நெஞ்சம் 28

“அர்ஜுனன் வில்லு

அரிச்சந்திரன் சொல்லு

இவனோட தில்லு

பொய்க்காது எதிரியைக்

கொல்லு இமயத்தை

வெல்லு உனக்கொரு

எல்லை கிடையாது” என்று பாடிக்கொண்டு வந்த விக்ரமனை பார்த்து பல்லை கடித்த கிருபா

“ அந்த வண்டியை ஓட்டிட்டு வர வேகத்துக்கு இவனுக்கு இந்த பாட்டு கேட்குதா? அது எப்படிப்பட்ட பாட்டு அதை கேட்டாலே வண்டி நூறைத் தாண்டி ஓட்ட சொல்லுமே. யாராவது அவன நிறுத்த சொல்லுங்க டா “ என்று காதை மூடிக்கொண்டான்.

“ஆமாடா, அப்படி பாட்டைக் பாடிட்டு, அந்த வண்டிய  தள்ளு வண்டி மாதிரில உருட்டிட்டு வர்றான் “

“இவனுக்கு பெண்ணு பாக்க எங்க வீட்டுல பிளான் போட்டு இருக்கிறது  கூட தெரியாம எப்படி ஜாலியா வரான் பாரு. இவன…”

என்று மூவரும் வாசலில் கோபத்துடன் நிற்பதை பார்த்தவன் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு “பேபி உள்ள அத்தை அம்மா கூட விளையாடுங்கன. இங்க எனக்காக மூணு ஜீவன் வெயிட்டிங்ல இருக்காங்க போல “

என்று அனுப்பிவிட்டு அந்த பாடலை விசில் அடித்தபடி

“ஹாய் மாம்ஸ்,  ஹாய் ப்ரோ,  ஹாய் நண்பா. என்ன எனக்காக தான் வெயிட்டிங்கா?. டுடே பாருங்க நேத்த விட ரோமன்ஸ்ல பின்னுறேன் “

என்று பல்லை காட்டியவன் முதுகில் அடித்த மாறன் “ நீ என்னடா பின்னற, நான் உன்ன இப்போ பின்ன போறத பாரு “ என்று அடிக்க

“அய்யோ.. அம்மா… டேய் எருமை வலிக்குதுடா ஏன் எதுக்குடா அடிக்கிற?  மாமா,  ப்ரோ ஹெல்ப் மீ “

“ நீ பாடாம இங்க வந்திருந்தா கூட ஹெல்ப் பண்ணிருப்பேன்டா. ஆனா நீ வந்த ஆமை வேகத்துக்கு அந்த பாட்டைப் பாடி அந்த பாட்டையே கேவல படுத்திட்ட டா. அதுக்காகவே இன்னும் நல்லா வாங்கு “ என்று கிருபா கூறவும் ஆர்யனும் அதை அமோதிப்பது போல தலையசைத்து தின்னையில் அமர்ந்து கொண்டான்.

மாறன் அடிப்பதை தடுக்க வேண்டி விக்ரமன் அவனை பின்னிருந்து கட்டிக்கொண்டு “ டேய் வேண்டாம்டா…, இன்னைக்கு இது போதும்டா…..” என்று கத்திக்கொண்டு இருக்க

அதேநேரம் அங்கு எதையோ எடுக்க அங்கே வந்த மஞ்சு இதை பார்த்தவள்  கண்ணுக்கு மாறனை விக்ரமன் அனைத்து இருப்பது போல தெரியவும் “சித்தி……” என்று கத்திக்கொண்டு ஓடிவிட்டாள்.

அவள் சத்தத்தில் நால்வரும் ஒன்று போல திரும்பி பார்க்க விக்ரமன் “ டுடே ரொமன்ஸ் கோட்டா ஓவர் போலடா மாறா “ என்று சொன்னதை கேட்டு தான் அனைவரும் மாறன் மற்றும் விக்ரமன் நிற்கும் விதம் கண்டு சிரித்தனர்.

மாறன் “ அட சீ என்ன விடு “ என்று தள்ளிவிட்டு கொண்டு “  இனிமே ஒன் டிஸ்டன்ஸ் தள்ளி இருந்தே பேசு…”

“ஏன்டா மாறா நான் நன்பன் இல்லையா “ என்று ஒரு மாதிரி குழைந்து போசுபனின் வாயில் ஒன்று வைத்தவன்

“இப்படி பேசுன அடி வாங்குவ “

“சரி அதை விடு, ஆனா மாறா நம்ம பிளான் பண்ணி இனி எதுவும் பண்ண வேண்டாம் போல எல்லாம் தானா நடக்குது “ என்று அவள் தோளில் விக்ரமன் கையை போடவும் தான் நினைவு வந்தவனாக

“டேய் பக்கி உன் ஃபோட்டோ எப்படிடா எங்க அப்பா கிட்ட போச்சு “  என்று அவன் கையை எடுத்து விட்டு முறைக்க , மாறன் சொல்வது புரியாத விக்ரமன்

“என்ன என் போட்டோ நான் எந்த ஃபோட்டோவும் உங்க அப்பா கிட்ட கொடுக்கல்லையே. ஆமாம் என் ஃபோட்டோவ வச்சி உங்க அப்பா என்ன பன்றாரு ஒருவேளை மை வச்சி உன்னையும் என்னையும் பிரிக்க போறாங்களாடா  மாறா “ என்று முகத்தை சோகமாக வைத்து மாறன் கையை பிடித்து அவன் முகம் பார்க்க

அப்போது சரியாக உள்ளே போன மஞ்சு அவள் அம்மாவைக் கையோடு இழுத்துக் கொண்டு வரவும் அவர் இதை காணவும் சரியாக இருந்தது.

மீனாட்சி திண்ணையில் இருந்த ஆர்யன் கிருபாவை கவனிக்காமல்  இவர்களை மட்டும் பார்த்தவர்

அதுவும் விக்ரமன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு மாறன் கையைப் பிடித்து “  உன்னையும் என்னையும் பிரிக்கப் போறாங்களடா மாறன் “ என்று சொன்னதை கேட்டு

“அச்சோ…. அத்தை …. இங்க என்னென்னமோ  நடக்குது ” என்று அவரும் கத்திக்கொண்டு சென்றுவிட்டார்.

அவரின் சத்தத்தில் மீண்டும் நால்வரும் ஒன்று போல திரும்பி பார்த்துவிட்டு “ என்ன, எல்லாம் ஷாக் ஆகிட்டு பார்க்குறாங்க. ஷாக் ஆற அளவு இங்க ஒன்றும் நடக்கலயே “  என்று ஆர்யன் பார்க்க மாறன்

“ இங்க இன்னும் நின்னா எல்லாம் இப்படி கத்திட்டு போய்ட்டு தான் இருப்பாங்க. நான் அதுக்குள்ள உன் கிட்ட விஷயத்தை சொல்லிறேன் “

“என்ன விஷயம் தைரியமா சொல்லுடா நான் இருக்கேன் “

“ப்ச் இவ ஒருத்தன் “ என்று முனங்கிய மாறன்

“மார்னிங் அப்பா கொண்டு வந்த பைல உன் ஃபோட்டோ  இருந்திருக்கு. அதை வச்சி நாங்க கெஸ் பண்ணது, மொதல்ல உனக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க நெஸ்ட் என்கிட்ட வருவாங்க போல “

“என்னது எனக்கா! எனக்கு  ஏன் உங்க அப்பா பாக்கணும்டா ? “

“உனக்கு முடிச்சிட்டா என் ரூட் கிளியர் ஆகிடும்னு யோசிச்சிருப்பாங்க “

“இவங்களை எனக்கு என் பெர்மிஷன் இல்லாம பொண்ணு பாப்பாங்கல இவுங்கள சும்மா விட மாட்டேன் “ என்று கோபமாக பேசியவன் மாறன் கையைப் பிடித்து

“வா…மாறா “ என்று இழுக்கவும் அவன்

“என்ன எங்கடா இழுக்குற “

“ வேற எங்க எனக்கு பொண்ணு பாக்க என் ஃபோட்டோவ கொடுத்த ப்ரோக்கர் கிட்ட தான்”

“அங்க ஏன்டா நான் வரணும் நீ மட்டும் போய் பேசிட்டு வாடா. இங்க நான் மொழிய பாத்துக்கணும்ல”

“டேய் மாறா என்ன பத்தி உனக்கு தெரியும்தானடா. போய் பேசுறன்னு எல்லாத்தையும் உளறிட்டு வந்துடுவன்டா அப்பறம் எல்லாருக்கும் தான் பிரச்சனை “

“அதுவும் கரெக்ட்தான் ஆனா மொழிய என்ன பண்ண “

“அதான் நம்ம மாம்ஸூம் ப்ரோவும் இருக்காங்களே அவங்க பாத்துப்பாங்க “  என்று இழுத்து சென்று விட்டான்.

“ஒரு வார்த்தை நம்ம கிட்ட பாத்துக்கறீங்களான்னு கேட்டாங்களான்னு பாரேன்டா ஆரி .”

“இவனுங்க  கேட்டுட்டு போன தாண்டா அதிசயம். நான் வாச்ச இடமும் சரியில்ல எனக்கு வாச்ச இடமும் சரியில்ல  “

“உனக்கு வாச்ச இடம்னா, யார சொல்ற?  என்னையா சொல்ற என்ன போய்யா “ என்று கிருபா பேச பேச அவன் தோளை தட்டியவன் அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டான்.

இங்கு உள்ளே மீனாட்சி வெளியே பார்த்த காட்சியை வெள்ளையம்மா மற்றும் வள்ளியிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.

“கைய இப்படி பிடிச்சிட்டு  இந்த விஜய்காந்த் பானுபிரியாவும் கண்ணாலயே காதல்ல பேசுவாங்க பாரு… அந்த மாதிரி பாத்துட்டு ‘நம்மள பிரிச்சிடுவாங்களா மாறா ‘ ன்னு கண்ணு கலங்க அவன் பேசுனத கேட்டு எனக்கு ஒரு நிமிஷம் என் வயிரே கலங்கிடுச்சு வள்ளி “ என்று அக்ஷனுடன் மீனாட்சி பேச

“ஏன்டி..…. வயித்தால போகுதா என்ன உனக்கு? “ என்று வெள்ளையம்மா கேட்கவும்

“அத்தை.. நான் மனசு பதறுனேன்னு சொன்ன, நீங்க என்ன இப்படி பேசுறீங்க “

“நீ என்ன மனசு பதறுனவ மாதிரியா பேசுன. எதோ விசய்ன்னு சொல்ற பிரியான்னு சொல்ற என்னடி இவ. அப்போலாம் எம்.ஜி.யார் ஒரு பார்வை பாப்பாரு பாரு அது மாதிரி வருமாடி “ என்று வெள்ளையம்மா வெட்கப்படுவதை பார்த்த மஞ்சு தலையில் அடித்தபடி

“இங்க என்ன நடந்துட்டு இருக்கு. இவுங்க பேசுற பேச்சு என்ன. எல்லாம் சினிமா பைத்தியமா இருக்கு. இவுங்க கிட்ட போய் சொன்ன பாரு. ராமா….. “ என்று முனங்கியபடி சென்று விட்டாள்.

“ என்னடி வள்ளி நான் பேசிட்டே இருக்கேன் நீ கண்டுக்காம இருக்க. உன் மவன் பன்றத பாக்குறியா இல்லையா ஏதாவது சொல்லுடி “

“என்னக்கா சொல்லணும் ? என் பையன்தான் என் கிட்ட எதுவுமே என்னும் சொல்லலையே” என்று சமையலை தொடர்ந்து பாக்கவும்

“பொல்லாத மவன பெத்துட்ட பேச்சுக்கு பேச்சு அவன் சொல்லல, சொல்லல ன்னு சொல்லிட்டு இருக்கா , இங்க இத்தனை பேரு சொல்றது காதுல விழலயாம் “ என்று வெள்ளையம்மா நொடித்துகொண்டார்.

இவை அனைத்தும் காதில் விழுந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் வள்ளி பாட்டுக்கு சமையல் செய்தபடி இருந்தாள். அவள் மனதில் ஓடுவது தான் என்னவோ? பெண்கள் மனது மட்டுமல்ல  அம்மாவின் மனதும் ஆழமானது தான் போல .

இங்கு பைக்கில் மோழியை வைத்து வந்த போது இருந்ததற்கு நேர்மாறாக வேகமாக ஓட்டி சென்றான் விக்ரம்.

எந்த தரகரிடம் இவர்கள் செல்வார்கள் என்று தெரிந்து வைத்திருந்த விக்ரமன் நேராக அங்கே தான் சென்றான்.

அப்போது தான் தங்க பாண்டி மற்றும் வீர பாண்டி வந்து விக்ரமன் புகைப்படத்தை கொடுத்து விட்டு பெண் பார்க்க சொல்லிவிட்டு சென்றிருந்தனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் இவர்கள் அங்கு வரவும் அவர் “ இப்போ உள்ள பசங்களுக்கு எல்லாம் அவசரம் தான் போல “ என்று மனதில் சிரித்தவர் வெளியில்

“வாங்க தம்பி உட்காருங்க இப்போ தான் அப்பா வந்து உங்க போட்டோ கொடுத்துட்டு போனாரு. அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க, சொல்லுங்க பொண்ண எப்படி பாக்கட்டும்” என்று பல்லை காட்டியவரின் மீது கோபம் வர

விக்ரமன் அவர் சட்டையை பிடித்து “ பொண்ணு கிண்ணுண்ணு போட்டோவை எடுத்துட்டு வீட்டு பக்கம் வந்த நீ… நீ இருப்ப உன் ஆபீஸ் இருக்காது “ என்று எகிறியவனை மாறன் பிடித்து அமைதி படுத்தி அமர வைத்தான்.

இங்கு விக்ரமன் கோபத்திலேயே இவர் பயந்து விட்டவர் அந்த பயத்தை வெளியில் காட்டாது

“என்ன ஆபீஸ் வந்து மிரட்டுறீங்க எனக்கும் ஆளுங்களை தெரியும் “ என்று குரல் உயர்த்த மாறன்

“என்ன ஆளுங்கல தெரியும் ங்க எங்கள விடவா, உங்களுக்கு தெரியப் போகுது “ என்றுதும் அவர் பயந்து

“அது வந்து தம்பி…” என்று தயங்கி நின்றவரை பார்த்து

“இதோ பாருங்க உங்கள மிரட்ட வரல உங்களுக்கு நல்லது செய்ய தான் வந்தோம். எங்க அப்பா பேச்ச கேட்டுட்டு இவனுக்கு பொண்ணு பாத்திங்கனா…உங்க பேரு தான் கேட்டு போகும் “

“அது எப்படி தம்பி இவருக்கு பெண்ணு பாத்த என் பேரு கெட்டு போகும் “

“நீங்க வேனா பாருங்களேன் அப்போ தெரியும் எப்படி கெட்டு போகும்னு” என்று நக்கலாக விக்ரமன் சொல்ல மாறன்

“ விக்கி…. நான் பேசுறேன்ல “ என்று அவனை அமைதியாக சொல்லிவிட்டு இவர் பக்கம் திரும்பி

“ இங்க பாருங்க அத மீறி பெண்ணு பாத்திங்கன்னா அந்த பொண்ணு வீட்டுக்கே போய் பிரச்சன செய்வோம். அப்போ இந்த சம்மந்தத்த கொண்டு போன உங்க பேரு தான் கெட்டு போகும் “ என்று மாறன் சொன்னதை கேட்டு அப்போதே அவர் விக்ரமன் புகைப்படத்தை அவர்களிடமே கொடுத்து விட்டார்.

இந்த தகவல் தரகர் மூலமாக தங்கப்பாண்டிக்கு போய் சேர அதை கேட்ட மறுநிமிடமே  அவர் “ மாறா….” என்று கோபமாக கத்தியிருந்தார்.