நெஞ்சம் 35

புல்லட்டை ஓட்டியபடி வீரா “ அண்ணா என் பொண்ண பார்த்துட்டுப் போவோமா “ என்று அசையுடன் கேட்ட தன் தம்பியின் ஏக்கம் புரிந்து

“நம்ம தம்பிய ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ இந்த முடிவ நமா மொதல்லயே எடுத்திருக்க வேண்டுமோ “ என்று எண்ணியவராக

“ம்ம்ம் போ வீரா. அப்படியே வீட்டுல இந்த விக்கி பையன் கல்யாணத்தை பத்தியும் சொல்லிடுவோம் “

“ ஆமா…. ண்ணா நாளைக்கு காலையில எத்தனை மணிக்கு  பொண்ணு பாக்க போறோம்னு சொன்னாங்க ராஜன் ண்ணா “

“அது நேரம் ராஜாத்தி கிட்ட கேட்டுட்டு நம்ம வீட்டுக்கு போச வறேன்னு சொல்லியிருந்தான் வீரா “

“ஓ… அப்போ சரி ண்ணா “ என்ற படி புல்லட் வேகமாக வீட்டை நோக்கி சென்றது.

வீட்டின் முன் புல்லட்டை நிறுத்திய வீரா வேகமாக வீட்டுக்குள் நுழைந்தவரின் கண் எல்லாம் அவர் மகளை தான் தேடியது.

இத்தனை நாள் அருகில் இருந்த தன் ஆசை மகளை கண்ணாற பார்த்து பேசாமல் எப்படி தவித்திருப்பார் அத்தனைக்கும் சேர்த்து இன்று பேசி தீர்க்க வேண்டும் என்ற ஆசையில் தேடினார்.

சிறு வயதில் இருந்து அண்ணண் பேச்சையே கேட்டு வளர்ந்ததால் திடிரென்று அவரை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை. எண்ண செய்ய என்று திணறி கொண்டிருந்த வருக்கு இன்று தான் நிம்மதியாக இருந்தது.

அங்கு வராந்தாவில் தான் மயூரியை தவிர மற்ற அனைவருமே அமர்ந்திருந்தனர். அங்கே சுற்றி சுற்றி பார்த்த வீரா முகம் தொங்க ஆர்யனை பார்த்து

“எங்க மருமகன் மயிலு “

“அவ கொஞ்சம் டயடா இருக்குன்னு தூங்க போய்ருக்கா. ஏன் எதவது அவசரமா “ என்று ஒன்றும் தெரியாதவன் போல விசாரிக்க

“அவசரம்லா இல்ல மருமகனே. மயிலு தூங்கட்டும் “ என்று குரல் சோர்ந்து போய் வந்தது வீராவுக்கு.

மயூரி இவர் வருவது தெரிந்து வேணும் என்று தான் உறங்க சென்றாள். இப்படி தங்க பாண்டி சொன்னது பிறகு அவர் காட்ட போகும் பாசத்தை அவள் ஏற்கத் தயாராக இல்லை அதனாலேயே தூங்க போகிறேன் என்று படுத்து விட்டாள்.

இவற்றை எல்லாம் கேட்டபடி உள்ளே வந்த தங்க பாண்டியின் கண்ணில் தூசியாக விக்ரமன் மற்றும் மாறன் ஒன்றாக அமர்ந்திருந்தது உறுத்த.

“ என்ன உங்க ரெண்டு பேருக்கும் சோலியே இல்லையா ? இங்கயே ஒன்னா சுத்திட்டு இருக்கிங்க, தோட்டம் கம்பெனிலாம் பாக்க வேணாமா “

“அதெல்லாம் பாத்துட்டு தான் இருக்கோம் பெரியப்பா “

“என்ன பாத்து கிலிக்கிறிங்களோ . இப்படி ஒன்னா இருந்தா எங்க விளங்கும் “ என்று வாய்க்குள் அவர் முனு முனுக்க

“ ஒண்ணா இல்லனா தான் விளங்காது பெரியப்பா “ என்று விக்ரமன் சொல்ல

“என்னடா சொன்ன” என்று அவர் சீரிக்கொண்டு வர

“அச்சோ பெரியப்பா நான் எங்க கம்பெனி பத்தி பேசினேன். இவனோட அட்வைஸ் என்னோட மார்க்கெட்டிங் இது இல்லாம எப்படி கம்பெனி  ஓடும்னு சொன்ன பெரியப்பா  “

என்று சொல்லி பல்லை காட்டியவனை ஒன்றும் செய்ய முடியாமல் முகத்தை திரும்பியவர்

“அம்மா நம்ம புள்ளைக்கு இது எத்தனாவது மாசம் போய்டு இருக்கு “ என்று வெள்ளையம்மா அருகில் அமர்ந்தபடி கேட்டார் தங்க பாண்டி.

அவர் கேள்வியில் மகிழ்ந்த வெள்ளையம்மா “ அதுவா தங்கம் ஏழாம் மாசம் போய்டு இருக்கு “

“ஏழாம் மாசம் முடியறதுக்குள்ள ஒரு நல்ல நாளா பாத்து சொல்லு ம்மா சீமந்தம் செஞ்சிருவோம் “

“உண்மையாவா சொல்றிங்க “ என்று மீனாட்சி வாயை பிளக்க

“அப்பறம் புள்ளக்கு சீமந்தம் பண்ண வேணாமா என்ன. முதல்ல இதை பொறுப்பா நீங்க தான் யோசிச்சு எங்க கிட்ட வந்து சொல்லிருக்கணும் எங்க இந்த வீட்டுல எல்லாம் தலைகீழால நடக்குது “

“உங்க அப்பா பேசுறத கேளேன். இரண்டு நாள் முன்ன கூட இத பத்தி பேச போன. அந்த புள்ள பேரை சொன்னதும் எகிறிட்டு மிதிக்க வந்துட்டு இப்போ தலைகீழா இருக்காமே “ என்று மஞ்சு காதில் ஓத

“என்னடி அவ காதுல பேசுற” என்று தங்க பாண்டி முறைக்க

“அது ஒன்னும் இல்ல ப்பா சீமந்தம் முடிச்சு உடனே அக்கா கிளம்பிடு வாங்கலான்னு கேட்டாங்க ப்பா “ என்று மஞ்சு மீனாட்சியை கொத்துவிட

“அடியே வாயை மூடிடி…” என்று பயத்தில் மீனாட்சி தன் மகள் கையைப் பிடிக்க அவள் எங்கே கேட்டாள்.

தங்கப்பாண்டிக்கு கோபம் வந்தால் யார் எவர் என்று பார்க்காமல் கண்டமேனிக்கு திட்டித் தீர்த்து விடுவார். சரி திட்டு மட்டும் தானே என்று பார்த்தாள் மீனாட்சி  தனியே மாட்டினால் போதும் ஒரு வழி செய்து விடுவார்.

அதற்கு பயந்தே வாயை விட மாட்டார் மீனாட்சி.

“ என்ன மீனாட்சி புதுசா சொல்ற சீமந்தம் முடிச்சா  பொண்ணு பிறந்த வீட்டுல தான இருக்கணும் பிரசவம் முடியுற வர “  என்று தங்கம் சொல்லி முடிக்க கூட இல்ல

“என்னது இங்கயா….” என்று கத்தியது வேறு யாரும் இல்லை நம் ஆர்யனே தான்.

மயூரி இல்லாமல் ஒரு நாள் தனியாக இருப்பதே அவனால் முடியாது இதில் பிரசவம் முடியும் வரையா முடியவே முடியாது என்று யோசித்தவன்

“ ஆமா தம்பி இங்க சீமந்தம் முடிஞ்சி பிரசவம் முடிஞ்சி குழந்தைக்கு அஞ்சு மாசம் ஆன பிறகு தான் அனுப்பி வைப்போம்”

என்று பெரிய சைஸ் அணுகுண்டை அலேக்காக ஆர்யன் தலையில் வள்ளி போட , ஆர்யன் விழி பிதுங்கி தான் நின்றான்.

ஆர்யன் முகம் பார்த்த விக்ரமன்  “ பாவம் மாம்ஸ் மயிலு மயிலுன்னு ஜாலியா சுத்திட்டு இருந்தவரை தனியா மயிலு மயிலுன்னு காதல் பரத் மாதிரி சுத்த விட்டுருவாங்க போலவே “

“ஆமா டா மாமா முகமே வாடிப் போய்டு “

“ அதுக்கு என்ன பண்ணடா உங்க அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் இப்போ தான் எல்லாம் நடைமுறையும் கண்ணுக்கு தெரியுது போல “

“ மாமா நீங்களும் இங்க இருந்து அக்கா சென்னைக்கு போற வரை கூடவே இருங்க மாமா” என்ற மாறன் புறம் திரும்பி ஆர்யன்

“ இந்த பத்து நாளுக்கே நான் அங்கே போய் இரண்டு வாரம் தொடர்ந்து வர்க் பாக்கணும் டா. நான் இல்ல மயில், ரெண்டு பேருல ஒருத்தராவது கம்பெனிக்கு போய் பாத்துக்கணும் டா “

“ சூப்பர் அப்போ ஒன்னும் பண்ண முடியாது ஒரு எட்டு மாசத்துக்கு போன்லயே அக்காவ ஃபாளோவ் பண்ணுங்க மாமா “

“ அதெல்லாம் முடியாது இதோ பாருங்க மயிலுக்கு நான் அங்க பெரிய  ஆஸ்பிட்டல்ல தான் பார்க்கிறேன். அங்க தான் டெலிவரியும் நடக்கும்”

“அதெல்லாம் நீங்க பயப்படாதீங்க  மருமகன் இங்க டவுன்ல பெரிய ஆஸ்பிட்டல்லாம் இருக்கு அங்க நல்லாவே பார்த்துப்பாங்க “ என்ற வீராவை பார்த்த ஆர்யன்

“எல்லாம் ரவுண்டு கட்டுறாங்களே “ என்று யோசித்தவனாக

“ நீங்க தான பத்து நாளில்ல கிளம்ப சொன்னிங்க ஊருக்கு. நாங்க அதுபடி கிளம்பிறோம் இந்த சீமந்தம் எல்லாம் என் மயிலுக்கு நான் பண்ணிக்கிறேன். முறை படி மாப்பிள்ளை வீட்டுல தான சீமந்தம் நடக்கனும் “ என்று ஆர்யன் முறுக்கிக் கொள்ள

“அச்சோ தம்பி அது எதோ என் மகன் கிறுக்குத்தனமாக பேசுனது அதை போய் மனசுல வைத்துவிட்டு பேசாதீங்க தம்பி. சீமந்தம் நீங்க பண்ணாலும் சீமந்தம் முடிஞ்சி அவ இங்க தாய் வீட்டுல தான சீர் ஆடணும் தம்பி .

பிள்ளையும் அதுக்கு தான் ஆசை படும். புள்ள பிறக்கும் போது அம்மா கூட இருந்து பாத்துக்குற மாதிரி வராது தம்பி “ என்று வெள்ளையம்மா இறைஞ்சுவதாக பேசவும் ஆர்யனுக்கு என்ன செய்ய என்றே புரியவில்லை.

அப்படியே முகம் தொங்கி போய் யோசனையாக அமர்ந்து விட வள்ளி  தேதி பார்த்து இன்னும் ஒரு வாரத்தில் சீமந்தம் என்று சொல்லி விட்டார்.

சரியாக அந்நேரம் ராஜன் மற்றும் ராஜாத்தி முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் உள்ளே நுழைந்தனர்.

“ என்னம்மா இந்த பக்கம் காத்து வீசுது…” என்ற விக்ரமன் குரலில் பல்லை கடித்த ராஜன்

“ கம்பெனிக்கு போகாம நீ என்னடா இங்க காத்து வாங்கிட்டு இருக்க “  என்று ராஜாத்தியை பார்த்து

“அதெல்லாம் நாங்க போகலைன்னாலும் வேலை கன் மாதிரி தான் நடந்துட்டு இருக்கும். நீங்க தான் ரொம்ப பொறுப்புப் துறப்பு பேசுவீங்களே. கடைக்கு போகாம உங்க காத்து என்ன இங்க வீசுது “

“அடேய்…. உன் வாய் இருக்கே “ என்று ராஜாத்தி அதட்டி விட்டு ராஜன் புறம் திரும்பி

“அவன விடுங்க நல்ல விஷயமாக பேச வந்துருக்கோம் அதை பார்ப்போம் “ என்றபடி உள்ளே சென்றனர்.

“மீனாட்சி போய் காபி எடுத்து வா “ என்று அவருக்கு வேலையை ஏவி விட்டு

“வா…ராஜன் வாம்மா…” என்று அங்கே சார் போட்டு அதில் அமர வைத்தனர்.

“என்ன தங்கம், எல்லாம் ஒன்னா பேசிட்டு இருக்கிங்க விஷயத்தை சொல்லிட்டீங்களா “

“இல்ல ராஜன் இங்க பொண்ணு சீமந்தம் பத்தி பேசிட்டு இருந்தோம் “

“ஆமா ண்ணா நீங்க கூட ஒரு வார்த்தை வந்து சொல்லலையே பொண்ணு வந்தத பத்தி “

“அது  உன் பையனுக்கு தெரியும் ம்மா அவன் சொல்லுவான்னு பார்த்தேன் “

“அவன் தான நல்லா சொல்லுவான் போங்க ண்ணா “ என்று ராஜாத்தி விக்ரமனை முறைக்க,  அவனோ தங்கத்தை தான் முறைத்தான்

“யாரு கிட்டயும் மூச்சு விட கூடாதுன்னு முன்னூறு வாட்டி போன் பண்ணிட்டு இப்போ உங்க பெரியப்பா  பேசுறதை பாரேன் “

“அவர் தானட, எப்படியெல்லாம் சமாளிக்கிறாரு ன்னு நானே ஷாக் ஆகி பாத்துட்டு இருக்கேன்டா “

“ஆமா, ஆமா, உங்க பெரியப்பா பேசுறதைப் பார்த்தா, கருப்பு கொடிய தூக்கிட்டு சாதியே வெளியேறுன்னு போகுற போராளி மாதிரி இருக்கு “

“ உக்கும் நேத்து வரை எடுடா அவன வெட்டுடா அவனன்னு பேசிட்டு இன்னைக்கு என்னன்னா அன்பே சிவம்னு பேசுறாரு ”

“எதுக்கும் உங்க பெரியப்பாவ வாயைத் திறந்து நாக்கை காட்ட சொல்லுடா “

“ஏன் எதுக்கு டா “

“இல்ல மாத்தி மாத்தி பேசுறாரே அதான் ரெட்டை நாக்கான்னு பார்க்க “

“ஓ… அப்போ சரி இதோ கூப்பிடுறேன் பெரியப்பாவ “ என்று அழைக்க போன மாறன் தொடையில் தட்டிய விக்ரமன்

“அட நீ வேற சும்மா இரு டா. அல்ரெடி உன் கிட்ட இப்படி பேசுறத பார்த்தே இன்ஜின் ரயில் மாதிரி மூக்குல புகை விட்டுட்டு இருக்காரு இதுல நீ வேற ஏன்டா “

விக்ரமன் சொன்னது போல இவர்கள் கூடி கூடி பேசுவதை பார்த்து கோபத்தில் வீட்டையே எரித்து விடும் ஆத்திரத்தில் தான் இருந்தார் தங்கம்.