நெஞ்சம் 31

விக்ரமன் முகத்தை சீரியஸாக வைத்தபடி ஆர்யன் நோக்கி வந்தவன்

“ மாம்ஸ் எப்படியாவது நல்லா பேசிடுங்க மாம்ஸ். நீங்க போடுற பிட்ல இவுங்களா வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிரணும் ப்ளீஸ் மாம்ஸ் “

“எப்படிடா மூஞ்ச இப்படி வச்சிட்டு பேசுற நீலாம் இங்க இருக்க வேண்டியவனே இல்லை “

“வேற எங்க மாம்ஸ் இருக்க வேண்டயவன் நீலாலயா “

“நீ எங்கயோ இருந்து தொல, மொதல்ல இங்க இருந்து இடத்த காலி பண்ணு ரெண்டு பேரும் இங்க தான் குறு குறுன்னு பாத்துட்டு இருக்காங்க “

“அப்போ நான் கிளம்புறேன் மாம்ஸ் நீங்க நல்லா பேசுங்க “

“சரிடா நீ போ நல்ல மெடல் வாங்குற அளவு பேசிறேன் “ என்று அவன் தோளை தட்ட விக்ரமன்

“ எனக்கு கல்யாணம் மட்டும் நல்ல படியா ஆகட்டும். உங்களுக்கு கண்டிப்பா நான் மெடல் போடுறேன் மாம்ஸ் “ என்று சொல்லியவன் அவன் புல்லட்டில் ஏறி கிளம்பி விட்டான்.

“என்ன ண்ணா மருமகன் தம்பி கிட்ட எதோ பேசிட்டு போய்டான் அப்படி என்ன பேசியிருப்பான் “

“ அதான் கேக்கல வீரா, தள்ளி போனதுல ஒன்னுமே கேக்கல. பேசாம தம்பி கிட்டயே போய் கேட்டுருவோமா “

“மருமகன் தம்பி சொல்லுவாரா “

“நீ கேளு அதெல்லாம் சொல்லுவாரு “

என்றதும் இருவரும் வேகமாக தொப்பையை விட்டு வெளியே வந்தனர்.

இருவரும் வருவதை பார்த்தும் காணாது போல காரில் ஏற போன ஆர்யனை , வீரா

“தம்பி….மருமகன் தம்பி…. கொஞ்சம் நில்லுங்க “ என்று கத்தவும் ஆர்யன் தெரியாதது ஏதார்த்தமாக  திரும்பி பார்த்தவன்.

இவர்களைப் பார்த்து அதிர்வது போல “ என்ன நீங்களா இங்க எங்க ….” என்று இழுத்து சுற்றி பார்க்க

“இது நம்ம தோப்பு தான் தம்பி “ என்று வீரா சிரித்த முகமாக பேசினார் என்றாள் தங்கபாண்டி மீசையை முறுக்கி விட்டு தலையை திருப்பிய படி நின்று கொண்டார்.

வீராவுக்கு ஆர்யனை ஏற்றுக்கொள்ள எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவரின் அண்ணனுக்காக மட்டும் தான் இன்று வரை தன் மகளிடமும் ஆர்யனிடமும் நெருங்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்.

சிறு வயதில் இருந்து கூட இருக்கும் அண்ணனா இல்லை காணாமல் போய் திரும்பி வந்த அவரின் ஆசை மகளா என்று தவித்து கொண்டு இருக்கிறார்.

தன் தம்பி இப்படி தவிப்பது தெரிந்துமே தங்க பாண்டி சற்றும் இறங்கி வராமல் அவர் தம்பியையும் இறுக்கி பிடித்து கொண்டிருக்கிறார்.

இப்போதும் வீரா ஆர்யனை வார்த்தைக்கு வார்த்தை மருமகன் என்று சொல்வது பிடிக்கவில்லை தான் இருந்தும் இங்கு ஆர்யன் முன் தன் தம்பியை என்ன சொல்ல என்று அமைதியாக நின்றார்.

“ அப்படியா …” என்று தோப்பை பார்த்தவன் வேறு என்ன பேச என்று அமைதியாக நின்று விட்டான்.

அந்த அமைதியில் தங்க பாண்டி வீராவின் தோளில் லேசாக இடிக்க அவரே பேச தொடங்கினார்.

“ இங்க நீங்க என்ன பண்றீங்க தம்பி “

“அது மயூரிக்கு மாத்திரை வாங்கிட்டு வந்தேன் “

“ஓ… வாங்கிட்டீங்களா… எல்லா மாத்திரையும் கிடச்சிதா “

“ம்ம்ம் “ இதற்கு மேல என்ன பேச என்று வீரா யோசிக்க தங்க பாண்டி பொறுக்க முடியாமல்

“இந்த விக்ரமன் இருக்கானே அவன் உங்க கிட்ட என்ன சொல்லிட்டு இப்போ போனான் “ என்று விஷியத்துக்கு வந்து விட்டார்

“அது வந்து……” என்று ஆர்யன் யோசிக்க

“என்னன்னு சொல்லுங்க தம்பி நாங்க எதுவும் தப்பா நினைக்க மாட்டோம்” என்று வீர் சொல்ல

“அது விக்ரமன் வந்து….. “ அப்பவும் ஆர்யன் தயங்குவது போல தான் பேசினான்

“என்ன வந்து போயின்னு பேசிட்டு இருக்கீங்க அந்த டீச்சர் பொண்ணோட என்ன பேசிட்டு இருந்தான்னு சொன்னான் சொல்லுங்க தம்பி “ என்று தங்க பாண்டி அவரின் கட்டைக் குரலில் கேட்கவும்

“என்ன வாய்டா இது அளவெடுத்து செஞ்ச மாதிரி இப்படி டெரரா இருக்கு. இவுங்கள வெறுப்பு ஏத்துனது போதும் சொல்லிடுவோம் இதுக்கு மேலன்னா பொங்கிடுவாரு போல  “ என்று நினைத்தவன்.

“நீங்க பாத்துட்டு தான் கேக்குறீங்களா அப்போ சொல்றன் சொல்றதுனால எனக்கு என்ன “ என்று தோளை உலுக்கியவன்.

“அந்த பொண்ணு விக்கிய ரொம்ப லவ் பண்ணுதாம். அவன ரொம்ப வருஷமா ஒன் சைட்டா லவ் பண்ணிட்டு இருந்திருக்கு. அன சொல்லாம மனசோட வச்சிருக்க, நேத்து அவ வீட்டுல அவளுக்கு மாப்பிளை பாக்குறத பத்தி பேசிருக்காங்க அதுல பயந்துட்டு வந்து இவன் கிட்ட லவ் சொன்னா இவன் மொழி என் பையன் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிருக்கான் “

“அட பாவி… இவன் ஒண்ணுத்துக்கும் லாக்கி ஆக மாட்டான் போலயே. அதான் அந்த பொண்ணு அழுதுட்டு போயிட்டா “ என்று வீரா கேட்க

“அது தான் இல்ல பரவாயில்லை. நான் அவனுக்கு அம்மாவ இருக்கேன் என்னை கல்யாணம் பண்ணி கூட வச்சிக்கோ .உன் கூடவே வாழ்க்கை பூரா இருந்தா மட்டும் போதும் வேற எதுவும் நான் எதிர் பார்க்க மாட்டேன்னு சொல்லிருக்கா “

“இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணா?” என்று தங்க பாண்டியே அதிர்ந்து விட்டார்

“ஆமா நல்ல பொண்ணு தான் ஆனா இந்த பையன் முடியாதுன்னு அனுப்பி வச்சிட்டான். நான் மட்டும் இவன் அப்பாவா இருந்தா தலைல தட்டி வேற சாதியா இருந்தாலும் பரவாயில்லை ன்னு கல்யாணம் பண்ணி வச்சிருவேன் “

“என்ன அந்த புள்ள நம்ம சாதி இல்லையா “ என்று தங்க பாண்டி கேட்க

“ஆமா உங்க சாதியில்லையாம். ஆனா நல்ல பொண்ணு இவனுக்காக கண்ணை மூடிட்டு என்ன வேணா செய்வா போல. சரி எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் “ என்று ஆர்யன் கிளம்பி விட்டான்.

இங்கு தங்க பாண்டி மற்றும் வீரா இருவரும் மாற்றி மாற்றி முகத்தை பார்த்து கொண்டு நின்றவர்கள் பின் எதுவும் பேசாமல் பைக்கில் ஏறி வீட்டுக்கு சென்று விட்டனர்.

இவர்கள் ஏதாவது பேசுவார்கள் என்று காத்திருந்த மாறனுக்கு தான் ஏமாற்றமாக போய்விட்டது.

அந்த ஏமாற்றத்துடனே வீட்டுக்கு சென்றான். வீட்டில் ஆர்யன் விக்ரமன் இருவரும் ஆர்வமாக காத்திருந்தனர்.

அப்போது முகத்தை தொங்க போட்டபடி வந்த மாறனை பார்த்த விக்ரமன்

 “ மாம்ஸ் என்னன்னு பேசினிங்க மாறன் முகமே சரியில்லயே”

“நான் நீங்க சொன்னபடி தான்டா பேசினேன்”

“அங்க மாமா நல்லா தான் பேசுனாங்க விக்கி. ஆனா எங்க அப்பா பெரியப்பா கிட்ட தான் நோ ரியாக்ஷன் “

“என்னடா சொல்ற இவுங்கள நம்பி மிஸன் இம்பாசுபல் அளவு பிளான் போட்டது வேஸ்டா “

“பேர்லயே  இம்பாசுபல் ன்னு இருக்கு அது மாதிரி  பிளான் போட்ட எங்க உருப்படும். போங்கடா நீங்களும் உங்க பிளானும் “ என்று ஆர்யன் சென்றுவிட்டான்.

அப்போது பார்த்து விக்ரமன் போன் “யாஞ்சி யாஞ்சி……” என்று பாட்டு பாட மாறன் அவனைப் பார்த்து

“ இந்த பாட்டை எப்படா வச்ச “

“அதுவாடா…. பாட்டு நல்லா இருந்துச்சு அதான் வைச்சன் “ என்று இழித்தவனை பார்த்து

“சரி என்னமோ “  என்று அமர்ந்து விட விக்ரமன் சற்று தள்ளிப் போய் போனை எடுத்தவன் எடுத்த வேகத்தில்

“ஹலோ வேதாளம்….” என்று அழைக்கவும் வேதா

“ விக்கி என்ன ஆச்சு. மாறன் அப்பா என்ன சொன்னாங்க. நான் நடிச்சதைப் பார்த்து நம்பிட்டாங்களா  சொல்லு விக்கி என்ன ஆச்சு “ என்று படபட பட்டாசாக வெடித்தவளின் பேச்சில் சிரித்தவன்

“க்யூட் வேதா நீ “ என்று ரசனையாக பேசவும் அந்த பக்கம் இருந்து சத்தத்தைக் காணோம் .

அதில் தலையை கோதிய விக்ரமன் “ மிக்குரும்” என்று குறளை சிருமிக்கொண்டவன்

“என்ன வேதாளம் நீ அவ்ளோ எஃபோர்ட் போட்டும் அங்க ஒரு ரிப்ளையையும் காணலையே “

“என்ன விக்கி சொல்ற அப்போ எல்லாம் வேஸ்டா”

“வேஸ்டுனு சொல்ல முடியாது இரு பார்க்கலாம் “

“நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அழவெல்லாம் செஞ்சேன் இப்படி ஆகிடுச்சே “

“நீ அழுததும் அத பார்த்துப் பயந்துட்டாங்களோ என்னமோ “

“விக்கி … “ என்று வேதா சினுங்கவும்

“சரி சரி பீல் பண்ணாதடி பாத்துக்கலாம் நீ போய் கண்ல ஜில்லுனு எதவது வையு கண்ணே சிவந்து போச்சு “ என்ற விக்ரமனின் அக்கறையில் மனது ஜில்லென்று சாரல் வீச புன்னைக்கைத்தவள்.

“ம்ம்ம் நீயும் உடம்பைப் பார்த்துக்கோ விக்கி. பாய்…  “ என்று வைத்துவிட்டாள்.

இங்கு வீட்டிற்கு வந்த தங்கப்பாண்டி மற்றும் வீரபாண்டி குறுக்கும் மறுக்கும் என்று நடந்த படி யோசித்தார்கள். இவர்கள் இருவரின் தலையுள்ளும் ஒரே கேள்வி தான் ஓடியது அது

“மகனின் வாழ்க்கையா அல்லது இவர்களின் சாதியா “ இல்லை இதை இப்படி சொல்ல கூடாது “ குடும்ப மானமா இல்லை சாதியா?” இதில் எதை தேர்ந்தெடுப்பார்கள்.