ெஞ்சம் 22

 சப்போட்டா பழத்தின் மனம் காற்றோடு கலந்து தென்றலாய் வீச அதை ஆழ்ந்து சுவாசித்த மொழி

“ அப்பா வாசனையா இருக்கு ப்பா..” என்று ஒவ்வொரு மரம் அருகேயும் சென்று பழங்கள் பழுத்திருக்கிறா என்று பார்த்த படி ஓடிக்கொண்டிருந்தான்.

ஆங்காங்கே மயில்கள் சில பழத்தைக் கொத்தி சாப்பிட்ட வண்ணம் இருக்க அதை கை நீட்டி காட்டிய மொழி “ஷூ….. சைலன்ட் ப்பா “ என்று மெதுவாக அருகே சென்று பிடிக்க போக அது அதற்குள் பறந்து சென்று விட்டது. உடனே அதன் இறகை கையில் எடுத்து

“என் கிட்ட என்ன இருக்குன்னு பாருங்க..” என்று மயில் இறகை ஆட்டி காட்ட என்று ஓடி ஆடி கொண்டு இருந்தவனை  பார்த்து சிரித்த படி மாறன் செல்ல அவன் பின்னாலேயே விக்ரமும் சென்றான்.

அப்போது திடீர் என்று கொலுசு சத்தம் கேட்டு விக்ரமன்

 “ என்ன கொலுசு சத்தம் கேக்குது “ என்று திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லை

“ காலைல கூட இந்த மோகினி வருமா என்ன. சரி நமக்கெதுக்கு வம்பு மாறன் கூடவே இருக்க வேண்டியது தான். தனிய வந்து ஏதாவது அடிச்சிடப் போகுது “ என்று முனங்கியவன் வேகமாக திரும்பி மாறனை நோக்கி செல்ல போகும் முன் அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு அருகே இருந்த மரம் பின் மறைந்தாள் வேதா.

விக்ரமன் பயத்தில் கத்தும் முன் அவன் வாயை மூடிய வேதா “கத்திராத பயந்தாங்கொளி நான் தான் “ என்று கிசுகிசு குறளில் பேசியவள் பொறுமையாக மரம் பின்னே இருந்து மாறனை எட்டி பார்த்தாள்.

மாறன் மொழியுடன் விளையாடியபடி சென்றவன் இவர்களைக் கவனிக்கவில்லை. அதை உறுதிப்படுத்திய பின்னரே விக்ரமன் வாயில் இருந்த அவள் கையை எடுத்தாள். கையை எடுத்த மறுநொடி விக்ரமன்

“ஏ…வேதாளம் இங்க என்ன பண்ற “ என்று பொறுமையான குரலில் சிரித்த முகமாக பேசியவனை கொல்லும் ஆத்திரம் வர வேதா,

“ஊருக்குள்ள உன்ன பத்தியும் உன் ஃபிரண்ட பத்தியும் என்னன்னமோ பேசிட்டு இருக்காங்க என்னடா நடக்குது இங்க. என்ன வேலை பார்த்து வச்சிருக்கிங்க “ என்று கோபமாகவும் அதே நேரம் மெதுவான குரலில் விக்ரமன் சட்டை காலரை பிடித்து வேதா கேட்கவும்,  விக்ரமன்

“ஏ வேதாளம் ஒய் டென்சன் வேனா,  ரிலாக்ஸ் பேபி இவ்வளோ கோபம் உடம்புக்கு ஆகாதுடி “

“அந்த வெங்காயம்லாம் எனக்கு தெரியும் முதல்ல அந்த பையன் உனக்கு யாருன்னு சொல்லுடா “

“மொழிய பத்தியா கேக்குற, அதை பத்தி நானே உன் கிட்ட பேசணும்னு நினைச்சேன் டி “

“நீ நினைச்சு காயவச்சது எல்லாம் போதும் அந்த பையன் உனக்கு யாருன்னு சொல்லுடா “

“ அது வந்து வேதாளம். மொழி அவன், நம்ம பையன் தான்டி “ என்று சொன்னதை கேட்டதும் வேதா கண்கள் சட் என்று கலங்கி விட பேச்சற்று விக்ரமனையே வெறித்தாள்.

அவள் நிலையை பார்த்த விக்ரமன் “ நான் தெளிவா பேசுறதே அதிசயம். அதை மீறி தெளிவா நம்ம பையன்னு சொல்றான் அத கவனிக்காம அழுறத பாறேன். டீச்சரா இருந்துட்டு பேசுறத கவனிக்கல, நீலாம் என்ன டீச்சர் “ என்று அவளை போட்டு திட்டவும் வேதா

“ஆ… என்னது “ என்று ஒன்றும் புரியாமல் முழித்து கொண்டு நின்றாள்.

மாறன் ஊருக்குள் வரும் போதே அனைவரும் பார்க்கத்தான் மொழியை தூக்கி கொண்டு வந்தான். அதுவே ஊர் முழுக்க பரவி இருக்க அது போதது என்று மூவரும் ஒன்றாக கடைக்கு செல்வது அங்கு வைத்து மொழி இருவரையும் அப்பா என்று அழைக்கவும் பல கதைகள் கட்டி ஊரே இவர்களை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறது. டுடே ஹாட் டாப்பிக்கே இவர்கள் தானாம்.

இதை கேட்டு வந்தவளுக்கு விக்ரமன் சொன்ன நம்மைக் கூட காதில் விழாமல் சதி செய்துவிட்டது.

“ மூஞ்சியை அப்படி வைக்காதடி திட்ட கூட வரமாட்டேங்குது, நான் முழுசா சொல்லி முடிக்குறதுக்குள்ள என்ன அழுக கண்ண தொடடி “ என்று திட்டவும் கண்ணீரை துடைத்த வேதா

“உஹூன், நான் அழல …”  என்று மூக்கை உறிஞ்சிய படி விக்ரமனை பார்க்கவும்,  அவள் கன்னம் கிள்ளி கொஞ்ச தோன்றிய கைகளை அடக்கிய படி தமிழை பற்றி சொல்லி முடித்தான்.

தமிழின் கதையை கேட்ட வேதா “ இவங்கல்லாம் என்ன அம்மா அப்பா.  பாவம் அந்த அக்கா “ என்று திட்ட தொடங்கும் முன் அவள் வாயை கை கொண்டு மூடியவன்

“ திட்டிட்டே இருக்காத முதல்ல நான் சொல்றத முழுசா கேளு “ என்றதும் தலையை மேலும் கீழும் வேதா ஆட்டவும் கையை எடுத்த விக்ரமன்

“இதோ பாரு வேதா, நமக்கு எத்தனை பிள்ளை பிறந்தாலும் மொழி தான் நமக்கு முதல் பிள்ளை . இதுக்கு உனக்கு சம்மதமா “ என்று அவளின் முகம் பார்க்க வேதா

“ம்ம்ம் எனக்கு ஓகே தான் “ என்று தலை ஆட்டியவளை பார்த்து சிரித்த விக்ரமன்

“ வேதாளத்துக்கு என்ன ஓகேவாம் “ என்று அவள் முகம் பார்த்து கேட்கவும் , வேதா

“ அதான் நீ சொன்னது நமக்கு எத்தனை பாப்பா வந்தாளும் மொழி தான் முதல் பாப்பான்னு “ என்று விக்ரமன் முகம் பார்க்கவும் அவன் முகத்தில் இருந்த குறும்பு சிரிப்பில்

“என்ன, ஏன் இப்படி சிரிக்கிற “

“ஏன் சிரிக்கிறன்னு உனக்கு தெரியாத வேதாளம் “   என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்து “ தெரியல்லையே…. “  என்று சொல்லவும் விக்ரமனின் சிரிப்பு பெரிதாக

“மொழிக்கு அப்பறம் ரெண்டு பாப்பா பெத்துக்கலாம வேதா…” என்று அவளை உற்றுப் பார்க்க, வேதாவின் முகம் அந்தி வானம் என சிவந்து போக அப்போது தான் இவள் விக்ரமனிடம் எதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று புரியவர தலையை தாழ்த்தி கொண்டாள்.

“ அது வந்து …. நான் போறேன்… டைம் ஆச்சி “ என்று திக்கி தினறி பேசியவள் அங்கிருந்து அவனின் முகம் பார்க்காமல் செல்ல போனவளின் கையை பிடித்து நிறுத்தியவன்

“ போறேன்னு சொல்லிட்டு போக கூடாது வேதா….” என்று அந்த வேதாவை மிக மென்மையாக கூற வேதாவின் முகம் சூடாகி நெற்றியில் சிறு சிறு வேர்வைத்துளிகள் வர தொடங்கியது.

அதை பார்த்த விக்ரமன் உதட்டை குவித்து அவள் நெற்றியில் ஊதியவன் “ ஏன் இவ்வளவு பதட்டம் வேதா…”  என்று குறள் கறகரத்து பேச வேதாவல் நிமிரிந்து அவன் முகம் கூட பார்க்க முடியவில்லை.

நெற்றியில் அவனின் சூடான மூச்சி காற்று உரசி சென்றதே எதோ போல இருக்க மூச்சிகூட விட முடியாமல் தவித்து போனால் வேதா.

எப்போதும் கிண்டல் கேளி என விளையாட்டாக சுற்றும் விக்ரமனின் இந்த பரிமாற்றம் சுத்தமாக எதிர்பார்க்க வில்லை வேதா அதுவும் அவனின் அழைப்பு எதோ உயிர் வரை தொட்டு சென்றது.

இவை அனைத்தையும் ஒரே நாளில். அதிலும் அவன் முன் நிற்க முடியாமல் நாணம் வேறு இருவர் நடுவிலும் வந்து நிற்க எப்படி அவனிடம் இருந்து வீட்டுக்கு செல்ல என்று தான் விளித்தபடி நின்றாள் வேதா.

இது வரை விளையாட்டுத்தனமாக பார்த்திருந்த வேதாவை. இப்படி முகம் முழுக்க வெட்கத்தில் சிவந்து அவன் கண்ணை பார்க்க கூட தயங்கும் வேதாவை பார்க்க பார்க்க திகட்டவில்லை விக்ரமனுக்கு அதனாலேயே கண் இமைக்க மறந்து அவளை பார்த்து கொண்டிருந்தான்.

வேதா அவன் பார்வையை தாங்காது “ நான் போனும் விக்ரமன் விடு…” என்று காற்றுக்கும் வலிக்காத வண்ணம் பேச விக்ரமன்

“என்ன வேதா சொன்ன எனக்கு  கேட்கல “ என்று குனிந்து அவள் அருகே காதை கொண்டு போக

“விடுங்க விக்ரமன் நான் போணும் “ என்று அவன் பிடித்திருந்த கையை எடுக்க பார்க்க

 வேதா அவனின் பேயர் சொல்லி அழைத்ததிலயே அவன் பிடி தளர்ந்து போக அதை உணர்ந்த வேதா. அவனை பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டு திரும்பியும் பார்க்காமல் ஓடி சென்று விட அதில் விக்ரமன் சத்தமாக சிரித்த படி

“ஏ…வேதாளம் என்ன என்னன்னு கூப்பட்ட டி…சொல்லிவிட்டு போ வேதா…. “ என்று கத்தியது கேட்டும் திரும்புவேனா என்று சென்றுவிட்டாள்.

வேதா சென்றும் அங்கிருந்து நகராமல் மரத்தில் சாய்ந்தபடி நெஞ்சில் கைவைத்து கொண்டு

“நெஞ்சுக்குள் பெய்திடும்

மாமழை நீருக்குள் மூழ்கிடும்

தாமரை சட்டென்று மாறுது

வானிலை பெண்ணே உன் மேல் பிழை…..”  என்று கைகள் விரித்து கத்திக்கொண்டிருந்தவனைத் தான் மொழியும் மாறனும் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“அப்பா விக்கி ப்பா க்கு என்ன ஆச்சு”

“ம்ம்ம் …மோகினி பேய் ஏதாவது அடிச்சிருச்சி போல உங்க அப்பாவை “

“ என்ன மோகினி பேய்யா..ப்பா “  என்று மொழி பயப்படவும்

“அது ஒன்னும் இல்லடா தங்கம்.  வா உங்க அப்பன இழுத்துட்டு போவோம் விட்டா கத்தியே ஊர காலி பண்ணி விட்டுவிடுவான் “ என்று அவன் அருகே சென்றான்.

மொழியை தூக்கியபடி மாறன் வருவதை பார்த்த விக்ரமன் அவன் இரு தோளையும் பிடித்துக்கொண்டு “ஓ சாந்தி சாந்தி

ஓ சாந்தி என் உயிரை

உயிரை நீ வாங்கி…” என்று சுற்றவும்

“டேய் எருமை அது வாங்கி இல்லடா ஏந்தி பக்கி “ என்று கத்தவும் சுற்றியதை நிறுத்திய விக்ரமன்

“மாறா…. எனக்கு ஒரே வெட்க வெட்கமா வருது மாறா…” என்று சொன்னபடி அவனை அணைத்துக்கொள்ள

“ உன் வெட்கத்தை வீட்டுல போய் கூட பார்த்துக்கோடா இப்போ மொழிக்கு பசிக்குதாம்டா வீட்டுக்கு போலாம் “ என்று விக்ரமனை நிறுத்த அவன்

“அச்சோ பேபி பசிக்குதா சாரி வாங்க வீட்டுக்கு போய் சாப்பிடலாம் “ என்று உடனே மொழிக்கு அப்பாவாக மாறி அழைத்துச் சென்றான்.