினோரு மாசம் இல்ல “  அதை கேட்டு ஆர்யன் முறைக்க

“ சரி டென்ஷன் ஆகாத இப்போ என்ன மயூரி கூட இருக்கணும் அவ்வளவு தான “

“ஆமா டா ..”

“  இப்போ பாக்குற மாதிரி வொர்க் ஃபிரம் ஹோம் பாருடா எமர்ஜென்சினா மட்டும் ஆபிஸ் போடா “

“இல்ல முடியாதுடா நெக்ஸ்ட் மன்த் ஷெடியூல் டைட்டா இருக்கு. நான் ஆபிஸ் போய் தான் ஆகணும் “

“அப்போ வெற ஆப்சன் இல்ல நீ தனியா தான் இருக்கணும் “ என்று கிருபா சொன்னதும் முகத்தை தொங்க போட்ட படி ஆர்யன் உள்ளே சென்று விட்டான்.

இங்கு மாறனை வெளியே இழுத்து வந்த விக்ரமனை முறைத்த இருவரையும் பார்த்து நக்கலாகச் சிரித்த மாறன்

“ நீங்க ஏதோ பிளான் போட்டு பண்றிங்கன்னு புரியுது. ஆனா…. நீங்க என்ன பிளான் போட்டாலும் நாங்க நினைச்சது தான் கடைசில நடக்கும் அதை ஞாபகம் வச்சுக்கோங்க “

“அது எப்படி நடக்குதுன்னு நானும் பாக்குறேன் டா நேத்து பேஞ்ச மழைல முளைச்ச காளான் நீ சாவல் விடுறியோ பாத்துக்குறேன் “

என்று அவர்கள் சென்றதும் மாறன் விக்ரமன் முகம் இயல்பாக மாற

“ஃப்பு….” என்று காத்தை இழுத்து வெளியே ஊதிய மாறன்

“விக்கி, நமக்கு டைம் இல்லடா நம்ம ப்ளேனோட நெக்ஸ்ட் ஸ்டெப் போயிடலாம். நீ போய் வேதா கிட்ட அவள் என்ன பண்ணனும் னு சொல்லிடு”

“ம்ம்ம் சரி மாறா , நீ போய் வேதா வீட்டைச் சுத்தி நம்ம பசங்கள வாச் பண்ண சொல்லு.  எப்போ எந்த சங்கத்துல இருந்து வந்து ஆட்டைய கலைப்பாங்கன்னு தெரியாது “

“அது நான் பாத்துக்குறன். நீ சிரிச்சி தொலையாம உன் முகத்தை கல்யாணம் வர சீரியஸ்ஸா வச்சிக்கோடா. கொஞ்சம் உன் குரங்கு சேட்டையையும் அடக்கி வைடா. காரியத்தை கெடுத்துறாத “

“நீ சொல்லணும்னு இல்ல மாறா நான் ஒழுங்க இல்லேன்னா என் வேதாளமே என்ன போட்டுத் தள்ளிடும்டா “

“தெரிஞ்சா சரி ..” என்று மாறன் சிரிக்க

“நீயும் சிரிச்சி தொலையாத உனக்கு இப்போ லவ் பெயிலியர் அந்த மூட்ல சுத்து டா “

“அதை நான் பார்த்துக்கிறேன். நீ…அந்த……. அதன்  அவன்டா… ப்ச் என்ன பேரு அது. பொண்ணு தாரன்னு சொன்னானே அவன் பேரு “ என்று தலையை தட்டி மாறன் யோசிக்க

“மாரி முத்தா டா “

“அ.. அவனே தான் நீ எதுக்கும் அவன் மேல ஒரு கண்ணை வச்சிக்கோ டா “

“ம்ம்ம் டன்டா” என்று இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

மறுநாள் அனைவரும் பூ வைக்க பெண் வீட்டிற்கு கிளம்பி நிற்க முக்கியமாக கிளம்பி இருக்க வேண்டிய விக்ரமனை காணவில்லை. அதில் ராஜன் காண்டாகி வேட்டியை மடித்து கட்டி கையில் அருவாளோடு அவனை தேட போக .

அதை மறைந்திருந்து பார்த்த விக்ரமன் “ இவங்க கிட்ட மாட்டுனா உனக்கு கல்யாணம் இல்ல ஸ்டிரெயிட்டா  கருமாதி தான் நடக்கும் போல தப்பிச்சிருடா விக்கி “ என்று ஊரை விட்டு சென்னைக்கே சென்று விட்டான்.