நெஞ்சம் 23

மிளகு சீரகம் தட்டி கொத்தமல்லி மிதக்க கொடுத்த மோரை ரசித்து குடித்த மயூரி “ இந்த மாறன் இதை இவ்ளோ ரிஸ்க் எடுத்து  பண்ணி தான் ஆகணுமா ஆரி “

“ இந்த ரிஸ்க் எடுக்குறது சரி தான்னு தொனுது  மயிலு “

“ம்ம்ம் ? என்ன சொல்ற ஆரி “

“ஆமாம் மயிலு, கரெக்ட் தான் இப்போ இவனால உங்க ஃபேமலி மாறிடுச்சுன்னா அதை பாத்து இந்த ஊரே மாறும் “

“அதெப்படி ஆரி இவுங்க மாறுனா ஊரே மாறும்னு இவ்ளோ உறுதியா சொல்றிங்க “

“இந்த  ஊரோட பெரிய குடும்பம் உங்களுடையதுதான் மயிலு. அப்படி இருக்க பெரிய குடும்பமே மாறிடுச்சுன்னா அதை பாத்து இவுங்களும் மாறுவாங்க “

“ஓ…. ஆனா ஆரி …” என்று தயங்கிய மயூரி கையை பிடித்த ஆர்யன் “பயப்படாத மயிலு ஒன்னும் ஆகாது “  என்று தைரியம் சொன்னான்.

அதன் பிறகு தான் மயூரிக்கு சிறிது தெம்பாக இருக்க நேராக எழுந்து சென்று திண்ணையில் இருந்த வள்ளி மீனாட்சி மஞ்சு வெள்ளையம்மா அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

மயூரி அமர்ந்ததும் அதித்தியும் சென்று அவளுடன் அமர்ந்து கொண்டாள்.

வீட்டுக்குள்ளே வராந்தாவில் கிருபா,  யாழினி மற்றும் ஆர்யன், லேப்டாப்புடன் வேலை பார்ப்பது போல அமர்ந்து கண்களாலேயே மயூரியை பேச சொல்ல அவளும்

“அம்மா  என்ன பண்றீங்க… “  என்று புளி கொட்டையை குத்தி கொண்டிருந்த வள்ளியை பார்த்து கேட்கவும்

“பாத்தா தெரியலயா க்கா… புளில இருந்து கொட்டைய எடுத்துட்டு இருக்காங்க “ என்று மஞ்சு பேசவும்

“அது தெரியுது மஞ்சு, புளியா வாங்கும் போதே கொட்டை இல்லாம வாங்க வேண்டியது தான எதுக்கு இப்படி தனியா எடுத்துட்டு இருக்கிங்க”

“ இது கடை புளி இல்ல மயிலு, நம்ம தோட்டத்து புளி நம்ம வீட்டுக்காக மொத்தமா குத்தி எடுத்து வச்சிப்போம் அதுக்கு தான் குத்துறோம் “ என்றாள் வள்ளி

“ஓ…  “ என்று சொல்லியவளுக்கு அடுத்து என்ன பேச என்று தெரியாமல் முழுக்கவும் அதித்தி

“இவர்களை நம்புனா வேலைக்காகாது “ என்று எண்ணியவளாக போனை எடுத்து கிருபா வாட்ஸ்அப்பிற்கு  ஒரு இணைப்பை அனுப்பி அதை சத்தமாக ப்ளே பண்ண சொல்லி மெசேஜ் அனுப்பினால்.

அந்த மெசேஜை பார்த்த கிருபா “ ரைட்டு என் பொண்டாட்டி கைத்துல குதிச்சிட்டா “ என்ற சிரித்தபடி அதை ப்ளே செய்தான்.

கிருபா ப்ளே செய்ததும் சத்தமாக அந்த வீடியோ ப்ளே ஆனாது “ இன்னைக்கு நம்மோட இணைந்திருப்பது, தன்பாலின ஈர்ப்பாளர்களான  இவர்கள்  இருவரையும் …” என்று ஆரம்பிக்கும் முன் அதித்தி சத்தமாக

“கிருபா அதை பாக்குறத நிருத்து இந்த மாதிரி இன்டர்வியூ வ இப்படி பொதுவா இருக்க எடத்துல இருந்து பாக்காதன்னு எத்தன வாட்டி சொல்ல “ என்று பேசியபடி மயூரிக்கு கண்ணை காட்டவும்

“அப்படி என்ன இன்டர்வியூ அதித்தி அதை ஏன் இங்க பாக்க கூடாதுன்னு சொல்ற “

“அது அண்ணி இப்போ வைரலாகி போய்டு இருக்கே உங்களுக்கு தெரியாதா “ என்று சொன்னபடி சுற்றி பார்க்க அனைவரும் இவளை தான் கவனித்து கொண்டு இருந்தனர். அதை உறுதிப்படுத்தி விட்டு மேலும் பேச தொடங்கினர்.

“இல்ல தெரியாது அதித்தி என்ன இன்டர்வியூ அது”

“ அது ஓரினச்சேர்க்கை திருமணம் பண்ணிக்கிட்ட ரெண்டு பொண்ணோட இன்டர்வியூ “

“என்னது பொண்ணுங்க திருமணம் செஞ்சிகிட்டாங்களா “ என்று வெள்ளையம்மா முகத்தை சுளிக்க அதித்தி

“ஆமா பாட்டி உங்களுக்கு இந்த விஷயம் தெரியாதா என்ன “

“என்ன ஆத்தா சொல்ற இப்படிலாம் கூட நடக்குமா என்ன “

“நடக்காமயா…. நான் சொன்ன பாட்டி இப்போ அரசாங்கமே எதோ பண்ணிக்கொங்கன்னு விட்டாங்களாம் “

“பொண்ணும் பொண்ணும் கல்யாணம் பண்ணா பிள்ளை எப்படி பெப்பாங்க அது எப்படி குடும்பம் ஆகும் த்தா “

“அது ஐ.வி.எஃப் மூலமா பெத்துபாங்க பாட்டி “

“ச்சீ  நல்ல வேலை இங்க யாரும் இப்படி வரல பிள்ளைகளை நம்மைப் போல அடிச்சி வளர்த்தா இப்படி போகுமா “

“ஏன் மதனி இதை பார்க்கக் கூடாதுன்னு அண்ணாவ சொல்கிறீர்கள் இது பார்ட்குறது தப்பா “ என்று மஞ்சு கேட்க,  அதித்தி

“ இங்க நீங்கலாம் இருக்கீங்க  எதவது தப்பா நினைச்சிறு விங்களோன்னு தான் பார்க்காதீங்கன்னு  சொன்ன. மத்த படி அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம் ம்மா “

“ஓ… பொண்ணும் பொண்ணும் மாதிரி பையன் பையனும் பண்ணிப்பாங்கல மதனி “

“இதை கேட்டு தெரிஞ்சி நீ என்ன பண்ண போறடி “ என்று வெள்ளையம்மா அதட்ட , மஞ்சு வாயை மூடிக்கொண்டாள்.

அதித்தி “ சும்மா தெரிஞ்சி வைச்சிக்கிறது தப்பு இல்லை பாட்டி,  ஆமாம் மஞ்சு பசங்கள்ளயும் இப்படி இருக்காங்க “ என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே மீனாட்சி

“அடியே நேரம் ஆச்சி பாரு, உங்க அப்பாவுக்கும் சித்தப்பாக்கும் மதியம் சாப்பாடு எடுத்து போக. அப்பறம் பசில கத்த போறாங்க “ என்று எழுந்து சென்று அனைத்தையும் கட்டி மஞ்சு கையில் கொடுக்கவும் அவள் எடுத்து சென்றாள்.

இங்கு அதன் பின்  மயூரி அதித்தி வந்த வேலை முடிந்தது என்று அங்கிருந்து நகர்ந்து சென்ற பின்னே.

மீனாட்சி “ வள்ளி இப்படிலாம் பட்டணத்தில மட்டும் தானடி நடக்கும் இங்கலாம் நடக்காது தான “

“இங்க இப்படிலாம் நடக்க வாய்ப்பு இல்லை அக்கா “

“ஆமாடி இங்க நம்ம பிள்ளைங்கள எப்படி வளர்க்கிறோம். அத மீறி நடக்குமா “ என்று வெள்ளையம்மா பெருமை பேச வள்ளி

“இங்க ஆளுங்க மாத்தி கல்யாணம் பண்ணாலே வெட்டி போட்டுருவாங்க, அப்படி இருக்க இதெல்லாம் நடந்தாளும் தெரிய விடமாட்டாங்க க்கா “ என்று வெள்ளையம்மாவை பார்த்த படி பேசவும் அவர் முகத்தை திருப்பி கொண்டார்

“அமாடி நீ சொல்றதும் உன்மை தான் “ என்று வேலையை பார்க்க தொடங்கினர் மீனாட்சி.

இவற்றை எல்லாம் பார்த்த யாழினி பின் பக்கம் சென்று மாறனுக்கு போன் போட அவன்

“யாழ்..ஏதாவது பிரச்சனையா. இப்போ கால் பண்ணியிருக்க “ என்று பதட்டமாக பேச

“ஏன் பிரச்சனைனா மட்டும் தான் உங்களுக்கு கால் பண்ணணுமா மாறன் “ என்ற யாழினியின் மாறன் என்ற அழைப்பிலேயே அவளின் கோபத்தை கண்டு கொண்டவன்.

“என்ன யாழ், என் மேல கோபமா இருக்கியா “ என்று மெல்ல குறள் தாழ்த்தி கேட்டான்

“நான் உங்ககிட்ட அதை பத்தி ஒன்னும் பேச கால் பண்ணல. நான் பேச வேண்டியத மட்டும் பேசிவிட்டு கால் வைச்சிறேன் எனக்கு வேலை இருக்கு “

“வேலையா என் கூட பேசுறத விட யாழ்க்கு என்ன பெரிய வேலை இருக்காம் “ என்று கிண்டலாக அவன் கேட்க

“அதை ஏன் நான் உங்க கிட்ட சொல்லணும்.  நீங்க மட்டும் எல்லாம் என் சொல்லிட்டு தான் செய்றீங்க பாரு “ என்று கோபமாகவே பேசவும்

“இன்னும்  நீ அந்த கோபத்துல தான் இருக்கியா யாழ். அது சொல்ல கூடாதுன்னு இல்ல அப்போ நானே அக்கா பத்தி யோசிச்சு ஒரு நிலையா இல்லடி புரிஞ்சிக்கோ ப்ளீஸ் “

“ம்ம்ம் இருந்தாலும் இங்க கிளம்பி நான் வரும் முன்னாடியாவது சொல்லியிருக்கலாம் “

“அப்போ நான் உன்ன பத்தி இங்க மாமா கிட்ட எப்படி சொல்லணும்னு யோசனையில இருந்தேன்.  அதைல நினைவு வரல யாழ்“

“எல்லாத்துக்கும் இப்படி எதவது  சொல்லிட்டே போங்க மாறன் “

“யாழ்…. சரி, நான் இதுக்கு அப்பறம் எந்த சாக்கும் சொல்லல சாரிம்மா “

“ம்ம்ம் சாரிலாம் வேனா. “ என்று வீட்டில் அதித்தி மற்றும் மயூரி அனைவரிடமும் பேசியதை சொல்லி முடித்தவள் “  இங்க நீங்க சொன்ன மாதிரி பேசி முடிச்சிட்டோம் அத சொல்ல தான் கால் பண்ணங்க”

“ சூப்பர் அப்போ நாங்க உடனே கிளம்பி வறோம் “

“ம்ம்ம் பாத்து வங்கா” என்று யாழினி போனை வைத்துவிட்டாள்.

யாழினி போனை வைத்ததும் அந்த போனை கொண்டு நெற்றியில் தட்டியவன் “ மாறா…. மாறா…. நல்ல கோபமா இருக்கா போல உன் மேல… பின்ன இருக்காத லவ் பன்றன்னு தான் பேரு லவ்வ நேரா சொன்னது இல்ல. எங்கயும் கூட்டி போனது இல்ல. என்னடா நீ, உனக்கு ஒரு லவ் பண்ண தெரியுதா “ என்று புலம்பிய படி சென்றான்.

இங்கு பெரிய வீட்டில் தங்கப்பாண்டி ஹாலில் குறுக்க மறுக்க நடந்த படி இருக்க அப்போது அங்கு வந்த வீரபாண்டி

“ மாறன் கூட இருந்த நம்ம பயலுகல எல்லாரையும் விசாரிச்சாச்சுண்ண.  அவன் காலேஜ் படிக்கும் போது எந்த புள்ளையையும் விரும்பலயாம் “

“என்ன வீர சொல்ற அப்போ அவன் கூட வந்திருக்க அந்த பையன், யாரு மொவன் , ஒருவேளை அந்த விக்கி மகனா இருக்குமோ “

“இல்லை ண்ணா அதையும் விசாரிச்சுட்டேன் அவனும் காலேஜ்ல யாரையும் விரும்பலயாம் “

“ அப்போ பிள்ளை வாணத்தை கிலிச்சிட்டு குதிச்சிச்சுன்னு சொல்றியா வீரா “

“ என்னன்னு எனக்கும் புரியல ண்ணா, நானும் முடிஞ்ச அளவு விசாரிச்சிட்டன். இத்தன நாளு அந்த பையன சென்னையில வச்சு அந்த விக்கியும் இவனும் சேத்து தான் வளர்த்திருக்காங்க “

“ இவன நம்பி அந்த பொண்ண பாக்க வேற வரோன்னு சொல்லி அசிங்கம் பட்டது தான் மிச்சம் . என்னன்னு பிள்ளைய வளர்த்தியோ வீர “ என்று சோபாவில் அமரவும்

“ நல்ல வளர்த்ததால தான் என் கூடவே இருந்து இங்க வெயில், மழைன்னு பாக்காம விவசாயத்தை பாக்குறேன் அண்ணா. வசதியா வாழணும்னு விட்டு போகல “ என்று சொல்லி விட்டு அறைக்குள் புகுந்து கொண்டார்.

வீராவின் முதுகை பார்த்த தங்கப்பாண்டி “ பையன ஒரு வார்த்தை சொல்லிட கூடாது. உடனே கோபமா பேசிட்டு போறத பாரு. ..ம்ஹூ… எனக்கு மட்டும் அவன இப்படி பேசணும்னு ஆசையாடா. என் பையன விட மாறன தான எனக்கும் பிடிக்கும் . அப்படி இருக்க இந்த பையன் இப்படி காரியத்தை பண்ணி வச்சிருக்கானே என்ன பண்ண “ என்று எழுந்து சென்று விட்டார்.

இவர்கள் பேசியதை அனைத்தையும் சமையல் அறையிலிருந்து கேட்ட மஞ்சு “ இந்த அண்ணா யாரையும் லவ் பண்ணலனா இந்த பாப்பா எப்படி வந்துச்சி ஒரு தத்து எடுத்து வளக்குறானோ?  தத்து எடுத்துனா ஏன் அப்படி வளக்கனும்?“

என்று மூளையை போட்டு குழப்பிய படி வெளியே நடந்து செல்ல அந்நேரம் பார்த்து மாறன் விக்ரமன் மொழி என்று மூவரும் ஜீப்பில் சிரித்த படி இவளை கடந்து செல்வதை பார்த்தாள்.

காமாலை கண்ணுக்குப் பார்ப்பதெல்லாம் மஞ்சள் மாதிரி வீட்டில் அதித்தி சொன்னது,  பெரிய வீட்டில் அப்பா பேசியது என்று அனைத்தையும் ஜாரில் போட்டு அரைத்து ஒரே ஜூஸ்ஸாக மாற்றியவளுக்கு கிடைத்த முடிவு.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது இவளுக்கு மூன்றாக தெரிந்தது. தெரிந்த அடுத்த நொடி “  அச்சோ அண்ணா…. “ என்று அவள் வாய் மீது கை வைத்துக்கொண்டவள், கையில் இருந்த பாத்திரங்களை நடு ரோட்டில் போட்டு இருந்தாள்.