நெஞ்சம் 21

அதிதிக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல்  திருதிருவென பாலை திருடிய பூனை போல முழித்துக்கொண்டு நின்றான் மாறன்.

அப்போது ஆர்யன் அருகில் நின்று கொண்டிருந்த விக்ரமன் “ அதுக்கு பதில் நான் சொல்றன் மதனி “ என்று கையை உயர்த்திக்கொண்டு அதித்தி முன் வந்து நிற்க அதித்தி “ யாருடா இது புதுசா” என்று மேலும் கீழும் பார்க்கவும் , விக்ரமன் அவள் பார்வையை வைத்தே அவள் நினைப்பதை புரிந்து கொண்டு

“அச்சோ மதனி நான் யாருன்னு தெரியல,  நான் தான் என் நண்பன் சொன்ன கதைல செகண்ட் ஹீரோ விக்ரமன் அது நானே தான் “ என்று காலரை தூக்கி அறிமுகம் படுத்தவும் அதித்தி

“ஓ……. நீங்கலா சரி நீங்கலாவது சொல்லுங்க என்ன பிளானுக்காக இப்படி பண்றீங்க “

“அய்யோ மதனி நீங்க நினைக்கிற அளவு ப்ளேன் போட்டுலாம் இத பண்ணல எதோ ஒரு ஃப்ளோல பண்ணிட்டு இருக்கான் என் நண்பன். அவனுக்கு அவன் கல்யாணத்தை நிறுத்தணும் அதுக்குதான் மொழிய கடத்தி இங்க கூட்டிட்டு வந்திருக்கிறான், மத்த படி அடுத்து என்ன பண்ணணும்னு ஒரு ப்ளேனும் இருக்காது “

விக்ரமன் சொன்னதை கேட்டு அனைவரும் ஒரே போல மாறனை பார்க்க மாறன் “ டேய் பக்கி உளறாம போட “ என்று அவனை தள்ளிவிட,  விக்ரமன்

“பார்த்தீர்களா… எப்படி சமாளிக்க தெரியாம என்ன தள்ளி விடுறான்னு . என் நன்பன் ஆச்சே அப்பறம் எப்படி இருப்பான் என்ன மாதிரி தான இருப்பான் “ என்று சொல்லி சிரித்தவனின் தலையில் மாறன் கொட்டவும் பதிலுக்கு அவன் மாறன் கழுத்தை பிடிக்க என்று இருவரும் குழந்தை போல சண்டை போட,  மயூரி அருகில் இருந்த சுள்ளிகளுக்கிடையே ஒரு பெரிய குச்சியை எடுத்து

“இப்போ ரெண்டு பேரும் அமைதியா நிக்கல ன்னா அடிச்சுப் பின்னிடுவேன் “ என்று கத்தவும் அந்த சத்தத்தில் இருவரும் கப் சிப் என்று அமைதியாக அட்டென்சனில் நின்று விட்டனர்.

அதை பார்த்த அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது ஏன் மயூரிக்கே வந்த சிரிப்பை அடக்க பாடு பட்டு முகத்தை விறைப்பாக வைத்தபடி

“ஆள் வளர்ந்த அளவு அறிவு வளந்திருக்க உங்களுக்கு,  இன்னும் ரெண்டு வயசு பப்பான்னு நினைப்பு சண்டை போடுறத பாரு. டேய் மாறா “ என்று அவனை நோக்கி குச்சியை நீட்டவும் ஒரு நிமிடம் அடி விழுந்து விடுமோ என்று பயந்து

“ஆ…க்கா சொல்லுங்க “ என்று அட்டோமெட்டிக்காக வார்த்தை வந்து விழ மயூரி

“ உனக்கு கல்யாணம் ஏன் வேண்டாம் “

“அது வந்து க்கா மொழி..” என்று பேச போனவனை கை நீட்டி தடுத்த மயூரி

“ பழைய மிக்ஸி மாதிரி அரச்சததையே அரைச்ச பிச்சிடுவேன். மொழி மட்டும் ரீசன் இல்லன்னு எனக்கு தெரியும் நீயே சொல்றியா இல்ல நானே கண்டுபிடிக்கவா “ என்று யாழினியிடம் பார்வை சென்றுவர மாறன் தலையை குனிந்த படி

“அது அக்கா மொழிக்காக கொஞ்சம் அப்புறம் எனக்காக கொஞ்சம் கடைசியா உனக்காகவும் கோஞ்சம் “  பேசியவனை பார்த்த மாறன்

“என்னடா மாறா கொஞ்சம் கொஞ்சம்னு கொஞ்சிட்டு இருக்க “ என்று கிண்டல் செய்ய அதை கண்டுகொள்ளாது மயூரி

“மாறா தெளிவா சொல்லு எதுக்காக இந்த ட்ராமா “

“அதுக்கா நான் முதலில்ல  சென்னைக்கு போனதே மொழிய மட்டும் கூப்பிட இல்லை, யாழ்ல கல்யாணம் பண்ணிக்கவும் தான் “ என்று மாறன் சொன்னதை கேட்டு யாழினிக்கே ஷாக் தான்

“ எனக்கு யாழ்-ல ரொம்ப பிடிக்கும், அதான் அப்பா கல்யாணத்தை முடிவு பண்ணப்போ என்னால ஏத்துக்க முடியல. அதான் என்ன பண்ண தெரியாம சரி மொழியோட யாழினியை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன். மொழிய என் பையன்னு சொல்லனும்னு இருந்தன் “ என்று நிமிர்ந்து மயூரி முகம் பார்த்தவன்

“அப்படி யோசிச்சிட்டு தான் சென்னைக்குப் போன அங்க போய் யாழினிய பார்த்ததும் அவ ஒத்துப்பாலன்னு தயங்கி அவ கிட்ட  எப்படி சொல்றதுன்னு இருக்கும் போது தான் ஸ்டெல்லா அக்காவ அங்க பார்த்தேன் “

ஸ்டெல்லாவின் பெயரை கேட்டதும் அங்கிருந்த அனைவருக்கும் எதோ புரிவது போல இருக்க விக்ரமன் மட்டும் “ ஸ்டெல்லா அக்காவா டேய் மாறா உனக்கு இன்னும் எத்தனை அக்கா காணாம போனாங்க” என்று குழப்பமாக கேட்கவும் அதில் அவனை திரும்பி மாறன் பார்த்த பார்வையில்

“இனி வாயைத் திறக்கல்லை நீ பேசு “ என்று வாயை கைகள் கொண்டு மூடிவிட்டான். பின் மாறன்

“அவுங்க சொன்னத கேட்டு இவுங்க மேல கோபம் தான் வந்துச்சி. நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு எங்கள தேடி இங்க வந்திருக்கிங்க, அதை புரிஞ்சிக்காம இவங்க என்னன்னா மானம், மரியாதை, கௌரவம்னு, திரும்பி வந்த பெண்ணை யாரோ மாதிரி தங்கிட்டு போக சொல்றாங்க.

அதான் அந்த மானம், மரியாதை ,கௌரவம் எல்லாத்தையும் குழி தொண்டி புதைக்க மொழிய மட்டும் கூட்டிட்டு வந்தேன் “ என்று நிமிர்ந்து நின்ற தம்பியை பார்த்து கண் கலங்க நின்றாள் மயூரி.

அப்போது ஆர்யன் “ மொழிய இங்க நீங்க கூட்டிட்டு வந்ததனால மட்டும் உங்க குடும்ப கௌரவம் போய்டும்னு நினைக்கிறிங்களா மாறன் “

“இல்ல மாமா, மொழி வெறும் தொடக்க புள்ளி மட்டும் தான் இன்னும் பெரிய கோலமே வெயிட்டிங்ல  இருக்கு.  அத உங்கள வச்சிதான் போடப்போறேன் “ என்று சொல்லி சிரித்தவனை பார்த்த விக்ரமன்

“ரங்கோலியா இல்ல புள்ளி கோலமான்னு சொன்னா நான் வேடிக்கை பார்க்க ரெடியா உட்கார்ந்திருப்பன்டா  மாறன் “ என்று அவனை தொடவும். மாறன் அவனை பார்த்து மேலும் சிரித்தபடி

“ரங்கோலியா புள்ளி கோலமான்னு தெரியல… ஆனா அந்த கோலத்தை, உன் மேல தான் போடவே போறேன் அது மட்டும் எனக்கு நல்லா தெரியும் “ என்று சொல்லவும் விக்ரமன் “என்னது “ என்று புரியாமல் முழித்த படி நின்று கொண்டிருந்தான்.

இங்கு சமையல் அறையில் இருந்த பெண்கள் கூட்டம் வேலை பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தது.

மஞ்சு “ அம்மா அந்த யாழினி பொண்ணுக்கு என் வயசு இருக்கும்ல ம்மா” என்று கேட்க, அதற்கு மீனாட்சி

“இல்லடி உன்னவிட ஒரு வயசு ரெண்டு வயசு கூட இருக்கும் “

“ஓ… பாக்க அழகா இருக்காங்கல “

“இப்போ இது ரொம்ப முக்கியம், நானே இந்த மாறன் பையன் பிரச்சனைய நினைச்சி மருகிக்கிட்டு இருக்கேன் இதுல நீ வேற “

“ஆமாம்மா இந்த அண்ணா இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல “

“ ஏய் கிறுக்கிங்களா வேலைய பாக்காம என்னடி பேசுறீங்க இப்படி பேசிட்டே வேலை பாத்த பின்ன நைட்டுக்கு தான் தின்ன வேண்டியதா இருக்கும் “  என்று வெள்ளையம்மா அதட்டவும் வாயை மூடிக்கொண்டனர் இருவரும் பின் அமைதியாக வேலை நடந்தது.

அப்போது சமையல் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க மொழி தான் நின்று கொண்டிருந்தான்.

அவனை பார்த்த வெள்ளையம்மா தலையை திருப்பிக்கொள்ள மொழி முகம் சுருங்கி போனது அவன் முகம் மாறியதை பார்த்த வள்ளி

“உள்ள வாங்க” என்று தலையசைத்து அழைக்கவும் உள்ளே நுழைந்தான் மொழி.

மொழி உள்ள வரவும் மோரை கலக்கி கொண்டிருந்த வள்ளி அதை நிறுத்தி விட்டு அவன் புறம் முழுதும் திரும்பி சிரித்த முகமாக“ என்ன வேணும் உங்களுக்கு “ என்று கேட்கவும் மொழி தயங்கி தயங்கி

“தண்ணி வேணும் ஆண்டி “

“ஆண்டி இல்ல உனக்கு நான் பாட்டி “ என்று மொழியை திருத்தவும் வெள்ளையம்மா “உக்கும்….” என்று முகத்தை நொடித்துக்கொண்டார்.

அதை கண்டும் காணாத வள்ளி மோரை ஒரு டம்ளரில் ஊற்றி அவனிடம் நீட்ட அதை கையில் வாங்கி பார்த்த மொழி

“அய்யோ பால் இல்ல பாட்டி… தண்ணி போதும் பால் காலைலயும் நைட்லயும் மட்டும் தான் குடிப்பேன் “ என்று வள்ளியிடமே டம்பளரை நீட்டவும் வள்ளி

“அது பால் இல்ல மோர்..கொஞ்சம் குடிச்சி பாருங்க டேஸ்டா இருக்கும் “ என்றதும் மொழி சிறிது அதை அருந்தி பார்த்து அதன் சுவை பிடித்ததும் முழுதாக அதை ஒரே மடக்கில் குடித்து முடித்து

“ம்ம்ம்…. டேஸ்டா இருக்கு பாட்டி தாங்க்யூ “ என்று டம்ளரை நீட்டவும் அதை வள்ளி வாங்கி கொண்டார்.

அப்போது மஞ்சு “ ஏண்டா தம்பி, இது வரை நீ மோர் குடிச்சதே இல்லையா “ என்று கேட்க மொழி

“இல்ல ஆண்டி நான் குடிச்சது இல்ல ஜூஸ் தான் குடிச்சிருக்கன் “

“என்னது ஆண்டியா டேய் அக்கான்னு கூப்பிடு “ என்று அதட்டவும் மீனாட்சி மஞ்சுவின் காலில் ஓங்கி மிதித்து

“எருமை முறையை தப்பா சொல்லி தராத” என்று திட்டியவர் மொழி புறம் திரும்பி “அத்தைன்னு அவள கூப்பிடுப்பா “ என்று சொன்ன மீனாட்சிக்கு தலையசைத்து

“சரி….” என்று சொல்லியவன் ஒரு நிமிடம் இவரை எப்படி அழைக்க என்று முழித்து நிற்பதைப் பார்த்து சிரித்த மீனாட்சி” நானும் உனக்கு பாட்டித்தான் பாட்டினே  கூப்பிடு “ என்று சிரிக்கவும் மொழியும் சிரித்தபடி

“சரி பாட்டி “ என்று சமத்தாகச் சொல்ல அந்நேரம் மாறன் “ மொழி… எங்க இருக்க “ என்று சத்தம் கொடுத்தபடி சமையல் அறைக்குள் வர , மொழி

“இங்க தான் இருக்கேன்ப்பா…” என்று அவன் அருகே ஓடவும் மொழியை கையில் தூக்கிய மாறன் “ இங்க என்னடா தங்கம் பண்ற “  என்று கேட்டான்.

“பாட்டி மோர் தந்தாங்க, சூப்பரா… இருந்துச்சு “ என்று வாயை துடைக்க மாறன் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து

“செமத்து செல்லம். சரி, நம்ம விக்கி அப்பா கூட வெளிய போவோமா “ என்று கேட்கவும் சந்தோஷத்தில் மொழி மாறன் கழுத்தை கட்டிக்கொண்டு

“ஐ…. ஜாலி ஜாலி வெளிய போறோம் “ என்று துள்ள அவனை அழைத்து சென்றான் மாறன்.

இதைப் பார்த்திருந்த வெள்ளையம்மா தலையில் அடித்தபடி “ எந்த நேரத்துல தான் இவனைப் பெத்தாளோ இவ “ என்று வள்ளியை திட்ட தொடங்கி விட்டார்.

வெளியில் ஜீப்பில் மாறன் விக்ரமன் மொழி மூவரும் சிரித்தபடி போவதை பார்த்த ஆர்யன் “ நம்மல கோத்துவிட்டு இவனுங்க பாட்டுக்கு ஜாலியா போறானுங்க பாருடா “ என்று கிருபா கிட்ட புலம்பவும் அவன்

“மச்சானுக்காக பாய்சன் நாலும் கண்ணை மூடிக்கிட்டு பாயசம் மாதிரி குடிச்சி தான்டா ஆகணும் “ என்று தோள் மேல் கையை போட்டான்.