நெஞ்சம் 29

தங்கபாண்டி போட்ட சத்தத்தில் தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் திரும்பி அவரைப் பார்க்க

“என்ன அண்ணா ஏன் இப்படி கத்துறீங்க. அப்படி தரகர் என்ன சொன்னார் “

“உன் பையன் இருக்கன்….. அவன் என்ன பண்ணி வச்சிருக்கான் தெரியுமா”

“அவன் என்ன பண்ணியிருந்தாலும் சரி, அதை பத்தி பேசுற இடம் இது இல்லை ண்ணா “

என்று சுற்றி கண்களால் காட்ட அப்போது தான் தங்க பாண்டி அங்கிருந்த அனைவரும் இவர்களை பார்த்து பேசிக்கொண்டு இருப்பதை கவனித்தார் . உடனே அதை பார்த்தவர்

“என்ன பேச்சு…. எல்லாம் வேலையை பாருங்க “ என்று கத்திவிட்டு முன்னே செல்ல வீரப்பாண்டி அவர் பின்னே சென்றார்.

அங்கிருந்து இருவரும் சேர்ந்து பெரிய வீட்டுக்கு உடனே கிளம்பி சென்றனர்.

அங்கே வீட்டுக்குள் நுழைந்ததும் வீராவை அவர் அறைக்கு அழைத்து சென்று

“உன் பையன்  அங்க அந்த தரகரைப் போய் மிரட்டி இருக்கான் வீரா. அவர் கால் பண்ணி அத்தன புலம்பு புலம்புறாரு  “

“ என்ன ண்ணா சொல்றீங்க, இவன் ஏன் அங்க  போனும்.

“ வேற எதுக்கா இருக்கும் அந்த கண்டறாவிய வேற என் வாயால நான் சொல்லனுமா வீரா “

“ இவன இப்போ என்ன தான் பண்றது ண்ணா “

“ இல்ல இதை சும்ம விட கூடாது. உன் பையன இப்படியே விட்டா இதை ஊருக்கே தெரியுற கணக்கா பண்ணி வச்சி நம்ம மானத்தையெல்லாம் வாங்கி தொலச்சிருவான் “

“ என்ன ண்ணா வார்த்தைக்கு வார்த்தை உன் பையன் உன் பையன்னு சொல்ற. அவன் இப்போ உன் கண்ணுக்கு என் பையனா மட்டும் தான் தெரியுறானா “

என்று வீரா சொன்னதை கேட்டு ஒரு நிமிடம் அமைதியானவர் தோப் என்று கட்டிலில் அமர்ந்து விட்டார்.

தலை விண் விண் என்று வலிக்க தலையைப் பிடித்தவர் “ நான் அப்படி நினைச்சு பேசலடா எதோ கோபம் “

“ அவன் பண்றத பார்த்த எனக்கு கோபம் தான் வருது ண்ணா. ஆனா, அதை காட்ட தான் முடியல ஏன்னா அவன் என் பையன் ஆச்சே “

“வீரா கோபப்படாம பேசுடா, மாறன பத்தி அந்த தரகர் ரொம்ப பேசிட்டான். அதான் அந்த கோபத்துல பேசினான்டா. மத்த படி நம்ம பையனுக்காக தான டா யோசிப்பான். அவனும் எல்லார் மாதிரியும் கல்யாணம் பண்ணிட்டு பிள்ளைங்க  மனைவின்னு சந்தோஷமா வாழ எனக்கும் ஆசை இருக்காதடா “

“ம்ம்ம் புரியுது ண்ணா. ஆனா இதை புரிஞ்சிக்க வேண்டியவன் புரிஞ்சிக்காம இப்படி பண்ணிட்டு இருக்கானே “

“ வீரா பேசாம விக்ரமனுக்கு நம்மளே நம்ம தெரிஞ்ச நல்ல பொண்ண பாத்து பேசி பாப்போமா “

“தெரிஞ்ச பொண்ணா இருந்தாளும் இவனுங்க போய் பேசி குழப்ப மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் ண்ணா “

“இவுங்க என்ன தான் பேசுனாலும் குழம்பாத மாதிரி ஒரு பொண்ண பாப்போம் டா “

“அப்படி யாராவது நம்ம ஜாதில இருக்காங்கள்ல ண்ணா”

“தேடுவோம்டா.. நல்ல பொண்ணா இருந்தா போதும் காசு வசதிலாம் வேணாம்னு சொல்லிடுவோம். “

அதை கேட்ட வீராவுக்கு கண்கள் பளிச்சிட” இது நடந்துச்சுன்னா அதே போல பொண்ண பாத்து மாறனுக்கும் முடிச்சிடலாம்ல ண்ணா “

“ஆமாடா வீரா!” என்று அவர் முகமும் மலர இருவரும் அன்றிலிருந்து ஒன்றாகச் சேர்ந்து பெண் தேட தொடங்கினர்.

இவர்கள் தேடுதல் வேட்டை தொடங்கி  இத்தோடு நான்கு நாட்கள் ஆகி விட்டது.

ஒரு முன்னேற்றமும் இன்றி இருவரும் வாழைத் தோப்பில் தொட்டி அருகே கன்னத்தில் கை வைத்தபடி அடுத்து என்ன என்ற கேள்வியுடன் அமர்ந்திருந்தனர்.

“ இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தா ஒன்னும் ஆகிட போறது இல்ல வீரா “

“ப்ச், வேற என்ன ண்ணா பண்ண. முடிஞ்ச அளவு பக்கத்து ஊரு நம்ம ஊருன்னு தேடி பார்த்தாச்சு எல்லாம் யோசிச்சு சொல்றோம்னு தான் சொல்றாங்களே தவிர நம்ம சொல்றத நம்ப மாட்டிக்கிறாங்கலே ண்ணா“

“பையனுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொன்ன யார் தான்டா நம்புவா எல்லாரும் வேற ஏதாவது பிரச்சன இருக்குமோன்னு பயப்படுறாங்க “

“அதுக்கு தான ண்ணா சில இடத்துல பழைய காதலை மறக்க முடியாம இப்படி இருக்கான்னு சொன்னோம் “

“அப்படியும் தான் ஒத்துக்கல, எங்க கல்யாணத்துக்கு அப்பறம் அந்த பொண்ணு வந்த இவன் விட்டுருவானோன்னு பயப்படுறாங்க “

“போங்க ண்ணா என்னால இதுக்கு மேல யோசிக்க முடியல “

“நம்பிக்கையைத் தளர விடாத வீரா “ என்று அவர் தோளில் கை வைத்து சமாதானம் செய்து விட்டு

“சரி வா வீரா நேரம் ஆச்சி, வீட்டுக்கு போவோம் “ என்று இருவரும் தோப்பை விட்டு வெளியே நடந்து வரும் போது தூரத்தில் தோப்பின் மறுபக்கம் ரோட்டின் அருகே யாரோ இருவர், ஆணும் பெண்ணுமாக நின்று பேசிக்கொண்டு இருப்பது போல தெரியவும்

“இதோ பாரு வீரா, இப்போ இருக்கிற பசங்கெல்லாம் என்னா வேகத்துல இருக்காங்கன்னு பாரு, எல்லாம் பொண்ணு பின்னாடி தான் சுத்துறாங்க “

“எங்க ண்ணா , நம்ம வீட்டில் ஒன்று இருக்குதே விசித்திரம், பொண்ணு பின்னாடி சுத்தாம எருமை பின்னாடி போய் சுத்திட்டு இருக்கு “

“நம்ம பையன எதுல சேக்குறதுன்னே  தெரியல்லைடா வீரா. சரி அதை விடு முதலில்ல அங்க பேசிட்டு இருக்குறது யாருன்னு பார்ப்போம் “ என்று இருவரும் அருகே சத்தம் போடாமல் நடந்து சென்று பார்த்தனர்.

அங்கு இருந்தவனை பார்த்து இருவரும் அதிர்ந்து அங்கேயே உறைந்து நின்று விட்டார்கள்.

“ அண்ணா… என் கண்ணுக்கு எல்லாம் தப்பு தப்பா தெரியுது ண்ணா நீங்க கொஞ்சம் அது யாருன்னு பாத்து சொல்லுங்க மொதல்ல கண்ண கொண்டு போய் டாக்டர் கிட்ட காமிக்கனும்” என்று அவர் கண்ணை கசக்கி கொண்டு பார்தார்.

“வீரா எனக்கும் தப்பா தான்டா தெரியுது ரெண்டு பேருக்கும் கண்ணு போயிடுச்சா “ என்று ஒருவரை ஒருவர் மாற்றி பாத்துக்கொண்டனர்.

“ஒரு வேளை நம்ம அவுங்கள பத்தியே பேசிட்டு வந்ததனால இப்படி தெரியுதோ ண்ணா”

“அப்படினா எனக்கும் அதே போல வா தெரியும் இல்ல கண்ணு தான் நமக்கு போச்சா “

 அதை கேட்ட வீரா மீண்டும் கண்களை கசக்கி விட்டு நன்றாக உற்று பார்த்தவர்.

“கண்ணுலாம் நல்லா தான் இருக்கு போலன்னா அங்க நிக்குறது நம்ம விக்ரமனே தான் ண்ணா “

“அவன் கூட நிக்குறது பொண்ணு தான தம்பி? இல்ல மாறன் தான் என் கண்ணுக்கு பொண்ணு மாதிரி தெரியுறான “

“அண்ணா…. அது மாறன் இல்ல ண்ணா நம்ம மாறன் என்ன ஊதாகலர் சுடிதாரா போட்டு சுத்துறான் . அந்த புள்ள நம்ம ஊரு டீச்சர் ண்ணா”

“டீச்சரா……அதான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. இவன் என்ன பண்றான் அந்த டீச்சர் கூட இந்த தோப்புள “

“ தெரியலயே ண்ணா. இங்க என்ன தான் நடக்குது ஒண்ணுமே புரியல ண்ணா ஒரே குழப்பமா இருக்கு “

“இவனும் மாறணும் தான விரும்புறாங்கன்னு சொன்னாங்க அப்போ இவன் மாறன் கூட தான இருக்கணும் “

“ஆமா அவன் கூட தான ண்ணா இருக்கனும் நிய படி “

“ சரி அதை அப்பறம் யோசிப்போம் மொதல்ல இவுங்க என்ன பேசுறாங்கன்னு கேப்போம் வா வீரா. “ என்று மேலும் இவர்கள் நெருங்கி சென்றனர்.

குழப்பம் தெளியும் நேரம் இதுவோ?.