மெத்தையில் மொழியைப் படுக்க வைத்தவன் அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து நிமிர்ந்தவனுக்கு அப்போது தான் அவனின் வேதாளம் நினைவே வந்தது.
“அட வேதாவைப் எப்படி மறந்தோம்“ என்று நெற்றியில் விரல்களால் தட்டிக்கொண்டு அவனின் போனை எடுத்தான்.
வேதாவின் நம்பரை எப்போதோ அவளுக்கு தெரியாமல் எடுத்து இவன் போனில் மை வேதாளம் என்று பதிவு பண்ணி வைத்திருந்தான்.
அந்த பெயரை பார்த்து அதில் முத்தம் வைத்து
“என் வேதாளம் என்ன பண்றாளோன்னு தெரியலயே “ என்று புலம்பிய படி நேரத்தை பார்த்தான் மணி பத்தை தொட தயாராக இருந்தது.
“தூங்கிட்டு இருப்பாளோ…” என்று எண்ணியவன் வாட்ஸ் சாப்பை திறந்து
“குட் நைட்” என்று ஒரு மெசேஜை தட்டி விட்டு போன் திரையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த புறம் வேதா பல்லை கடித்துக்கொண்டு அந்த மெசேஜை தான் பார்த்து கொண்டிருந்தாள்.
காலை விக்ரமனை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தவள் முகத்தில் இருந்த புன்னகை அப்படியே நிலைத்து சேர் போட்டு அமர்ந்து விட்டது.
என்றும் இத்தனை மகிழ்ச்சியை வேதாவின் முகத்தில் அவர் தாயே பார்தது இல்லை போல. வேதாவை அருகே அழைத்து கைகளை கொண்டு நெட்டி முறித்து “ என்னடி என்னைக்கும் இல்லாம முகத்துல இம்புட்டு சிரிப்பு “ என்று கன்னம் பற்றி கேட்க
“அது ஒன்னும் இல்லை ம்மா ஒரு படத்தோட காமெடியை நினைச்சேன் . அதான் சிரிப்பா இருக்கு” என்று சமாளித்து விட்டு ரூமுக்குள் சென்றவளுக்கு விக்ரமனுடன் பேச வேண்டும் போல இருக்க வேகமாக அவள் போனை எடுத்து பார்த்தாள்.
அப்போது தான் இது வரை அவனின் நம்பரை இவள் வாங்கியதே இல்லை என்று நினைவு வரப் போனை கொண்டு தலையில் அடித்துக்கொண்டாள்.
பின் ஏதாவது சமூக ஊடகங்களில் அவன் இருக்கிறானா என்று முழுதும் தேடி அது கிடைக்காமல் சோர்ந்து போய் படுக்கையில் படுத்தாள்.
“ என்ன எதுலயமே அக்கவுண்ட் இல்லாம இருக்கான். ஒரு வேல எயிட்டீஸ் கிட்ஸாக இருப்பானோ, ஆனா பாத்தா அப்படி தெரியலயே “ என்று யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சமாக போனது.
அதன் பின் அவனின் கம்பெனி வலைத்தளம் சென்று அதில் இருந்த குரூப் புகைப்படத்தில் அவனின் புகைப்படத்தைப் மட்டும் தனியே எடுத்து “ எருமை மாடு, காட்டான் லவ் பண்ண தெரிஞ்ச பக்கிக்கு போன் நம்பர் கொடுக்க தெரியல “
என்று அந்த போட்டோவிற்கு நாலு அடி போட்ட படி படுத்துவிட்டாள்.
இரவு உணவும் சரியாக சாப்பிடாமல் அறைக்குள் அடைந்தவள் அவன் புகைப்படத்தைத் தான் பார்த்தபடி இருந்தாள்.
அப்போது பார்த்து வாட்ஸ்ஆப் நோட்டிபிகேஷன் வரவும் என்ன என்று பார்த்தாள்.
ஏதோ தெரியாத எண்ணில் இருந்து குட் நைட் மெசேஜ் வரவும் முதலில் யாரோ என்று தள்ளி விடத்தான் பார்த்தாள். பின் எதோ தோன்ற டிபியை ஓப்பன் செய்து பார்த்தபின் தான் அது விக்ரமன் என்று தெரியவந்தது.
அவனை கண்டுகொண்ட மறு நிமிடம் கோபம் தான் ஜிவ் என்று தலைக்கு ஏறியது.
அந்த மெசேஜை பார்த்தவள் அந்த சேட்டை ஓப்பன் செய்யாமல் அதையே பார்த்தபடி இருக்க இங்கு விக்ரமன் அவள் ஆன்லைன் என்று காட்டவும் பரபரப்புடன்
“ வேதாளம்
நான் தான் விக்ரமன்
இது தான் என் நம்பர்
ரிப்ளை பண்ணு வேதா
வேதா?”
என்று எத்தனை மெசேஜ் அனுப்பியும் வேதா ரீப்ளே செய்யாமல் போகவும் “ஒருவேளை தூங்கிட்டாளோ “ என்று எண்ணியவனாக
“தூங்குறியா வேதா…” என்று மேசேஜ் அனுப்பவும் அதை பார்த்து “இல்லை “ என்ற மேசேஜை மட்டும் ரீப்லே வாக அனுப்பி வைத்தாள்.
வேதாவிடம் இருந்து வந்த மேசேஜை பார்த்த பிறகு “ அப்பறம் ஏன் வேதா ரீப்லே பண்ணாம இருக்க “ பதில் மேசேஜ் மின்னலனே சென்றது.
“நான் ஏன் ரீப்லே பண்ணனும் உங்களுக்கு “ அவள் பதில் காட்டமாகவே வந்தது.
“என்ன போசுக்குனு ஏன்னு கேக்குறா. ஒரு வேலை கோபமா இருக்காளே “ என்று அவனுக்கு அவனை பேசியவன்
“ என்ன கோப்பால் …. நீங்க போய் இப்படி பேசலாமா “ என்று அழுகை எமோஜியை சேர்த்து அனுப்பி விட
“ சாரி நீங்க தப்பா மாத்தி மெசேஜ் பண்ணிட்டீங்க போல நான் கோப்பால் இல்ல “
“இப்போ ஏன்டி இப்படி பேசுற என்ன ஆச்சு நல்லா தான இருந்த “
“எனக்கு என்ன இப்பவும் நான் நல்லா தான் இருக்கேன் “ என்று உதட்டை சுளித்து கொள்ள அந்த மெசேஜை பார்த்த விக்ரமன்
“ரைட்டு இதுக்கு மேல இவள விட்டா நைட்டு லாலா…லாலா…ன்னு போக வேண்டியது தான் “ என்று அவளுக்கு போன் செய்து விட்டான்.
விக்ரமன் போன் செய்வான் என்று நினைக்காதவள் பயந்து போனை கட் செய்து விட்டு வேகமாக அதை சைலன்டில் போட்டு, வெளியே எட்டி பார்த்தாள்.
எங்கே சத்தம் கேட்டு யாரவது எழுந்து விட்டார்களோ என்று பயந்து. இவள் நல்ல நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை அதை உறுதிப்படுத்தி கொண்டு நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டாள்.
விக்ரமன் போன் மீண்டும் மீண்டும் அடித்த வண்ணம் தான் இருந்தது அதை பார்த்து “ப்ச் இவன..” என்று முனங்கியவள் போனை கையில் எடுத்துக்கொண்டு பின்னே கிணற்று அருகே சென்று தின்னையில் அமர்ந்து அந்த போனை எடுத்தாள்.
போனை காதில் வைத்த நொடி
“ வேதா…..” என்று சிரிப்புடன் இவள் பெயரை அவன் உச்சரிக்க அதிலயே கோபம் மறந்தவளாக
“ம்ம்ம் …” என்று அஸ்க்கி வாய்ஸில் பதில் சொல்லியிருந்தாள். அந்த ம்ம்ம் லயே ஆள் ப்ளாட் ஆகி
“வேதா….வேதாம்மா….” என்று பல வேதா போட்டிருந்தான். அவனின் வேதாவில் முகம் புன்னகைக்கு தாவ
“எதுக்கு இந்த நைட் கால் பண்ணிங்க விக்ரமன் “ என்று கோபமாக குறளில் போசியவள், திரும்பி அவள் வீட்டை பார்த்தபடி அதே நேரம் பொறுமையாகவும் பேசினாள்.
வேதா கேட்ட கேள்வியை பறக்க விட்டவனாக “ எங்க இருந்து பேசுற வேதா “ என்று அவள் குறளை வைத்து கேட்க
“ப்ச்….நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க விக்ரமன் “
“அதுவாடி…. நான் எதோ தப்பு பண்ணிருக்கன்னு புரியுது…. அதான் நீ ஒழுங்கா மெசேஜ் பண்ணலன்னு தெரியுது…. ஆனா அது என்ன தப்புன்னு தான் எனக்கு தெரியல வேதா. கொஞ்சம் இறக்கம் காமிச்சு நீயே என்ன தப்புன்னு சொல்லிடு ம்மா“ என்று பாவம் போல பேசியவனின் வார்த்தையில் கோபம் குறைய
“அதுவா என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடச்சிச்சு “
“அது எப்படியோ உங்க ஸ்கூல்ல இருந்து தான் எடுத்தேன். அதுக்கு தான் கோபமா வேதா “
“அதுக்குலாம் இல்லை …என் நம்பர் இருந்தும் நைட் தான் மெசேஜ் பண்ண டைம் கிடைச்சதுல “
“ஓ…..அப்போ அதுக்கு தான் கோபமா இருக்கியா வேதா. நான் இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்தேன், லேட்டா உனக்கு ஏன் மெசேஜ் பண்ணேன்னு சொன்னா நீயே ஷாக் ஆகிடுவ வேதா “
“ம்ம்ம்.. நானே ஷாக் ஆற அளவு என்ன பண்ணிட்டு இருந்திங்க “
என்று வேதா கேட்கவும் இவர்கள் செய்யும் குட்டி கலட்டாவை அனைத்தையும் சொல்லி முடிக்க வேதாவுக்கு சிரிப்பை அடக்கவே முடியாமல் நன்றாக சிரித்து விட
“அடியே வேதாளம்…. சத்தமா சிரிக்காத வீட்டுல எல்லாம் முழிச்சிட போறாங்க “ என்று பதறவும் தான் நினைவு வந்தவளாக வாயை மூடிக்கொண்டாள்.
“ இப்போ சொல்லு இதுல எங்க இருந்து உனக்கு கால் மெசேஜ்லாம் பண்ண “
“ம்ம்ம் கஷ்டம் தான்.. சரி இது இருக்கட்டும் ஒரு பக்கம். இப்போ நம்ம விஷயத்துக்கு என்ன செய்ய போறிங்க “
“என்னடி வேதா அவசரம், ஒரு வருஷம் நல்லா லவ் பண்ணுவோம். அதுக்குள்ள நாங்க இந்த ஊரை மாத்திடுவோம் எப்படியாவது. அப்பறம் நம்ம மேரேஜ் தான். தென் ஹாப்பி என்டிங் “ என்று சிரித்தான் விக்ரமன்.
“சூப்பர் சூப்பர் அப்படியே ஒரு வருஷத்துல எனக்கு வேற பையன பார்த்து கட்டி வச்சிடுவாங்க. அந்த மேரேஜ்ல வந்து என் கண்ணையே உன் கிட்ட தரேன்னு வசனம் பேசி என்ன அனுப்பி வைங்க அதுவும் ஹாப்பி என்டிங் தான். அன உங்களுக்கு இல்லை“
“என்னடி சொல்ற ஒரு வருஷத்துல உன்ன கட்டி வச்சிடுவாங்கல என்ன “
“ஒரு வருஷம் இல்ல இரண்டு மாசத்துலயே இது நடக்க வாய்ப்பு அதிகம் இருக்கு “
“என்னடி சொல்ற “
“ம்ஹூன்.. ஆமாம் ஆல்ரெடி பேசிட்டு தான் இருக்காங்க. என் ஜாதகம் படி ஆறு மாசம் கழிச்சு தான் பார்க்கணும்னு சொன்னாங்கன்னு பேசிட்டு இருந்தாங்க. ஆல்ரெடி நாலு மாசம் போச்சு இப்போ ரெண்டு மாசம் தான் இருக்கு “
“அடிப்பாவி வேதாளம் இத இப்போ வந்து சொல்றியே டி “
“இதை உன் கிட்ட எப்படி சொல்லன்னு தான் இருந்தேன். அப்பா.. .. எப்படியோ சொல்லிட்டேன் இனி நீ பாத்துக்கோ “
“அடியே ரெண்டு மாசத்துல என்னத்தடி நான் பண்ண “
“அது உன் கஷ்டம் விக்ரமன் . சரி டைம் ஆச்சி நான் வைக்கிறேன் பாய் குட் நைட் விக்கி “ என்று போனை வைத்துவிட்டாள்.
வேதா சொல்லியதை கேட்டு அதிர்ந்த விக்ரமன் “ இத இப்போ வந்து சொல்றாளே. போன்லயே ரொமன்ஸ் பண்ணலாம்னு கால் பண்ணா என் ஆசைல தீ வச்சிட்டு பொய்டாலே “ என்று புலம்பியவனுக்கு அந்த இரவு தூங்கா இரவாகத்தான் சென்றது.
காலை விடிந்து விடியாமலும் தங்கப்பாண்டி மற்றும் வீரப்பாண்டி ராஜனை பார்க்க வந்துவிட்டனர்.
கூடத்தில் இருவரையும் அமர வைத்து காப்பியைத் கொடுத்த ராஜாத்தி ஒரு ஓரமாக நின்று கொள்ள ராஜன் தான் தொடங்கினார்.
“சொல்லுங்க ஏதாவது பிரச்சினையா வெள்ளனவே வந்திருக்கீங்க “
“பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்லை, நம்ம விக்ரமனுக்கு பொண்ணு பாக்குற விஷயமா தான் பேச வந்தோம் “ என்று வீரப்பாண்டி கூறவும் அவர்
“ அதுவா தம்பி இந்த விக்ரமன், பையன் மாறன் கல்யாணம் முடியாம பண்ண மாட்டேன்னு சொல்லிட்டான் “
“ஏன் எதுக்கு ராஜன் “ என்று தங்க பாண்டி கேள்வியாக பார்க்க
“அது மாறன் இவன விட பெரியவனாமே அவனுக்கு முடியாம நான் எப்படி பண்றதுன்னு சொல்றான். மாறன கேட்ட அவன் மஞ்சு கல்யாணம் முடிஞ்சி தான் நீங்க பேசுவிங்கன்னு சொன்னான். அதான் ஒரே யோசனையா இருக்கு “
“நாங்க எப்போடா இப்படி சொன்னோம் “ என்று யோசித்தவராக தாங்க பாண்டி சமாளிக்கும் விதமாக
“ஆமாம், ஆமாம் மஞ்சுக்கு முடிச்சிட்டு தான் பண்ணலாம்னு இருக்கோம் ராஜன். ஆனா அது வரை நீ ஒரே பையனுக்கு நல்லது எதுவும் பண்ணாம நிப்பியா என்ன “
“நீங்க சொல்றதும் சரிதான்…”
“அதான் ராஜன் ஒரு பொண்ணு சம்பந்தம் வந்திருக்கு, நல்ல குடும்பம் விக்ரமனுக்கு முடிக்கிறாயான்னு கேட்க வந்தோம். அவனும் எங்க பையன் மாதிரி தான “
“ பொண்ணு நல்ல பொண்ணா இருந்தா பார்த்து முடிச்சிடுவோம் . அவன் எதவது சொல்ல தான் செய்வான் “ என்று திரும்பி கண்ணை காட்ட ராஜாத்தி விக்ரமனின் ஃபோட்டோவை எடுத்து வந்து தரவும் அதை அவர்களிடம் கொடுத்தவர்.
“ பொண்ணுக்கு சம்பந்தம்னா சொல்லுங்க மிச்சத விசாரிச்சி முடிச்சிருவோம் “ என்று ராஜன் சொல்லியதை கேட்டு மிக மகிழ்ச்சியாக வீட்டுக்கு சென்றனர்.
தனக்கு பெண் பார்த்து கல்யாணம் வரை பற்றி பேசியது எதுவும் தெரியாமல் விக்ரமன் விடியற்காலை தூங்கிய சோர்வில் மொழியுடன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.