ெஞ்சம் 27

வானில் இருந்த நட்சத்திரங்களை வெறித்தபடி வெளித் திண்ணையில் மாறன் அமர்ந்திருந்தான். அப்போது அவன் அருகே யாரோ அமரும் அரவம் தெரிந்தும் திரும்பிக் கூட பார்க்காமல் அது யார் என்று அறிந்தது போல அமர்ந்திருந்தான்.

“ இப்போ கூட என் கிட்ட எதுவும் சொல்லத் தோனலையா மாறன் ? “ என்று அவன் பார்த்த வானத்தை இவளும் பார்த்தபடி யாழினி கேட்டாள்.

“ உன்கிட்ட அதை பத்தி பேசுறதுக்கான நேரமும் சரி, இடமும் சரி, இது இல்ல யாழ்” என்று தலையை கூட திரும்பாமல் இவன் பேசியதை கேட்டு

“ ஓ… நேரம் இல்லையா மாறன்“ என்று அமைதியானவள் பின் அவளே

“ என் கிட்ட எப்போ  சொல்லப் போகிறீங்கன்னு  நானும் பாக்குறன் “ என்று யாழினி சொல்லியதை கேட்டு அவள் பக்கம் திரும்பிய மாறன் அவளையே பார்த்தபடி இருக்கவும்.

உள்ளே இருந்து மீனாட்சி சத்தம் கேட்டது

 “ நீ இந்த ரூம்ல தூங்கு ம்மா, உன் தங்கச்சிய எங்க கூட படுக்க வச்சிக்கிறேன். நீ பயப்படாத நான் பார்த்துக்கிறேன் ம்மா அவள  “ என்று அதித்தியிடம் பேசும் சத்தம் கேட்டு

“இதுக்கு மேல இங்க உட்கார முடியாது போல “ என்று எழுந்து செல்ல போனவளின் கையை மாறன் பிடிக்கவும் யாழினி அதிர்ந்து அவனை பார்க்க

“என்ன புதுசா சுடிதார் ?” என்று புருவம் உயர்த்தினான்.

யாழினி எப்போதும் டாப் மற்றும் மிடி போட்டு சிறு பெண் போல தான் சுற்றி திரிவாள். இப்படி திடீரென்று வெள்ளை மற்றும் பிங்க் நிற அனர்கலியில் இங்கு தேவதை  என வந்து நிற்கவும் அவனின் கண்கள் அவளிடமே ஒட்டிக்கொண்டது.

“ கேக்குற நேரத்தை பாரு“ என்று முனங்கிய யாழினி “கையை விடுங்க யாராவது வந்து பார்க்க போறாங்க “ என்று கையை உருவ பார்த்தாள்.

“அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க யாழ், கொஞ்ச நேரம் இங்கேயே இரான்”

“ம்ம்ம் நல்ல ஆசை தான் “

“ஆமாடி, ஆசையில தான் கேக்குறேன், கொஞ்சம் நேரம் இரேன் ” என்று கண்கள் கெஞ்ச கேட்டவனின் செய்கையில் அவன் அருகேயே இருக்க தொன்றிய மனதை இருக்கி கட்டியவள்.

முகத்தை திருப்பி அவன் கண் பார்க்காமல்.

“நீங்க ஆசையில கேட்டாலும். அதை நிறைவேற்றுற  நேரமும் சரி, இடமும் சரி, இது இல்லன்னு புரிஞ்சிக்கொங்க மாறன் “ என்று அவன் சொன்னதை அவனுக்கே திருப்பி கொடுத்துவிட்டு செல்லும் அவளையே கண் இமைக்காமல் பார்த்தவன்

“ இவ கிட்ட பேசுறப்போ பாத்து தான் பேசணும் போல “ என்று முனங்கிய படி வானத்து நட்சத்திரத்தை பார்க்க தொடங்கினான்.

பின் மீண்டும் யாரோ இவன் அருகே அமரும் அரவம் கேட்டு “ போனவ திரும்பி வந்துட்டா போல “ என்று சந்தோசமாக திரும்பியவனுக்கு பல்ப் தரும் வகையில் ஆர்யன் தான் அமர்ந்திருந்தான்.

ஆர்யனை பார்த்து முகம் சுருங்கி போக “மாமா நீங்களா…..” என்று ராகம் இழுத்தவனை பார்த்து

“ஏன் மாறன் வேற யாரையாவது எதிர் பார்த்தீங்களா “ என்று அவனை பார்த்து கேலியாக சிரிக்கவும்

“அச்சோ! இல்லை மாமா “ என்று வேகமாக தலையசைத்து சமாளித்தவனை பார்த்து இருபக்கமும் தலை அசைத்தவன்

“ யாழி கூட பேசிட்டு  இருந்தத பாத்துட்டு தான் லேட்டா வந்தன் மாறன். ரொம்ப சமாளிக்க முயற்சிக்காதீங்க நானும் லவ் பண்ணவன் தான் “ என்று அவன் தோளை தட்டவும்

“அது மாமா ….” என்று மாறன் நெளியவும்

“சரி அதை விடுங்க மாறன். அடுத்து என்ன திட்டம் வச்சிருக்கிங்க? அதை கேட்டு போக தான் வந்தேன். ஏதாவது ஹெல்ப் பண்ணணுமான்னு “

“நெஸ்ட் என்னவா…. ஆமாம் அது வேற யோசிக்கனும்ல “

“என்ன இனிமே தான் யோசிக்க போறிங்கள?“ என்று ஜெர்க் ஆகி பார்க்க

“ஆமாம், மாமா இவுங்க ரியக்ஸன் பாத்துட்டு தான் அடுத்த ப்ளேன் யோசிக்கனும் “

“அட பாவி உன்ன நம்பி உன் ப்ளேன்கு ஹெல்ப் பண்ண வந்தன் பாத்தியா என்ன சொல்லனும். இங்க உங்க அப்பா டான்கும், பெரியப்பா டான்கும் யாழி என் சிஸ்டர் இல்லன்னு தெரிஞ்சிச்சு என் சோலி முடிஞ்சி “ என்று மைன்ட் வாய் போட்டவன்

“சரி நீங்க பொறுமையாவே பிளான் போடுங்க மாறன் பிரச்சனையே இல்லை “  என்று வெளியே இழித்து வைத்தவன் உள்ளே

“நீ முழுசா பிளான் போட்டு முடிக்கிறதற்குள்ளே உங்க அக்காவ பார்சல் பண்ணிட்டு ஊரைப் பார்த்து ஓடிடனும். “ என்று மனசுக்குள் பேசியவன் வெளியில்

“சரி மாறன், நான் ரெஸ்ட் எடுக்க போறேன். குட் நைட் “ என்று சென்று விட்டான்.

காலை சூரியன் உதயம் ஆவதை வாசலில் இருந்த படி வேடிக்கை பார்த்தபடி ஆர்யன் பார்க்கும் போது, தங்க பாண்டி மற்றும் வீரப்பாண்டி அவன் முன் அரிவாளுடன் வந்து மீசையை முறுக்கியபடி

“என்ன தைரியம் இருந்தா… எங்களையே பொய் சொல்லி ஏமாத்துவ,  உன்ன விட மாட்டோம்டா….” என்று கத்தியபடி அவனை துரத்தவும்.

ஆர்யன் கண் முன் தெரியாமல்

“ அச்சோ மாமா நான் இல்ல….” என்று கத்தியபடி ஓடிக்கொண்டு இருந்த அந்நேரம் பார்த்து இவன் வலது புறத்தில் மாறன், இவன் வேகத்தில் ஓடியபடி

 “ மாமா நெக்ஸ்ட் பிளான் போட்டுட்டேன் “ என்று சொல்ல அவன் மறுபுறம் விக்ரமன்

“மாம்ஸ் நில்லுங்க இந்த ரொமன்ஸ் எப்படி இருக்குன்னு பாத்துட்டு ஓடுங்க “ என்று சொல்ல

“அச்சோ எனக்கு எந்த ரொமன்ஸும் வேண்டாம்…. என்னை விடுங்கட….” என்று கத்தியபடி எழுந்து அமர்ந்தான்.

சுற்றும் முற்றும் பார்த்தவன் அருகில் மயூரி சுகமாக உறங்குவதை பார்த்து விட்டு “ உஃபு கனவா….” என்று நெஞ்சில் கை வைத்தவன் அருகில் இருந்த போனில் நேரம் பார்க்க மணி ஐந்து என்று காட்டியது.

இதற்கு மேலே தூக்கம் வர வாய்ப்பு இல்லை என்று யோசித்தவன் மெல்ல எழுந்து மயூரியை சுற்றி தலையணை அடுக்கி விட்டு வெளியே வந்தான்.

அங்கு வள்ளி வாசல் தெளித்து கோலம் போடுவதை பார்த்துவிட்டு தின்னையில் சென்று அமர்ந்தான்.

ஆர்யனை அங்கு எதிர்பாராதவர் “ என்ன இவ்வளவு காலைலயே முழிச்சிட்டிங்க தம்பி “

“அது அத்தை… தூக்கம் சரியா வரல “

“காபி எடுத்து வரட்டுமா தம்பி”

“இல்ல அத்தை நீங்க கோலம் போட்டு முடிங்க நான் போய் முகம் கழுவிவிட்டு அதுக்குள்ள வரேன் அப்பறம் காப்பி தாங்க “ என்று எழுந்து சென்றவன் முகம் கழுவி விட்டு மீண்டும் திண்ணையில் வந்து அமர்ந்தான்.

அவனை பார்த்ததும் வள்ளி “ இதோ காப்பி எடுத்து வரேன் தம்பி “ என்று சென்றார்.

ஆர்யன் “ என்ன கன்றாவியான கனவு டா இது” என்று முகத்தை கைகளால் துடைத்தவன் கண் முன் தங்க பாண்டி மற்றும் வீரப்பாண்டி தூரத்தில் மீசையை முறுக்கிய படி நடந்து வருவதை பார்த்து

“ என்ன கனவுல நடந்த மாதிரியே வராங்க “ என்று ஜெர்க் ஆகி அவன் எழுந்திருக்கும் முன் இருவரும் இவன் அருகே நெருங்கிருந்தனர்.

ஆர்யனை அங்கு பார்த்து சிறு தலையசைப்புடன் பக்கத்து திண்ணையில் வீர பாண்டி அமர்ந்தார். தங்க பாண்டி தொண்டையை கனைத்து விட்டு அமர்ந்தார்.

இருவரும் அமர்ந்த பிறகு எழுந்து சென்றாள் அது சரியாக இருக்காது என்று எண்ணிய ஆர்யன் அவர்கள் பக்கம் திரும்பாமல் ஒரு வித பயத்தோடு அமர்ந்திருந்தான்.

அப்போது காப்பியுடன் வள்ளி வெளியே வந்து “ இந்தாங்க தம்பி காப்பி “ என்று ஆர்யனிடம் கொடுத்து விட்டு திரும்பியவள் அங்கே இவர்களை பார்த்தவுடன் “ என்னா காலைலயே இங்க என்ன பண்ணுறாங்க “ என்று யோசித்தபடி

“காப்பி எடுத்து வரவா மாமா “  என்று கேட்கவும் , வீரா

“இதை வேற நீ கேட்டு தான் செய்வியா எங்களை பாத்ததும் எடுத்து வர வேண்டாம் “

“ கேக்காம எடுத்து வரணும்னா கையில் போட  தான் வச்சிட்டு இருக்கனும் காப்பி வேணும்னு “ என்று முனங்கிய படி செல்பவர் வார்த்தை காதில் விழுந்தாலும் விழாதது போல அட்டென்சன் மோடில் கையில் காப்பியுடன் அமர்ந்திருந்தான்.

“ வீட்டில்ல வசதியெல்லாம் எப்படி இருக்கு. உங்க தங்கச்சிங்க வேற வந்திருக்காங்களாமே எல்லாருக்கும் இடம் இருக்கா “ என்று மீசையை முறுக்கியபடி வீரப்பாண்டி கேட்டதற்கு

“ஆ… எல்லாம் சரியா இருக்குங்க எல்லாம் வசதியா இருக்கு “

“வசதி பத்தலன்னா சொல்லுங்க சேத்து பண்ணிடலாம் “ என்று தங்கப்பாண்டி மீசையை நீவியபடி பேசியதைக் கேட்டு

“இவங்களுக்கு மூஞ்சியில் மீசை இருக்கா ? இல்ல மீசைல மூஞ்சிய வச்சிருக்காங்களா? இவ்ளோ பெருசா வச்சிருக்காங்க “ என்று அந்த மீசையை பார்த்தபடி

“வசதியெல்லாம் நல்லாவே இருக்குங்க “ என்றபடி அவர்களிடம் ஆயுதம் ஏதாவது இருக்கா என்று நோட்டமிட்ட படி இருந்தான்.

அப்போது காப்பியுடன் வள்ளி வந்து காப்பியை நீட்டவும்  “ மீனாட்சி எங்க வள்ளி ஆள காணோம் “

“அக்கா பெரிய வீட்டுல வாசல் தெளிக்க போயிருக்காங்க மாமா”

“இங்க என்னும் யாரும் முழிக்கல்லையா  “ என்று எழுந்தவர் சரக் என்று ஓட்டில் சொருகி இருந்து அரிவாளை உருவி எடுக்க ஆர்யன் அதிர்ந்து எழுந்து

“ அச்சோ கத்தி “ நின்றுவிட்டான் அதிர்ச்சியில் தங்கபாண்டி வள்ளியிடம் எதோ பேசியது கூட காதில் விழாமல் போக

“தம்பி இது பேரு கூட தெரியாத கத்தி இல்ல இது அருவா “ என்று வீர பாண்டி சொன்ன தோரணையில் “ இந்த விளக்கம் ரொம்ப முக்கியமா “  என்று முனங்கவும்  தங்க பாண்டி

“ ஆமாம் முக்கியம் தான். இதை வச்சி தான ஒரே வெட்டா வெட்ட முடியும் கத்திய வைச்சினா குத்தக சிரமமா ஆகிடாது “ என்று இவர்கள் இருவரும் சொல்லுவதை கேட்டு தப்பாக புரிந்துகொண்ட ஆர்யன்

“இதுலாம் தப்பு உயிரோட விளையாடாதிங்க “ என்று அவர்களை தடுக்க முயல

“நாங்க எங்க விளையாட போறோம். ஒரே போடு தான் வலியே தெரியாது. பயப்படாதிங்க.“

“என்னது வலியே தெரியாத” என்று முகம் வெளிற நிற்கும் போதே அங்கே வள்ளி ஒரு கோழியை, கழுத்தைப் பிடித்து கொண்டு வர அதைப் ஒரே வெட்டில் தங்கபாண்டி வெட்டி

“இதோ பாத்திங்களா….எப்படி ஒரே வெட்டு தான் “ என்று மீசையை முறுக்கியபடி அவர் சிரிக்கும் சத்தத்தில்  ஒரு நிமிடம் அரண்டு தான் போனான்.

எதோ எம தர்மரே நேரில் அருவளை பிடித்தபடி மீசையை திருவி சிரிப்பது போல இவன் கண்ணுக்கு தங்க பாண்டி தெரியவும்.தலையை உலுக்கி கொண்டான்.

“ஏம்மா வள்ளி ஒன்னு போதும்மா… “

“ம்ம்ம் போதும் மாமா மீன் வேற அக்கா வாங்கி வறேன்னு சொல்லியிருக்காங்க. இது காலைக்கு மட்டும் தான் மாமா“

“அப்போ சரிம்மா போய் பாத்திரம் எடுத்துவா சுத்தம் பண்ணி தறேன் “ என்று அவர் பாட்டுக்கு அந்த கோழியை சுத்தம் செய்ய தொடங்கவும்.

ஆர்யன் அப்போது தான் நினைவு வந்தவனாக அதை பார்த்து அரண்டு உள்ளே செல்ல திரும்ப தின்னையில் இருந்த பையில் விக்ரமன் புகைப்படம் இருப்பதை பார்த்து விட்டான்.

“என்ன இவன் ஃபோட்டோவ  வச்சிட்டு இவங்க என்ன பன்றாங்க “ என்று யோசித்தபடி உள்ளே சென்று விட்டான்.

உள்ளே சென்றவன் மடிக்கணினியுடன் அமர்ந்து விட்டான். பின் ஒவ்வொருவராக எழுந்து வந்து அனைவரும் சேர்ந்து காலை உணவுக்கு அமர்ந்தனர்.

ஆர்யன் முன் வைத்த இட்லி மற்றும் கோழி குழம்பை பார்த்தவனுக்கு உணவு உள்ளே இறங்குவேனா என்று அடம்பிடித்தது.

ஆர்யன் உணவையே வெறித்தபடி இருப்பதை பார்த்த வள்ளி முதலில் என்ன என்று பார்த்தவர் பின் கோழியை அவன் முன் வெட்டியதில் உண்ண தயங்குகிறானோ என்று சரியாக நாடி பிடித்து,  அவனுக்கு சட்னி மற்றும் இட்லி மட்டும் வைத்து வேறு தட்டு வைத்தார்.

அதன் பின் தான் ஆர்யனுக்கு உயிரே வந்தது போல இருந்தது. பின் கண்களாலேயே வள்ளிக்கு பெரிய நன்றி ஒன்றை சொல்லி விட்டு அதன் பின் நன்றாக உண்டு முடித்தான்.

அனைவரும் உண்டு முடிக்கவும் பெண்கள் அனைவரும் கதை பேசியபடி மதியம் உணவுக்கு பூண்டு வெங்காயம் உறிக்க அமர்ந்தனர்.

வெளியே கிருபா மாறன் ஆர்யன் என்று மூவரும் தின்னையில் அமர்ந்தபடி

“மாறன் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் “ என்று பேச்சை தொடங்கினான்.

“என்ன மாமா “

“ அது காலைல இங்க உங்க அப்ப,  பெரியப்பா வந்திருந்தாங்க “

“என்னது இங்கேயா? எதுக்கு காலைல இங்க வரனும்  அவுங்க“

“அது மாறன் அவுங்க வந்தது கோழி வேட்ட தான். அன வரும் போது கூட உங்க நண்பன் விக்ரமன் ஓட ஃபோட்டோவ ஒரு பைல வச்சிருந்தாங்க “

“அவன் ஃபோட்டோவ  இவங்க ஏன் வச்சிருக்கனும் “

“உங்க கல்யாணம் ப்ளேன் ஃப்லாப் அனதும். அவருக்கு ரெடி பண்ண பார்க்கிறாங்க போல? “ என்ற கிருபாவை “ அப்படி இருக்குமோ என்பது போல தான் இருவரும் பார்த்தனர்”

அப்போது பார்த்து புல்லட் சத்தம் கேட்டு மூவரும் திரும்பிப் பார்க்க, அங்கே விக்ரமன் பைக்கின் முன்னே மொழியை அமர வைத்து புல்லட்டை மாட்டு வண்டி போல மிக மெதுவாக உருட்டியபடி வந்தவனின்,  பாடிய  பாடலை கேட்ட மூவரும் ஒரே நேரத்தில் கோபமாக முறைக்க தொடங்கினர்.